KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மிகப்பெரிய பாவம் - குற்ற உணர்ச்சிSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மிகப்பெரிய பாவம் - குற்ற உணர்ச்சி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குற்ற உணர்ச்சி என்பது மிக கொடுமையான பாவம்.

A happy smiling young girl holding a doll

பாவம் என்று ஏதாவது இருந்தால், அது குற்ற உணர்ச்சிதான். குற்ற உணர்ச்சி என்பதுதான் ஒரே ஒரு பாவம். பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை. குற்ற உணர்ச்சியின் மூலமாக நாம் ஒருபோதும் தூய்மையடைய முடியாது. நன்னடத்தையையும் நாம் குற்ற உணர்ச்சியால் அடைய முடியாது. மக்கள் என்னிடம், "அது எப்படி ஸ்வாமி? குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் எப்படி மேலானவர்களாக மாற முடியும்?" என்று கேட்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும்வரை நம்மால் நல்ல, தூய்மையான, ஒழுக்கமான மனிதர்களாக மேன்மையடைய முடிவதில்லை.

குற்ற உணர்ச்சிகள் நம்மை மேலானவர்களாக மாற்றுவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்யத் தூண்டும், நம்மை அழுத்தும் மிகப்பெரிய பாரமாக மாறி விடுகின்றன.

குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு.

உதாரணத்திற்கு 'சிகரெட் பிடிக்கும் பழக்கம் தவறானது' என்ற குற்ற உணர்ச்சி நம்முள் பதிந்து விட்டால், சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து நம்மால் வெளியே வர முடியாது. ஏனென்றால் நம்முள் பதிந்திருக்கும் அந்தக் குற்ற உணர்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்து அதை இன்னும் ஆழமானதாக, பலமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோம்.

நம் விழிப்புணர்வுக்குள் மீண்டும் மீண்டும் பதியும் எந்த ஒரு எண்ணமாக இருந்தாலும் சரி, அது பலமுடையதாகி விடுகிறது. அதை விட்டுவிட்டு நம்மால் வெளிவர முடியாது.

குற்ற உணர்ச்சியை விட்டவர்கள் சக்தியுடையவர்களாகிறார்கள்

ராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம் உண்டு. வாலி ஒரு வித்தியாசமான பாத்திரம்.

சிவபெருமானிடம் அவர் ஒரு வரம் பெற்றிருந்தார். அந்த வரத்தின்படி அவர் எதிரில் நின்று யார் சண்டை போட்டாலும் அவர்களுடைய பலத்தில் பாதி பலம் அவருக்கு வந்துவிடும்.

நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்த்தால், நமக்குள் குற்ற உணர்ச்சி மட்டுமே தோன்றும். அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்.

நாம் வாலியின் எதிரில் நின்றோமானால், நம் பலத்தில் பாதி அவருக்குப் போய்விடும்.ஏற்கெனவே அவருக்கென்று ஒரு பலம் உண்டு. இப்பொழுது நம்முடைய பலத்தில் பாதியும் அவருக்குப் போய்விடும். இயற்கையாகவே யார் வெற்றி பெறுவார்கள்? அவர்தான் வெற்றி பெறுவார்.

புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சி தான் வாலி.

நாம் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிற அந்தக் கணமே, நம் பலத்தில் பாதியை அந்தப் பழக்கத்திற்குக் கொடுத்து விடுகிறோம். பிறகு அந்தப் பழக்கத்துடன்கடுமையாகப் போராடுகிறோம். கடுமையாகப் போராடினாலும் ஒன்றை மடங்கு பலம் பொருந்திய அதிலிருந்து அரைமடங்கு மட்டுமே பலம்கொண்ட நம்மால் வெளியே வர முடியும்?

குற்ற உணர்ச்சியின் மூலம் நாம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளியே வரவே முடியாது. நாம் மேலானவர்களாக மாறவும் முடியாது.

பெர்னாட்ஷாவின் மிக அழகான ஒரு வாக்கியம். அவர் சொல்கிறார்: "புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும். நான் அதுபோல பலமுறை வந்திருக்கிறேன்!"

நம்மால் பல தடவைகள் வெளியே வர முடியும். அது மட்டும்தான் நடக்கும். இந்த வட்டத்திலிருந்து நம்மால் வெளியேற முடிவதில்லை; இந்தப் பழக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடிவதில்லை. அந்தச் சுழற்சியிலிருந்து நாம் வெளிவர முடிவதில்லை நாம் அந்தச் சுவடுகளில் சிக்கிக்கொள்கிறோம்.

குற்ற உணர்ச்சி, நம்முள் ஒரு அழுத்தமான தடத்தை, பாதையை உருவாக்கி விடுவதால் அதனை விட்டு நாம் ஒருபோதும் வெளியே வரமுடிவதே இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சியை நீக்கினால்தான் நமது ஆளுமைத் தன்மையை ஒருமைப்படுத்த முடியும். நம்மை மையப்படுத்த முடியும். நமது ஆளுமைத்தன்மை ஒருமைப்படுத்தப்பட்டால் நாம் தூய்மையானவர்களாகவும் சக்தியுடையவர்களாகவும் ஆகிவிடுவோம். நம்மிடம் போதுமான சக்தியில்லாதபோதுதான் நாம் நடத்தை சரியில்லாதவர்களாக ஆகிறோம்.

அதிக சக்தியுடையவர்கள் எப்பொழுதும் தூய்மையான நடத்தையுடையவர்களாகவே இருக்கிறார்கள். சக்தியில்லாதவர்கள்தான் தவறான நடத்தை உடையவர்களாகிறார்கள். ஆனால் பொதுவாக சமுதாயத்தில் சக்தி உடையவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அப்படி நினைக்காதீர்கள்.

ஒருவர் தவறான செய்கைகளைச் செய்கிறார் என்றால் அந்தச் செய்கை மூலமாகச் சக்தி பெறவே விரும்புகிறார். அந்தச் செயலைச் செய்வதன் மூலம், 'தாம் சக்தியைப் பெறமுடியும்' என்று அவர் நினைக்கிறார்.

புரிந்துகொள்ளுங்கள், நாம் புலனின்பங்களின் பின்னால் அலைவதுகூட அதுபோலத்தான். அந்தச் செய்கைகளின் மூலமாக நாம் சக்தியைப் பெறுவோம் என்று நாம் நினைக்கிறோம். அந்தச் செயலைச் செய்வதன் மூலமாக நாம் ஆனந்தத்தைப் பெறுவோம் என்று நினைக்கிறோம். புலனின்பங்களைத் தேடி ஓடுவது என்பது வேறொன்றும் இல்லை சக்தியைத் தேடி ஓடுவதுதான். நம்முடைய ஓட்டம் எல்லாமுமே சக்தியைத் தேடி ஓடுகிற ஓட்டம்தான்.

நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்த்தோமானால், நமக்குள் குற்ற உணர்ச்சி தோன்றும். அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். நாம் குற்ற உணர்ச்சியைத் தோற்றுவித்துக் கொண்டோமானால், அந்த நினைவுகள் மன சரீரத்தில் உட்கார்ந்துகொள்கிறது. நாம் உடலைவிடும்போது அது மிகப்பெரிய தடையாகி விடுகிறது.

மரணம் நேரும்போது நாம் கடக்க வேண்டிய அடுத்த சரீரம் ஸூக்ஷ்ம சரீரம். இங்குதான் நமது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து துக்ககரமான சம்பவங்களும் பதிந்துள்ளன.

குற்ற உணர்ச்சி,
நம்முள்
ஒரு அழுத்தமான
தடத்தை, பாதையை
உருவாக்கி விடுவதால்
அதனை விட்டு
நாம் ஒருபோதும்
வெளியே வரமுடிவதே
இல்லை.

ஸ்தூல சரீரம், ப்ராண சரீரம், மன சரீரம் மற்றும் ஸூக்ஷ்ம சரீரம் ஆகிய நான்கு சரீரங்களையும் நமது உயிர் கடக்கும்போது ஏற்படும் அனுபவம்தான் நரகம். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நரகம் என்று எந்த இடமும் நம் தலைக்கு மேல் இல்லை. நமது எல்லா வித ஆசைகளும் குற்ற உணர்ச்சிகளும், நமது துக்க அனுபவங்களும் பதிந்துள்ள இந்த நான்கு சரீரங்களும்தான் நரகம்.

நமது வாழ்க்கையில் இந்த நான்கு சரீரங்களையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் நாம் நரகத்தில் நுழைவதே இல்லை.

அதாவது, நாம் சில நுட்பங்களால் இந்த நான்கு சரீரங்களையும் தூய்மைப் படுத்தினோமானால், ‘நுட்பங்கள்’ என்று நான் சொல்லும்போது த்யானத்தையே குறிப்பிடுகிறேன், நாம் சரியான த்யானங்களின் மூலமாக இந்த நான்கு சரீரங்களையும் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. இது நமக்குச் சரியான நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுக்கிறது. நேரடியாகவே நாம் அதில் பயணம் செய்வோம்.

இதைத்தான் கிருஷ்ணர், "அந்தப் பாதையில் மனிதன் தன் உடலை விட்டு மிக அழகாகச் சென்று விடுதலையும் அடையலாம் அல்லது துக்கப்பட்டுக்கொண்டே சென்று தம்மை அழித்தும்கொள்ளலாம்," என்று சொல்கிறார். இரண்டு வழிகளையும் கிருஷ்ணர் காட்டுகிறார். நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கிருக்கும் மிகப்பெரிய தடைகள் இவைதான்.