ஸத்யம் எப்போதும் ஒன்றுதான், புரிந்துகொள்ளும் காலம்தான் வேறுபடுகிறது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"ஸ்வாமிஜி, இருப்பதெல்லாம் சக்தியே என்று நாம் எவ்வாறு சொல்ல முடியும்? அது ஒருபோதும் முடியாது. இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இவை நடைமுறைப்படுத்த முடியாத ஸத்யங்கள். இருப்பதெல்லாம் கடவுள் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?" என்பதுதான் நம்முள் எழுகிற அடுத்த கேள்வி.
இந்த ஸத்யங்களை நாம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும், மேலும் அதை நாம் அனுபவமாக உணரவும் முடியும் என்ற உண்மையை நம் மனம் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் கிருஷ்ணர் தொடர்கிறார்; அவர் மீண்டும் மீண்டும் இந்த அடிப்படை இரகசியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகிறார்.
இங்கே கிருஷ்ணர், 'அவரை' அடைவதற்கு மக்களிடம் இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மக்களில் யார் யாரால் 'அவரை' அடைய முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். நான் 'அவரை' என்று சொல்லும்பொழுது கிருஷ்ணர் என்ற பெயருள்ள உருவத்தில் இருப்பவரைப் பற்றிச் சொல்லவில்லை.
நான் நித்யானந்தா என்று சொல்லும்போது, ஆறு அடிஉருவில் இருக்கும் இந்த நித்யானந்தரைச் சொல்லவில்லை. இந்த ப்ரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சக்தியை (காஸ்மிக் எனர்ஜி) என்று அழைக்கப்படும் நித்யானந்தத்தை, முடிவிலா ஆனந்தத்தைக் குறிப்பிடுகிறேன்.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், "நான் சொல்லப்போவது மிகப்பெரும் ஸத்யம், நான் உனக்கு வெளிப்படுத்தப்போவது மிகப்பெரிய ரகசியம்," என்று சொல்கிறார் இப்பொழுது, அந்த ரகசியங்களை எப்படிப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
"தர்மத்தில் நம்பிக்கையில்லாத மக்களும், எனது போதனைகளில் நம்பிக்கை இல்லாத மக்களும், ஞானமடையாமல் மறுபிறவி என்னும் பாதைக்கு
மீண்டும் திரும்புகின்றனர்,'' என்கிறார்
கிருஷ்ணர். அவரது போதனைகளில்
நம்பிக்கைகொள்வதே ஒருவருக்கு
இருக்கவேண்டிய 'அடிப்படை தகுதி' என்று
சொல்கிறார்.
பிறப்பு இறப்பு என்னும் விஷச்
சுழற்சியில் இருந்து இத்தகைய மக்களால்
மட்டுமே வெளிவர முடியும். ஆழ்ந்து
புரிந்துகொள்ளுங்கள், நம்பிக்கைகொள்வது
என்பதுதான் ஆன்மீகப் பாதையில்
மிக முக்கியமான விஷயம். குறிப்பாக
ஜீவஞான குருமார்கள் பேசும்போது, அவர்கள்
வலியுறுத்தும் ஒவ்வொரு வார்த்தையும்
ஸத்யம்.
அதனால்நான் நான் தர்க்கத்திற்குப் பொருத்தாத, முரண்பட்ட சில ஸத்யங்களைப்பற்றிப் பேசும்போதெல்லாம் "நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும், புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும்," என்ற வார்த்தைகளைச் சேர்க்கிறேன்.
'முரண்பட்ட ஸத்யங்கள்' என்று நான் சொல்லும்போது, எல்லைக்குட்பட்ட அறிவேகொண்ட சாதாரண மனித மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஸத்யங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
உண்மையில், முரண்பட்ட ஸத்யம்என்று எதுவும் இல்லை. ஸத்யம்எப்போதும் ஸத்யமே. ஸத்யமென்று சொல்லப்படும் செய்திகளில் வேண்டுமானால் முரண்பாடு இருக்கலாம்.
உதாரணத்திற்கு, பூமி உருண்டையானது எனச் சொன்னவர்களை அக்கால மக்கள் கொன்றே விட்டார்கள். ஏனென்றால் அக்காலத்தில் இருந்த மனித மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்று, அது முரண்பட்ட ஸத்யம்; ஆனால் இன்று, அது ஸத்யம்.
நாம் அனைவரும் ஒரே விழிப்புணர்வின் பாகமாக இருக்கிறோம், நாம் அனைவரும் ஒன்றே என்று நான் சொல்லும்போது, உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் உங்கள் மனம் தர்க்க ரீதியான தீர்வையும், அறிவுப்பூர்வமான பதிலையுமே ஒவ்வொன்றிலும் தேடுகிறது. அதனால் நான் என்ன பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் என் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.

அனுபவத்தினால் ஸத்யத்தை நம்புவதே வாழ்வைச் சிறப்பிக்கும்
இன்னும் ஒரு விஷயம்:ஜ்ஞான குருமார்கள் சொல்லும் உபதேசத்தில் நீங்கள் நம்பிக்கைகொள்ள மூன்று நிலைகள் இருக்கின்றன.
முதல் நிலையில், உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இது பொதுவாக ஏற்படக்கூடியதுதான். நான் சொல்வதில், ஜ்ஞான குருமார்கள் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஏனென்றால் நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
nநன்கு கவனியுங்கள், உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கலாம். உண்மையில் உங்களுக்குச் சந்தேகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே, நான் என்ன பேசுகிறேன் என்று நீங்கள் கேள்வி கேட்க முடியும்.
இருந்தபோதிலும், இந்தச் சந்தேகங்கள் நியாயமானவையா என்று நீங்கள் பார்க்க வேண்டும். சந்தேகங்கள், அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை என்றால் உங்கள் மனம் விளையாடுகிறது என்று அர்த்தம். உங்கள் மனம் உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு சுவரை உருவாக்குகிறது.
நீங்கள் உண்மையைத்
தெரிந்துகொள்ளும்
ஆர்வத்தோடு
கேள்வி கேட்கிறவரை,
கேள்விகள் கேட்பது
நல்லதுதான்.
உங்கள் சந்தேகங்கள் நியாயமானவையாக
இருக்கும்வரை, நீங்கள் உண்மையைத்
தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கேள்வி
கேட்கிறவரை, கேள்விகள் கேட்பது
நல்லதுதான்.
என்னுடைய ஸத்சங்கங்களில், மக்களைக்
கேள்விகள் கேட்கவும் சந்தேகங்களை
எழுப்பும்படியும் கேட்டுக்கொள்வதுண்டு.
அப்போதுதான் நீங்கள் முழுவதுமாக
உள்முகப்படுத்தப்படுகிறீர்கள்.
இரண்டாவது நிலையில் இருப்பவர்கள், நாம்
சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள்.
இந்தநிலை ஆபத்தானது.
நீங்கள் தியானம்
செய்தால்தான்,
நான்
பேசுவதைப் பற்றி
அனுபவப்பூர்வமாக
உணர முடியும்.
நான் பேசுவதைப் புரிந்துகொள்ளாமலும்,
அனுபவப்பூர்வமாக உணராமலும்
அப்படியே நம்புவது உங்களுக்கு ஆபத்தை
விளைவித்துவிடும். இது பலவீனமான
அடிப்படையை உருவாக்குகிறது.
‘நீங்கள் கடவுள்’ என்று நான் சொல்லும்
போது, நீங்கள் அதை அப்படியே
நேரடியாக நம்பினால் அது ஆபத்தானது.
ஏனெனில் அதை நீங்கள் இன்னுமும்
அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கவில்லை.
உங்களது நம்பிக்கை பற்றி யாராவது கேள்வி கேட்டால், உங்களால் அவர்களுக்கு உறுதியான வகையில் பதில் சொல்ல முடியாது. நீங்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவீர்கள். திக்கித் திணறுவீர்கள். உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக்கொள்வீர்கள்.
என் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வரும் பலரை எனக்குத் தெரியும். “நீங்கள் தியானம் செய்கிறீர்களா,” என்று கேட்டால், அவர்கள் திக்கித் திணறி, “இல்லை ஸ்வாமிஜி, எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது! அதற்கெல்லாம் நேரம் இல்லை!” என்று பதிலளிக்கின்றனர்.
மேலும், “நாங்கள் தினமும் உங்களை வணங்குகிறோம் ஸ்வாமிஜி, உங்களுக்குப் புதிய மலர்களைப் படைக்கிறோம். மணமுள்ள பத்தி ஏற்றுகிறோம்,” என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏதோ எனக்கு மிகப்பெரும் உதவி செய்வதுபோல் பேசுவார்கள்.
இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்களே. இவர்களின் அடிப்படை ஆதாரம் பலவீனமானது; அவர்கள் தியானம் செய்தால் மட்டுமே நான் பேசுவதைப் பற்றி அனுபவப்பூர்வமாக உணர முடியும். இல்லாவிட்டால், இவர்கள் சாதாரண நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே.
நம்பிக்கை திடமானால் ஸத்யங்கள் அனுபவமாகும்
மூன்றாவது வகையினர், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். நீங்கள் என்னிடம் நம்பிக்கைகொள்ளும்போது, நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள். ஆனால் உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் உள்ளன.
இருந்தபோதிலும், நீங்கள் இந்தச் சந்தேகம் என்னும் சுவரை உடைக்க முயற்சி செய்கிறீர்கள்.
நான் சொல்வதை அனுபவபூர்வமாக உணர முயற்சி செய்கிறீர்கள்.
என்னிடம் ஆழ்ந்த நம்பிக்கைகொள்வதால், உங்கள் அடிப்படை ஆதாரத்தைப் பலமாக அமைக்கிறீர்கள், இதுதான் நம்பிக்கை வளர்வதற்கான வழி. இப்படித்தான் அது வளர்ந்தாக வேண்டும்.
உறுதியான ஆதாரத்திலிருந்துதான் நம்பிக்கை உதிக்க வேண்டும். முதலில் என்னிடம் நம்பிக்கைகொள்ளுங்கள். பின் நான் பகிர்ந்துகொள்ளும் ஸத்யத்தைத் தேட முயற்சி செய்யுங்கள்.
ஸத்யத்தின் ஒரு துளியை நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும், என்னை நீங்கள் உறுதியாக நம்பத் தொடங்குவீர்கள்.
உங்கள் நம்பிக்கையை இப்போது யாராலும் அசைக்க முடியாது. ஏனெனில் நீங்கள் வலுவான அடிப்படை மன அமைப்பை வளர்த்துக் கொண்டீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த வேலையைச் செய்து கொண்டீர்கள்.

கிருஷ்ணர் அவரது உபதேசங்களில், தர்மத்தின் மீது நம்பிக்கை வைப்பது பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வார்த்தையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணருடைய உபதேசங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். புத்தரும் அதையேதான் சொல்கிறார்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
ஸங்கம் சரணம் கச்சாமி
புத்தர், அவரிடம் சரணடைவதைப் பற்றிப் பேசுகிறார், அது புத்தம்.
அவருடைய போதனைகளிடம் சரணடைவது பற்றிப் பேசுகிறார், அது தம்மம்.
அவருடைய சங்கத்திடம் சரணடைவது பற்றிப் பேசுகிறார், அது ஸங்கம்.
புத்தர், "என்னுடைய போதனைகளிடம் சரணடையுங்கள்," என்கிறபொழுது அவர் தம்முடைய போதனைகளில் நம்பிக்கைகொள்ளுமாறு குறிப்பிடுகிறார். அவற்றை நம்புங்கள், அவற்றை முயற்சி செய்யுங்கள், அவற்றில் உண்மையாய் இருங்கள் என்று சொல்கிறார்.
எதுவெல்லாம் நம்மை
உயர்ந்த
விழிப்புணர்வு நிலைக்கு
அழைத்துச்
செல்கிறதோ,
அதுவெல்லாமே
தர்மம்தான்.

விழிப்புணர்வு உடையவர்களே மனிதர்கள்
நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நாம் விலங்குகளில் இருந்து வேறுபட்டவர்கள். ஏனென்றால் நம்மால் தர்மத்தில் அதாவது உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் நம்பிக்கை வைக்க முடியும். தர்மம் இல்லை என்றால் நாமும் விலங்கும் ஒன்றே. ஒரு விலங்கு பசிக்கும்போது சாப்பிடுகிறது. தூக்கம் வந்தால் தூங்குகிறது. அது முழுவதுமாகத் தன்னுடைய இயல்பான இயற்கை அறிவால் கட்டுப்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வோடு எந்த ஒரு முடிவையும் அந்த விலங்கால் எடுக்க முடியாது.
இருந்தாலும், மனிதனுக்கு விலங்கைக் காட்டிலும் அதிகமாக ஒரு ச'க்தி உண்டு. அவனுக்கு தர்மத்தைப் பின்பற்றுவதற்குச் சுதந்திரமான அறிவு இருக்கிறது. ஒன்றைச் செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
கிருஷ்ணர், தர்மம் என்று சொல்லும்போது எதுவெல்லாம் நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச் செல்கிறதோ அதையே தர்மம் என்று குறிப்பிடுகிறார்.
‘விழிப்புணர்வில்லாத மனிதன் ஒரு விலங்கு’
- தானவ.
இரண்டு வகையான மனிதர்கள் இருப்பதாக இந்து புராணங்கள் சொல்கின்றன. மானவ, தானவ அதாவது மனிதர்கள், மனிதர் அல்லாதவர்கள். முதல் வகை மனிதர்கள் தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருப்பவர்கள்.
தர்மத்தில்
நம்பிக்கை கொள்ளுங்கள்
பிறப்பு, இறப்பு சுழலிலிருந்து
விடுபடுங்கள்.
தானவ - என்றால் விலங்குகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவர்கள் தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அதனால் அவர்களின் விழிப்புணர்வு நிலை மிக தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது.
மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நமக்குள் விழிப்புணர்வு மலர்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது. நாம் அதற்கு நீர் ஊற்றி, முளைக்க அனுமதிக்க வேண்டும். மேலும் நன்றாக வளர்ச்சி அடைந்து, முழு மரமாக வளரக்கூடிய அளவிற்கு அதைப் பராமரிக்க வேண்டும். விழிப்புணர்வு என்னும் மரம் நமக்குள் வளர வேண்டுமானால், நாம் தர்மத்தின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார், நமக்கு தர்மத்தில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் பிறப்பு, இறப்பு சுழலில் சிக்க வேண்டும். அவர் இதை நேரடியாகச் சொல்கிறார். "நம்மில் விழிப்புணர்வு மலர அனுமதிக்க வேண்டும். இந்த மலர்தல் நிகழ நாம் தர்மத்தின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்," என்றும் குறிப்பிடுகிறார்.
நமது நம்பிக்கை முழுமை அடையும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களிலும் அவரின் தர்மத்தை ஒருங்கிணைக்கும்போது நமது விழிப்புணர்வு தானாகவே மலர்கிறது.
நாம் இம்மாதிரியான விழிப்புணர்வு நிலையை அடையும்போது, நாம் பிரபஞ்ச விழிப்புணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம். அப்போது பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைகிறோம். கிருஷ்ணர் ஒரு உத்தியைத் தருகிறார்.
அவர், "தர்மத்தின் மீது நம்பிக்கைகொள், இது உன்னை இறுதி நிலைக்கு அழைத்துச் செல்லும்," என்று சொல்கிறார்.
கேள்வி: நாங்கள் எவ்வாறு ஸ்வாமிஜியிடம் நம்பிக்கையை உருவாக்குவது? நம்முடைய புத்தி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது, சந்தேகங்களைக் கீழே போட்டுவிட்டு எவ்வாறு நாம் செய்ய விரும்பியவற்றை இதயப்பூர்வமாகச் செய்வது?
இது அருமையான கேள்வி, மிகவும் நேர்மையானதும்கூட! இதே பிரச்சினை பற்றித்தான் பலரும் சந்தேகம் கேட்கின்றனர்.
நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் முதலில், உங்களால் நம்பிக்கையை உருவாக்க முடியாது. நம்பிக்கை தானாகவே நிகழ வேண்டும். திடமான நம்பிக்கை என்பது சாதாரண நம்பிக்கை மாதிரி அல்ல. திடமான நம்பிக்கை என்பதற்கு ஸம்ஸ்க்ரு'தத்தில் ச்'ரத்தா, என்ற ஒரு, அழகானவார்த்தை உண்டு ச்'ரத்தா, இதற்கு இணையான வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. ச்'ரத்தா, இது, புரிந்துகொள்ளுதலின் உயர்ந்த நிலையை. உணர்த்துகிறது உண்மையும் நம்பிக்கையும் நம்முடைய கட்டுறு மனப்பாங்குகளாக இருக்கின்றன. இது நமக்கு சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.
குழந்தைகள், பிறர் சொல்வதை அப்படியே கேட்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை அவர்களது மூளை அலை அமைப்பு ஆல்பா நிலையிலேயே உள்ளது என்று நமக்குத் தெரியும். அது மூத்தவர்களின் கருத்தாலும்,
வழிகாட்டுதலாலும் எளிமையாகப் பாதிக்கப்படுகிறது.
நமது சிறுவயதில் இருந்தே, யாரை
நம்பவேண்டும், யாரை நம்பக்கூடாது என்பது
பற்றியெல்லாம் நாம் கற்றுக்கொடுக்கப்பட்டு
விடுகிறோம்.
ச்'ரத்தா என்று இங்கு நான்
சொல்லிக்கொண்டிருக்கும் ச்'ரத்தாவானது
கட்டுறு மனப்பாங்கால் உருவாகும்
உண்மையிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும்
வேறுபடுகிறது. சாதாரண நம்பிக்கையும்
உள்முக அழைப்பைப் புறக்கணிக்காதீர்கள். உண்மையும் நம் மூளையிலிருந்தும் தர்க்க அறிவிலிருந்தும், அறிவு என்று நம்மால் அழைக்கப்படும் வெளிஉலக படிப்பிலிருந்தும் வருகிறது.
ஸத்சங்கங்கள் கிளிக் நிகழும் இடங்கள்
இருந்தாலும், நம்முடைய ஆழ்மனத்தில், நமது இருப்புத் தன்மையில், தொடர்ந்து தொல்லையளிக்கும் ஒரு நிரந்தரமான திருப்தியின்மை, நமது கட்டுறு மனப்பாங்கின் காரணமாக ஏற்படுகிறது.
மக்கள் பலர் இந்தத் தொல்லையைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்டு, வெளி உலக விஷயங்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்.
ஆனாலும் சிலர், தங்களால் இந்த உள்முக அழைப்பைப் புறக்கணிக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள், அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்பத்தைக் கவனிக்கிறார்கள். பிறகு அந்தக் குரல் வரும் திசையை நோக்கி நகர்ந்து, அதனோடு இயைந்து செல்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மதத்தின் பக்கமும், வேத நூல்களின் பக்கமும் திரும்புகிறார்கள். இறுதியில், வெளி உலகில் அவர்கள் இதுவரை எதை அனுபவித்து இருந்தாலும் சரி, அவற்றில் ஒரு தீவிரமான திருப்தியின்மையை தாங்களாகவே உணரும்போது ஞான குருவை நோக்கித்திரும்புகிறார்கள்.
வெளி உலகங்கள் மீது நமக்கிருக்கும் சந்தேகங்கள்தான், நம்மை உள் உலக தேடுதலுக்கு அழைத்துச் செல்கின்றன. நாம் பெறுகிற ஒவ்வொரு pதிலிலிருந்தும், டஜன் கணக்கில் புதிய கேள்விகளைப் பெறுகிறோம். அதுதான் இயற்கை, அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.
பிறகு, ஒரு கட்டத்தில் பட்டறிவு முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இது நமக்குள் 'பளிச்'சென ஒரு கணத்தில் நிகழும் நிகழ்வாகும்.
இது, நாம் ஏதாவதொன்றைப் படித்துக்கொண்டிருக்கும் போதோ, பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதோ அல்லது எந்தவொரு காரணமும் இல்லாமலும்கூட நிகழலாம். அப்போது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும், நமக்குள் இருக்கும் எல்லாச் சந்தேகங்களும் நீக்கிவிடும். இந்த அனுபவத்தைத்தான் நாம் கிளிக் என்கிறோம்.
இந்தக் கிளிக் நம் உள் உலகைக் கடைந்தெடுக்க ஆரம்பிக்கிறது. உளவியல் ரீதியான புரட்சியை ஏற்படுத்த ஆரம்பித்துவிடுகிறது.
இப்படிப்பட்ட ச்ரத்தை பிறக்கும்போது, தீவிரமான ச்ரத்தை பிறக்கும்போது, அது நமது பட்டறிவை உயர்ந்த நிலையான புத்திசாலித்தனத்திடம் சரணாகதி அடையச் செய்கிறது.
எனது சீடர்கள் தங்களுக்கு இந்த அனுபவம் எப்போது நிகழ்ந்தது என்பதைச் சரியாக நினைவு கூர்கின்றனர். இப்படிப்பட்ட ஸத்ஸங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அல்லது ஞான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும் அந்தக் கணத்தில்தான், தங்களுக்குள் இந்த அனுபவம், கிளிக் நிகழ்ந்ததாக, எல்லோரும் ஒரேவிதமாக எந்த வித வேறுபாடும் இல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களுக்குள் சட்டென்று ஒரு வேதிமாற்றம் நிகழ்ந்து, "விழித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கான நேரம் வந்துவிட்டது; மேலும் கேள்விகள் வேண்டாம்," என்கிறது. அவர்களது மூளை, தர்க்கத்தைப் புறக்கணிக்கக் கட்டளையிடுகிறது.
நாம் இதைக் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. நாம் தயாராக இருக்கும்போது இது தானாக நிகழ்கிறது.
"நீங்கள் இங்கே இல்லாதபோது நாங்கள் எவ்வாறு உங்களை நினைவுபடுத்திக்கொள்வது?" என்று மக்கள் கேட்கிறார்கள்.
"நான் உங்கள் குருவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் என்னை உங்கள் குருவாகஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், என்னை மறக்க முயற்சி செய்வதுதான் பிரச்சினை. நினைவுபடுத்திக்கொள்வது அல்ல. உங்களுடைய குரு உங்கள் மொத்த உள் உலகத்தையும் மூளை, இதயம், உங்கள் இருப்பு எல்லாவற்றிலும் நிறைந்து விடுவார்''.
அதற்குப்பிறகு உங்கள் குருவை நினைவில் வைத்துக்கொள்வது பிரச்சினையாக இருப்பதில்லை; அவரை மறக்க முயற்சி செய்வதுதான் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும். உங்கள் மூளை சார்ந்த பட்டறிவும் தர்க்கமும் தாங்களாகவே கேள்விகள் மூலமாக வெளியேறட்டும். அவை தானாகவே களைப்படைந்துவிடும். ஏனென்றால் தர்க்கத்திற்கு முடிவு உண்டு, ஆன்மீகத்திற்கு முடிவு இல்லை.
