புண்ணியங்களும் கர்மங்கள்தான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நான்கு சரீரங்களுக்குப் பிறகு அடுத்த மூன்று உள் சரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் இங்கேயே தங்கியிருந்தாலும்கூட, அங்கிருந்து நகரத்தான் வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், புண்ணியங்களும் கர்மங்கள்தான். அவையும் நம்மை ஞானம் அடைய அனுமதிக்காது. நாம் நன்றாக இருப்பதாக உணர்வோம், மகிழ்ச்சியாகவும் இருப்போம். ஆனால் கொஞ்ச நாட்களுக்குத்தான். நமது மனம் அதற்குப் பிறகு அதையும்ாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
> சரியான
> தியானங்களின் மூலம்
> முதல் நான்கு
> சரீரங்களைத் தூய்மையாக
> வைத்திருந்தோமேயானால்,
> மரணம்
> ஒரு இனிமையான
> அனுபவமாகிவிடுகிறது.
உதாரணமாக நாம் கடற்கரையோரத்தில் நடக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நினைப்போம். நமக்கு இங்கு ஒரு குடிசை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தினமும் அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்க்கலாம் என்று நினைப்போம்.
ஆனால் குடிசை கிடைத்தவுடன் உண்மையில் என்ன நடக்கிறது? மூன்று நாட்களுக்கு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்குப் பிறகு அதையும்ாதாரணமாக நினைப்போம். "ஓ! அதே வீடு! அதே மனைவி! அதே நாற்காலி! அதே கடற்கரை," என்று நினைப்போம். அவ்வளவுதான்.
எல்லாவற்றையுமே நாம் சாதாரணமாக நினைக்கிறோம். சொர்க்கம் பற்றிய விஷயத்திலும் இதுவேதான் நடக்கிறது. எப்போது எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கிறீர்களோ அப்போதே நீங்கள் வேறொரு உடலை, வேறொரு ஒரு பிறவியை எடுக்க மீண்டும் வர வேண்டியிருக்கிறது.
கேள்வி: ஸ்வாமிஜி! நற்செயல்களின் மூலமாக நாம் அடையும் புண்ணியங்களும் கர்மங்களே. அவற்றிலிருந்தும் நாம் விடுபடாவிட்டால் ஞானம் அடைய மாட்டோம் என்கிறீர்கள்.
அது எப்படி? எங்கள் வாழ்க்கை முழுவதும் இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருப்பதெல்லாம் என்னவென்றால், தர்ம காரியங்கள் செய்து,
அதன் மூலமாக புண்ணியங்கள் அடைந்தால்தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படித்தான் எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் அதில் பயனில்லை என்கிறீர்களே?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பாவம், புண்ணியம் என்ற பேச்சுக்கள் எல்லாம் உங்களைக் கட்டுக்குள் வைக்கவே! சமுதாயத்திற்கு ஏற்றபடி உங்கள் நடத்தை சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மதங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களால் இந்தச் சமுதாயத்திற்குத் தொல்லைகள் இருக்கக் கூடாது என்பதுதான் இதன் பின்னணி. எல்லோருக்குமே மரணத்தைப் பற்றிய பயம் போய் விட்டால் என்ன ஆகும்? ஒழுங்கீனம் மட்டுமே அங்கு இருக்கும். யாருமே அரசாங்கத்தை மதிக்க மாட்டார்கள்.
அதனால்தான் நல்லவர்களாக இருங்கள், தவறான செயல்களைச் செய்யாதீர்கள், பொய் சொல்லாதீர்கள், திருடாதீர்கள், என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே அவற்றைச் செய்தாலும் அதற்கும் வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை சர்ச்சுக்குச் செல்லுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். பூசாரிகளுக்கும் பணம் கொடுங்கள் (அவர்களும் வாழ வேண்டும் அல்லவா?) பிறகு நீங்கள் அமைதியாக வாழலாம். உங்களுடைய பாவமெல்லாம் கரைந்துவிடும். நீங்கள் சொர்க்கத்திற்குப் போகலாம்.

மறுபடியும் பாவம் செய்தால்... அதனால் என்ன? கோயில் இருக்கவே இருக்கிறது. பூசாரியும் இருக்கிறார். உங்களிடம் இன்னும் பணம் இருக்கிறது. மறுபடியும் பாவ மன்னிப்புக் கேட்டு உங்களால் வருந்த முடியும். அதனால் இந்தச் சுழற்சி போய்க்கொண்டே இருக்கும்.
நீங்கள் உங்களுடைய வங்கியில் எண்ணங்கள், சொல், செயல் என்ற வடிவில் இருப்பு வைத்திருக்கும்வரையில், அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, நீங்கள் மறுபடியும் உடல் எடுத்தாக
வேண்டும். அது எப்படிப்பட்ட உடலாக
இருந்தாலும் சரி! உங்களுடைய மன
அமைப்பு மிகக் கீழானதாக இருந்தால்
நீங்கள் விலங்காகப் பிறக்கலாம்.

இந்தப் பிறவியில் உங்கள் செயல்கள் முயற்சி இல்லாமல், உள்ளுணர்வால் தானாகவே விழிப்புணர்வற்ற நிலையில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தால், நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் இந்த பிறவியிலேயே விலங்கைப்போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் அடுத்த பிறவியிலும் நீங்கள் ஒரு விலங்காகவே பிறப்பீர்கள்.
உங்கள் மதம் சொல்வதைப்போல, சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நற்காரியங்களைச் செய்திருந்தீர்களானால் நீங்கள் மறுபடியும் மனிதராகப் பிறப்பீர்கள். நீங்கள் நல்ல எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருந்தாலும்கூட மீண்டும் பிறப்பீர்கள்.
கிருஷ்ணர் பகவத்கீதையில் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் பலன்களைப் பற்றிக் கவலை படாமல் காரியங்களைச் செய்யுங்கள் என்பதுதான். எந்தவிதமான பலனையும் எதிர் பார்க்காமல், எந்தவிதமான பற்றும் இல்லாமல் காரியங்களைச் செய்யும்போது உங்களுக்கு கர்மங்கள் சேர்வதில்லை. கர்மங்கள் இல்லை என்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க வேண்டியதில்லை.
> உங்களுடைய
எண்ணங்கள், சொல்,
செயல் ஆகியவை
நல்லதாகவே
இருந்தாலும் சரி,
நீங்கள் மறுபடியும்
உடல் எடுத்தாக
வேண்டும்.
இந்து மதப் புராணங்களிலும், மற்ற மதப்
புராணங்களிலும் தேவர்கள் அஸுரர்கள்,
தேவதைகள் சாத்தான்கள் பற்றிச்
சொல்கிறார்கள். நம்புங்கள், இருவருக்குமே
பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
இந்து மதத்தில் குறிப்பிடப்படுகிற அஸுரர்கள் பாதாள உலகில் வாழ்கிறவர்கள். அவர்கள் எல்லாருமே மிக மிகத் துணிச்சல் மிக்கவர்கள். மிகப்பெரிய காரியங்கள் செய்தவர்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் உடலின் மேல் பற்றுக் கொண்டவர்கள்; புலனின்பங்களில் நாட்டம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உடலின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள் என்பதால்தான் அவர்கள் மிகப்பெரிய தியாகமாக, தங்கள் உடலின் பகுதிகளையே எந்தவிதமான முகச் சுளிப்பும் இல்லாமல் நெருப்பில் இடுவார்கள். அவ்வளவு துணிச்சல் மிக்கவர்கள்.
அஸுரர்கள் உடல் பற்று என்ற தளத்திலேயே
இயங்குபவர்கள். அவர்கள் தங்கள் மன
அமைப்பை மாற்றி, புலன் இன்பங்களின்
மீதுள்ள பற்றிலிருந்து விடுபட்டால்தான்
முக்தி அடைய முடியும்.
சொர்க்கத்தில் இருப்பதாகவும நல்லவர்களாகவும் நம்பப்படும் தேவர்களும் பந்தத்தில் சிக்கியிருப்பவர்களே. அவர்கள் தங்கள் மனம் என்ற தளத்தில் சிக்கியுள்ளார்கள். மனம் சார்ந்த இன்பங்களை அவர்களால்விட முடியவில்லை. மனம் என்ற தளத்தில் உள்ள மனம் சார்ந்த இன்பங்களை விட்டால்தான் அவர்களும் மேலே போக முடியும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான். நினைவில்கொள்ளுங்கள், பிறப்புக்கும் இறப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. அவை எந்த நோக்கமும் இல்லாத பாதைகள். அவை எப்படி நிகழ்கின்றனவோ அவற்றை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
அப்படி ஒரு புரிதல் ஏற்படுமானால் நீங்கள் மேலும் மேலும் ஆசைகளை உருவாக்கிக்கொள்வதில்லை. அதனால் கர்மங்கள் இல்லை. நீங்கள் நிலையான ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைக்கிறீர்கள்.

