KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/எப்படிப் பற்றில்லாமல் இருப்பதுSign in
பகவத் கீதை விளக்கவுரை

எப்படிப் பற்றில்லாமல் இருப்பது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

தனஞ்ஜயா, இந்தச் செயல்களெல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இருக்கிறேன்.

ப்ர்க்ரு'தியின் பொருள்மயமான தன்மை எனது வழிகாட்டுதலின்படியே வேலை செய்கிறது.
ஓ, குந்தியின் மகனே! எனது மாயா ச'க்தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் ஆட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

நான் மனித உருவில் அவதரிக்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர்.
எல்லாவற்றையும் கடந்து நிற்கிற எனது இயல்பான தன்மையையும் எல்லாவற்றின் மீதான எனது மேலான ஆட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.

9. 12 தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள், அசுரத் தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களது இந்தத் தவறான நம்பிக்கையால், இவர்கள் 'விடுதலை' அடைவதற்கான சாத்தியமும், பலன்கருதி இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயனற்றுப் போகின்றன.

இது ஒரு தெய்வீக விளையாட்டு

நாம் செய்கிற செயல்களில் பந்தப்பட்டு இருப்பதும், அதற்கு நாம் கட்டுப்பட்டு இருப்பதும், நாம் வைத்திருக்கும் நமது உடமைகளும்தான், நாம் நம்மைப் பற்றி உணர்ந்துகொள்வதில் ஒரு பெரும் தடைகளாக இருக்கின்றன. இந்தப் பிரபஞ்ச செயல்பாடுகளால் தாம் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதனால்தான், இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படும்போதோ, அழிக்கப்படும்போதோ தாம் பாதிக்கப்படுவதில்லை என்றும், சொல்கிறார். 'தாம் பந்தப்படவே இல்லை' என்றும் கிருஷ்ணர் சொல்வதற்கான காரணம் இதுவே.

இவ்வளவு பெரிய செயல் நிகழும்போது, தாம் எந்த வகையிலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

மொத்தப் பிரபஞ்சமும் அவருக்குள் இருந்தே உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட அவர் அந்தச் செயல்களால் பாதிக்கப்படவே இல்லை. ஏனென்றால் அவர் இந்தப் பிரபஞ்சத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவர் வெறும் ஸாட்சியாகப் பார்வையாளராக மட்டுமே இருக்கிறார்.

நமது தினசரி வாழ்க்கைச் சூழ்நிலையில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வளவு உயர்ந்த ஸத்யங்களை நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு செயல்களில் ஒருங்கிணைக்கும்போது, நம்முள் பெரும் மாற்றம் நிகழத் தொடங்குகிறது. கிருஷ்ணர் ஒரு தெய்வீக விளையாட்டைப் பற்றிப் பேசுகிறார். பிரபஞ்ச விழிப்புணர்விலிருந்து உருவாக்கப்படுவதும் அழிக்கப்படுவதுமான பிரபஞ்சத்தைப் பற்றி அவர் பேசுகிறார்.

நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டோம் என்றால், நமது தினசரி வாழ்க்கையில் அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும். அதனால்தான் பகவத்கீதை ஒரு அருமையான நடைமுறை வேத நூலாக இருக்கிறது.

எந்த ஒரு வயதினருக்கும் தலைமுறையினருக்கும் பொருத்தக்கூடிய வகையிலே கிருஷ்ணர் இந்த நுட்பத்தை வழங்குகிறார். நம் அன்றாட வாழ்க்கையில் மிக எளிதான முறையில் ஒருங்கிணைக்கக்கூடியனவாகவும் இது இருக்கின்றன.

இந்த ஸத்யத்தைப் புரிந்துகொண்டால் மிகப்பெரிய விடுதலை உணர்வை நாம் உணர்வோம்.

பந்தத்திலிருந்து விடுபடுவதே பிரச்சினைக்கான தீர்வு

நாம் வைத்திருக்கும் பொருட்களில் கட்டுப்பட்டோ அல்லது பந்தப்பட்டோ நாம் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாப் பொருட்களும் நம்முடையதே என்று நினைக்கிறோம்.

இந்தப் பற்றுதலை உருவாக்கும்போதுதான் நாம் பலமான பந்தத்தையே உருவாக்குகிறோம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இப்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

ஒரு சின்ன கதை: ;

பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறந்த ஒருவர், தம் குறையைப் போக்க ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் கண்களைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அவருக்குத் தெளிவான கண்பார்வை கிடைக்குமென்றும், அதற்குப் பிறகு அவர் கைத்தடியைப் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் சொன்னார். அதைக் கேட்ட பார்வையற்றவருக்கு மிகவும் ஆச்சரியம்.

அவர் மருத்துவரைப் பார்த்து "ஐயா, அறுவை
சிகிச்சைக்குப் பின் எனக்குப் பார்வை
வந்துவிடும். என்னால் எதையும் நன்றாகப்
பார்க்க முடியும் என்று நீங்கள் சொல்வது
எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு

> ஸத்யத்தை
> மூடியிருக்கும்
> ஒருசில அறியாமை
> அடுக்குகளை
> அகற்றுவதுதான்
> நீங்கள்
> செய்ய வேண்டிய ஒன்று.

எனக்குக் கைத்தடி தேவையில்லை' என்று சொல்வதைத்தான் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை," என்று சொன்னார்.

இக்கதையில் கண்பார்வையற்றவர் தமது உடைமையான கைத்தடிமீது கொண்டுள்ள பற்றை நாம் பார்க்க முடிகிறது. அவர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தம்மால் நன்கு பார்க்க முடியுமென்று உணர்ந்தபின்னும், தமது கைத்தடியை விட்டுப் பிரிய அவரால் முடியவில்லை. இதுபோல, நாம் தெளிவான பார்வையைப் பெற்றிருந்தும்கூட கைத்தடி ஒன்றைப் பற்றிக்கொண்டுள்ளோம். நாம் குருடர்கள் இல்லை என்றாலும்க்கூட, நாம் பொருள் சார்ந்த உடைமைகளுக்கும் உறவுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்டு இருக்கிறோம்.

நம் வாழ்வில் காணப்படும் இந்தப் பல்வேறு வகையான பற்றுதல்கள் நம்மை எவ்வாறு கட்டிப் போட்டுள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

நமது பொருள் சார்ந்த உடைமைகள்தான் நம்முள் பேராசையையோ அல்லது பயத்தையோ உருவாக்குகின்றன. ஒன்று, நாம் அவற்றை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறோம் அல்லது அவற்றை மேலும் மேலும் அதிகமாகப் பெற வேண்டுமென்ற ஆசையில் இருக்கிறோம்.

நாம் பொருட்களின் பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். உடைமைகளை மேலும் மேலும் பெருக்கிக்கொள்வதற்கு நம்வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குகிறோம். முடிவில், அது ஒன்றே நம் வாழ்வின் ஒரே குறிக்கோளாக மாறிவிடுகிறது.

side note banner

அதிகமான உடைமைகளை நம்மிடம் குவித்து
வைத்துக்கொள்ளும்போது இயற்கையாகவே,
அது அழிந்து விடுமோ, அதை இழந்து
விடுவோமோ என்ற பயத்தை நம்முள் நாம்
உருவாக்கிக்கொள்கிறோம்.

பொருள் சார்ந்த உடைமைகளோடு
நம்மை நாமே இணைத்துக்கொள்வதுதான்
பிரச்சினை. இதைத்தான் 'வாழ்க்கை' என்று
நாம் புரிந்து வைத்திருக்கிறோம் 'நாம்
யார்' என்பதையே மறந்துவிட்டு, நாம்
மீண்டும் மீண்டும் உடைமைகளின் பின்னால்
ஓடிக்கொண்டிருக்கிறோம். அதனாலேயே

நம்மில் பலர் நம்முடைய அஹங்காரத்தைத்
திருப்திப்படுத்தும் எலி ஓட்டத்திலேயே
இருக்கிறோம்.

அவர்கள் பணத்தையும் பங்களாக்களையும்
வாகனங்களையும் சேர்ப்பதிலேயே தங்களது
வாழ்க்கையை செலவழிக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையின் இறுதியில் தங்களது
தவறுகளை நினைத்து மனம் வருந்தி, நாம்
வாழ்வில் இதுவரை என்ன சாதித்தோம் என
நினைத்து வியப்புறுகின்றனர்.

> நாம்
> குருடர்கள் இல்லை
> என்றாலும்கூட,
> நாம்
> பொருள் சார்ந்த
> உடைமைகளுக்கும்
> உறவுகளுக்கும்
> உணர்ச்சிகளுக்கும்
> கட்டுப்பட்டு இருக்கிறோம்.

நமது உடைமைகளின் மீதான பற்று இதை த்தான் செய்யும். இது பேராசையையும் பயத்தையுமே விளைவிக்கிறது. மேலும் மேலும் பொருட் செல்வத்தைப் பெறுவதையே வாழ்வின் இலட்சியமாக உருவாக்கிக்கொள்கிறோம்.

போதுமான செல்வம் நம்மிடம் இருந்தாலும்கூட நாம் அதோடு திருப்தி அடைவதில்லை. மேலும் மேலும் அவற்றையே விரும்பி நாம் மரணக் குழியில் விழும்வரை அவற்றை நோக்கியே ஓடுகிறோம். இப்போது, நாம் அதிகமான பொருட்களை நமது உடைமைகளாக்கிக்கொள்ளும் போது, இயற்கையாகவே அதை இழந்து விடுவோமோ என்ற பயமும் நமக்குள் ஏற்படுகிறது. ஏதோ நாம் பிறக்கும்போதே கொண்டு வந்த உடைமை போல நினைத்துக்கொண்டு அவற்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறோம். நாம் தொடர்ந்து பயத்தின் பிடியில்தான் இருக்கிறோம். இது ஒரு வகையான பந்தம்.

மற்றொரு வகையான பந்தமும் இருக்கிறது. நாம் உற்றார், உறவினர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம் அவர்களுடனான உறவை வலிமையானதாக உருவாக்கிக்கொள்கிறோம். அவைகூட பந்தங்கள்தான். நாம் மனிதர்களையே உடைமையாக்கிக்கொள்ளத் தொடங்குகிறோம்.

hands bound with rope

நமது உடைமையாக்கிக்கொள்ளும்
தன்மை வளரும்போது, நமக்குரியவர்
எவரேனும் மரணமடைந்தால் நாம்
பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

அவரையே முழுமையாகச் சார்ந்திருப்பவராக நாம் மாறி விடுவதால், அவர் இறக்கும்போது நமது முழு வாழ்வுமே அர்த்தமற்றதாகி விட்டதாக உணர்கிறோம்.

உண்மையில் இவ்வகையான பந்தத்தில் என்ன நடக்கிறதென்றால், நம்மைப் பற்றி மற்றவர் சொல்லும் கருத்துக்களை வைத்து நம்மை நாமே வரையறுத்துக்கொள்கிறோம். அவர்கள் தரும் சான்றிதழ்களைக்கொண்டுதான் நம்மை நாமே அறிந்துகொள்கிறோம்.

மற்றொரு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், நாம் மற்றவர்களின் வார்த்தைகளைக்கொண்டு நம்மை நாமே சக்தியூட்டிக்கொள்கிறோம். அதனால்தான், நம் உறவுகளை இறுகப் பற்றிக்கொள்கிறோம். ஏனென்றால் அதுவே நமக்கு சக்தியூட்டுவதாக இருக்கிறது. அந்த உறவுகள்தான் நம்மைப் பற்றி நாமே வரையறுத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

நடு நிலையாளராக
இருத்தல் என்பது
நாம்
ஒரு பார்வையாளராக
இருப்பதே!

அதனால்தான், நாம் நம்முடைய சக்தியின்
மூலம் என்று யாரை இதுவரை இறுகப்
பற்றிக்கொண்டு இருந்தோமோ, அவர்
நம்மை விட்டு மறையும்போது நாம் மன
விரக்தியடைகிறோம்.

நம்மை வரையறுத்த ஒன்று இதுவரை
இருந்தது. இப்போது அது இல்லை,
மறைந்துவிட்டது. நம்மை வலுவூட்டிய ஒன்று
மறைந்துவிட்டால், நம்முடைய மொத்த
அமைப்பும் ஆட்டுவிக்கப்படுகிறது; ஆட்டம்
கண்டுவிடுகிறது.

மனத்தின் இணைப்பை அறுத்தால் இறைவனுடனேயே இணைந்துவிடலாம்

மூன்றாவது வகை பந்தம் அல்லது பற்று ஒன்றும் இருக்கிறது. அது எண்ணங்களோடும், உணர்ச்சிகளோடும் தொடர்புடையது.

ஏதோ ஒன்று நிகழும்போதுஎல்லாம், அச்செயலை நமது கடந்தகாலத்தோடும் எதிர்கால கற்பனைகளோடும் தொடர்புபடுத்திப் பார்க்கத் தொடங்குகிறோம். நன்கு தெரிந்துகொள்ளுங்கள், ஒரு எண்ணம் நம்மனத்தில் எழுகிறது என்றாலே, நம் மனம் இறந்தகாலத்திலிருந்து எதிர்காலத்திற்குத் தாவிக் கொண்டே இருக்கிறது என்றுதான் பொருள். ஒரு எண்ணம் எழும்போது நாம் அந்த ஒரு எண்ணத்தை மற்ற எண்ணங்களோடு இணைத்துக் கொண்டே இருக்கிறோம்.

நீங்கள் ஒரு நாயைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதைப் பார்த்தவுடனேயே உங்கள் மனம் கடந்தகாலத்திற்குச் சென்றுவிடும். முன்பொரு சமயம் ஒரு நாய் உங்களைக் கடித்ததையும் நீங்கள் மருத்துவமனைக்குச் சென்றதையும் அங்கொரு மருத்துவர் சிகிச்சையளித்ததையும் எண்ணுகிறது.

நீங்கள் சாலையில் பார்த்த நாய்க்கும்
அந்த மருத்துவருக்கும் தொடர்பேதும்
இல்லையென்றாலும், உங்கள் மனம்
இப்படித்தான் அனைத்தையும்
தொடர்புபடுத்தி அவற்றோடு
உங்களைத் தொடர்புடுத்துகிறது!
எண்ணங்களுக்கிடையே ஒரு தொடர்பு
சங்கிலியை நீங்கள் உண்டாக்குகிறீர்கள்.
பல்வேறு எண்ணங்களை இணைத்துக்
கொண்டே இருக்கிறீர்கள்.

வாழ்க்கை எனும் நாடகத்தில் பார்வையாளராய் மட்டும் இருங்கள்

ஒரு சிறுபயிற்சியைச் செய்யுங்கள். ஒரு காகிதத்தை எடுத்து, உங்களது மனத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள். எதையும் வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள். உங்கள் மனத்தில் தோன்றும் எல்லாவற்றையும் எழுதுங்கள். இதை ஐந்து நிமிடங்கள் செய்யுங்கள். வெறுமனே ஐந்து நிமிடங்கள்தான். பிறகு அதை வாசித்து பார்க்கும்போது, தலைக்குள் ஒரு குழப்பம் நடந்துகொண்டு இருப்பதைப் பார்ப்பீர்கள்!

இந்த எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். அவை நோக்கமில்லாமலும், தொடர்பில்லாமலும், தர்க்கமற்ற எண்ணங்களாகவும் இருக்கும். இந்த எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவறறாக இருந்தாலும் அவற்றை ஒன்றுக்கொன்று இணைக்கத் தொடங்கி விடுகிறோம். எல்லா எண்ணங்களையும் இணைக்கிற ஒரு தண்டை உருவாக்குகிறோம்.

நம் மனத்தில் எழும் ஒவ்வொரு எண்ணமும் மீன் தொட்டியில் உருவாகும் நீர்க்குமிழியைப் போன்றதுதான்.

அந்த நீர்க்குமிழிகளை நீங்கள் பார்த்தீர்களானால் அவை தொடர்பற்றவை; இணைப்பற்றவை.

இருந்தாலும் நாம் நீண்ட தண்டு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவற்றை இணைக்கிறோம்.

அந்தத் தண்டோடு நம்மை நாமே இணைத்துக்கொண்டு, அவற்றை அனுபவிக்கத் தொடங்குகிறோம். இவ்வெண்ணங்களில் நாம் பங்குபெறத் துவங்கி, அவை நம்மையே கட்டுப்படுத்துமளவிற்கு விட்டு விடுகிறோம்.

இதே வழியில்தான் நாம் நமது உணர்ச்சிகளையும் கையாளுகிறோம். நமது எல்லாச் சந்தோஷங்களுக்கும், எல்லா வலிகளுக்கும் ஒரு தண்டை உருவாக்குகிறோம்.

சந்தோஷத் தண்டைவிட துக்கத்தண்டு நீளமானதாக இருந்தால், கஷ்டமான, துக்கமான வாழ்வு நமக்கு கிடைத்துள்ளது என்றும், அப்படி இல்லையென்றால் சந்தோஷ வாழ்வு கிடைத்துள்ளது என்ற முடிவுக்கும் நாம் வருகிறோம்.

ஒரு எண்ணம்
நம்மனத்தில்
எழுகிறது என்றாலே,
நம் மனம்
இறந்தகாலத்திலிருந்து
எதிர்காலத்திற்குத்
தாவிக்கொண்டே
இருக்கிறது என்றுதான்
பொருள்.

இதை ஆழமாகப் பார்த்தோமானால்
ஒவ்வொரு வலியும் முழுவதும்
தொடர்பற்றதாகவும் இணைப்பற்றதாகவும்
இருப்பதைப் பார்க்கலாம்.

உதாரணமாக, நீங்கள் இன்று உணரும்
தலைவலிக்கும் போனவாரம் நீங்கள்
அனுபவித்த தலைவலிக்கும் ஒரு தொடர்பும்
இல்லை. அதேபோல் போனவருடம் நீங்கள்
அனுபவித்த தலைவலிக்கும் சென்ற மாதம்
உணர்ந்த தலைவலிக்கும் தொடர்பில்லை.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

எல்லாத் தலைவலிகளையும் ஒன்றாக இணைத்து, "நான் எப்போதும் தலைவலியால், அவதியுறுகிறேன்," எனச் சொல்கிறோம்.

நாம் தலைவலியால் பாதிக்கப்பட்டவராகிறோம்.

இவை ஒவ்வொன்றும் தனித்தனி செயல்கள் என்பதை உணரத் தவறி விடுகிறோம். எல்லாத் துக்கங்களையும் ஒரே தண்டில் இணைத்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இதைப்போலவே, நாம் ஒரு சந்தோஷமான அனுபவத்தைப் பெறும்போதும் சரி, நாம் அதையே இறுகப் பற்றிக்கொள்கிறோம். அதையே மீண்டும் மீண்டும் அனுபவிக்க விரும்புகிறோம்.

அதனால் நாம் தொடர்ந்து அம்மகிழ்ச்சிக்கான காரணத்தைத் தேடி அலைகிறோம். இது மீண்டும் நம்மை எலி ஓட்டத்திற்குள் அழைத்துச் செல்கிறது.

இங்குக் கிருஷ்ணர், தம்மை ஒரு நடு நிலையானவர் எனச் சொல்கிறார். நாம் எப்படி இப்பற்றுதல்களிலிருந்து விடுபட முடியும்?

'நமது பொருள் சார்ந்த உடைமைகளிலிருந்து விடுபடுதல்' என்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வது அல்ல என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள்.

உறவுகளிலிருந்து விடுபடுதல் என்றால், உங்கள் உறவுகளை - குழந்தைகளை, பெற்றோரை மறந்து விடுங்கள், விட்டு விடுங்கள் என்று அர்த்தம் இல்லை.

இதை ஆழ்ந்து உணரவேண்டும்.

'நடு நிலையானவனாக, தொடர்பறுத்தவனாக இருத்தல்' என்பது ஆழ்ந்த பொருளுடையது. நடு நிலையாளராக இருத்தல் என்பது நாம் ஒரு 'பார்வையாளராக', ஸாக்ஷியாக இருப்பதே. இது நீங்கள் படம் பார்க்கும்போது, திரையில் எதையோ பார்க்கிறீர்கள். அதில் நீங்களும் ஒரு நடிகராகி விடுகிறீர்களா? இல்லையே! திரையில் நடப்பதைப் பார்த்துவிட்டு, அதை அப்படியே விட்டு விடுகிறீர்கள். இதே வழியில்தான் நம்முடைய பற்றுதல்களையும் நாம் பார்க்க வேண்டும். நாம் அவற்றை ஒரு பார்வையாளராக மட்டுமே கவனிக்கும்போது, நாம் அவற்றிலிருந்து விலகி விடுகிறோம். நான் இப்படிச் சொல்வதன் அர்த்தம் என்ன? நம்முடைய பொருட் செல்வத்தைப் பார்க்கும்போது அதைப் பெருக்கிக்கொள்வதற்காக நாம் அதன்பின்னே ஓடமாட்டோம்.

நாம் நமது வேலையைச் செய்வோம்; அதை நேசிப்பதால் மட்டுமே!

வேலையை நேசிப்பதால் மட்டுமே செய்வோமே தவிர செல்வத்தைப் பெருக்குவதற்காக அல்ல. ஒரு விஞ்ஞானி தம்முடைய ஆராய்ச்சியை விரும்பிச் செய்ய வேண்டுமே தவிர அதிலிருந்து வேறு ஏதாவது கிடைக்கும் என்பதற்காகச் செய்யக் கூடாது.

இந்த மனப்பான்மை நமக்குள் ஏற்படும்போது, பிரபஞ்சம் பொழியத் தொடங்குகிறது. நம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க ஆரம்பிக்கிறது. பொருள் சார்ந்த செல்வம் தானாகவே வந்து சேருகிறது.

நம் சொந்தபந்தத்திலும்கூட, நாம் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும். நாம் ஒருவரை நம்முடைய உடைமையாகப் பார்ப்பதை விட்டுவிட்டு பார்வையாளராகும்போது, அவரைச் சார்ந்திருப்பதும், அவரிடமிருந்து எதையோ எதிர்பார்க்கும் நம்முடைய மனப்பான்மையும் இல்லாமல் போய்விடுகிறது.

எப்போது சார்ந்திருப்பதும், எதிர்பார்ப்பதும் நம்மிடமிருந்து விடுபடுகிறதோ, அப்போது அந்த உறவில் கொடுக்கல் வாங்கல் என்பது இல்லை. அங்கே கொடுப்பது என்பது மட்டுமே இருக்கும். அப்போது அந்த உறவு வலுப்பெறுகிறது. ‘கொடுப்பது’ மட்டுமே இருக்கும் உறவு எப்போதுமே வலுப்பெறுகிறது.

எப்போது நாம் நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒரு பார்வையாளராக ஆகிறோமோ அப்போது நமக்குள் ஒரு விடுதலையுணர்வை உணர்கிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றுதான். அது, தொடர்பற்ற எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே நாம் உருவாக்கி வைத்துள்ள தண்டைத் தகர்த்தெறிவதுதான். நாம் அன்கிளட்ச் செய்ய வேண்டும்.

நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வானில் கடந்துபோகிற மேகங்களைப் போன்றுபார்க்கும்போது, நாமாக அவற்றோடு கொண்ட இணைப்பை, நம் உறவை நிறுத்திக்கொள்வோம். அதற்குப் பிறகு நாம் அவற்றால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்.

இப்படி வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பதென்றால், நம் எண்ணங்களை வெறுமனே அழுத்தி வைப்பதோ அல்லது அவற்றை அழிப்பதோ இல்லை என்பதைச் சரியாக நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் உயிரினங்களைப் படைக்கும் ப்ரஹ்மாவோ, காக்கும் விஷ்ணுவோ, புதுப்பிக்கும் சிவனோ இல்லை. நாம் வெறும் பார்வையாளராக மாறுகிறபோது இந்த மூன்று நிலைகளையும் கடக்கிறோம்; மூன்று நிலைகளையும் கடந்த நிலைக்குச் செல்கிறோம்.

வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கும்போது, நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதனால் பாதிக்கப்படாமலும், அதனோடு தொடர்பில்லாமலும் நம்மால் இருக்க முடியும். இது ஸத்யம். நம்மால் இதை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியுமானால், இந்த நிமிடமே நாம் ஞானமடைந்து விடுவோம்!

அவர் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தாலும், நடப்பவையெல்லாம் அவரது மேற்பார்வையிலேயே நடப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். இங்கே அவர் தமது அதிகாரத்துவத்தைக் காண்பிக்கிறார். மேலும் இந்தப் பொருள் சார்ந்த உலகம் அவரது விருப்பப்படி அவரது இயற்கை சக்தியான ப்ரக்ருதியினாலும், மாயா சக்தியினாலும் உருவாக்கவும் அழிக்கவும் படுகிறது என்று சொல்கிறார்.

உங்கள் உலகை நீங்களே படைக்கிறீர்கள்

உண்மையில் முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொன்னாரோ அதையே மீண்டும்

> நம் ஆழ்மனது
அமைதியாக
இருந்தால்தான்,
ஆனந்தத்தை நம்மால்
வெளிப்படுத்த முடியும்.

தொடர்ந்து சொல்கிறார். அவர் இந்த முக்கியமான கருத்தை அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறார். அதனால் இதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

அர்ஜுனன் இதைத் தெளிவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புகிறார். பிரபஞ்ச விழிப்புணர்வின் சக்தி வெளிப்பாடுதான் இந்தப் பொருள் சார்ந்த உலகத் தோற்றமாக வெளிப்பட்டுள்ளது. '

இதுவே நம்முள் தனிமனித விழிப்புணர்வாகவும் பிரதிபலிக்கிறது. நாம் பார்க்க விரும்புவதையே படைக்கிறோம். நாம் எதை நம்புகிறோமோ அதையே ஸத்யம் என்று வெளிப்படுத்துகிறோம்.

இது எதுபோல என்றால், கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே பார்த்துக்கொள்வது போன்றது. இப்பொழுது உங்கள் மனத்திற்குள் என்ன இருக்கிறதோ அதுவே வெளியே பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.

கிருஷ்ணர், "நானே மேலான சக்தி," என்கிறார். நடப்பது எல்லாமே தமது மேற்பார்வையில் நடைபெறுகிறது என்று சொல்கிறார். அப்படி அவர் சொல்வது எளிமையான ஒன்றுதான். எதுவெல்லாம் நிகழ்கிற தோ அது எல்லாமே இயற்கையின் மூலமாகவும் மாயையின் மூலமாகவும் நடத்தப்படும் நாடகங்கள்தான்.

கிருஷ்ணரே இந்தப் பிரபஞ்ச நாடகத்தின் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவர், இவற்றை இயக்கமற்ற நிலையில் ஓர் பார்வையாளராக இருந்தே நடத்துகிறார்.

அலங்காரப் பெட்டி

மேற்சொன்ன ஸத்யம் நம்முள்ளும்
பிரதிபலிக்கிறது. நம்மை நாமே படைக்கவும்
அழிக்கவும் செய்கிறோம்.

நம் மகிழ்ச்சி, துக்கம், கற்பனைகள், வருத்தங்கள், உறவுகள் போன்ற நம் செயல்கள் அனைத்துமே நம்மாலேயே படைக்கப்படுகின்றன. நாம் உயர்ந்த, உன்னதமான நிலையிலிருந்து பார்த்தால், இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

இதனால் நாம் எவ்வளவு சக்தி மிக்கவர்கள்
என்பதையும் நம்முடைய உள் இருப்புத்
தன்மை எவ்வளவு சக்தி வாய்ந்தது
என்பதையும் கிருஷ்ணர் காட்டுகிறார்.

நாம் இதை நம்பினாலும் சரி, நம்பாவிட்
டாலும் சரி இதுவே ஸத்யம். நாம்
எதையெல்லாம் பார்க்கிறோமோ, உணர்கி
றோமோ, கேட்கிறோமோ அவற்றையே நாம்
படைக்கிறோம். இதுவே நமது ஆன்மாவின்,
உள் இருப்புத் தன்மையின் சக்தி .

ஆனால் நம்மால் கிருஷ்ணரைப்போல
பற்றில்லாமல் செயல்களைச் செய்ய
முடிவதில்லை.

நம் எண்ணங்களும், உள் மனத்தின் பேச்சுக்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்ச விழிப்புணர்வு நம் எண்ணங்களுக்கேற்ப பதிலளிக்கிறது. எல்லா ஞானமடைந்த குருமார்களும் இது பற்றிப் பேசியிருக்கின்றனர். நாம் எதை நினைக்கிறோமோ, எப்படி நினைக்கிறோமோ அது நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எப்போதும் மற்றவர்களைத் திட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கும் சிலரை நாம் பார்த்திருப்போம். மற்றும் சிலர், எப்போதும் தங்களது கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். இவற்றுக் கெல்லாம் காரணம் உள் மனத்தில் நிலவும் அமைதியற்ற நிலையே!

ஏதேனும் தவறு நிகழ்ந்தால், அதற்கு நாம் மற்றவரையே குறை சொல்கிறோம். சின்னச் சின்னச் செயல்களால்கூட நாம் எரிச்சலடைகிறோம். நம்முள்ளே இருக்கிற அமைதியற்ற நிலைதான் இப்படியெல்லாம் நிகழ்வதற்குக் காரணமாக இருக்கிறது.

இருந்தபோதிலும் இதற்கான காரணத்தை நம்முள்ளே ஆழ்ந்து சென்று கண்டறிவதற்குப் பதிலாக நாம் என்ன செய்கிறோம்? நாம் மற்றவர் மீதே குற்றம் சுமத்துகிறோம். நம்முள்ளே எதிர்மறையான எண்ணங்களும் செயல்களும் குடிகொண்டிருப்பதால்தான், நம்மைச் சுற்றிலும் எதிர்மறைத் தன்மையையே நாம் பார்க்கிறோம்.

அப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் நம்முள் இருப்பதால்தான், நாம் சிறு விஷயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டாலும்கூட உடனே எரிச்சல் அடைந்து, அந்த எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம், வெளியே கொட்டுகிறோம். இப்படித்தான் நமக்கான உலகை நாமே உருவாக்கிக்கொள்கிறோம்.

நமது எண்ணங்களாலும், உள் மனப் பேச்சுக்களாலும் புற உலகில் எதிர்மறையான விஷயங்களை உருவாக்கி விடுகிறோம்.

Feather graphic

ஆனந்தம் வேறு சந்தோஷம்வேறு

வேதங்கள்
மிகப் புனிதமானவை,
எந்தக் கலப்புமில்லாத
படைப்புகள்!

குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள்,
அவர்கள் எப்போதுமே ஆனந்தமாக
இருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு குழந்தை ஏமாற்றமடைவதையோ,
எரிச்சலடைவதையோ நீங்கள் எப்போதாவது
பார்த்திருக்கிறீர்களா? இல்லை.

குழந்தைகள் சீட்டுக்கட்டுகளைக்கொண்டு, அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாகச் சீராக அடுக்கி வீடு ஒன்றை உருவாக்குவதை நாம் பார்த்திருப்போம். அவ்விளையாட்டில் அவர்கள் முழுவதுமாக மூழ்கி விடுவதையும் நாம் பார்க்கலாம். அப்போது சில சீட்டுகள் சரிந்து விழுந்தாலும், அதனால் அவர்கள் ஏமாற்றமடைவதோ, மனவெறுப்படைவதோ இல்லை. மாறாக, அவற்றை மீண்டும் അടുக்க ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தைகளுக்கு உள் மனப் பேச்சோ, கட்டுறு மனப்பாங்கோ இல்லை. அதனால் அவர்கள் வெளி உலகில் வெளிப்படுத்தும் வெளிப்பாடும் ஆனந்தமயமானது. அவர்கள் தங்களுக்கான ஓர் அழகான உலகத்தைச் சிருஷ்டித்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குள் எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களும் இல்லை. எனவே நம் எண்ணங்களின் சக்தியை உணருங்கள். ஒருவர் ஆனந்தமயமாக இருப்பது என்பது வெளியே நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அவருக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தது அது.

மற்றொரு முக்கிய கருத்து என்னவென்றால், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஆனந்தமாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது, மகிழ்ச்சி என்பது வெளிப்புறக் காரணிகளால் நமக்குள் நிகழ்கிற ஒன்று. நமக்கு வெளிப்புறம் நிகழ்கிற ஒரு நிகழ்வால் நாம் நமக்குள் சந்தோஷத்தை உணர்ந்தோமானால், அந்தச் சந்தோஷத்தைத்தான் 'மகிழ்ச்சி' என்கிறோம்.

இந்த மாதிரியான மகிழ்ச்சியில் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், அது உருவாகும் இடம் அதாவது மகிழ்ச்சி உண்டாவற்குக் காரணமாக இருந்த அந்த 'வெளிப்புறக்காரணி'தான்.

அந்த வெளிப்புறக் காரணி திடீரென்று
மறையும்போது நமது சந்தோஷங்களும்
மறைந்து விடுகின்றன. அதனால் நமது
உள் நிலை வெளிக்காரணிகளால்
பாதிப்படைகிறது. வெளி உலகம் நமது உள்
உலகைப் பாதிக்கிறது.

குழந்தைகளைக்
கவனித்துப் பாருங்கள்,
அவர்கள் எப்போதுமே
ஆனந்தமாக இருப்பதைப்
பார்க்கலாம்.

ஆனால் ஆனந்தம் என்பது அதைப் போல
இல்லை. ஆனந்தமாகிருப்பது என்பது வெளி
உலகக் காரணிகளைச் சார்ந்து இல்லை.

நமது ஆழ்மனம் அமைதியாக இருந்தால், நாம் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறோம்; எந்த வெளிப்புற நிகழ்வும் அதைப் பாதிப்பதில்லை. ஆனந்தம் என்றும் நிலையானது. ஆனால் மகிழ்ச்சி தற்காலிகமானது. நம்முள் ஆனந்தமாக இருந்தோம் என்றால், நாம் ஆனந்தத்தையே வெளியிலும் வெளிப்படுத்துகிறோம்.

Children playing

இந்த ஆனந்தமான நிலையில்
நாம் இருக்கும்போது, நமக்கு
வெளிப்புறம் நிகழ்கிற
அனைத்தையுமே நாம்
அனுபவிக்கிறோம்.

வெளி உலகத் தோற்றங்களை, பொருள்களின்
வெளிப்பாடுகளை நாம் ஆனந்தமாக
அனுபவிக்கிறோம். ஏனென்றால் நாம் நம்
உள் தளத்தில் ஆனந்தமாக இருக்கிறோம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமது
உள் உலக ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே
இருக்கும் இந்தப் பொருள்சார்ந்த வெளி
உலகத் தோற்றங்களை, ஒரு பார்வையாளராக,
ஸாக்ஷியாக இருந்து அனுபவிக்கும்வரை அது
சரியாகவே இருக்கிறது. அது நல்லதுதான்.

குழந்தைகளுக்கு
உள் மனப் பேச்சோ,
கட்டுறு மனப்பாங்கோ
இல்லை.
அதனால் அவர்கள்
வெளி உலகில்
வெளிப்படுத்தும்
வெளிப்பாடும்
ஆனந்தமயமானது.

ஆனால் அதில் நாம் பங்குகொள்ளும்போது, அந்த ஆனந்தத்தை நமதாக்கிக்கொள்ள முயற்சி செய்யும்போது, அதை இறுகப் பற்றிக்கொள்ள முயற்சி செய்யும்போதுதான் ஆனந்தம் மறைந்துவிடுகிறது. ஏனென்றால் நாம் இவ்வாறு நினைக்கும்போது, நம் மனம் உள்ளே நுழைந்துவிடுகிறது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்; நம் மனத்தால் நினைப்பதும், மனத்தின் மூலம் அனுபவிப்பதும் ஆனந்தம் ஆகாது.

கிருஷ்ணர், நமக்கான உலகை நாமே உருவாக்கிக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தின் வரிகளில் சொல்கிறார். நம் பொருள் சார்ந்த உலகின் வெளிப்பாடுகளுக்கு எல்லாம் நம் ஆன்மாவே, நம் உள் இருப்பே காரணமே தவிர, புறக்காரணிகள் எவையுமே காரணம் இல்லை.

ஸத்யங்களைப் பேசுவதற்குக் ‘குறிப்பு’ தேவையில்லை

அடுத்த ஸ்லோகத்தில் "நான் மனித உருவத்தில் அவதரிக்கும்போது 'முட்டாள்கள்' என்னை ஏளனம் செய்கிறார்கள். எனது இறுதியான, இயல்பையும், அழிவற்ற எனது இயற்கை தன்மையையும், எல்லாவற்றிற்கும் மேலான மிக உயர்ந்த இறைசக்தி நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை."

இங்கே கிருஷ்ணர் 'முட்டாள்கள்' என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார். ஜீவன் முக்தி அடைந்த ஞானிகள் மனத்திலிருந்து எழும் வார்த்தைகளைக் கூட்டியோ, குறைத்தோ சொல்லாமல் அப்படியே சொல்கிறார்கள். அவர்கள் உண்மையை உள்ளது உள்ளவாறே பேசுகிறார்கள். வழக்கமாக, சாதாரண மனிதர்கள் மற்றவரின் கருத்துக்களுக்குப் பயந்து உண்மையைப் பேசாது, ஒட்டியோ வெட்டியோதான் பேசுவார்கள்.

பொதுவாக நம் எல்லார் மனங்களிலும் மூன்று செயல்கள் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அவை, முதலாவதாக வார்த்தைகளை உருவாக்குவது, பிறகு அதைச் சீரமைப்பது, கடைசியாக அதை வழங்குவது என்பன. அதாவது உருவாக்குதல், சீரமைத்தல் மற்றும் வழங்குதல். ஞானிகளிடையே இம்மூன்று செயல்களும் நடைபெறுவதில்லை. ஞானிகளின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறார்கள்.

பல ஆன்மீகச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்ட ஒரு அமெரிக்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் ஒருவர் என்னிடம் '"ஸ்வாமிஜி, பல மணி நேரங்களாக நீங்கள் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் எந்தவித குறிப்புமே நீங்கள் வைத்து கொள்வதில்லையே!'' என்று கேட்டார்.

உண்மையில் நமது இணையதளத்தைக் காணும்போது, தினமும் இவ்வுலகில் எங்காவது ஓரிடத்தில் என்னுடைய சத்சங்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடியும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒருநாள்கூட ஆன்மீக நிகழ்வு நடைபெறாமல் இருந்ததே இல்லை. எப்போதும் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில சொற்பொழிவுகள் என ஏதோ ஒன்று நடந்துகொண்டேதான் இருக்கிறது.

அவர் என்னிடம், '"ஸ்வாமிஜி, உங்களால் எப்படி குறிப்புகளின் உதவியில்லாமல் தொடர்ந்து பேசமுடிகிறது?'' எனக் கேட்டார். என் முன்னே ஸ்லோக புத்தகம் மட்டுமே இருக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். இது தவிர வேறெந்தக் குறிப்பும் இல்லை.

ஸ்லோகங்களை மிகச்சரியாக உச்சரிக்க வேண்டுமென்பதற்காகவே அதை என் முன்னே வைத்திருக்கிறேன். அவற்றின்

> ஒருவர் ஆனந்தமயமாக
> இருப்பது என்பது
> வெளியே நிகழும்
> நிகழ்வுகளை
> அடிப்படையாகக்
> கொண்டது அல்ல;
> அவருக்குள் என்ன
> இருக்கிறது என்பதைப்
> பொறுத்தது அது.

'மூல'த் தன்மை காக்கப்பட வேண்டும்.

நாம் அவற்றுக்கு எப்போதுமே மதிப்பளிக்க வேண்டும். அவற்றின் உச்சரிப்புகளை நாம் மாற்றியமைக்கக் கூடாது. வேதங்கள் மிகப் புனிதமானவை, எந்தக் கலப்புமில்லாத படைப்புகள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அதனால் அதில் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க முடியாது; உச்சரிக்கும் ஒலியைக்கூட மாற்ற முடியாது. ஒலியை உச்சரிக்கும்முறை, பண்ணிசைப்பு என்று சொல்லப்படும் சந்தஸ் முறையும் மாற்றப்பட முடியாததாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதே உச்சரிப்பு ஒலி காக்கப்பட வேண்டும் இது வாசிப்பதன் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதைக் கேட்டுத்தான் கற்றுக்கொள்ள வேண்டும், ச்ருதி என்றால் அது கேட்கப்பட வேண்டியது என்று பொருள்.

ஞானிகள் கடினமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது உங்களை விழிப்படையச் செய்யத்தான்!

கேட்டலின் மூலமே, அதைக் கற்க முடியும். அதனாலேயே அந்த ஒலிப்புமுறை, உச்சரிக்கும் முறை மாற்றப்பட முடியாததாகிறது. ஸ்லோகத்தின்வார்த்தைகளும், ஒலியமைப்பு முறையும் மாற்றப்பட முடியாதவை. அப்புனிதத் தன்மையைக் காக்கவேண்டுமென்பதற்காகவே, அப்புத்தகத்திலிருந்து நான் படிக்கிறேன். நான் வேறு எந்தக் குறிப்புகளையும் வைத்துக்கொள்வதில்லை.

அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம், "ஸ்வாமிஜி குறிப்புகளின் உதவியில்லாமல் எவ்வாறு தங்களால் தொடர்ந்து பேச முடிகிறது?" எனக் கேட்டார். புத்தகத்தை வைத்துக்கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறை. நீங்கள் இதற்கு முன் பங்கு பெற்றுள்ள நான்கு நாள் பயிற்சிமுகாமிலோ அல்லது ஐந்து நாள் பயிற்சி முகாமின்போதோ நான் குறிப்புகளை வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறீர்களா? ஸம்ஸ்க்ருத இலக்கியத்தைப் பற்றிச் சொல்வது இதுவே முதன்முறை என்பதினாலேயே, ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களை என் முன்னே வைத்துள்ளேன்.