KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/எல்லோருக்கும் நல்ல நேரம் பிறந்துவிடும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

எல்லோருக்கும் நல்ல நேரம் பிறந்துவிடும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Peather graphic

ஒரு ஞானி இவ்வுலகிற்கு ஏன் வந்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமேயானால், நாம் முட்டாள்களாக இருக்க மாட்டோம். நாம் அவரை இழக்கவோ அல்லது அவரைக் கண்டு ஓடவோ மாட்டோம்.

ஒரு ஜீவன் முக்த ஞானி என்றால் என்ன என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதை நாம் உணர்ந்துகொண்டோமேயானால், நமக்கும் அந்த ஞானிக்கும் இடையேயுள்ள சுவரை, தடைகளைத் தகர்க்க முடியும்; நம் இருப்புத் தன்மையை, அந்த ஞானியின் சக்தியை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.

பகவான் இராமகிருஷ்ணர் சொல்லும் ஒரு சின்ன கதை:

மூன்று மனிதர்கள் ஒரு கிராமத்தினருகே நடந்து செல்கிறார்கள். அப்போது அங்கே உயர்ந்த மதிற்சுவரால் சூழப்பட்ட ஒரு இடத்தைப் பார்க்கிறார்கள். மூவருள் ஒருவர், உள்ளே குதித்துச் சென்று உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பார்க்கிறார்.

அவர் உள்ளே செல்லும்போது, அங்கே ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். அதிகமான மகிழ்ச்சியும் ஆனந்தமும் அங்கு நிலவுவதைப் பார்த்தார். அங்கிருக்கிற ஒவ்வொருவரும் பரவச த்தை அனுபவித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். அம்மனிதரும் வெளியிலிருக்கும் இருவரையும் மறந்துவிட்டு அதில் கலந்துகொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்.

சற்று நேரங்கழித்து வெளியில் நின்று கொண்டிருந்த இருவரும் பொறுமையிழந்தார்கள். இரண்டாமவர் தாம் உள்ளே போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வருவதாகச் சொல்லி உள்ளே குதிக்கிறார். அவர், அங்கு மக்கள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும்,

> ஒரு ஞானி
> இவ்வுலகிற்கு
> ஏன் வந்தார் என்பதை
> நாம் புரிந்து
> கொண்டோமேயானால்,
> நாம் முட்டாள்களாக
> இருக்க மாட்டோம்.

பொழுதை அனுபவித்துக்கொண்டும் இருப்பதைக் கண்டார்.

அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்முன், இதை மூன்றாமவருக்குச் சொல்ல வேண்டும் என எண்ணினார். மூன்றாமவரின் நலனில் அக்கறை கொண்டவராக இவர் இருந்ததால், மூன்றாமவருக்கு அதைப் பற்றிச் சொல்லிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்குள் ஓடி விருந்தில் கலந்து கொண்டார்.

இப்போது மூன்றாமவர் உள்ளே செல்கிறார். உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருப்பதைப் பார்க்கிறார். அவர் இது பற்றி அக்கிராம மக்கள் எல்லோருக்குமே சொல்ல வேண்டும்; அவர்கள் அனைவருமே இந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரும் பரவசத்தில் நடனமாட வேண்டும் என்று எண்ணினார்.

அதனால் அவர் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி கிராமத்திற்குள் சென்று அனைவருக்கும் இதைச் சொல்லி எல்லோரையும் அங்கு அழைத்து வருகிறார்.

ஞானிகள் இம்மூன்றாவது மனிதரைப் போன்றவர்கள். அவர்கள் ஸத்யத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்தவர்கள். அவர்கள் கருணையின் வடிவானவர்கள். நாம் ஒவ்வொருவரும் பூரணத்துவத்தை உணரவேண்டும் என்பதே அவர்களது விருப்பம். அவர்கள் ஒரே நோக்கத்தோடுதான் இருக்கிறார்கள்.

ஞானிகளுக்கு உள்ள ஒரேயொரு குறிக்கோள் என்னவென்றால் நம் ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்களாக ஆக்குவதுதான் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும். இது தவிர அவர்களுக்குள் மறைந்து கிடைக்கும் நோக்கம் வேறொன்றும் இல்லை. எந்தப் பலன்கருதியும் இதை அவர்கள் செய்வதில்லை.

மக்கள், "இது ஏன்?, அது எதற்கு?" என்று என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் என்னைச் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பதன் மூலம், நான் ஏதோ பலனடைவதாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் அவர்களை த்யான வகுப்பில் கலந்துகொள்ள அறிவுறுத்தினால், நான் பணம் பண்ணுவதாக நினைக்கிறார்கள்.

அனைவருமே இந்தப் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டும்; ஒவ்வொருவரும் பரவசத்தில் நடனமாட வேண்டும் என்று எண்ணுபவர்தான் அவதார புருஷர்!

நான் அவர்களை ஸந்யாஸிகளாக மாற்ற
விரும்புவதாக நினைத்துக்கொண்டு அவர்கள்
ஓடி விடுகிறார்கள்.

ஒரு ஞானி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்
என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் தங்களது அறியாமையினால்தான்
ஞானியுடன் இணைந்திருக்கும் வாய்ப்பை
இழக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை:

குளிர்ச்சியான, பனி படர்ந்த இடத்தில் ஒரு பாம்பு உறைந்து போய், ஒரு மரக்குச்சி போல படுத்துக் கிடந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு பார்வையற்ற மனிதர் அந்தப் பாம்பு கம்பின் மேல் இடறி விழுந்து விட்டார். அதை மரத்தினால் ஆன கம்பு என நினைத்துக்கொண்டு, கையில் எடுத்துக் கொண்டார். "எனக்கு ஒரு நல்ல ஊன்றுகோல் கிடைத்தது," என்று மகிழ்ந்து போனார்.

அந்த வழியாகச் சென்ற ஒரு ஜ்ஞான குரு இவர் செய்வதைப் பார்த்து, "ஐயா, இது ஊன்றுகோல் இல்லை. இது ஒரு பாம்பு. சீக்கிரம் சூரிய வெளிச்சம் வந்துவிடும். சூரியன் வந்தவுடன் பாம்பு உறைபனியில் இருந்து விடுபட்டு, சாதாரண நிலைக்கு வந்துவிடும், உங்களைக் கடித்துவிடும்," என்று எச்சரித்தார்.

பார்வையற்றவரோ, ஜ்ஞான குருவின் அறிவுரையை ஏற்காமல் விட்டுவிட்டார். அந்த ஜ்ஞான குரு தம்மை ஏமாற்றிவிட்டு, தம்முடைய ஊன்றுகோலை எடுத்துச் செல்ல முயற்சி செய்வதாகவும் நினைத்துக் கொண்டார். தொடர்ந்து ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தார்.

சூரியன் வந்தவுடன், பாம்பு உறைபனியிலிருந்து விடுபட்டது; அவரைக் கடித்தும்விட்டது. ஞானி சொன்ன உண்மையை அவர் சாகும்போதுதான் உணர்ந்தார்.

இதைப்போலவே ஞானிகள் எப்போதெல்லாம் மனித குலத்தைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்களோ, அப்போது மக்கள் தங்களது அறியாமையாலும், சந்தேகங்களாலும் அவரை ஏற்றுக்கொள்ளாமல், தங்களது வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்கிறார்கள்.

ஞானிகளுக்கு ஆசைகளே கிடையாது
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பலனை எதிர்பார்த்து அவர்கள்
செயல்கள் புரிவதில்லை பலனை
அடிப்படையாகக்கொண்ட செயல் நோக்கமே
அவர்களிடம் இருப்பதில்லை.

ஞானி விரும்புவதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான். அது, தாம் அடைந்த ஆனந்த
அனுபவத்தை ஒவ்வொருவருமே
அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.

சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவர் பிறவி எடுக்கும்போது முந்தைய பிறவியின் ஆசைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டுதான் வருகிறார். அவற்றை வாஸனை என்கிறோம். ஆனால் ஜ்ஞான குருவிற்கு ஆசைகளோ அல்லது வாஸனை என்றோ எதுவும் இல்லை.

ஞானிக்கு மனம் கிடையாது

ஞானி மனமற்ற நிலையிலேயே வாழ்கிறார். அவருடைய ஆன்மா பிரபஞ்ச சக்தியுடன் நேரடியாகக் கலக்க முடியும்.

எப்போதெல்லாம் பூமியில் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தேவையை நிறைவேற்றும் நோக்கத்தோடு ஜ்ஞான குருவின் சக்தி இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ஞானிக்கும் நமக்கும் இடையில் ஒரு சந்தேகச் சுவரை நாம் உருவாக்கி விட்டோமேயானால், யாராலும் நமக்கு உதவ முடியாது.

சந்தேகச் சுவரை நாம் உடைத்தால்தான், ஞானி நம்மீது பொறுப்பு எடுத்து க்கொள்ள நாம் அனுமதித்தால்தான், ஞானியால் நமக்கு உதவ முடியும்.

நமது அஹங்காரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்வரை நாம் முட்டாளாகவே இருப்போம். ஒரு ஜ்ஞான குருவின் சந்திப்புதான் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய, நிகழவேண்டிய ஒரு நல்ல நிகழ்வு. இப்பொழுது இது நம்மை மேல்நோக்கி எடுத்துச் செல்வதற்கான நேரம், இதைக நல்லதாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது தவறவும்விடலாம்; அது நம்மைப் பொறுத்தது.

கிருஷ்ணர் ஒவ்வொருவருக்கும் சொல்கிறார்.

"நீங்கள் ஒரு ஜ்ஞான குருவைத் தவற விட்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு முட்டாள். ஒரு ஞானியும் மற்ற மனிதரைப் போன்றவரே என்று நமது அஹங்காரத்தினால் நினைத்தோம் என்றால், நாம் ஸத்யத்தைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தையும், இழந்து விடுகிறோம்; ஞானமடையும் வாய்ப்பையும் இழந்து விடுகிறோம்.

கேள்வி: ஸ்வாமிஜி, என்னையே பின்பற்று, நானே கடவுளுக்கெல்லாம் முதன்மையாய் இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் என்ன பொருளில் சொல்கிறார்?

நீங்கள் குருவைப் பின்பற்றாவிடில், நீங்கள் உங்கள் ஸம்ஸ்காரங்களைப் பின்தொடர்வீர்கள். நீங்கள் உங்கள் அஹங்காரத்தைப் பின் தொடர்வீர்கள்.

நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் அல்லது கிருஷ்ணரைப் பின்பற்றுங்கள் என்று நான் சொல்லும்போது, ஆறு அடி உயரமுள்ள நித்யானந்தரையோ அல்லது கரிய நிறமுடைய க்ருஷ்ணரையோ பின்பற்றுங்கள் என்ற பொருளில் செல்லவில்லை.

இதன் பொருள், பிரபஞ்ச கிருஷ்ண விழிப்புணர்வை அல்லது நித்யானந்தத்தை, அதாவது நிலையான ஆனந்தத்தை, அல்லது பிரபஞ்ச விழிப்புணர்வைப் பின்பற்றுங்கள் என்பதுதான்.

கிருஷ்ணருடைய பக்தர்கள் குழு ஒன்று இந்தியாவில் உள்ள நமது ஆச்'ரமத்தைப் பார்வையிட வந்திருந்தார்கள். அப்போது எனது சொற்பொழிவின்போது அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், "கீதையில் கிருஷ்ணர், அவரே மஹோன்னதமான தனித் தன்மை வாய்ந்தவர் என்று சொல்கிறார். ஆனால் கிருஷ்ணரும் நீங்களும் ஒரே தளத்தில் இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?"

இவர்கள் தங்களைக் கிருஷ்ணருடைய பக்தர்கள் என்றும், தாங்கள் கீதையைப் பலமுறை படித்திருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.

Illustration of Jesus and Krishna

ஆனால் கிருஷ்ணர் உபதேசித்த
வார்த்தைகளின் மொத்த சாரத்தைப்
புரிந்துகொள்ளத் தவறி
விடுகிறார்கள்.

கிருஷ்ணருடைய உடல் ரீதியான
வடிவத்தில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
அவருடைய பெயர்களிலும்,
வார்த்தைகளிலும் ஒட்டிக்
கொள்கிறார்கள்.

நான் மக்களுக்குச் சொல்கிறேன். கிருஷ்ணரும் இயேசுவும் சந்தித்தால் அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொள்வார்கள். ஆனால் கிருஷ்ணருடைய பசுக்களும், இயேசுவின் ஆடுகளும் சண்டையிட்டுக்கொள்கின்றன!

எப்படியென்றாலும், வாழும் ஜ்ஞான குருமார்களைத் தவறவிட்டவர்கள் முட்டாள்கள் என்பது கிருஷ்ணருடைய கருத்தாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அஹங்காரம் சொல்கிறபடி செயல்பட்டார்களேயானால், அவர்கள் ஒரு அருமையான சந்தர்ப்பத்தை இழந்து விடுவார்கள். பிறப்பு, இறப்பு சுழற்சியில் அவர்கள் மீண்டும் விழுந்து விடுவார்கள்.

மேலும், யாராவது ஒருவர் ராமா, ராமா, ராமா என்று ஒரு மில்லியன் தடவை உச்சரித்தாலும், அது அவர்களை விடுதலையடையச் செய்துவிடும் என்று சொல்ல முடியாது.

ஞானி
மனமற்றநிலையிலேயே
வாழ்கிறார்.
அவருடைய ஆன்மா
பிரபஞ்ச சக்தியுடன்
நேரடியாகக்
கலக்க முடியும்.

நிறையபேர் ஏதாவது மந்த்ரங்களை உச்சாடனம்
செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இப்படி உச்சரிப்பதைப் பெருமையாக
நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள்
விஷ்ணுவின் 1008 பெயர்களை உடைய
விஷ்ணு ஸகஸ்ரநாமத்தைப் படிக்கிறார்கள்.
அவர்கள் மக்களிடம், "நான் இதைப்
படிக்கிறேன், அதைப் படிக்கிறேன்,"
என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால்
அவர்கள் மந்த்ர உச்சாடனம் செய்து
கொண்டிருக்கும்போது, அவர்களுக்குப்
பக்கத்தில் அமர்ந்திருக்கும் இருவர்
வீண்பேச்சில் ஈடுபட்டால், அந்த வீண்

பேச்சையும் ஒரு காது கவனிக்கிறது.

அவர்களுடைய உடலும், மனமும் தொடர்பை இழக்கிறது.

அவர்கள் மந்திரங்களை உச்சாடனம்
செய்கிறார்கள். ஆனாலும் காதுகள்
வீண்பேச்சு பேசுவதைக் கவனிக்கின்றன.
அவர்களது உடலும் மனமும் மொத்தமாகத்
தொடர்பை இழக்கின்றன.

சிலர் மந்திர உச்சரிப்பை நிறுத்திவிட்டு,
நடு நடுவே அவர்களின் மதிப்புமிக்க
ஆலோசனைகளை வீண் பேச்சு
பேசுபவர்களுக்கு வழங்குவதும் உண்டு.

யாராவது ஒருவர் ராமரையோ, கிருஷ்ணரையோ இந்த வழியில் பின் பற்றினால், அதனால் எந்தவித நன்மையும் மேன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. நமது செயல்களில் விழிப்புணர்வு இல்லையென்றால், இப்படிப்பட்ட மத சடங்குகளைச் செய்வதில் எந்தவித சிறப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

ஒரு மத வழிபாட்டு முறையை ஆத்மப்பூர்வமாகச் செய்யும்போதுதான், அது ஆன்மீகமாகிறது.

முக்கியமான விஷயம் என்னவெனில், வழிபாடுகளையும் சமயச் சடங்குகளையும் நாம் அஹங்காரத்துடன் செய்தால் நாம் பிறப்பு, இறப்புச் சுழற்சியில் மீண்டும் விழுந்து விடுவோம்.

இராமாயணத்தில் வில்லனாக வரும் இராவணன் ஒரு பேரரசர். அவர் கடவுள் பக்தி மிகுந்தவர். சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்; ஆனாலும் அவரது எண்ணங்கள் ராமரின் மனைவியான சீதையைப் பற்றியே இருந்தது.

அவர் மிகப்பெரிய ஆட்சியாளர். இலங்கையில் தங்கக் கோட்டைகள் இருந்தன. அது ஒரு வளமான நாடாக இருந்தது. மக்கள் அரசனிடம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இருந்தாலும் அதனால் என்ன பயன்?

இராவணன் சிவனை அஹங்காரத்தோடு வழிபட்டார். அஹங்காரத்தோடுதான் எல்லாவற்றையும் செய்தார். மாயையால், அவருடைய அஹங்காரத்தால் ஏமாற்றப்பட்டார். இராமர் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. இராமரிடம் இருந்த ஞானத் தன்மையையும் அவர் பார்க்கவில்லை. விரைவில் அவர் இராமரால் கொல்லப்பட்டார்.

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் இதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். நாம் எல்லாவகையான பிரார்த்தனைகளையும் பூஜைகளையும் செய்தாலும், நமது அஹங்காரம் அதில் இருக்கும்வரை கடவுளை நோக்கி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றவையே.

தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு நாளைக்கு நாம் பத்து தடவை வழிபாடு நடத்தலாம்; நூறு தடவை கடவுளை

| ஒரு மத வழிபாட்டு முறையை ஆத்மபூர்வமாகச் செய்யும்போதுதான், அது ஆன்மீகமாகிறது. | |---|

நினைத்துக்கொள்ளலாம். ஆனாலும் கடவுளை எப்படி அணுகவேண்டும் என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.

நமது அணுகுமுறை நன்றியின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது. கடவுளின் பெயரைச் சொல்வதன் மூலம், மக்களுக்கு நம்மைப் பக்தர்களாகக் காட்டிக்கொள்ள விரும்பினோமானால், அது நேரத்தை வீணாக்கும் செயலைத் தவிர வேறொன்றும் இல்லை.

கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை கொடுத்தால் சொர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். சுய நலத்தோடுதான் அவர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள்.

ஆழ்ந்து, தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது செயல்பாடுகளின் குறிப்பை வைத்துக்கொண்டு யாரும் சொர்க்கத்தின் வாசல்களில் காத்துக் கொண்டிருப்பதில்லை.

நாம் கடவுளுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறோம் என்பதற்காக, யாரும் நம்மைக் கடவுளிடம் கூட்டிச் செல்ல மாட்டார்கள்.

நம்மால் கோயில்களைக் கட்ட முடியும் கோயில்களுக்கு நன்கொடையும் வழங்க முடியும். இவற்றைச் செய்யும்போது பக்‌தியுடன் செய்யுங்கள், நன்றியுணர்வோடு செய்யுங்கள். கோயில் கல்வெட்டுகளில் நம் பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அஹங்காரம் நம்மை வழிநடத்த அனுமதிக்காதீர்கள்.

கிருஷ்ணர், தமது வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவரது சக்தியைப் பின்பற்றவே நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.

அவரை நாம் உள்வாங்கி, அவருடைய கருத்துக்களை நம் வாழ்வில் ஒருங்கிணைத்து, அவரைப் பின்பற்ற வேண்டும் என்பதையே விரும்புகிறார்.

புத்தர், "புத்தம் சரணம் கச்சாமி," என்று சொல்லும்போது, அது புத்தரின் ஸ்தூல வடிவத்தைக் குறிக்கவில்லை; புத்தரின் ஞான சக்தியையே குறிக்கிறது. தம்மம், என்பது புத்தரின் போதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதன்மூலம் மட்டுமே அவருடைய ஞானசக்தியைப் பின்பற்றுவது சாத்தியப்படும் என்பதைக் குறிக்கிறது. ஸங்கம் அவருடைய நோக்கத்திற்காகச் சேவை செய்வதைக் குறிக்கிறது.

கிருஷ்ணருடைய விழிப்புணர்வைப் புரிந்துகொண்டு அவரைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவரது வடிவத்தைப் பற்றிக் கற்பனையாகப் புரிந்துகொண்டு வைத்திருப்பதைப் பின்பற்றாதீர்கள்.

கிருஷ்ண உணர்வு என்றாலும் சரி, சிவ உணர்வு, புத்த உணர்வு, கிறிஸ்து உணர்வு அல்லது நித்யானந்த உணர்வு என்று எப்படிச் சொன்னாலும் சரி இதில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாமே ஒன்றுதான்.

அதனால்தான், கிருஷ்ணர் "நான் மனித வடிவத்தில் வரும்போது, முட்டாள்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், வடிவத்தைக் கேலி செய்யாதீர்கள், உணர்வைப் பின்பற்றுங்கள்.

நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டாம், நிலையான ஆனந்தத்திலேயே இருங்கள்," என்று சொல்கிறார்.

Hands playing a flute