யார் வேண்டுமானாலும் என்னை அடையலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும் பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோரிடமும் சமமாகவே இருக்கிறேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள், என் நண்பராகி என்னோடு இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பராக இருக்கிறேன்.
பாபியான ஒருவர்கூட, தம்மை பக்திபூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், அவர் ஸாதுவாகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி, முடிவில்லா அமைதி நிலையைப் பெறுகிறார். குந்தி மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!
9. 32 பிரிதாவின்மகனே! என்னை சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும்சரி, - பெண்கள், வைச்யர்கள், வேலை செய்பவர்கள் மட்டுமல்ல பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும்.
9. 33 (பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள் போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு எளிதான காரியம்!
9. 34 உன்னுடைய மனத்தை என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் புக்தி செய், எனக்கே பூஜை செய். என்னையே வணங்கி இரு.
நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன் மூலம் நிச்சயமாக நீ என்னையே அடைவாய்.

குரு இந்தப்ப பூமியில் வாழ்வதும் கருணையின் வெளிப்பாடே
ஒரு ஞானமடைந்த குரு இந்த உலகத்திலிருந்து எதையுமே பெற விரும்புவதில்லை. உயர்ந்த ஞானத்தை உணர்ந்தபிறகு அவர் பொருள்சார்ந்த விஷயங்களைத் தாண்டி சென்று விடுகிறார். அவர் மற்றவர்களிடம் இருந்து எதை விரும்ப முடியும்? இந்த ஸத்யத்திற்குள் மனித குலத்தை விழிக்கச் செய்ய வேண்டும் என்ற தங்களுடைய கருணையின் காரணமாகவே இந்தப் பூமியில் இருக்கிறார்கள்.
குருவின் வார்த்தைகள், செயல்கள் இவற்றில் எல்லாம் அவருக்கு என்று தனிப்பட்ட விருப்பமோ, பயனோ எதுவும் இல்லை என்பதை ஒரு பக்தர் புரிந்துகொள்ளுகிறவரை, அவர் தமக்குள் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருப்பார். அதன் மூலம் தமக்குத்தாமே துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
குருவிடம் ஞானம் பொங்கிப்பெருகிக் கொண்டிருப்பதையும், தம்முடைய கருணையின் காரணமாக மட்டுமே அந்த ஞானத்தை மற்றவர்களுடன் அவர் பகிர்ந்துகொள்கிறார் என்பதையும், அதுவே அவரது இயல்பாக இருப்பதினால்தான் அவர் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ளும்வரை, அவர் குருவைப் பின்பற்றுவதற்கு முன் எப்போதுமே இரண்டு மூன்றுமுறை யோசிப்பார்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உண்மையான குருவானவர் யார்மீதும் பொறாமையுடன் இருப்பதில்லை. இந்த முழு பிரபஞ்சமும் தம்முடைய து என்று குருவிற்குத் தெரியும். அப்படியிருக்க அவர் ஒருவர் மேல் பொறாமைகொள்ள வேண்டிய அவசியம் எங்கே உள்ளது?
பாருங்கள், எப்போது பொறாமை உள்ளே வருகிறது? நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று, நாம் விரும்பும் ஏதோ ஒன்று வேறு ஒருவரிடம் இருக்கிறது என்கிறபோதுதான் பொறாமை தோன்றுகிறது.
நமக்கு அவசியமான தேவையாக இருக்கும்
ஒன்றின் மேல் ஆசைகொள்வதில்
தவறு எதுவும் இல்லை. ஆனால்
மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்
என்பதற்காகவோ அல்லது மற்றவர்கள்
விரும்புகிறார்கள் என்பதற்காகவோ
ஒன்றை நாம் விரும்பும்போதுதான்
பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. நாம்
பிறக்கும்போதே, ஒவ்வொருவரும்
குறிப்பிட்ட ஆசைகளுடனேயே பிறந்து
இருக்கிறோம். அந்த ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான
சக்தியையும் நம்முடன்கொண்டு வந்து
இருக்கிறோம்.

ரமண மகரிஷி மிகவும் அழகாகச் சொல்கிறார். "எல்லா மனிதர்களுடைய தேவையையும் பூர்த்தி செய்கிற அளவிற்கான சக்தியை இந்தப் பிரபஞ்சம் கொண்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு தனிமனிதனுடைய விருப்பத்தைப் பூர்த்திச் செய்வதற்குத் தேவையான சக்தி அதனிடம் இல்லை.''

மற்றவர்களைப் பார்த்து, அவர்களின்
ஆசைகளைப் பார்த்து அவற்றை நமது
குறிப்பேட்டில், நமது வரிசைப் பட்டியலில்
நாம் சேர்த்துக்கொள்கிறோம். அதனால்
மற்றவர்களின் ஆசைகளும் நமது ஆசைகளாக
மாறிவிடுகின்றன.
நம்முடைய பக்கத்துவீட்டுக்காரர் புதிதாகக் குளிர்சாதனப் பெட்டி வாங்கினால், நம் வீட்டின் வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையை உற்று கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய செயல்கள் எல்லாமே, மற்றவர்களின் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துதான் செய்யப்படுகின்றன என்பது தெரியும்; இந்த ஒப்பீடுதல்தான் உங்கள் செயல்களைத் தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
புத்தர் சொல்கிறார், "ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதில்லை.''
நல்லது கெட்டது, உயரம் ஒல்லி, அழகு அகோரம் என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் எல்லாப் பெயரெச்ச சொற்களும் வருகின்றன. நான் சொல்வது சரிதானே?
நீங்கள் மனிதர்கள் இல்லாத தனியான
தீவு ஒன்றில் இருப்பதாக கற்பனை செய்து
பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுடன்
மட்டும் இருப்பீர்கள். அப்போது இந்தச்
சொற்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
உங்களுடன் அதற்கு ஏதாவது தொடர்பு
உள்ளதா?
குருவின் வார்த்தைகள்,
செயல்கள்
இவற்றில் எல்லாம்
அவருக்கு என்று
தனிப்பட்ட விருப்பமோ,
பயனோ எதுவும் இல்லை
கெட்டதான ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் நல்லதாக ஒன்று தெரிகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கையே நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டிருப்பதன் மூலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் நம்மிடம் இல்லாத, ஆனால் நாம் விரும்பும் ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, பொறாமை, எரிச்சல் போன்ற உணர்வுகள் எழுவது இயற்கைதான். அவை வெளிப்பட்டே தீரும்.
உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான பார்வை நம்மிடம் இருந்தால் போதும். மற்றவர்கள் நினைப்பதைப் பற்றியோ அவர்களிடம் இருப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் நம்முடைய தேவைகளை முழுமையாகக்க மட்டுமே நம் சக்தியைச் செல விடுவோம்.
இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தாம் யாரையும் வெறுப்பதில்லை என்று சொல்கிறார். தாம் யாரிடமும் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார்.
பிரபஞ்சம் போன்று உங்களாலும் வாழ முடியும்
சாதாரணமாக நாம், நமக்கு யார் உதவி செய்கிறார்களோ, அவர்களிடம் நல்லவிதமாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறோம். நம் வாழ்க்கைக்கு உபயோகமாக இருப்பவர்களுடன் நட்புடன் இருக்குமாறு, நமது குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குக் கற்றுத்தரப்பட்டுவிடுகிறது. நமக்கு அவர்களிடமிருந்து பிரதிபலனாக என்ன கிடைக்கிறதோ, அதை வைத்துதான் நண்பர்களையே சேர்த்துக்கொள்கிறோம்.
எல்லாமே வியாபார பரிமாற்றம்
போலாகி, தரம் குறைக்கப்பட்டுவிட்டது.
யாராவது நம்முடன் இனிமையாக
நடந்து கொண்டார்கள் என்றால், நாமும்
அவருடன் நல்லவிதமாக இருக்கிறோம்.
யாராவது நம்மைக் காயப்படுத்துவதுபோல்
ஏதாவது சொல்லிவிட்டால், அவர்கள் நமக்கு
எதிரியாகி விடுகிறார்கள்.
நாம் வெளி உலகச் சூழ்நிலைகளால்
அதாவது மற்றவர்கள் சொல்வது, செய்வது
போன்றவற்றால் மிகவும் பாதிப்பு
அடைகிறோம். நம்மிடம் யார், யார் எப்படி
நடந்துகொள்கிறார்களோ, அதை வைத்து
அவர்களை வெவ்வேறு இடங்களில் வைக்கிறோம்.
> அன்பு சக்தி எதையும்
> எதிர்பார்க்காமல்
> தொடர்ந்து
> கொடுத்துக்கொண்டே
> இருக்கும்.
நாம் பிச்சைக்காரர்களாக இருக்கும்வரை, மற்றவர்களை பணக்காரர், ஏழை என்று பாகுபடுத்திப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பிச்சைக்காரர், எப்போதுமே பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் எதைப் பிச்சையாகக் கேட்கிறாரோ, அதைக் கொடுக்கும் நபரைத் தேடிக்கொண்டு இருப்பார்.
அவர் சாலையில் காசுகளுக்காகப் பிச்சை கேட்கிறார். நாமோ கோவிலில் கடவுளிடம் ஏதாவது ஒன்றிற்காகப், பிச்சை கேட்கிறோம். உண்மையில் இவை இரண்டிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை! நாம் யாரிடமாவது எதையாவது தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாம் பிச்சை கேட்கும்போது, நாம் கேட்பதைத் தருபவர்களை நல்லவர்கள் என்கிற பட்டியலில் சேர்க்கிறோம். யார் நாம் கேட்பதைத் தருவதில்லையோ அவர்களையெல்லாம் கருப்புப் பட்டியலில் சேர்க்கிறோம். நாம் தெரிந்தோ, தெரியாமலோ எல்லா நேரங்களிலும் இதுபோலத்தான் செய்கிறோம்.
ஒரு ஜ்ஞான குருவிற்குத் தேவைகள் என்று எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அது முற்றிலுமான மாறுபட்ட ஒரு பந்து விளையாட்டு. அன்பை எப்போதும் வெளிப்படுத்தி அவர் பரவச் செய்கிறார், ஏனென்றால் அதுவே அவரது உண்மையான இயல்பு! யார், யார் அதனைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைகொள்வதில்லை. வெறுமனேகொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

மலையிலிருந்து புறப்படும் நதியானது,
கடலில் சென்று கலக்கும்வரை உள்ள
ஒவ்வொரு பகுதியையும் ஆனந்தமாகக்
கடந்து செல்கிறது. தனது பாதையில்
பலவகையான கற்களையும் புற்களையும் அது
சந்திக்கிறது. பல்வேறு வகை மக்கள் அந்த
நதியில் நீராடுகிறார்கள். ஏன் எருமைகள்கூட
குளிக்கின்றன. அந்த நதியானது அவர்களை
எல்லாம் வேறுபடுத்தி பார்க்கிறதா?
"நான் இந்த இந்த மக்களுக்குத்தான் தண்ணீர் தருவேன்," என்று அந்த நதி சொல்கிறதா? யார் வந்து தன்னைத் தொடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தச் நதி தொடர்ந்து மகிழ்ச்சியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு ஜ்ஞான குருவின் செயல்கள் எல்லாமே இதேபோலத்தான்.
இந்த வழியில், இந்தமுறையில் வாழ்க்கையை நாம் எல்லோருமே வாழ முடியும். இந்தப் பிரபஞ்சம் நமக்குத் தேவையானவற்றை நம் மீது பொழிகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால், பின் நாம் யாரிடமும் சென்று எதற்காகவும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது.
நம்மைச் சுற்றி யார் இருந்தாலும், நாம் தொடர்ந்து அன்பான வார்த்தைகளையே பேசி, அன்பு சக்தியையே நம்மைச் சுற்றி பரவச் செய்வோம். நாம் எங்குச் சென்றாலும் நேர்மறை சக்தியின் மூலப்பிறப்பிடமாக நாம் இருக்கத் தொடங்குவோம். அந்த சக்தி எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.
பிரபஞ்சமே நம் தோழனானால் வாழ்க்கையே கொண்டாட்டம்தான்
இப்போது கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "ஒருவர் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்து இருந்தாலும், பக்திபூர்வமான சேவையில் ஈடுபடும்போது அவர் தர்மவானாகிறார். அவர் விரைவில் அழிவில்லாதவராகி, நிலையான முடிவில்லாத விழிப்புணர்வு நிலையை பெறுகிறார். ஓ கௌந்தேயா (குந்திமகனே), என் பக்தனுக்கு என்று மே அழிவில்லை என்பதை துணிவுடன் அறிவிப்பாயாக!"
தம்முடைய பக்தனுக்கு என்றும் அழிவில்லை
என்று கிருஷ்ணர் சொல்கிறார். "நான் உனக்கு
மட்டும் இதனை வெளியிடவில்லை. நீ
இதனை இந்த முழு உலகத்திற்கும் அறிவிப்பு
செய் என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை,"
என்று அவர் சொல்கிறார்.
அவர் இந்த வரிகளில் சொல்கிறார்.
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சாஶ்வச்சான்திம் நிகச்சதி |
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணஶ்யதி ||
எவர் விரைவில் நல்லொழுக்கம் உள்ளவராக மாறி இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்கிறாரோ, அவர் நிலையான ஆனந்தத்தில் நுழைந்து நித்யானந்த நிலையை அடைகிறார். குந்தி மகனே, அவர் நிலையான விழிப்புணர்வு நிலையை அடைகிறார், இதனை துணிவுடன் அறிவிப்பாயாக.
ப்ரதி ஜாநீஹி என்பதன் பொருள் 'துணிவுடன் உறுதிப்படுத்து' என்பதாகும்.
மீண்டும், மீண்டும் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சம் புத்திசாலித்தனம் நிறைந்தது. தயவு செய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு என்று மே அழிவில்லை. உங்களுக்கு என்றுமே மரணம் கிடையாது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்காவது, வேறு ஏதாவது வடிவில் நீங்கள் இருந்துகொண்டு இருப்பீர்கள். இந்த உடல் வேண்டுமானால் போய்விடலாம்; ஆனால் நீங்கள் என்றுமே இருந்துகொண்டு இருப்பீர்கள்.
இந்த முழுப் பிரபஞ்சமும் புத்திசாலித்தனம் நிறைந்தது. இந்த அண்டவெளி படைப்பு சக்தியானது புத்திசாலித்தனமானது என்பதை நாம் புரிந்துகொண்டவுடன், நமது வாழ்க்கை முழுவதுமே, நாம் விரும்பியதை அடையும்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம். நமது மொத்த வாழ்க்கையுமே ஆசீர்வாதமாக மாறிவிடுகிறது. நமக்கு என்ன குறைவாக இருக்கிறதோ, அவை கொடுக்கப்படும். நம்மிடம் என்ன உள்ளதோ, அது பாதுகாக்கப்படும்.
நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். கேளுங்கள்.
“இன்றிலிருந்து நான் ஆனந்தமான மனநிலையில், ஆனந்தம் தரும் வழிகளில், முழுமையான ஆனந்த உணர்வில் வாழ்வேன்,” என்று இப்போதே முடிவெடுங்கள். நீங்கள் லஷ்மியை வசீகரித்து உங்களிடம் ஈர்ப்பீர்கள் என்று நான் உங்களிடம் ஸத்யம் செய்கிறேன். நீங்கள் செல்வத்தை ஈர்ப்பீர்கள். தங்கம் செய்பவரைவிட அதிகமாக நீங்கள் உருவாக்குவீர்கள்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த முழுப் பிரபஞ்சமும் சக்தி; இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒரு மாபெரும் சக்தி என்கிற ஸத்யத்தை ஆழ்ந்து நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்றால், யோகமும் 6 க்ஷமமும் உங்கள் வாழ்வில் நடக்கும்.
சாமி, என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து உங்களுக்குச் சொல்கிறேன். என்னால் பல மிகச்சிறந்த பக்தர்களைப் பற்றிச் சொல்ல முடியும். அவர்களின் வாழ்க்கையில் தெய்வீகமே இறங்கி வந்து அவர்களுக்கு சேவை செய்ததையும், தெய்வீகம் அவர்களைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொண்ட நிகழ்வுகளைப் பற்றியும் ஏராளமாகச் சொல்ல முடியும்.

மீராபாய் அன்னைக்கு விஷம் அளிக்கப்பட்ட
உடனேயே ஸ்ரீகிருஷ்ணபகவானே இறங்கி
வந்து அவரைக் காப்பாற்றினார். இதைப்
போன்றே கோடிக்கணக்கான கதைகளை
என்னால் விவரிக்க முடியும்.
ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையில்
நடந்த ஒரு நிகழ்வை இப்போது உங்களுக்குச்
சொல்கிறேன். நான் என்னுடைய பதினேழாவது
வயதில் வீட்டைவிட்டு வெளியில் சென்றேன்.
பணத்தைத் தொடாமல் என் வாழ்க்கையை
நடத்தத் தொடங்கினேன். ஒரு சின்ன தண்ணீர்
பாத்திரம், இரண்டு துண்டு துணிகளுடன்
இந்தியாவின் பல பாகங்களுக்கும் நடந்தே
சென்று கொண்டிருந்தேன்.
உணவிற்காக பிக்ஷை எடுத்துக்கொண்டு, மர நிழலில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். நான் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது தெய்வம் என்னை எப்போதும் காத்துக் கொண்டிருந்தது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உங்களுக்குத் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் தெய்வம் உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் உறுதியான ஸத்யம்.
இந்த அண்டவெளி
படைப்பு சக்தியானது
புத்திசாலித்தனமானது
என்பதை நாம்
புரிந்துகொண்டவுடன்,
நமது வாழ்க்கை
முழுவதுமே,
நாம் விரும்பியதை
அடையும்படி
ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
இந்த ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொண்டால் போதும். நாம் இந்த உலகில் மட்டும் அல்ல, எங்குச் சென்றாலும் சரி பாதுகாக்கப்படுவோம். பிரபஞ்ச இருப்பு நிலை தொடர்ந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறது, நம்மைப் பற்றிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது என்கிற உணர்வில் நாம் அமைதியாக இருக்கத் தொடங்குவோம்.
முழுமை நமது பகைவன் என்று எண்ணும்போது நாம் தொடர்ந்து அதை எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். முழுமை நம்முடைய நண்பன் என்று நாம் உணர்ந்துகொள்ளும்போது, நாம் ஓய்வாக முழுமையைக் கொண்டாடத் தொடங்குகிறோம். நம் வாழ்க்கையை சொர்க்கம் அல்லது நரகமாக்குவது, இந்த ஒரு ஸ்லோகத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தது; பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் புரிந்துகொண்டு, அதை முழுமையாக நம்புவதைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது.
இந்த முழு அத்தியாயமும் வெளிப்படுத்தும் ஒரே ரகசியம் இதுதான். இந்த முழுப் பிரபஞ்சமும், இந்தப் படைப்புச் சக்தியும் புத்திசாலித்தனத்தைக் கொண்டது என்பதுதான் அது. அது நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்ப, எதிர்ச்செயல் புரிகிறது; அது, மீண்டும் மீண்டும் நம் கனவுகள், எண்ணங்கள், நம்முடைய உணர்வுகளுக்குப் பதில் அளிக்கிறது.
