நானே மரணமற்றவனும் மரணமும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

9. 16. , 17, 18, 19
நானே சமயச் சடங்குகள், நானே யாகம், நானே ஆகுதி, நானே யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் திரவியப் பொருட்கள், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, நானே ஹோமம்.
நானே இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்குபவன், நானே தந்தை, நானே தாய், பாட்டனும் நானே, அறியத் தக்கவனும் நானே, அறிவின் பொருளும் நானே, ஓங்காரமும் நானே, புனிதமான வார்த்தையான ரிக், ஸாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானே.
இலக்கும் நானே, தாங்குபவன் நானே, கடவுளும் நானே, சாட்சியும் நானே, இருப்பிடமும் நானே, அடைக்கலமும் நானே, நண்பனும் நானே, பிறப்பிடமும் நானே, ஒடுங்குமிடமும் நானே, புகலிடமும் நானே, ஆதாரமும் நானே, களஞ்சியமும் நானே,
அழிவற்ற விதையும் நானே, வெயிலைத் தருபவனும் நானே. மழையைப் பொழிவிப்பவனும் நானே, அதை நிறுத்துபவனும் நானே.
நானே அழிவற்றவன். மரணமும் நானே, நிலையானதும் நானே, நிலையில்லாததும் நானே ஓ! அர்ஜூனா.
என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே
கிருஷ்ணர் குறிப்பிட்ட வார்த்தைகளின் மூலம் தாம் யார் என்பதை இங்குச் சொல்கிறார். செயலைச் சிருஷ்டிப்பவர் அவரே, செய்பவரும் அவரே, செயலும் அவரே!
யாகங்களில் வளர்க்கப்படும் அக்னியும் அவரே, யாகங்களில் அளிக்கப்படும் ஆகுதியும் அவரே, யாகங்களும் அவரே, பார்ப்பவரும் அவரே, பார்க்கப்படுவதும் அவரே, பார்த்தலும் அவரே!
கிருஷ்ணர் அர்ஜூனனிடம், நாம் செய்கிற, பார்க்கிற, உணர்கிற செயல்கள் எல்லாமே, அதாவது நாம் தெரிந்து வைத்திருக்கிற ஒவ்வொன்றுமே, அது எதுவாக இருந்தாலும் சரி, அது அவருடைய அருளால்தான் நடக்கிறது என்றும், எல்லாம் அவரிடமிருந்துதான் வந்துள்ளன என்றும் சொல்கிறார். எல்லாவற்றிற்கும் விதையாகவும் அவரே இருக்கிறார். நாம் பார்க்கும் அனைத்துமே பராசக்தி என்கிற பிரபஞ்ச சக்திதான். இதுவே கிருஷ்ணர் இங்கு சொல்லும் செய்தி.
உயர்ந்த குருமார்கள், இந்த உணர்வு நிலையில்தான் வாழ்ந்தார்கள். ரமணமகரிஷி, ராமகிருஷ்ணர், ஸதாசிவபிரமேந்திரர், ராகவேந்திரர், போன்ற பல மகான்களும் பிரபஞ்ச விழிப்புணர்வு நிலையுடன் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய நிலையான, இந்த விழிப்புணர்வு நிலையில்தான் வாழ்ந்தார்கள்.
பலரால் இத்தகைய குருமார்களின் அனுபவ வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால், அந்த அனுபவங்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த குருமார்களை எல்லாம் பித்தன், பைத்தியம் என்று நினைத்தார்கள்.
ஒரு சின்ன கதை:.
ஒரு சீடர் தம்முடைய ஆச்ரமத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். தூரத்தில் வரும்போதே ஆச்ரமம் அருகில் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்பதைப் பார்த்தார். கூட்டத்தை தள்ளிக்கொண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாய் அவரது குருவின் பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த உணவைச் சாப்பிட முயற்சி செய்துகொண்டு இருந்தது. அவருடைய குரு அந்த நாயின் மேல் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
அந்தச் சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மிகவும் குழப்பிய நிலையில், "இங்கு என்ன முட்டாள்தனம் நடந்துகொண்டிருக்கிறது. குருவே! நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
குரு அமைதியாகப் பதில் சொன்னார். "உனக்குத் தெரியவில்லையா? யாரோ ஒரு ப்ரஹ்மம், கொஞ்சம் ப்ரஹ்மத்தை இந்த ப்ரஹ்மத்தில் வைத்துள்ளது. நாலுகால் ப்ரஹ்மம் ஒன்று அதைச் சாப்பிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. வேறு ஒரு ப்ரஹ்மம் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. பல ப்ரஹ்மங்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவ்வளவுதான்."
இதைக் கேட்ட கூட்டம், "இது என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று சொல்லிக்கொண்டே கலைந்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் அந்தச் சீடர் தம்முடைய குரு உண்மையல்லாததை ஒருபோதும் பேசமாட்டார் என்று நினைத்தார்.
அவர் அருகில் உள்ள ஒரு மரத்தடியில்
உட்கார்ந்துகொண்டு, அதைப் பற்றிய
தீவிரமான சிந்தனையில் மூழ்கினார்.
சாப்பாடு வைத்தவர், சாப்பாடு, தட்டு,
நாய், குரு, மக்கள் எல்லாமே பிரம்மம்
என்ற வார்த்தைகள் மீண்டும், மீண்டும்
அவர் காதுகளில் ஒலித்தது. அவரது குருவின்
வார்த்தையின் சக்தி அவருள் இறங்க, இறங்க
அவருக்கு ஒரு ஸத்யம் புரியத் தொடங்கியது.
எல்லாப் பொருட்களும், அவரைச் சூழ்ந்து
இருக்கும் அனைத்தும் ஒரே ப்ரஹ்மம்தான்
என்பதை உணர்ந்தார்.
நாம் பார்க்கும்
அனைத்துமே
பராசக்தி என்கிற
பிரபஞ்ச சக்திதான்.
தெய்வீக சக்தியானது, ஆனந்தமயமாக எல்லாவற்றிலும் ஊடுருவி பரவிச் செல்கிறது என்பதைச் சீடர் புரிந்துகொண்டு, அதை உணரத் தொடங்கினார். ஒரே ஒரு நொடியில் எல்லாமே மாறிவிட்டதாகச் சீடருக்குத் தோன்றியது.
‘நான்’ என்கிற எண்ணம் உதிர்ந்தவுடனேயே ஆத்மன் என்கிற உணர்வு உதிக்கத் தொடங்கியது. அனைத்தும் ப்ரம்மம் எங்கும் ப்ரம்மம், என்னுள்ளும் ப்ரம்மம்தான்இருக்கிறார் என்கிற பூரணமான உணர்வு பிறக்கத் தொடங்கியது. சீடருக்கு, ‘ஞானமடை’லின் முதல் அனுபவம் கிடைத்தது.
நாம் எல்லோருமே ப்ரம்மம்தான். நாம் எல்லோரும் தெய்வீகமானவர்கள்தான். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தியானது எங்கும் நிறைந்து எல்லா இடங்களிலும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கிறது. இதைத்தான் கிருஷ்ணர் இந்த வரிகளில் சொல்கிறார்.
இதுதான் அடிப்படையான ஸத்யம். நாம் அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், இதுதான் ஸத்யம். நாம் அதைக் கடவுள் என்றோ, கிருஷ்ணர், ராமர், இயேசு, பிரபஞ்ச சக்தி, அண்ட சராசர சக்தி என்றோ பராசக்தி அல்லது ப்ரம்மம் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். நாம் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும் சரி, என்ன பெயரிட்டு அதை அழைத்தாலும் சரி, அந்த சக்தி எங்கும் நிறைந்துள்ளது.

உருவ வழிபாடே உன்னத ஆரம்பம்
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நாம்
ஒரு விக்ரஹத்தையோ, வடிவத்தையோ
வழிபடும்போது, நாம் உண்மையில்
அதனுள் இருக்கும் உருவமற்ற
சக்தியைத்தான் வழிபடுகிறோம். மக்கள்
என்னிடம் கேட்பதுண்டு, "நாங்கள் ஏன்
உங்கள் போட்டோவை எங்கள் முன்
வைத்து பிரார்த்தனை செய்யவேண்டும்?
வடிவமற்றதை நாங்கள் த்யானம்
செய்யக்கூடாதா?"
நான் அவர்களிடம் சொல்வேன், முதலில் வடிவத்தை த்யானம் செய்யுங்கள். பிறகு வடிவமற்றதை த்யானம் செய்யலாம். நமது மனம் மது அருந்திய குரங்கைப் போன்றது. நீங்கள் குரங்கைப் பார்த்திருக்கிறீர்களா? அது குதித்துக்கொண்டே இருக்கும். இங்கும் அங்கும் குதித்துக்கொண்டே இருக்கும். சாதாரணமாக இருக்கிற குரங்கே அங்கும் இங்கும் குதித்துக் கொண்டிருக்கும்; கள் அருந்திய குரங்கைப் பற்றிச் சொல்லவேண்டுமா? அது எந்த அளவிற்கு குதிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போதாதென்று, இப்போது இந்தக் குரங்கை ஒரு தேள் வேறு கொட்டி விட்டால் எப்படிக் குதிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
நம் மனமும் அதைப் போன்றதே. அது தொடர்ந்து எல்லா இடத்திற்கும் குதித்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் நம்முடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டு வர முதலில் நமக்கு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. ஆரம்பநிலையில் நம் மனத்தை அமைதிப்படுத்த ஒரு வடிவம் தேவைப்படுகிறது. நாம் வடிவத்துடன் த்யானம் செய்வதற்கு நன்றாகப் பழகியபிறகு, வடிவமற்றதை த்யானம் செய்வது மிகவும் சுலபமாகிறது.
ஆரம்ப நிலையில் மட்டுமே நாம் உருவ வழிபாடோ அல்லது உருவ த்யானமோ செய்ய வேண்டும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் வடிவத்தை த்யானம் செய்யும்போதுகூட, நம் முன்னால் இருக்கும் அந்த விக்ரஹத்தை மட்டுமே பார்க்க வேண்டும். வேறு எதைப் பற்றியும் நினைக்கக் கூடாது. நாம் விக்ரஹத்தின் மூலமாக வழிபடுகிறோமே தவிர விக்ரஹத்தையே நாம் வழிபடவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் ஒருவிஷயம், கடவுள்
வடிவமற்றவர். அவர், சக்தி
வடிவில்தான் இருக்கிறார்
என்பதுதான் ஆன்மீகத்தின்
அடிப்படையான ஸத்யம். கடவுள்
என்பவர் ஒரு தனிமனிதராக
இருக்க முடியாது. அவர் சக்தி
வடிவத்தில்தான் இருக்க முடியும்.
மதங்கள், இந்த தெய்வீக சக்திற்கு வடிவமும், உருவமும் கொடுக்கின்றன. அது ஒரு நல்ல ஆரம்பம்தான். ஆனால் நல்ல முடிவு கிடையாது. நீங்கள் உருவ வழிபாட்டில் தொடங்கி, உருவமற்ற சக்தியை வழிபடுவதற்கு மாற வேண்டும்.

விஞ்ஞானம் முடியும் இடத்தில் மெய்ஞானம் ஆரம்பிக்கிறது
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நம் நாட்டின் முனிவர்கள், 'எல்லாம் சக்திமயமானது, சக்தியிலிருந்துதான் சிருஷ்டி வெளிவந்துள்ளது' என்பதை மிகத் தெளிவாக உபநிஷதங்களில் விளக்கி இருக்கிறார்கள். ஆனாலும், சமீபத்தில்தான் விஞ்ஞானம் இந்த ஸத்யத்தைப் புரிந்துகொண்டிருக்கிறது.
இந்த உலகில் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது தான் என்பதை விளக்கும் ஐன்ஸ்டனின் சார்பியல் நிலை கோட்பாட்டை இந்த உலகமே சந்தேகத்துடன் நோக்கியது. உலகத்தால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
உண்மையில், இப்போதுகூட மிகச்சிலரே அவரது கோட்பாட்டைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதாவது, மக்கள் அவரது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும், நமது முனிவர்கள் பல ஆயிரம் காலத்திற்கு முன்பே இந்தக் கோட்பாட்டைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐன்ஸ்டன் உபநிஷதங்களைப் படித்த போது, "விஞ்ஞானம் முடியும் இடத்தில் மெய்ஞானம் ஆரம்பமாகிறது," என்று சொன்னார். ஐன்ஸ்டன் தம் வாழ்நாளின் இறுதியில் ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார்.
கடவுள் வடிவமற்றவர்.
அவர்,
சக்தி வடிவில்தான்
இருக்கிறார் என்பதுதான்
ஆன்மீகத்தின்
அடிப்படையான ஸத்யம்.
வடிவமற்ற கடவுள் என்றால் பெருவெளி,
ஆகாசம், அல்லது சக்தி இது அன்றி வேறு
எதுவும் இல்லை. வெற்றிடத்தில்கூட
ஆகாசம் உள்ளது என்கிற உண்மை
விஞ்ஞானப்பூர்வமாக இப்போது நிருபணம்
செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சக்தியானது
எங்கும் எதிலும் பரவி இருக்கிறது. அது
எங்கும் உள்ள சக்தி.
இப்போது சக்தி வாய்ந்த உபகரணங்கள்
மூலம், ஓர் அணுவின் 99. 99% அளவு
இடமானது வெற்றிடம்தான் என்பது
தெரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.
வெற்றிடத்திற்குள் இடைவிடாது அதிர்வுகள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த
அதிர்வுகள்தான் தங்களைப் பொருட்களாக
வெளிக்காட்டுகின்றன. ஒவ்வொரு
பொருளும் சக்தியால் நிரம்பி இருக்கிறது.
இப்போது விஞ்ஞானம், “அனைத்தும் சக்தியால் நிரம்பியுள்ளது,” என்று சொல்கிறது.
நம் ஞானமடைந்த குருமார்கள் இதையே “கடவுள் சக்திமயமானவர். அவர் எல்லா வெளிகளிலும் நிரம்பி இருக்கிறார். கடவுள் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கிறார்,” என்று வெளிப்படுத்தியிருக்கின்றனர். கிருஷ்ணர் இந்த வரிகளில் இந்தக் கருத்தைத் தெளிவாக உரைக்கிறார்.
இந்தச் சக்தியை அழிக்க முடியாது. அதன் தன்மையைத்தான் மாற்ற முடியும். நாம் மின்சார விளக்கின் சுவிட்சைத் தட்டியவுடன் விளக்கு எரிகிறது. மின்சார சக்தியானது, ஒளி சக்தியாக மாற்றப்பட்டு உள்ளது. மின்சார சக்தி அழிக்கப்படவில்லை. அதன் தன்மை மாற்றப்பட்டு உள்ளது; அவ்வளவுதான்.
இதைப்போலவே, பிரபஞ்ச சக்தியானது எங்கும் நிறைந்து இருக்கிறது. அது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இருக்கிறது. அது நமக்குள்ளும் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்த உயர்ந்த ஸத்யத்தை நாம் உணர்ந்துகொண்டபின், நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம்மைப் போன்றதுதான் என்று புரிந்துகொள்கிறோம். அனைத்திலும் இருக்கிற அந்த சக்தியின் வடிவம்தான் மாறியுள்ளது. கிருஷ்ணர் இந்த மிகப்பெரிய ஸத்யத்தை இந்த ஸ்லோகங்கள்இல் விளக்க முற்படுகிறார்.
நான், ‘அனைத்தும்’ என்று சொல்லும்பொழுது, எல்லாம் கிருஷ்ணன், எல்லாம் ப்ரம்மம் என்ற பொருளில்தான் சொல்கிறேன்.
கேள்வி: நீங்கள் வடிவத்திலிருந்து வடிவமற்றதை வழிபடுவதற்கு மாறவேண்டும் என்று சொல்கிறீர்கள். சில மதங்கள் உருவ வழிபாட்டை முழுவதுமாக எதிர்க்கின்றன. உருவ வழிபாட்டை காட்டுமிராண்டித்தனம் என்கின்றன. இதைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா?
'எங்கும் நிறைந்தும், பரந்தும் இருப்பது சக்தி' - என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. எல்லா ஜடப்பொருட்களும் சக்தியிலிருந்துதான் வந்துள்ளன என்பது முற்றிலும் உண்மையானது.
வெற்றிடத்தில்கூட ஆகாசம் உள்ளது என்கிற உண்மை விஞ்ஞானபூர்வமாக இப்போது நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.
முதல் உபநிஷதமான ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியமே, 'ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்' என்றே தொடங்குகிறது. இதன் பொருள் இந்த சக்தியிலிருந்துதான் எல்லாப் பொருட்களும் உருவாக்கப்பட்டன என்பதாகும்.
இந்த ஸத்யத்தைச் சொன்ன அதே ஜ்ஞான குருமார்கள்தான் சடங்குகள், மற்றும் வேறு நுட்பங்கள் மூலம் வடிவத்தை வழிபாடு செய்வது பற்றியும் விளக்கி உள்ளார்கள். கிருஷ்ணர், எல்லா ஞானிகளுக்கும் குரு. தம்மையே அந்த நுட்பங்கள் என்று இந்த ஸ்லோகங்களால் வெளிப்படுத்துகிறாரே அது ஏன் தெரியுமா?
பிரபஞ்ச நிலையிலிருந்து பார்க்கும்போது எல்லாமே சக்திமயமானவை. அதேசமயம் பொருள் சார்ந்த நிலையிலிருந்து பார்க்கும்போது, நாம் பார்ப்பது உணர்ந்துகொள்வது எல்லாமே ஜடப்பொருள். நாம் காமத்தின் மூலம், ஒரு சக்தியை மீண்டும் உருவாக்கித் தரமுடியுமா?
வாதம் செய்வதற்காக வேண்டுமானால் நாம் மாசற்ற முறையில் கரு உருவாவதைப் பற்றிப் பேசலாம். நாம் இந்த உடம்போடு வாழ்ந்து கொண்டிருக்கும்வரை இனப்பெருக்கம் நிகழ்வதற்கு உடல் ரீதியான பங்கு தேவைப்படுகிறது. தம்பதியர்கள் காமத்தில் ஈடுபடும்போது, அவர்களின் மனநிலையானது, உடல் தாண்டி, உயர்ந்த அதி உன்னத நிலையில் இருக்குமேயானால், தூய்மையான சக்தி நிலையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டார்களேயானால் மாசற்ற கரு உருவாதல் நிகழும். அவ்வளவுதான். இத்தகைய கரு உருவாதல்தான் ஞான நிலை ஆன்மாக்களை உருவாக்கும். உடல்தாங்கி இருக்கும் யாராக இருந்தாலும், வடிவத்துடன் இருக்கும் எவரும் சக்தியுடன் தொடர்புகொள்ள முடியாது. அவர் ஞானமடைந்தவராக இருந்தால் மட்டுமே சக்தி நிலையோடு தொடர்புகொள்ள முடியும். நாம் பொருள் சார்ந்தே இருக்கப் பழகி விட்டோம். சக்தியைச் சார்ந்து இருக்கப் பழகவில்லை.
நாம் பொருளைப் பார்க்கிறோம்; பொருளை உணர்கிறோம். பொருள் எல்லாம் சக்திமயமானவைதான் என்பதை அறிவியல் ரீதியாக நாம் புரிந்துகொண்டாலும், நாம் அவற்றைப் 'பொருள்' என்றே உணர்கிறோம்.
அனைத்துப் பொருட்களும் சக்திமயமானவை என்பதைப் புரிந்துகொள்ளவும், அதே சக்திதான் எல்லாப் பொருட்களிலும் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவும் நிறைய காலம் தேவைப்படுகிறது. இந்த அனுபவம் கிடைப்பதற்கு நமக்கு மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது.
இந்த மனப்பக்குவம் நமக்குள் ஏற்படுவதற்கு முன், இந்தப் புதிரான, நம்மால் தொடமுடியாத, உணர்ந்துகொள்ள முடியாத சக்தியின் மேல் நம்முடைய கவனத்தைச் செலுத்தும்படி நாம் கட்டாயப்படுத்தப் படுவோமேயானால், அதை ஒரு ஒழுக்கக் கோட்பாடாக நினைத்து வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளவோமே தவிர, உண்மையான புரிந்துகொள்ளுதலினால் அல்ல.
மற்ற மதங்களின் தெய்வங்களைப் பொய் என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் சொல்லும் மதங்கில்தான் இப்படி நிகழ்கிறது. அவர்களுக்கு, பொருள் - சக்தி இவை பற்றிய கருத்துக்களை விஞ்ஞான ரீதியாகவும் சரி, ஆன்மீக ரீதியாகவும் சரி, சரியான முறையில் புரிந்துகொள்வதில் குறைபாடு இருக்கிறது.
சக்தியும் பொருளும் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை கொண்டவை. காலம், இடம் அல்லது வெளி இவற்றில் சக்தியும் பொருளும் இரண்டு பண்புகளிலும் நிலைகொள்ள முடியும்.
சென்ற நூற்றாண்டில்கூட இத்தகைய கருத்து, விஞ்ஞானப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாய் இல்லை. உண்மையில் நாம் கதிர்வீச்சு ஆற்றல் அலைவரிசை இயற்பியலில் (Quantum
> சக்தியை
> அழிக்க முடியாது.
> அதன்
> தன்மையைத்தான்
> மாற்ற முடியும்
Physics) ஏற்பட்ட முன்னேற்றத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் ஒன்றாய் சந்தித்து இணையும இடத்தை நாம் அடைந்திருக்கிறோம்.
நியூட்டனின் இயற்பியல், ஐன்ஸ்டனின் இயற்பியலுக்கு வழிவிட்டுள்ளது. பொருள் சார்ந்த விஞ்ஞானம், சஃக்தி நிலை விஞ்ஞானமாக மாறத் தொடங்கியுள்ளது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய முனிவர்கள் இந்த ஸத்யங்களை உணர்ந்திருக்கிறார்கள். மற்ற எல்லா மதங்களும் இதைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டது என்று சொல்ல முடியாது.
காலப்போக்கில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இந்த ஸத்யங்களை உறுதியான முறையில் நிரூபித்ததால், வேறுவழியில்லாமல் இதை மறுக்க முடியாமல் அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. வடிவம், வடிவமற்ற தன்மை இவை இரண்டுமே ஒரே அனுபவத்தின் இரண்டு வெளிப்பாடுகள்; பொருள், சஃக்தி இவை இரண்டுமே ஒரே உண்மையை வெவ்வேறுவிதமாக வெளிக்காட்டுபவை, அவ்வளவுதான்.
வடிவம், வடிவமற்றதைவிட தாழ்ந்தது என்று உருவ வழிபாட்டை மறுக்கும் மதங்களால் ஏற்படும் அபாயம் என்னவென்றால், அவர்கள் இந்தக் கருத்தின் மூலம் தங்களின் உண்மைத் தன்மையையே மறுத்துக்கொள்கிறார்கள். உருவமற்ற ஒன்றுதான் தெய்வீகம் என்று நீங்கள் நம்பினால், பிறகு நீங்கள் யார் சொல்லுங்கள்? அப்படியென்றால் நீங்கள் சஃக்தியே இல்லாத வெறும் ஜடப்பொருட்களா?
இத்தகைய மதங்கள், தங்களது கருத்துக்களால் தங்களுக்குள்ளே ஆழமான மனச்சோர்வை உருவாக்கிக்கொள்கின்றன. தங்கள் கருத்துக்கு மாறாக நினைக்கும் மற்றவர்களை எதிரியாக நினைத்து அவர்கள் மேல் வெறுப்பையும் உருவாக்கி விடுகின்றன.
மேலும் இப்படி வடிவமற்ற கருத்தின்
மேல் கவனம் செலுத்துவதால், அமைதி
உண்டாவதற்கு மாறாக, பொருள்சார்ந்த
விஷயங்கள் மேல் அதீத ஆசை உண்டாகத்
தொடங்குகிறது.
சக்தியும் பொருளும்
ஒன்று மற்றொன்றாக
மாறும் தன்மை
கொண்டவை.
அதனால்தான் இத்தகைய கலாச்சாரங்களால்,
இத்தகைய மதங்களால் மறுபிறப்பு,
அவதாரம் போன்ற கருத்துக்களை
ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.
மறுபிறப்பு என்கிற கருத்தே, அழிக்கமுடியாத சக்தியை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுவதுதான். பிறகு ஏன் நாம், 'குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு ஜடப்பொருளே நாம்' என்று நம்மைப் பற்றி கருதிக்கொள்ள வேண்டும்?
இருப்பது அனைத்தும் ஒரே சக்தியே என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதால் இத்தகைய கலாச்சாரங்கள் எல்லாம் தங்களின் ஆழ்ந்த சக்தியை, தெய்வீகத்தை நம்பவில்லை என்பதையே இது குறிக்கிறது. அவர்கள் தங்களை இயற்கையிலிருந்து, பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வினால் வன்முறைகள், தீவிரவாதம் இவை பெருகுகின்றன. ஆழமாகப் புதைந்துள்ள தாழ்வுமனப்பான்மையின் காரணமாகவும், தங்களின் சொந்தத் தன்மையின் மேல் தாங்களாகவே தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட சந்தேகத்தின் காரணமாகவும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால், தங்களுக்குள் மையம் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள்.
அதனால்தான், பல உண்மையான மதங்கள், தங்கள் மத நம்பிக்கைகளைப் பரப்பவேண்டும் என்ற கருத்தையோ அல்லது மத மாற்றத்தையோ நம்புவதில்லை. அவை மற்றவர்களைப் பயமுறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்வதில்லை. அதற்கான தேவை இருப்பதாக அவை நினைப்பதும் இல்லை.
ஏதோ ஒன்றிற்காகப் பயப்படுபவர்கள் மட்டும்தான், தாங்கள் நல்லவர்கள் என்று சொல்லி, மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்வார்கள். மனித இன வரலாற்றில் மற்ற காரணங்களைவிட, மதக் காரணங்களுக்காகத்தான் அதிக மக்களைக் கொன்று குவித்துக் இருக்கிறார்கள்.
முதலில் நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: வடிவமற்ற தெய்வீகத்தை நேரடியாக நாம் வழிபாடு செய்வதற்கு வழி எதுவும் கிடையாது. முதலில், வடிவத்தைக் கொண்டே தொடங்க வேண்டியுள்ளது. தங்களால் உருவமற்றதை வணங்க முடியும் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
வடிவத்தின் இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் தந்திரவேலை செய்கிறார்கள்; அதற்குப் பதிலாக அவர்கள் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள்; குறிப்பிட்ட திசைகளைப் பயன்படுத்துகிறார்கள்; புனிதமான இடங்களைப் பயன்படுத்துகிறார்கள்; சடங்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் என்னவோ தாங்கள் உருவமற்ற கடவுளை வழிபாட்டுக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தளவில், இந்து கடவுள் என்பது கல்லில் வடிக்கப்பட்ட உருவம், அது விக்ரஹ ஆராதனை. ஆனால் அவர்கள் வேறு வடிவத்தை, வேறு பெயரில் வழிபாடு செய்தால் அது சரியானது, ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது!
வேதங்கள், படிப்படியான பரிணாம வளர்ச்சியைத்தான் பரிந்துரைக்கின்றன. ஒருவர் கோயில்கள், சடங்குகள் என்பவற்றிலிருந்து தொடங்குகிறார். ஒருவர், ஒரு உருவத்தைத் தேர்ந்தெடுத்தோ அல்லது பல உருவங்களைத் தேர்ந்தெடுத்தோ, அந்த ஆராதனையில் அவர் நிம்மதியாக இருப்பதாக உணர்கிறார்.
பிறகு அவர், 'வெளி உலகச் சடங்கு'களிலிருந்து மந்திர உச்சாடனங்கள், உச்சரிப்புகள் என்று 'உள் உலக ஆராதனை'க்குச் செல்லத் தொடங்குகிறார். குறிப்பிட்ட ஒரு விக்ரஹத்தை மட்டுமே வழிபடுகிறார். பிறகு அதிலிருந்து அந்த விக்ரஹத்தின்மேல் த்யாணம்செய்யும் நிலைக்குச் செல்கிறார். கடைசியாக வடிவமற்ற கடவுளைத் தியானிக்கத் தொடங்குகிறார்.
எல்லையற்ற பரம்பொருளை ஒரே அடியில் அடைய முடியாது. நமக்கு அதற்கு முன் ஆயத்தங்கள் தேவைப்படுகின்றன. இல்லையென்றால், ஸத்யத்தைவிட்டு வழிமாறும் அபாயம் இருக்கிறது. நாம் உருவத்தை வழிபடும்போது, அந்த வடிவத்தின் மூலம், அந்த வடிவத்தின் சக்தியையே வழிபடுகிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அந்த வடிவத்தை விட்டுவிட்டு, எல்லா வடிவங்களிலும் ஊடுருவி நிற்கும் சக்தியை நம்மால் அடையாளம் காண முடியும்.