அனுபவமாகிவிட்டால், எதுவும் எளிதாகிவிடும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்கப் பேராசிரியர் என்னிடம், "குறிப்புகளே இல்லாமல் எப்படி உங்களால் தொடர்ந்து பேசமுடிகிறது," என்று கேட்டபோது, நான் அவரிடம், "அச்செயலானது எனக்கு மிக எளிதாக இருக்கிறது; நான் சொல்ல விரும்புவதை வெட்டுவதோ, ஒட்டுவதோ இல்லை.
வார்த்தைகளை உருவாக்குதல், சீரமைத்தல் மற்றும் வழங்குதல் என்ற மூன்றுபடிகளை நான் எப்போதும் பின்பற்றுவதில்லை.
ஆனால் பொதுவாக, எல்லா மக்களுக்குள்ளும் இந்த மூன்று நிலைகளுமே நிகழவேண்டியிருக்கிறது," என்று சொன்னேன்.
அப்பேராசிரியர் மேலும் ஒரு கேள்வியை
என் முன்னே வைத்தார். "ஸ்வாமிஜி, பல
மணி நேரங்களுக்குப் பேசிக்கொண்டு
இருப்பது என்பதே ஒரு மேலான தனியான
சிறப்பம்சம்தான்.
அந்தக் கருத்து ஒருபுறம் இருந்தாலும்,
இன்னும் ஒரு சந்தேகமும் என்னுள்
இருக்கிறது.
நான் ஒரு மணிநேரம் விரிவுரையாற்ற
வேண்டியதிருந்தால் குறைந்தது மூன்று மணி
நேரம் என்னைத் தயார்படுத்திக்கொள்வேன்.
இதேபோல் ஏதேனும் கருத்துக்களையோ,கொள்கைகளையோ ஒரு மணி நேரம் பேச வேண்டியதிருந்தால் தயாரித்தலுக்கு மூன்று மணி நேரம் செலவிடுவேன்.
ஆனால் நீங்கள் நிகழ்த்துகிற ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கான குறிப்புகளைத் தயாரிப்பதற்குத் தங்களுக்கு கால அவகாசமே இல்லை என்பதையும் உறுதியாக அறிவேன்," என்று சொன்னார்.
நமது த்யான முகாம்களில், சிலசமயம் நிகழ்ச்சிகள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரங்கூட நீடிக்கின்றன. அந்நேரம் முழுவதும் மக்கள் உரைகளை செவிமடுப்பதும், த்யானம் செய்வதுமாகவே இருக்கிறார்கள்.
ஞானிகளின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இதே நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு, சுமார் நாற்பது மணி நேரம் அல்லது அதற்கும் மேலாகக்கூட நடைபெறுகிறது.
"இப்படிப்பட்ட மிக நீண்ட சொற்பொழிவுகளுக்கு உங்களை எப்படித் தயார்படுத்திக்கொள்ள முடிகிறது? 'முன் தயாரிப்பே' இல்லாமல் உங்களால் எப்படிப் பேச முடிகிறது?" என்று கேட்டார்.
ஏனென்றால் நீங்கள் உரையாற்றப்போகும் கருத்து, உங்களுக்குள் அனுபவமாக மலராததால்தான், நீங்கள் முன்கூட்டியே உங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது என்று நான் அவருக்குப் பதிலளித்தேன்.
அதற்குப் பிறகு அவரிடம், "யாராவது உங்கள் பெயரைக் கேட்கும்போது அதற்கு விடையளிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டியிருக்கிறதா அல்லது குறிப்புகளைப் பார்த்து பதிலளிக்கிறீர்களா," எனக் கேட்டேன்.
உங்கள் பெயரானது அனுபவமாகி, நீங்கள் அதுவாகவே ஆகி விடுவதால்தான், கேட்டவுடனேயே உங்களால் பதிலளிக்க முடிகிறது.
இதுபோலத்தான் நான் எதைப் பற்றிப் பேசினாலும், அது எனது அனுபவத்திலிருந்து வருகிறது. அதனால் நான் அதைத் தன்னிச்சையாக வெளிப்படுத்துகிறேன். மேலும் அதற்கு எந்த ஒத்திகையும் எனக்குத் தேவையில்லை. அதனால் தயாரிக்கப்படவேண்டிய குறிப்பு என்று எதுவும் இல்லை; 'தயாராகுதல்' என்பது தேவையற்றதாகிவிடுகிறது.
நான் மேலும் ஒன்று சொல்கிறேன்.
நான்
எதைப் பற்றிப் பேசினாலும்
அது எனது
அனுபவத்திலிருந்து
வருகிறது. அதனால் நான்
அதைத் தன்னிச்சையாக
வெளிப்படுத்துகிறேன்.
பரமஹம்ஸ நித்யானந்தர்
மக்கள் ஏன் பலர் முன்னிலையில் பேச அச்சமடைகின்றனர்? அதற்காக ஏன் அவர்கள் மீண்டும், மீண்டும் தயாரித்துக்கொண்டும், ஒத்திகை பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்?
தாங்கள் நினைப்பதை அப்படியே பேசி
விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு
இருக்கிறது!
அவர்கள் தங்கள் மனத்தில் தோன்றியதை, உள்ளது உள்ளவாறே சொல்ல விரும்புவதில்லை. அவர்கள் மென்மையான, நாகரிகமான, சரியான வார்த்தைகளை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறார்கள். உள்மனத்தின் உணர்வுகளை அவர்களையும் மீறி, அவர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்படுத்தி விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதற்காகவே அவர்கள் திரும்பத் திரும்பத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.
எந்தவொரு மனிதரின் வார்த்தைகள் மட்டுமில்லாது, உள் பேச்சும் தூய்மையாக இருக்கிறதோ, அப்பொழுது அவரது சிந்தனைகளும் தூய்மையடைகின்றன.
அப்படிப்பட்ட ஒருவரால்தான் மக்கள் கூட்டத்தில் பல மணி நேரங்கூட மிகவும் தளர்வாக இலகுவாகப் பேச முடியும்.
மக்கள் கூட்டத்தில் உரையாற்ற
வேண்டுமானால், அதுவும் எளிமையான
தளர்வான, சாதாரண முறையில் உரையாற்ற
வேண்டுமானால், நமது உள் இருப்பு மிகத்
தூய்மையாக இருப்பது அவசியமாகிறது.
அந்நிலையை அடைந்த பின்னரே நம்
மனத்தில் தோன்றுவதை அப்படியே பேச
முடியும். நாம் தளர்வான மனநிலையில்
இருக்க முடியும்.
இல்லையென்றால், நாம் எப்போதுமே நம் வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் மிகைப்படுத்தியும் சுருக்கியும்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
> எந்தவொரு மனிதரின்
> வார்த்தைகள்
> மட்டுமில்லாது
> உள் பேச்சும்
> தூய்மையாகஇருக்கிறதோ,
> அப்பொழுது அவரது
> சிந்தனைகளும்
> தூய்மையடைகின்றன.
பேசும்போது, வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் பேசினால், நம்மால் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணிநேரமோ மட்டுமே பேச முடியும். அதற்குப்பிறகு நாம் சோர்ந்து விடுவோம். வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டு நாம் வறண்டுவிட்டதாக உணர்வோம்.
நம்மால் அதே சக்தியைத் தொடர்ந்து வெளிப்படுத்த முடியாது. பேசும்போது வார்த்தைகளை ஒட்டியும் வெட்டியும் பேசுபவர்களுக்குப் பேச்சுக்கலை என்பது பெரும் சவாலான வேலையாகிவிடுகிறது. அவர்களால் தளர்வாகவோ, சந்தோஷமாகவோ இருக்க முடியாது. ஞானிகள் சுருக்கியோ, அதிகமாக்கியோ பேசாமல், தங்களுக்குள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே வெளியிடுவார்கள். அவர்களது எண்ண ஓட்டம் மிகத் தூய்மையானதாக இருப்பதால், சுருக்கியும் அதிகமாக்கியும் பேசுவது தேவையற்றதாகிவிடுகிறது. அவர்கள் சற்று கடினமான வார்த்தைகளைப் பிரயோகிப்பதுகூட உங்களை விழிப்படையச் செய்வதற்காகத்தான்.

உங்கள் அருகிலிருக்கும்போதே என்னை அனுபவியுங்கள்
இங்கே கிருஷ்ணர் மூட்டாள்கள்-மூட: என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அவர் அந்த ஆணவத்திற்கு அதிர்ச்சியே ஏற்படுத்துகிறார். "மூட்டாள்கள் என்னை ஏளனம் செய்கிறார்கள்." அவர் ஆணவத்தை உலுக்குகிறார். "நான் மனித வடிவெடுக்கும்போது மூடாள்கள் என்னை ஏளனம் செய்கிறார்கள். எனது அழிவற்ற இயற்கைத் தன்மையையும் எல்லாவற்றிற்கும் நானே பரமாத்மா என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
அவர் மேலும், "நான் இப்பூவுலகிற்கு மனித உருவில் ஒரு ஞானியாகவும் குருவாகவும் வரும்போது மூடாள்கள் என்னை உணர்ந்துகொள்ளாமல் கேலி செய்கிறார்கள், அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதில்லை," என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர் திரும்பத் திரும்ப இதையே அர்ஜுனனிடம் சொல்கிறார்.
நமக்கும்
ஞானிக்கும்
இடையேயுள்ள
தடைகளை
நம்மால்
தகர்க்க முடியும்.
"நான் இந்த உடலில் இருக்கிறேன் என்பதற்காக, உனது நண்பனாக மட்டும் எண்ணாதே. பிருந்தாவனத்தில் அமர்ந்திருந்த உனது சொந்த நண்பனாக மட்டும் என்னை எண்ணிவிடாதே! என்னை அந்த மனிதனாகப் பார்க்காதே! இவ்வுலகம் முழுவதையும் காக்கிற இறைசக்தி நானே! நான் இங்குள்ள மக்கள் அனைவரையும் இவ்வுலகத் துக்கங்களிலிருந்து விடுதலை செய்யவே மனித உருவில் வந்துள்ளேன்.
அதனால் 'மூட்டாள்கள்' மட்டுமே என்னை ஏளனம் செய்துகொண்டும்,
என்னை உணர்ந்துகொள்ளாமலும்
இருக்கிறார்கள். ஆனால் அர்ஜூனா!
நீ என்னை இழந்துவிடாதே, நானே
மிக உயர்ந்த இயற்கை என்பதையும்,
எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும்
உணர்ந்துகொண்டு, நீயே உன்னை விடுதலை
செய்துகொள்.''
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ண பரமாத்மா சில சுவாரஸ்யமான ஸத்யங்களைச் சொல்கிறார். இந்த ஸத்யங்கள் அவருடைய காலத்திலும் இருந்தன. இன்றைய நடைமுறையிலும் இந்த ஸத்யங்கள் இருக்கின்றன. ஜீவன் முக்தியடைந்த ஒரு ஞானி உடலில் இருக்கும்போது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்.
உண்மை என்னவெனில் மக்கள், ‘அவர், ஒரு ஜீவன் முக்தி பெற்ற ஞானிதான்’ என்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
அந்த ஜீவன் முக்த குரு உயிருடன் வாழும்வரை மக்கள் அவரை விட்டு விலகியே இருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஞானி உடலை விட்டுச் சென்ற பிறகு, அனைவரும் அவர் வாழ்ந்த அந்த இடத்திற்குச் சென்று, பூக்களை அர்ப்பணித்து பூஜை முதலிய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது பல ஞானிகளுக்கு நேர்ந்த ஒன்று.
உதாரணமாக, இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர் ஒரு பைத்தியக்கார பூசாரியாகவே கருதப்பட்டார். பகவான் இராமகிருஷ்ணர், பரவச நிலைக்குச் செல்லும்போது, அவர் போலியாக நடிப்பதாகவே சொன்னார்கள்.
ஆனால் நீங்கள் இப்போது கொல்கத்தா சென்றால், பகவான் இராமகிருஷ்ணர் தம் வாழ்நாட்களின் பெரும்பகுதியைக் கழித்த தட்சிணேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடுவதைக் காண முடியும். இவ்வுலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இப்போது இராமகிருஷ்ண மடங்களுக்குச் செல்கிறார்கள்.
தற்போது தக்ஷிணேச்வர் முக்கிய புனிதச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது. மக்கள் இராமகிருஷ்ண பரமஹம்சரை வழிபட்டு வருகிறார்கள். அவரது திருவுருவப்படத்தை வீடுகளிலும், தங்கள் பைகளிலும் வைத்திருக்கிறார்கள்.
காலங்கள் பல சென்றாலும் எதுவுமே மாறவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். உண்மையில் அது மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்களின் விழிப்புணர்வு நிலையானது சினிமாவினாலும், தொலைக்காட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பகவான் இராமகிருஷ்ணர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சினிமாவும் தொலைக்காட்சியும் இல்லை. அப்படியிருந்தும் அவர் பைத்தியம் எனச் சொல்லப்பட்டார். மக்கள் அவரை ஏளனம் செய்தார்கள்.
ஞானி விரும்புவதெல்லாம்,
தாம்
அடைந்த ஆனந்த
அனுபவத்தை
ஒவ்வொருவரும்
அனுபவிக்க வேண்டும்
என்பதுதான்!
இப்போது நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும், தேவையற்ற பல விஷயங்கள் நம்மை உறுதியாகத் தொடர்ந்து தாக்கினாலும், என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தக்ஷிணேச்வரத்திற்குச் சென்று வருகிறார்கள். அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். அவரை அவதாரம் என்றும், கடவுள் என்றும் கருதுகிறார்கள். அவரைக் கடவுளாகவே வழிபடுகிறார்கள்.
நான் பிடதியிலுள்ள ஆச்ரமத்தில் இருக்கும்போது, மக்கள் பல விதமான யூகங்களோடு என்னிடம் வருவதைப் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது பற்றியும், எனது உடையைப் பற்றியும், இன்னும் நான் செய்கிற எல்லாவற்றைப் பற்றியுமே, பலவிதமான கேள்விகளை அவர்களுக்குள் வைத்திருக்கிறார்கள்.
wஅவர்கள், ‘நீங்கள் மிகவும் இளையவராக இருக்கிறீர்கள். பிறகு எப்படி உங்களால் ஞானம் அடைய முடியும்,’’ எனக் கேட்கிறார்கள். சிலர், “நீங்கள் ஞானம் அடைந்துவிட்டீர்கள் என்றால், எதற்காக தங்கத்தால் ஆன ருத்ராக்ஷ மாலையை அணிகிறீர்கள்?’ மேலும் நீங்கள் த்யான பயிற்சி வகுப்புகளுக்கு ஏன் பணம் பெறுகிறீர்கள்?’' என்று கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள். இதே மனிதர்கள் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எனது ஜீவ ஸமாதி இடத்திற்கு வந்து மலர்தூவி என்னை வணங்குவார்கள். நான் மனித உருவில் ஆச்'ரமத்தில் இல்லாதபோது என்னை அவர்களது ஜீஞான குருவாக ஏற்றுக்கொள்வார்கள்.
கிருஷ்ணர், “நான் மானுட வடிவில் இருக்கும்போது முட்டாள்கள் என்னை இழக்கிறார்கள்,” என்று சொல்கிறார். பரமாத்மா அவர்களை ‘முட்டாள்கள்’ என்று அழைக்கிறார். இதுவே உண்மை.
ஞானமடைந்த குரு மனித உருவில் உயிருடன் இருக்கும்போது, அவரை நமது குருவாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தமது பூதவுடலை விட்டு நீங்கிய பிறகுதான், அவரை நமது குருவாகக் ஏற்றுக்கொண்டு நாம் மரியாதை செலுத்துகிறோம். இதற்கான காரணம் என்ன? ஏன் மக்கள் இதைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்?
ஒரு ஜீஞான குரு மானுட வடிவில் வரும்போது, நம்மில் ஒருவராக இருக்கும் அவரை நம் மனம் மற்றொரு மனிதராகவே பார்க்கிறது.
மற்ற மனிதர்களைப்போல அவரும் ஒரு மனிதரே என்று மற்றொரு மனிதராகவே நாம் அவரைப் பார்க்கிறோம். பிறகு நமக்கும் அவருக்கும் இடையே அஹங்காரம் வந்துவிடுகிறது. அது, ‘இவரும் நம்மைப் போன்ற ஒருவர்தானே! நான் ஏன் இவருடைய பேச்சைக் கேட்க வேண்டும்? ஏன் மக்கள் இவரை வழிபடுகிறார்கள்? இவர் ஏன் எனக்குப் போதிக்கிறார்? போன்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. நாம் மற்றொரு மனிதரைப் பின்பற்றக் கூடாது. அவர் பின்னே செல்லக் கூடாது எனத் தீர்மானித்து அவரை விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிவிடுகிறோம்.
அஹங்காரத்தின் ஒரு சிறு செயல்கூட, நாம் ஒரு ஞானியை இழக்கக் காரணமாகிவிடக்கூடும் என்பதைத் தயவுசெய்து தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.
நம் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அது நமது அஹங்காரத்தைத் தூண்டிவிடுகிறது. அந்த ஞானியிடமிருந்து நம்மை விலக்கி வைக்கிறது.
நம் இருப்பு அதை விரும்பினாலும்கூட
நம் மனதும் அஹங்காரமும் நமக்கும்
ஞானிக்கும் இடையில் கேள்விகளால் ஆன
உறுதியான, மிகப் பெரிய ஒரு சுவரை
எழுப்பி விடுகின்றன.
ஞானி சொல்வதையெல்லாம் காரண
காரியத்தோடு அணுக நினைக்கிறோம்.
ஒரு குருவை நாம் அணுகும்போது, நம்மில்
தொடர்ந்து உள்ளன பேச்சுகள் இருந்தால்,
நம் மனதும் அஹங்காரமும் நமது இருப்புத்
தன்மையை ஆட்சிசெய்ய ஆரம்பித்து
விடுகின்றன. அதனால் நாம் நல்லதொரு
சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறோம்.
மற்றொரு விஷயம் என்னவென்றால், சிலர் தங்கள் குரு அவரே என்பதைத் தெரிந்துகொள்வார்கள், மேலும், அவர் சொல்வதெல்லாம் தங்களுக்கு நன்மையே செய்யும் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். இருந்தாலும் அவர்கள் அவரிடமிருந்து தப்பிக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடுபவர்களாகவோ அல்லது அவரைச் சந்திக்கமுடியாமல் போவதற்கு மன்னிப்பு கேட்பவர்களாகவோ இருக்கிறார்கள்.
அந்த ஞானியால் தங்களை ஊடுருவி, தங்கள் மனத்திலிருப்பதைப் பார்க்க முடியும் என்பதினால்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். தங்களுக்குள் எந்த வகையான எண்ணக் குழப்பங்கள் உருவாகி இருக்கின்றன என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.
ஞானமடைந்த குரு அவர்களுக்குள் இருப்பதைப் படித்து விடுவார் என்று பயப்படுகிறார்கள். அந்த உணர்வுருமாற்றத்திலிருந்து தப்பிக்கவே விரும்புகிறார்கள். ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமேயானால், நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம். நாம் அவரை இழக்கவோ அல்லது அவரைக் கண்டு ஓடவோ மாட்டோம்.
ஒரு ஜீவன் முக்த ஞானி என்றால் என்ன என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் உணர்ந்துகொண்டோமேயானால், நமக்கும் அந்த ஞானிக்கும் இடையேயுள்ள சுவரை, தடைகளைத் தகர்க்க முடியும்; நம் இருப்புத் தன்மையை, அந்த ஞானியின் சக்தியை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.