KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/இரகசியங்களின் இரகசியம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

இரகசியங்களின் இரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing the flute

நாம் இப்போது பகவத்கீதையின் நடுப்பகுதியில், மத்தியப்பகுதியில் இருக்கிறோம். முதலில் அர்ஜுனன் குழப்பத்துடனும் தடுமாற்றத்துடனேயும்தான் ஆரம்பித்தார். அதனால் அர்ஜுனனுடைய கேள்விகள் பலதரப்பட்டனவாகவும், மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டனவாகவும் இருந்தன.

அர்ஜுனன் கேள்வி கேட்டவிதத்தைப் பார்த்தோமேயானால், அது, கிருஷ்ணர் அவருக்குச் சொன்ன பதில்களையே கவனிக்காததுபோல் இருந்தது. நான் ஏற்கெனவே சொன்னதைப்போல், உள்ளிருக்கும் வன்முறையிலிருந்து தோன்றுபவையே கேள்விகள்!

அவை, ஒருவரின் சரியான தன்மையை நிரூபிப்பதற்காக அவருடைய அஹங்காரத்தில் இருந்து எழுபவையே.

இந்தக் கேள்விகள்தான் பின்னர் படிப்படியாகச் சந்தேகங்களாக மாற்றமடைகின்றன. தேடுதல் உடையவர்களுக்குச் சந்தேகங்கள் அவசியம்.

சந்தேகமும் நம்பிக்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நம்முள் சந்தேகமே இன்றி, நாம் நம்பிக்கையை மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியாது.

தேடுதல் உடையவர்களுக்கு குருட்டு நம்பிக்கை உதவாது. ஏனென்றால் குருட்டு நம்பிக்கை, சமுதாய கட்டுறு மனப்பாங்கைச் சார்ந்தே இருக்கும். மேலும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போது, இது முழுவதுமாக அழிந்துவிடக்கூடியதாகவே இருக்கும். தேடுதல் உடைய ஒருவர் ஆன்மீக ஸத்யங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்கும்போது, அது அவருக்குள் உண்மையான சிரத்தையை வளர்க்கிறது.

ஒரு ஞானமடைந்த குருவின் முன் எழுப்பப்படும் நேர்மையான சந்தேகங்கள், உண்மையில் அந்த மனிதரை ஒருமுகப்படுத்துவதிலும்,

அவரது நம்பிக்கையைப் பலப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

அர்ஜுனனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற
மாற்றங்களைக் கிருஷ்ணர் பார்த்தார்.
அர்ஜுனனுக்குள் தனிமனித விழிப்புணர்வு
மலர்வதையும், அது அவரது உள் உலக
மனப்போராட்டத்தையும் வன்முறையையும்
நீக்குவதையும் உணர்ந்து கொண்டார்.

இப்பொழுது குருவானவர், இந்த உள் உலக மாற்றங்களை சீடரின் நடத்தையிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதற்காகவே தமது உரையாடலின் போக்கையே மாற்றி, உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகிறார்.

முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, பிரபஞ்ச இருப்புத் தன்மையிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து, பற்றில்லாமல் வாழ்வது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார். கடைசி அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, மரணம் மற்றும் விடுதலை இவற்றின் செயல்முறைகளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைத் தருகிறார். இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இரகசியங்களிலேயே மேலான இரகசியமான தம்மைப் பற்றிய (அவரைப் பற்றிய) இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

குழந்தைகளின் கேள்விகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை.

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பற்றியும், எப்படி அர்ஜூனனுடைய கேள்விகள் சந்தேகங்களாக மாறின என்பதைப் பற்றியும் பேசினீர்கள். தயவு செய்து இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

நாம் சிறுவயத்தினராக இருந்தபோது கேள்விகள் கேட்டோம்.

குழந்தைகள் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். “வானம் ஏன் உயரத்தில் இருக்கிறது? அந்த மேகம் ஏன் பறவையைப்போல் இருக்கிறது?” என்று அவர்களின் கேள்வியின் பட்டியல் எப்போதுமே நீளமாகத்தான் இருக்கும்.

Illustration of a question mark and a person

ஒரு குழந்தை நிறைய கேள்விகளுடன் இருப்பது அவசியமாகிறது. அதுதான் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனம் மலர்வதற்கான வழி. பெரும்பாலான நேரங்களில், இத்தகைய கேள்விகளுக்குப் பெரியவர்களிடம் பதில் இருப்பதில்லை. அப்படியே அவர்கள் பதில் அளித்தாலும் அவை முட்டாள்தனமான பதில்களாகத்தான் இருக்கும்.

குறைந்த பட்சம், காரண காரியங்களுக்குட்பட்ட கேள்விகளாக, அதாவது “ஏன் வானம் நீலமாக இருக்கிறது?” என்பது போன்ற கேள்விகளாக இருந்தால் கூட அதற்கு நாம் விஞ்ஞானப்பூர்வமாகப் பதில் அளித்துவிட முடியும்.

ஆனால் அந்தக் குழந்தை “வானம் ஏன் உயரத்தில் இருக்கிறது?” என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும்பொழுது, அதற்கு நமது பட்டறிவு மனத்தை வைத்துக்கொண்டு எப்படிப் பதிலளிக்க முடியும்?

பதிலளிக்க முடியாததால் நாம் குழப்பமடைகிறோம். ஆனால் அந்தக்

குழந்தை, பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை. அது, இயற்கையைப் பற்றிய தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. அது ஒரு ஆனந்தமான வெளிப்பாடு. குழந்தையிடம், "குழப்பமடைந்து கொண்டிருக்காமல், அமைதியாக இரு," என்று சொல்கிறோம்!

இந்தக் கேள்விகளை ஒரு குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தோடு அணுகினோமானால், நாம் நமது மன எல்லைகளைத் தாண்டிச் சென்று விடுவோம். இப்படித்தான் மிகப்பெரிய விஞ்ஞானிகள் மிகப்பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். இவ்வாறுதான் நியூட்டன் புவிஈர்ப்பு விதியை உருவாக்கினார். இதனால்தான் ஆர்க்கிமிடிஸ், தாம் ஒரு புது நுட்பத்தை உணர்ந்த வினாடியே, குளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே வெளியே ஓடிச் சென்றார்.

குழந்தை அறியாமையால் கேள்வி கேட்கிறது; ஆர்வமிகுதியால் கேள்வி கேட்கிறது. பெரும்பாலான நேரங்களில் அது பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதில்லை.

நமது பட்டறிவைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பும்போது, அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.

அது, இயற்கையைப் பற்றிய தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது. அது ஒரு ஆனந்தமான வெளிப்பாடு.

ஒரு குழந்தை உடல் ரீதியாக வளரும்போது, அதனைச் சுற்றியிருப்பவர்களால் அது கட்டுறுத்தப்படுகிறது.

அவர்கள் அக்குழந்தைக்கு, என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கற்றுத்தந்துக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டு மனப்பாங்குடன் வளரும் குழந்தை, பேராசையும் பயமும் நிறைந்த ஒரு மனிதராக மாறிவிடுகிறது.

இதுவரை எந்த ஒரு குழந்தையுமே தன்னுடைய அடையாளத்தை தானாக உருவாக்கிக் கொண்டதே இல்லை.

நம்முடைய அடையாளங்கள் எல்லாம் நம்முடைய ஆசைகளாலும் ஆசைகளின் விளைவுகளாலும் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.

'இது என்னுடையது' 'இது நம்முடையது' என எதையெல்லாம் கருதுகிறோமோ, அவைதான் நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் அபிப்ராயத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால்தான் நாம் ஏழையாகவோ பணக்காரராகவோ, அதிகாரமுடையவராகவோ, அதிகாரமற்றவராகவோ இருக்கிறோம். மேலும் இத்தகைய அந்தஸ்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு செயல்படுகிறோம். நாம் வளரும்போது மற்றவர்களின் ஆசைகளையும் உள்வாங்கிக்கொள்கிறோம். பேராசையின் காரணமாக அடுத்தவர்களின் ஆசைகளையும் கடனாகப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆசைகளுக்கேற்ப பொருட்களையும் பணத்தையும் சம்பாதிக்கிறோம். ஆனால் சம்பாதித்த பிறகு, சம்பாதித்தவற்றை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம்.

நமது வாழ்க்கையே பேராசையாலும் பயத்தினாலும் வழி நடத்தப்படுகிறது. இந்த மன அமைப்புதான், நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ, நாம் என்னவாக இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அந்த அடையாளங்களைத் தீர்மானிக்கிறது.

பட்டறிவு,
சீட்டுக்கட்டுகளால்
கட்டப்பட்ட
ஒரு கோட்டை
என்பதை உணர
ஞானமும்,
விழிப்புணர்வும் தேவை.

நாம் நமது அஹங்காரத்தை
வளர்க்கிறோம், அதோடுமட்டுமல்லாமல்,
இந்த அஹங்காரத்தை அதாவது நமது இந்த
அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற
அச்சத்தோடுதான் தொடர்ந்து வாழ்கிறோம்.

நமது அஹங்காரம் அச்சுறுத்தப்படும்போது, அஹங்காரம் அழிக்கப்பட்டு விடுமோ என்கிற இந்த அச்சமே நமக்குள் வன்முறையை உருவாக்குகிறது.

நமது அந்தஸ்துக்கோ, நமது உடைமைகளுக்கோ, நமது ஆசைகளுக்கோ அச்சுறுத்தல் ஏற்படுவதன் மூலம், நமது அடையாளத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அப்போது உள்ளுக்குள் வன்முறை தூண்டப்படுகிறது. இறுதியில் இந்த உள் வன்முறையே தன்னைக் கேள்விகளாக வெளிப்படுத்திக்கொள்கிறது.

ஒரு குழந்தையின் கேள்வி கேட்கும் மனநிலைக்கும், பெரியவர்களின் கேள்வி கேட்கும் மனநிலைக்கும் இதுவே அடிப்படையான வித்தியாசம். குழந்தையின் கேள்வி, தீவிரமான ஆர்வ நிலையிலிருந்தும் சந்தோஷமான நிலையிலிருந்தும் வருகிறது. பெரியவர்கள் அஹங்காரத்திலிருந்தும், உள் வன்முறையிலிருந்தும் வருகின்றன. அங்கிருந்து வருகிற தூண்டுதலுக்கேற்பவே அவர்கள் செயல்படுகின்றனர்.

peacock feather icon