KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/துன்பங்களிலிருந்து உங்களைச் சுதந்திரமாக்கும் இரகசியம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

துன்பங்களிலிருந்து உங்களைச் சுதந்திரமாக்கும் இரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மீண்டும் மீண்டும் நான் தொடர்ந்து சொல்கிறேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உணர்ந்தாலும் உணராவிட்டாலும் நீங்கள் கடவுள்தான். நீங்கள் தெய்வீகமானவர்தான்.

உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, 'நீங்கள் கடவுள்தான்' என்ற இந்த ஸத்யத்தை உணராமல், நீங்கள் விரும்பும்வரை தூங்கிக் கொண்டே இருக்கலாம் அல்லது நீங்கள் ஜீவன் முக்த தன்மையை உணர்வதற்கான வாய்ப்பை விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை என்னவென்றால், 'நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள்'.

கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனிடம் "நீ எனது அந்தஸ்தை அடைய முயற்சி செய்யாததால், நான் உனக்கு எனது நிலையை அளிக்க முயற்சி செய்கிறேன்," என்று சொல்கிறார்.

ஒரு ஜ்ஞான குருவின் அந்தஸ்தை அடைய முயற்சி செய்யாதவர், அவரின் நிலையை அடைகிறார். முதலில், 'நிலை' வருகிறது. பின், 'அந்தஸ்து' தானாகவே வந்துவிடுகிறது. அந்தஸ்தை உருவாக்க முயற்சி செய்தோமேயானால், ஒருபோதும் நிலையை அடைய முடியாது.

"முதலில் கடவுள், பிறகுதான் உலகம்," என்று இராமகிருஷ்ணர் சொல்கிறார்.

இந்த உலகம் நிழலைப் போன்றது. அந்தஸ்தும் நிழலைப் போன்றது. நாம் அதற்குப் பின்னால் ஓடினால், ஒருபோதும் நம்மால் அதனை பிடிக்க முடியாது; நாம் அதை எவ்வளவு தூரம் விரட்டிச் செல்கிறோம், எவ்வளவு காலம் விரட்டிச் செல்கிறோம் என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை.

ஆனால் நாம் நம் பாதையில் நடந்து செல்லும்போது அது தானாக நம்மைப் பின் தொடர்ந்து வரும்.

> நீங்கள்,
> தூங்கிக்கொண்டே
> இருக்கலாம் அல்லது
> 'ஜீவன் முக்த' தன்மையை
> உணர்வதற்கான
> வாய்ப்பை
> விழிப்புணர்வுடன்
> தேர்ந்தெடுத்துக்
> கொள்ளலாம்.

வெளி உலகமும் நிழலைப் போன்றது
தான். நாம் அதன் பின்னால் ஓடி, அதைப்
பிடிக்க முயற்சி செய்தோமானால்,
ஒருபோதும் அதைப்பிடிக்கவும் முடியாது;
பற்றிக்கொள்ளவும் முடியாது. ஒரு நிழலின்
பின்னால் ஓடி, அதைப் பிடிக்க உங்களால்
முடிந்தவரை முயற்சிசெய்யுங்கள். உங்களால்
அதைப்பிடிக்க முடியுமா? முடியாது. ஆனால்
நம் பாதையில் நாம் நடந்து சென்றால்,
நிழல் நம்மைப் பின் தொடரும்.

'நிலை'யை நோக்கிச் செல்லுங்கள், அந்தஸ்து
உங்களைப் பின்தொடர்ந்து வரும். நாம்
அந்தஸ்திற்குப் பின்னால் ஓடினால்,
ஒருபோதும் அதைப்பிடிக்க முடியாது.

இங்குதான் கிருஷ்ணர் சொல்கிறார், "நீ ஒருபோதும் என்னைக் குறித்தும், எனது அந்தஸ்தைக் குறித்தும் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு எனது இந்த நிலையின் முடிவான ரகசியத்தைத் தருகிறேன்."

நான் மேலும் சொல்கிறேன். "இதுதான் இறுதியான ரகசியம். உண்மையாகவே இதுதான் இறுதியான இரகசியம். இதை நன்றாகத் தெரிந்துகொண்டால், இந்தப் பொருள் சார்ந்த அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவாய்."

பொருள் சார்ந்த உலகின் துன்பங்கள் எவை? நாம் ஏதாவது ஒன்றை அடைந்தாலும் துன்பம், அடையாவிட்டாலும் துன்பம்; நாம் ஒன்றை அடையவில்லையெனில், அதனை அடையவில்லையே என்ற துன்பம். நாம் அடைந்துவிட்டாலும் துன்பம்தான், 'நான் அதைப் பாதுகாக்க வேண்டுமே' என்ற துன்பம்!

யோக என்றால் 'அடைதல்' என்று பொருள். க்ஷேம என்றால் 'பாதுகாத்தல் என்று பொருள். இரண்டுமே துன்பங்கள்தான். நாம் அடைந்தாலும் அடையாவிட்டாலும், அது துன்பமே.

கிருஷ்ணர் சொல்கிறார். "செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்படுகிற இந்த இரண்டு துன்பமுமே பொருள் சார்ந்த உலகினால்தான் ஏற்படுகிறது. பொருள் சார்ந்த உலகினால் ஏற்படுத்தப்படுகிற இத்துன்பங்கள், நான் சொல்லப்போகும் இரகசியத்தை உணர்ந்து கொண்டவுடன் மறைந்துவிடும். இதுவே நீ புரிந்துகொள்ள வேண்டிய இறுதி ஸத்யம். இந்த ரகசியத்தைப் பற்றிய அறிவு உன்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் சுதந்திரமாக்கும்.”

அவர் மேலும் சொல்கிறார்.

“இந்த அறிவே மற்ற அறிவுகளுக்கெல்லாம் அரசன். எல்லா ரகசியங்களிலும் இதுவே மிகப்பெரிய ரகசியம். இதுவே தூய அறிவு.

ஏனென்றால் இது நேரடியாகவே தன்னை உணர்வதற்கான அறிவைத் தருகிறது. ஒரு மதத்தின் 'முற்றுப்பெற்ற நிலை' அதாவது 'முழுமைத் தன்மை' இதுவே. இதுவே எப்போதும் இருக்கக்கூடியது. ஆனந்தமாக நிகழ்த்தப்படுவது.”

தெளிவு ஒன்றே போதும் லட்சியத்தை அடைந்திடலாம்

பாருங்கள். ஒரு மதமோ அல்லது ஆன்மீகப் பாதையோ மூன்று கோட்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.

முதலில், அது வாழ்வின் இலட்சியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியைத் தெளிவாக விளக்க வேண்டும். மூன்றாவதாக, அந்தப் பாதையில் உங்களை மகிழ்ச்சியாகப் பயணிக்கச் செய்ய வேண்டும். அந்தப் பாதையே இனிமையாக இருக்க வேண்டும்.

ஒரு சின்ன கதை::

Figure

சில மூலிகை வைத்தியர்கள் தாங்கள் எந்த நோயையும் குணப்படுத்துவோம் என்று விளம்பரப்பலகைகளில் விளம்பரப்படுத்தினார்கள். அதில் ஒரு மருத்துவர், தம்முடைய விளம்பரப் பலகையில் 'உங்களுக்குப் பெயர் தெரிந்த அல்லது பெயர் தெரியாத எல்லா வகை நோய்களுக்கும் இங்கு சிகிச்சைகள் தரப்படும்' என்று விளம்பரம் செய்திருந்தார்.

அவரிடம் ஒரு நோயாளி வந்தார்.

வைத்தியர், "உங்களுக்கு என்ன வியாதி?"
என்று கேட்டார். அதற்கு நோயாளி
சொன்னார், "எனக்கு வியாதியின் பெயர்
தெரியாது. நீங்களே கண்டுபிடியுங்கள்."

அந்த மருத்துவர் வியாதியைக் கண்டுபிடிக்க
சகல முயற்சிகளையும் மேற்கொண்டார்.
இருந்தாலும் என்ன வியாதி என்று அவரால்
தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர்
எந்த வியாதியையும் குணப்படுத்துவதாக
விளம்பரப்படுத்தியிருந்தார். அதனால் அதை
அவர் குணப்படுத்தியே ஆக வேண்டும்.
வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஒரு
மருந்தைக் கொடுத்தார்.

நாம் காட்டும் வழி,
நடை முறைக்கு
உகந்ததாக
இருக்க வேண்டும்.

அந்த மருந்து என்னவெனில், "உங்கள் பல்லில் படாமல் ஒரு கடப்பாரையை விழுங்கி விட்டு, மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் . நீங்கள் குணமாகி விடுவீர்கள்."

என்ன மாதிரியான மருந்து இது? இந்த மருந்து நடைமுறைக்குப் பொருந்தாது என்பது எல்லோரும் அறிந்த தெளிவான உண்மை.

இதுபோல், நம்முடைய பாதையும் அதாவது நாம் தரக்கூடிய தீர்வும் நடைமுறைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கக் கூடாது. நாம் காட்டும் வழி நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கக் கூடாது. அது நடைமுறைக்கு உகந்ததாக இல்லை எனில், இயற்கையாகவே நம்மால் அதை நடைமுறைப்படுத்த முடியாது.

இமயமலையில் ஒரு யோகி இருந்தார். அவரது சீடர்கள் அவரிடம் வந்தபோது, அவர் ஒரு நுட்பத்தைக் கொடுத்தார். "இரண்டு மணி நேரத்துக்கு மூக்கைப் பிடித்துக்கொண்டு அமருங்கள், நீங்கள் இதைச் செய்தால் ஞானமடைவீர்கள்," என்று சொன்னார்.

யாராவது இவ்வாறு உட்கார முடியுமா?

இப்படிப்பட்ட பாதையில் யார் செல்ல முடியும்? யாராலும் செல்ல முடியாது. நாம் செல்லும் பாதை கடினமானதாக இருக்கக் கூடாது. அது செல்வதற்கு எளிமையானதாக இருக்க வேண்டும். அதனால்நான் கிருஷ்ணர் இங்கே, "இதுவே நிலையானது," என்று குறிப்பிடுகிறார். அதாவது நாம் அடையும் பலன் எப்போதும் மாறாதது. அவர் எல்லா வித விளம்பர வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்! இதை நம்மால் மகிழ்ச்சியுடன் செயல்படுத்த முடியும். இது எளிமையானதும்கூட. நாம் இதற்காகப் போராடத் தேவையில்லை.

நாம் துன்பப்படத் தேவையில்லை. இதுவே ஆழமான ரகசியமாகும். நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் இந்த ரகசியத்தை உணர வேண்டும். இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இது ஏன் ரகசியமாய் இருக்கிறது? இது மிகவும் உதவக்கூடியது எனில் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? இது இவ்வளவு முக்கியமானதாக

இறுதி ரகசியமும், இறுதி அறிவும் சாதாரண மக்களுக்கானது அல்ல

இருக்கும் பட்சத்தில் ஏன் ரகசியமாக
வைக்கப்பட வேண்டும்? ஏன் உலகம்
முழுவதும் இதைப் பயன்படுத்தக் கூடாது?

'ரகசியம்'- இந்தக் கருத்தை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

தயவு செய்து இந்த இறுதி ரகசியமும், இந்த
இறுதி அறிவும் சாதாரண மக்களுக்கானது அல்ல
என்பதில் தெளிவாக இருங்கள். சாதாரண
மக்கள் எப்போதும் சிறு விஷயங்களுக்காகச்
சண்டையிடுபவர்களாகவும்,
கேளிக்கை கொண்டாட்டங்களில்
நாட்டமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதனால்தான், நாம் ஒரு சினிமா தியேட்டரை நடத்தும் போது, அங்கு எவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது என்பதை நாம் காண முடியும்! அல்லது பொதுநிகழ்ச்சிகள் நடத்தும்போது எவ்வளவு மக்கள் அதில் பங்கு பெறுகின்றனர். அதற்குக் கூட்டம் பத்து மடங்கு அதிகமாக இருக்கும்.

இன்று இங்கு சில நூறுபேர் மட்டுமே வந்திருக்கிறீர்கள். ஏனெனில் நாம் ஒரு கோயிலைத்தான் கட்டியிருக்கிறோம். கோயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே உரியது, எல்லோருக்குமானது அல்ல. கோயிலுக்கு வருவதற்கு புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஆன்மீகப்பாதையில் நுழைவதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. இது எல்லோருக்குமானது அல்ல.