ஆன்மீகம், தானாய் மலர வேண்டிய பூ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நேற்று ஒரு பெண்மணி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். "ஸ்வாமிஜி! எனது கணவர் நான் செல்லும் யோக மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதும் இல்லை, புரிந்துகொள்வதும் இல்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
ஆனால் இந்தக் கருத்துக்களோடு ஒத்துப்போவதற்கு என் கணவருக்குக் கடினமாக இருக்கிறது. எனக்கும் என் கணவருக்குமான இந்த இடைவெளிக்குப் பாலம் கட்ட ஒரு யோசனை தந்து உதவுகிறீர்களா?" என்றார்.
கணவரையோ அல்லது மனைவியையோ ஆன்மீகப் பாதைக்கு எவ்வாறு தயார் செய்ய முடியும்?
ஆன்மீகத்திற்கு அவர்களை எப்படி மாற்ற முடியும்? மக்கள் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கும்போது நான் சிரித்துவிட்டு அவர்களிடம், "இந்த இரகசியம் மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இந்தப் பொருள் சார்ந்த உலகத்தைத் துறந்துவிட்டு, நான் ஸந்யாஸி ஆகியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா!" என்று கேட்பதுண்டு.'
நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கான பதில், "நாம் இதைச் செய்ய முடியாது." இது தானாக நிகழ வேண்டும். அந்த மனிதருக்குள் இது தானாகவே நிகழ வேண்டும்.
என்னால் ஒன்றைச் சொல்ல முடியும்:
உங்களால் செய்ய முடிந்த ஒன்று,
வாழ்க்கையைப் பற்றிய புத்திசாலித்தனத்தை
அவருக்குக் கொடுப்பதுதான்.
நீங்கள் நேரடியாக ஆன்மீகத்தைக் கொடு க்க முடியாது. தயவு செய்து அவரை த்யானம் செய்யச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.
> ஆன்மீகம்,
> அது
> தானாக
> நிகழ வேண்டும்.
கோயிலுக்கு வரச்சொல்லியும் வற்புறுத்தாதீர்கள்.
வாழ்க்கையைப் பற்றி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசுங்கள்.
"எந்த மாதிரியான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது? நாம் ஏன் இந்தப் பழக்கப்பட்ட வாழ்க்கையிலேயே தொடர்ந்து சிக்கிக்கொள்கிறோம்?" என்று மீண்டும் மீண்டும் பேசுங்கள்.
இந்த முறையில் பேசிப் பேசி, அவருக்கு இந்த உலகியல் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான அறிவைக் கொடுப்பதுதான் உங்களால் செய்யமுடிகிற ஒரே விஷயம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
பக்குவம் மலர்ந்திட்டால் தெய்வ ரகசியமும் விளக்கப்படும்
தெளிந்த புத்திசாலித்தனம் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆன்மீகத்திற்குள் வர முடியும். இதனால்தான் இது ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
கேட்பவரின் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் ஆன்மீகத்தைப் பற்றிய தெளிவு எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால், அந்த மனிதர் தம்மைத்தாமே வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் துக்கத்திற்குள்ளாக்குவார்.
முதலில், இதை அவர் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால் தம்மைத்தாமே துக்கப்படுத்திக்கொள்கிறார். உதாரணமாக, ஒரு குற்றவாளியிடம், "நீதான் கடவுள்," என்று சொல்லி விட்டோமேயானால், அவன் அடுத்து என்ன செய்வான்?
"நான் கடவுள், அதனால் நான் விரும்புவதையெல்லாம் செய்யலாம். நான் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை," என்று நினைத்துக்கொண்டு, இந்த அறிவைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவான்.
அவன் இந்த அறிவைச் சரியாகப்
பயன்படுத்துவதில்லை. அவன் அறிவை
வீணாக்குகிறான். இதனால்தான் அவன்
தன்னைத்தானேயும் வருத்திக்கொள்கிறான்,
மற்றவர்களையும் வருத்துகிறான் என்று
சொல்கிறேன்.
கடவுள் தன்மையை உணர்ந்தவர் கருணையை வெளிப்படுத்துகிறார்,
எளிமையை வெளிப்படுத்துகிறார், குழந்தை
போன்ற கள்ளங்கபடமற்ற தன்மையை
வெளிப்படுத்துகிறார்.
தெய்வீக பண்புகள் அவர் மூலமாக வெளிப்படுகின்றன. அவர் யாரையும் துன்புறுத்துவதில்லை. அவரிடம், குழந்தைத்தனம் நிறைந்த ஒரு குற்றமற்ற அழகு மிளிர்வதையும், அதே போன்ற எளிமை திகழ்வதையும் நாம் காண முடியும்.
ஞானி யாரையும் துன்புறுத்துவதில்லை. யாருக்கும் தீங்குசெய்வதில்லை.
நாம் தளர்வான, ஆனந்தமான, ஒரு நல்ல மனநிலையில் இருக்கும்போது, நமது வேலையாளோ அல்லது உடன் பணியாற்றுபவரோ தவறு செய்து விட்டார்கள் என்றால் அவர்களைப் பார்த்துச் சத்தம் போடுவோமா? இல்லை, அப்போது அவர்களை பார்த்து நாம் சத்தம் போடுவதில்லை.
"பரவாயில்லை, விட்டு விடுங்கள் நாம் என்ன செய்ய முடியும்?" என்று சொல்லிவிட்டு, அவர்களை வேறு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவோம்.
ஆனால் நாம், ஒரு மோசமான, எரிச்சலூட்டும் மனநிலையில் இருக்கும்போது யாராவது தவறு செய்துவிட்டால், அவ்வளவு ஏன், யாரும் தவறு செய்ய வேண்டியதுகூட இல்லை, மனிதர்களைப் பார்த்தாலே போதும், ஒவ்வொருவரையும் நாம் காரணமே இல்லாமல் சத்தம் போட்டுக்கொண்டிருப்போம்.
யாருக்காவது பெரியதாக அறிவுரை சொல்வதற்கும், அவரைக்கடுமையாகக் கடிந்துகொள்வதற்கும் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாம் சத்தம்போடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
நமது மனநிலையே நமது செயலைத் தீர்மானிக்கிறது. நாம் ஆனந்தமான மனநிலையில் இருந்தோமானால், ஒருபோதும் தவறு செய்வதில்லை. நாம் ஒரு மோசமான, நரக மனநிலையில் இருந்தோமானால், எப்போதும் தவறே செய்கிறோம்.
மக்கள் தவறுகளைச் செய்த பிறகுதான் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள். ஒருபோதும் இல்லை.
நாம் நரகத்தில் இருக்கிற காரணத்தால்தான் தவறுகளைச் செய்கிறோம்.

ஆனந்தமான நிலையில் இருப்பதால்தான் நல்ல செயல்களைச் செய்கிறோம்.
"‘நான் கடவுள்,’ என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒருவர் எப்போதும் தவறு செய்வதும் இல்லை, யாரையும் துன்புறுத்துவதும் இல்லை. எல்லோருக்குமே இந்த அறிவு வழங்கப்பட்டால், அறிவுமுதிர்ச்சி அடையாதவர்களுக்கும் வழங்கப்பட்டால், இயற்கையாகவே அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைத் துக்கப்படுத்துகிறார்கள்; காயப்படுத்துகிறார்கள்.

"‘நானே கடவுள், இங்கே வாருங்கள், நான் எதை விரும்புகிறேனோ, அதையெல்லாம் செய்வேன்,’ என்று சொல்கிறார்கள். இதனால்தான் இந்த அறிவு இரகசியமாக வைக்கப்படுகிறது. இது, அணுகுண்டைப் பற்றிய ரகசியம் தீவிரவாதிகளிடம் இருப்பதைப் போன்றது. உண்மையில் அது அவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும்; உலகிற்கும் தீங்கை விளைவிக்கும். தகுதியில்லாத ஒருவர் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அது அவருக்குத் தீங்கையே விளைவிக்கிறது. அதேபோல்தான், கிருஷ்ணர் வெளிப்படுத்தும் ஆன்மீக உலகைப் பற்றிய, நம் உள் உலகைப் பற்றிய இந்த ஞானக் கருத்துக்கள் இரகசியங்களாகவே இருக்கின்றன.கிருஷ்ணர் இந்த இரகசியத்தை தகுதியுடைய மக்களுக்கே வெளிப்படுத்துகிறார்.
எனவேதான் கிருஷ்ணர், “இரகசியங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இந்த இரகசியம்தான், அறிவுகளுக்கெல்லாம் அரசனாகவும் விளங்குக்கிறது," என்று சொல்கிறார்.

பக்குவம் அடையாதவரை கடவுளே பேசினாலும் புரியாது

கிறிஸ்துவின் கதையைப் பாருங்கள். அவர்,
"நான் கடவுளின் மகன்," என அறிவித்தார்.
இது உண்மையே. ஏசுகிறிஸ்து அவர் அடைந்த
அனுபவத்தில் இருந்து இதை அறிவித்தார்.
அவர் ஞானத் தன்மையை உணர்ந்தார். அவர்
கடவுளின் இராஜாங்கத்தை உணர்ந்தார்.
அவர் சொர்க்கத்தையும் உணர்ந்தார்.
எனவேதான் அவர், "நான் கடவுளின் மகன்,
நான் தெய்வீகத்தின் மகன்," என்று தெளிவாக
வெளிப்படுத்தினார்.
ஆனால் அங்கு ஒரே விஷயம்தான் இருந்தது: அவர் உள் உலக ராஜ்ஜியத்தைப் பற்றியே பேசினார். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைத்தார்கள். ஆட்சியாளர்களிடம் இருந்து அவர் ஆட்சி யைப் பிடுங்க முயற்சி செய்வதாக எண்ணினார்கள்.
இயேசு கிறிஸ்து முற்றிலும் மாறுபட்ட உண்மையைப் பற்றியே பேசினார்; ஆனால் மக்களோ அதை முற்றிலும் மாறுபட்ட வழியில் புரிந்துகொண்டனர். கருத்து பரிமாற்றத்தில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே அவர் இளம் வயதில் மரணமடைய நேர்ந்தது. கொடூரமான முறையில் கொல்லப்படவும் நேர்ந்தது. இது எல்லாமே ஒரு சிறிய தவறான புரிந்துகொள்ளுதலாலேயே நிகழ்ந்தது!
இயேசு சொல்லும்போது, “நான் கடவுளின்
மகன். நான் தெய்வீக ராஜ்ஜியத்திற்குச்
சொந்தக்காரன்,” என்று சொல்கிறார். உள்
உலகம் பற்றியும் உள் உலக ரகசியங்கள்
பற்றியுமே அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார்.
தாம் உணர்ந்த அனுபவத்தை அவர்
வெளிப்படுத்துகிறார். ஆனாலும் தம்மீது
பொறாமைகொண்ட மக்களிடம் அவர் இதை
வெளிப்படுத்தினார்.
அவரது உள் உலக சுதந்திரத்தைப் பார்த்துப்
பொறாமைப்பட்டவர்களும், அவரைப்
பார்த்து பயந்தவர்களுமே அவரைக்
கொன்றனர்.
ஆழ்ந்த
இரசியங்கள்,
ஒரு குருவிடமிருந்து
சீடனுக்கு மட்டுமே
வழங்கப்பட முடியும்
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், “நான் கடவுள்கூட இல்லை. கடவுளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறேன். கடவுளைப் பற்றி நீங்கள் நினைப்பது எதுவாயிருந்தாலும் அது எனக்குள் ஒடுங்குகிறது. படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் என்னில் ஒடுங்குகின்றன,” எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால் கிருஷ்ணர் கொடுமைப்படுத்தப் படவில்லை. ஏனென்றால் அவர் இந்த ஸத்யங்களைப் புரிந்துகொண்ட, ஏற்றுக்கொண்ட ஒருவருக்கே வழங்கினார்; உணர முடியாத ஒருவருக்கு வழங்கவில்லை.
நாம் ஒருவருடன் ஸத்யங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் தேவையான முதிர்ச்சி அடைந்தவரா, இல்லையா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இங்கே கிருஷ்ணர், “இதுவே ரகசியம். ஏனென்றால் பெற்றுக்கொள்ள தகுதி உடைய ஒருவருக்கே இதை வழங்க முடியும்,” என்று சொல்கிறார்.
ஆரம்பத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களில் கிருஷ்ணர் சாஸ்திரங்களைப் பற்றி அதாவது பட்டறிவைப் பற்றிப் பேசுகிறார். பட்டறிவை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும்.
ஆனால் இந்த அத்தியாயங்கள் உள்ளார்ந்த ரகசியங்களை உள்ளடக்கியவனவாக இருப்பதால், தகுதியுள்ள சீடருக்கு, உண்மையிலேயே அறிவைப்பெற ஆர்வமுள்ள, உண்மையாகவே இந்த அறிவை விரும்புகிற ஒருவருக்கே வழங்க முடியும்; குருவால் சீடனுக்கு மட்டுமே வழங்க முடியும்.
என்னிடம் ஒருவர், “ஸ்வாமிஜி, தயவு செய்து கடவுளைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள். எனக்கு ஞானத்தை வழங்குங்கள்,” என்று கேட்டார். நான் அவரிடம், “இது ப்ரசாதத்திற்கான நேரம். தயவுசெய்து ஆச்ரமத்திற்குச் சென்று உணவருந்துங்கள். அங்கிருப்பவர்கள் உங்களுக்குப் ப்ரசாதம் கொடுப்பார்கள்,” என்று சொன்னேன்.
இந்தியாவில் நாம் எந்தவொரு ஆச்ரமத்திற்குச் சென்றாலும் சரி அல்லது கோயிலுக்குச் சென்றாலும் சரி, அங்குக் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பிரசாதம் எல்லோருக்கும் வழங்கப்படும். இதுவே நம் பாரம்பரியம்.
இந்துக்கள் அதிதி தேவோ பவ என்று நம்புகிறார்கள். இதன் பொருள் ‘விருந்தினரே கடவுள்’. நாம் அவர்களுக்கு உணவு வழங்குகிறோம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.
எனவே நான் அவரிடம், “தயவுசெய்து உணவு எடுத்துக்கொண்டு வாருங்கள். மாலை வகுப்பில் உங்களிடம் பேசுகிறேன்,” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார். “இல்லை ஸ்வாமிஜி, நான் அடுத்த பேருந்துக்குப் புறப்பட்டாக வேண்டும். எனக்கு இருப்பது அரைமணி நேரமே. இந்த அரைமணி நேரத்தில் எனக்கு கடவுளைப் பற்றிச் சொல்லுங்கள்.”
எவ்வளவு அவசரமோ, அவ்வளவு தாமதமாகும்
அரைமணி நேரத்தில் கடவுளைப் பற்றி நான் என்ன பேச முடியும்? அரைமணி நேரத்தில் ஒருவர் என்ன புரிந்துகொள்ள முடியும்? உண்மையில், கடவுளை இன்ஸ்டன்ட் காபிபோல் கொடுக்க முடியாது! காபி, கோகோ - கோலாவை உடனடியாகப் பெற முடியும்.
கடவுளை உடனடியாகப் பெற முடியாது. நாம் கடவுளை உணர்ந்தாக வேண்டும்.
> ஒருவரால் நமக்குக் கடவுளைக் கொடுக்க முடியாது. நாமேதான் அவரை உணர்ந்தாக வேண்டும். நமக்குக் கொஞ்சம் பொறுமையும் வேண்டும்; கடவுளை உடனடியாகக் கொடுக்கவும் முடியாது, பெறவும் முடியாது.
நாம் எவ்வளவு அவசரப்படுகிறோமோ, அவ்வளவு தாமதமாகும். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், வேகம் உள் உலகிற்கான நுட்பம் இல்லை; உள் உலகில் அதிகமாக அவசரப்படும்போது, அடைவது காலதாமதமாகிவிடும்.
அவசரப்படுதல், மன அழுத்தம், மனச்சோர்வு - இவை செயல்முறையைத் தள்ளிப்போடுகின்றன. அனுபூதி அடைவதைத் தள்ளிப்போடுகின்றன. அது நம்மைத் தளர்வாய் இருக்க விடுவதில்லை.
முற்கால இந்தியாவில்,
குருகுல பள்ளியில்
மாணவர்கள் குருவுக்கு
அருகில் அமர்ந்து
அவர் சொல்வதைக்
கவனித்தார்கள்.
எனவேதான் கிருஷ்ணர், உண்மையிலேயே
ஆர்வம் உள்ளவர்களுக்கும்,
நெருக்கமானவர்களுக்கும், உண்மையாகவே
தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும்
மட்டுமே இப்படிப்பட்ட ரகசியங்கள்
வழங்கப்பட வேண்டும் என்கிறார்.
அருமையான வார்த்தைகள்! நமது எல்லா
வேத நூல்களும் உபநிஷதங்கள் என்றே
அழைக்கப்படுகின்றன. பகவத்கீதையும்
உபநிஷதம் என்றே அழைக்கப்படுகிறது.
கீதாஸுபநிஸத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோக சா'ஸ்த்ரே ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதே என்பது ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் காணப்படுகிறது. இதன் பொருள்: ‘ப்ரஹ்ம வித்தையைக் கற்பிப்பதும், யோக சாஸ்திரமானதும், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கிடையில் நடக்கும் உரையாடலுமாக வந்துள்ள பகவத்கீதை என்னும் உபநிஷதம் இது’.
உபநிஷத் என்ற வார்த்தைக்கு ‘ஒருவரின் அருகில் அமர்ந்திருத்தல்’ என்று பொருள். இது பாரம்பரிய வேத பள்ளியின் கற்பிக்கும் முறையை அதாவது குருகுல கல்வியைக் குறிப்பிடுகிறது. முற்கால இந்தியாவில், குருகுல பள்ளியில் மாணவர்கள் குருவுக்கு அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கவனித்தார்கள். இப்படித்தான் அறிவானது கொடுக்கப்பட்டது.
குருவிடம் நம்பகமான சூழ்நிலையில் நெருங்கி இருந்தவர்களுக்கு, அறிவு வழங்கப்பட்டது. இந்த அறிவு வெறும் பட்டறிவுப்பூர்வமாக நடைபெற்ற வார்த்தைப் பரிமாற்றம் மட்டும் அல்ல. ஒருவருடைய அனுபவத்தை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்ளும் தோழமை உணர்வாகவே இருந்தது.
நம் வீட்டில் வெளி உலக வாழ்விற்கான பொருட்களை எல்லாம் நாம் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். நமக்குத் தேவையானதெல்லாம் அங்கு இருக்கின்றன. தூங்குவதற்கு ஒரு படுக்கை, சமைக்க ஒரு சமையலறை, உட்கார்ந்து சாப்பிட மேஜை. இந்தப் பொருட்களையெல்லாம் நாம் ஒவ்வொன்றாகச் சேகரிக்கிறோம். மேலும் ஆடம்பர பொருட்களான நகை களையும் சேகரிக்கிறோம்.
நமது புடவையின் நிறத்திற்கு ஏற்றபடி நகைகளைக்கூட மாற்றுகிறோம். சில நேரங்களில் நமது செருப்புக்களைக்கூட மாற்றுகிறோம். ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பொருத்தமாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்திருக்கிறோம். நம் சௌகரியமான வெளி உலக வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நாம் சேகரித்துப் பாதுகாதிக்கிறோம்.
வாழ்வியல் தீர்வுகளைப் படியுங்கள், வாழும் கலையையேற்றிடுவீர்கள்
ஆனால் நாம் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறோம். வெளி உலக வாழ்வுக்கு நாம் எவ்வாறு பொருட்களைச் சேகரித்து வைக்கிறோமோ, அவ்வாறே நம் உள் உலக வாழ்வுக்கு அறிவைச் சேகரிக்க வேண்டியுள்ளது; வாழ்வியல் தீர்வுகளையும் உள் உலகத் தீர்வுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது.
நாம் மனச்சோர்வடைந்தாலோ, தாழ்வு
மனப்பான்மையில் இருந்தாலோ அல்லது
நமக்கு விரோதமான சூழலைச் சந்திக்க
நேர்ந்தாலோ, என்ன செய்கிறோம்? அந்தச்
சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறோம்?
இந்தச் சூழ்நிலையைக் கையாள நமக்கு உள் உலக அறிவு தேவைப்படுகிறது.
வெளி உலக வாழ்வுக்கான பொருட்களைச்
சேகரித்து வைப்பது போலவே, மகிழ்ச்சியான,
ஆனந்தமான வாழ்விற்கான வாழ்க்கைத்
> எது நித்யம், எது அநித்யம்,
> எது ஸத்யம்,
> எது அஸத்யம்
> இவற்றைப் பற்றிய
> புரிந்துகொள்ளுதலைப்
> பெறுவதே ஜ்ஞான யஜ்ஞய.
தீர்வளையும் நாம் சேகரிக்க வேண்டியுள்ளது.
வாழ்க்கைக்கான தீர்வுகளைத்தான் கிருஷ்ணர் ஜ்ஞான யஜ்ஞய என்று அழைக்கிறார். எது நித்யம், எது அநித்யம், எது ஸத்யம், எது அஸத்யம் இவற்றைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைப் பெறுவதே ஜ்ஞான யஜ்ஞய.
நாம், ஜ்ஞான என்ற இந்த வார்த்தையைச் சரியாக மொழியாக்கம் செய்தால், ஜ்ஞான என்பது உயர்ந்த அறிவைக் குறிக்கிறது. யஜ்ஞம் உயர்ந்த அறிவைப் பெற உதவும் சுத்திகரிப்பு முறையைக் குறிப்பிடுகிறது.
ஜ்ஞான யஜ்ஞய என்ற வார்த்தை மூலம் கிருஷ்ணர், 'தன்னை உணர்தல்' நிலைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பாதையைக் குறிப்பிடுகிறார். இது, நமது கடவுள் தன்மையைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் உண்டாக்கும் பாதை.
'தன்னைப் பற்றிய ஆழ்ந்த ஸத்யங்களை உணர்ந்துகொள்ளல்' என்ற இந்தச் செயல்முறை, பெரும்பாலான சமயங்களில், இரண்டு விஷயங்கள் ஒருங்கிணைவதன் மூலமாக நடக்கிறது.
ஒன்று, மற்றவர்களைக் கவனித்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆன்ம அனுபவங்களைப் புரிந்துகொள்வது; மற்றொன்று, நமது சொந்த முயற்சியால் இந்த ஆன்ம அனுபவங்களை மீண்டும் மீண்டும் தியானிப்பது. இந்த இரண்டு விஷயங்களும் ஒருங்கிணைந்தால்தான், நமக்குள்ளும் அதே அனுபவங்கள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன். அறிவைச் சேகரிக்க முற்படும்போது, மிகப்பெரிய ஜ்ஞான குருமார்கள் வழங்கிய வாழ்வியல் தீர்வுகள் மீது தயவு செய்து கவனம் செலுத்துங்கள். நான் மக்களை கேட்டுக்கொள்வதெல்லாம், நமக்கு வாழ்வியல் தீர்வுகளை அளிக்கக்கூடிய ஞானிகளின் அனுபவங்களைக் குறித்துச் சொல்லும் நூல்களைத் தினமும் அரைமணிநேரம் படியுங்கள் என்பது ஒன்றுதான்.
ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் பல சிறந்த குருமார்கள் வழங்கிய நூல்களைப் படியுங்கள். நம் வாழ்க்கையை நாம்
எப்படி நடத்த வேண்டும் என்ற ஆழமான
பார்வையைத் தரும் ஏராளமான நூல்கள்
இருக்கின்றன.
ஆனந்த வாழ்வு வகுப்புகளில் நான் வழங்கிய நுட்பங்கள், ‘நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்’ என்ற நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. வாழ்வியல் தீர்வுகளைக் கொடுக்கும் இன்னும் எத்தனையோ ஏராளமான ஆன்மீக நூல்கள் இருக்கின்றன.
உள் முகப்
பார்வையைத்
தரக்கூடியதாக
இருக்கும் எதையாவது
படிக்கவும் பார்க்கவும்
கவனிக்கவும்
செய்யுங்கள்.
ஞான குருமார்களின் வாழ்க்கையையும், அவர்களுடைய அறிவுரைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்த நூல்களைப் படிப்பதற்காகத் தினமும் அரை மணி நேரம் செலவழியுங்கள்.
படிப்பற்காக அரைமணி நேரம் செலவழிக்க முடியவில்லையெனில், காரில் குறுந்தகடு (CD) போட்டுக் கேளுங்கள். சராசரியாக இந்த நாட்டில் (அமெரிக்கா) நாம் ஒரு மணி நேரம் கார் ஓட்டுவதற்காகச் செலவு செய்கிறோம். சராசரியாக ஒரு மணி நேரம், நாம் எந்தத் தொழிலில் இருந்தாலும் சரி, இல்லை எந்தத் தொழிலுமே இல்லாவிட்டாலும் சரி, ஒரு சந்தோஷத்திற்காக அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவாவது கார் ஓட்டுகிறோம்.
கடைக்குச் சென்று தேவையான பலசரக்கு வாங்க வேண்டுமானால்கூட, குறைந்தது ஒரு மணிநேரமாவது கார் ஓட்டுகிறோம். அந்த நேரத்தைக்கூட வீணாக்காதீர்கள். வாழ்வியல் தீர்வுகளைத் தரக்கூடிய குறுந்தகடுகளைக் காரில் எப்போதும் வைத்திருங்கள்.
அவை என்னுடைய விரிவுரைகளாகக்கூட இருக்கவேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கையை நன்றாக நடத்துவதற்குத் தேவையான உள்முகப் பார்வையைத் தரக்கூடியதாகவும் உங்களுடைய மதிப்பை உயர்த்தக்கூடியதாகவும் இருக்கும் எதையாவது படிக்கவும் பார்க்கவும் கவனிக்கவும் செய்யுங்கள்.
அது ஞானமடைந்த மூலத்திலிருந்து வருவதாகவும், உங்கள் வாழ்ககை க்கு வாழ்வியல் தீர்வுகளைத் தருவதாகவும் இருக்க வேண்டும்.
அந்த அரைமணிநேரம் உங்களுடைய ஸ்வாத்யாயம், அதாவது உங்களுடைய
ஆன்மீகப் பயணமாக மாறட்டும்! உங்கள் உள் உலகத்திற்குள், வாழ்வியல் தீர்வுகளை மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருங்கள்.
நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் தீவிரமான மனச்சோர்வினை அனுபவிக்கும்போது, இந்த வாழ்வியல் தீர்வுகளில் ஏடாவது ஒன்று 'பளிச்' என்றுமேல் எழுந்து வந்து, நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனச்சோர்வின் ஆழத்தை அதாவது அதன் தீவிரத் தன்மையைக் குறைக்கக்கூடும்.
நமக்குத் தேவையான நேரத்தில், நமது உள் உலகத்திலிருந்து, நமது உள் விழிப்புணர்விலிருந்து ஒரு வாழ்வியல் தீர்வு வெளிப்பட்ட அந்த வினாடியே, உடனடியாக அதன்மூலம் நமது மனச் சோர்வின் தீவிரத்தை, ஆழத்தைக் குறைத்துவிட முடியும்.

தாழ்வாக வளைந்து போயிருந்த கோடு நேராக்கப்பட்டவுடன், அதாவது, நமது தாழ்வு நிலை சமப்படுத்தப்பட்டவுடன், நாம் ஒரு உத்வேத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்வில் முன்னேறுகிறோம். அதனால்தான், நான் உங்களிடம் உங்கள் ஜ்ஞான யஜ்ஞய, ஆன்மீகப் பயணத்தைத் தொடங்குங்கள் என்று சொல்கிறேன்.
இந்த நேரத்தை வாழ்க்கைக்கான தீர்வுகளைச் சேகரிக்கப் பயன்படுத்துங்கள். தேவையில்லாத ரேடியோ நிகழ்ச்சி களாலும், பிற ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளாலும் உங்கள் உள் இடத்தை நிரப்புவதற்குப் பதிலாக இந்த நேரத்தை உண்மையாகவே உபயோகமான நேரமாக்குங்கள்.
நீங்கள் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, கவனியுங்கள் இது உங்கள் பழக்கமாக மாறட்டும்.
தானாகவே இந்தத் தீர்வுகளும், அந்த வார்த்தைகளும் உங்கள் உள் மனத்தில் தங்கிவிடும். இவை, உங்களுக்குத் தேவையானபோது மேலெழுந்து வந்து, உங்களுக்கு உதவுவதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!
இதைச் செய்யாமல் இருந்தோமானால்,
நாம் காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது,
நமது கவலைகளைப் பற்றியே நாம்
நினைத்துக்கொண்டிருப்போம்.
வாழ்க்கைக்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் நாம் நேரத்தை செலவழிக்காவிடில், பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்போம். நாம் பிரச்சினைகளையே உருவாக்குகின்றோம். நமக்குப்ப் பிரச்சினையே இல்லாவிட்டால்கூட, நாம் பிரச்சினைகளைப் புதிதாக உருவாக்கிக்கொள்வோம்!
மொத்தப் பிரபஞ்சமும்
சக்தியே என
நாம்
புரிந்துகொண்டதும்
தானாகவே
நம் இருப்பிலிருந்து
பயம் காணாமல்
போய்விடுகிறது.
நாம் பிரச்சினையோடு இருந்தால், அவற்றைப் பற்றிக் கவலைப்படுவோம். நமக்குப் பிரச்சினையே இல்லாமல் எல்லாம் சரியாக நடக்கும்போது என்ன நினைக்கிறோம்?
"இன்றைய தினம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நாளைய தினம் என்ன நடக்குமோ, தெரியவில்லையே!" என நினைக்கத் தொடங்குகிறோம். "ஸ்வாமிஜி, ஒரு நாள் இன்று நன்றாகக் கழிந்துவிட்டால், மறுநாள் எப்போதும் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுகிறது," என்று சிலர் என்னிடம் சொல்வதுண்டு.
நம்முடைய பிரச்சினையே என்னவென்றால், இன்று பிரச்சினைகளே இல்லையெனில், நாளை பிரச்சினைகள் வந்துவிடும் என்று நாம் உறுதியாக நம்பத் தொடங்கி விடுவதுதான். இது நம்முடைய ஆழமான நம்பிக்கையாக மாறிவிடுகிறது.
நம்மிடம் பிரச்சினைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் கவலைப்படுகிறோம். மனத்தை, கவலைப்படுவதற்கு அனுமதிக்காமல் இருப்பதுதான் நல்லது. உங்கள் வாழ்க்கைக்குத் தீர்வு தரும் ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த ஒரு மணி நேரம் நம் வாழ்வில் ஜ்ஞான யஜ்ஞமாக மாறட்டும்.
ஜ்ஞான யஜ்ஞம் செய்வது நம் வாழ்வில் 'ஒரு படி' என்று கிருஷ்ணர் சொல்கிறார். 'இந்த மொத்தப் பிரபஞ்சமும் சக்தியே' என்று புரிந்துகொள்வது ஒரு படி. இருப்பதெல்லாம் சக்திமயமே என நாம் புரிந்துகொண்டதும், தானாகவே நம் இருப்புத் தன்மையிலிருந்து பயம் காணாமல் போய்விடுகிறது.