KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/எல்லாப் பட்டறிவுமே கடன் வாங்கப்பட்டவைதான்.Sign in
பகவத் கீதை விளக்கவுரை

எல்லாப் பட்டறிவுமே கடன் வாங்கப்பட்டவைதான்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நமது பட்டறிவைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பும்ப்போது, அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். நமது பட்டறிவு வெளியே தெளிவாகத் தெரியக்கூடிய உடைமை அல்ல.

பட்டறிவை நாம் ஏதோ பெரியதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் அந்தப் பட்டறிவையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதற்கு ஒரு சவால் ஏற்பட்டால் உடனே நாம் வன்முறையாளர்களாக மாறி விடுகிறோம்.

புலன்களில் இருந்து உருவான அறிவானாலும், பார்த்தல், கேட்டல் போன்ற புலன்களின் மூலமாக அவை உணரப்பட்டாலும், அந்த அறிவு மற்றவரிடம் இருந்து பெறப்பட்டதுதான். வேறு எங்கோ இருந்து வந்ததுதான். கடனாகப் பெற்றதுதான். இதை நம்முடைய சொந்த அறிவாக உரிமை கோர முடியாது. இப்படிக் கடனாகப் பெற்ற இந்தப் பட்டறிவைப் பற்றி யாராவது கேள்வி கேட்கும்போது நாம் ஏன் எரிச்சல் அடையவேண்டும்?

ஆனால் நமது பட்டறிவுக்கு நாமே பொறுப்பு என்று எண்ணுகிறோம். ஏனென்றால் இது நம்முடைய மற்றொரு உடைமையாகி விட்டது. இது நமது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பதால்தான், நாம் இதைக் கவனமாக உருவாக்கி வளர்க்கிறோம்.

இந்தப் பட்டறிவு, சீட்டுக்கட்டுகளால் கட்டப்பட்ட ஒரு கோட்டைதான் என்பதை உணர ஞானமும் விழிப்புணர்வும் தேவை.

callout box

நமது புரிந்துகொள்ளல் உள்முகமாக்கப்படும்போது, அது ஸத்யமாக மாறுகிறது.

ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட சீட்டு
க்கட்டில் ஒன்றை உருவிவிட்டால்கூட
மொத்தமும் விழுந்து உடைந்துவிடும்
என்பதை உணர உள் விழிப்புணர்வு தேவை.

இந்த ஞானத்தைக் கடனாகப் பெற முடியாது.
இந்த ஞானம் உள்ளேயிருந்து வரக்கூடியது.
இது ஆழ்ந்த உள் சிந்தனையாலும்
தியானத்தாலும் ஏற்படுகிறது.

உள் விழிப்புணர்வு மலர்ந்தாலே போதும், அந்தக் கணமே உள் வன்முறை

சுருங்கிவிடும். நம்மைப் பற்றிய அடையாளம்
எதன் மீது கட்டுப்பட்டுள்ளதோ, அது
திடமான ஆதாரம் இல்லை என்பதை
உணர்ந்துகொள்வோம். வாழ்க்கை என்பது
எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது;
அது யூகிக்க முடியாதது; நிலையில்லாதது;
கட்டுப்படுத்த முடியாதது.

ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே அடையாளத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள முடியாது. எந்த ஒரு அடையாளமுமே நிலையாக ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியாது. இந்த விழிப்புணர்வு மலர்ந்தவுடன், நமது கேள்விகள் சந்தேகங்களாக மாறுகின்றன.

குருவிடம் ஏற்படும்
சரணாகதி ஒன்றே
தைரியத்தால் பிறக்கிற
சரணாகதி!.

நமது அடையாளங்களைப் பற்றி நமக்கிருக்கும் நிச்சயமற்ற தன்மையின் பிரதிபலிப்பே சந்தேகங்கள்.

அவை, வாழ்க்கையின் நிஜத்தைப் பற்றிய நம்முடைய தெளிவான புரிந்துகொள்ளுதலையே பிரதிபலிக்கின்றன. இவை உள் வன்முறையினால் உருவாவதில்லை; ஆனால் மாறாக அதிகரித்து வரும் விழிப்புணர்வால் உருவாகின்றன.

சிலநேரங்களில் என்னிடம் சீடர்கள், அவர்கள் மேற்கொண்டுள்ள ஆன்மீகப் பாதை பற்றிய சுய சந்தேகங்கள் அவர்களுக்குள்ளேயே எப்படியெல்லாம் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்று சொல்வதுண்டு.

அப்போது நான் அவர்களிடம், இது அவர்களுடைய வளரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே என்று சொல்வதுண்டு. நம்பிக்கையும் சந்தேகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாமல் மற்றொன்றைப் பெற முடியாது.

வெங்காயங்கள்

நம்பிக்கை என்ற அடுக்கை வெளிப்படுத்த,
நாம் சந்தேகம் என்ற அடுக்கின் மேல்
தோலை உரிக்க வேண்டியுள்ளது. மீண்டும்
இந்த நம்பிக்கை மற்றொரு சந்தேகமாக
வெளிப்படுகிறது. இந்தச் செயல்முறை
தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்,

உள் மையத்தில் ஒன்றுமே இல்லை என்று நாம் கண்டுபிடிக்கும் வரை! நாம் எந்த இடத்தைச் சார்ந்தவர்களோ அந்த இடத்தை அடைகிறோம்; அதாவது முடிவிலா ஆனந்தத்தை, நித்யானந்தத்தை.

அங்கு உள் மையத்தில், பட்டறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்வதால் ஏற்படும் நம்பிக்கையோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான ஏற்றுக்கொள்ளுதலோ கூட இருப்பதில்லை. நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, இப்படிப்பட்ட நம்பிக்கை, தன்கூடவே சந்தேகங்களையும் கொண்டு வருகிறது.

நமது புரிந்துகொள்ளல் உள்முகமாக்கப்படும்போது, இது நமக்குள்ளே ஆழமாக உணரப்பட்ட ஸத்யமாக மாறுகிறபோது, நமது குருவுடன், நமக்கு இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வகையில் ஒரு ஆழமான, திடமான உறவு மலர்கிறது. இங்குதான் நமது குருவுடனான நமது உறவில், இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று ஆழமாகவும், உறுதியாகவும் மலர்கின்றது. நாம் நம்பிக்கையை வளர்க்கிறோம்.

கேள்விகளும் சந்தேகங்களும் மறையும்போது நாம் ச'ரணாகதி நிலையில் இருக்கிறோம். இது பலவீனத்தால் ஏற்பட்ட ச'ரணாகதி அல்ல; நாம் எங்குச் செல்வது, எந்தப் பாதையில் திரும்புவது எனத்தெரியாததால் ஏற்பட்ட ச'ரணாகதியும் அல்ல.

அப்படிப்பட்ட ச'ரணாகதி முட்டாள்தனமானது, அப்படிப்பட்ட ச'ரணாகதி, ஒருவர் அதிகாரிகள் அல்லது மதத்தலைவர்கள் அல்லது அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் காலில் விழுவது போன்றதுதான்.

ஏனென்றால் அவர், தம்மைப் பலஹீனமானவர் என்று நினைக்கிறார். மேலும் தாம் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதும் அவருக்குத் தெரிவதில்லை, இத்தகைய ச'ரணாகதி அச்சத்தின் காரணமாக ஏற்படுகிறது.

குருவிடம் ஏற்படும் ச'ரணாகதி ஒன்றே தைரியத்தால் பிறக்கிற ச'ரணாகதி. இது, அடுத்து நாம் எங்குச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொண்டதின் காரணமாகவே நமக்குள் எழுந்த உறுதியான நம்பிக்கையிலிருந்து நிகழ்கிற ச'ரணாகதி; இது விழிப்புணர்வுடன் நிகழ்ந்த ச'ரணாகதி.

hands playing a flute
Lord Krishna