KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/உங்கள் கடைஎண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

உங்கள் கடைஎண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

8.3. பகவான் சொல்கிறார்:

அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.

பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் கர்மா என்று அழைக்கப்படுகிறது.

8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த மேலான இறைவனின் சக்தி வடிவமே இந்தப் பிரபஞ்சம். உடல் எடுத்திருக்கும் எல்லா உயிர்களின் இதயத்திற்குள்ளும் வசிக்கிற பரமாத்மா நானே!

மரணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே
உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை
அடைந்து விடுகிறார்.

இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

மரணகாலத்தில் தம் உடலைவிடும்போது எதை
நினைத்துக்கொள்கிறாரோ, அந்த நிலையையே ஒருவர்
நிச்சயமாக அடைவார்.

peacock feather decoration

நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

மரண சமயத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ளுவதற்கு முன், நாம் இந்த உடலை எப்படி எடுக்கிறோம் என்பதையும் இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் இந்த உடலை எப்படி விட்டுச் செல்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்கு புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது மொத்த உடலையும் ஸம்ஸ்காரங்கள் எனப்படும் பயம், ஆசை, குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகளினாலேயே உருவாக்குகிறோம். நம்முள் எந்த ஸம்ஸ்காரங்கள் இருக்கிறதோ, அதை வாழ்வதற்கும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் ஏற்ற உடலைத்தான் உருவாக்கிக்கொள்கிறோம். இந்த உடல் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்துதான் உருவாக்கப்படுகிறது.

மரணகாலத்தில்
ஒருவர் தம்
உடலைவிடும்போது
எதை
நினைத்துக்கொள்கிறாரோ,
அந்த நிலையையே
மறுபிறவியிலும் நிச்சயமாக
அடைகிறார்.

பிரச்சினை என்னவென்றால், ஒருமுறை நமது உடலை உருவாக்கி, வாழ்க்கையை வாழும்போது, எந்த ஸம்ஸ்காரங்களுக்காக நாம் உடலை உருவாக்கிக் கொண்டோமோ அவற்றை மட்டும் நாம் வாழ்வதில்லை. அவற்றோடு மேலும் புதிய ஸம்ஸ்காரங்களையும் சேர்த்துக்கொள்கிறாம். உதாரணமாக 10,000/- டாலரை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவுக்குச் செல்கிறோம்.

செல்கிற வழியில் நாம் ஒரு நண்பரைச் சந்திக்கிறோம். அப்போது

அவர்பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த
சில இடங்களின் பெயரைச் சொல்லி அங்குப்
போகலாம் என்று நம்மை அழைக்கிறார்.
நாமும் அவர் சொல்கிற இடங்களுக்கு
எல்லாம் இங்கேயும் அங்கேயுமாகப்
போய் பணத்தை எல்லாம், செலவழித்து
விடுகிறோம்.

நாம்,
நம் உடலின் மூலம்
மற்றவர்களுடைய
ஆசைகளையே
பூர்த்தி செய்பவர்களாக
இருக்கிறோம்.

கடைசியாக நாம் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க நினைக்கும்போது நம் கையில் பணம் இருக்காது. அடுத்து நமக்கு இருக்கும் ஒரே வழி நம் கையிலிருக்கும் கிரெடிட் கார்டுதான். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அந்தப் பணத்தைக் கட்டி முடிப்பதற்கே மீதி வாழ்க்கையைச் செலவழிக்கிறோம்.

கிரெடிட் கார்டுகள்

கிரெடிட் கார்டு என்பதே நம்மைத்
தொடர்ந்து ஓடவைக்கிற ஒரு
தந்திரமானநுட்பம்தான். அது நம்மைத்
தொடர்ந்து ஓடச்செய்வதற்காகவே
உருவாக்கப்பட்ட ஒரு தந்திரமான
நுட்பம். அதைப் பற்றி இப்போது பேச
வேண்டாம். அது ஒரு தனி சப்ஜெக்ட்.
இச்சா சக்தி அதாவது ஆசைகளின்
சக்தியைப் பற்றி விவாதிக்கும்போது
அதைப் பற்றி பேசலாம்.

திரும்பவும் கதைக்கு வருவோம். வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான் நமக்குத் தேவையான பொருட்களை நாம் வாங்கி வரவில்லை என்பதையே உணர்கிறோம்.

பத்தாயிரம் டாலருக்கு நாம் என்ன வாங்க வேண்டுமென்று நினைத்துப் போனாரோ அதை மட்டும் வாங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் வழியில் நம் நண்பரைப் பார்த்து அவருடைய ஆசையையும் சேர்த்து நாம் வாங்கிக்கொண்டோம்.

நாம், நம் உடலின் மூலமாக அவருடைய ஆசைகளைப் பூர்த்தி செய்தோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவருடைய ஆசைகளையே நாம் நிறைவேற்றினோம். நம்முடைய ஆசைகளை அல்ல.

நமது பணம், நேரம், சக்தி எல்லாவற்றையும்
பயன்படுத்தினோம். ஆனால் நாம்
நம்முடைய ஆசைகளையும் தேவைகளையும்
நிறைவேற்றிக்கொள்ளவேயில்லை. ஆனால்
அதைச் செய்து முடித்ததற்குப் பிறகுதான்
நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளைச்
சமாளிப்பதற்குத் தேவையான பணம்,
சக்தி, பொருள் இவற்றிற்குப் பற்றாக்குறை
ஏற்பட்டு விட்டதை உணர்கிறோம்.

கடவுள்,
நமக்குத் தேவையான
எல்லாவற்றையுமே
கொடுத்துத்தான்
நம்மை
இந்தப்பூமிக்கு
அனுப்புகிறார்.

இதேபோலத்தான் நம்முடைய ஆசைகளை, ஸம்ஸ்காரங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் நாம் இந்தப் பூவுலகிற்கு வந்திருக்கிறோம். இதைக்குறிக்கும் விதமாகவே பெரிய ஜைன ஞானியான மஹாவீரரும் "கடவுள் உங்களை ஒருபோதும் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை," என்று சொல்கிறார்.

கடவுள் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துத்தான் அனுப்புகிறார். என்னென்ன ஸம்ஸ்காரங்களை நாம்கொண்டு வருகிறோமோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் சேர்த்துத்தான் நாம் நம்மோடு்கொண்டுவருகிறோம்.

உங்களின் ஆசைகளை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்

கர்மா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அந்த நிறைவேறாத ஆசைகள்தான், நம்மை மீண்டும் மீண்டும் பிடித்து இழுக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது.

ஸஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, ப்ராரப்த கர்மா என்று மூன்று வகையான கர்மாக்கள் உள்ளன. ஸஞ்சித கர்மா என்பது நமது நிறைவேறாத ஆசைகளின் மொத்த இருப்பாகும். நமது அலுவலக அலமாரியில் எதிர்காலத் தேவைக்காக அதாவது எதிர்கால ஆய்வுக்காக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது.

ப்ராரப்த கர்மா என்பது இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக நாம்கொண்டு வந்திருக்கும் ஆசைகளாகும். தினமும் நாம் எளிதில் எடுத்து, வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் நமது மேஜை இழுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது இது.

ஆகாம்ய கர்மா என்பது ஒவ்வொரு பிறவியிலும் நாம் உருவாக்கும் புதிய கர்மாக்கள்; இப்போது புதிதாக செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்காக உருவாக்கி வைத்திருக்கும் புதிய ஃபைல்கள் இது.

இந்த மூன்று விதமான கர்மாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்து தீர்த்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும்.

ஸஞ்சித கர்மா என்பவை பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகள். ப்ராரப்த கர்மா இந்தப் பிறவியில், இந்த வாழ்வை வாழ்வதற்காக நாம்கொண்டு வந்திருக்கும் ஆசைகள். ஆகாம்ய கர்மா என்பது நாம் இந்தப் பிறவியில் புதிதாகச் சேர்க்கும் ஆசைகள்.

ப்ராரப்த கர்மா என்பது ‘ஓபனிங் பேலன்ஸ்’போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்த வாழ்வை நிறைவாக உணர்வதில்லை?! இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கிறோம்?

பிரச்சினை என்னவென்றால் இங்குக் கீழிறங்கி வந்த பிறகு நாம் எந்த ஆசைகளை, எந்த ஸம்ஸ்காரங்களை வாழ்ந்து தீர்ப்பதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

நாம் கொண்டு வந்த ஸம்ஸ்காரங்கள், ஆசைகள் - மட்டுமல்லாமல் குடும்பத்தினரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் புதிய புதிய ஆசைகளை வாங்கிக்கொள்கிறோம். மற்றவர்களுடைய ஆசைகளை வாங்கி அவற்றை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கிறோம்.

உதாரணமாக, நமது பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை கட்டினால், நான் இந்தியாவில் சொல்கிறேன், அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரர் யார் eன்றுக்கூட தெரியாது. ஒக்லஹாமாவில் உள்ள ஒரு பக்தர் என்னிடம் சொன்னார். அவர்

> ஸஞ்சிதம்,
> ப்ராரப்தம், ஆகாம்யம்
> இந்த மூன்று விதமான
> கர்மாக்களையும்
> நாம் முழுவதுமாக
> அனுபவித்துத் தீர்த்தால்
> மட்டுமே ஞானம்
> அடைய முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதே ஆறு மாதங்கள் கழித்துதான் அவருக்குத் தெரிந்ததாம்.

இந்திய வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை வாங்கினால் நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்தப் பெண்மணியின் ஆசையை நாம் வாழ ஆரம்பிக்கும்போது இயற்கையாகவே பணம், சக்தி, நேரம் என்று எல்லாமே பற்றாக்குறை ஆகிறது.

மற்றவருடைய ஆசைகளை நாம் வாழும்போது நமக்குள் ஆழமான அதிருப்தியை உணர்கிறோம். ஏனென்றால் நாம்கொண்டு வந்து இருக்கிற சக்தி அதற்குப்போதுமானதாக இருப்பதில்லை.

இறகு

நாம் கடைக்குச் செல்லும்போது ஒரு
திட்டத்தோடும், அதற்குத் தேவையான
பணத்தோடும் போகிறோம். ஆனால் திடீரென்று
நம்முடைய திட்டம் மாறி விடுவதால்,
இயற்கையாகவே நமக்குக் பணப்
பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.
அதேபோல பூமிக்கு வரும்போது
நாம்கொண்டு வந்த ஆசைகளை மறந்து
விட்டு சமுதாயத்திலிருந்து மேலும் மேலும்
ஆசைகளை வாங்கிச் சேர்த்துக்கொள்கிறோம்.

நம்மையுமறியாமல் நம்மை இயக்கும் விளம்பரங்கள்

விளம்பரங்களினால் அளவுக்கதிகமான சமுதாய கட்டுறு மனப்பான்மை ஏற்படுகிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், விளம்பரங்கள் நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள், அதில் சந்தேகமில்லை; ஆனால் நாம்தான் ஏழைகள் ஆகி விடுகின்றோம். தொடர்ந்து கருத்துகள் நம் தலைக்குள் புகுத்தப்படுகின்றன.

குறிப்பாக விளம்பரங்கள் நமது மூலாதார சக்ரத்தை, சக்ரங்களுக்கெல்லாம் மூலமான சக்கரத்தைத் தொடுகின்றன. மூலாதார சக்ரம், நமது உடல் ஆசைகளின் வேர். எந்த விளம்பரங்கள் மூலாதார சக்ரத்தைத் தொடுகின்றனவோ, அவை நமது உடல்-மன அமைப்பில் பதிவாகிவிடும் என்று விளம்பரம் செய்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். காம உணர்வைத் தூண்டக்கூடியதாக உள்ள எதுவும் நமக்குள் பதிவாகிவிடும்.

அதனால்தான், சோப்போ, ஷாம்பூவோ, காரோ எதுவானாலும் சரி நமது காம உணர்வைத் தூண்டும் வகையில்தான் விளம்பரப் படுத்தப்படுகின்றன.

ஏனென்றால் அப்படி விளம்பரப் படுத்தப்படும்பொழுதுதான் அவை நமக்குள் நேரடியாகச் சென்று பதிவாகி விடுகின்றன. அப்படிப் பதிவாகி விடுவதால், நாம் பொருட்களை வாங்கச் செல்லும்போது, இயற்கையாகவே நம்மை அறியாமலேயே அந்தக் குறிப்பிட்ட பெயரைச் சொல்லித்தான் அந்தப் பொருளையே கேட்டு வாங்குகிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். நாம் 2 டாலர் கொடுத்து ஒரு சோப்பை வாங்கும்போது அந்த ஒரு சோப்பை மட்டும்தான் வாங்குகிறோம்; சோப் விளம்பரத்தில் வரும் அந்த மாடலையும் சேர்த்து வாங்க முடியாது என்ற முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். ஆனால் நம் மனத்தில் பதிவாகும்போது மாடலும், சோப்பும் இரண்டும்சேர்த்துதான் பதிவாகின்றன. ஆனால் நாம் சோப்பை மட்டுமே வாங்கு கி றாம் என்பதை மறந்து விடுகிறோம்.

மூலாதார சக்ரத்தில் எது பதிந்தாலும் ஆழமாகப் பதிந்து விடுகிறது. நம்மையறியாமலேயே, விழிப்புணர்வற்ற நிலையிலேயே நாம் அதற்கேற்ப இயங்குகிறோம். விளம்பரங்களின் மூலமாக நம் உணர்வுக்குள் எது பதிவு செய்யப்பட்டாலும் அது மேலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமல் நன்றாகவே இயங்குகிறது. ஆனால் நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் ஆழமாகப் போகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், "ஒ மனிதர்களுக்குள் சிறந்தவனே! மாறிக்கொண்டே இருக்கிற உடலின் இயல்புதான் அதி பூதம். கடவுளின் வடிவமாக வெளிப்பட்டிருக்கும் பிரபஞ்சமும், சிறு தெய்வங்களும் உதாரணமாக சூரியனையும் சந்திரனையும் அதி தெய்வங்கள் என்கிறார்கள்.

உடல் எடுத்திருக்கிற எல்லா உயிர்களின்
இதயத்திலும் ஆத்மாவாக இருக்கும் மேலான
பரமாத்மா நானே, என்னை அதியஜ்ஞ என்று
அழைக்கிறார்கள்.''

தற்காலிகமான
சந்தோஷம்
மேலோட்டமானது.
அது ஒரு வகையான
ஏமாற்றுத்தனமும்கூட!

நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது ஆசைகள் நம்மை எப்படி ஆள்கின்றன என்று பார்த்தோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது ஆசைகளால் எப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மரணத்தின் இரசியத்தையும் புரிந்துகொள்கிறோம். மரணத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ள இது அடிப்படையாக அமைகிறது.

நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நாம் உடலை விட்டுப் போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

இறப்பின் ரகசியங்களை அடுத்த ஸ்லோகத்தில்பார்க்கலாம். கிருஷ்ணர் இங்கே நம் முன்னே இருக்கிற இந்த உடல் சார்ந்த உண்மைகளைக் கொடுக்கிறார். நாம் இதை ஆழமாகப் புரிந்து கொண்டால், 'எல்லாவற்றையும் நம்முடைய உடைமைகளாக்கிக்கொள்ள வேண்டும்' என்கிற நம்முடைய ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.

நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை எடுத்துக்கொள்வோம். "இந்த இடத்தில் ஒரு திடப்பொருள் போடப்பட்டிருக்கிறது," என்று நம் பட்டறிவு சொல்லும். ஆனால் நாம் இன்னும் ஆழமாகச் சென்றோம் என்றால், எவ்வாறு சிறு, சிறு துண்டுகளைக்கொண்டு அந்த பிளாஸ்டிக் நாற்காலி செய்யப்பட்டதோ, அதேபோல அந்தத் திட பிளாஸ்டிக் நாற்காலியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும் முடியும் என்பதைப் பார்க்கலாம்.

இப்போது இன்னும் சிறிது ஆழமாகப் பார்த்தோம் என்றால் அங்கே அணுக்களும், மூலக்கூறுகளும் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் அதை நுணுக்கமான துகள்களாகப் பிரித்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு துகளிலும் அதிகபட்சமாக 90% இடம் காலி இடமாகவே இருக்கிறது.

நவீன விஞ்ஞானம் சக்தியும் பருப்பொருளும் ஒன்றை மற்றொன்றாக மாற்றக்கூடியதாகவே இருக்கிறது என நிரூபித்துள்ளது. சக்தியைப் பருப் பொருளாகவும் அந்தப் பருப்பொருளை மீண்டும் சக்தியாகவும் மாற்ற முடியும்.

நாம் கண்ணால் பார்க்கிற இந்தத் திடப் பொருள் திடப் பொருள் அல்ல. அது முழுவதும் சக்திதே!

உடல் சார்ந்தப் பருப்பொருளும் சக்தியே!

இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சக்தி எளிதில் மாறக்கூடிய தன்மை கொண்டதாகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார்.

அதி பூதம் க்ஷரோபாவ: திடப்பொருளின் தன்மை அல்லது பொருட்களின் இயல்பு மாறிக்கொண்டே இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் சக்தியின் நெகிழ்ச்சித் தன்மையால், அது நகர்ந்துகொண்டே இருப்பதால், திடப்பொருளின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது, நிரந்தரமானது. அதனால் நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே தற்காலிகமானதுதான். நாம் ஏதோ ஒன்றை நிரந்தரமானது என்று நினைப்பதனால்தான், அதைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறோம்.

நாம் எதையெல்லாம் பருப்பொருள்
என்கிறோமோ, அவையெல்லாம்
சக்திதான். அவை தொடர்ந்து
மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த
உண்மை உள் உலக விஞ்ஞானிகளான
ரிஷிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பே சொல்லப்பட்டுவிட்டது

> உடல் சார்ந்த
> உலகத்தைப் பற்றிச்
> சரியாகப்
> புரிந்துகொண்டால்,
> அவற்றைப் பூர்த்தி
> செய்துகொள்வதற்காக
> நாம் அலைவது
> எவ்வளவு வீணானது
> என்பது புரியும்.

கிருஷ்ணரும் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கீதையில் மட்டுமல்ல, உபநிஷதங்களிலும் நாம் இது போன்ற கருத்துகளைப் பார்க்கின்றோம். எல்லாத் திடப் பொருட்களுமே சக்தியாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

நம்பமுடியாத உண்மை

இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் நாம் நம்முடைய ஆசைகளைப் பற்றி பேசினோம். நாம் ஏன் பொருள் சார்ந்த ஆசைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் தொடர்ந்து மூலாதார சக்ரத்திலிருந்தே இயங்குகிறோம்?

சக்தி
அலைகள்தான்
திடப்பொருட்களாக
வெளிப்படுகின்றன.

ஏனென்றால் உடல் சார்ந்த உலகத்தைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு இல்லாததால்தான், நாம் அவ்வாறு இயங்குகிறோம். இந்த ஸ்லோகத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பொருட்களின் மேல் வைக்கிற ஆசைகளின் பின்னால், உலகாயத ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அவற்றின் பின்னால் ஓடுவது எவ்வளவு வீணானது என்பது நமக்குப் புரிந்துவிடும்.

நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே நினைக்கிறோம், உடல் சார்ந்த பொருளாகவே அதை நாம் பார்க்கிறோம். நாம் அதை நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அதை நம்முடனேயே எப்போதும் வைத்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறோம். அந்தப் பொருளின் சொந் தக்காரராக நாம் நம்மை நினைக்கிறோம்.

இங்கேதான் பிரச்சினை இருக்கிறது. நமது அஹங்காரம் இந்தப் பொருள் சார்ந்த உலகை ஒரு பொருளாகவே பார்க்கிறது. தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக மேலும் மேலும் பொருட்களை அது நாடுகிறது. எவ்வளவு பொருட்களின் மேல் முடியுமோ அவ்வளவு பொருட்களின் மேல் நம் கட்டுப்பாட்டைச் செலுத்தவே நாம் விரும்புகிறோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறோம். எல்லாமே சக்திதான் என்பதையும் அந்தச் சக்தியை ஒரே இடத்தில் பிடித்து வைக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சக்தியை ஒரு இடத்தில் பிடித்து வைத்திருக்கவே முடியாது. அது எங்கும் நிறைந்திருப்பது. நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப் பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவமே! தயவு செய்து இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

'வாட் தி பிளீப் டு வி நோ?' (What The Bleep do we know?) என்று ஒரு ஆங்கிலப் படம். அருமையான படம். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

'ப்ராபபிலிட்டி தியரி' (ProbabilityTheory) என்பதைப் பற்றி அது பேசுகிறது. நாம் இங்கே ஒரு நாற்காலியைப் பார்க்கிறோம் என்றால், நமது மனம் அது இங்கே இருக்க வேண்டுமென விரும்புவதால், அது அங்கே இருக்கிறது. அதனால்தான், நாம் அதைப் பார்க்கிறோம்.

நமது மனத்தில் அது இங்கே இருக்க
வேண்டுமென அதிக பட்சமாக நினைத்தால்
அது இங்கே இருக்கிறது. அதே சமயம்
அது இங்கே இல்லாமல் போவதற்கான
எல்லாவிதமான வாய்ப்பும் உள்ளது. அது
இங்கே இருக்க வேண்டுமென நமது மனம்
மிகவும் விரும்பியதால் அது இங்கே உள்ளது.

> நம்மைச் சுற்றியுள்ள
> எல்லாவற்றிலும்
> நம்மையே நாம்
> பார்க்கும்போது
> எல்லாவற்றின் மீதும்
> பல ஆயிரம் மடங்கு
> அன்பு பொங்கும்.

இங்கே சக்தி அலைகள் இருக்கின்றன. அந்தச் சக்தி அலைகள்தான் பொருட்களாக வெளிப்படுகிறது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்குவதோ, பொருட்களின் பின்னால் ஓடுவதோ பயனற்ற செயல் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இன்னும் ஒரு விஷயம், ஜடப்பொருட்களுடன் மட்டுமல்லாமல், மனிதர்களிடமும் நாம் இப்படியேதான் நடந்துகொள்கிறோம். நாம் சொந்தம் கொண்டாடுவதற்கென்று யாரையாவது, நண்பன், மனைவி, கணவன், குழந்தை என்று யாராவது ஒருவரைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறோம்.

யாராவது ஒருவர் நமக்கு கிடைத்தால் போதும், உடனே அவர்களை நாம் பிடித்துக்கொள்கிறோம். அந்த நபர் நம்மை விட்டுச் செல்வதை நாம் விரும்புவது இல்லை. அந்த நபர் நம்மை விட்டுப் பிரிந்தால் நாம் மிகவும் துக்கப்படுகிறோம். குடும்பத்தில் மிகவும் நெருங்கிய உறவுடையவர் இறந்து விட்டால் மன அழுத்தத்தில் விழுகின்றோம். ஏன்?

நாம், ஒரு பொருளைப் பற்றிக்கொண்டு இருப்பதுபோல அவர்களையும் பற்றிக்கொள்கிறோம். ஒரு டெலிவிஷன், ரெஃப்ரிஜிரேட்டர், கார், ஏர் கண்டிஷனர் இவற்றைப்போலத்தான் நாம் உறவுகளையும் ஒரு உடைமைகளாகவே கருதுகிறோம். நமது காருக்கு ஒரு விபத்து நேர்ந்தால் நாம் வருந்துகிறோம். எதையோ இழந்துவிட்டதாக உணர்கிறோம் அதேபோலத்தான் யாராவது ஒருவர் இறந்து விட்டால் நம்மில் ஒரு பாகத்தையே இழந்து விட்டதுபோல வருந்துகிறோம். மனச்சோர்வு அடைகிறோம்.

Baby's foot in a hand

உறவுகளிடம் ஆழமாக அன்பு வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உடைமையாக நினைப்பதைத்தான் விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள், எல்லாப் பொருட்களும், எல்லா மனிதர்களும் அந்த அடிப்படையான சக்தியில் இருந்துதான் உருவாக்கப் படுகிறார்கள்.

கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார், “எல்லாப் பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும் சரி, உயிரற்றவையானாலும் சரி பரமாத்மாவின் வடிவங்களே! பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார்.”

> உறவுகளை
> உடைமைகளாக
> நினைப்பதை
> விட்டுவிடுங்கள்.

இதெப் புரிந்து கொண்டால், நம்மைச் சுற்றி
இருக்கிற எல்லாவற்றிலும் நாமும் ஒரு
பகுதியாகவே இருக்கிறோம் என்ற ஸத்யத்தைப்
புரிந்துகொள்வோம்.

உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும்
இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும்
எந்த வேறுபாடும் இல்லை. அந்த
மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும்

இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மையே பார்க்கிறோம்!

இந்தப் பேருண்மையை நாம் புரிந்து
கொண்டால், நம்மைப் பற்றிய ஒரு புதிய
பரிணாமம் நமக்கே வெளிப்படும்.

நம்மைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும்
நம்மையே நாம் பார்க்கும்போது,
எல்லாவற்றின் மீதும் பல ஆயிரம் மடங்கு
அன்பு பொங்கும்.

எல்லாமே ஒன்றுதான்
என்பதைப்
புரிந்துகொள்ளும்போது
நமது ஆசைகளையும்
நமது கனவுகளையும்
கூர்ந்து கவனிக்க
ஆரம்பிக்கிறோம்.

மற்றவர்களிடம் அன்போடு இருப்பதன் மூலம், நாம் நம்மிடமே அன்பாக இருப்போம். ஏனென்றால் எல்லாமே ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

தயவு செய்து இந்த உயரிய, மேலான ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், அது நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களை நாம் பார்க்கும் முறையையே மாற்றுகிறது. நாம் நமது ஆசைகளையும் நமது கனவுகளையும் கூர்ந்து அறியும் முறையையே அது மாற்றுகிறது.

feather

சொல்லப்படும் அனைத்தும் ஸத்யத்தைத் தவிர வேறொன்றுமில்லை

கிருஷ்ணர் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சூத்திரத்தின் மூலமாக, ஒரே ஒரு நுட்பத்தின் மூலமாகப் பதில் சொல்கிறார்.

இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருகிறோம். கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.

“எவரொருவர் இறக்கும்தறுவாயில் என்னை மட்டுமே நினைக்கிறாரோ அவர் என்னை உடனடியாக அடைவார்,” என்று சொல்கிறார். “என்னை மட்டுமே!” என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார்! “யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைத்தபடி உடலை விடுகிறாரோ, அவர் என் நிலையை அடைகிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாஸ்த்யத்ர ஸம்சய: என்ற வார்த்தைகளை ஏன் சொல்கிறார்! ‘அதில் சந்தேகமேயில்லை’ என்று ஏன் சொல்கிறார்? "இதுதான் ஸத்யம்," என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். அவர் இந்த ஸத்ய ப்ரமாணம் எடுத்துக்கொள்கிறார்.

இந்த நுட்பத்தை விளக்குகிற வகையில் நித்யானந்த ஸ்புரண புரோகிராம் (NSP) என்று இரண்டு நாள்கள் தியான முகாம் நிகழ்ச்சி ஒன்று நாம் நடத்துகிறோம். இந்தியாவில் நான்கு நாள்களுக்கு அதை நடத்துகிறோம். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் நடத்துகிறோம். இங்கு மக்களுக்கு 4 நாள்கள் விடுப்பு எடுப்பதற்குச் சிரமமாக இருப்பதால் இரண்டு நாள்கள் மட்டும் நடத்துகிறோம்.

இங்கே, அமெரிக்காவில் கடவுளே நேரில் வந்தால்க்கூட, வாரத்தின் கடைசியில்தான் வர வேண்டும். இல்லை என்றால், "உங்கள் கார்டை கொடுங்கள் அல்லது ஈமெயில் அனுப்புங்கள். நான் பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்," என்பார்கள். வாரத்தின் கடைசியில் வராமல், வேலை நாள்களில் வந்தால் அவருக்கு ஈமெயில் அட்ரஸ்கள் மட்டுமே கிடைக்கும். இந்த ஒரு ஸ்லோகத்தின் அடிப்படையில்தான் இந்த மொத்தத் தியான முகாம் நிகழ்ச்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மரணத்தைப் பற்றிச் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நான் எப்பொழுதுமே ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வேன். "நான் சொல்வதெல்லாம் உண்மை என்று நான் உறுதி எடுக்கிறேன்," ஏனென்றால் சில உண்மைகளைத் தர்க்க ரீதியாக விளக்க முடியாது. நீங்கள் புரிந்துகொள்கிற வகையிலான தர்க்கத்தைப் பயன்படுத்த முடியாது. அதைக் கேட்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சிறிது பொறுமை வேண்டும்.

நம்மைத்
தர்க்கத்திற்கு அப்பால்
எடுத்துச் செல்ல
நமக்கு
ஒரு குரு தேவை.

நமது மனத்தின் மிகப்பெரிய பிரச்சினை
என்னவென்றால் தர்க்க ரீதியாக இல்லாத
எதையுமே நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
ஒன்று, கேள்வி கேட்கிறோம் அல்லது
ஒரேயடியாக அதைக் கேட்கக்கூட
விரும்புவதில்லை. இல்லையென்றால்,
ஒரு கதையைக் கேட்பதுபோல கேட்டுக்
கொண்டிருக்கிறோம். அது நம் உணர்வுக்குள்
கலப்பதில்லை.

"என்னவோ, இவ்வளவு தூரம்
வந்தது வந்தாயிற்று. அவர் என்ன
சொல்கிறாரோ சொல்லட்டும் அதைக்
கேட்டுத்தான் பார்ப்போமே," என்று
நினைக்கிறோம். நாம் அவரைப் பேச
அனுமதிக்கிறோம். ஆனால் நாம் அதைக்
கவனித்து உள்வாங்குவதில்லை.

மரணத்தைப் பற்றி நான் பேசுவதற்கு முன்பும் இந்தக் காரணத்தினால்தான் "நான் இப்போது சொல்வதெல்லாம் ஸத்யம் மட்டுமே. விருப்பம் உள்ளவர்கள் அதை உள்வாங்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லை என்றால், அதுவும் சரிதான், அது உங்களின் விருப்பத்தை பொறுத்த விஷயம்; அது உங்கள் சாய்ஸ்," என்று சொல்கிறேன்.

கிருஷ்ணர் நாஸ்த்யத்ர ஸம்ச'ய: என்று சொல்கிறார். ஏனென்றால் அவர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப் போகிறார். வெளி உலகைப் புரிந்துகொள்வதற்கு நமக்குத் தர்க்க அறிவு தேவை. உள் உலகைத் தெரிந்துகொள்ள, நம்மைத் தர்க்கத்திற்கு அப்பால் எடுத்துச் செல்ல நமக்கு ஒரு குரு தேவை. தர்க்க அறிவு வெளி உலகத்தைத் தரும். அதனால் உள் உலகத்தைத் தர முடியாது.

கிருஷ்ணர் இங்கே நாஸ்த்யத்ர ஸம்ச'ய: என்று சொல்கிறார். சந்தேகம் வேண்டாம். நான் ஸத்யத்தைப் பேசுகிறேன். இப்போது, நான் கணக்கைப் போடுகிறேன். பிறகு உங்களுக்குப் புரியும்.

இப்போதைக்கு நாம், X என்பது 2-க்கு சமம் என்று வைத்துக்கொள்வோம். கணக்கின் முடிவில்தான் X-க்குப் பதிலாக நாம் 2-ஜப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் அந்த ஆசிரியரின் வார்த்தைகளைத்தான் நம்பியாக வேண்டும். முழுமையாகக் கணக்கைப் போட்டு அதை அவர் நிரூபிக்கும்வரை நீங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதை நீங்கள் உணரும்வரை அந்த விஷயம் உங்கள் அனுபவமாக மலரும்வரை சில நிமிடங்களுக்காவது அந்த ஆசிரியரின் வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கணக்கைப் போட்டு முடித்தவுடன்தான், உங்கள் புரிதலாக அது மலர்கிறது. தொடக்கத்தில் அது என்னுடைய புரிதலாக இருக்கிறது. முடிவில் அது உங்களுடைய புரிதலாக மலர்கிறது. அப்படிப் புரிந்துகொள்ளும்போது, நீங்கள் இயல்பாகவே இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற சத்யங்களைப் புரிந்துகொள்கிறீர்கள்.

வாழும் நாள்களை அதிகரிப்பதா? வாழ்கிற அனுபவத்தை அதிகரிப்பதா?

கிருஷ்ணர் சொல்கிறார்.

"யார் மரணத்தறுவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு உடலை

> எல்லா முடிவுகளையும்
> உங்கள்
> விழிப்புணர்வு
> நிலையிலிருந்து,
> நீங்கள்தான்
> எடுக்கிறீர்கள்!

விடு கிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை." 'என்னை நினைத்துக்கொண்டு' என்று ஏன் சொல்கிறார். அதிலும் 'என்னை மட்டுமே' என்று ஏன் சொல்கிறார்?!

மகாபாரதத்தில் ஒரு லட்சம் கதைகளாவது இருக்கும். அதில் ஒரு கதை இப்படி இருக்கிறது.

ஒரு அரசர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். யமன் வந்து, "அரசனே! உன் வாழ்நாள் முடிந்து விட்டது புறப்படு; போவோம்," என்கிறார். அரசர், "என்ன இது? இவ்வளவு அழகான அரசைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறீர்கள்; அழகான மனைவிகள், குழந்தைகள் என்று எல்லாமே கொடுத்திருக்கிறீர்கள். நூறு வருடம் என்பது மிகக் குறுகிய காலம். தயவு செய்து இன்னொரு நூறு வருடம் வாழ ஆசீர்வதிக்க வேண்டும்," என்றார்.

யமன், "அப்படியெல்லாம் ஆயுளை நீட்டிக்க முடியாது," என்றார்.

ஆனால் அரசர்விடாமல் கெஞ்சினார். உடனே யமன், "அப்படியானால் சரி. உன்னுடைய மகன்களில் யாராவது ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் 100 ஆண்டுகளை உனக்குக் கொடுப்பதாக இருந்தால் நான் உனது ஆயுளை அதிகரிக்கிறேன்," என்றார். எப்படியோ ஒரு மகன் ஒத்துக் கொண்டார். அதனால் அரசருக்கு நூறு ஆண்டுகள் ஆயுள் நீட்டிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் யமன் வந்தார். தமது காலம் முடிந்து விட்டது என்பதை அரசர் உணரவில்லை. "என்ன நான் நூறு ஆண்டுகள் கேட்டேன். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?!" என்றார்.

"நூறு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா," என்றார் யமன். மறுபடியும் 100 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டுமென கெஞ்சினார். "நூறு ஆண்டுகள் போனதே எனக்குத் தெரியவில்லை. எப்படியாவது உதவி செய்யுங்கள்," என்று கெஞ்சினார்.

"இது ரொம்பவும் அதிகம். அப்படியெல்லாம் இரண்டாம் முறை ஆயுள் நீட்டிப்புத் தர முடியாது," என்றார் யமன்.

![அடிப்படையில்
நீங்கள்
நிறைவானவர்களே!](images/p0071_01.webp)

அரசர் "இன்னும் கொஞ்ச நாட்கள் தர
வேண்டும்," என மீண்டும் மீண்டும்
கெஞ்சினார். ஒரு வழியாக, யமன் அவருக்கு
இன்னுமொரு 100 ஆண்டுகள் ஆயுள்
நீட்டிப்பு கொடுத்தார்.

அடுத்த முறை யமன் வரும் போதும் அரசர் அதே மன நிலையில்தான் இருந்தார். இந்த முறை யமன், "நெருப்பில் எண்ணையை வார்த்தால், அது மேலும் மேலும் எரியுமே தவிர, அதை அணைக்கவே முடியாது," என்று அழகானதொரு அறிவுரை தந்தார். "இதோடு போதும். இனி என்னுடன் நீ வரத்தான் வேண்டும்," என்றார். அரசர் புரிந்து கொண்டார். அவர் யமனைப் பின் தொடர்ந்தார்.

அதேபோலத்தான் நாம் மேலும் மேலும் ஆசைகளைத் துரத்திச் செல்வதால் நாம் நிறைவை உணரவே மாட்டோம். மேலும் மேலும் ஆசைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதால் நமக்குள் திருப்தி ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது.

வெளி உலகிலிருந்து நாம் மேலும் மேலும் ஆசைகளைச் சேர்த்துக்கொள்ளும்போது, இந்த வாழ்க்கையே நமக்குப் போதவில்லை என்றும், இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான காலமும், வசதிகளும் நமக்கு வழங்கப்படவில்லை என்றும்தான் நினைக்கிறோம்.

Yama on buffalo

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் 70
ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நாம் நம்
உடலைவிடும்போது 70 ஆண்டுகளில்
நிகழ்ந்த அனைத்தும் ஒரு ஃபிளாஷ்போல,
ஃபாஸ்ட் ஃபார்வேடுபால வேகமாக ஓடும்.
நம்முடைய விழிப்புணர்வில் நம்முடைய
வாழ்க்கை முழுவதும் தோன்றும். ஏனென்றால்
அதை வைத்துத்தான் நாம் அடுத்த பிறவியை
தீர்மானிக்க முடியும்.

இப்பொழுது, நாம் நம்மிடம் நாம்கொண்டு வந்த கர்மாக்களில் அனுபவித்து முடிக்காத, நிறைவேறாத கர்மாக்கள் இருக்கின்றன. அதோடு இந்தப் பிறவியில் இந்த சமுதாயத்திடமிருந்து நாம் சேர்த்துக் கொண்டவற்றில் நிறைவேறாத கர்மாக்களும் இருக்கின்றன. இரண்டுமே இருக்கின்றன.

நீங்கள் முடிவெடுக்கும் நேரம்

இன்னுமொரு முக்கியமான விஷயம். கர்மாக்கள், ஸம்ஸ்காரங்கள் என்றாலே முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளை குறிப்பிடுகின்றன. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர்களே! ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு செயலை முழுமையாக நிறைவேற்றாமல் விட்டுவிடும் போதெல்லாம்,

அதில் மீதம் வைத்து விடுகிறீர்கள். உங்கள்
மனத்தில் அதைப் பற்றிய எண்ணப் பதிவை
ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.

> நெருப்பில்
> எண்ணையை
> வார்த்தால்,
> அது
> மேலும் மேலும்
> எரியுமே தவிர,
> அதை அணைக்கவே
> முடியாது

ஸம்ஸ்காரம் என்பது உங்கள் விழிப்புணர்வற்ற மன நிலையில் பதிவு செய்யப்பட்ட இறந்து போன நினைவு மட்டுமல்ல, அந்த ஆசை நிறைவடையும்வரை மீண்டும் மீண்டும் அதே செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும் சக்தி கொண்டதாகவும் அது இருக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸம்ஸ்காரம் என்பது வாழும் சக்தி. ஏனென்றால் உங்களை ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் சக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் ஸம்ஸ்காரங்களை எண்ணப் பதிவுகள் என்கிறோம்.

evவளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்த அளவுக்கு அது ஆழமானதாகிவிடும் பலம் கொண்டதாகி விடும்.

ஆனால் ஒரு ஸமஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களை விட்டு நீங்கி விடுகிறது! உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்து விடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்து விடுவீர்கள்.

எதை நீங்கள் முழுமையாக
அனுபவிக்கவில்லையோ அது ஸம்ஸ்காரமாக,
கர்மாவாக உங்களுக்குள் தங்கி விடுகிறது.

இங்கு நீங்கள் இதுவரை அனுபவித்து முடிக்காத கர்மாக்களையும் புதிதாகச் சேர்த்துக் கொண்ட கர்மாக்களையும்கொண்டு வருகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை விட்டு நீங்கும்போது அவை எல்லாமே உங்கள் கண் முன்னால் தோன்றும். அப்போதுதான் நீங்கள் உங்கள் அடுத்த பிறவியைப் பற்றி முடிவெடுக்க முடியும்.

> இது இன்பம்
> என்ற எண்ணம்
> இல்லாவிட்டால்
> அதற்குப் பின்னால்
> ஓடுகிற வேலையும்
> நமக்கு
> இருப்பதில்லை.

நீங்கள் ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றால், முடிவெடுப்பதற்கு முன் உங்கள் அலுவலக அலமாரி, மேஜை இழுப்பறை, மேஜை மேல் என்று எங்கெல்லாம் ஃபைல்களைப் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருக்கிறீர்களோ அந்த எல்லா ஃபைல்களையும் ஒருமுறை எடுத்து ஆய்வு செய்வதில்லையா?

இப்பொழுது நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் போகிறீர்கள். எங்கே பிறப்பது? எப்படிப்பட்ட பெற்றோர்களை தேர்ந்தெடுப்பது? எந்தவிதமான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பது? ஆண் உடல் எடுப்பதா? இல்லை பெண் உடல் எடுப்பதா? என்ற இந்த எல்லா முடிவுகளையும் உடலை விட்டுச் செல்வதற்கு முன் எடுக்கப் போகிறீர்கள். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், அத்தனை முடிவுகளையும் உங்கள் விழிப்புணர்வு நிலையிலிருந்து நீங்கள்தான் எடுக்கிறீர்கள் உங்களைத் தவிர வேறு யாரும் எடுப்பதில்லை.

ஆனால் உங்களுடைய விழிப்புணர்வு, நீங்கள் பூமியில் வாழும்போது சேர்த்துக் கொண்ட கர்மாக்களாகிய புள்ளி விவரங்களால் தூண்டப்பட்டு இயங்குகிறது.

மன அழுத்தமே இல்லாமல் வாழ முடியும்

- இது ஸத்யம்

ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பங்களையே, இன்பங்களாகப் பார்க்கிறோம், நினைக்கிறோம். ஏனென்றால் 'அதுதான் இன்பங்கள்' என்று நமக்குச் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்காவில் வாழும் பழங்குடி மக்களைப் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி அல்லது புலன் இன்பங்கள் பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதால் அவர்கள் சாப்பிடுவதில்லை என்று பொருளல்ல.

அவர்கள் நல்ல உணவைச் சாப்பிடுகிறார்கள். ஆமாம், நல்ல உணவு! மனிதர்களையே சாப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள், சுவைக்கிறார்கள், முகர்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள், தொடு உணர்வு இருக்கிறது. எல்லாமே இருக்கிறது.

ஆனாலும் 'இது இன்பம்' என்ற கருத்து அவர்களுக்கு இல்லை. இது இன்பம் என்ற எண்ணம் இல்லாததால் அதற்குப் பின்னால் ஓடுகிற வேலையும் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு போதிக்கப்படவில்லை. கட்டுறு மனப்பாங்கு இல்லை. அதனால் அவர்கள் இன்பங்களைத் தேடி ஓடுவதில்லை.

ஆப்பிரிக்க மக்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு சமுதாயக் கட்டுறு மனப்பாங்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய இன்னொரு உதாரணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பரிவ்ராஜக நாள்களில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரீஸ்வரருக்கு அருகில் வாழ்கிற மலைவாழ் மக்களோடு சில நாள்கள் தங்கியிருந்தேன். அவர்கள் வாழ்கிற முறை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அங்கு வாழ்கிற மக்களில் ஒருவர்கூட மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் நான் சொல்வது முழுவதும் உண்மை; ஸத்யமான உண்மை. மனச் சோர்விற்கு ஆளாகாமல் மனிதர்களால் பூமியில் வாழ முடியும்!

side box

நான் பல மாதங்கள் அவர்களோடு வாழ்ந்தேன். அந்தக் கிராமத்தில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவராக ஒருவர்கூட இல்லை. அது மட்டுமல்லாமல் யாருமே புலன் இன்பங்களை நோக்கி ஓடவில்லை. நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். "எப்படி இந்த மக்கள் புலன் இன்பங்களைத் தேடி ஓடாமல் இருக்கிறார்கள்?" என்று நினைத்துக்கொண்டேன்.

ஏனென்றால் 'புலன் இன்பம்' என்று ஒன்று இருப்பதாகவே அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. அதனால்தான் அடிப்படையான ஒழுக்க கேடுகளும் அங்கு நடைபெறவில்லை.

பைபிளில் படிக்கிறோம். ஆதாம், அந்த 'ஆரம்பக் காலப் பாவ'த்தைச் செய்தாரென்று படிக்கிறோம்; ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே ஏற்பட்ட உறவுதான் அந்த ஆரம்பப் பாவம். அந்த உறவு தவறா சரியா எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது ஒரு விஷயம் இன்பமானது, அதனால் அதைச் செய்யக் கூடாது என்று சொல்லப் படுகிறதோ, அப்பொழுதுதான் பாவம் என்பதே ஆரம்பமாகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மத்தியப் பிரதேசத்தில் மலைவாழ் மக்களோடு வாழ்ந்தபோது, ஊருக்கு நடுவில் இருந்த கோயிலில் நான் தங்கியிருந்தேன்.

அங்கே சுற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள்
ஒரு சிறிய குடிசையைப் பார்த்தேன். ஒரு
கர்ப்பிணிப் பெண் அதற்குள் நுழைந்தார்.
அரை மணி நேரம் கழித்து, புதிதாகப் பிறந்த
கைகுழந்தையுடன் குடிசையை விட்டு
வெளியே வந்தார். உதவி செய்ய ஆளில்லை,
டாக்டர் இல்லை, வலியில்லை, அலறல்
இல்லை, அரை மணி நேரத்தில் சாராதணமாக
ஒரு குழந்தையுடன் நடந்து சென்றார்.

நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையில்,
எனக்கு அவர்களின் மொழி தெரியாத
காரணத்தால் அந்த அம்மையாரிடம் என்னால்
எதுவும் கேட்கமுடியவில்லை.

பெண்களை மதிக்கிற
சமுதாயத்தின்
கட்டுறு மனப்பாங்கு
மிகவும் வித்தியாசமாக
இருப்பதால்,
அங்கு யாருக்கும்
எந்த வலியும்
வருவதில்லை!

மறுபடியும் ஒரு மாதம் கழித்து இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணும் அப்படியே செய்தார். அரை மணி நேரத்தில் குழந்தையோடு வெளியே வந்தார். ஆனால் இப்பொழுதும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியவில்லை. அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன், அந்தக் கோயிலுக்கு வருகிற உள்ளூர் பூசாரியிடம் நான், "எப்படி இது சாத்தியப்படுகிறது? பிரசவத்தின்போது அவர்களுக்கு வலி வராதா?" என்று கேட்டேன்.

அவர் மிகவும் ஆச்சரியத்துடன், "வலியா? என்ன வலி? எதற்கு வலி?" என்றார்.

நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். பிரசவத்தின்போது அவர்களுக்கு வலியில்லை. ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது வலி ஏற்படும் என்ற கருத்து அவர்கள் சமுதாயத்தில் உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளும் கிடையாது. கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் கிடையாது.

நாகரிக சமுதாயத்திற்கு ஓர் உதாரணம்

நான் அவர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான், அவர்களுடைய கலாச்சாரத்தில் பெண்களை மிகவும்

African woman with child

மதிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. பெண்களை அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்துவதே இல்லை. மாதவிடாய்க் காலத்தில் அவர்கள் அசுத்தமடைகிறார்கள் என்ற கருத்தே அவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை.

பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள்தான்
என்ற கருத்து அவர்களுக்குக்
கற்றுத்தரப்படுவதில்லை.

ஒரு பெண் பருவமடைந்தால், அந்தப் பெண்ணுக்கு மரியாதை செய்து, "தாய் ஆவதற்கு நீ தகுதி பெற்று விட்டாய்," என்று அந்தப் பெண்ணிடம் சொல்கிறார்கள். மதிக்கிறார்கள். மக்கள் அவர் காலில் விழுகிறார்கள். அவர் அவர்களைத் தொட்டுக் குணப்படுத்துகிறார். மாதவிடாய்க் காலத்திலிருக்கும் ஒரு பெண் அவர்களைத் தொட்டு ஆசீர்வதித்தால், தாங்கள் குணமடைவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அந்தக் கட்டுறு மனப்பாங்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதால் யாருக்கும் எந்த வலியும் வருவதில்லை, எந்த வலியாலும் யாரும் துக்கப்படவில்லை. நாகரிகமான சமுதாயம் என்று பெயர் பெற்ற இன்றைய சமுதாயத்தில்தான் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் "இது அசுத்தமான நேரம் நீ இப்போது சுத்தமாக இல்லை. இது சரியில்லை. இங்கே நிற்காதே. அங்கே நிற்காதே," என்கிறோம்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய கொடுமை நடக்கிறது. இது போன்ற தவறான கட்டுறு மனப்பாங்கினால் பெண்கள் வலியால் கஷ்டப்படுகிறார்கள். வலியால் வேதனைப்பட்டுப் போராடுகிறார்கள். அவர்களுக்கு இப்படியொரு கட்டுறு மனப்பாங்கு இல்லை என்றால் அவர்களுக்கு வலி இருக்காது.

ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பற்றிய
ஆய்வில், "அவர்களுக்குப் புலன் இன்பம்
என்றழைக்கப்படுகிற இன்பங்களைப் பற்றி
எதுவுமே தெரியவில்லை," என்று ஆய்வாளர்
குறிப்பிடுகிறார். அதனால் தான் அவர்கள்
புலனின்பங்களைத் தேடி ஓடுவதில்லை.

நமது
சுவாசம் மாறினால்
நம் மனமும்
மாறுகிறது.
நமது மனமும்,
சுவாசமும்
மிக மிக நெருங்கிய
தொடர்புடையவை.

சமுதாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு
மனப்பாங்குதான் புலனின்பங்களை நாடி
மக்களை ஓட வைக்கிறது. சமுதாயக் கட்டுறு
மனப்பாங்குதான் சில விஷயங்களின்
பின்னால் நம்மை ஓட வைக்கிறது.

எல்லாவற்றையுமே துக்கம் என்றும்,
இன்பம் என்றும் சமுதாயம்தான்
பிரிக்கிறது. "அடுத்த பிறவியில்
எப்படிப்பட்ட வாழ்க்கையை நான்
தேர்ந்தெடுப்பது? நான் எந்தவிதமான
உடலை எடுப்பது?" என்ற தேர்வுகூட
இது போன்ற கட்டுறு மனப்பாங்கைப்
பொறுத்துத்தான் அமைகிறது.

உங்கள் வாழ்க்கையிலேயே மிக உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ அதை அடைய வேண்டுமென்று முடிவு எடுக்கிறீர்கள். மிகச் சிறந்த நோக்கம் என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ, கருத்தளவில் மிகச்சிறந்தது என்று உங்கள் கண்முன் எது வைக்கப்படுகிறதோ அதை நோக்கி இயற்கையாகவே ஓடுகிறீர்கள். நீங்கள் மிகவும் உயர்வான விஷயம் என்று எதை நினைக்கிறீர்களோ, அதுவே மரணத்தின்போது உங்கள் முன் தோன்றும்.

ஏழு சரீரங்கள் படம்

ஏழு சரீரங்கள் படம்

கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ! குந்தியின் மகனே! ஒருவர் தம் உடலைவிடும்போது எந்த நிலையை நினைக்கிறாரோ அந்த நிலையை நிச்சயமாக அடைவார்."

உடலைவிடும்போது என்ன நடக்கிறது? அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தம் உடலைவிடும்போது ஏழு சரீரங்களைக் கடக்கிறார்.

முதல் சரீரத்தை ஸ்தூல சரீரம் என்கிறோம். ஒருவர் இந்த உடலை விட்டுச்செல்லும்போது, இது மொத்த உடல் அமைப்பிலும் பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது. ஸ்தூல சரீரத்தைக் கடக்கும்போது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டினாற் போன்ற வலி ஏற்படும் என்று உபநிஷதங்கள் சொல்கின்றன.

விழிப்புணர்வுடன் கூடிய மரணம் அடுத்த பிறவியை வடிவமைக்க உதவுகிறது.

நான் உங்களைப் பயமுறுத்துவதாகத் தயவு செய்து எண்ண வேண்டாம். சில உண்மைகளை நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். அவை கொஞ்சம் புண்படுத்துவதாகவே இருந்தாலும், நீங்கள் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். அப்பொழுதுதான் நாம் போக வேண்டிய பயணத்துக்குத் தயாராகலாம். இல்லையென்றால் அது நம்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.

நாமே அதை எடுத்துக்கொள்வோமா அல்லது அது நம் மீது திணிக்கப்படுமா அது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் அந்தப் பயணத்திற்குத் தயாராக வேண்டும். அப்போது என்ன நடக்கும் என்றாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த பிறவியை இப்போதே வடிவமைக்கலாம்

முதலில் மிக அதிகமான வலி இருக்கும். "ஏன் வலி?" என்று நாம் கேட்கலாம். ஏனென்றால் நமது உயிர் உடலில் தொடர்ந்து தங்க விரும்புகிறது. ஆனால் உடலால், உயிரை அதற்கு மேலும் உடலில் தங்க வைக்க முடியாது. நமது உடல் முழுவதுமாகக் களைப்படையும்போதுதான், உயிர் உடலை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இறப்பு நேர்கிறது என்றால் உடம்பு முழுவதுமாகக் களைப்படைந்து விட்டது அல்லது சேதமடைந்துவிட்டது என்று பொருள். இயற்கையான மரணத்தில், உடல் களைத்து விடுகிறது. விபத்தில், உடல் சேதமடைந்து விடுகிறது. அதனால் நாம் உடலைவிட்டுச் செல்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், காய் நறுக்கும்போது அரை அங்குல விரலை நறுக்கிக் கொண்டால் எவ்வளவு வலி ஏற்படுகிறது! அது போன்ற வலி ஆறடி உடல் முழுவதும் இருந்தால், அது எப்படிப்பட்ட வலியாக இருக்கும்?! உடல் கிழிக்கப்பட்ட மாதிரி ஆகி விடுமல்லவா? இயற்கையாகவே அதிக வலி இருக்கும்.

ஆனால் நம் இருப்புத் தன்மையிலேயே தன்னிச்சையான 'வலி நிவாரணி முறை' ஒன்று இருக்கிறது. தாங்க முடியாத வலி ஏற்படும்போது நாம் கோமா நிலைக்குப் போய் விடுகிறோம். கோமா நிலைக்குப் போய் விட்டால் நமக்கு வலி தெரிவதில்லை. ஆனால் இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 'கோமா' நிலையில் மரணம் ஏற்படும்போது, விழிப்புணர்வற்ற நிலையிலேயே நாம் இறக்க நேரிடுகிறது.

இது மிகவும் கொடுமையான விஷயம். ஏனென்றால் நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற விழிப்புணர்வு அப்போது நமக்கு இல்லாமல் போவதால், அடுத்தபிறவியைப் பற்றிய முடிவையும் நாம் விழிப்புணர்வுடன் எடுக்க முடியாது.

அதனால்தான், கிருஷ்ணர், யம் யம் வா பி ஸ்மரன் பாவம் என்று சொல்கிறார். அதாவது மரணத்தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். மரணத்தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் கீழான நிலையிலான உடலையே நாம் அடுத்த பிறவியில் எடுக்கிறோம். மிக உயர்ந்த உணர்வு நிலையை அடையாத பிறவியையே எடுக்கிறோம்.

ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்றவுணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.

உடல் நமக்குச் சொல்லும் பிரியாவிடை

இறக்கும்பொழுது நமது ஸ்தூல உடலை விட்ட கணமே நாம் ப்ராண சரீரத்தை அடைகிறோம். ப்ராண சரீரம் என்பதுதான் நம் உடலுக்குச் சக்தி கொடுக்கிறது. காற்றை உள்ளிழுக்கவும் வெளிச் செலுத்தவும் காரணமாக இருக்கும் சரீரம்தான் ப்ராண சரீரம் அது, நம் ஆசைகளால் நிரம்பியுள்ளது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ராண சரீரமும், ஆசைகளும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. நம்முடைய ஆசைகள் மாறினால் சுவாச ஓட்டமும் மாறிவிடும்.

அதேபோலத்தான் நாம் நமது சுவாச ஓட்டத்தை மாற்றினால், நம் மனமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசமும் மிக நெருங்கிய தொடர்புடையவை. அதனால்தான், உயிரைவிடும்போது மூச்சை உள்ளிழுத்தும், வெளித் தள்ளியும் மனிதர்கள் துன்பமடைகிறார்கள்.

உடல், "இனிமேலும் நான் உன்னை
வைத்துக்கொள்ள முடியாது நீ
வெளியேறலாம்," என்று சொல்கிறது.

ஆனால் உயிர், "எனக்கு இன்னும் ஆசைகள்
இருக்கிறது. அதனால் இந்த உடலில் வாழ
வேண்டும். இந்த உடல் மூலமாகத்தான் அந்த
ஆசைகளை நான் அனுபவிக்க வேண்டும்,"
என்று சொல்கிறது.

உடலுக்கும் உயிருக்கும் இடையே போராட்டம் நடைபெறுகிறது.

> உடலைவிடும்போது,
> நாம் எதற்காகப்
> பிறந்தோம் என்ற
> விழிப்புணர்வு
> இல்லையானால்
> நாம் நமது
> அடுத்தபிறவியைப்
> பற்றிய முடிவையும்
> எடுக்க முடிவதில்லை.

அடுத்தபடியாக மன சரீரத்திற்குள் நுழைகிறோம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் உருவாக்கி வைத்திருக்கிற குற்ற உணர்ச்சி முழுவதும் இந்த சரீரத்தில்தான் பதிவாகி இருக்கிறது. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.

புத்திசாலிகள் குற்ற உணர்ச்சியில் விழமாட்டார்கள்

குற்ற உணர்ச்சி: கடந்தகாலத்தில் நான் இதுபோன்று வாழவில்லையே என்ற எண்ணம்

ஆசை: எதிர்காலத்தில் நான் இது போன்று இருக்கவேண்டும் என்ற எண்ணம்.

குற்ற உணர்ச்சி என்பது வேறொன்றுமில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளை, இப்பொழுது அதிகரித்திருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு ஆய்வு செய்யும்போது, நம் உணர்வுக்குள் ஏற்படும் உணர்ச்சியையே ‘குற்ற உணர்ச்சி’ என்கிறோம்.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். ஏழு வயது இருக்கும்போது நாம் நமது பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

அப்போது நம் அம்மா வந்து நம்மை இரவு உணவுக்கு “வா, வந்து சாப்பிடு” என்று அழைக்கிறார். “நான் சாப்பிட வரவில்லை. நான் விளையாட வேண்டும்,” என்று சொல்கிறோம்.

குற்ற உணர்ச்சி
என்பதுதான்
ஒரே ஒரு பாவம்.
அதைத்தவிர
பூமியில் வேறு எந்த
பாவமும் இல்லை.

அம்மா நம்மிடமிருந்து விளையாட்டுப்
பொருட்களைப் பிடுங்கிக்கொண்டு
வலுக்கட்டாயமாக நம்மைச் சாப்பிட
அழைத்துச் செல்கிறார். உடனே, “நீ போ!
செத்துப் போ! என்னுடைய பொம்மையைக்
கொடு. நான் விளையாட வேண்டும்,” என்று
சொல்கிறோம்.

அந்தச் சமயத்தில் நமக்கு விளையாட்டுப் பொருட்கள்தான் பெரிதாகத் தெரிகின்றன. அம்மாவின் உயிரைவிடவும் விளையாட்டுப் பொருட்களே பெரிதாகத் தெரிகின்றன. ஆனால் பக்குவமடைந்த பிறகு அது உண்மையல்ல என்று நமக்குக் புரிகிறது. பக்குவமடைந்த பிறகு, “ஓ! எவ்வளவு பெரிய தவற்றை நாம் செய்து விட்டோம். இந்த வார்த்தைகளை அம்மாவிடம் நாம் சொல்லியிருக்கக் கூடாது. மிகப்பெரிய தவறு செய்து விட்டோம். அம்மா எவ்வளவு முக்கியமானவர்! ஆனால் அது எனக்கு அப்போது தெரியவில்லையே,” என்று நினைக்கிறோம்.

ஆனால் இதுபோன்ற குற்ற உணர்ச்சியை வளர்த்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு குழந்தையாக நமக்கு அவ்வளவுதான் புத்திசாலித்தனம் இருந்தது. ஆனால் இப்பொழுது நமது புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது.

நமது கடந்தகால முடிவுகளை இப்போதுள்ள புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு அலசி ஆராய்ந்தால் ஒரே ஒரு விஷயத்தைத்தான் உருவாக்க முடியும் - அதுதான் குற்ற உணர்ச்சி! அந்தக் குற்ற உணர்ச்சி தான் மிஞ்சும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுள் இன்னும் ஒருமுறை நமக்கு வாழ்க்கையைக் கொடுத்தாலும் சரி, ஏழு வயதை அடையும்போது நாம் அதே தவற்றைத்தான் செய்வோம். ஏனென்றால் ஏழு வயதில் அந்த அளவு பக்குவம்தான் இருக்கும். தற்போது நமது புத்திசாலித்தனம் மேம்பட்டுள்ளது. இப்போது நமது புத்திசாலித்தனம் அதிகரித்துள்ளது என்பதற்காக, நமது கடந்தகாலச் செயல்களை ஆராய்ந்து, நமது கடந்தகால செயல்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.

அந்த நேரத்தில், அப்படிப்பட்ட முடிவை
நம்மை எடுக்கத் தூண்டிய, நமக்கு கிடைத்த
அந்தப் புள்ளி விபரம் என்ன என்பதைத்தான்
நாம் பார்க்க வேண்டும்.

அப்போதைய புள்ளி விபரங்கள் அவ்வளவுதான். அப்போது நமக்கு எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் இருந்ததோ அதை வைத்துக்கொண்டு இயங்கினோம். அதை வைத்துத்தான் முடிவுகள் எடுத்தோம். இப்போது புள்ளி விபரங்களை ஆராய்கிற புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது. இப்போது நமது சாஃப்ப்ட்வேர் வளர்ந்து விட்டது. அதை வைத்துக்கொண்டு "ஓ! நாம் தவறான செயலைச் செய்து விட்டோம்," என்று இப்போது குற்ற உணர்ச்சியால் தவிப்பது என்பது பொருளற்றது.

அந்த நேரத்தில் நம்மிடமிருந்த சாஃப்ப்ட்வேர் அவ்வளவுதான். புள்ளிவிபரங்களை நன்றாக ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கிற அளவுக்கு மென்பொருள் அப்போது இல்லை. அப்போதைய புத்திசாலித்தனம் அவ்வளவுதான். அதற்கு இப்போது என்ன செய்ய முடியும்?

இன்னும் ஒரு விஷயம். குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு. அது உங்களுக்கும் உங்கள் இருப்பிற்கும் இடையே ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.