KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/உண்மை வேறு ஸத்யம் வேறுSign in
பகவத் கீதை விளக்கவுரை

உண்மை வேறு ஸத்யம் வேறு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: ஸ்வாமிஜி, பிரஹ்லாதன், மீரா இவர்களின் பக்தியைப் பற்றிய கதைகள் பல இருக்கின்றன? உண்மையில் அவை நடந்தவைதானா? அவற்றை நம்பலாமா?

பாருங்கள். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிக் கேட்கும்போது, உண்மையில் அவை நடந்தவைதானா என்கிற ஆராய்ச்சியின் அடிப்படையில் செயல்படக் கூடாது. உண்மையில் அவை நடக்கவில்லை என்றால், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களில் ஆழமாகச் செல்லக் கூடாது என்று அர்த்தம் இல்லை. இந்தச் சந்தேக மனப்பாங்கு நம்மைத் திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. இவற்றால் எல்லாம் நாம் வழிமாறக் கூடாது.

பக்திமார்க்கத்திலும்கூட, நாம் ஞான மார்க்கத்தின் அனுபவத்தை அடைந்து விடுவோம்.

பட்டறிவின் மூலம் இவற்றை நாம் ஆராயாமல் இருக்க வேண்டும். அந்தக் கதையில் சொல்லப்பட்ட கருத்தை நாம் பாராட்ட வேண்டும். அப்படி நாம் செயல்பட்டால், அது நடந்ததா, இல்லையா என்பதைப் பொருட்படுத்த மாட்டோம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் யாவுமே உள்வாங்கப்பட வேண்டியவை. அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஆழ்ந்து உள்வாங்கப்பட வேண்டியவை. அந்தக் கதைகளில் நடந்தவை எல்லாம், எங்கே, எப்போது நடந்தது என்றோ அல்லது அது நடந்ததா, இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதால், நாம் அதில் சொல்லப்பட்டுள்ள ஸத்யத்தை இழந்து விடுவோம்.

அது உண்மையில் நடந்ததா என்ற கேள்விக்கு வரலாற்று ஆசிரியர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள், அந்தக் கருத்தில்தான், அந்த ஸத்யத்தில்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஸத்யம் என்பது உண்மையிலிருந்து மாறுபட்டது. ஒரு உண்மை, ஸத்யமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு யாராவது உங்களிடம் நேரத்தைக் கேட்கும்போது, நீங்கள் 10. 30 என்று சொன்னால் அது உண்மை, ஆனால் அது ஸத்யம் இல்லை. ஏனென்றால் இங்கே இப்போது 10. 30 ஆக இருந்தாலும் வேறு எங்காவது 12. 30 என நேரம் இருக்கலாம்.

இவை எல்லாம் உண்மைகள். இங்கே நீங்கள் ஸத்யத்தை சொல்ல வேண்டியது இல்லை. நிஜத்தை சொன்னால் போதும்.

அதனால் நாம் கதைகளைக் கேட்கும்போது, அதில் உள்ள ஸத்யத்தைத்தான் பார்க்க வேண்டும். நிஜம்தானா? என்பதற்கான தகவல்களைத் தேடக் கூடாது. பிரஹ்லாதன் கதையில் இருக்கும் பக்தியைப் பற்றிய ஸத்யத்தைத்தான் நாம் உள்வாங்க வேண்டும். அவனுடைய பக்தியின் ஆழத்தைப் பாருங்கள்.

பிரஹ்லாதன் விஷ்ணுவிடம் பிரார்த்தித்த
உணர்வை நாம் நமக்குள் மீண்டும், மீண்டும்
உணரவேண்டும். அவன் பக்திக்குள் இருக்கிற
அவனது உணர்ச்சிகளை உணரவேண்டும்.
அவனுக்குள் இருந்ததெல்லாம் முழுமையான
சரணாகதி . முழுமையான நம்பிக்கை.
முழுமையான நன்றி உணர்வு.

மிகப்பெரிய மஹான்கள் எல்லோரும் தங்களது அனுபவங்களைக் கதைகள் மற்றும் உருவகக் கதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இயேசுநாதர், புத்தர் மேலும் பல உயர்ந்த குருமார்கள் பல நீதிகளைப் போதிக்கும் உருவகக் கதைகளை அவர்களின் மத வேத நூல்களில் ஒன்றுபடுத்தி இணைத்துள்ளார்கள். இவை அத்தகைய சிறந்த குருமார்களின் அனுபவமாக இருப்பதால் இந்தக் கதைகள் எல்லாமே ஸத்யமானவைதான். இதில் சந்தேகம் என்பதே கிடையாது.

இந்தியாவின் புராணங்கள், மாபெரும் காவியங்கள் எல்லாம் வெறும் சரித்திர உண்மைகள் மட்டும் இல்லை. அவை யாவும் சரித்திரச் சம்பவங்கள் மற்றும் மனித விழிப்புணர்வின் மாற்றம், இவை இரண்டும் கலந்த கலவை. நம் விழிப்புணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவை பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் அவற்றைக் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் நமக்கு வழிகாட்டிகளாக இருந்து உதவுகின்றன.

நான் முதலில் அறிமுக உரையில் விவரித்ததைப்போல், மஹாபாரதம் என்கிற காவியம் இரண்டு உறவுமுறை, அரச மரபினரின் இடையில் நிகழ்ந்த போரை மட்டுமே சொல்லும் கதை இல்லை. அது ஒரு வரலாறு. ஆனால் அதனுடைய முக்கியத்துவமே என்னவென்றால், ஒரு மனிதனுடைய நல்ல ஸம்ஸ்காரத்திற்கும் கெட்ட ஸம்ஸ்காரத்திற்கும் இடையில் நிகழும் சண்டையைப் பற்றி அது உணர்த்தும் சிறப்பு மிக்க உருவக போதனைகள்தான்.

இந்தக் காவியங்களைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் மூலம் நம்முடைய ஸம்ஸ்காரங்களைப் பற்றியும் அவற்றை எப்படி விலக்குவது என்பது பற்றியும் தெரிந்துகொண்டோம் என்றால் அது நமக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

அதைப்போலவே, பிரஹ்லாதன், மீரா போன்ற கதைகளிலும், மேலும் கணக்கிலடங்கா மற்ற ஞானிகளின் கதைகளிலும் கூட மிகப்பெரிய ஸத்யங்கள் பொதிந்து இருக்கின்றன. ஒருமுறை அவற்றை ஆழ்ந்து புரிந்துகொண்டு, அவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து, அதன்மூலம் நம் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

Hands playing a flute