KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கைSign in
பகவத் கீதை விளக்கவுரை

வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna playing flute

9. 25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். பேய், பூதம் இவற்றைத் தொழுபவர்கள் அத்தகையவர்களை அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை அடைகிறார்கள்.

என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.

9. 26 ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது நீரை அன்புடனும் பக்தியுடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (திருப்தியுடன்) ஏற்று புசிக்கிறேன்.

9. 27 குந்தி மகனே! நீ எதைச் செய்கிறாயோ, எதைப் புசிக்கிறாயோ,

எதைப் படைக்கிறாயோ எதைத் தானம் செய்கிறாயோ எந்தத்
தவம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய்!

9. 28 பலன்களைத் துறப்பதின் மூலம் நல்லது, தீயது என்ற பலன் தரும் கருமங்களின் தளைகளிலிருந்து விடுபடுகிறாய்.

நீ விடுதலை பெற்று என்னையே வந்தடைவாய்.

தினம் தினம் ஒரு புது உடல்

நாம் இந்த வரிகளை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். கிருஷ்ணர், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார். அவர், நாம் அடுத்து எடுக்கப்போகும் பிறப்பைப் பற்றியும் சொல்கிறார். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை, முந்தைய பிறவியில் வாழ்ந்ததின் விளைவு.

நாம் இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும்கொள்ளாவிட்டாலும் இது ஸத்யம். நாம் ஞானமடையாமல் இருக்கும்வரை மரணத்திற்குப் பிறகும் நமக்கு வாழ்க்கை இருக்கிறது. நாம் ஞானமடையும்போதுதான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் கலக்கிறோம். அதுவரை நாம் பிறவிகளை எடுத்து பிறப்பு இறப்பு சூழலில் உழல்வோம்.

கிருஷ்ணர் இங்கு, நாம் இப்போது வாழும் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் மரணமடையும்போது கடைசியாக எந்த எண்ணம் நமக்குள் வருகிறதோ, அதுதான் நம்முடைய மறுபிறவியை, மறுவாழ்க்கையை முடிவு செய்கிறது.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய மறுபிறவியானது, நாம் மரணமடையும்போது நமக்குள் வரும் கடைசி எண்ணத்தையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. நாம் இறக்கும்போது பணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு பணக்காரராய்ப் பிறக்கிறோம். இல்லையென்றால் பணத்தைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் அதிருப்தியான மனநிலைகொண்ட ஒருவராகப் பிறக்கிறோம்.

நாம் உணவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு பெருந்தீனிக்காரராகவோ அல்லது பன்றியாகவோ மறுபிறவி எடுக்கிறோம். நாம் சோம்பேறியாக ஓய்வெடுப்பதைப் பற்றி நினைத்தால் நாம் ஒரு எருமையாக மறுபிறவி எடுக்கிறோம். இது சத்யம். முற்பிறவியில் நினைக்கும் நம்முடைய கடைசி எண்ணமானது, நம்முடைய மறுபிறவியின் முதல் எண்ணத்தை முடிவு செய்கிறது. உண்மையில் இதைப் புரிந்துகொள்ள மரணம்வரை காத்திருக்க வேண்டாம். நாம் இதனை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்கலாம். நம்முடைய கடைசி எண்ணம், நம்முடைய முதல் எண்ண த்தைப் பாதிக்கிறது.

ஒவ்வொரு இரவும் நாம் இறக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் மீண்டும் பிறக்கிறோம். பகல் நேரத்தில், நம்முடைய நனவு நிலையில், இந்த ஸ்தூலசரீரத்தின் மூலம் நம்முடைய செயல்களைச் செய்கிறோம். நாம் தூங்கும் போது, நம்முடைய ஸூக்ஷ்ம சரீரத்தைக்கொண்டு, நம் கனவில் வரும் பல இடங்களுக்குப் பயணம் செய்கிறோம். நாம் ஆழ்ந்த உறக்கத்தில், கனவுகள் வராத தூக்கத்தில், நம்முடைய காரண சரீரத்தில் இருக்கிறோம்.

நாம் இரவில் உறங்கும்போது, உண்மையில் நாம் நம்முடைய உடல்களை மாற்றுகிறோம். இது நிகழ்வதை நாம் உணர்வதில்லை. நாம் கனவு காணும்போது, கனவில் நாம் வெவ்வேறு செயல்களைச் செய்து கொண்டிருப்பதை நாமே பார்க்கிறோம். நாம் ஓடுகிறோம், பேசுகிறோம், சாப்பிடுகிறோம், கனவில் பல விஷயங்கள் செய்கிறோம்.

கனவில் நாம் ஒரு உலகத்தையே சிருஷ்டி செய்து அதில் வாழ்கிறோம். நம்முடைய உடல் படுக்கையில் இருக்கும்போது, இந்தக் கனவில் இருக்கும் இந்த உடல் யாருடையது? நம் ஸ்தூல உடல் படுக்கையில் இருக்கிறபோது, நம்முடைய ஸூக்ஷ்ம சரீரம் கனவில் செயல்படுகிறது. அதேபோல நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தில், நம் காரண சரீரம் செயல்படுகிறது.

தினமும் நாம் தூங்கும்போது, உண்மையில் நாம் இறக்கிறோம் ; பிறகு காலையில் மீண்டும் இந்த உடலில் புதியதாய்ப் பிறக்கிறோம். நாம் தூங்கும்போது நமக்குள் ஓடும் கடைசி எண்ணம், நம்முடைய விழிப்பின்போது வரும் முதல் எண்ணத்தைப் பாதிக்கிறது.

நம்முடைய மேலதிகாரியின் மீதுள்ள எரிச்சல்
மனநிலையிலேயே உறங்கப் போனீர்கள்
என்றால், மறுநாள் காலையில் அதே
மனநிலையுடன்தான் விழிப்பீர்கள். ஆனால்
ஒரு ஆனந்தமான மனநிலையுடன் உறங்கப்
போனீர்கள் என்றால், மறுநாள் காலையில்
ஆனந்தமான மனநிலையுடன் விழிப்பீர்கள்.

தயவு செய்து
புரிந்துகொள்ளுங்கள்,
நம்முடைய
நிகழ்கால வாழ்க்கை,
முந்தைய பிறவியில்
வாழ்ந்ததின் விளைவு.

நாம் இரவில் தூங்குவதற்கு முன்னர், கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தூங்கவேண்டும் என்று சொல்வதின் காரணம் இதுதான். நாம் முழு விழிப்புணர்வுடன் பிரார்த்தனை செய்தால், த்யான நிலைக்குள் நுழைகிறோம்.

த்யான நிலையில் நாம் ஆனந்தமாக மட்டுமே இருக்க முடியும். நாம் ஆனந்தமான நிலையில் தூங்கப்போனால், மறுநாள் கண்விழிக்கும்போதும் அதே ஆனந்த நிலையில் விழிக்கிறோம்.

இதில் மேலும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், காலையில் விழிக்கும்போது நாம் எத்தகைய உணர்வில் இருக்கிறோமோ, அதே உணர்வு நிலைதான் அன்றைய நாள் முழுவதும் நம்முடன் இருக்கும்.

விழித்ததும் வரும் முதல் எண்ணம்...

நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். காலையில் விழிக்கும்போது இருக்கும் முதல் எண்ணம், அன்றைய நாள் முழுவதும், நம்மோடு இருக்கும். எவ்வளவு பேர் இதை உணர்ந்திருக்கிறீர்கள்? எழுந்திருக்கும்போது சோர்வாக எழுந்தீர்கள் என்றால், அன்றைய நாள் முழுவதுமே சோர்வாக இருப்பீர்கள். எழுந்திருக்கும்போது, சக்தியூட்டப்பட்ட உணர்வில் எழுந்திருப்பீர்களானால், நீங்கள் சுறுசுறுப்பாகவும் சக்தியுடனும் அன்றைய நாள் முழுவதும் இருப்பீர்கள்.

நான் சொல்கிறேன். விழித்தவுடன் குளியல் அறைக்குச் செல்லும்போது நடனமாடிக்கொண்டே செல்லுங்கள்; பல்துலக்கும்போது உங்கள் பற்களில் பற்பசைபடுவதை உணருங்கள், குளிக்கும்போது உங்கள் உடல்மேல் தண்ணீரின் ஸ்பரிசத்தை உணருங்கள். உங்களது ஒவ்வொரு செயலிலும், உங்களது விழிப்புணர்வை முழுவதுமாகக் கொண்டு வாருங்கள்.

அன்றைய நாளை, ஆனந்தமான எண்ணத்துடன்
தொடங்குங்கள். அவ்வாறு ஆனந்தமான
எண்ணத்துடன் விழிக்க வேண்டும் என்றால்,
முதல் நாள் தூங்கும்போதே நாம் ஆனந்தமான
மனநிலையுடன்தான் தூங்கவேண்டும்.

> முற்பிறவியில் நினைக்கும்
> நம்முடைய கடைசி
> எண்ணமானது,
> நம்முடைய
> மறுபிறவியின்
> முதல் எண்ணத்தை
> முடிவு செய்கிறது.

ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போது என்ன
நடக்கிறதோ, சரியாக அதேதான் நாம்
மரணம் அடையும் நேரத்திலும் நடக்கிறது.
ராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்:
நாம் மரணம் அடைந்து, புது பிறவி எடுக்கும்
நேரம் என்பது, நம்முடைய ஆத்மாவானது
மாற்று உடைகளை அணிவது போன்றது.
மரணத்தின்போது, நம்முடைய ஆத்மாவானது
தம்முடைய பழைய உடலை விட்டுவிட்டு,
அடுத்த பிறவிக்குத் தேவையான புது
உடையை அணிகிறது.

ஒரு ஆனந்தமான
மனநிலையுடன் உறங்கப்
போனீர்கள் என்றால்,
மறுநாள் காலையில்
ஆனந்தமான
மனநிலையுடன்
விழிப்பீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், தூங்கும் செயலும், இறப்பதும் வேறுவேறானது இல்லை. மரணத்தின்போது, ஆத்மாவானது ஏழு அடுக்குகளைத் தாண்டிச் செல்கிறது. அதன் வாசனையைப் பொறுத்தோ அல்லது முற்பிறவியின்போது ஏற்பட்ட ஏதேவது ஒரு ஆசையைப் பொறுத்தோ அடுத்த உடலை எடுக்கிறது. அடுத்த பிறவியில் முற்பிறவி வாசனையை உதிர்க்க உதவும் உடலை, நம்முடைய ஆன்மா தேர்வு செய்கிறது.

தயவுசெய்து இதனை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இப்போது எடுத்துள்ள, இந்த உடலானது, முற்பிறவி வாசனாவை அல்லது முற்பிறவி ஆசைகளைப் பொறுத்துத்தான் அமைந்துள்ளது. நம்முடைய ஆத்மாவானது, நிறமற்ற, வடிவமற்ற அந்தப் பிரபஞ்ச உணர்வோடு ஒன்று கலக்கவே எப்போதும் முயற்சி செய்கிறது. ஆனால் வாசனைகள் ஆத்மாவின் மேல் மெல்லியதாக ஒருவித வண்ணத்தைப் பூசி விடுவதால், அதனால் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்று கலக்க முடிவதில்லை. அதனால் ஆத்மாவானது மற்றொரு பிறவியை எடுக்கிறது. அந்தப் பிறவியில் அந்த சாயத்தடத்தை அழித்து, பிரபஞ்சத்துடன் ஒன்றுகலக்க முயற்சி செய்கிறது.

இப்போது, இந்தப் பிறவியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது நம் கையில்தான் உள்ளது. முற்பிறவியில், நிறைவேறாத ஆசைகளை இப்போது நிறைவேற்றிக்கொள்ளலாம் அல்லது மேலும் ஆசைகளை, உண்டாக்கிக்கொண்டு, பிறப்பு, இறப்பு சுழலிலேயே தங்கிவிடலாம். அடுத்த பிறவியின் வாழ்க்கை நிலையை, ஆன்மா தேர்வு செய்வது, நம்முடைய முற்பிறவி வாசனையையும், மரணத்தின்போது நினைக்கும் கடைசி எண்ணத்தையும் சார்ந்து இருக்கிறது.

முன் ஜென்மத்து சாயல் இந்த ஜென்மத்திலும் இருக்கும்

பலர் என்னிடம் கேட்பதுண்டு, "ஸ்வாமிஜி எனக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் கிடையாது. நான் த்யாணம் செய்தது கிடையாது. ஆனாலும், நான் த்யாணம் செய்யும்போது, பலநாள்கள் த்யாணம் செய்தது போன்ற உணர்வை அடைந்தேன். அதற்கு என்ன பொருள்? அது ஏன் அப்படித் தோன்றியது?"

Biscuits / Cookies

நீங்கள் இந்த ஒரு பிறவியை மட்டும் பார்க்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பிறவியில் நீங்கள் த்யாணம் செய்து இருக்க மாட்டீர்கள். ஆனாலும் த்யாணத்தில் ஆழ்ந்த பிணைப்பை உணர்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் முன்பிறவியில் த்யாணம் செய்திருப்பீர்கள். நீங்கள் முற்பிறவியில் தேடலுடன் இருந்திருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு காட்டில் ஒரு மனிதர், காளியின் முன்பு அமர்ந்து ஆழமாக த்யாணம் செய்து கொண்டிருந்தார். அவர் பலவிதமான சடங்குகளை, ஆழ்ந்த த்யாண நிலையில் செய்துகொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போது என்ன நடக்கிறதோ, சரியாக அதேதான் நாம் மரணம் அடையும் நேரத்திலும் நடக்கிறது.

ஒருநாள் அந்தவழி சென்ற வழிப்போக்கன் ஒருவன், அவர் காளிக்கு முன்பாக செய்யும் சடங்குகளையும் த்யாணத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு புலி, பூஜை செய்து கொண்டிருந்தவரின் மீது பாய்ந்து, அவரை இரையாக உண்டுவிட்டது. அந்தப் புலி காட்டிற்குள் சென்று மறைந்த பின்னர், இந்த வழிப்போக்கன் காளியின் முன்பு சென்று அந்தச் சடங்குகளை முழுமைப்படுத்தினான்.

பூஜையின் முடிவில், ஆச்சரியப்படத் தக்க வகையில் காளி அந்த வழிப்போக்கனின் முன் காட்சி கொடுத்தார்.

அந்த வழிப்போக்கனுக்குத் திகைப்பாக இருந்தது. அவன் காளியிடம், "அன்னையே! இத்தனை நாள்களாகப் பூஜை செய்தவருக்குத் தங்கள் தரிசனம் கிடைக்கவில்லை. நீங்கள் அவர்முன் தோன்றவில்லை. மேலும் அவர் புலிக்கு இரையாகிவிட்டார்.

நான் சில நிமிடங்களுக்கு முன்புதான் வந்தேன். கடைசி ஆரத்தியை செய்து முடித்தேன். ஆனால் நீங்கள் என் முன்னே தோன்றி காட்சி அளிக்கிறீர்கள்! இதற்கு காரணம் என்ன," என்று கேட்டார்.

> அடுத்த பிறவியின்
> வாழ்க்கைநிலையை,
> ஆன்மா தேர்வு செய்வது,
> நம்முடைய
> முன்பிறவி
> வாசனையையும்,
> மரணத்தின்போது
> நினைக்கும்
> கடைசி எண்ணத்தையும்
> சார்ந்து இருக்கிறது.

அதற்கு காளி, "உன்னுடைய முன்பிறவியில் நீ ஆழ்ந்த தேடலுடன் இருந்தாய். உன்னுடைய போன பிறவியில் ஆழ்ந்து தியானம் செய்திருக்கிறாய். அதனால்தான் நான் உனக்குக் காட்சி கொடுத்தேன்!" என்று பதில் உரைத்தார்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய அடுத்த பிறவி நம்முடைய கடைசி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. நம்முடைய வாழ்க்கை முழுவதும் பணம், சாப்பாடு என்று நினைத்துக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென சாகும்தறுவாயில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று இதற்கு அர்த்தம் இல்லை.

நாம், நம்முடைய வாழ்நாள் முழுவதும் செல்வத்தையும் பேர் புகழையும் மட்டுமே எண்ணி வாழ்ந்திருந்தோமேயானால், சாகும்போது திடீரென கடவுளைப் பற்றிய நினைவு எப்படி நமக்கு வரும்? இயல்பாகவே அப்போதும் நாம் பணத்தைப் பற்றிதான் நினைப்போம்.

இதைத்தான் கிருஷ்ணர் முதல் ஸ்லோகங்களில் சொல்கிறார். நாம் தொடர்ந்து, பிரபஞ்ச சக்தியை உணர்ந்துகொண்டும், தொடர்ந்து அதனையே தியானித்துக்கொண்டும், நம் எண்ணங்கள் முழுவதும் எல்லா நேரங்களிலும் அதன் மேலேலே நிலைநிறுத்திக்கொண்டும், கிருஷ்ணர், ராமர், ஏசு, புத்தர், ப்ரபஞ்ச ச'க்தி பராச'க்தி அல்லது வேறு ஏதோ பெயர், எதைச் சொல்லி அழைத்துக்கொண்டும் இருந்தோமேயானால், நாம் அத்தகைய எண்ணத்துடனேயேதான் உயிரையும் விடுவோம்.

நமக்கு அதுபோதும். நாம் அந்தச் சக்தியுடன் வாழத் தொடங்கி விடுவோம். இதனால் நமது அடுத்த பிறவி, அந்தச் சக்திக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடிய பிறவியாகவும், பிறப்பு இறப்பு சுழலிலிருந்து நம்மை விடுவிக்கக்கூடிய பிறவியாகவும் இருக்கும்.

எளிமை - தெய்வீகத்தின் உயர்ந்தகுணம்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா ப்ரயச்சதி I

ஒருவர் எனக்கு அன்படனும் பக்தியுடனும் ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ கொடுத்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை, தெய்வீகம் உயிர்ப்புடன் இருப்பதால், எளிய விஷயங்களுக்கும் மறுமொழி அளிக்கிறது.

money tree

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர், "நான் பெரிய விஷயங்களைத்தான் ஏற்றுக்கொள்வேன்," என்று சொல்லவில்லை. அவர் சொல்கிறார், "எளிய விஷயங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்."

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா ப்ரயச்சதி I ததஹம் பக்தியுபஹ்ரு தமச்நாமி ப்ரயதாத்மாநா: // 9. 26

ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ இவற்றை அன்படனும் பக்தியுடனும் யார் எனக்குக் கொடுத்தாலும், நான் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

> நம்முடைய
> வாழ்நாள் முழுவதும்
> செல்வத்தையும்
> பேர் புகழையும்
> மட்டுமே எண்ணி
> வாழ்ந்திருந்தால்,
> சாகும்போது திடீரென
> கடவுளைப் பற்றிய நினைவு
> எப்படி நமக்கு வரும்?

இதுவே தெய்வீகத்தின் சிறப்பு. கடவுளின்
உயர்வே, அவர் மிகவும் எளிமையானவர்
என்பதே. எளிமைத் தன்மையே கடவுளின்
மேன்மை. தயவுசெய்து தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள், எளிமைத்
தன்மைதான் உண்மையான உயர்வு;
உங்களை உயர்ந்தவர்களாகக் காட்டி
க்கொள்வதற்கு உங்களுக்கு அறிவு தேவை
இல்லை. யார்வேண்டுமானாலும் தம்மை
உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ளலாம்.

ஜென் மதத்தில் ஒரு சிறிய மிகவும் அழகிய வாக்கியம் இருக்கிறது. ஜென் பக்தர் ஒருவர், எல்லோரிடமும் மிகவும் மரியாதையாகவும் எளிமையாகவும் பழகுவார்.

அதற்கு ஜென் குரு அவரிடம்,
"எளிமையாக நடந்துகொள்ளாதீர்கள்,
அந்த அளவிற்கு நீங்கள் உயர்ந்தவரோ,
மஹோன்னதமானவரோ இல்லை," என்று
சொன்னார்.

'எளிமையானவராக இருப்பதற்கு,
நீங்கள் மிகவும் உயர்ந்தவராக இருத்தல்
வேண்டும்!'

தெய்வீகத்தின் மிக உயர்ந்த பண்பே எளிமைதான். பகவான் சொல்கிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம்

"ஒரு இலையோ, பூவோ, பழமோ சிறிது தண்ணீரோ. . . இவ்வகை எளிய பொருட்கள் எனக்குப் போதும். நான் அவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்."

எங்கிருந்தாலும் உங்களைத் தேடி வந்திடுவார்

இந்த அத்தியாயத்தின் நான்காவது வரிகளில் கிருஷ்ணர் சொல்கிறார்.

மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா

"நானே எங்கும் எல்லா இடங்களிலும் பரந்து இருக்கிற மேலான இறுதியான தெய்வீகம்."

இப்போது, எல்லாவற்றின் உள்ளும் பரவி இருந்தாலும்கூட, அவர் மகோன்னதமானவராக இருந்தாலும்கூட, அன்புடனும் பக்தியடனும் சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஒரு சிறிய பொருளையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.

ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் ஒருவரை உயர்ந்தவராக, மேன்மையானவராக உணர்ந்து கொண்டாலும்கூட, அவரே நம்முடன் ஒரு தொடர்பை, உறவை ஏற்படுத்திக் கொண்டால் அன்றி, நாமே

சென்று அவருடன் தொடர்புகொள்ள
முடிவதில்லை. அவரே நம் நிலைக்கு இறங்கி
வந்தால்தான், நாம் அவருடன் தொடர்பை
ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

தெய்வீகத்தின் மிக உயர்ந்த பண்பே எளிமைதான்.

உண்மையான உயர்வு என்பது உயர்ந்தவராக இருந்தால் மட்டும் போதாது. அவர் எல்லோராலும் தொடர்புகொள்ள முடிந்தவராக இருத்தல் வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர் உயர்ந்தவராக இருந்தாலும், அதை வைத்து என்ன செய்துவிட முடியும்?

இந்தியாவில் உயர்ந்த குருமார்கள், பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். இது பலருக்கும் தெரியும். பலர் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வி இது.

"ஆமாம் ஸ்வாமிஜி, இந்தியாவில் உயர்ந்தவர்கள் பலர் இருப்பது தெரியும். ஆனால் நான் அவர்களுடன் தொடர்புகொள்வது எப்படி? அவர்கள் எங்கோ இருக்கிறார்கள். என்னால் எதுவும் செய்யமுடியாதே? அவர்களால் எனக்கு ஒரு பயனும் இல்லை. அவர்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடியாது.

அவர்கள் மிகவும் மஹோன்னதமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களை எப்படி அடைவது? அவர்களுடன் தொடர்புகொள்ள எனக்கு எந்த வழியும் தெரியவில்லை."

இங்கே கிருஷ்ணர், சாதாரண மனிதர்களும் அவரோடு தொடர்புகொள்வதற்கான ஒரு வழியை உருவாக்கித் தருகிறார். ஒரு பக்கம், தம்முடைய மிக மிக உன்னதமான நிலையையும் காட்டுகிறார். தம் உயர்ந்த நிலையை அழுத்தமாக, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறார்.

இன்னொரு பக்கம், தன்னுடன் இணைந்துகொள்வதற்கான வழியையும் காட்டுகிறார். "அன்போடு ஒரு இலையையோ, பூவையோ, பழத்தையோ அல்லது நீரையோ சமர்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடன் தொடர்புகொள்கிறேன்," என்கிறார்.

அதனால்தான், ஜ்ஞாந குருமார்கள் பிஷை எடுத்து வாழவேண்டும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஞானிகள் பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பதே தொன்றுதொட்டுவரும் கோட்பாடு. ஏனென்றால், அப்போதுதான் சாதாரணமக்களாலும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

இந்தியாவில் ஸந்யாசிகள் வீதிவழியாக பிக்ஷை எடுத்துச் செல்வார்கள். புத்தர்கூட தம் காலத்தில் பிக்ஷை எடுத்திருக்கிறார். இங்கேதான் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். புத்தர் தமக்கு உணவு வேண்டும் என்பதற்காக பிக்ஷை எடுக்கவில்லை.

அவர் தம்முடைய இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு இருந்தால் போதும், அரசர்கள் அவருக்கு வேண்டிய உணவைக் கொண்டுவந்து கொடுப்பார்கள்! அவர் கீழே இறங்கி வந்து பிக்ஷை எடுத்தது எதற்கு என்றால், அப்போது மட்டுமே நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும் என்பதற்காகத்தான்.

அப்போதுதான் நம்மைப்போலவே அவரும்
ஒரு மனிதர் என்பதை நாம் உணர்வோம்.
அவருக்கு உணவு கொடுக்கும்போது,
அவருடன் பேசுவோம். ஒரு இணைப்பை,
ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வே
வாம். அவரும் நம்மைப் போன்றவர்தான்
என்பதை உணர்ந்துகொள்வோம். நம்மை
சௌகரியமாக உணரவைப்பதற்காகத்தான்,
அவர் நம்முடைய நிலைக்கு இறங்கி
வருகிறார். நவீன மனோதத்துவ நூலில் ஒரு
அழகான வார்த்தை உள்ளது.

> கிருஷ்ணர்,
> சாதாரண
> மனிதர்களும் அவரோடு
> தொடர்புகொள்வதற்கான
> ஒரு வழியை
> உருவாக்கித் தருகிறார்.

'தூரத்தைச் சூன்யமாக்குதல்'

இடைவெளியை இல்லாமல் செய்தல்! தூரத்தைச் சூன்யமாக்கவே புத்தர் பிக்ஷை எடுத்தார். இங்கே கிருஷ்ணர் தூரத்தை முழுவதுமாக இல்லாது சூன்யமாக்குகிறார். இந்த வரிகள் நமக்கும் தெய்வீகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை இல்லாததாக்குகிறது.

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா ப்ரயச்சதி |
ததஹம் பக்தியுபஹ்ரு தமச்'நாமி ப்ரயதாத்மநா: ||

“எளிமையாக ஒரு இலையோ, பூவோ, பழமோ அல்லது தண்ணீரோ போதும். இதை நீங்கள் அன்புடன், பக்தியுடன் தந்தால் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்."

இப்படிஃ கிருஷ்ணர் சொன்னது, தெய்வீகத்திற்கும் நமக்கும் இடையில் உள்ள தூரத்தை முழுவதுமாக இல்லாமல் பூஜ்யமாக்கிவிடுகிறது.

கிருஷ்ணர் வெளிப்படுத்திய அடுத்த மிக முக்கியமான ஸத்யம் இதுதான்.

feather icon

மனிதராய்ப் பிறந்த யாராலும் ஞானமடைய முடியும்

இந்தப்ப் பிரபஞ்சமும், பிரபஞ்ச சக்தியும் புத்திசாலித்தனமானவைதான் என்று நிரூபித்ததுதான் கிருஷ்ணர் வெளிப்படுத்திய முதல் விஷயம்.

மொத்தப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனமானது என்பதை நாம் புரிந்துகொண்ட அந்தக் கணமே, நம் பதட்டங்கள், கவலைகள், பயம், பாதுகாப்பின்மை இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு தளர்வுகொள்கிறோம். மேலும் கிருஷ்ணர், அவர் நம் பக்கத்திலேயே இருப்பதையும், நம்மால் அவருடன் எளிதில் தொடர்புகொள்ள முடியும் என்பதையும் நமக்குப்ப் புரியவைக்கிறார்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த உலகம் பொருள், பொருள்சார்ந்த நிலை கொண்டது என்று நாம் நினைக்கும்வரை, அந்த உலகிலிருந்து நாமேதான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோம்.

அது முழுமையானது, நாம் அதில் பகுதியானவர்தான் என்று நினைப்பதால், அந்த முழுமையுடன் சண்டையிடத் தொடங்குகிறோம். அதனால் வேரோடு பிடுங்கப்பட்டதுபோல், ஆதாரமில்லாமல் தள்ளாடுவது போல் உணர்கிறோம். அதனுடன் இணைப்புத் தன்மையுடன் இருப்பதை நாம் உணர்வதில்லை. நம்மால் தளர்வாக இருக்கமுடிவதில்லை. முழுமையுடன் நெருக்கமுள்ளவராக, அன்பானவராக நம்மை உணரமுடிவதில்லை. ஏனென்றால் நாம் எப்போதுமே அதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த முழுமையின் பகுதிதான் என்பதையும், அது நம் விழிப்புணர்விற்குப் பதிலளிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளும் போது, நாம் ஞான நிலையில் தளர்வாக இருக்கத் தொடங்குகிறோம்!

சோம்பேறி மனிதர் கூட, ஞானம் அடைவதற்கான வழிகாட்டுதலாக இந்த ஸ்லோகம் இருக்கிறது என நான் மக்களுக்குச் சொல்வதுண்டு. ஒருவர் சோம்பேறியாக இருந்துகொண்டு, ஞானம் அடைய விரும்பினால், இந்த வரிகள்தான் சரியான வழி! ஒரே வழி!

இந்தப் பிரபஞ்சம் புத்திசாலித்தனமானது. அது, நம் எண்ணங்கள், செயல்கள், உணர்வுகளுக்கு மறுமொழி அளித்து, இசைந்து செல்கிறது. இதனை நாம் புரிந்துகொண்டால் போதும், நாம் உடனே தளர்வாக, ஓய்வாக தெய்வீக உணர்வு நிலைக்குள், நிலையான விழிப்புணர்விற்குள் நுழைந்து விடுகிறோம்.

உங்களை ஊடுருவ கடவுளுக்கு நீங்கள் தரும் அனுமதிச்சீட்டு ‘பூஜை’

அடுத்து கிருஷ்ணர் “நீங்கள் நிலையான விழிப்புணர்வு நிலைக்குள் உங்களை விழ அனுமதித்த மறுகணமே, நானே உங்கள் யோகத்தையும் க்ஷேமத்தையும் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். உங்களிடம் என்ன குறைவாக உள்ளதோ, அதைப் பற்றிய அக்கறைகொள்கிறேன். உங்களிடம் எது இல்லையோ, அதனை நானே தருகிறேன். எது உங்களிடம் உள்ளதோ அதை நானே பாதுகாக்கிறேன்,” என்று சொல்கிறார்.

அடுத்து அவர், “எளிய இலையோ,
நீரோ பழமோ, அல்லது பூவோ எதுவாக
இருந்தாலும், நீங்கள் அன்புடன்
பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது அதைநான்
ஏற்றுக்கொள்கிறேன்,” என்று சொல்கிறார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். தம்மிடம்
இந்தப் பொருட்கள் இல்லை என்று அவர்
இவற்றை உங்களிடம் கேட்கவில்லை.

நாம் நம் குழந்தைக்குப் பிஸ்கட் பாக்கெட்
வாங்கிக்கொண்டு வந்து தந்துவிட்டு,
அக்குழந்தை அதைப் பிரிக்கும்போது என்ன

தூரத்தைச்
சூன்யமாக்கவே புத்தர்
பிக்ஷை எடுத்தார்.

சொல்கிறோம்? ''அம்மாவிற்கு ஒன்று கொடுடா!'' என்கிறோம். நம்மிடம் பிஸ்கட் இல்லை என்றோ, நமக்கு அது வேண்டும் என்றோ அதற்கு அர்த்தம் இல்லை.

ஆனால் குழந்தை அந்தப் பாக்கெட்டைப் பிரித்து அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து நம்மிடம் தரும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்? நாம்தான் பிஸ்கட்டைக் கொடுத்தோம். ஆனால் குழந்தை நமக்கென்று ஒன்று திரும்பத் தரும்போது மனத்திற்குள் ஒரு இனிமையை உணர்கிறோம். குழந்தையுடன் ஒரு நெருக்கத்தை உணர்கிறோம். மேலும் அவனும் நம்முடன் நெருக்கமாக இருக்க, தொடர்பு நிலையில் அன்புடன் இருக்க விரும்புகிறான் என்று தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

அந்தப்போலதான், நீங்கள் தெய்வத்திற்கு காணிக்கையாகச் சமர்ப்பிக்கும்போது, அவரிடம் அது இல்லை, அதனால் நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். முதலில் அவர்தான், நமக்கென்று எல்லாவற்றையும் அளித்துள்ளார்! அவர் கொடுத்ததையே அவருக்கு மீண்டும் சமர்ப்பிக்கும்போது, நாம் தெய்வீகத்திடம், ''நான் உங்களுடன் தொடர்புகொள்ள, நெருக்கமாக இணைந்துகொள்ள விரும்புகிறேன்,'' என்று நம் விருப்பத்தைத் தெரிவிக்கிறோம்.

''கடவுளே! உங்களுடன் நான் இணைய விரும்புகிறேன்!'' என்று குருவிடம் நம்மைக் காட்டுகிறோம். குருவும் உடனே, ''நீ என்னுடன் இணைய விரும்பும்போது, நானும் உன்னுடன் இணைகிறேன்,'' என்று உணர்கிறார்.

தெய்வீகம் நம் உள் தளத்திற்குள் வருவதற்கு, நாம் சம்மதம் தெரிவித்து, பச்சைக் கொடி காட்டுகிறோம்.

கடவுள் எப்போதுமே தயாராகவே இருக்கிறார். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், "தட்டுங்கள் கதவு திறக்கப்படும்," என்று பைபிள் சொல்கிறது. நான் சொல்கிறேன்.

“கடவுள் தட்டிக்கொண்டிருக்கிறார். நீங்கள் திறங்கள்.”

தெய்வத்திற்குக் கொடுக்கும்போது தெய்வத்தோடு இணைவதற்கான, உங்களின் மனப்பூர்வமான ஒப்புதலை வெளிப்படுத்துகிறீர்கள்.

நாம் தட்டவேண்டிய அவசியம் இல்லை.
அவர் தட்டுகிறார். உடனே திறங்கள்.
அழகாக, இயல்பாக, நாம் உள்ளே அழைத்துச்
செல்லப்படுவோம்.

நான் மக்களிடம், மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு சத்தியம்: “கோயிலுக்கு வெறும் கை களுடன் செல்லாதீர்கள் இரண்டு அல்லது மூன்றுபழங்கள் அல்லது வேறு உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை எடுத்துச் செல்லுங்கள். குறைந்தபட்சம் சிறிது பணமாவது எடுத்துச் செல்லுங்கள்.

கடவுளுக்கு எதையாவது காணிக்கையாகக் கொடுங்கள். தெய்வத்திற்கு ஏதாவது படையுங்கள். தெய்வத்திடம் ஒன்றும் இல்லை, அதனால் உங்களைக் கொடுக்கச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.

தெய்வத்திற்குக் கொடுக்கும்போது நீங்கள் நேர்மறையான குறிப்புகளைக் காட்டுகிறீர்கள். தெய்வத்தோடு இணைவதற்கான, உங்களின் மனப்பூர்வமான ஒப்புதலை வெளிப்படுத்துகிறீர்கள். தெய்வத்திற்குச் சமர்ப்பிக்கும்போது அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். உங்களோடு இணைந்துகொள்கிறார்.”

ஞான குரு பூமிக்கு வருவது ஒரு சிலருக்காக அல்ல, நம் ஒவ்வொருவருக்காகவும் . . .

கிருஷ்ணர் தமது கருணையினால், மீண்டும் மீண்டும் ஸத்யங்களையும் நுட்பங்களையும் அர்ஜூனனுக்கு வெளிப்படுத்துகிறார். அர்ஜூனன் தம்மை விடுவித்துக்கொள்வதற்கான பலவிதமான நுட்பங்களை அவனுக்குத் தருகிறார். அதுதான் ஞானமடைந்த குரு செய்யும் செயல்.

அவர் பூமிக்கு இறங்கி வருவதன் காரணமே, ஞான வழியைத் தம்மால் எவ்வளவு மக்களுக்குக் காட்டி உதவ முடியுமோ, அத்தனை மக்களுக்கும் உதவுவதற்காகத்தான்! மனித குலத்தை ஞானமடையச் செய்ய, நம் ஜ்ஞான குருமார்கள் அளித்த பல வேறு விதமான த்யான நுட்பங்களை உள்ளடக்கிய வேத நூல்கள் பல இருக்கின்றன.

சிவஸூத்ரத்தில், நூற்றி பனிரெண்டு ஸத்யங்களையும் நுட்பங்களையும் சிவன் நமக்காக, நாம் ஞானமடைவதற்காகக் கொடுத்திருக்கிறார். ஞானமடைந்த குருமார்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கருணை மிகுதியால், அனைவருமே ஞானம் பெறவேண்டும் என்று விரும்புபவர்களாகவும், ஒவ்வொருவரும் விடுதலை பெறவேண்டும் என்று நினைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த வரிகளில் கிருஷ்ணர், அர்ஜூனனிடம் எல்லாவற்றையும் தம்மிடம் ச்ரணாகதி செய்யுமாறு சொல்கிறார். ஞானமடைவதற்கு சுலபமான வழி, ஜ்ஞான குருவிடம் ச்ரணாகதி செய்வதுதான் என்று நான் சொல்கிறேன்.

மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள் பிரபஞ்ச சக்தி அல்லது ஜ்ஞான குருவிடம் முழுமையாக நம்மால் ச்ரணாகதி செய்ய முடியும் என்றால், நாம் ஞானம் அடைந்து விடுவோம். நம்முடைய ஒவ்வொரு செயலையும் உன்னதமான ஆத்மாவிடம் ச்ரணாகதி செய்யும்போது, நம்மால் ஒரு மிகப்பெரிய சுதந்திரத்தை உணர முடியும்.

நாம் எப்போதுமே கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதும் ஒரு வித மன அழுத்தத்தில்தான் இருக்கிறோம். திரும்பத், திரும்ப கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றியே நினைக்கிறோம். நாம் ஏன் இப்படிச் செய்கிறோம். ஏன் எப்போதும் வருத்தத்துடன் கவலையோடு தொங்கிய முகத்துடன் இருக்கிறோம்.

அர்ஜூனன் தம்மை விடுவித்து கொள்வதற்கான பலவிதமான நுட்பங்களை அவருக்குத் தருகிறார். அதுதான் ஞானமடைந்த குரு செய்யும் செயல்.

நாம் நம் தோள்களின் மீது அளவுக்கு அதிகமான சுமைகளை எடுத்துக்கொள்கிறோம். நாம்தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்து க்கொள்கிறோம். சில விஷயங்களில் வெற்றிகள் பெறும்போது, நம்மால்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று நினைப்பதன் மூலம் நம் அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிறோம்.

சில விஷயங்கள் நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், அப்போது நம்முடைய அஹங்காரம் காயப்படுகிறது, அடிவாங்குகிறது. "எனக்கு எப்படி இது நடக்கலாம்? நான் எவ்வாறு தவறாகச் செல்ல முடியும்? என் திட்டம் எப்படித் தவறாக முடியும்? என்று எண்ணுகிறோம்.

நம் அஹங்காரம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒன்று பெருமகிழ்ச்சி அடைகிறது அல்லது காயப்படுகிறது. இத்தகைய செயல்பாட்டில் நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? நாம் நம் அஹங்காரத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றியும், அதைக் காயப்படுத்தாமல் பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றியும்தான் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? மீண்டும், மீண்டும் நாம் இந்த அஹங்காரத்தை எப்போதும் மகிழ்ச்சியான நிலையிலேயே வைக்கும் வழிகளையும், அது காயப்படாமல் தடுப்பதற்கான வழிகளையுமே தேடுகிறோம்.

‘துறந்து விடுதல்’ மூலமும், பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்தல் மூலமும் நாம் விடுதலை அடைய முடியும், சுதந்திரம் அடைய முடியும் என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. சரணாகதியில் நிச்சயம் நாம் முழுச் சுதந்திரம் அடைய முடியும். அப்போது நம்முடைய எல்லாச் சுமைகளும் நீங்கி விடுகின்றன. ஆனால் நாமோ இதைப் பற்றி உணர்ந்துகொள்வதில்லை.

பிரபஞ்ச சக்தி
அல்லது
ஜ்ஞான குருவிடம்
முழுமையாக நம்மால்
சரணாகதி செய்ய முடியும்
என்றால்,
நாம் ஞானம்
அடைந்து விடுவோம்.

சரணாகதியில் இறைவனே உங்களுக்குப் பொறுப்பெடுப்பார்

ஜ்ஞான குருமார்கள் அனைவருமே சரணாகதி பற்றிப் பேசியுள்ளார்கள். அது மிகமிக எளிமையான வழி; ஆனால் நாம்தான் நம் அஹங்காரத்தால் அதை மிகவும் கஷ்டமான வழியாக மாற்றி விடுகிறோம்.

பிரபஞ்ச சக்தியிடம் நாம் மூன்று நிலைகளில் சரணாகதி செய்யலாம். முதல் நிலை, நம் செயல்கள் அனைத்தையும் பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்து விடுவது.

நாம் எதைச் செய்தாலும், நம் செயல்கள் எல்லாவற்றையும் அது நல்லதே

Hands slicing mushrooms and tomatoes

தா, அல்லது கெட்டதோ எதுவாக
இருந்தாலும் பிரபஞ்ச சக்தியிடம்
சஃரணாகதி செய்வது. அப்படிச்
செய்வதால் பிரபஞ்ச சக்தி
நம்மைப் பற்றிய அக்கறையையும்
பொறுப்பையும் எடுத்துக்
கொள்கிறது. இதுதான்
அடிப்படையான முதல் நிலை.

கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில், "உங்களின் செயல்கள், பூஜைகள், தவங்கள் இவற்றை என்னிடம் முழுமையாக சஃரணாகதி செய்யும்போது, உங்களின் நல்ல அல்லது கெட்ட செயல்களின் விளைவுகளுக்கு நானே பொறுப்பாகிறேன்," என்று தெளிவாகச் சொல்கிறார்.

மக்கள் பலர் தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். அவர்கள், நாம் இதைச் செய்கிறோம் என்ற அஹங்காரத்தோடு செய்யும்போது என்ன ஆகிறது? பக்தியில்லாமல் யந்திரத்தனமாக சில மந்திரங்களைச் சொல்லி, கொஞ்சம் பூக்களை இறைவன் மேல் போடுவார்கள். அவ்வளவுதான். கோயில்களில் பண்டிதர்கள் என்ன செய்கிறார்கள்? கடந்த பத்து பதினைந்து வருடங்களாக அவர்கள் எதை ஓதிக்கொண்டிருக்கிறார்களோ, அதை வெறுமனே வெளியில் கொட்டும் ஒரு செயலாகத்தான் அவர்களுடைய பூஜை இருக்கிறது.

பூஜைசெய்யும் போதும், நீங்கள் மந்த்ர உச்சாடனம் செய்யும்போது, அவற்றை தெய்வத்திடம் முழு ஈடுபாட்டுடன், சஃரணாகதி மனநிலையுடன் செய்யுங்கள். அதுதான் உங்களின் முடிவான, கடைசி பிரார்த்தனைபோல் செய்யுங்கள். இந்த முழுஉலகமே அழியப்போகும் நிலையில் இருப்பது போலவும் இதுதான் உங்களின் கடைசி பிரார்த்தனை போலவும் செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனையை முழுமையாக உணருங்கள்.

சஃரணாகதியில்
நிச்சயம்
நாம் முழுச் சுதந்திரம்
அடைய முடியும்.

உங்களின் பூரணமான விழிப்புணர்வை
பிரார்த்தனையில் வைத்து தெய்வத்திடம்
சஃரணாகதி அடையுங்கள். நீங்கள் எந்தச்
செயல் செய்தாலும் இதேபோன்ற உணர்வு
நிலையிலேயே செய்ய வேண்டும்.

பிரார்த்தனை என்பது மட்டும் இல்லை,
நம்முடைய செயல்கள் யாவுமே
இப்படிப்பட்ட சரணாகதி உணர்வுடன்தான்
நிகழ்த்தப்பட வேண்டும். நாம்
சரணாகதி செய்யும்போது நாம் மிகவும்
லேசானதுபோல் உணர்கிறோம்! தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும்
சரணாகதி செய்யும்போது நம்முடைய
செயல்திறன் உயர்கிறது. இது முற்றிலும்
உண்மை.

உங்கள் னி
பூரணமான
விழிப்புணர்வை
பிரார்த்தனையில் வைத்து
தெய்வத்திடம்
சரணாகதி அடையுங்கள்.

நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் சரணாகதி செய்யும்போது, அந்த செயல்களால் வரும் பின்விளைவுகளைப் பற்றிய கவலைகளும் நமக்கு இல்லாமல் போகிறது. பந்து இப்போது கடவுளின் பக்கம் உள்ளது. அவர் சொன்னபடி சுழல்கிறது. எது நடந்தாலும் எல்லாவற்றையும் அவரே கவனித்துக்கொள்வார். எது நல்லது என்று அவருக்குத் தெரியும்.

சரணாகதி செய்யும்போது, நம் எல்லாச் சுமைகளையும் கடவுளின் தோள்களில் போட்டு விடுகிறோம். நல்லது, கெட்டது எது நடந்தாலும் அது அவரின் பொறுப்பு என்றாகிறது. அவர் எதையும் தவறாகச் செய்யமாட்டார் என்கிற தெளிவும் நமக்கு வருகிறது.

இது படிக்க வேண்டியதல்ல, அனுபவிக்க வேண்டியது

இரண்டாம் நிலை சரணாகதி. நமது பட்டறிவையும் மனத்தையும் பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்வது. இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முதல் நிலை சுலபமானது. உங்களின் செயல்களை சரணாகதி செய்யுங்கள்,” என்று நான் சொல்லும்போது, “சரி சுவாமி, நான் முழுவதுமாக சரணாகதி செய்துவிட்டேன்,” என்று எல்லோரும் சொல்ல முடியும்.

ஆனால் மனத்தை சரணாகதி செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அது நம் கைகளில் இல்லை. நீங்கள் உங்கள் செயல்களைப் பார்க்க முடியும். அதனால் “கடவுளே! நான் செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் உங்களிடம் சரணாகதி செய்து விடுகிறேன்,” என்று சொல்ல முடியும்.

ஆனால் இதைக்கேட்டுக்கொண்டு நம் மனம்
சும்மா இருக்குமா? "இல்லை, இல்லை நீ
எப்படி இதைச் செய்ய முடியும்? உன்னுடைய
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் எப்படி
இருக்க முடிகிறது? உன் எதிர்காலத்தைப்
பற்றி நினைத்தாயா?" என்று நம் மனம்
சொல்லும். அது தொடர்ந்து இப்படியே
ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கும்!

மேலும் ஒரு விஷயம், நான் மிகப்பெரிய ஸத்யங்களைப் பற்றிப் பேசும்போது, உங்கள் மனம் தொடர்ந்து அதைப் பகுத்து ஆராய்ந்து கொண்டே இருக்கும். தன்னிடம் உள்ள குறைந்த பட்டறிவைக்கொண்டு அலசிக் கொண்டே இருக்கும்.

"ஸ்வாமிஜி என்ன சொல்கிறார்? அது எப்படி நடக்க முடியும்? அவருக்கு வேண்டுமானால் அது நிகழலாம்; எப்படி ஆனாலும் எனக்கு சரிவராது. அதனால் முழுமையாகத் தெய்வத்திடம் சரணாகதி செய்வது பற்றி நான் எப்படி நினைப்பது?" என்று உங்கள் மனம் எண்ணிக்கொண்டிருக்கும். உங்களைத் தன்னிடமே பிடித்து வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத்தான் தேடிக்கொண்டிருக்கும்; தன்னிடம் உள்ள புத்திசாலித்தனத்தைக்கொண்டு மீண்டும் மீண்டும் தர்க்க ரீதியாக இதைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கும்.

நூறு வருடங்களுக்கு முன் யாரோ ஒருவர், பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னார். அதைக் கேட்ட மக்கள், சொன்னவர் மேல் கற்களை எறிந்தார்கள். ஆனால் இப்போது விஞ்ஞானப்பூர்வமாக அந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இருநூறு வருடங்களுக்கு முன்பு யாராவது, உலகின் மறுபக்கம் உள்ள மக்களோடு நம்மால் பேச முடியும் என்று சொன்னால், மக்கள் அவரைப் பார்த்து சிரித்து ஏளனம் செய்து இருப்பார்கள். ஆனால் இப்போது அது ஒரு உண்மை நிகழ்வாக இருக்கிறது.

நமது மனம் பட்டறிவைச் சார்ந்தே இருப்பதால்தான், சில விஷயங்களை நம்முடைய மனத்தால் உடனே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உங்களது அமைப்பில் பதினொரு பரிமாணங்கள் இருக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? "ஸ்வாமிஜி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அது எப்படி முடியும்?" என்று சொல்லி இருப்பீர்கள். அதனால்தான், மனம், பட்டறிவு இவற்றை சரண்ாகதி செய்தல் வேண்டும் என்கிறேன். பிரபஞ்ச சக்தியிடம் உங்களது மனம், பட்டறிவு இவற்றை சரண்ாகதி செய்தீர்கள் என்றால், பல உயர்ந்த ஸத்யங்களைப் பற்றிய உண்மை புரியவரும். சரண்ாகதி செய்யவில்லை என்றால் நீங்கள் தடைப்பட்டு நின்று விடுவீர்கள். உங்கள் பட்டறிவு உங்களை முன்னேறவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒருமுறை சரண்ாகதி செய்து, அந்த அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் அதீத முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வார்த்தைகளைத் தாண்டி சென்று, அனுபவிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.

இறைவனே உங்களைப் பொறுப்பெடுக்கும் தருணம்

மூன்றாவது நிலை சரண்ாகதி மிகவும் கடினமானது. அது புலன்களை சரண்ாகதி செய்வது. மஹாபாரத்தில் சொல்லப்பட்ட சிறியகதை ஒன்று இப்படிப்பட்ட சரண்ாகதியைப்பற்றி விளக்குகிறது.

ஒருமுறை கிருஷ்ணரும் அர்ஜுனனும் வெளியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்படி சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் திடீரென ஒரு மரத்தை அர்ஜுனனுக்குக் காட்டி, "இதோ பார் அர்ஜுனா! அந்த மரத்தில் ஒரு பச்சைநிற காக்கை இருக்கிறது. அது உனக்குத் தெரிகிறதா?" என்றார்.

உடனே அர்ஜுனனும் "ஆமாம் கிருஷ்ணா,
தெரிகிறது. அந்தப் பச்சை காக்கை
தெரிகிறது," என்று பதில் சொன்னார்.

சிறிது நேரத்தில் கிருஷ்ணர் வேறொரு
காக்கையைக் காட்டினார். "அர்ஜுனா அங்கே
பார். ஒரு கருப்புக் காக்கை," என்றார்.

உடனே அர்ஜுனனும் "ஆமாம் கிருஷ்ணா!
எனக்கும் அந்தக் கருப்புக் காக்கை
தெரிகிறது," என்றார்.

> நான் மிகப்பெரிய
> ஸத்யங்களைப் பற்றிப்
> பேசும்போது,
> உங்கள் மனம்
> தொடர்ந்து
> அதைப் பகுத்து
> ஆராய்ந்து கொண்டே
> இருக்கும்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "நீ என்ன
முட்டாளா? முதலில் நான் ஒரு காக்கையைக்
காட்டி பச்சைக் காக்கை தெரிவதாகச்
சொன்னபோது, உனக்கும் அது தெரிகிறது
என்றாய். இப்போது நான் கருப்புக்
காக்கையைக் காட்டியபோது, நீயும் அதைப்
பார்ப்பதாகச் சொல்கிறாய், நீ என்ன
மடையனா? எப்படிஃக் காக்கை பச்சைநிறமாகத்
தெரிய முடியும்?" என்று கேட்டார்.

உடனே அர்ஜுனன், "ஓ கிருஷ்ணா! எனக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்கள் என்னைப் பச்சைநிற காக்கையைப் பார்க்கச் சொன்னபோது, நான் பச்சைக் காக்கையைப் பார்த்தேன். பின் நீங்கள் கருப்புக் காக்கையைக் காட்டியபோது நானும் கருப்புக் காக்கையைப் பார்த்தேன்" என்று பதில் சொன்னார்.

இதுதான் புலன்களைச் சரணாகதி செய்வது! அர்ஜூனன் முழுமையாக எல்லாவற்றையும் கிருஷ்ணரிடம் சரணாகதி செய்து உள்ளார். தம்முடைய புலன்களைக்கூட அவர் கிருஷ்ணரிடம் சரணாகதி செய்து உள்ளார்.

குரு எதைச் சொன்னாலும், சீடன் அப்படியே அதை ஏற்றுக்கொள்கிறார். அதுதான் உண்மையான சரணாகதி நிலை. இந் நிலையான சரணாகதி நமக்கு வரும்போது தெய்வீகத்துடன் நாம் ஒன்றி விடுகிறோம். தெய்வம் நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. கிருஷ்ணர் இதைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறார். ஒவ்வொரு ஜ்ஞான குருவும் இந்த உறுதிமொழியைத் தருகிறார்கள். நாம், நம்மை முழுமையாக, குருவிற்கோ, தெய்வீகத்திற்கோ, பிரபஞ்ச சக்திக்கோ சரணாகதி செய்யும் போதும், நம் செயல்கள் எல்லாவற்றையும் அதற்குச் சமர்ப்பிக்கும் போதும் அது நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்து க்கொள்கிறது.

நம் தோள்களின் மேல் உள்ள முழுச் சுமையும் இறக்கப்பட்டுவிடுகிறது. நம் செயல்களின் விளைவுகளிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். ஒவ்வொரு ஜ்ஞான குருவின் வாக்குறுதியும் இதுதான்.

கேள்வி: ஸ்வாமிஜி, சடங்குகளின் அர்த்தங்களைப் பற்றி நீங்கள் விளக்கிய பின்புகூட எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. கோயில்களில் பலவகை பூஜைகள், பிரார்த்தனை சடங்குகள் நிகழ்வதை நாம் பார்க்கிறோம். மக்கள் தங்களின் வீடுகளிலும் பூஜைகள் பல செய்கிறார்கள். இப்படி பலவகையான விஷயங்கள் செய்வதின் காரணம் என்ன? நேரடியாக கடவுளிடம் பிரார்த்தித்துக்கொள்ளலாம் அல்லவா? பிரபஞ்சத்திடம் நேரடியாகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம் அல்லவா? பூஜையின் உட்கருத்து என்ன?

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். பூஜையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. தர்க்க ரீதியான மக்கள் அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். அதனுடைய சக்தி அவர்களுக்குத் தெரியாததால் நவீனகால மனிதனுக்குப் பூஜைகள் தேவை இல்லை என்கிறார்கள். பூஜையின்போது கடவுளை, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிப்பதுபோல் மிகவும் மரியாதையுடன் அழைக்கிறோம்.

கோவிலில் பண்டிதர்கள் கடவுளை விருந்தினர்போல் மரியாதையுடன் அழைத்து வருகிறார்கள். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவரை மிகவும் மரியாதையுடன் உபசரிப்போம். அவர் அமர்வதற்காக நாற்காலியை கொடுப்போம். பின் அவரின் கால், கை அலம்ப நீர் கொடுப்போம்.

பின் அவரிடம், நீங்கள் குளியல் அறை செல்ல வேண்டுமா? என்று கேட்டு, குளிப்பதற்கு நீரைக் கொடுப்போம். அவருக்கு மலர்களைத் தந்து உபசரிப்போம்.

பிறகு அவரை உணவருந்த அழைத்துச் செல்லுவோம். முடிவில், அந்த நாளின் முடிவில் அவர் சுகமாக உறங்குவதற்கு வேண்டிய ஏற்பாட்டினை அல்லது வசதிகளை செய்வோம்.

இதேபோன்ற விஷயங்கள்தான் பூஜையின்போது நிகழ்த்தப்படுகின்றன. பூஜையை இந்து மதத்தில் ஸேவை என்று சொல்வதன் காரணம் அதுதான்.

சேவையின் கருத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். கல்லில் உயிரோட்டமான சக்தி இருக்கிறது என்பதையும், அந்தச் சக்திக்கு இரவும் பகலும் நம்மால் சேவை செய்ய முடியும் என்பதையும் தர்க்கமையத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்வது கடினம்.

> குரு
> எதைச் சொன்னாலும்,
> சீடன்
> அப்படியே
> அதை
> ஏற்றுக்கொள்கிறார்.
> அதுதான்
> உண்மையான
> சரணாகதி நிலை.

ஒரு சிலையின் உள்ளே, விக்கிரஹத்தின் உள்ளே இருக்கிற ஒரு உயிரோட்டமான சக்திக்குச் சேவை செய்வதைப் புரிந்துகொள்வது கடினம். இருந்தாலும், முழுஉணர்வுப்பூர்வமாக சேவை செய்யும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உணர்வுப்பூர்வமாக மட்டும் அல்லாமல், அவர்கள் தங்கள் பக்தியை அந்த விக்கிரஹத்திடம் வெளிப்படுத்தி வழிபாடு செய்வார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்க்கை சரிதத்திலிருந்து நான் ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். இது வெறும் கதை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு. பக்தியைப் பற்றியும் வழிபாட்டின் ஆற்றல், மற்றும் சிறப்பு பற்றியும் அது காட்டுகிறது.

தெளிவாகப்
புரிந்துகொள்ளுங்கள்.
பூஜையில் மிகப்பெரிய
சக்தி இருக்கிறது.

இந்தியாவில், கல்கத்தாவின் அருகில் தக்ஷிணேச்வர் என்னும் இடத்தில் காளி கோவிலில் இராமகிருஷ்ணர் பூசாரியாக இருந்தார். அந்தப் பக்கங்களில் சங்கு அல்லது கடல் சிப்பி, இவற்றால் செய்யப்பட்ட வளையல்களை பக்தர்கள் அன்னை காளிக்கு காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவ்வகையான பழக்கம் அந்தக் கோயிலிலும் உண்டு.

ஒருமுறை, ஒரு பக்தர் நான்கு வளையல்களை அன்னைக்கு காணிக்கையாகக் கொடுத்தார். அன்னைக்கு நான்கு கைகள் உண்டு. ஒரு கை அபய முத்திரையையும் ஒரு கை வரத முத்திரையையும் காட்டும். ஒரு கையில் ஞானத்தைக் குறிக்கும் கூரிய வாளும், மற்றொரு கையில் அஹங்காரத்தைக் குறிக்கும் விதத்தில் ஒரு அசுரனின் தலையும் இருக்கும்.

காளி பூஜையின்போது ராமகிருஷ்ணர் அன்னையின் மூன்று கைகளிலும், அந்தச் சங்கு வளையல்களை அணிவித்து விட்டார். வாளை எடுத்து விட்டு, திரும்பவும் வைக்கமுடியுமாதலால், வாள் வைத்திருக்கும் கையில் கூட வளையலைப் போட்டுவிட்டால். ஆனால் அசுரன் தலை இருக்கும் கையில் வளையலை நுழைக்க முடியவில்லை. அதனால் அந்த வளையலை அவர் போட்டுவிடவில்லை.

அங்கிருந்த மற்றொரு பண்டிதர் இராமகிருஷ்ணரைக் கிண்டலாக, “ஏன் நான்காவது வளையலைப் போடவில்லை?,” என்று கேட்டார். அசுரன் தலை இருப்பதால் தம்மால் அணிவிக்க முடியவில்லை என்று இராமகிருஷ்ணர் பதில் சொன்னார்.

அதற்கு அந்தப் பண்டிதர், "நீங்களோ சிறந்த காளிபக்தர். அம்மா கையில் உள்ள தலையைக் கொஞ்சம் கீழே வையுங்கள் என்று . காளியிடம் கேட்டிருக்கலாமே? நீங்கள் அப்போது வளையலைப் போட்டு இருக்கலாமே," என்றார்.

இராமகிருஷ்ணர் இதை மிகவும் சிரத்தையாக எடுத்துக் கொண்டார். உடனே அன்னையிடம், "அம்மா என்னைக் கொஞ்சம் வளையலைப் போட விடு," என்று கேட்டுக் கொண்டார். அன்னையும் தலையைக் கீழே போட்டாள். உடனே அவர் வளையலை அணிவித்துவிட்டு, பின் தலையை எடுத்து மீண்டும் அன்னையிடம் கொடுத்தார்.

இப்போதுகூட தக்ஷிணேச்'வர் காளி கோவிலில்
உள்ள காளியின் கைகளில் இந்த நான்கு
வளையல்களையும் நீங்கள் பார்க்கலாம்.
காளியின் கையில் எந்தவித பிளவும் இல்லை.
வளையலிலும் எந்தப் பிளவும் இல்லை.

அன்னையின் கைகளில் அந்த வளையல்கள்
இருக்கும். அது எப்படி அணிவித்து இருக்க
முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக
தோன்றும்.

ஒரு சிலையின் உள்ளே,
விக்ரஹத்தின் உள்ளே
இருக்கிற
ஒரு உயிரோட்டமான
சக்திக்குச் சேவை
செய்வதைப்
புரிந்துகொள்வது கடினம்.

காளியிடம் இராமகிருஷ்ணருக்கு இருந்த ஆழ்ந்த பக்தியை நம்புபவர்களாலும், மதிப்பவர்களாலும் மட்டுமே இதை நம்ப முடியும் கல்கத்தாவிற்கு எப்போதாவது செல்லும்போது தவறாமல் இந்தக் காளியைச் சென்றுபாருங்கள்.

நான் அந்தக் கோயிலுக்குச் சென்று உள்ளேன். அப்போது இராமகிருஷ்ண ஆச்'ரமத்தில் நான் ஆச்'ரமவாஸியாக இருந்தேன். அதனால் வளையலைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். தொட்டு மட்டும் பார்க்கவில்லை. எங்காவது பிளவு உள்ளதா என்று சுழற்றியும் பார்த்தேன். ஒருவேளை இராமகிருஷ்ணர் வளையலைப் பிரித்துப் போட்டுவிட்டு, பிறகு ஒட்டிச் சேர்த்து விட்டாரோ என்று சோதித்துப் பார்த்தேன்! அந்த வளையல் முழுதாக இருந்தது. எங்கும் பிளவுபடவில்லை. விக்ரஹமும் பிளவுபடாமல் முழுமையாக இருந்தது. மேலும் அது 300 அல்லது 400 வருட பழைய நிகழ்வும் இல்லை. சுமார் 125 வருடங்கள் முன்புதான் நடந்துள்ளது. ராமகிருஷ்ணர் 1886 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார் அதனால் அவர் இந்த உலக வாழ்வை விட்டு சுமார் 125 வருடங்கள்தான் ஆகின்றன. இந்த நிகழ்வுக்கு எந்தவிதமான தர்க்க ரீதியான விளக்கங்களும் இல்லை. ஆனால் அது முற்றிலும் உண்மை, பக்தியின் ஆற்றலைக் காட்டுவது. உடல் சார்ந்த தளத்திலும், ஸ்தூல நிலையிலும்கூட பக்தியின் சக்தி தன்னைத்தானே இப்படி வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

பக்தியுடன் செய்யப்படும் வழிபாட்டின் ஆற்றல் அது. நாம் வழிபாடு செய்யும்போது, நம்மையே அந்த விக்ரஹத்தில் உள்ள சக்தியிடம் கொடுக்கிறோம்.

நம்மை நாமே அந்தப் பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி செய்கிறோம். சரணாகதி உணர்விலேயே எதையும் தரவேண்டும். விக்ரஹத்தின் மேல் பற்றுக்கொண்டு தடைபட்டு நின்றுவிடாமல், விக்ரஹத்தில் உள்ள தெய்வ சக்தியை உணரவேண்டும்.

சடங்குகள் எல்லாமே ஒரு த்யானம் போலவே நிகழ்த்தப்பட வேண்டும். சடங்குகளைச் செய்யும்போது நம்முடைய முழுவிழிப்புணர்வையும் அதில் ஈடுபடுத்தவேண்டும். அப்போது அது, வெறும் சடங்காகவோ, பூஜையாகவோ இல்லாமல், முழு த்யானமாகவே மாறிவிடும்.

Illustration