KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/வினாக்களின் வாசலில்...Sign in
பகவத் கீதை விளக்கவுரை

வினாக்களின் வாசலில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸ்வாமிஜி, நீங்கள் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் அர்ஜுனனின் கேள்விகள், எப்படிச் சந்தேகங்களாக மாறின என்பதைப் பற்றியும் பேசினீர்கள். தயவுசெய்து இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

ஸ்வாமிஜி, நாங்கள் உங்கள்மேல் நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வது எப்படி? நாங்கள் இதய ரீதியாகச் செயல்பரியவே விரும்புகிறோம் ஆனால் எங்கள் மூளை, தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது, எங்களால் எப்படி அந்தக் கேள்விகளை அப்படியே விட்டுவிட முடியும்?

“பொருள் சார்ந்த உலகத்தை ஒதுக்கி விடுங்கள், அதற்குப் பின்னால் இருக்கும் சக்தியில் கவனம் செலுத்துங்கள்,” என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது மிகவும் கஷ்டம். நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ அது எல்லாமே பொருள்தான். பொருளுக்குப் பின் இருக்கும் அந்தச் சக்தியை உணரும் தன்மையை நாங்கள் பெற்றிருக்கவில்லை. வெளிப்படையாய்த் தெரியும் பொருளைத் தாண்டிச் செல்வது எப்படி?

கிருஷ்ணர், “என்னைப் பின்பற்றுங்கள். நான் தான் மேலான கடவுள்,” என்று சொல்லும்போது, அவர் அதை எந்த அர்த்தத்தில் சொல்கிறார்?

நாம் உருவ வழிபாட்டிலிருந்துதான் அருவ வழிபாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சில மதங்கள், உருவ வழிபாட்டை நாகரிகமற்றது என்று சொல்லி, அதை முழுவதுமாக எதிர்க்கிறார்கள். தயவுசெய்து இதை விளக்குவீர்களா?

ஏன் பலவிதமான மதச்சடங்குகள்?

மக்கள் மதச்சடங்குகளுக்கு ஏன் முதலிடம் கொடுக்கிறார்கள். எந்த வழியிலாவது அவை ஆன்மீகத்தோடு தொடர்பு பெற்றிருக்கின்றனவா?

bullet

மதச்சடங்குகளின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் விளக்கிய பிறகும்கூட எனக்குள் தெளிவு ஏற்படவில்லை.

நாம் கோவிலில் பலவித பூஜைகள் சடங்குகளைப் பார்க்கிறோம்.

வீடுகளில்கூட மக்கள் பூஜைகள் செய்கிறார்கள். இதற்கு என்னதேவை?

என்னால் பிரபஞ்ச சக்தியிடமே நேரடியாகப் பிரார்த்தனை செய்துகொள்ள முடியும். பிறகு ஏன் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். பூஜையின் அர்த்தம் என்ன?

bullet

நம்முடைய சொந்த ஆசைகளையும் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கிய ஆசைகளையும் நாம் எப்படி வித்தியாசப்படுத்திப் பார்ப்பது?