KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/முன்னுரைSign in
பகவத் கீதை விளக்கவுரை

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழும் ஞானி பரமஹம்ஸ நித்யானந்தர் பகவத் கீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத் கீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ஞான குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமண மஹரிஷி ஆகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துக்களைப் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசியிருக்கிறார்கள்.

பலர் இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கும்போதும் நம்மை உள்ளுலகச் சுற்றுலாளவிற்கு அழைத்துச் செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் பொதுவாக, முதல் நிலை விளக்கமே கொடுக்கப்படுகிறது. இங்கே நம்மோடு வாழும் ஸத்குருநாதர், பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச் செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூக்ஷ்மமான உள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த ஸத்குருவும் தத்துவஞானியுமான சங்கரர், “கீதையைச் சிறிதளவு படிப்பது, ஒரு துளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும்,” என்று சொல்கிறார். “நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள், மரண பயத்தைக் கடந்து விடுவீர்கள்,” என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் பகவத்ீதை ஸத்ஸங்கங்களில் அளிக்கப்பட்ட விரிவுரைகளை, பதிப்பாசிரியர்கள், பரமஹம்ஸரின் நேரடி வழிகாட்டுதலுடன் மேலும் வரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதப் படிப்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரி வாழ்வில பயன்பெறவும் அதையும் கடந்து அவர்களின் இறுதி நிலையான ஸத்யத்தை உணர்வதறகான பெரு முயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்ப நிலையாம் நித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

  • நித்யானந்தா பதிப்பகம்

பகவத்கீதை

உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு

அத்தியாயம் - 9

தர்க்கம்,
நம்மை அறிந்துகொள்வதற்கு
ஒரு போதும் வழி நடத்தாது.
தர்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதலே
'நம்மை அறிதல்' நிகழ்வதற்கு சாத்தியம்.