KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனால் பக்தியுடன்...

Lord Krishna playing flute

9. 13 ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த ஆன்மாக்கள், நான் மாற்றமில்லாதவன் என்பதை அறிந்துகொள்கிறார்கள். நான்தான் சிருஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கிறார்கள்.

9. 14. ஸ்திரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையைப் பாடிக்கொண்டும், உறுதியான தீர்மானத்துடன் கடினமான சாதனைகளைச் செய்து கொண்டும் என்னையே சரணடைகிறார்கள்.

9. 15. சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஞானத்தை உலகில் பரப்புவதன் மூலம் என்னை வழிபடுகிறார்கள். மற்றவர்கள் என்னை ஒரே பொருளாக அதாவது அத்வைத கருத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது த்வைத கருத்துப்படி இருபொருள் தத்துவமாகவோ அல்லது விசிஷ்டாத்வைத கருத்துப்படி மொத்தப் பிரபஞ்ச வடிவாகவோ வழிபாடு செய்கிறார்கள்.

பக்தியின் வெளிப்பாடாக பிரார்த்தனை இருக்கட்டும்

கிருஷ்ணர் இந்த வரிகளில் _பக்தி_யைப் பற்றிப் பேசுகிறார்.

பாருங்கள். _பக்தி_யே கடவுளை அடைய மிகவும் சக்தி வாய்ந்த வழி. பல துறவிகள் இந்த உலகிற்கு _பக்தி_யின் பாதையைக் காட்டி இருக்கிறார்கள். சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடம் ஆழ்ந்த _பக்தி_யுடன் இருந்திருக்கிறார். அவர் கிருஷ்ணரின் பெருமையைப் பற்றி பல பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் கிருஷ்ணரைப் பற்றிப் பாடும்போது பரவச நிலையில் நடனமாடுவார்.

கிருஷ்ணரின் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த மற்றொரு பக்தை மீரா. அவரின் கிருஷ்ண _பக்தி_யை வெளிப்படுத்தும் பாடல்கள், இன்றும் _மீரா பஜன்ஸ்_, மீராவின் _பக்தி_ப் பாடல்கள் எனப் பாடப்படுகின்றன.

மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். _பக்தி_ கடவுளை அடைவதற்கான ஒரு சக்தி வாய்ந்த வழிதான்; ஆனாலும் நாம் _பக்தி_யை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது. மக்கள் பலர் கோயில்களுக்குச் செல்வார்கள். சிலபேருக்கு ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வாராவாரம் செல்லும் பழக்கம் உண்டு.

யாராவது அவர்களிடம் கேட்டால், “ஓ! ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்வேன். ஒவ்வொரு செவ்வாயும் நான் ஹனுமான் கோயிலுக்குச் செல்வது வழக்கம்,” என்பார்கள். இப்போதெல்லாம் கோயில்களுக்குச் செல்வதுகூட ஒரு நாகரிகமான பழக்கமாக மாறிவிட்டது.

கோயிலுக்கு யந்திரத்தனமாகச் செல்வதற்குப் பெயர் _பக்தி_ இல்லை. அதுவும் ஒருவிதமான அஹங்காரமே! பெரும்பாலும் நாம் கோயிலுக்குச் செல்வதே ஏதோ ஒன்றை இறைவனிடம் கேட்பதற்காகத்தான்.

வெங்கடேசப் பெருமாளிடம் நாம் காட்டும் _பக்தி_யின் அளவு, அவர் எப்படி நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அமைகிறது. நாம் ஏதாவது வேண்டிக்கொண்டு அவர் கொடுத்திருந்தால் அவரை மிகவும் மேன்மையானவர் என்கிறோம். இல்லையென்றால் அவரை வணங்குவதை நிறுத்தி விடுகிறோம்.

அதற்குப்பிறகு, நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று நாம் நினைக்கிற வேறு ஏதாவது கடவுளிடம் செல்லத் தொடங்குகிறோம்.

ஒரு சின்ன கதை:

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நகரத்திற்குப் புறப்பட்டார்கள். நகரம் செல்வதற்கு முன்பாக அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அவர்கள் சென்றார்கள். அங்கிருக்கும் கடவுளிடம், "கடவுளே பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் நகரத்திற்குச் செல்கிறோம். நாங்கள் பணக்காரர்களாவதற்குத் தயவு செய்து உதவி புரியுங்கள்.

ஒரு வருடத்திற்குள் நாங்கள் பணக்காரர்களாகிவிட்டால், எவ்வளவு சம்பாதித்தோமோ, அதில் சரிபாதியை உங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறோம். நாங்கள் அந்தப் பணத்தைக் கோயில் உண்டியலில் போட்டு விடுகிறோம்," என்று வேண்டிக்கொண்டார்கள் இவ்வாறு அவர்கள் கடவுளிடம் வியாபார உடன் படிக்கை, இலாப பங்கீட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

நகரத்திற்குச் சென்ற அவர்கள் வியாபாரம் ஒன்றை தொடங்கினார்கள். ஒரு வருடம் சென்றது. அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து, கோடி ரூபாய்களைச் சம்பாதித்தார்கள். அவர்கள் மூவரும் கடவுளுக்குக் கொடுத்து இருந்த வாக்குறுதியை நினைவில் வைத்து இருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காகத் திரும்பவும் கிராமத்திற்கு வந்தார்கள்.

இப்போதெல்லாம்
கோயில்களுக்குச்
செல்வதுகூட
ஒரு நாகரிகமான
பழக்கமாக
மாறிவிட்டது.
இந்த மனப்பாங்கு
மாறவேண்டும்.

கிராமம் திரும்பும் வழியில், தாங்கள் சம்பாதித்த ஒருகோடி ரூபாயில் கடவுளுக்கு ஐம்பது சதவீதம் கொடுத்து விட்டால், மீதமுள்ள பணத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டுக்கொண்டே வந்தனர். 'கடவுளுக்கு ஐம்பது லட்சம் ரூபாயை உண்டியலில் போடுவதா?' என்று நினைத்தனர்.

கிராமத்தை அடைந்தவுடன், கோயிலுக்குச் செல்வதற்கு முன், மூன்று பேரில் ஒருவர் சொன்னார், "கடவுளுக்கு ஏன் இவ்வளவு பெருந்தொகை தேவைப்படப்போகிறது. எப்படியானாலும் அவர் ஏற்கனவே மிகப்பெரிய பணக்காரர்தான். அவரிடம் நமக்கு உள்ள பக்தியை, நன்றியை வேறு ஏதாவது வழியில் காட்டலாமே!" என்றார்.

உடனே மற்ற இருவரும் இதற்குச் சம்மதித்தார்கள். பாருங்கள். மனித மனம் எப்படி வேலை செய்கிறது! அவர்கள் தங்களிடம் எதுவும் இல்லாதபோது கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இப்போது அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் விட்டுக் கொடுக்கத்தான் மனம் இல்லை.

எது எப்படியோ முடிவில், அவர்கள் ஒரு திட்டத்துடன் கோயிலுக்குள் வந்தார்கள். அவர்கள் கடவுளிடம் சொன்னார்கள். "கடவுளே! நாங்கள் ஒரு வட்டம் போடுகிறோம். எல்லாப் பணத்தையும் மேலே தூக்கிப் போடுகிறோம். எவை எவையெல்லாம் இந்த வட்டத்திற்குள் விழுகிறதோ அவை எங்கள் மூவருக்கும் சொந்தம். எவையெல்லாம் வட்டத்திற்கு வெளியில் விழுகிறதோ அவற்றை உங்களுக்கே காணிக்கையாக்குகிறோம்."

கோயிலுக்கு
யந்திரத்தனமாகச்
செல்வதற்குப்
பெயர் பக்தி இல்லை.
அதுவும் ஒருவிதமான
அஹங்காரமே!

இப்போது மற்றொரு கவலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அவர்கள் பணத்தை மேலே போடும்போது, அதிகமான அளவு பணம் வட்டத்திற்கு வெளியில் விழுந்துவிடும்.

அதிகப் பணத்தை அல்லவா கடவுளுக்குத்தர வேண்டியிருக்கும். 'இப்போது என்ன செய்வது?' என்று யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் பேராசை மறுபடியும் இப்போது செயல்படத் தொடங்கியது. உடனே, "வேண்டாம், இது சரியான திட்டம் இல்லை," என்று திட்டத்தை மாற்றத் தொடங்கினார்கள்.

அவர்கள், 'வட்டத்திற்குள் விழுவதைக் கடவுளுக்குக் கொடுக்கலாம் வேண்டுமானால் கடவுளுக்காகச்சற்று பெரிய வட்டமாகப் போட்டுவிடலாம்' என்று முடிவு செய்தார்கள். ஆனால் அதுவும் அவர்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. வட்டத்திற்குள் விழுகின்ற பணமும் கூட அவர்களுக்கு அதிக அளவாகத் தோன்றியது.

அவர்கள் இப்படி விவாதித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களுள் ஒருவர் மேலே பார்த்துச் சொன்னார்.

"கடவுளே! நீங்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று உங்களுக்கே தெரியும். நாங்கள் எங்கள் பணம் மொத்தத்தையும் மேலே தூக்கி எறிகிறோம். உங்களுக்குத் தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவை, மீதமானவை கீழே விழுவதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்!"

நம்முடைய பக்தி இப்படித்தான் இருக்கிறது! நாம் வியாபார திட்டங்கள்தான் போடுகிறோம்.

நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்; ஆனால் பக்தி செய்வதில்லை.

நாம் என்ன கேட்டுக்கொண்டு
இருக்கிறோமோ அவற்றை எல்லாம் கடவுள்
கொடுத்துக் கொண்டே இருக்கும்வரை
அவரை நாம் நம்முடைய கடவுள் என்று
ஏற்றுக்கொள்கிறோம். அப்படித் தரவில்லை
என்றால் அவரை நாம் கடவுளாக
ஏற்பதில்லை.

மனித மனத்தின்
வேலைகளை
நம்மால்
கணிக்க முடியாது.

நம்முடைய பிரார்த்தனைகள், கடவுளின் மேல் நமக்கிருக்கும் நன்றி பக்தி, உணர்வு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கிருஷ்ணர் மற்றும் ராமருடைய மகாபக்தர்கள் எல்லோரும் முழுமையான நன்றி உணர்வையும் அன்பையும் காட்டி இருக்கின்றனர்.

அவர்களின் பக்தி அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடையும்போது, அவர்கள் இறுதி விழிப்புணர்வை அடைகிறார்கள்.

இதில் மேலும் ஒரு விஷயம் இருக்கிறது. பிரார்த்தனைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றாலும், நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது. ஆரம்ப நிலையில், கடவுளை நோக்கி நாம் அடிவைக்கத் தொடங்கும்ப்போது பிரார்த்தனைகள் சக்தி வாய்ந்தவைதான். வரங்களைக் கேட்பதற்காக இல்லாமல், நம் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நம் பிரார்த்தனைகள் இருக்கட்டும். நாம் வார்த்தைகளைத் தாண்டி செல்ல வேண்டும்.

காப்பாற்றுவதற்கும் இறைவனை அழைக்காதவர், சரணாகதியில் மலர்ந்தவர்

நாம் பிரார்த்தனைகள் செய்யும்போது, வெறும் வார்த்தைகளிலேயே நின்று விடுகிறோம். நாம் வார்த்தைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். கிருஷ்ணர் அல்லது ராமர் விக்ரஹத்திற்குப், பின்னால் இருக்கும் எல்லையற்ற சக்தியை உணர்வதற்கு உதவியாக நம்முடைய பக்தி இருக்க வேண்டும்.

> நம்முடைய பிரார்த்தனைகள், கடவுளின் மேல் நமக்கிருக்கும் பக்தி, நன்றி உணர்வு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

உண்மையில், முழுமையான பக்தியானது,
நம்மை முழுமையாக வேறு ஒரு தளத்தில்
வைக்கிறது. நாம் யாரிடமாவதுக்தியுடன்
இருக்கும்போது, நம்மை அவர்களிடம்
சரணாகதி செய்கிறோம். உங்களுக்குப்
பிரஹலாதன் கதை தெரியுமா?

பிரஹலாதன் பத்து வயதிற்குக் கீழே உள்ள
ஒரு சிறுவன். அவனது தந்தை ஹிரணியகசிபு,
சிருஷ்டி கர்த்தாவான ப்ரம்மாவை வணங்கும்
ஒரு மஹாபக்தன். ஹிரண்யகசிபு கடுந்தவம்
செய்து, ப்ரம்மாவிடம் தனக்கு இறவாவரம்
வழங்குமாறு கேட்கிறான்.

ஆனால் ப்ரம்மா, இது நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று என்று சொல்லி விடுகிறார். பிறகு ஹிரண்யகசிபு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு வரம் கேட்கிறான். அதாவது அவன், தனக்கு விலங்குகள், பறவை கள், மனிதர்கள், உயிர் வாழ்வன மற்றும் உயிரற்றப் பொருட்களாலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, ஆகாயத்திலோ அல்லது பூமியிலோ மரணம் நிகழக் கூடாது என்று வரம் கேட்கிறான். ப்ரம்மாவும் வரத்தை அளித்தார்.

எந்தெந்த வழிகளில் மரணம் நேரக்கூடுமோ, அந்தந்த வழிகளையெல்லாம் தான் அடைத்துவிட்டதாகவும் இந்த வரத்தின் மூலம், தான் இறவாநிலை பெற்றுவிட்டதாகவும் ஹிரண்யகசிபு நினைத்தான். அதனால் 'நானே கடவுள்' எனப் பிரகடனம் செய்தான். தன் ராஜ்ஜியத்தின் மக்கள் அனைவரும் தன்னைத்தான் வழிபட வேண்டும் என்று ஆணையிட்டான் அதனால் மக்கள் அவனது உருவச்சிலையை வழிபட்டனர்.

அனைத்து மந்திர உபாசனைகளிலும் அவன் பெயரே உச்சரிக்கப்பட்டது. ஆனால் ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹ்லாதன் கடவுள் விஷ்ணுவின் உன்னதமான பக்தன். அவன் வயதில் மிகச்சிறியவன். ஆனாலும், விஷ்ணுவின் மேல் அவனுக்கு இருந்த பக்தி மிகவும் ஆழமாக இருந்தது.

ஹிரண்யகசிபுவிற்கு பிரஹ்லா தனின் இந்தச் செயல் சந்தோஷத்தை தரவில்லை. ஹிரண்யகசிபு தம் மகனுக்கு எடுத்துரைத்து அவனை மாற்ற முயற்சி செய்தான். ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. ஹிரண்யகசிபு பிரஹ்லா தன்னிடம் பேசப்பேச, பிரஹ்லா தனின் பக்தி மேலும் மேலும் ஆழமானது. அதற்குப் பின் ஹிரண்யகசிபு, பிரஹ்லா தனைப் பல்வேறு வழிகளில் கொல்வதற்கு முயற்சி செய்யத் தொடங்கினான்.

விஷ்ணுவை பிரஹ்லாதன் மிக மேன்மையான
முறையில் வழிபாடு செய்து வருவதால்,
அவனின் பக்தியின் உயர்வினால், விஷ்ணுவே
அவனை ஒவ்வொரு ஆபத்திலிருந்தும்
காத்து வந்தார். பிரஹ்லா தனின் ஒவ்வொரு
கணமும், ஒவ்வொரு சுவாசமும் விஷ்ணுவை
வழிபடுவதிலேயே கழிந்தது.

பிரார்த்தனைகள்
மிகவும்
சக்தி வாய்ந்தவை
என்றாலும்,
நாம்
அந்த நிலையிலேயே
நின்றுவிடக் கூடாது.

அவனின் பக்தி எந்த அளவு ஆழமாக இருந்தது என்றால், தன்னைக் கொல்லும்போதுகூட, அவன் விஷ்ணுவிடம் நன்றி உணர்வுடனும் அன்புடனும் பிரார்த்தனை செய்து வந்தான்.

அவனுடைய பக்தியானது, தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டிக்கொள்ளும் ஒரு பிரார்த்தனையாக இல்லாமல் ஆழ்ந்த சர ணாகதி நிலையில் இருந்தது.

நரஸிம்ஹ அவதாரம் என்னும் விஷ்ணுவின் ஒரு அவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் கதை இது. இந்த அவதாரத்தில் விஷ்ணுவானவர் பாதி சிங்கமாகவும் பாதி மனிதராகவும் இருப்பார்.

ஆனந்தத் தென்றல், உங்கள் வாழ்வில் வீசட்டும்

மக்கள் தன்னை எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் வழிபடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தொடர்ந்து விவரிக்கிறார். இங்கு அவர் ஞானப்பாதையைப் பற்றி அதாவது அறிவைப் பற்றிப் பேசுகிறார்.

அறிவுப் பாதையைப் பின்பற்றுபவர்கள் கடும் முயற்சிகளின் மூலம் அறிவைப் பெற்று, திறமையாலும் அனுபவத்தாலும் பெற்ற அந்த அறிவை பரப்பி அதன் மூலம் என்னை வணங்க முயற்சி செய்கின்றனர்.

ஒரு சின்ன கதை:

ஒரு தத்துவ மேதையாளர் ஒருவர், தம்மிடம் இருந்த ஒரே ஒரு ஜோடி காலணிகளைச் சரி செய்வதற்காக, செருப்பு தைக்கும் நபரிடம் சென்று, அதனைச் சரி செய்து தருமாறு கேட்டார்.

அதற்குச் செருப்பு தைப்பவர், "மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இப்போதுதான் என்னுடைய கடையை மூடினேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்," என்றார்.

அதற்கு அந்தத் தத்துவமேதை, "என்னிடம் ஒரே ஒரு ஜோடி காலணிதான் இருக்கிறது. என்னால் காலணி இல்லாமல் நடக்க முடியாது," என்றார்.

Feather decor
Text quote box

அதைக் கேட்ட செருப்புத் தொழிலாளி, "சரி என்னிடம் உள்ள வேறு ஏதாவது காலணிகளை நான் இரவல் தருகிறேன்," என்றார்.

தத்துவமேதை அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிடத் தொடங்கினார், "என்ன? என்னை மற்றவர்கள் காலணிகளை அணியச் சொல்கிறீர்களா? நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

உடனே செருப்புத் தொழிலாளி, "ஏன் நீங்கள் மற்றவர் காலணிகளை அணிய மறுக்கிறீர்கள்? உங்களால் மற்றவர்கள் கருத்துக்களையும்

எண்ணங்களையும் உங்கள் தலையில்
சுமக்க முடியும்போது மற்றவர் காலணியை
அணிவதால் என்ன ஆகப் போகிறது?''
என்று பதிலளித்தார்.

புரிந்துகொள்ளுங்கள், வெறுமனே அறிவைச் சேர்த்துக்கொள்வதால், உங்கள் அஹங்காரம்தான் வளர்கிறது. தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். வெறுமனே ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்வதால் மட்டும் ஞானம் கிடை க்காது. அந்த ஆன்மீக அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து, அதை உங்கள் அனுபவமாக, அனுபூதியாக மாற்றுங்கள். அதற்குப் பிறகு உங்களின் வாழ்வில் சந்தோஷத் தென்றல் வீசத் தொடங்கிவிடும்.

நாம் எப்படி அறிவை உள்முகமாக்குவது? நாம் எப்படி அந்த அறிவை உள்ளே பதிப்பது? த்யானம் செய்யுங்கள். நீங்கள் தனித்திருக்கும்போது, உயர்ந்த ஸத்யங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். ஆழ்ந்த சிந்தனையில் நம்மை நாமே மூழ்க வைத்துக்கொள்வதே த்யானமாகும். உங்களுக்கு உள்ளேயே அந்த ஸத்யங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்; விடைகளையும் தேடுங்கள்.

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார்: நாம் நாள் கணக்காக நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் படித்தும், மனப்பாடம் செய்துகொண்டும் இருந்தால்கூட, நம் தலை சற்று பெரியதாக மாறுவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. அவ்வளவுதான்!

ஸத்யத்தின் ஒரு பரிமாணத்தை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதை முழுமையாக உள்வாங்குங்கள். அதுவே போதுமானது. அதனால் பல அதிசயங்கள் நிகழ முடியும். ஏதாவது ஒரு போதனையை எடுத்து க்கொண்டு ஆழ்ந்து உள்வாங்குங்கள்.''

நம்முடைய அனுபவங்களை ஒன்று திரட்டவும், அந்த அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் த்யானம் உதவுகிறது. அது நமக்கு உள்ளே நிகழும் ரஸவாதம். அந்த ரஸவாதம் நம் முழு வாழ்க்கையையும் உணர்வுருமாற்றம் அடையச் செய்துவிடும். த்யானம், ஸத்யத்தை அனுபவமாக அறிய நமக்கு உதவுகிறது.

அனுபவித்த ஸத்யங்களை மட்டும் பேசுங்கள்!

மரியாதைக்குரியவராவீர்கள்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். வேறு ஒரு வழியிலும் அறிவைப்பெற முடியும். பல்வேறுவிதமான புத்தகங்களையும் புனித நூல்களையும் படிக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் அலமாரி முழுவதும் புத்தகங்களாகவே நிறைந்து இருக்கும்.

நூலகம்

யாராவது அவர்கள் வீட்டிற்கு வருகை தந்தால் போதும், தங்களது நூலகத்தை மிகவும் பெருமையுடன் காட்டுவார்கள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் தங்களது அறிவை வெளிக்காட்டிக்கொள்வார்கள். அதனைப் பெருமையாகக் கருதிக்கொள்வார்கள்.

பலர் ஆன்மீகம் பற்றிப் பலவித வாக்குவாதங்கள் செய்வார்கள். ஆன்மீகக் கருத்தரங்கே அங்கு நடக்கும். கருத்தரங்குகள் நடப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் எதற்காக விவாதம் செய்கிறார்களோ, அந்தக் குறிக்கோள் சரியானதாக இருக்க வேண்டும்.

தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று மற்றவர்களுக்கு காட்டிக்கொள்வதற்காக அந்த விவாதம் நடைபெற்றால், அது முழுக்க முழுக்க அஹங்காரத்தின் வெளிப்பாடாக நடைபெறும் விவாதமாகவே இருக்கும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமக்கு எத்தகைய அறிவு இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காகவே பேசிக் கொண்டிருந்தால், அந்த அறிவால் எந்தவிதமான பயனும் இல்லை.

ஆழ்ந்த சிந்தனையில்
நம்மை நாமே
மூழ்க
வைத்துக்கொள்வதே
த்யானமாகும்.

வேத நூல்களால் நாம் பெற்ற அறிவு, நமக்கு
உதவ வேண்டும் என்றால் அந்த அறிவு
நமக்கு அனுபவமாக மாறவேண்டும்.
நாம் கற்ற அறிவைப் பற்றி வாக்குவாதம்
செய்வதை விட்டுவிட்டு, அதைப் பற்றி
மற்றவர்களுடன் கலந்துரையாடல் செய்வதை

விட்டுவிட்டு, அதை மற்றவர்களிடம் பெருமைகாட்டிக்கொள்வதை விட்டுவிட்டு, நம்முடைய தினசரி வாழ்க்கையில் அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

அதன்மூலம் ஏற்படும் பலன்களை நீங்கள் முதலில் பாருங்கள். அதை அனுபவமாக உணருங்கள். அதற்குப் பிறகுதான் அதனைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதுவரை அந்த அறிவு என்பது வெறும் வார்த்தைகள்தான். வார்த்தைகள்தானே தவிர அவற்றில் வேறு ஒன்றும் இல்லை.

எல்லா மார்க்கங்களும் என்னை அடைவதற்கே

முக்கியமாக, நாம் ஞானப்பாதையில், அறிவுப் பாதையில் செல்வதற்குத் தியானம் செய்வது நமக்கு மிகவும் உதவுகிறது. நன்கு கவனியுங்கள். ஞானத்தின் பாதை மிகவும் சுலபமானதல்ல. பக்தி மார்க்கத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஏதாவது ஒரு விக்கிரஹத்தின் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

அது ராமரோ, கிருஷ்ணரோ யாராக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கடவுளுக்கு நம்முடைய முழு பக்தியையும் வெளிப்படுத்த வேண்டும். நாம் நம்மை அவர்களிடத்தில் முழுமையாகச் சரணாகதி செய்ய வேண்டும். உண்மையில் சரணாகதி செய்வது என்பது மிகவும் கடினமான செயல்தான்.

உண்மையில் முழுமையான சரணாகதி மிகவும் கஷ்டமானதுதான்; ஆனாலும், பக்திமார்க்கத்தில் நாம் பேசுவதற்கு என்று யாராவது இருக்கிறார்கள். நாம் வேண்டிக்கொள்வதைக் கேட்பதற்கும், நம்மைப் பற்றி அக்கறைகொள்ளவும் ஒருவர் இருக்கிறார்.

ஆனால் ஞானமார்க்கத்தில் அப்படி ஒருவரும் இருப்பதில்லை. அங்கு குறிப்பிட்டுக் காட்டுவதற்கு என்று ஒருவரும் இருப்பதில்லை. யாரும் நமக்கு முன்பு இருப்பதில்லை. இந்தப் பாதையில் 'நீங்கள்' என்பதற்கோ 'அவர்' என்பதற்கோ ஒருவரும் இல்லை. பக்திமார்க்கத்தில் நமக்கும் கிருஷ்ணருக்கும் இடையே பிரிவு இருக்கிறது.

> நம்முடைய அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க தியானம் உதவுகிறது. ஆனால் ஞானமார்க்கத்தில், 'இருப்பது எல்லாமே கிருஷ்ணர்தான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அங்கு இரண்டு என்பது இல்லை. எல்லாமே ஒன்றுதான்.

நாம் த்யானம் செய்யும்போது மேலான ஸத்யங்களை உணர்கிறோம். த்யானத்தின் மூலம்தான் நாம் நம்முடைய உள் தளத்துடன், உள் உலகத்துடன் தொடர்புகொள்கிறோம்.

உபநிஷதங்களில் உள்ள ஞானக்கருத்துக்கள் பிண்டாண்டத்தைப் பற்றியும் பிரம்மாண்டத்தைப் பற்றியுமே பேசுகின்றன. அந்த நூல்கள் எல்லாம் எப்படி இவையிரண்டும் ஒன்றாகும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றன என்பதைப் பற்றி விவரித்துள்ளன.

இந்த ஞானக்கருத்துக்களை நாம் அனுபவப்பூர்வமாக உணராமல் இருந்தோமேயென்றால், நம்முடைய அறிவு என்பது வெறும் பேச்சளவிலேயே நிற்கும். அப்போது அவை வெறும் புத்தக அறிவாக த்தான் இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது.

நாம், புத்தகங்கள் நிறைந்த மற்றொரு நூல் நிலையமாகத்தான் இருப்போம். அந்த ஸத்யங்கள் நமது அனுபவமாகும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும். த்யானத்தின்போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்று கலக்கிறோம். நம்முடைய உள் உலகம் வெளி உலகோடு இணையும இடத்திற்குள் நாம் நுழைவதற்கும், நம்முடைய பிண்டாண்டம், ப்ரம்மாண்டத்தோடு கலப்பதற்கும் த்யானம் உதவுகிறது.

உண்மையில் எல்லாப் பாதைகளுமே ஒன்றுதான். ஆரம்ப நிலையில் நாம் ஒரு வடிவத்தை த்யானம் செய்தால்கூட, ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகு வடிவம் என்ற ஒன்றே கிடையாது என்பதைத் தெரிந்துகொள்வோம். எல்லாம் ஒன்றுதான் என்பது புரியும்.

அதனால் பக்திமார்க்கத்திலும்கூட, நாம்
ஞான மார்க்கத்தின் அனுபவத்தை
அடைந்து விடுவோம். தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள். எதுவும் எதைவிடவும்
உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ கிடையாது.
எல்லாமே ஒன்றுதான்.

வேத நூல்களால்
நாம் பெற்ற அறிவு,
நமக்கு உதவ வேண்டும்
என்றால் நம்முடைய
தினசரி வாழ்க்கையில்
அந்த அறிவைப்
பயன்படுத்த வேண்டும்.

அத்வைதம் என்கிற இரண்டல்லாத நிலையைப் பற்றிப் பேசியுள்ள மஹானான ஜ்ஞான குரு சங்கராச்சாரியாரேகூட, பக்தியைப் பற்றிய பல்வேறுவிதமான பாடல்களை எழுதியுள்ளார். பட்டறிவே உருக்கொண்ட விவேகானந்தர்கூட ராமகிருஷ்ணரின் சிஷ்யையான கோபாலேர்மா என்பவரின் கிருஷ்ண பக்தியைப் பார்த்துத் தலை வணங்கி இருக்கிறார்.

அதைத்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார். இங்குப் பலவகையான மார்க்கங்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் அவர் பக்தி மார்க்கம் பற்றிப் பேசியுள்ளார். இங்கே அவர் ஞானமார்க்கத்தைப் பற்றிச் சொல்கிறார்.

"சிலர் வடிவங்களை வணங்குகிறார்கள். வேறு சிலர் வடிவமற்ற நிலையை வழிபாடு செய்கிறார்கள். என்னை வழிபாடு செய்வதற்குப் பல்வேறு வகையான வழிகள் இருக்கின்றன," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

மக்கள் தெய்வீகத்தை வேறு வேறு வகைகளில் வழிபாடு செய்கிறார்கள்; நாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கொடுக்கப்படுகிறது. பல்வேறு வழிகளில் நமக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

நம்முடைய அகவளர்ச்சிக்கு உதவக்கூடியவகையிலே பழக்கப்பட்ட பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அதனால் இயல்பாகவே நாம் எங்கிருந்தாலும் சரி, அந்த நிலையிலிருந்து உயர்ந்தநிலைக்கு, அதாவது நாம் எத்தகைய வளர்ச்சியை அடையவேண்டுமோ அந்த நிலைக்குச் செல்லலாம்.

நமக்கு பல்வேறு அளவுகளில் ஏணிகளும், பலவிதமான படிகளும் இருக்கின்றன. நமக்குப்பலவகையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால் இயல்பாகவே ஒருவர் ஏதாவது ஒரு பாதையை பின்பற்றுகிறார்.

கிருஷ்ணர் இங்கு பல்வேறு மார்க்கங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நமக்காகத் தருகிறார். கடவுளின் மகிமையைப் பாடி வழிபடுவது அல்லது ஞானத்தை வளர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் கடவுளின் பாதங்களில் காணிக்கையாக்கி வழிபடுதல் போன்ற பலவழிகளை நமக்காகச் சொல்கிறார்.