KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/முடிவில்லாததும், எளிதானதும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

முடிவில்லாததும், எளிதானதும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கிருஷ்ணர் சொல்கிறார், “அர்ஜுனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய்.

இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன் போன்றது. இதுதான் எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம். இதுவே தூய அறிவு, புனிதமானது. மேலும் ‘தன்னைத்தானே உணர்தலு’க்கு நேரடியாக வழி நடத்திச் செல்லக்கூடியது.
இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.

இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஓ எதிரிகளை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள் சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள்.

இதுவரை இழந்தது போதும், இனி எதையும் இழந்தீட வேண்டாம்

கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு இந்த ஸ்லோகங்கள் மூலம் உறுதி அளிக்கிறார். "என் அன்பிற்குரிய அர்ஜூனா, நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள் சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலை அடைவாய்."

அருமையான வரிகள், அவர் அர்ஜூனனிடம், "நீ என்னிடம் ஒருபோதும் பொறாமைகொள்வதில்லை," என்று சொல்கிறார்.

இந்தப் பகுதியைப் பொறுத்தவரை இந்தச் செய்யுளின் பொருளை, இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, "நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால்," அல்லது "என்னை ஆழ்ந்து நம்புகிற காரணத்தால்."

கிருஷ்ணர் மீது அர்ஜூனன் எவ்வாறு பொறாமைப்பட்டிருக்க முடியும் என்று நமக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.

te தயவு செய்து மிகத்தெளிவாக இருங்கள், மனித மனம் எந்தெந்த வழிகளில் எல்லாம் வேலை செய்யும் என்று உங்களுக்குத் தெரியாது; உண்மையாகவே, நமக்கு மனித மனங்கள் வேலை செய்யும் விதம் பற்றித் தெரியாது. குறிப்பாக, இன்றைய தலைமுறையின் மனங்களைப் பற்றித் தெரியவே தெரியாது.

பொறாமை சத்தியப்பாதையின் தடைக்கல்!

நாம் இப்பொழுது அர்ஜூனனை
மனிதராகவும், கிருஷ்ணரைக் கடவுளாகவும்
நினைக்கிறோம். கிருஷ்ணரைக் கடவுளாக
ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில், அவர்
மனித சரீரத்தில் இருந்த காலத்தில் மக்கள்
அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவே
இல்லை.

மேலும் அர்ஜூனனும் கிருஷ்ணரும் நல்ல
நண்பர்களாக இருந்தனர். நெருங்கிய
நண்பர்களாக இருந்த காரணத்தால்

அர்ஜுனன் கிருஷ்ணரை மனிதராகத்தான்
நடத்தினார். அதனால் அவர் கிருஷ்ணருடன்,
மனிதர்களுக்குரிய உணர்ச்சிகளுடன்தான்
பழகினார்.

கிருஷ்ணர் சொல்கிறார்.

"எனது அன்பிற்குரிய அர்ஜுனா,
நீ என்னிடம் பொறாமைகொள்ளாத
காரணத்தால், உனக்கு நான் இந்த
முக்கியமான இரகசியமான அறிவையும்,
'தன்னை அறிதலை'யும் சொல்கிறேன்.
இதனை அறிந்துகொள்வதன்மூலம், பொருள்
சார்ந்த உலகில் உள்ள துன்பங்களில் இருந்து
விடுதலை அடைவாய்."

முதலில் நாம் இந்தச் சூழ்நிலையையும் பின்னணியையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்மால் இந்த முழு அத்தியாயத்தையும் கிருஷ்ணரால் அது எப்படி வெளிப்படுத்தப்பட்டதோ அப்படியே ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்குப் பிறகுதான் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

கிருஷ்ணருடைய இந்த வாக்குமூலம் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகக்கூட இருக்கலாம். அர்ஜுனன் கிருஷ்ணர் மேல் பொறாமை கொண்டிருக்கலாம் என்ற கருத்தே நம்மை வியப்பில் ஆழ்த்தலாம்.

உங்களுக்கு ஒரு உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், குருமார்கள் மனித உடலில் இருந்தபோதெல்லாம், மக்கள் அவர்களை ஒருபோதும் மதித்ததே இல்லை. இது எப்போதும் இருக்கும் பிரச்சினையாகும். அவர்கள் மனித உடலை விட்ட பிறகுதான் மக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு வழிபடுகிறார்கள்.

உண்மையில், புகைப்படத்தை வழிபடுவது எளிது. இதற்கு எந்தத் தியாகமோ உணர்வுமாற்றமோ தேவையில்லை. ஆனால் வாழும் ஒருவரை வழிபடுவது அவ்வளவு எளிதானதல்ல. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் எப்பொழுதும் கேள்விகளுக்குள்ளாகிறார், பொறாமைக்குள்ளாகிறார்.

ஒரு அருமையான ஒரு வரிச் செய்தி.

வாழ்ந்துகொண்டிருக்கும் தாத்தா,
வீட்டுத்திண்ணையில் வாழ
நிர்ப்பந்திக்கப்படுகிறார். இறந்தவிட்ட
தாத்தா, வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டு
மதிக்கப்படுகிறார் புகைப்படமாக!

அவர் உயிரோடு இருக்கும்வரை வீட்டிற்கு வெளியில் இருக்கும் இடத்தில் வாழ்கிறார்.

இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும் ஒரு திண்ணை இருக்கும். எவ்வளவு நாள் வாழ்கிறாரோ அதுவரை அவர் அந்தத் திண்ணையிலேயே வாழ்கிறார். நகரத்தில் வாழ்பவர் எனில் வீட்டின் வராந்தாவில் வாழ்கிறார். அவர் இறந்தபிறகு அவருடைய புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகிறது.

உயிரோடு இருந்தபோது அவருக்கு வீட்டிற்குள் இடம் இல்லை, ஆனாலும் இறந்தபிறகு வீட்டிற்குள் அவரது புகைப்படம் மரியாதைக்குரிய இடத்தைப் பெறுகிறது.

ஞானமடைந்த குருமார்களுக்கும் இதே நிலைதான். ஒரு ஞானி வாழும்போது அவர் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அவர் ஒருபோதும் மதிக்கப்படுவதும் இல்லை, வரவேற்கப்படுவதும் இல்லை. அவர் மனித உடலை விட்ட பிறகு, மனித உருவத்தில் இல்லாதபோது, அவரை வணங்குவதுதான் எளிதாக இருக்கிறது.

வாழும் ஞானியை அடைந்தவர்கள் அடையவேண்டியது எதுவும் இல்லை

ஒரு அருமையான நிகழ்ச்சி:

ஒருமுறை சைதன்ய மஹாபிரபு அவதிாித்த இடமாகிய மாயாபூாில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று இராமகிருஷ்ணரைச் சந்திக்க வந்திருந்தது.

அவர்கள் இராமகிருஷ்ணாிடம், “குருவே, நாங்கள் சைதன்ய மஹாபிரபுவை இழந்துவிட்டோம். எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஞானமடைந்திருப்போம். கிருஷ்ணருடன் வாழ்ந்த அனுபவத்தை அடைந்திருப்போம்,'' என்றனர்.

உடனே இராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ''சைதன்ய மஹாபிரபு உயிரோடு வாழ்ந்த காலத்தில் அநேக மக்கள் அவரிடம் சென்று, ‘ஓ சைதன்ய மஹாபிரபுவே, நாங்கள் கிருஷ்ணரைக் காண முடியவில்லை, கிருஷ்ணரை இழந்து விட்டோம். கிருஷ்ணரை நாங்கள் பார்த்திருந்தால் அவர் மீதான பக்தியை அனுபவித்திருப்போம், அவரின் சக்தியை உணர்ந்திருப்போம்’ என்றுதான் முறையிட்டார்கள்,'' என்று சொன்னார்.

இராமகிருஷ்ணர் சொல்கிறார், ''உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். சைதன்யர் இங்கே இருக்கிறார். மக்கள் சைதன்யரிடம் சென்று கிருஷ்ணரைப் பற்றிப் பேசியதைப் போல், நீங்கள் இங்குச் சைதன்யரைப் பற்றிப் பேச வந்திருக்கிறீர்கள். நீங்கள் சைதன்யரை இழந்தது பற்றி என்னிடம் முறையிடவே வந்துள்ளீர்கள்.''

ஜ்ஞான குருமார்கள் உடலோடு வாழும் போதெல்லாம், மக்களுக்கு அவர்களது தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ளுவது என்பது ஒரு கடினமான செயலாகவே இருக்கிறது.

ஆனாலும், ஜ்ஞான குருமார்கள் உடலைவிட்ட பிறகு, ''நாங்கள் இராமகிருஷ்ணரை இழந்து விட்டோம், இரமண மகரிஷியை இழந்து விட்டோம், சைதன்யரை இழந்து விட்டோம், மீராபாயை இழந்து விட்டோம்,'' என்று மக்கள் சொல்கிறார்கள். நாம் இழந்தவர்களைப் பற்றியே முறையிடுகிறோம்.

நாம் வாழும் காலங்களில் இருக்கும் ஜ்ஞான
குருமார்களைப் பற்றி நாம் ஒருபோதும்
உணர்வதில்லை.

கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்.

''நீ என்னிடம் பொறாமைகொள்ளாத
காரணத்தால், நான் உனக்கு இறுதியான
ரகசியத்தைச் சொல்கிறேன்.''

தயவு செய்து இங்கே புரிந்துகொள்ளுங்கள்,

> உங்கள்
> கண்களைத்
> திறந்து பாருங்கள்,
> நீங்கள் தேடுகின்ற
> தெய்வீகம்
> உங்கள் எதிரில்தான்
> இருக்கிறது !

கிருஷ்ணர் இறுதியான ரகசியத்தைச் சொல்கிறார். இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட உடனேயே நமக்கும் தெய்வீகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வோம். கிருஷ்ணர் இங்கு நேரடியான, முடிவான ரகசியத்தைச் சொல்கிறார்.

இந்த வியாபார உலகில், எந்தவொரு தலைவரும் எந்தவொரு ரகசியத்தையும் யாருக்கும் கொடுப்பதில்லை. இந்தத் தலைவர்கள், தங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, தங்களுக்காக மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, அவர்களுக்கு இவர்கள் தங்கள் ரகசியத்தை மட்டும் ஒருபோதும் சொல்வதில்லை.

மிகப்பெரும் நிறுவனங்களில் இருக்கும் மக்கள், ரகசியங்களை வெளிவிடாமல் தக்க வைத்துக்கொள்கின்றனர்.

> "நான் எந்த ரகசியத்தையும் என்னிடமே வைத்துக்கொள்ளப் போவதில்லை. எல்லாவற்றையும் நான் வெளிப்படுத்தப் போகிறேன்." > -கிருஷ்ணர்!.

கிருஷ்ணர் இங்கு, "நான் எந்த ரகசியத்தையும் என்னிடமே வைத்துக்கொள்ளப் போவதில்லை.

எல்லாவற்றையும் நான் வெளிப்படுத்தப் போகிறேன்," என்று சொல்கிறார். மேலும், அறிவு சுதந்திரமயமானது என்றும், அதைப் பயன்படுத்திக்கொள்வது நம்மைச் சார்ந்தது என்றும் சொல்கிறார்.

இந்த நவீன உலகில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், "அறிவு சுதந்திரமானது," என அறிவித்துள்ளன. ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணர் ‘அறிவு சுதந்திரமானது’ என அறிவித்துள்ளார்.

மேலும் அவர், "நான் எல்லா ரகசியங்களையும் வெளிப்படையாகச் சொல்லப்போகிறேன்," என்று சொல்கிறார்.

நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால் இந்த ரகசியத்தை உனக்குத் தருகிறேன்," என்று சொல்கிறார்.

Illustration

அவரது அந்தஸ்தைக் காணாமல் அவரது நிலையைக் கண்டு பொறாமை கொண்டால் சாதனை புரிவீர்கள்

முக்கியமான விஷயம் என்னவெனில், ஜ்ஞாந குருமார்களுக்கு அருகில் இருப்பவர்கள், குறிப்பாக அவரைச் சுற்றி வாழ்பவர்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

விரைவிலேயே, இந்தச் சீடர்கள் குருவினுடைய நிலையை அடைய முயற்சி செய்வதை விட்டு விட்டு, அவர் பெற்றிருக்கும் அந்தஸ்தைப் பெற முயற்சி செய்கின்றனர். 'நிலை' என்பது 'அந்தஸ்தி'லிருந்து வேறுபட்டது. குருவின் 'ஞான நிலை'தான் அடையப்படவேண்டுமே தவிர, அந்த ஞான நிலை அவருக்கு அளித்துள்ள 'அந்தஸ்தை' அல்ல.

நாம், குரு அடைந்திருக்கும் ஞான நிலையை
அடைய முயற்சி செய்ய வேண்டுமே தவிர,
அந்த ஞான நிலையால் அவர் அடைந்த
அந்தஸ்தை அல்ல.

அறிவு
சுதந்திரமயமானது;
அதைப்
பயன்படுத்திக்கொள்வது
நம்மைச் சார்ந்தது

அந்தஸ்திற்காக நாம் பாடுபடும்போது நாம் பிரச்சினைக்குள்ளாகிறோம்.

ஒருமுறை ஒரு கல்லூரியில் ஸத்ஸங்கம் வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன். இது தமிழ்நாட்டில் நடந்த த்யான ஸத்ஸங்கம். கல்லூரி மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று உங்களுக்குகே தெரியும்.

ஒரு இளைஞர் என்னிடம் கேள்வி கேட்டார். "நீங்கள் ஏன் இந்த அளவுக்கு உயர்வாக மதிக்கப்பட வேண்டும்? நீங்களும் என் வயது இளைஞர் தானே!"

நிச்சயமாக இது உண்மை. நான் அந்த இளைஞரைக் காட்டிலும் சில ஆண்டுகளே மூத்தவன். அந்த இளைஞர் கேட்டார், "நீங்கள் வரும்போது ஏன் இவ்வளவு ரோஜா மலர்கள் உங்கள் பாதங்களில் தூவப்படுகின்றன?" இந்தியாவில், ஜ்ஞாந குருமார்கள் எங்குச் சென்றாலும், அவர்களை மலர்களைத் தூவித்தான் வரவேற்பார்கள். அவர்கள் மலர்களால்தான் வரவேற்கப்படுகிறார்கள்.

நாம்,
குரு அடைந்திருக்கும்
ஞான நிலையை அடைய
முயற்சிக்க வேண்டுமே
தவிர,
அந்த ஞான நிலையால்
அவர் அடைந்த
அந்தஸ்தை அல்ல.

நான் இந்த ஸத்ஸங்க நிகழ்ச்சி அமைப்பாளரிடம், "என்னை வரவேற்கும்போது மலர்களைத் தூவ வேண்டாம். முக்கியமாக, இது கல்லூரியில் நடைபெறப்போகும் ஸத்ஸங்கமென்பதால், அதனால் இது போன்று செய்ய வேண்டாம். பிறகு, இயல்பாகவே இது போன்ற கேள்விகளைக் கேட்க த்தான் செய்வார்கள். அவற்றை நான் எ எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலியுறுத்திச் சொல்லிருந்தேன்.

இருந்தபோதிலும் அந்த அமைப்பாளர், நமது பக்தர். இதன் மூலம் தமது பக்தியை வெளிப்படுத்த விரும்பினார். நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்த, மலர் தூவ ஏற்பாடு செய்திருந்தார்.

ஸத்ஸங்க நிகழ்ச்சியின் கேள்வி - பதில் பகுதியில், அந்த இளைஞர் நேரடியாகவே என்னிடம் கேட்டார், "உங்கள் பாதங்களில் ஏன் இவ்வளவு மலர்கள் தூவப்பட வேண்டும்? நீங்கள் மட்டும் ஏன் உயர்ந்தவராக மதிக்கப்பட வேண்டும்?"

உண்மையில் இது, இயற்கையாகவே எழுகிற ஒரு பொறாமையே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

அந்த இளைஞரிடம் முதலில் நான் சொன்ன விஷயம் இதுதான்: இதுபோன்ற ஏற்பாடுகளைத் தவிர்க்கும்படி நான் சொல்லியிருந்தேன். இருந்தபோதிலும் பக்தியின் காரணமாக இதை அவர்கள் செய்து விட்டார்கள்.

அடுத்த விஷயம், இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, இன்று என் பாதங்களின் மீது மலர்கள் தூவப்படுவதை மட்டும்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தப் பாதங்கள் எத்தனை முட்களை கடந்து வந்தன என்பது பற்றி உங்களுக்குத் தெரியாது.

மேலும் இந்த உடல், எத்தனை கடுமையான தவங்களை உறுதியாயிருந்து, பொறுமையுடன் செய்திருக்கிறது என்பது பற்றியும் உங்களுக்குத் தெரியாது. இந்த மலர்களை வந்தடைவதற்கு இந்தப் பாதங்கள் எவ்வளவு முட்களைக் கடந்து வந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் எனது 'அந்தஸ்தை'ப் பார்த்து மட்டுமே பொறாமைப் படாதீர்கள். எனது 'நிலை'யைப் பார்த்து பொறாமைப்படுங்கள்.

நான் வாழும் இந்த 'நிலை'யை அடைய முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் மலர்களால் மட்டுமல்லாமல் எல்லாவற்றாலும் அர்ச்சி க்கப்படுவீர்கள். 'நிலை'யை அடைய முயற்சி செய்யுங்கள். அந்தஸ்தை அடைய முயற்சி செய்யாதீர்கள்," என்று அவருக்குச் சொன்னேன்.

Illustration of two cartoon characters

நீங்கள் அந்தஸ்தைப் பார்த்தால், எப்போதும் பொறாமையின் பிடியில்தான் இருப்பீர்கள். நீங்கள் என்னுடைய 'நிலை'யைப் பார்த்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு உத்வேக ஊற்றாக மாறுவேன்.

நான் எந்த நிலையில் வாழ்கிறேனோ அந்த நிலையைப் பார்த்தீர்கள் என்றால், நான் வாழும் அதே நிலையை நீங்களும் அடைவதற்கு உத்வேகம் அளிக்கிற ஆதாரமாக இருப்பேன். அப்போதுதான் நீங்கள் எனது நிலையை அடைய முடியும். நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பேன்.

"இவர் இதைச் சாதிக்கும்போது, என்னால் ஏன் முடியாது?" என்று நீங்கள் நினைப்பீர்கள். நான் உங்களுக்கு உத்வேகத்தின் மூலாதாரமாக இருப்பேன்.

நான் மக்களிடம் ஒன்றைச் சொல்வேன். சாதாரண மனிதருக்கும் ஞானிக்கும் உள்ள ஒரு வித்தியாசம், இல்லை இல்லை, ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், சாதாரண மனிதர் எப்போதும் உறக்க நிலையில் உள்ளார், ஞானி எப்போதும் விழிப்பு நிலையிலேயே உள்ளார். அவ்வளவுதான்.

ஆனால் இருவருக்கும் விழிப்புணர்வு ஒன்றுதான்.

> சாதாரண மனிதர், ஞானி
> - இருவருக்கும்
> விழிப்புணர்வு ஒன்றுதான்.