KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/நிச்சயமாய் என்னை அடைய முடியும்!Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

நிச்சயமாய் என்னை அடைய முடியும்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

8.7. அர்ஜூனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்யும் போதும் கிருஷ்ணராகிய என்னையே நினைப்பாயாக!

உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு சரணாகதி செய்து விட்டு, மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை

8.8. ஓ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நினைவிலேயே நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.

8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் பழமையானவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.

அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.

8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யோகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.

என்னையே நினைத்திருந்தால்...

உன்னிடமே வந்திடுவேன்

முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர், “அர்ஜூனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்யும்பொழுதுகூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் புத்தியும் என்னில் நிலைத்திருக்குமானால், உறுதியாக நீ என்னை அடைவாய். இதில் சந்தேகமே இல்லை,” என்கிறார்.

மீண்டும் மீண்டும் அவர், அஸம்சய - ‘சந்தேகம் இல்லாமல்’ என்கிற சொல்லைச் சொல்கிறார். “சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்” என்கிறார்.

நாம் இப்போது ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். “எப்படியும் உடலைவிடும்போது மட்டும்தானே அவரை நினைக்க வேண்டும். அதற்காக ஏன் இப்போதே கவலைப்பட வேண்டும். இப்போது ஏன் அவரை நினைக்க வேண்டும்? இப்போதைக்கு நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்கிறேன். இறக்கும்போது அவரை நினைத்துக்கொள்கிறேன்,” என்பதுதான் அது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஸ்லோகங்கள் அதற்கு விடையளிக்கின்றன.

இப்போது அவரை நினைக்காவிட்டால்
அப்போதும் அவரை நினைக்க முடியாது.
வாழ்க்கை முழுவதும் 'கோகோ
கோலா, கோகோ கோலா' என்று சொல்லிக்
கொண்டிருந்து விட்டு மரணத்தறுவாயில்
மட்டும் 'ராமா கிருஷ்ணா' என்று
சொல்லிவிடலாம் என்று நினைக்காதீர்கள்.
முடியவே முடியாது.

நாம் எதை வாழ்நாள் முழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரணத்தறுவாயிலும் வரும். ஆனால் நாம் 'இப்போது கோகோ கோலா' என்று சொல்லிக்கொள்கிறேன். கடைசிக் காலத்தில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறேன்' என்று நினைக்கிறோம்.

இல்லை! இப்போது நாம் எதை மீண்டும் மீண்டும் சொல்கிறோமோ அதைத்தான் கடைசியிலும் சொல்வோம். ஏனென்றால் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ அதை நம்மால் கடைசி நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நமது விழிப்புணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

Mரணத்தறுவாயில் தன்னிச்சையாகவே நம் மொத்த வாழ்க்கையும் நம்முன் தோன்றும். மொத்த ஃபைலும் தோன்றும். நாம் நமது சக்தியை எதில் அதிகமாக செலவிட்டிருக்கிறோமோ அந்த ஃபைல்தான் இயற்கையாகவே முதலில் தோன்றும். அவ்வளவுதான். அந்தக் கணத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

இப்போதைக்கு இந்த விஷயத்தை இதை விட்டுவிடலாம், கடைசி நேரத்தில் உடலைவிடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். அது நடக்காது. எந்த நினைவில் வாழ்நாள் முழுவதும் ஆழமாக வாழ்ந்திருக்கிறோமோ அந்த நினைவுதான் தோன்றும்.

அதனால்தான் கிருஷ்ணர், "நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருங்கள்," என்கிறார். இதன் பொருள் என்னவென்றால் நாம் வாழும்போதுகூட, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வில், கிருஷ்ண உணர்வு நிலையில், ஸாக்ஷி பாவனையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.