அஹங்காரத்தைத் தியாகம் செய்வதே நிஜமான தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடவுளின் முன் நிகழ்த்தப்படும் சடங்குகள், யாகங்களைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் பற்றி மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் பேசுகிறார். பெரும்பான்மையான மக்கள் கோயிலுக்குச் சென்று வெவ்வேறு வகையான யாகங்கள், தான தர்மங்களைச் செய்கிறார்கள். இந்த யாகங்களைப் பற்றிய ஆழ்ந்த அர்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
கணக்கிலடங்காத மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் நூற்றியொரு தேங்காய்களை எடுத்துச் சென்று கடவுளின் முன் உடைக்கிறார்கள். திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோயிலில் மக்கள் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். முடி காணிக்கை செய்வதின் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் முடி காணிக்கை செலுத்தி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் எதுவும் நடக்கப் போவதில்லை.
நாம் எதையாவது காணிக்கையாகக் கொடுக்கும்போது, நாம் எதையாவது தியாகம் செய்யும்போது அந்தச் செயல் நம் அஹங்காரத்தை சரணாகதி செய்வதைக் காட்டுகிறது. திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும்போது, நம்முடைய அஹங்காரத்தை வெங்கடேச பெருமாளிடம் சரணாகதி செய்கிறோம். தேங்காய் உடைக்கும்போது, நம்முடைய அஹங்காரத்தின் ஓடுகள் துண்டு துண்டுகளாக உடைக்கப்படுகின்றன.
முழுமை நம்முடைய நண்பன் என்று நாம் உணர்ந்துகொள்ளும்போது, நாம் ஓய்வாக முழுமையைக் கொண்டாடத் தொடங்குகிறோம்.
ஆனால் பொதுவாக என்ன நடக்கிறது? நாம் எதையாவது காணிக்கையாகக் கொடுக்கும் போது, மற்றவர்களிடம் நாம் பெருமையாக நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று சொல்கிறோம். இன்றைய நாட்களில், நாம் திருப்பதிக்குச் சென்று தலை மழிக்கப்பட்ட மொட்டைத் தலையுடன் வருவதைப் பார்த்து மற்றவர்கள் "ஆஹா, அவர் திருப்பதிக்குச் சென்று, தம் பக்தியின் மிகுதியால் தம் தலை முடியை மழித்துக் கொண்டு வந்து இருக்கிறார்,'' என்பார்கள்.
மற்றவர்கள் இப்படி நம்மைப் பற்றி
சொல்வதைக் கேட்டவுடன் நம் அஹங்காரம்
மேலும் அதிகமாகிவிடும். நாம்
இம்மாதிரியான தியாகங்கள் செய்யும்போது,
நாம் ஏதோ பெரியதாகச் செய்துவிட்டதாக
நினைத்துக்கொள்கிறோம். நாம் செய்யும்
தியாகங்கள் எல்லாமே நம் அஹங்காரத்தை
ஊக்கப்படுத்துவதற்காகத்தான்
செய்யப்படுகிறது.
ஏராளமான மக்கள் கோயில்களுக்கு பெரிய தொகைகளைத் தானமாகக் கொடுப்பார்கள். அவர்கள் கருவறைக்குத் தேவைப்படும் இருக்கைகள், திரைச்சீலைகள், விளக்கு கள் என்று பல பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் தானமாகத் தருகிறார்களோ, அவற்றின் மேல் தங்களின் பெயரை வண்ண மையினால் எழுதுவார்கள்! கருவறைத் திரைச்சீலைகளில் அவர்களின் பெயர் தைக்கப்பட்டு இருக்கும்.
பல கோயில்களில், பளிங்குக் கல் பலகையில் கொடுத்தவரின் பெயரும் அவர் கொடுத்த தொகையும் பதிக்கப்பட்டு இருக்கும். நம்மைப் பற்றி விளம்பரம் செய்வதற்காகவே கொடுக்கப்படும் இத்தகைய தானங்களால் என்ன பயன்?
முழு நன்றியுணர்வுடனும் சரணாகதியுடனும் ஒரு தியாகம் நிகழ்த்தப்பட்டால் அது மிகவும் சிறந்தது. அஹங்காரத்தினால் செய்யப்பட்டால், அதனால் எந்தவிதமான பலனும் கிடையாது. பேராசையின் காரணமாகச் செய்யப்பட்டால், அது உபயோகம் இல்லாதது. அவர்களின் பெயர்கள் கோயில் சுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தால், தாங்கள் சொர்க்கம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
நான், ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் குழுவை இமயமலைக்கு அழைத்துச் செல்வேன். அங்குக் கோயில்களில் பல பண்டிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், "நீங்கள் ஒரு பசுவைச் சிவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தால், நிச்சயமாகச் சொர்க்கம் செல்வீர்கள்," என்பார்கள். அந்தக் காணிக்கைக்குப் பண்டிதர்கள் பெரும்தொகையைக் கட்டணமாகக் கேட்பார்கள்.
நாம் அடுத்த வருடம் செல்லும்போது, அதே பசு மறுபடியும் காணிக்கையாகத் தரப்படுவதைப் பார்ப்போம். எத்தனை முறை இந்த பசு
சிவனுக்கு காணிக்கையாகத் தரப்படுகிறது
என்பதையும் அந்த நபர் அதை வைத்து
எவ்வளவு பணம் சம்பாதித்துக்கொள்கிறார்
என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
முழு நன்றியுணர்வுடனும்
சரண்ாகதியுடனும்
ஒரு தியாகம்
நிகழ்த்தப்பட்டால்
அது மிகவும் சிறந்தது.
கோயிலுக்குத் தானம் கொடுப்பது
இப்போதெல்லாம் ஒரு வியாபாரமாக
மாறி இருக்கிறது. அது இரண்டு வழிகளின்
வியாபாரமாக மாறிவிட்டது.
அஹங்காரத்தினால் செயல்படுபவர்கள் கடவுளிடம் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், "நான் கோயிலுக்கு மிக அதிகமாகப் பணம் தானம் செய்கிறேன். எனக்கு என்று சொர்க்கத்தில் ஒரு இடம் தந்து விடுங்கள்," கோயில்களில் இப்படித்தான் தானச்செயல்கள் நடக்கின்றன.
மற்றொரு வகையான மக்கள் கோயிலின் வாசலில் உட்கார்ந்துகொண்டு தானம் செய்வதற்கு வேண்டியவற்றை வைத்துக்கொண்டு பணம் பண்ணுகிறார்கள். அவர்கள் "நீங்கள் தானம் செய்தீர்கள் என்றால், உங்களுக்கு நிச்சயமாக சொர்க்கத்தின் வாசலில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும்," என்று அவருக்கு உறுதி தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
மேலும் ஒரு விஷயம், ஒவ்வொரு கோவிலிலும் பலவிதமான கடவுள்களும், தேவதைகளும் இருக்கிறார்கள். மக்கள் ஒரு குறிப்பிட்ட தேவதைக்குக் காணிக்கையைச் செலுத்துகிறார்கள். அது சரியே! ஆனால் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் நாம் அந்த ஒரு தேவதையிடம் மட்டும் பிரார்த்தனை செய்யவில்லை என்பதே!
அந்தக் கடவுளின் பின்னால் உள்ள எங்கும் பரவி உள்ள சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதே பிரபஞ்ச சக்திதான் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தை நாம் ஒருமுறை சரியாகப் புரிந்துகொண்டு விட்டால்போதும். நாம் எந்தத் தியாகத்தைச் செய்தாலும், எந்தத் தெய்வத்திற்குச் செய்தாலும், எல்லையில்லாத அந்தப் பிரபஞ்ச சக்திக்குத்தான் நாம் தியாகம் செய்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
உன்னதமான பக்தி பாறையையும் சிவனாக்கிவிடும்
"காணிக்கைகள் கொடுப்பது, வேண்டுதல்களைச் செய்வது தவறா? ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்குப் பூஜைகள், வேண்டுதல்களைச் செய்வது தவறா?" என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.

கிடையாது. அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த ஒரு கடவுளுக்கு மட்டும் நாம் பூஜைகளையும் காணிக்கைகளையும் செய்யவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான் முக்கியம். நாம் அதையும் தாண்டிச் செல்லவேண்டும். நாம் நம்முடைய இருப்பு நிலையில் இருந்துகொண்டு தானதர்மங்களைச் செய்தோம் என்றால், பிரபஞ்ச சக்தியுடன் நாம் ஒன்றுகலந்து விடுவோம்.
ஒரு தெய்வத்திற்கும் மற்றொரு தெய்வத்திற்கும் நடுவில் வேறுபாடுகளை பார்க்கமாட்டோம். எல்லாத் தெய்வங்களும் நமக்கு ஒன்று போலவே தெரியும்.
நாம் அனைத்தையும் கிருஷ்ணராகவும் ஏசுவாகவும், ராமராகவும், புத்தராகவும் பார்ப்போம். அதைத்தான் கிருஷ்ணர் இங்கு சொல்கிறார், எல்லா தானதர்மங்களையும் ஏற்றுக்கொள்பவர் அவர் ஒருவரே!
நம்மைச் சுற்றி உள்ள அனைத்திலுமே ஊடுருவி, கலந்து பரவி நிற்கும் அவருடைய எல்லையற்ற இயல்பை நாம் புரிந்துகொண்டு, வெறும் ஒரு பாறையின் முன், நம் இருப்பு நிலையிலிருந்து முழு ஈடுபாட்டுடன் ஒரு சிறு பொருளைக் காணிக்கையாக வைக்கும்போது, அதுவே பெரிய தான தர்மங்களுக்குச் சமமானதுதான்!
எந்தத் தியாகத்தைச்
செய்தாலும்,
எந்தத் தெய்வத்திற்கு
செய்தாலும்,
எல்லையில்லாத அந்தப்
பிரபஞ்ச சக்திக்குத்தான்
நாம் தியாகம்
செய்கிறோம்
அந்தப் பாறை சிவனைப்போன்றோ அல்லது கிருஷ்ணரைப் போன்றோ வடிவமைத்து இருக்க வேண்டியதில்லை. அந்தப் பாறைக்குப் பெயர் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் அந்தப் பாறைக்குப் பின்னால் இருக்கும் சக்தியைப் பார்க்கிறோம்.
இந்த இரண்டு ஸ்லோகங்களையும் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் நம்முடைய விருப்பம்போல் செயல்களைச் செய்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்கு இந்த ஸ்லோகங்களைமேற்கோள்காட்டுவோம். நம் விருப்பத்திற்கேற்ப, அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம். ஸ்ரீகிருஷ்ணர் நம் விருப்பப்படி எல்லாம் செயல்களைச் செய்வதற்கு இங்கு அனுமதிச் சான்றிதழ் தரவில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். சமுதாயம் கற்றுத்தந்த வழியில் நாம் செய்யும் செயல்களை நல்லது கெட்டது, தர்மம், பாவம் என்று பாகுபடுத்தி பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் மனசாட்சியின்படிதான் செயல்படுகிறீர்கள். எந்தச் செயலுமே அதனளவில் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருப்பதில்லை. முழுச் சூழ்நிலையையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். செயல் வேண்டுமானால் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால் சூழ்நிலை முற்றிலும்மாக மாறுபட்டு இருக்கும்.
விழிப்புணர்வோடு செய்யும் எல்லாமே தர்மமே
ஒரு சின்ன கதை:
ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கிராமத்து மக்களை,
> நாம் நம்முடைய
> இருப்பு நிலையில்
> இருந்துகொண்டு
> தானதர்மங்களைச்
> செய்தோம் என்றால்,
> பிரபஞ்ச சக்தியுடன்
> நாம்
> ഒന്നுகலந்துவிடுவோம்.
அவர்கள் அதனைத் தொல்லை செய்யாமல் இருந்தால்கூட, அவர்களை எல்லாம் கடித்து வந்தது. அதனிடம் நெருங்கிச் செல்வதற்கு யாருக்குமே தைரியம் இல்லை. அது தங்கியிருந்த பகுதி முழுவதுமே பயத்துடன் பார்க்கப்பட்டது. யாருமே அந்தப் பகுதிக்குள் நுழையவில்லை.
ஒருநாள் துறவி ஒருவர் அந்தக் கிராமத்தின் வழியாகச் சென்றார். அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குக் கிராமத்தினர் யாரும் வருவதில்லை என்பதைப் பார்த்தார். அவர்களிடம் விசாரித்ததில் அங்கு உள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டார்.
அவர் அந்தப் பாம்பிடம், "நீ ஏன்
எல்லோரையும் கடிக்கிறாய்? உன்னைப்
பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்!
சீற்றத்துடன் இருப்பதால் உனக்கு என்ன
லாபம்?" என்று கேட்டார்.
துறவி சொல்வதைக் கேட்டவுடன் பாம்பு,
அன்றிலிருந்து தம்முடைய தவற்றைத்
திருத்திக்கொள்வதாக ஸத்யம் செய்தது.
நாட்கள் சென்றன. மெல்ல மெல்லக் காட்சி கள் மாறத் தொடங்கின. அந்தப் பாம்பு மற்றவர்களுக்குத் துக்கம் கொடுப்பதை விட்டுவிட்டது. அது அமைதியாக ஒரே இடத்தில் படுத்து இருந்தது. மக்கள் ஒரு குச்சியைக்கொண்டு பாம்பைக் குத்திப்பார்த்து, அது உண்மையில் சாந்தமாகிவிட்டதா என சோதிக்கத் தொடங்கினார்கள். அந்தப் பாம்பு எந்த எதிர்ச்செயலும் செய்யாமல் இருந்தது.
இப்போது அவர்கள் பாம்பைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். கிராமத்துக் குழந்தைகள் அதன் மீது கற்களை எறிந்தார்கள். அதைச் சிறுமைப்படுத்தி விளையாடத் தொடங்கினார்கள். அந்தப் பாம்பு அமைதியாக இவற்றையெல்லாம் அனுமதித்தது. ஒரு முறைகூட சீறவில்லை.
விரைவில் அந்தப் பாம்பு சிறுத்துப்போய் வலிமையையும் வாழ்க்கையையும் இழக்கத் தொடங்கியது.
சில மாதங்கள் கழித்து அந்தத் துறவி மறுபடியும் அந்தக் கிராமம் வழியாக வந்தார். அந்தப் பாம்பின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பாம்பிடம் என்ன நடந்தது என்று கேட்டார். அந்தப் பாம்பு நடந்தவற்றையெல்லாம் அவரிடம் சொல்லியது.
"நான் உன்னைக் கடிக்கவேண்டாம் என்று தானே சொன்னேன். நீ சீறக் கூடாது என்று சொன்னேனா?" என்று கேட்டார்.
பாருங்கள். மனசாட்சியின் நிலையில் இருந்து செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும். ஏனென்றால் யாராவது ஏதாவது சொன்னார்கள் என்றால், நாமும் உடனே தற்போது உள்ள சூழ்நிலையைப் பார்க்காமல் கண்முடித்தனமாக அதனைப் பின்பற்றத் தொடங்கி விடுவோம். நாம் நமக்குத் துக்கத்தை வரவழைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தில் அந்தப் பாம்பு துறவி சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டது. அதனால் அது துன்பத்தை அடைந்தது.
விழிப்புணர்வுடன் செயல்படும் ஆழமானப் பகுதி ஒன்று உண்டு. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மனசாட்சி என்பது விழிப்புணர்விலிருந்து வேறுபட்டது. விழிப்புணர்வின்போது நாம் தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையை அடைகிறோம்.
நமக்குள் விழிப்புணர்வு மலரும்போது, நாம் என்ன செய்யவேண்டி உள்ளது என்பதையும் அந்த நேரத்தில், அந்த இடத்தில் எது சரி என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். இது நிகழும்போது எதையெல்லாம் நாம் செய்கிறோமோ, அது எல்லாமே எல்லோருக்குமே நல்லதாக முடியும்.
சமுதாய சட்டதிட்டங்களை மீறுவதுபோல ஒரு செயல் தெரிந்தாலும் அது எப்போதுமே நன்மைக்காகவே. அது சமுதாயத்திற்குத் தெரியாமல் இருக்கலாம். எப்படியானாலும் விழிப்புணர்வோடு செயல்படும் ஒருவர் எப்போதும் மனிதநேயத்தின் நன்மைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.
கிருஷ்ணர் அசுரர்களைக் கொல்வது பார்ப்பதற்குக் கொலை செயல்போல் தெரியலாம். ஆனால் அப்படிச் செய்ததினால் அவர் ஸத்யத்தையும் தர்மத்தையும் நிலைநிறுத்தினார்.
உண்மையான பக்தியில் பக்தரும் கிருஷ்ணராகி விடுவார்
விழிப்புணர்வு
மலரும்போது,
எதையெல்லாம் நாம்
செய்கிறோமோ,
அது எல்லாமே
எல்லோருக்குமே
நல்லதாக முடியும்.
உண்மையில் கிறிஸ்துக்கூட இதைத்தான்
சொன்னார். ஒருவன் கிறிஸ்துவின் உணர்வில்
இருந்து எதைச் செய்தாலும் நல்லதாகவே
செய்கிறார். அவர் பாதுகாக்கப்படுகிறார்.
உண்மையில் 'கிறிஸ்து விழிப்புணர்வைப்'
பற்றிதான் அவர் பேசியுள்ளார். ஆனால்
சமுதாயம் அதை 'மனசாட்சியின் நிலை'
என்று தவறாகப் புரிந்துகொண்டது.
அதன் காரணமாகவே தேவாலயங்களில்
பாவமன்னிப்பு என்கிற அமைப்பு
உருவாகியது. மக்கள் அதை ஒரு
அனுமதியாக எடுத்துக்கொண்டு தாங்கள்
விரும்புவதை எல்லாம் செய்கிறார்கள்.
ஏனென்றால் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால்,
அது அவர்களை விடுதலை செய்துவிடும்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், பக்தி முதிரும்போது விழிப்புணர்வு மலர்கிறது. பக்தி பழுக்காமல் இருக்கும்போது வேண்டுமானால் அது ஞானத்திலிருந்து வேறுபட்டுத் தெரியலாம்.
> விழிப்புணர்வோடு
> செயல்படும் ஒருவர்
> எப்போதும்
> மனிதநேயத்தின்
> நன்மைக்கு எதிராக
> எதுவும் செய்ய முடியாது.
ஆனால் பக்தியும் ஞானமும் அவை பழுக்கும்போது சந்தித்துக்கொள்ளும் இடம் ஒன்றுதான்.
அவருடைய பக்தனுக்கு என்று மே அழிவில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். பக்தி என்றால் தினமும் கிருஷ்ணரின் படத்திற்குப் பூஜைகள் செய்து, கற்பூரம் காட்டி விளக்கு ஏற்றிவைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்வது மட்டும் இல்லை.
ஒருவர் கிருஷ்ணரின் உண்மையான பக்தனாக இருந்தால், அவர் கிருஷ்ணராகவே ஆகி விடுகிறார். அவர் கிருஷ்ண உணர்வை அனுபவமாக அடைகிறார். எல்லையற்ற முடிவான விழிப்புணர்வு நிலை என்பது, நல்லது கெட்டது, தீயவை சிறப்பானவை என்று எதுவும் இல்லாமல் இருப்பது.
பக்தியைத் தவிர எந்தவொரு தகுதியும் தேவையில்லை
பக்தி, அறிவு, ஜ்ஞானம் எல்லாமே பழுக்காதபோது வெவ்வேறுாக தெரியும். அவை முதிர்ச்சி பெறும்போது ஒன்றாகிவிடும். ஒருவர் உண்மையான ஜ்ஞானத்தை பக்தியின் உச்சத்திலோ, அறிவின் உச்சத்திலோ அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ளுகிறார்.
திரிவேணி சங்கமத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் அதனை ப்ரயாக் என்பார்கள். அலகாபாத்திற்கு அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி என்கிற மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் அது. முதல் இரண்டு நதிகள் நம் கண்களுக்குத் தெரிந்து பாய்கிறது. மூன்றாவது நதி பூமிக்கு அடியிலேயே நம் கண்ணுக்குத் தெரியாமல்தான் பாய்ந்து வருகிறது. ஆனால் யமுனை, கங்கையுடன் சங்கமிக்கும் அந்த இடத்திற்கு வரும்போதுதான் நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
கங்கை, சிவபெருமானின் நதி, அது அறிவைக்
குறிக்கிறது. சிவனின் கோயில்கள் எல்லாம்
கங்கைக் கரைகளில் அமைந்து இருக்கும்.
யமுனை ஆறு கிருஷ்ண பகவானுடையது. யமுனை பக்தியைக் குறிப்பது. கிருஷ்ணரின் கோயில்கள் எல்லாம் யமுனை நதி க்ரைகளில் அமைக்கப்பட்ட இருக்கும்.
கங்கையும் யமுனையும் கலக்கும்போது, அறிவும் பக்தியும் சங்கமிக்கும்போது சரஸ்வதி, ஜ்ஞானம் தன்னிச்சையாகவே நிகழ்கிறது! சங்கமிப்பு நிகழாதவரை நம்மால் ஞானத்தைப் பார்க்கவோ, உணரவோ முடியாது. அதனால்தான், சரஸ்வதி சங்கமம் நிகழும்வரை மறைந்து இருக்கிறது!
இந்த இரண்டு ஸ்லோகங்களும் தவறாக விளக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. "எவர் வேண்டுமானாலும், அவர்கள் பெண்களோ, வைச்யர்களோ அல்லது வேலை செய்பவர்களோ அல்லது பாபிகளாக இருந்தாலும்கூட. பக்தியினால் என்னை அடைய முடியும்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தம்மை அடைவதற்கு வேறு முன் தகுதி எதுவும் தேவை இல்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். கிருஷ்ணரின் காலத்தில்கூட வியாபாரங்களுக்கு இடையே பலதரப்பட்ட வேறுபாடுகள் இருந்தன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்கூட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
கிருஷ்ணர் அறிவுபூர்வமான நடைமுறை அணுகுமுறை கொண்டவர். அவர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்தப் பிரிவுகளை அவர் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை.
ஒருமுறை ரமணமகரிஷியிடம் யாரோ ஒருவர்தாம் ஆன்மீகப் பாதையில் நுழைவதற்குத் தகுதியானவரா என்று கேட்டார். அதற்கு இரமணர் அவரிடம், "நீங்கள் இன்னும் சுவாசிக்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டார். அந்த மனிதர் சற்று பின்வாங்கி, "ஆமாம்," என்றார். "அந்த ஒரு தகுதி போதுமானது," என்று ரமண மகிரிஷி சொன்னார். ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதே போதுமானது; அவர் தகுதி பெற்றவராகிறார்.
கிருஷ்ணர் சொல்லும் செய்தியும் இதுவே. கிருஷ்ணரின் உரைகளும் இதனையே வெளியிடுகின்றன. கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலையை அடைய ஒருவருக்குத் தேவையானது எல்லாம் முழுமையான பக்தி மட்டுமே! அவ்வளவுதான். வேறு எதுவும் தேவை இல்லை.
வேதகால அமைப்பில் நடைமுறையிலிருந்த ஜாதிப்பிரிவு என்பது விஞ்ஞானப்பூர்வமானது. அது ஒவ்வொருவரின் ஆற்றலையும் வெளிப்படுத்திப் பரவச்செய்தது. பழங்காலம்தொட்டு இந்து மக்களால் பின்பற்றப்பட்டு வந்த வர்ணம் அல்லது ஜாதிப்பிரிவின் வேர் குருகுல கல்வியில்தான் வேரூன்றி இருந்தது.
உண்மையில் வர்ணம் என்பதின் அர்த்தம் 'வாழ்க்கைத் தொழில்' என்பதே. அது குருவால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப தீர்மானம் செய்யப்பட்டது. பிறப்பினால் வருகிற ஒரு பிறப்புரிமையாக அதைக் கருதாமல் அதாவது பிறப்பின் அடிப்படையில் ஒருவருடைய தொழில் தீர்மானிக்கப்படவில்லை; அந்தக் குழந்தையின் செயல்திறனை அடிப்படையாகக்கொண்டே அதனுடைய தொழில் தீர்மானிக்கபட்டது.
ஒரு குழந்தை குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன் குருவானவர் அதனின் இயல்பான தன்மைகள் எவை என்று பார்க்கிறார். அந்தக்குழந்தையிடம் ப்ராஹ்மணத் தன்மைகள் இருந்ததென்றால், வேத வித்யா, வேத நூல்களைக் கற்றுக்கொள்வதற்கான தீக்ஷை அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டது.
அந்தக்குழந்தையின் தனித் தன்மை, ஒரு க்ஷத்ரியனைப்போல் போர் வீரனுக்குரிய தன்மைகளாக இருந்ததென்றால், அந்தக் குழந்தைக்குப் போர் சம்பந்தமான வீரக் கலை கற்றுத் தரப்பட்டது. வைச்ய குணங்கள், வியாபாரத் திறமைகள் காணப்பட்டால், வணிகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சூத்ர தன்மை, வேலை செய்யும் திறமை இருந்தால், சேவைக்கான தீக்ஷை அளிக்கப்பட்டது. நான்கு வேலைபாங்குகளுமே சம நிலையான மதிப்பும், சமமான மரியாதையும் பெற்றிருந்தன.
> அறிவும் பக்தியும் சங்கம்மிக்கும்போது சரஸ்வதி, ஷ்ஞானம் தன்னிச்சையாகவே நிகழ்கிறது! துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் இவ்வகையான நடைமுறை வழக்கம், பிறப்புரிமையாக மாறிவிட்டது.
ஒரு போர்வீரனின் மகன் ஒரு போர்வீரனாகவே பார்க்கப்பட்டு அதன்படி வளர்க்கப்பட்டான். அவனது செயல்திறன், சிறப்புகள், ஆர்வம் இவை பார்க்கப்படவில்லை. ஆகையால் இது ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்ற இந்த நான்கு வர்ணங்களையும் ஜாதிப்பிரிவுகளையும் அவரவர்களின் பிறப்புரிமையாகவே கருதுகிற ஒரு உறுதியான சமுதாய கட்டமைப்பாக மாறிவிட்டது.
இந்த விஞ்ஞானப்பூர்வமான நடைமுறை சிதைக்கப்பட்டதன் விளைவு: அது பல சமுதாய ஏற்றத் தாழ்வுகள், சமுதாய அநீதிகள் என்னும் படுகுழிக்குள் நம்மை தள்ளிவிட்டுவிட்டது.
ஒரு ப்ராஹ்மணனின் மகனுக்கு ஆச்சாரியராகவோ, பண்டிதராகவோ ஆகும் அளவு கற்கும் திறன் இல்லை என்றால், தன்னை ப்ராஹ்மணன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி அவனுக்குக் கிடையாது.
ப்ராஹ்மணருக்கு மட்டும்தான் உரிமை என்று சொல்லப்பட்ட சடங்குகளைச் செய்வதற்கு நமது ஆசிரமத்தில் உள்ள பல்வேறு ஜாதி, மதப் பிரிவுகளைச் சார்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது நமது ஆச்'ரமத்தில், பல ப்ராஹ்மசாரிகளும் ப்ராஹ்மசாரிணிகளும், இந்து மதம் இல்லாதவர்கள்கூட, பூஜை செய்யும் பூஜாச்சாரியார்களாக இருக்கிறார்கள். இந்த இளம் பூஜாச்சாரியார்கள் எந்த வகையிலும் ப்ராஹ்மணர்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை.
வேதகால அமைப்பில்
நடைமுறையிலிருந்த
ஜாதிப்பிரிவு என்பது
விஞ்ஞானப்பூர்வமானது.
அது ஒவ்வொருவரின்
ஆற்றலையும்
வெளிப்படுத்திப்
பரவச்செய்தது.
கிருஷ்ணன் இங்கே சொல்லும் குறிப்பு என்னவென்றால், ஒருவர் எந்த ஜாதியினராக இருந்தாலும் சரி, அவர் கிருஷ்ணரின் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டிருந்தால் போதும், அவரை அடைய முடியும். ப்ராஹ்மணனின் வாழ்க்கை முறைப்படி ஒருவர் செல்லாவிட்டாலும், அவர்கூட அந்த இறுதியான விழிப்புணர்வை அடைய முடியும்; அனுபவிக்க முடியும்.
ஒரு நபர் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவரது உள்வெளி தூய்மையாக இருந்துவிட்டால் போதும், அவர் கிருஷ்ணரின் உணர்வு நிலையை அடைந்து அனுபவிக்க முடியும்.
இப்போது ஒரு ப்ராஹ்மணருக்கு வேத நூல்கள் திறந்து வைக்கப்பட்டு விட்டன; இறுதி ஸத்யத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவிட்டன; த்யானப் பயிற்சிகளும் மற்ற ஆன்மீகச் சடங்குகளும் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளும் ஆச்ரமத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுவிட்டன. இப்போது ப்ராஹ்மணத் தன்மையை அடைவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது!
ஒருவர் எந்த
ஜாதியினராக
இருந்தாலும் சரி
அவர் கிருஷ்ணரின் மேல்
பக்தி, நம்பிக்கை
கொண்டிருந்தால் போதும்,
அவரை அடைய முடியும்.
கிருஷ்ணர், யார்வேண்டுமானாலும் தம்மை அடைய முடியும் என்கிறார். அப்படியென்றால் அவரைப் பற்றிய எண்ணங்களிலேயே இடைவிடாமல் ஈடுபட்டு இருக்கும் ஒருவருக்கு அவரை அடைவது எவ்வளவு சுலபம் என்று கற்பனை செய்து பாருங்கள்.
விருப்பத்திற்கேற்ப எதையும் ஈர்க்கலாம்
த்யானம், சடங்குகள் போன்ற எல்லாவகை பயிற்சிகளும் உள்வெளியைத் தூய்மை செய்கின்றன. உள்வெளி தூய்மையாக்கப்பட்டவுடனேயே உணர்வுருமாற்றம் தானாகவே நிகழ்கிறது. ஒருவரின் உள்வெளியில் எந்தவகை மாற்றமும் இல்லாமல், தாம் பல வருடங்களாக த்யானம் செய்து வருவதாக யாராவது சொல்லிக் கொண்டால், அது வெட்கப்படவேண்டிய விஷயம்.
பல சமயங்களில் நிறைய பேர் என்னிடம், "ஸ்வாமிஜி, நான் இருபத்தைந்து வருடங்களாக த்யானம்செய்கிறேன்," என்று சொல்வதுண்டு, இதை அவர்கள் மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். நான் உடனே அவர்களிடம், "இது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. 25 வருடங்கள் த்யானம் செய்தும், இதுதான் உங்கள் நிலையாக இருக்கிறது!" என்று சொல்வேன்.
இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்கிறார்.
"என்னைப் பற்றி நினைப்பதில் மட்டுமே எப்போதும் உன் மனத்தை ஈடுபடுத்து." தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இந்த முழுப் பிரபஞ்சம், இந்த முழுப் படைப்பு புத்திசாலித்தனமானதுதான். அது நமது எண்ணங்களுக்கு பதில் தருகிறது. நம் விழிப்புணர்வுக்கு, நம் இருப்பு நிலைக்கு மறுமொழி தருகிறது.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்.
ஞானமடைந்து, சில நாட்களுக்குப் பிறகு இது நடந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நான் அமர்ந்துகொண்டு இருந்தேன். ஒரு பெரிய பாம்பு எனக்கு அருகில் படுத்துக்கொண்டு இருந்தது. அப்போது நான் கண்ணைத் திறந்தபடி பிரபஞ்ச உணர்வு நிலையில், த்யான நிலையில் பல மணிநேரங்கள் அமர்ந்திருந்தேன். என்னுடைய த்யான நிலையில் இருந்து வெளியே வந்தவுடன் என் மனத்தில் ஏற்பட்ட முதல் எண்ணம், "ஆஹா, இது ஒரு பாம்பு அல்லவா?" என்பதே.
த்யான நிலையில் இருக்கும்வரை அந்த பாம்பைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் எனக்கு இல்லை. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது பாம்பு என்கிற எண்ணம் எனக்கு வந்தவுடன், அந்த பாம்பும் நான் ஒரு மனிதன் என்று உணர ஆரம்பித்தது! தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு, மறுபடியும் குனிந்து ஊர்ந்து அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டது. பாம்பு என்று எனக்குள் ஏற்பட்ட பயம், அதத்துள்ளும் சென்று பாம்பிற்கும் பயத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் பதில் சொல்கிறது. அது தூய்மையான புத்திசாலித்தனம். அதனால் நாம் என்ன எண்ணுகிறோமோ அதில் கவனமாக இருக்கவேண்டும்.
> த்யானம், சடங்குகள்
> போன்ற எல்லாவகை
> பயிற்சிகளும்
> உள்வெளியைத்
> தூய்மை செய்கின்றன.
மற்றவர்களுடன் பேசும்போது, நாம்
முன்ஜாக்கிரதையாகப் பேசுகிறோம்.
அவர்களைக் காயப்படுத்தாமல் இருக்க
வேண்டுமென்பதற்காக, நாம் வார்த்தைகளை
அலங்காரம் செய்கிறோம். ஆனால்
நமக்கென்று வரும்போது, நமது உள்ளத்தைக்
குப்பைத் தொட்டியைவிட மோசமாக
நடத்துகிறோம். கண்ட படியான எண்ண
ஓட்டங்கள், கவலைகள், கட்டுக்கடங்காத
கற்பனைகள் என்று ஏதோ ஒன்று எல்லா
நேரங்களிலும், எப்போதும், தொடர்ந்து நமக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து நடக்கும் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள்போல், இடைவிடாமல் உள்ளே
ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில்
பிரச்சினை என்னவென்றால், நம்முடைய
ரிமோட் சுவிச்சை எங்கே யோ வைத்துவிட்
டதால், அதனை நிறுத்த முடிவதில்லை.
இந்தப் பிரபஞ்சம்
நம்முடைய ஒவ்வொரு
எண்ணத்திற்கும் பதில்
சொல்கிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது உள்வெளியை வைத்தே வெளி உலக நிகழ்வுகள் பிரதிபலிக்கப்படுகின்றன. நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் இந்த முழுப் பிரபஞ்சம் மிக அழகாகப் பதில் அளிக்கிறது. அதனால்தான், நம்முடைய உள் உலகைத் தூய்மையாக வைக்க வேண்டியது மிக அவசியம். உள்ளே இருக்கும் எண்ண ஓட்ட அமைப்பை தூய்மையாக்கி, அதை நேர்மறையாக மாற்ற முடியும்.
நமது எண்ண ஓட்டம் நேர்மறையாக இருக்கும்போது, நாம் நேர்மறையான நிகழ்ச்சிகளையே நம்மிடம் ஈர்த்துக்கொள்கிறோம்.
நன்குபுரிந்துகொள்ளுங்கள், இப்படித்தான் நடக்கிறது. நாம் தொடர்ந்து நமக்கு நோய்கள் வந்து விடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டடும், பயந்துகொண்டும் இருந்தோமானால், அதைப்போன்ற நிகழ்ச்சி களையே நம்மிடம் கவர்ந்து இழுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறோம்.
அதைப்போலவே நாம் தொடர்ந்து சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் இருந்தோமானால், நாம் ஆனந்தமான நிகழ்ச்சிகளையும் சந்தோஷமானவர்களையுமே நம் வாழ்வில் கவர்கிறோம்.
எல்லையற்ற பேரானந்தத்தில் மூழ்கிடலாம்
"என்னைப் பற்றிய நினைவுகளிலேயே உன் மனத்தை எப்போதும் ஈடுபடுத்து!" என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உள்வெளியைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றித்தான் பேசுகிறார். நம்முடைய
மனம் தெய்வீகத்தைப் பற்றிய நினைவுகளிலேயே எப்போதும் இருந்துகொண்டிருந்தால் நாமும் தெய்வீகமாகி விடுகிறோம். இந்த ஸத்யத்தை உணர்ந்துகொண்ட மறுகணமே நாம் எல்லையற்ற, நிலையான ஆனந்த நிலைக்குள் தளர்வாக இருக்கிறோம்.
நாம் நித்யானந்த நிலைக்குள் தளர்வாக இருக்கத் தொடங்கிய மறுகணமே, தெய்வீகம் நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறது. நம்மிடம் இல்லாதவை எல்லாம் நமக்கு அளிக்கப்படுகின்றன; நாம் பெற்றிருப்பவை எல்லாம் நமக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. இயற்கையாகவே நாம் உள் உலகம், வெளி உலகம் இரண்டையுமே உணர்ந்து ஆனந்தமாக இருக்கத் தொடங்குகிறோம். கிருஷ்ணர், அர்ஜூனனுக்குச் சொன்ன முடிவான ரகசியம் இதுதான்.
நமது
எண்ண ஓட்டம்
நேர்மறையாக
இருக்கும்போது,
நாம் நேர்மறையான
நிகழ்ச்சிகளையே
நம்மிடம்
ஈர்த்துக்கொள்கிறோம்.
பரப்ரம்ம கிருஷ்ணரிடம், தெய்வீக
விழிப்புணர்விடம், பிரபஞ்ச
புத்திசாலித்தனத்திடம் நாம் பிரார்த்தனை
செய்வோம் இந்த இரகசியத்தை நமக்கு
புரியவைத்து, உள் உலக மற்றும் வெளி உலக
ஆனந்தத்தை அடைந்து, எல்லையற்ற ஆனந்த
நிலையான நித்யானந்த நிலையை அடைய
அருள்புரியுமாறு வேண்டிக்கொள்வோம்
நன்றி.
கேள்வி: ஸ்வாமிஜி, நம்முடைய ஆசைகளை நாம் எப்படிப் பாகுபடுத்திப் பார்ப்பது, நம்முடைய ஆசைகள் எவை? மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியவை எவை என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது?
இதச் செய்வது மிகவும் எளிமையானது. முதலில், உண்மையிலேயே அது நம்முடைய ஆசையாக இருந்தென்றால், அது நிறைவேறிய பிறகு நமக்குள் முழுத்திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் எப்போதுமே உணர வைக்கும். ஆனால் அதுவே கடன் வாங்கப்பட்ட ஆசையாக இருந்ததென்றால், அது நிறைவேறிய பிறகும்கூட நமக்குள் ஒருவித திருப்தியின்மையையும் அசௌகரியத்தையும் உணர வைக்கும்.
உங்களுக்குள் நீங்கள் என்றுமே ஆழமாக விரும்பி இருக்காத ஏதோ ஒன்றின் பின்னால் ஓடி அதனை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டதைப் போன்று உணர்வீர்கள். இந்த உணர்வு, இயல்பாகவே தன்னுடன் குற்றவுணர்ச்சியையும் திருப்தியற்ற தன்மையையும் கொண்டுவருகிறது. மேலும் நீங்கள் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பதாக உணர்வீர்கள்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், உண்மையில் அது உங்களது சொந்த ஆசையாக இருந்ததென்றால், அந்த ஆசை நிறைவேறுவதற்குத் தேவையான சக்தியையும் அது தன்னுடன் கொண்டு வந்து இருக்கும். அது ஒருமுறை நிறைவேற்றப்பட்டவுடன், அந்தக் கணமே நேர்மறையான உணர்வுகளும் பூரண திருப்தியும் நம்முள் மலர்ந்துவிடும். அத்தகைய ஆசை மேற்கொண்டு உங்களைத் தொல்லைப் படுத்தாது.
அது நிறைவேற்றப்பட்டுவிட்டால், உங்களது இருப்பு நிலையிலிருந்து உதிர்ந்துவிடும்; அதிலிருந்து உங்களை விடுவித்துவிடும்; உங்களைச் சுதந்திரமானவராக உணரச் செய்யும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்த ஆசைகளுக்குப் பதில் அளிக்கப்பட்டவுடன், நாம் முழுமையாக அவற்றிலிருந்து விடுதலை பெற்று விடுகிறோம். இல்லையென்றால், அவை நிறைவேறும்வரை அந்த ஆசைகள்தான் நம்முடைய வாழ்க்கையை வழி நடத்திக்கொண்டு இருக்கும்.
ஆனால் இப்போது பிரச்சினை என்னவென்றால், மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே, நமக்குள் இருக்கிற நம்முடைய ஆழமான விருப்பம் என்ன என்பதைக் கேட்பதற்குத் தேவையான சக்தியையெல்லாம் நாம் வீணாக்கி விடுவதால், இயல்பாகவே சோர்ந்து போகிறோம்.
நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நம்முடைய சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் உணர்வதற்குள், மேலும், மேலும் பல்வேறுவிதமான ஆசைகளை நமக்கு உள்ளே சேர்த்து வைத்து விடுகிறோம்.
அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கான நேரம் கிடைக்காமலேயே, நாம் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விடுகிறோம்.
பிறகு நாம் வேறு ஒரு உடலை எடுத்துக்கொள்கிறோம்; இந்த முழுச் செயல்பாடுகளையும் மறுபடியும் ஒருமுறை செய்ய ஆரம்பிக்கிறோம். இந்தப் பிறவிக்கு ஏற்றவாறு இருக்கும் அதாவது இந்தப்பிறவியில் நாம் அனுபவிக்க நினைக்கும் ஆசைகள் அடங்கிய பொட்டலத்துடன் இந்தப் பூமிக்கு வருகிறோம். ஆனால் மீண்டும், எந்த ஆசைகளைக்கொண்டு வந்தோமோ, அதை நிறைவேற்றுவதற்குப் பதில், மேலும் மேலும் பல புதிய ஆசைகளைச் சேர்ப்பதற்கு சக்தியையும் ஆற்றலையும் செலவிடுகிறோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், எல்லா நேரங்களிலும் அளவுக்கு அதிகமான கனவுகளைச் சேர்ப்பதிலேயே உங்கள் சக்தியைச் செலவிட்டுக்கொண்டு இருந்தீர்கள் என்றால், அவற்றில் ஏதாவது ஒன்றையாவது பூர்த்தி செய்வதற்குத் தேவையான சக்தி எங்கிருந்து, எப்போது உங்களுக்கு கிடைக்கப் போகிறது?
நாம் தொடர்ந்து, நம் வாழ்க்கை முழுவதும் அதிருப்தியாக உணர்வதற்கு இதுவே காரணம். உண்மையில் நாம் என்ன விரும்புகிறோம் என்பதை முதலில் பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். பிறகு அதைப் பூர்த்தி செய்வதற்கான செயல்களை நாம் செய்ய வேண்டும். இந்தச் செயல்முறையை விழிப்புணர்வுடன் செய்தோமென்றால், அங்குப் பகைக்கோ, பொறாமைக்கோ இடமிருக்காது.
நமது இரண்டாவது பயிற்சி முகாமான், நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், இரண்டாவது சக்தி அடுக்கான ப்ராண சரீரத்தின் மீது வேலை செய்யும்போது, எவை எவை நம்முடைய ஆசைகள், எவை எவை கடன் வாங்கப்பட்ட ஆசைகள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான செயல்முறை கற்றுத்தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் പങ്കுகொள்பவர்கள், இப்போது தங்களுடைய ஆசைகள் என்று எதையெல்லாம் நினைக்கிறார்களோ, அவற்றை எல்லாம் ஒரு பட்டியலாக எழுதுவார்கள்.
> நம்முடைய ஆசைகளை
> நிறைவேற்றுவதற்காக
> மட்டுமே
> நம்முடைய சக்தியைப்
> பயன்படுத்த வேண்டும்.
அந்த ப்ராண சரீரம் சார்ந்த த்யான பயிற்சியின் முடிவில் அவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஏனென்றால் அவர்கள் சலிக்காமல் எழுதிய அந்தப் பெரிய ஆசை பட்டியலிலிருந்து பெரும்பாலான ஆசைகள் நீக்கப்பட்டு, இப்போது அவர்கள் நினைவில் மிகக் குறைந்த ஆசைகளே மிச்சமிருக்கும். அவர்களுக்குத், தங்களிடம் இலைகள் நிறைந்த மரம் இருந்தது போலவும் த்யான முடிவில் வாடிய, உரமற்ற எல்லா இலைகளும் உதிர்ந்து, சக்தியூட்டப்பட்ட மிகக்குறைவான இலைகள் மட்டுமே அதில் இருப்பது போலவும் தோன்றும்.
இந்த ப்ராண சரீர தியானத்தின் மூலம், நம்முடைய ப்ாராரப்த கர்ைாவைத் - முற்பிறவியில் இருந்துகொண்டுவந்த ஆசைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.
இவைதான் உண்மையிலேயே
நம்முடைய ஆசைகள் அவை
தங்களைப் பூரணமாக்கிக்கொள்வதற்குத்
தேவையான சக்தியையும் தங்களுடன்
கொண்டுவருகின்றன.
உண்மையில் நாம்
என்ன விரும்புகிறோம்
என்பதை முதலில்
பட்டியலிட்டுக்கொள்ள
வேண்டும்.
பிறகு அதைப் பூர்த்தி
செய்வதற்கான
செயல்களை
நாம் செய்ய வேண்டும்.
இத்தகைய, ப்ாராரப்த கர்மா சார்ந்த ஆசைகள் பூர்த்தி அடைந்த பிறகு, நம்மிடம் கர்மாவின் பந்தம் இருப்பதில்லை. நாம் ஆசைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறோம்.
"ஸ்வாமிஜி நாங்கள் முந்தைய உடலைவிடும்போது, எந்த ஆசைகளுடன் உடலைவிட்டோம் என்பதை மறந்தது எங்களது தவறு இல்லையே!" என்று கேட்பார்கள். ஆமாம். முற்பிறவி ஆசைகள் ஞாபகம் இல்லாமல் போனது உங்கள் செயல் இல்லைதான். ஆனால் உடலைவிடும்போது இருந்த அந்த ஆசைகள், அது உங்களின் செயல்தான். அந்த ஆசைகள் உங்களின் சொந்த விருப்பம். நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், அந்த ஆசைகள் எல்லாம் எவை எவை என்பது புரியும். மேலும் இந்த முறை நீங்கள் வந்ததற்கான முழுக் காரணமும் புரியும்.
அதைவிட்டுவிட்டு, நீங்கள் உங்கள் புலன்களைப் பற்றிக்கொண்டு உங்களின் புலன்கள் மட்டும் இல்லை, உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்களின் புலன்களையும் பற்றிக்கொண்டு பிரபஞ்சத்தைக் குறை சொல்கிறீர்கள். உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் போனதற்கு, பிரபஞ்சம்தான் காரணம் என்று நினைத்தீர்கள் என்றால் எதுவுமே உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் தொடர்ந்து ஸம்ஸார சுழற்சியில், பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
இத்தகைய பெரிய ஸத்யங்களைக் கேட்பதாலும், இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியான நுட்பங்களை பழகுவதாலும், மட்டுமே நீங்கள் எந்த ஆசைகளோடு பிறந்தீர்களோ, அந்த ஆசைகளை மீண்டும் நினைவிற் குக் கொண்டுவந்து, அனுபவித்து முடித்துவிட முடியும். இந்த ஆசைகளின் மீது நம் கவனத்தைக் குவிப்பதன் மூலம், உங்கள் கர்மாவைக் கரைத்து, விடுதலை பெறலாம். அது நடப்பது சாத்தியமே. அதனால்தான், ஞான குருமார்கள், மீண்டும் மீண்டும் இறங்கி வரும் நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. இவை நடக்கக்கூடியவைதான் என்பதை நமக்குக் புரியவைத்து, எப்படி நிகழ்த்துவது என்பதற்கான வழியையும் நமக்கு அவர்கள் காட்டுகிறார்கள்.
ஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு
ப்ரம்ஹவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகோ நவமோ’த்யாய: ॥
ஓம் தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம்' என்னும் பெயர்கொண்ட ஒன்பதாவது அத்தியாயம்.
