சொர்க்கத்திற்கு செல்லுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

9. 20 எவர்கள் வேதச் சடங்குகளைச் செய்து, சோமபானம் அருந்தி என்னைப் பூஜிக்கிறார்களோ, அவர்கள் மறைமுகமாகச் சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகிறார்கள்.
அவர்கள் தேவலோகத்தை அடைந்து மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய புலனின்பங்களை அனுபவிப்பார்கள்.
9. 21 அவர்கள் ஸ்வர்க்கலோக சுகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள். பலன்களைக் கருதி வேத தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
9. 22 என்னுடைய உணர்வில் நீ நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம் என்ன குறைகிறதோ, அதை நான் தருகிறேன். உன்னிடம் எது இருக்கிறதோ அதைப் பாதுகாக்கிறேன்.
குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை
செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள்.
ஆனால் உண்மையான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இதைச்
செய்கிறார்கள்.
யாகத்திற்குரிய சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக
அனுபவிப்பவனும் நானே.
மனித மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான
தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் மீண்டும்
பிறக்கிறார்கள்.

சடங்குகள் செய்வதனால் சொர்க்க வாசல் திறப்பதில்லை
யார் ஒருவர் வேதங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றின் அடிப்படையில், யாகம் போன்ற புனித சடங்குகளைச் சொர்க்கலோக போகங்களைப் பெறவேண்டும் என்கிற நோக்கத்தில் செய்கிறாரோ, அவர் இந்தத் தேவலோக போகங்களை அனுபவித்த பின்பு, மீண்டும் இந்த உலகிற்கே வந்து, பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அடைகிறார் என்று கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், மக்கள் பலவிதமான சமயச் சடங்குகளைச் செய்கிறார்கள். வேத நூல்களைக் கற்கிறார்கள். இவை நிச்சயமாக அவர்கள் உயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைய உதவுகிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆனாலும் அவர்கள் ஸம்ஸார சக்கரத்தில், பிறப்பு இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொள்கிறார்கள். வேத நூல்களைப் படிப்பது, வேத நூல்களில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்துவது போன்றவற்றால் கிடைக்கும் நிலையில்லாத சுகங்களை நாம் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார்.
இந்த வரிகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். வேத நூல்களை படிப்பது, சமய சடங்குகள் பலவற்றைச் செய்வது இவற்றால் நாம் இந்திரலோக சுகபோகங்களை அடைந்து அனுபவிக்க முடியும். ஆனாலும் அந்தக் கோரிக்கையை முன்வைத்து யாகங்கள் போன்ற சடங்குகள் நிகழ்த்தப்பட்டால், மீண்டும் பிறப்பு இறப்பு எனும் விஷச் சுழலில் நாம் நுழைந்து விடுவோம். வேதங்களையும், உபநிஷதங்களையும் நாம் எந்த மனப்பாங்கில் படிக்க வேண்டும் என்பதையும், சடங்குகளை நாம் எந்த மனநிலையில் செய்ய வேண்டும் என்பதையும் கிருஷ்ணர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.
வேத நூல்கள் யாவும் மிகச்சிறந்த அறிவை தன்னகத்தே கொண்டுள்ளன; சடங்குகள் யாவும் அளப்பரிய சக்தி கொண்டவையே; அவை எல்லாமே த்யானங்கள்தான். ஆனாலும் அவை பயத்தாலும், பேராசையாலும் செய்யப்பட்டால், அவற்றால் பயன் ஏதும் கிடையாது.

பெரும்பான்மையானவர்கள் பயத்தால்தான்
இவற்றைச் செய்வார்கள். குறிப்பிட்ட
சடங்குகளைச் செய்யாவிட்டால், தாங்கள்
நரகத்திற்குப் போய் விடுவோம் என்ற
பயத்தினால் அவற்றைச் செய்கிறார்கள். சில
சடங்குகளைச் செய்யாவிட்டால் தங்களுக்குச்
சொர்க்கத்தில் இடம் தரமாட்டார்கள் என்ற
பயந்துகொண்டு அவற்றைச் செய்கிறார்கள்.
இந்தியாவில் ஒரு மனிதர் மரணமடைந்தபிறகு, சில குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் செய்யப்படவில்லை என்றால், இறந்தவர் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது, தாங்களும் நிம்மதியாக வாழ முடியாது என்கிற பயத்தினால்தான் மக்கள் அவற்றைச் செய்கிறார்கள்.
சில மக்கள் பேராசையின் காரணமாகச் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெருந்தொகையைத் தானமாகக் கொடுத்துவிட்டு, சொர்க்கத்தின் கதவுகள் தங்களுக்காக நிச்சயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் தங்களின் பெயர்கள் கோயில் சுவர்களில் பதித்து வைக்கப்படவேண்டுமென்று எதிர்பார்ப்புடன் தானங்களைச் செய்கிறார்கள்.
அவர்கள் கோயில்களில் வெளிச்சம்
தருவதற்காக மின்சார விளக்குகளைத்
தானமாகத் தந்து, அதில் பாதி வெளிச்ச
த்தை தங்களின் பெயரை எழுதியே மறைத்து
விடுகிறார்கள்! அத்தகைய தானத்தினால்
என்ன பயன்?
வேத நூல்களில்
சொல்லப்பட்டவற்றை
செயல்படுத்துவதினால்
கிடைக்கும்
நிலையில்லாத
சுகங்களைத் தாண்டிச்
செல்ல வேண்டும்
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நாம் இறைவனுக்காக புக்திபூர்வமான செயல்களை, பயம் அல்லது பேராசையுடன் செய்யும்போது அதன்மூலமாக ஏதோ சில முன்னேற்றங்கள், சில உணர்வுமாற்றங்கள் நிகழ்ந்தாலும், நாம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுவோம். அதைத்தான் கிருஷ்ணர் இங்கு இந்திரலோகம் என்கிறார், அதாவது சிலகாலம் மட்டுமே நீடிக்கக்கூடிய மாற்றம், நம் நிலையில் ஏற்படும் தற்காலிகமான உயர்வு என்று குறிப்பிடுகிறார்
நாம் சில சடங்குகள், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யும்போது, வேத நூல்களைக் கற்கும்போதும், அந்தச் செயல்களே ஒரு தியானமாக மாற வேண்டும். நமது அஹங்காரமோ அச்சமோ அல்லது பேராசையோ நம்முடைய பாதையின் நடுவில் வரக் கூடாது.
அதை இப்படித்தான் செய்ய வேண்டும்: சடங்குகளைச் செய்யும்போது, இதுதான் நாம் நிகழ்த்தும் கடைசி சடங்கு என்று நினைத்து, ஆழ்ந்த உத்வேகத்துடன் செய்யுங்கள்.

அவர் அளித்த தெய்வீக வாக்கு
அடுத்த வரிகள்தான் முக்கியமான பாகம். அது ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கும் நம் எல்லோருக்கும் சொல்கிறார்.
அநந்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே /
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் //
வேத நூல்கள் யாவும்
மிகச்சிறந்த அறிவைத்
தன்னகத்தே
கொண்டுள்ளன.
சடங்குகள் யாவும்
அளப்பரிய சக்தி
கொண்டவை.
"எவர் என்னை எப்போதும் ஆராதித்தும், எவர் எப்போதும் என்னுள்ளேயே நிலைத்தும் இருக்கிறார்களோ, எவரெல்லாம் அநந்யாஸ்சிந்த, இரட்டைத் தன்மையற்ற மனநிலையில், நானாகவே மாறிய நிலையில், எல்லையற்ற விழிப்புணர்வு நிலையை அடைந்திருக்கிறார்களோ, அதாவது அநந்யாஸ் சிந்தயந்தோமாம்யேஜநா:பர்யுபாஸதேநானாக மாறிய எல்லையற்ற விழிப்பு உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களை நானே தாங்குகிறேன். அவர்களிடம்
இல்லாதவற்றைத் தருகிறேன். இருப்பவற்றை
பாதுகாக்கிறேன். அவர்களை நானே
கவனித்துக்கொள்கிறேன்.''
தயவுசெய்து தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள். வேறு எந்த மஹா
அவதாரமும் இந்த ஸத்யத்தை இவ்வளவு
தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
"நீங்கள் நிலையான விழிப்புணர்வு நிலையில்,
தெய்வீக சக்தியில், ஆனந்த விழிப்புணர்வில்
நிலைத்திருந்தீர்கள் என்றால், நானே உங்களை
எல்லா வழிகளிலும் தாங்குகிறேன்,'' என்று
தெளிவாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
சில சடங்குகள்,
பூஜைகள்,
பிரார்த்தனைகள்
செய்யும்போதும்,
வேத நூல்களைக்
கற்கும்போதும,
அந்தச் செயல்களே
ஒரு த்யானமாக மாற
வேண்டும்.
யோக க்ஷேம - "அவர்கள் ஆன்மீக ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி உலகியல் ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி, அதைத் தருகிறேன். அது அவர்களிடமே நிலைத்திருக்கவும் செய்கின்றேன். அதை யாரும் அவர்களிடமிருந்து எடுத்துச் செல்லாமல் பாதுகாக்கிறேன்.'' இது மிகவும் அழகான ஒரு உறுதிமொழி மற்றும் வாக்குறுதி.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது வெறும் உறுதிமொழி மட்டும் இல்லை. இது ஒரு ஸத்யம். உறுதிமொழி என்பது வேறு, ஸத்யம் என்பது வேறு.
இது ஒரு ஸத்யம். கிருஷ்ணர், "நீங்கள் என்னுடைய விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருந்தால், நீங்கள் நிலையான விழிப்புணர்வான நித்யானந்த நிலையில் இருந்தால், உங்களிடம் இல்லாதவையெல்லாம் அளிக்கப்படும், இருப்பவை அனைத்தும் காக்கப்படும்,'' என்கிற ஸத்யத்தைத் தருகிறார்.
இதில் நமக்கு வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், நமக்கு அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்றும், எதையுமே நாம் இழக்க மாட்டோம் என்றும் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றுதான்!

பிரபஞ்சம் நம் எண்ணங்களுக்குப் பதிலளிக்கும்
அதிலும், நாகரிக கல்வி என்றழைக்கப்படும் இன்றைய கல்வியைப் பழகியவர்களுக்கு, இந்தக் கருத்து நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கும்!
"தியானம் செய்வதால், நான் விரும்புவது எப்படி எனக்குக் கிடைக்கும்?" என்கிற கேள்விதான் உடனே எழும்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்றைய நாகரிக
> தெய்வீக சக்தியில்,
> ஆனந்த விழிப்புணர்வில்
> நிலைத்திருந்தீர்கள்
> என்றால்,
> நானே உங்களை
> எல்லா வழிகளிலும்
> தாங்குகிறேன்.
> —ஶ்ரீ கிருஷ்ணர்
யுகத்தில், முக்கியமாக குவாண்டம்
இயற்பியல் கோட்பாடு வெளிப்படுத்திய
கருத்தால், நம் எண்ணங்களால்தான் இந்தப்
பிரபஞ்சம் உருவாகி உள்ளது என்பதனை
விஞ்ஞானம் மிகத் தெளிவாக நிரூபித்து
இருக்கிறது. நம்முடைய எண்ணங்கள்தான்
இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உருவாக்கி
இருக்கின்றன.
நாம் நிலையான விழிப்புணர்வு
நிலையில், எல்லையற்ற விழிப்புணர்வு
நிலையில் நிலைபெற்றிருக்கும்போது,
நாம் நம்முடைய சொந்த பிரபஞ்ச
த்தை உருவாக்குகிறோம். அதுமட்டும்
இல்லை. அந்தப் பிரபஞ்சமும் நம்முடைய
எண்ணங்களுக்குப் பதில் அளிக்கிறது.
ஒரு சிறிய, மிகவும் முக்கியமான சோதனை பற்றி நான் ஒரு இதழில் படித்தேன்.
ஒரு பேராசிரியர், மூன்று ரோஜாச்செடிகளைப் பயன்படுத்தி இந்தச் சோதனையை நிகழ்த்தி இருக்கிறார். அந்த மூன்று செடிகளும் ஒரே வகையானதாகவும், ஒரே அளவு உயரமும் கொண்டதாகவும் இருந்தன. அவர் அந்த மூன்று செடிகளையும் மூன்று வெவ்வேறு அறைகளில் வைத்தார்.
முதலில் அவர் முதல் அறைக்குள் நுழைந்து, மிகவும் அழகிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். "நீ மிகவும் அழகாயிருக்கிறாய்.
நீ மிகவும் மென்மையாக இருக்கிறாய். நீ
சிறந்ததாக இருக்கிறாய். கவலைப்படாதே.
நான் உன்னைப் பாதுகாக்கிறேன். பிறகு
உனக்கு எதற்கு இந்த முட்கள்?'' என்று
மிகவும் நம்பிக்கையான, அக்கறையுள்ள
வார்த்தைகளை அந்த செடியிடம் சொன்னார்.
அவர், ஒரு அன்பு நிறைந்த சூழ்நிலையை
அங்கு உருவாக்கினார்.
இரண்டாவதாக, அவர் அடுத்த அறைக் குச் சென்றார். இரண்டாவது செடியிடம் சென்று அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதை சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, எதிர்மறை அல்லது நேர்மறையாகவோ எந்த வார்த்தைகளையும் சொல்லாமல் வெளியே வந்தார். மூன்றாவது செடியிடம் சென்று, "என்ன முட்டாள்தனம் செய்துகொண்டு இருக்கிறாய், நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்?'' என்று கடுமையான வார்த்தைகளைச் சொல்லி எதிர்மறையான சக்தியையே அங்கு உருவாக்கினார்.
அவர் தம்முடைய பரிசோதனையை இருபத்தியோரு நாள்களுக்குச் செய்தார். நம்முடைய எண்ணங்களுக்கு, செடிகள் எப்படி எதிர்ச்செயல் செய்கின்றன என்று ஆராய்ச்சி செய்தார்.
அந்த ஆய்வறிக்கையின் முடிவில் சொல்லப்பட்ட தகவல் உண்மையில் அதிர்ச்சியைத் தந்தது. முதல் செடி, நேர்மறையான வார்த்தைகளைப் பெற்று அது தன்னுடைய அளவில் இரட்டிப்பாக வளர்ந்து, தன் முட்களையெல்லாம் கொட்டிவிட்டது! நான் அந்தச் செடியின் போட்டோவைப் பார்த்தேன்.

அந்தச்செடியில் முட்கள் இல்லாமல் போனதின் காரணம், அந்தப் பேராசிரியர் கொடுத்த நம்பிக்கை, "நான் உன்னைப் பாதுகாப்பேன் நீயே ஏன் உன்னைப் பாதுகாத்து க்கொள்ள முயற்சி செய்கிறாய்? கவலைப்படாதே. உனக்கு ஏன் முட்கள் தேவைப்படுகிறது. முட்கள் இல்லாத ஒரு ரோஜாச்செடியைக் கற்பனை செய்துபார்,'' என்று அவர் சொன்ன வார்த்தைகள். இரண்டாவது ஒரு சாதாரண ரோஜா செடி. அது சாதாரண நிலையில் வளர்ந்தது. அவ்வளவுதான். அவர் அந்தச் செடியிடம் நேர்மறையாகவும் இல்லாமல் எதிர்மறையாகவும் இல்லாமல் நடந்துகொண்டார். அதனால் அந்தச் செடியானதுாதாரணமாக ஒரு ரோஜாச் செடி எப்படி வளருமோ அந்த வகையில் வளர்ந்தது.
அவர் எதிர்மறை வார்த்தைகளை மட்டுமே பேசிய அந்த மூன்றாவது செடி இறந்துவிட்டது! அந்த எதிர்மறை வார்த்தைகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது செடி இறந்தே விட்டது. இப்படி ஒருமுறை அல்ல, பல முறைகள் அதே போன்ற பரிசோதனைகளைப் பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் அவர் சோதித்துப் பார்த்தார். எதிர்மறையான வார்த்தைகளைப் பெற்ற மூன்றாவது செடியானது எப்போதுமே செத்துப்போனது! எல்லா முறையுமே அந்தச் செடி செத்துப் போனதாக அவர் சொல்கிறார்.
சர் ஜகதீஷ் சந்திரபோஸ், நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானி, தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று நிரூபித்து உள்ளார். நம்முடைய எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் மறுமொழிதரும் ஆற்றலைத் தாவரங்கள் பெற்றிருக்கின்றன என்கிறார். இந்தப் பரிசோதனைகள் மூலம், நம்முடைய எண்ணங்களுக்கு வெளி உலகம், அதாவது பிரபஞ்ச இருப்புத் தன்மை மறுமொழி தருவது நிரூபணமாகிறது.
அதுமட்டும் இல்லை. மேலும் ஒரு நுணுக்கமான ஆராய்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். ஒரு கருவியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது நமது ECG உபகரதம்போல் இருக்கும். அதை வைத்து மரங்கள், தாவரங்கள், செடிகள் இவற்றில் ஏற்படும் அதிர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு தோட்டத்தில் இருக்கும் இருபது மரங்களுடன் அந்தக் கருவியை இணைத்து அதில் ஏற்படும் அதிர்வுகளைச் சோதித்தார்கள். பரிசோதனைக்காகவே, ஒரு குறிப்பிட்ட மரத்தை வெட்டும் நோக்கத்துடன் ஒரு மரம் வெட்டுபவரை தோட்டத்திற்கு உள்ளே வருமாறு செய்தார்கள்.
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தோட்டத்திற்கு உள்ளே வந்தவர் அந்தக் குறிப்பிட்ட மரத்திற்கு அருகில்க்கூட செல்லவில்லை.
> நாம் நிலையான,
> எல்லையற்ற
> விழிப்புணர்வுநிலையில்
> நிலைபெற்றிருக்கும்போது
> பிரபஞ்சமும்
> நம்முடைய
> எண்ணங்களுக்கு
> பதில் அளிக்கிறது.
நம்முடைய
எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
மறுமொழிதரும்
ஆற்றலை
தாவரங்கள்
பெற்றிருக்கின்றன
ஆனாலும் அவர் தோட்டத்திற்குள்ளே
நுழைந்தவுடனேயே, அந்த மரத்தின்
அதிர்வுகளைக் காட்டும் வரைபடம்
நிலையற்று ஊசலாடத் தொடங்கியது.
இங்கும் அங்கும குதிக்கத் தொடங்கியது.
அந்த மரத்திற்குத் திகில் பிடித்தது. அது
துக்கப்பட தொடங்கியது. அந்த மரம் அச்ச
த்தை உணர்ந்தது.
அடுத்த நாள், அந்த மரம் வெட்டுபவர் வேறு ஒரு மரத்தை வெட்டும் எண்ணத்து டன் தோட்டத்திற்குள் நுழைந்தார். அன்று அந்தக் குறிப்பிட்ட மரத்தின் வரைபடம் நிலையற்று குதிக்கத் தொடங்கிது. அதேபோல் ஒவ்வொரு முறையும் உதாரணத்திற்கு அவர் ‘அ’ என்னும் மரத்தை வெட்டும் நோக்கத்தில் வந்தால் அந்த ‘அ’ என்ற மரத்தின் வரைபடம் ஊசலாடியது. அவர் ‘ஆ’ என்னும் மரத்தை வெட்டும் எண்ண த்தில் வந்தால் அவர் எண்ணப்படி ‘ஆ’ என்ற மரத்தின் வரைபடம் ஆடத் தொடங்கியது. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழியளிக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தீவு இல்லை. நாம் தனிப்பட்டவர்களாக இல்லை. நாம் நம்முடைய உள்வெளியில் நமக்கு விருப்பமானபடி எப்படி வேண்டுமானாலும் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம்,
ஆனால் நம்முடைய வெளி வாழ்க்கை வேறுமாதிரி இருக்கும் என்று எண்ணாதீர்கள். நம்முடைய வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன.
நாம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆன்மீக நண்பர்களை வசீகரிக்கிறோம். நம்முடைய வெளி உலகமும் ஆன்மீகமாக மாறிவிடுகிறது. மற்ற உறவுகள் எல்லாம் தானாகவே விலகி விடுகின்றன. நாம் அவர்களுடன் உறவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட உணர்வதில்லை.


இவ்வுலகே மாறும்
நம் பார்வை மாறினால்...
பல பக்தர்கள் என்னிடம் சொல்வதுண்டு, "ஸ்வாமிஜி, இப்போதெல்லாம் என்னால் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லமுடிவதில்லை. அப்படியே நான் சென்றால்கூட அவர்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இல்லை. அவர்களிடம் எதைப் பற்றியும் என்னால் பேசமுடிவதில்லை."
விருந்து நிகழ்ச்சிகளில் எதைப் பற்றிப் பேசுகிறார்கள்?
பங்குச் சந்தை விபரங்கள், யார்யாரோடு ஓடிப் போனார்கள் போன்ற எதற்கும் பயனற்ற விஷயங்களையும், தகவல்களையும் பற்றித்தான் பேசுகிறார்கள்.
நம்முடைய வெளி வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன.
மேலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு மட்டுமே ஏதோ சில ரகசியங்கள் தெரியும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மைக் கூப்பிட்டு, "நான் சொல்வதை யாரிடமும் சொல்லாதே. இதை உனக்கு மட்டும் சொல்கிறேன். போனவாரம் என்ன நடந்தது தெரியுமா?" என்று ஆரம்பித்து விலாவாரியாக எதையோ பேசுவார்கள்.
"இது ஒரு ரகசியம். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. உனக்கு மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்," என்று சொல்லி, நம்மிடம் ஸத்யம் வேறு வாங்கிக்கொள்வார்கள் ஒரு பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு பார்த்தால், அந்தத் தெரு நாய்க்கூட அந்தத் தகவலைச் சொல்லியே குலைக்கும்!
அமெரிக்காவில், மக்கள் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனிப்படுத்தப்பட்டு, தங்கள் வேலையிலேயே மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், மற்றவர்களின் அந்தரங்கத் தகவல்கள் பற்றிய விவரங்கள் தெரிந்துவிட்டால் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. குறைந்தபட்சம், நூறுபேருக்காவது இந்தச் செய்தியைப் பரப்பாவிட்டால், அவர்களால் ஓய்வாக இருக்க முடியாது.
எப்படியோ ஆகட்டும், நன்கு புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது. அதற்கு நெட்வொர்க் எதுவும் தேவையில்லை.
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுக்கு, இந்த வகையான பேச்சுகள், யார் யாரோடு இருக்கிறார்கள், யார் யாரோடு ஓடிப்போனார்கள் என்கிற தகவல்கள் ஏற்புடையதாக இருப்பதில்லை.
அந்த மாதிரியான விஷயங்களுக்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவற்றில் ஈடுபாடும் இருப்பதில்லை. நம் எண்ணங்களின் அடிப்படத்திலேயே, நம் உறவுகள், நண்பர்கள், சமுதாயம், நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள் என்று, நம்முடைய மொத்த உலகுமே உருவாகிறது.
மீண்டும், மீண்டும் வேதாந்தம் சொல்கிறது: த்ரு 'ஷ்டி-ஸ்ரு 'ஷ்டி நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே உருவாக்குகிறோம். நம் பார்வையின் கோணத்திலேயே நம்முடைய உலகையும் சிருஷ்டிக்கிறோம். நம் த்ரு'ஷ்டியின் கோணங்கள் மாறும்போது நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாறுகிறது. நம்முடைய பார்வையை மாற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் மாற்ற முடியும். நாமே நம்முடைய உலகை உருவாக்கி, அதைப் பார்க்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது ஸத்யம்.
> நாம் ஆன்மீக வாழ்வு
> வாழ்ந்தோம் என்றால்
> தானாகவே நாம்
> ஆன்மீக நண்பர்களை
> வசீகரிக்கிறோம்.
> நம்முடைய
> வெளி உலகமும்
> ஆன்மீகமாக
> மாறிவிடுகிறது.
நம்முடைய திரைக் கருவியின் முன் எந்த வகை கண்ணாடிச் சில்லை வைக்கிறோமோ, எப்படிப்பட்ட படங்களை வைக்கிறோமோ, அவை திரையில் வெளிக்காட்டப்படுகிறது. நாம் கடவுளின் படத்தை வைத்தால் திரையில் கடவுளின் படம் தெரியும். ஒரு நடிகையின் படத்தை வைத்தால் அந்த நடிகை திரையில் தெரிவார்.
நாம் எந்தக் கண்ணாடிச் சில்லை பயன்படுத்துகிறோமோ, அது திரையில் தெரியவரும். அந்தத் திரையானது வெளிஉலகைக் குறிக்கிறது. நாம் நம் விழிப்புணர்வு என்னும் கண்ணாடியின் முன் எதையெல்லாம் வைக்கி றாமோ, அவையே வெளிஉலகில், நம்முடைய வாழ்க்கையில், நம் உலகில், நம்முடைய அனுபவத்தில் வெளிப்படுகிறது.

திரையில்
காட்டப்படும்
காட்சியானது
நாம் வைக்கும்
கண்ணாடி
வில்லையைப்
பொறுத்தது.
அதே போன்று
நம்முடைய மனத்தின் தன்மைதான்,
நாம் இந்த உலகை நம் புலன்கள்
மூலமாக எப்படி உணர்கிறோம்,
இந்த உலகை எந்த வழியில்
அனுபவிக்கிறோம்
என்பதை
முடிவுசெய்கிறது.
சின்னதாக வில்லையில் மாற்றம் செய்தால் திரையில் வரும் காட்சியும் மாறும். நம்முடைய மனத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், நம்முடைய முழு உலகையே மாற்றிவிடுகிறது. ஒரே திரைதான். இரண்டிற்கும் பின்னால் உள்ள திரையும் ஒன்றுதான். ஆனாலும் காட்சிகள் மாறி விடுகின்றன.
அதேபோல நம்முடைய உள் உலக எண்ணங்கள் மாறும்போது இந்த மொத்தப் பிரபஞ்சமும் மாறிவிடுகிறது. நம்முடைய உள்வெளிக்கு இந்த மொத்தப் பிரபஞ்சமும், இந்த மொத்த உலகமும் மறுமொழி தருகிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகள் என்று நினைக்காதீர்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பு தன்மையின் ஒரு பகுதி. நாம் இங்குத் தனியாக இல்லை. நாம் தனியாக இருப்பதாக நினைத்தோம் என்றால், நாம் தொடர்ந்து இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், இந்த முழு உலகத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருப்போம். இந்த உலகத்தை நாம் எதிரியாகப் பார்ப்போம். ஒரு முழுமையின் பகுதியாக இருக்கும் ஒன்று, அந்த முழுமையை எப்போதும் எதிரியாகப் பார்க்கவே கூடாது. பிரபஞ்சம், முழுமை; நாம் அதில் ஒரு பகுதி.
மீண்டும், மீண்டும்
வேதாந்தம் சொல்கிறது:
த்ரு 'ஷ்டி-ஸ்ரு 'ஷ்டி,
நாம் எதைப்
பார்க்கிறோமோ
அதையே
உருவாக்குகிறோம்.
முழுமையை
எதிரியாக
நாம்
பார்த்தோமானால்,
நம்மால்
அமைதியாக
இருக்க முடியாது.
இந்த முழுமைதான்
தம்முடைய இருப்பு நிலை என்பதையும்,
தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும்
புரிந்துகொள்ளும்
மனிதர் மட்டுமே
அதீதமான அமைதியையும் ஆனந்தத்தையும்
உணர்கிறார்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்களே வசீகரிக்கிறீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார்.
"என்னுடைய விழிப்புணர்வு நிலையில் நீங்கள் நிலைபெற்று இருந்தீர்கள் என்றால், உங்களிடம் எவையெல்லாம் குறைவாக இருக்கிறதோ அவற்றை நானே தருகிறேன். எவையெல்லாம் உங்களிடம் நிறைவாக இருக்கிறதோ அவற்றை நானே பாதுகாக்குகிறேன்."
முழுமைதான் தம்முடைய இருப்புநிலை என்பதையும், தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும் புரிந்துகொள்ளும் மனிதர் மட்டுமே அதீதமான அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்கிறார்.
நீங்கள் நினைக்கக்கூடும், "சரி ஸ்வாமிஜி, பிரபஞ்சம் நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழி தருகிறது என்று நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் எங்களுக்கு விருப்பமானவற்றை நாங்கள் எப்படிப் பெறுவது?"
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நம்முடைய எண்ணங்களை நாம் மாற்றிக்கொண்ட மறு கணமே, நம்முடைய உள் வெளியானது மாறிய மறுகணமே, தானாகவே நாம் நல்ல விஷயங்களை, நம்மிடம் வசீகரிக்கத் தொடங்குகிறோம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நம்முடைய தொலைக்காட்சியைத் தூர்தர்ஷன் அலைவரிசைக்கு இசைவு செய்தவுடனே நாம் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைத்தான் பார்க்கிறோம். அதேபோல் ஸ்போர்ட்ஸ் அலைவரிசைக்குத் திருகினால் நாம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அதேபோல News அலைவரிசைக்கு இசைவு செய்தால், செய்திகள் அலைவரிசையைப் பார்க்கிறாம். அதேபோல் நம்முடைய உணர்வுகளை ஆனந்தத்தை நோக்கித் திருப்பும்போது, தொடர்ந்து இடைவிடாமல் ஆனந்தம் பொங்கத் தொடங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல் உலகியல் செல்வமும்கூட நம்மேல் பொழியத் தொடங்குகிறது.
ஆண்டுகள் 1000 சென்றாலும் இன்றுவரை வாக்கைக் கடைப்பிடிக்கிறார்
உடனே நீங்கள், 'இது எப்படி நடக்க முடியும்? இது எப்படிச் சாத்தியப்படும்? ஸ்வாமிஜி என்ன சொல்கிறார்?' என்று நினைக்கலாம். ஆனால் நான் சொல்கிறேன். இப்போது வேண்டுமானால் பார்ப்பதற்கு கஷ்டம்போல் தெரியும். புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருப்பதுபோல் நாம் உணரலாம். ஆனால் இதை வேண்டுமானால் பரிசோதித்துப் பாருங்கள். நேர்மையாக நான் சொல்கிறேன், என்னுடைய சொந்த பொறுப்பில் நான் இதை அறிவிக்கிறேன், இந்த வரிகள் திடமான ஸத்யம்.
நான் இதை அதிகாரப்பூர்வமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நான் இந்த ஸத்யத்தை அனுபவப்பூர்வமாக ஒன்பது வருடங்கள் உணர்ந்திருக்கிறேன். நான் சொல்கிறேன், இது தெய்வத்தின் வாக்கு. ஒன்பது வருடங்கள் நான் முழுமையாகப் பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கிருஷ்ணர்ன்றும் தம் வார்த்தைகளை நிரூபணம் செய்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உத்தரவாதமானவை. யோகக்ஷேமம் வஹாம்யஹம், அவர் அதைச் செய்கிறார்!
நம்முடைய
உணர்வுகளை
ஆனந்தத்தை நோக்கி
திரும்பும்போது,
நமக்குள் தொடர்ந்து
இடைவிடாமல்
ஆனந்தம் பொங்கத்
தொடங்குகிறது.
பல பக்தர்களின் வாழ்க்கையிலிருந்து ஆயிரக்கணக்கான சம்பவங்களை என்னால் குறிப்பிட முடியும்! பக்தர்களான துக்காராம், துளசிதாஸ் மேலும் பல குருமார்களின் வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை, இந்த வார்த்தைகளை உறுதி செய்யும் பல சம்பவங்களை என்னால் மேற்கோள் காட்ட முடியும்.
என்னுடைய வாழ்க்கையிலிருந்தே எண்ணிலடங்காத நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியும். நான் சந்தித்த மக்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஞானமடைதல் நிகழ்வதற்கு முன்பு, ஆன்மீகப் பாதையில் பரிவ்ராஜகமாக அலைந்து திரிந்துகொண்டிருந்த நாட்களில் நடந்த ஒரு சிறிய நிகழ்ச்சி இது.
நான் ஹரித்வாரில், கன்கல் என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். அப்போது நான் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில், துறவிகளுக்கு உணவளிக்கும் இடங்களுக்குப் பிக்ஷைக்காகச் செல்வேன். பல ஆச்'ரமங்களில் துறவிகளுக்குப் பிக்ஷை அளிப்பார்கள். நான் என்னுடைய உணவைப் பெற்றுக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்த பின்னர் த்யானம் செய்யத் தொடங்கி விடுவேன்.
திடீரென ஒருநாள் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மிக அதிகமான காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதால், என்னால் நடக்க முடியவில்லை. நடக்கக்கூட முடியாமல் போனது. “நம்மால் என்ன செய்ய முடியும்? பரவாயில்லை, அது அப்படியே இருக்கட்டும்,” என்று நினைத்து, ஒன்றும் செய்யாமல் நான் அமைதியாக இருந்துவிட்டேன்.
திடீரென்று, ஒரு இளம் துறவி, எங்கிருந்தோ வந்து எனக்கு உணவு கொண்டுவந்து தந்தார். ஒருநாளைக்கு மட்டும் கொண்டு வந்து தரவில்லை. தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தார். உணவோடுகூட மருந்துகளும் கொடுத்தார்.
நான் அவரிடம், “ஐயா நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “என் பெயர் சங்கர். மற்றவர்கள் என்னை சங்கர் மஹாராஜ் என்று அழைப்பார்கள். நான் சாதனாசதன் என்ற ஆச்ரமத்தில் தங்கி இருக்கிறேன் அந்த ஆச்ரமம் அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி, அவர் அங்கிருந்து தூரத்தில் உள்ள ஒரு இடத்தைக் காண்பித்து, தாம் அங்குதான் தங்கியுள்ளதாகச் சொன்னார்.
கிருஷ்ணர் என்றும்
தம் வார்த்தைகளை
நிரூபணம் செய்கிறார்.
எனக்குக் குணமாகும்வரை தினமும் மருந்தும், உணவும் கொண்டுவந்து கொடுத்தார். அவர் குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்காவது வந்திருப்பார். நான் அவருடன் பேசுவேன். அவரும் தினமும் வந்ததால், நாங்கள் இருவரும் நன்கு அறிமுகமானோம்.
வைரம் பதித்த மிகவும் அழகான பேனா ஒன்றை அவர் சட்டையில் அணிந்திருந்ததை நான் பார்த்தேன். அது மிகவும் அழகான பேனா. ஒரு துறவிக்கு எப்படி வைரம் பதித்த பேனா கிடைக்க முடியும் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம், “ஸ்வாமிஜி இது என்ன?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இது ஒரு வைரம் பதித்த பேனா. ஒரு பக்தர் எனக்கு இதைக் கொடுத்தார். இது மிகவும் அழகாக இருந்தது. அதனால் இதனை அணிந்திருக்கிறேன். ஆனால் எனக்கு இதெல்லாம் பெரிய பொருட்டு இல்லை,” என்று சொன்னார்.
சில நாட்களுக்குப்பின் நான் இயல்பு
நிலைக்குத் திரும்பினேன். அவர் எனக்கு
உணவும் மருந்தும்ெகாண்டு வருவதை
நிறுத்திவிட்டார். நான் நன்றாக ஆனவுடன்
'இப்போது நம்மால் நன்றாக நடக்க
முடிகிறது. இடம் விட்டு இடம் செல்ல
முடிகிறது. அதனால் நாம் அவரைப் பார்க்கச்
செல்ல வேண்டும்' என்று நினைத்தேன்.
உங்களுக்கு
எது விருப்பமோ,
அதை நீங்கள்
பெற முடியும்.
அவர் எனக்குச் சேவை செய்ததால் அவருடன் இணைந்த உணர்வு எனக்குத் தோன்றியது. நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். முழுவதும் குணமானபின்னர், நான் அவரைப் பார்க்க அவர் குறிப்பிட்ட ஆச்'ரமத்திற்குச் சென்றேன்.
நான் அந்த ஆச்'ரமத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்த பெரியவரிடம், "ஸ்வாமிஜி, நான் சங்கர் மஹாராஜைப் பார்க்க வேண்டும்," என்று கேட்டேன். அதற்கு அந்த ஸ்வாமிஜி "சங்கரா! யாரைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள்?" என்று மீண்டும் என்னிடமே கேள்வி கேட்டார்.
அதற்கு நான், சங்கர் என்பவரை "நான் பார்க்க வேண்டும். அவர் ஒரு இளம் துறவி. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் நான் அவரைச் சந்தித்தேன். அவர் தினமும் வந்து என்னைப் பார்த்தார். எனக்கு உணவும் கொடுத்தார். இது சாதனாசதன்தானே?" என்று கேட்டேன்.
உடனே அந்த ஸ்வாமிஜி, "ஆமாம். இது சாதனா சதன்தான். எங்களது ஆச்'ரமத்தில் ஒரே ஒரு சங்கர்மஹாராஜ்தான் இருக்கிறார். கோயிலுக்குள் சென்றுபாருங்கள். அவர்தான் எங்களது ஒரே ஒரு சங்கர் மஹாராஜ்," என்று சொல்லிவிட்டு, அவர்களின் கோவிலை நோக்கிக் கையைக் காட்டினார்.
இப்போது நான் உங்களிடம் சொல்வது ஸத்யம். நான் கோயிலுக்குள் நுழைந்தவுடன், அங்கு ஒரு சிவனின் சிலை இருந்தது. அந்தச் சிலையானது, சலவைக் கல்லில் செய்யப்பட்டு, மேலே உடைகள் அணியப்பட்டு இருந்தது. அந்த உடையின் மேல் வைரம் பதித்த அந்த பேனா அணிவிக்கப்பட்டிருந்தது!
என் கண்களில் கண்ணீர் வழிந்தது. எனக்குள்ளே நன்றி உணர்வு பொங்கி வழிந்தது. பிறகு அந்தக் கோயில் பண்டிதரிடம், "இந்தப் பேனா சிவனிடம் எப்படி வந்தது? யார் அந்தப் பேனாவை சிவன் மேல் அணிவித்தார்கள்?" என்று விசாரித்தேன்.
அதற்கு அவர், "ஒரு வாரத்திற்கு முன்பு, பக்தர் ஒருவர் இந்தப் பேனாவைச் எனக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அது வைரம் பதிக்கப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் சிவனை வைரத்தால் அலங்கரிக்க விரும்பினோம். அதனால் அந்தப் பேனாவை அணிவித்தோம்," என்று சொன்னார்.
அதே பேனா நான் பார்த்த அதே வைரம் பதித்த பேனா!
வேறு ஏதாவது நகையாக இருந்தால் சரி, ஒரே மாதிரி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வைரம் பதித்த ஒரு பேனா?!
நான் கேட்டேன் "யார் பேனாவைச் சிவனுக்குத் தந்தது?"
அவர் பதில் சொன்னார். "எனக்குத் தெரியாது. ஒரு பக்தர் எனக்குப் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். நான் அவரிடம், 'ஒரு ஸந்யாஸிக்கு வைரப் பேனா தேவையில்லையென்பதால், நான் அதைக் கடவுளுக்கு அணிவித்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு அந்தப் பேனாவை சி வனின் துணியின்மேல் சொருகி வைத்தேன்," என்று சொன்னவர் மேலும் தொடர்ந்தார், "கடந்த சில நாட்களாக அவருக்குப் படைக்கப்பட்ட எல்லா உணவும் பிரசாதமும் காணாமல் போய்விட்டன. எலிகள் வந்து அந்த உணவை உண்டு விடுகின்றன என்று நினைக்கி றேன். அதனால் நான் இப்போது கவனமாக இருக்கிறேன். உணவை வைத்தபின் சிறிதுநேரம் சங்கர் மஹாராஜின் முன் நான் உட்கார்ந்திருக்கிறேன்," என்று சொல்லிமுடித்தார்.
சங்கர் மஹாராஜின் உணவைச் சாப்பிட்ட அந்த
எலி நான்தான் என்று சொல்வதற்கு எனக்கு
விருப்பமில்லாததால் நான் சொல்லவில்லை!

நம்மால்
கனவு நிலையிலேயே
உலகத்தை உருவாக்க
முடியும்போது,
விழிப்பு நிலையில்
உருவாக்க முடியாதா?
நம்மால் முடியும்.

இது போன்ற அதிசயங்கள் உங்கள் வாழ்விலும் நிகழ்கிறது

2006ல் இமயமலை பயணத்தின் போது, நான் என்னுடைய பக்தர்களுடன் சேர்ந்து இந்த ஆச்ரமத்தையும் சங்கர் மஹராஜ் கோவிலையும் தேடினேன். பல வருடங்கள் சென்ற பின்பும் அந்தக் கோயில் முன்பு போலவே இருந்தது. சங்கர் மஹராஜும் முன்பு போலவே இருந்தார். ஆனால் வைரப் பேனா இப்போது இல்லை!
இந்த ஒரு சம்பவத்தை வைத்து, முழு விஷயத்தையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் வாழ்க்கையில் இதனை நீங்களே சோதித்துப் பார்க்கலாம். நீங்கள், "இது உங்கள் அனுபவம். இது எங்களுக்கு எப்படி ஸத்யமாக இருக்க முடியும் ஸ்வாமிஜி?" என்று கேட்கலாம்; சாதாரண மனம் சந்தேகப்படத்தான் செய்யும்.
நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் விழிப்புணர்விற்கு, உங்கள் உள்வெளிக்கு உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க முடியும். உங்களுக்கு எது விருப்பமோ, அதை நீங்கள் பெற முடியும். தொடர்ந்து அற்புதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
உங்கள் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை சில உதாரணங்களுடன் உங்களுக்குச் சொல்கிறேன். சில சமயம் தொலைபேசி மணி அடிக்கும்போது, திடீரென யாராவது ஒரு நண்பர் நினைவுக்கு வருவார். போனை எடுத்து பேசும்போது அதே நண்பர் எதிர்ப்பக்கத்தில் இருப்பார்.
நித்யானந்த நிலையில்
நிலைபெறும்போது
நாம் தன்னிச்சையாகவே,
அதனோடு ஒன்றுபடும்
இசைவான
நிகழ்வுகளையே
வசீகரிக்கிறோம்.
சில சமயம் கதவு தட்டும் ஓசை கேட்கும்போது, குறிப்பிட்ட நபர் நினைவுக்கு வருவார். கதவைத் திறந்து பார்த்தால் அதே நபர் அங்கு நிற்பார். அதைத்தான் நான் தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளின் சக்தி என்கிறேன். இவையெல்லாம் தானாகவே அதன் வழியில் நிகழும் அதிசயங்கள். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த இசைவான ஒன்றுபடும் ஆற்றல் உள்ளது; அதிசயத்தை உருவாக்கும் ஆற்றல் உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அற்புதங்களை உருவாக்கும் ஆற்றல் உள்ளது. நாம் செய்யவேண்டியது எல்லாம் அதனைத் திறக்க வேண்டும். புரிந்துகொள்ளுங்கள், நம்மிடம் ஒத்திசைவான நிகழ்வுகளை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது.
உங்களது விழிப்புணர்வு எப்போதுமே பிரபஞ்சத்துடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறது என்பதை நம்புங்கள். பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்வீகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அது உங்களது எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது.
உங்கள்
விழிப்புணர்விற்கு,
உங்கள் உள்வெளிக்கு
உங்கள் வாழ்க்கையில்
அற்புதங்களை
உருவாக்கும்
ஆற்றல் உண்டு.
நாம் எதை விரும்புகிறோமோ அதனையே
நாம் உருவாக்குகிறோம். நம்முடைய
கனவுகளின் மூலம் இந்த முழு உலகத்தையும்
உருவாக்குவதைப் போலவே, நாம்
விழிப்புணர்வோடு இருக்கும்போது,
நம்முடைய விழிப்பு நிலையில், நம்
விருப்பப்படி இந்த உலகத்தை உருவாக்கும்
ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. நம்மால்
கனவு நிலையிலேயே உலகத்தை உருவாக்க
முடியும்போது, விழிப்பு நிலையில்
உருவாக்க முடியாதா? நம்மால் முடியும்.
இப்பொழுதுகூட நம்முடைய உலகத்தை
நாமேதான் உருவாக்குகிறோம்.

ஆர்வம் இல்லாமல் துக்கப்படவும் மாட்டோம்
அடுத்த கேள்வி நம்முள் எழுகிறது, "ஸ்வாமிஜி, நம்முடைய உலகத்தை நாமே உருவாக்குகிறோம் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களை நாம் உருவாக்கிக்கொள்கிறோம்?"
இதற்கான விடை மிகவும் எளியது. நமக்கே நம்முடைய துயரங்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய துயரங்கள் மேல் நமக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது. நாம் துக்கத்தில் இருக்கும்போது எங்கேயோ ஒரு இடத்தில் அது நமக்கு சௌகரியமாக இருக்கிறது. அதனால்தான் நாம் இந்த முழுச்செயலையும் உருவாக்குகிறோம்.
நம்முடைய உள் விழிப்புணர்வு மாறும்போது, நாம் நிலையான, பேரானந்தமான, நித்யானந்த நிலையில் நிலைபெறும்போது நாம் தன்னிச்சையாகவே, அதனோடு ஒன்றுபடும் இசைவான நிகழ்வுகளையே வசீகரிக்கிறோம். நாம் அதே போன்ற ஆனந்த நிகழ்வுகளையே நம்மிடம் ஈர்க்கிறோம்.
இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்திதான் ஊடுருவி பரந்து இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்ட மறுகணமே, விஷ்ணுவின் மனைவியான லஷ்மியை, செல்வத்தின் கடவுளை நம்மிடம் வசீகரிக்கிறோம். இந்தப் பிரபஞ்சமே தெய்வீக தன்மைகொண்டதுதான் என்பதைப் புரிந்துகொள்ளும் போதும், விஷ்ணுவை அனுபவப்பூர்வமாக உணரும்போதும், நிலையான ஆனந்தம் என்பதன் பொருளை அனுபவப்பூர்வமாக அனுபவிக்கும் போதும், நாம் லக்ஷ்மியை, செல்வத்தை நம்மிடம் ஈர்க்கிறோம்.
பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்வீகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
உள் உலகைப் பொறுப்பெடுத்தால், வெளி உலகம் செல்வங்களைப் பொழியும்
தந்த்ர சாஸ்த்ரத்தில் மிகவும் அழகான மந்திரங்கள் இருக்கின்றன. ஆனந்த காமப்ராந: இதன் அர்த்தம் என்னவென்றால், ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பதே ஆகும். நம் உள்ளே மிகவும் ஆனந்தமயமான உள்வெளியை நாம் உருவாக்கினோமானால், தானாகவே வெளி உலகச் செல்வங்களை நாம் ஈர்க்கத் தொடங்குகிறோம்.
சொல்லுங்கள், செல்வங்களை எவை உருவாக்குகின்றன? அதற்காக நமக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன. தெளிவான எண்ண ஓட்டம், படைக்கும் செயல்திறன், இயல்பாகவே உடனுக்குடன் சரியாக முடிவெடுக்கும் திறன். உடனுக்கு உடன் இயல்பாக முடிவெடுக்கும் ஆற்றலே 'பொறுப்பெடுத்தல்' எனப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன்தான் பொறுப்பெடுத்தல் ஆகும். எந்தச் சூழ்நிலையிலும் தன்னிச்சையாகப் பதில்செயல் செய்யும் திறன் நம்மிடம் இருக்கிறதென்றால், நாமே அந்தப் பொறுப்பை எடுத்து கொள்கிறோம். தெளிவான சிந்தனை, படைப்பாற்றல், பொறுப்பெடுக்கும் திறன் இவை மூன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. இந்த மூன்றும்தான் செல்வத்தை உருவாக்கி, அதைப் பாதுகாக்கின்றன.
நாம் ஆனந்த வெளிக்குள் நுழையும்போதும், நம்முடைய உள்வெளியை ஆனந்தமாக வைத்திருக்கும் போதும், நாம் ஆனந்த விழிப்புணர்விற்குள் நுழையும்போதும், இந்த மூன்றும் தானாகவே நிகழ்கின்றன. அதற்குப் பிறகு நம்மைச் சுற்றியும் செல்வங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்குப் பிறகு அவை நம்மிடமே தங்கி விடுகின்றன.
லாட்டரிச் சீட்டுமட்டுமே நம்மேல் செல்வத்தைப் பொழியும் என்று இல்லை. ஆனந்தமான உள்ளுகை உருவாக்குவதன் மூலமே, செல்வத்தை நம் பக்கம் எளிமையாக ஈர்த்துவிட முடியும். அது மட்டுமல்ல, அந்தச் செல்வம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், லாட்டரிச்சீட்டு மூலம் செல்வம் சம்பாதித்தவர்கள் எல்லாம் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றிக்கொள்வதில்லை. லாட்டரிப் பணத்தைத் தக்கவைத்துக்கொண்ட ஒரு நபரைக்கூட நான் பார்த்ததில்லை. அதன் அருமை புரியாமல் அவர்கள் அந்தச் செல்வங்களை ஊதி அழித்து விடுகிறார்கள்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், செல்வம் லாட்டரி அடித்துத்தான் கிடைக்கவேண்டும் என்று இல்லை. செல்வம் புத்திசாலித்தனத்தினால் கிடைக்கிறது. அது நம்முடைய புத்திசாலித்தனத்தால் கிடைக்கும்போதுதான், அது நம்ளுடனேயே தங்கவும் செய்கிறது. நாம் நம்முடைய உள் உலகைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது தானாகவே வெளி உலகம் நம்மேல் செல்வங்களைப் பொழிகிறது. நாம் இந்தப் பூமிக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறுகிறோம். இந்தப் பூமியும் நம்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது. நம்முடைய உள் உலக ஆனந்தத்திற்கு, இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை மறுமொழி தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறது. பிரபஞ்சம் உயிரோட்டமாய் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காதீர்கள். அது உயிரோட்டமான புத்திசாலித்தனம்.
பலர் என்னிடம், “ஸ்வாமிஜி, நான் ஒரு குருவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் குருதான் இன்னும் கிடைக்கவில்லை,” என்று சொல்வதுண்டு.
நான் அவர்களுக்குச் சொல்வேன், “தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக குருவைத் தேடுவீர்களானால், கடவுளே உங்களுக்காக ஒரு குருவை அனுப்புவார். கடவுள் ஒருபோதும் தம்முடைய பொறுப்பிலிருந்து நழுவுவதில்லை. உங்களுக்குச் சரியான குரு கிடைக்கவில்லை என்றால், சரியாக வழிகாட்டுபவர் இல்லை என்றால், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் தேடுதலில்தான் ஏதோ கடுமையான தவறு இருக்கிறது என்பதே அதன் பொருள்.”
உங்கள் தேடுதல் சரியாக இருந்தால், உங்களின் வாழ்க்கையில் குருவின் வருகை நேரடியாகவே நிகழ்ந்திருக்கும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தடையில்லாத மின்சாரம் தரும் UPS ஐ-விடவும், ஒரே இரவில் வந்துசேரும் கூரியர் சேவையையவிடவும் தன்வசம் அதிவேகமான அமைப்பை அவர் கொண்டுள்ளார். ஒரே நொடியில் அவரால் உங்களிடம் வர முடியும். குரு எப்போதும் தாமதிக்கமாட்டார். தெய்வீகம் ஒருபோதும் தாமதிக்காது. கிருஷ்ணர் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் உள்வெளியை நீங்கள் மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. முதலில் இந்த ரகசியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது ஒரு ஸத்யம், அடிப்படையான ரகசியம்.
நாம் ஆன்மீக வாழ்வில் நுழைந்துவிட்டோமானால், நாம் ஆன்மீக வாழ்க்கையைத்தான் வாழவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோமானால், இந்த வெளி உலக விஷயங்களைப் பற்றிய பொறுப்பை தெய்வீகம் எடுத்துக்கொள்கிறது.
நமக்கு தேவையானவற்றைக் கொடுப்பதற்கும் நம்மிடம் இருப்பதைப் பாதுகாப்பதற்குமுமான பொறுப்பைத் தெய்வீகமே எடுத்துக்கொள்கிறது. இதனை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொண்டு, ''ஸ்வாமிஜி இன்றிலிருந்து நான் வேலை செய்வதை நிறுத்தி விடுகிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்குமா?'' என்று கேட்கலாம்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் ஆன்மீக மனநிலைக்கு மாறிவிட்டால், நாம் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டால் நாம் த்யான நிலை வாழ்க்கையை நடத்துவதால், நாம் வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு ஒருபோதும் வந்துவிடாதீர்கள். நாம் ஏன் வேலைகளை விடுவதைப் பற்றி நினைக்கவேண்டும்?
உங்கள் தேடுதல்
சரியாக இருந்தால்,
உங்களின்
வாழ்க்கையில்
குருவின் வருகை
நேரடியாகவே
நிகழும்.
நாம் வேலை செய்வதைப் பற்றிய
கவலையைத்தான் விடவேண்டும்.
அப்போது நாம் மேலும் சிறந்த முறையில்
செயல்படுவோம். நமக்குள் அபரிமிதமான
நம்பிக்கை நிறையும். "இந்த முழுப்
பிரபஞ்ச இருப்புத் தன்மையும் என்னைப்
பாதுகாக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத்
தன்மை என்னுடைய நண்பன். நான் இந்த
முழுமையின் எதிரி இல்லை. நான் இந்த
முழுமையின் நண்பன்," என்று ஆழ்ந்த
நம்பிக்கையுடன் இருப்போம்.
பிரபஞ்சம் தோழனானால், மரணமும் நம் தோழனாகும்
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் நண்பன் என்பதை புரிந்துகொண்டு விட்டோமானால், நாம் மரணத்திற்கு அஞ்சமாட்டோம். ஏனென்றால் நம்முடைய மரணத்திற்கு பின்புகூட நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் இருப்போம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதனால் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பதை நன்றாகப் புரிந்துகொள்கிறோம்.
சாக்ரடீஸின் சீடரான பிளேட்டோ என்பவர்
சாக்ரடீஸ் பேசிய உரையாடலைப்
பதிவு செய்து வைத்திருக்கிறார்.
நீங்கள் எல்லோருமே சாக்ரடீஸிக்கும்
பிளேட்டோவிற்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை அவசியம் படிக்கவேண்டும்.
அவர்கள் சாக்ரடீஸிடம் "நீங்கள் மரணத்தைப்
பற்றி அச்சப்படவில்லை?

நாம் ஞானமடைந்தால்கூட, நாம் தூய
விழிப்புணர்வு சஃக்தியாக மாறி விடுகி
றோம். நாம் அப்போது எல்லா இடத்திலும்
இருக்கிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மை
என்பது ஒரு பேரறிவு என்பதை நாம்
புரிந்துகொண்டால், நாம் என்றுமே
மரணமடைவதில்லை.
கேள்வி: ஸ்வாமிஜி, பல்வேறுவிதமான சடங்குகள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன? மக்கள் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக? சடங்குகளுக்கும் ஆன்மீகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். சடங்குகள் செய்யும் மக்கள் அனைவரும் ஆன்மீகத்தைப் பின்பற்றவில்லை என்று நினைக்காதீர்கள். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வேத நூல்களைப் படிப்பவர்கள். சடங்குகள் செய்பவர்கள், இவர்களும் ஆன்மீகப் பாதையில்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவு அவசியமாகிறது. தாங்கள் நிகழ்த்தும் குறிப்பிட்ட சடங்கைப் பற்றியும் அதை எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆதிகாலம் தொட்டே, குருமார்கள் தங்களுக்கு உள்ளே இருக்கும் தெய்வீகத்துடன் உள்ள தொடர்பை உணர, பல த்யான நுட்பங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் காலப்போக்கில், இந்த த்யான நுட்பங்களின் ஆழ்ந்த அர்த்தம் காணாமல் போய்விட்டது.
த்யானமுறைகளுக்கும் உடல் அசைவுகளுக்கும் பின்னால் இருக்கும் ஆழ்ந்த தத்துவத்தை அதனுடைய கருத்தைத் தெளிவான முறையில் மக்களுக்கு விளக்காமல், அதை வெறுமனே ஒரு த்யான முறையாகவும் உடல் அசைவாகவும் மட்டும் கொடுத்திருப்பதால் அந்த த்யான நுட்பங்கள் யாவும் சடங்குகளாக மாறிப்போயின. ஒரு சடங்கானது முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, விழிப்புணர்வுடன் நிகழ்த்தப்பட்டால், அதுவே ஒரு த்யான நுட்பமாக மாறிவிடும்.
> நாம்
> வேலை செய்வதைப்
> பற்றிய
> கவலையைத்தான்
> விடவேண்டும்.
> அப்போது நாம்
> மேலும் சிறந்த முறையில்
> செயல்படுவோம்.
த்யான நுட்பங்களும், சடங்குகளும், முழுமையாகப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் நிகழ்த்தப்படும்போது அவை இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. இந்த இரண்டுவகை செயல்முறைகளுமே, உங்களை அந்த இறுதி சக்தியுடன் இணைத்துவிடக்கூடிய சக்தி படைத்தவைதான்.
நாம் பஞ்சபூதங்களால் உருவாகியிருக்கிறோம். ஆகாசம், காற்று, அக்னி, நீர், மண் என்பவை அந்தப் பஞ்சபூதங்கள். முனிவர்கள் இந்த ஐந்து பூதங்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொள்வதற்காக, வெவ்வேறு விதமான த்யான நுட்பங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
நாம் முழு விழிப்புணர்வுடன், ஒரு விக்ரஹத்திடம் பிரார்த்தனை செய்யும்போது, நாம் நில சக்தியோடு ஒன்றுபடுகிறோம். திட உருவில் நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நில சக்தியைச் சார்ந்தது. நாம் விக்ரஹ வழிபாட்டின் மூலம் நில சக்தியுடன் ஒன்றுபடுகிறோம்.
நாம் பல புனிதமான நதிகளில், நீராடும்போது நாம் நீர் சக்தியுடன் இணைப்பை உருவாக்கிக்கொள்கிறோம். நாம் அக்னிமூலம் சடங்குகள் செய்யும்போது நெருப்பு சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
நாம் புனிதமான மந்த்ர உச்சாடனங்கள் செய்யும்போது, நாம் காற்று பூதத்துடன் இணைகிறோம். நாம் த்யானம் செய்யும்போது ஆகாச சக்தியுடன் ஒன்றுபடுகிறோம்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது? இவை எல்லாம் வெறும் சடங்குகளாய் மாறிப்போயின. இவை எல்லாம், ஆத்மாவைப் பிரபஞ்சத் இருப்புத் தன்மையுடன் இணைக்கும் த்யான நுட்பங்கள். ஆனால் அவை யாவும் இப்போது குருட்டுத்தனமாய் செய்யப்படுகின்றன. பகுத்தறிவுகொண்ட மனங்கள், இவற்றைச் சமயசார்புடையதாய்ப் பார்க்கின்றன. மக்கள் அவற்றை மூடநம்பிக்கைகள் என்கிறார்கள்.
"நீங்கள் ஏன் விக்ரஹங்களை வழிபடுகிறீர்கள். நீங்கள் ஏன் பலவகையான அக்னிசடங்குகளைச் செய்கிறீர்கள்?" என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நமக்கு இந்த த்யான நுட்பங்களைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாததால்தான், நாம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறோம். அதனால்தான், நாம் அவற்றைச் சடங்குகள் என்கிறோம்.