உடலை விட்டுச் செல்லும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கலை
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மரணம், அது எப்படி நமக்கு ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்தெளிவைத் தருகிறார்.
மரணத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாதவரை, 'மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு' என்று மட்டும்தான் நாம் புரிந்துகொண்டுஇருப்போம். அதைப் பற்றிய உண்மைகளை நாம் புரிந்துகொள்ளமாட்டோம். ஆனால் நாம் அதைப் புரிந்து கொண்ட அந்தக்க கணமே, நமக்கு மரணம் ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் ஆகி விடுகிறது.
நாம் நினைப்பதுபோல, மரணம் என்பது வாழ்க்கையின் முடிவல்ல; அது வாழ்க்கையின் உச்சக்கட்டம் என்பது புரியும். 'முடிவு' என்பது வேறு, 'உச்சக்கட்டம்' என்பது வேறு.
வாழ்க்கையின் முடிவுதான் மரணம் என்று நினைக்கும்வரையில், நாம் மரணத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அதற்குப் பிறகு என்ன நடக்கும்
என்பது பற்றிக் கற்பனை செய்ய முயற்சி
செய்கிறோம். மேலும் மேலும் துன்பத்தை
நாமாகவே வரவழைத்துக்கொள்கிறோம்.
‘மரணம் என்பது வாழ்க்கையின் முடிவு’
என்று நாம் நினைக்கிற அந்தக் கணமே, நாம்
மரணத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து
விடுகிறோம். இந்தக் கவலைகளால் நமது
வாழ்க்கை மந்தமாகி விடுகிறது. நாம் வாழும்
போதே நம்மீது மரணத்தின் சாயல் படிந்து
விடுகிறது.
மரணம் புரிந்துகொள்ளாதவர் வாழும் போதே இறந்தவராகிறார். மரணத்தைப் புரிந்துகொள்கிறவர் இறப்பில்கூட வாழ்கிறார். மரணத்தைப் புரிந்துகொள்ளாத ஒருவர் வாழும் போதேகூட இறக்கிறார். புரிந்து கொண்ட ஒருவர் இறக்கும்போதுகூட வாழ்கிறார்.
மரணமோ, வாழ்க்கையோ, அவை தற்செயலாக நடக்கும் செயல்கள் அல்ல. அவை நமது புத்திசாலித்தனத்தைச் சார்ந்ததே. நாம் தெளிவான புத்திசாலித்தனத்துடன் இருக்கும்போதுதான் மரணத்தின்போதும் வாழ்கிறோம். நமக்கு மரணத்தைப் பற்றித் தெரியாமல் இருக்கும் போதும், மரணத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கும்போதும், நாம் வாழ்ந்தாலும்கூட இறக்கிறோம்.
மரண பயம்! நாம் பிறந்ததிலிருந்தே நம் எல்லோரையும் துரத்துகிற ஒரே பயம்! நாம் ஏன் இறக்கிறோம்? இறந்ததற்குப் பிறகு என்ன நடக்கிறது? எப்படி நாம் மரணத்திலிருந்து தப்பிக்கலாம்? இந்தக் கேள்விகளிலிருந்துதான், இந்த ஒரே ஒரு பயத்திலிருந்துதான் எல்லா மதங்களும் தோன்றின.
ஒவ்வொரு மதமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில், இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. பெரும்பாலான மதங்கள் மரண பயத்தையும் அதிலிருந்து தப்பிக்க விரும்புகிற நம் பேராசையையும் வைத்து நம்மைக் கட்டுப்படுத்துகிற முறையில்தான் விடை அளிக்கின்றன.
அவை பாவ புண்ணியங்களைப் பற்றிப் பேசுகின்றன. மேலும் நரகத்தைப் பற்றிச் சொல்லி நம்மை பயமுறுத்தவும் சொர்க்கத்தைப் பற்றிய உறுதிமொழிகளைக் கொடுத்து நம்மை வசியப்படுத்தவும் செய்கின்றன. உண்மையில் இவை இரண்டுமே இல்லை. மதம் நம்மைப் பயமுறுத்துவதுபோல் அல்லது வசியப்படுத்துவதுபோல் நரகமோ, சொர்க்கமோ அங்கு இல்லை. அப்படிப்பட்ட இடங்களோ, ஏன் உருவகங்களோகூட இல்லை. அவை வெறுமனே நமது மன நிலைகளை மட்டுமே குறிக்கின்றன.

## மரணம் - ஆத்மா உடை மாற்றும் அற்புதம்!
மரணம் என்பது முடிவல்ல. அது ஒரு பாதைதான்!
தொடரும் நமது பயணத்தில், அது ஒரு பாதை மட்டுமே!
சில மதங்கள் நம்புவதுபோல, இது ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கிற நிகழ்வல்ல. நாம் ஒரே ஒருமுறை மட்டுமே வாழ்ந்து இறந்து விடுகிறவர்கள் இல்லை. மீண்டும் மீண்டும் வாழ்கிறோம்.
கிருஷ்ணர் சொல்வதுபோல், நாம் உடைகளை மாற்றுவதுபோலத்தான், அழிவற்ற ஆத்மாவும் தம் உடல்களை மாற்றி புதிய உடல்களை எடுக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா அழிவற்றது. நமக்குள்ளே இருக்கும் ஆத்ம சக்தி பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து வாழ்கிறது. ஆனால் அது எடுத்து வந்த உடல் அழியக்கூடியது.
வேத மரபைச் சார்ந்த ஞானிகள், வாழ்வு மற்றும் மரணம் கடந்த நிலையை அனுபவித்திருக்கிறார்கள். தாங்கள் அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிலையை அடைவதற்கான நுட்பங்களை நமக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நுட்பங்களை ஆழமாகப்

புரிந்துகொண்டு அவற்றைச் செயல்படுத்தும் அளவுக்கு பக்குவம் அடைந்த சீடர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற மொழியில், அவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய முறையில் மறைபொருளாகச் சொன்னார்கள்.
இங்கே ஞானிகளுக்கெல்லாம் ஞானியான கிருஷ்ணர், தமது அளவு கடந்த கருணையால் யார் வேண்டுமானாலும் புரிந்துகொள்ள முடிகிற முறையிலே இந்த வழிமுறைகளைத் தருகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், இந்த வழிமுறைகளை, இந்த அறிவை திறந்த மனத்துடன், உள்வாங்கி, அதனை ச்ரத்தையுடன்
செயல்படுத்துவதற்கான விருப்பத்தையும்
ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது
மட்டுமே.
நாம் வாழும் கலையைத் தெரிந்து கொண்டால்,
உடலை விட்டுச் செல்லும் நிகழ்ச்சியும்
கலையாகிவிடும்; கொண்டாட்டமாகிவிடும்.
இந்த வாழ்க்கையை வாழ்வது, இந்த வாழ்க்கையை விட்டுச்செல்வது- இந்த இரண்டுமே, தொடர் சுழற்சியாக நிகழ்கிற பிறப்பு, இறப்பு எனும் ஒரே பயணத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையை வாழ்வதில் ஒரு அவசரமோ, வாழ்க்கையை விட்டுச் செல்வதில் பயமோ இருக்காது.
> நாம்
> வாழும் கலையைத்
> தெரிந்து கொண்டால்,
> உடலை விட்டுச்
> செல்லும் நிகழ்ச்சியும்
> நமக்கு ஒரு
> கொண்டாட்டமாகிவிடும்.
இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதும், அதை எப்படிச் செய்கிறோம் என்பதும்தான் நம்முடைய மறுபிறப்பைத் தீர்மானிக்கிறது. இதைப் புரிந்து கொண்டோமானால், இந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய மிகப்பெரிய தெளிவு நமக்கு உண்டாகும்.
அர்ஜுனன் தனது உரையாடலைக் கேள்விகளுடன் தொடங்குகிறார்
8.1 அர்ஜுனன் கேட்கிறார்,
ஓ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, ப்ரஹ்மம் என்றால்
என்ன? ‘நான்’ என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக்
கொண்ட செயல்கள் என்பது என்ன?
வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பொருள் சார்ந்த உலகம்
என்பது என்ன? அதி தேவதைகள் என்று எது அழைக்கப்படுகிறது?
தயவு செய்து விளக்குங்கள்.
8.2. யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஓ மதுஸூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார்?
பக்திசேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உம்மை எவ்வாறு அறிகிறார்கள்?

உள் உலகையே மாற்றிவிடும் சக்தி வாய்ந்தது ஸம்ஸ்க்ருதம்
இவை இரண்டும் மிக அழகான கேள்விகள். ஆனால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அதன் சாரம் போய் விடுகிறது! ஸம்ஸ்க்ரு'த மொழியை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்பொழுது இதுதான் பெரிய பிரச்சினை. அர்ஜூனன் வெளிப்படுத்துகிற அழகான ஸம்ஸ்க்ரு'த சொற்களுக்குச் சரியான ஆங்கில வார்த்தைகள் இல்லை.
ஒரே ஸம்ஸ்க்ரு'த சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அதை மொழி பெயர்க்கும்போது அதன் அழகும் சுவையும் போய் விடுகிறது. மொழி பெயர்க்கும்போது அந்த ஸ்லோகத்தின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே என்னால் கொடுக்க முடிகிறது.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸம்ஸ்க்ரு'தம் மொழியியலில் மட்டுமல்ல, ஒலியியல் சார்ந்த நிலையிலும் அதாவது உச்சரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக இருக்கிறது.
ஸம்ஸ்க்ரு'த வார்த்தைகளால் ஏற்படுகிற அதிர்வுகள் நம் உள் உலகத்தையே மாற்றிவிடும் ச'க்தி படைத்தது. அதன் அதிர்வுகள் மட்டுமே, நம் மொத்த உள் உலகையும் மாற்றிவிடப் போதுமானது. அதன் அதிர்வுகள் ஒரு இடத்தின் ச'க்தி நிலையையே மாற்றிவிடும். அதைக் கேட்பவர்களின் அல்லது உச்சரிப்பவர்களின் உள் உலக அமைப்பையே மாற்றிவிடும்.

பதம் மற்றும் பதார்தம் என்ற இரு
சொற்களின் கருத்தை நாம் புரிந்துகொள்ள
வேண்டும். உதாரணமாக நான் 'பசு' என்று
சொன்னவுடனே நான்கு கால்கள், ஒரு தலை,
ஒரு வால், இரண்டு கொம்புகளுடன்கூடிய
ஒரு உருவம் நம் மனத்தில் தோன்றுகிறது.
அந்தச் சொல்லைப் பதம் என்றும், அந்த
உருவத்தை பதார்தம் என்றும் சொல்கிறோம்.
ஒரு சொல்லைக் கேட்டவுடன் நம் மனத்தில்
என்ன தோன்றுகிறதோ அதைப்ப பதார்தம் என்று
சொல்லுகிறோம். எல்லா மொழிகளிலும்,
சொல்லுக்கும் அதன் பொருளுக்கும்
இடையே உள்ள இடைவெளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
ஸம்ஸ்க்ரு'தத்தில் அந்தத் தொடர்பு உடனடியாக நிகழும். அதன் விளைவு அந்தக் கணமே நிகழும். அதனால்தான் நான் மக்களிடம் தினமும் பத்து நிமிடங்களாவது ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களைக் கேளுங்கள் என்று சொல்வதுண்டு.
உங்களுக்குப் புரியாவிட்டாலும் சரி விஷ்ணு ஸஹஸ்ரநாமமோ, சிவ ஸஹஸ்ரநாமமோ, பகவத்கீதையோ ஏதாவதொன்றைக் கேளுங்கள். தினமும் பத்து நிமிடங்கள் கேளுங்கள். உங்களுக்கு ஸ்லோகங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் அதிர்வுகளால் ஏற்படும் ச'க்தி அலைகள் உங்கள் உடலைச் சுத்தப்படுத்தும். ஸம்ஸ்க்ரு'தத்திற்கு இந்த ச'க்தி உண்டு.
> உங்களுக்கு
> ஸ்லோகங்கள்
> புரியாவிட்டாலும்
> அதன் அதிர்வுகளால்
> ஏற்படும் ச'க்தி
> உங்கள் உடலைச்
> சுத்தப்படுத்தும்.
ச'ப்த தத்த்வம் என்ற ஒலியின் கோட்பாடு ஒன்று உண்டு. காற்று நம் நாபியிலிருந்து தொண்டைக்கு வரும்போது, இந்த ச'ப்த தத்த்வம் தான் காற்றை வார்த்தைகளாக மாற்றுகிறது. இந்தத் தத்த்வம் அங்கு இல்லை என்றால், காற்று மட்டுமே வெளிவரும். வார்த்தைகள் வெளிவராது.
மற்ற மொழிகளில் ச'ப்த தத்த்வத்தை நாம்
அதிகமாகப் பயன்படுத்த, பயன்படுத்த நாம்
அதிகமாகச் சோர்வடைந்தவர்களாகி விடுகிறோம்.
ஆனால் ஸம்ஸ்க்ரு'த மொழியில், ச'ப்த தத்த்வம் நம்மைப் பலப்படுத்துகிறது. எந்த அளவிற்கு அதை நாம் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு நாம் சக்தி பெறுகிறோம். அதை அதிக அளவில் உச்சரிக்க உச்சரிக்க, நாம் அதிக சக்தி படைத்தவர்களாக மாறுகி றோம்.

ஒவ்வொரு வார்த்தையும் ச'ப்த தத்த்வத்தைப் பலப்படுத்துகிறது. இது ஒரு ஜெனே ரட்டர் போன்றது. தான் வேலைசெய்ய உதவும் பேட்டரியை தானாகவே ரீ-சார்ஜ் செய்து கொள்ளும் ஜெனரேட்டரைப் போன்றது. இரண்டும் முழுவதுமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஸம்ஸ்க்ரு'த மொழி, காற்றை ஒலியாகவோ சொற்களாகவோ மாற்றுகிற ச'ப்த தத்த்வத்தைப் பலப்படுத்துகிறது. அதனால்தான் நாம் புரிந்து கொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, அந்த ச'ப்தங்களைக் கேட்பதுமட்டுமே, அந்த அதிர்வுகள் மட்டுமேகூட நமது இருப்புத் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்லோகங்களின் அதிர்வுகள் நமது உடலுக்குள் நேரடியாகப் புகுந்து நமது அசுத்தங்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன' என்று நவீன கால ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
அதனால்தான் குருமார்கள், நம்மைச் ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களைப் பாடி வழிபடும் விதவிதமான வழிபாடுகளை செய்யச் சொல்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மை நாமே மிக எளிதாகக் குணப்படுத்திக்கொள்கிறோம்.
இங்கு அர்ஜுனன் மிக அழகாகக் கேட்கிறார்,
"ஓ பிரபுவே! ப்ரம்மம் என்பது என்ன?
'நான்' என்பது என்ன? பலன்களை
அடிப்படையாகக் கொண்ட கர்மா என்பது
என்ன? வெளிப்படையாகத் தெரியும் இந்த
உடல் சார்ந்த உலகம் என்பது என்ன?
அதிதேவதைகள் என்பவை எவை?
ஸம்ஸ்க்ரு'த மொழியில்,
ச'ப்த தத்த்வம்
நம்மைப் பலப்படுத்துகிறது.
அதை அதிக அளவில்
உச்சரிக்க உச்சரிக்க,
நாம் அதிக சக்தி
படைத்தவர்களாகிறோம்.

ஓ மதுசூதனா! உடலில் நீ எவ்வாறு
இருக்கிறாய்? அந்த நிலையான
விழிப்புணர்வு நிலையில் இருக்கும்
சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில்
உன்னை உணர்கிறார்கள்?''
என்று தொடர்ந்து அடுக்கடுக்காக
கேள்விகளைக் கேட்கிறார்.

இந்த மொத்த நாடகமுமே மனித குலத்தின் நன்மைக்காகவே!
நான் பலமுறை வியந்ததுண்டு. க்ஷத்ரியரான அர்ஜூனன் ஒரு நாட்டின் அரசராக இருந்தவர், வீரர்; அவர் எப்படி ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்க முடியும்! அவர் ஏன் ஒரே கேள்வியை வேறு வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கேட்கிறார்?
மஹாபாரதத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து விளக்கக்கூடிய பல்வேறு நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை நேற்று படித்தேன். அதில் அர்ஜூனனும் கிருஷ்ணரின் அம்சமே; 'நர, நாராயணனின்' அவதாரங்களாக வந்தவர்கள்தான் அவர்கள். அவர்கள் இருவருமே கடவுள் விஷ்ணுவின் இரு வேறு சக்திகள்தான். ஒன்று கிருஷ்ணர் என்றும், இன்னொன்று அர்ஜூனன் என்றும் வெளிப்பட்டது.
மொத்த நாடகமே, மனித குலத்தின் நன்மைக்காக கீதை என்கிற நூல் உருவாவதற்காக நடைபெற்றதுதான்! இல்லாவிட்டால் மிகக் குறைந்த விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சீடர்கூட, இவ்வாறு அதே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முள் அதிகமான கேள்விகள் எழும்போது, நாம் பதில்களுக்காகக் காத்திருக்க விரும்புவதில்லை. அதற்குத் தயாராக மாட்டோம். பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட அப்போது நமக்கு இருப்பதில்லை. நமது குழப்பத்தை மட்டுமே நாம் வெளிப்படுத்துகிறோம். அது, கிட்டத்தட்ட உணர்ச்சிகளை சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.
> நாம் நிறைய கேள்விகளைக் கேட்டோம் என்றாலும்கூட, அதுகூட கிட்டத்தட்ட உணர்ச்சிகளைச் சுத்தப்படுத்தும் ஒருமுறை மட்டுமே.
இங்கு அர்ஜூனன் நிறைய கேள்விகளைக் கேட்கிறார். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் "உங்கள் போதனைகளைப் பின்பற்றுகிற சாதகர்கள் மரண காலத்தில் உங்களை எப்படி உணர்கிறார்கள்?"
இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கிறது; அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். மேற்கத்திய நாடுகள் வாழ்தலைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு ஶக்தியையும் செலவிட்டுள்ளன. கிழக்கத்திய நாடுகள் மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு ஶக்தியையும் செலவிட்டுள்ளன.
நமது ரிஷிகளைப்போல மிக ஆழமாக மரண அனுபவத்திற்குள் சென்று, மரணத்தைப் பற்றிய அறிவைப் பெற்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு தாங்கள் பெற்ற மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், மனித குலத்திற்கு அவர்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணம் பற்றிய அறிவை மனித குலத்திற்கு வழங்கியதன் மூலம், கீழைநாட்டு ஞானிகள் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும்
மக்கள் என்னிடம், "நான் ஏன் மரணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? நான் இன்னும் இளமையாகத்தானே இருக்கிறேன், அதனால் இப்போது நான் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்!" என்கிறார்கள். 'மரணம்' என்ற வார்த்தை மக்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.
அந்தச் சொல்லைக் கேட்கக்கூட பலர் விரும்புவதில்லை. வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மரணம் பற்றி மட்டும் கேட்கத் தயாராக இல்லை. "நான் எதற்காக மரணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்?" என்று நினைக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணம் பற்றிய அறிந்துகொள்ளுதல், வாழ்க்கையைப் பற்றிய அறிந்துகொள்ளுதலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்வும் மரணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இந்து மதம், புத்தம், ஜைனம் ஆகிய கிழக்கத்திய மதங்கள்கூட, பல பிறவிகளைப் பற்றியோ அல்லது அவதாரங்களைப் பற்றியோ பேசுகின்றன. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மேற்கத்திய மதங்கள், தற்போது அவை முன்வைக்கப்பட்டுள்ள முறைப் படி, ஒரே ஒரு பிறவியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.
மறு பிறவி என்ற கருத்து இந்திய சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அதனால்தான் இந்திய சமுதாயத்தில் யாருமே நேரம் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவர்கள் மிகவும் தளர்வாக இருக்கிறார்கள். காலை பத்து மணிவரை டீக்கடையில் அமர்ந்து இருக்கிறார்கள்! நாம் எதையாவது கேட்டால் "இன்றைக்கு இல்லையென்றால் நாளை பார்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்," என்கிறார்கள்.
'நிலைத்த தன்மை' என்ற கருத்து அவர்களுக்குள் ஆழப்பதிந்திருப்பதால், ஏதோ ஓரிடத்தில் அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதைப் பற்றியும் அவசரம் இல்லை. அதனால்தான், அவர்கள் எதன் பின்னாலும் ஓடுவதில்லை. இந்தியர்கள் முழுமையான தளர்வு நிலையில் இருக்கிறார்கள்.
மேற்கில், அவர்கள் எதைச் சாதிக்க விரும்பினாலும் 75 அல்லது 80 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நேரமே இல்லை. இப்போது வாழ வேண்டும், இல்லை என்றால் எப்போதும் இல்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை இந்த பிறவி ஒன்றுதான் அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு. அதனால்தான் மக்கள் ஓடுகிறார்கள், ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மரணத்தைப் பற்றிய நமது புரிந்து கொள்ளுதல்தான் நமது மொத்த சமுதாயத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மரணத்தைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் நமக்கு இருந்தால் போதும், நமது மொத்த எண்ண அமைப்பையும் மன அமைப்பையும் நாம் மாற்றி அமைத்துவிட முடியும்.
'மறு பிறப்பு' என்ற கருத்து எப்படி கிழக்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும் 'ஒரே பிறவி' என்ற கருத்து எப்படி மேற்கத்திய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கும்
ஒரே ஒரு உதாரணம்தான் சொல்லப்பட்டது.
இதேபோல் ஆயிரக்கணக்கான
உதாரணங்களைக் கொடுக்கலாம்.
மரணத்தைப் பற்றிப்
புரிந்து கொண்ட
அந்தக் கணமே,
நம் மொத்த
வாழ்க்கையின் தரமும்,
விழிப்புணர்வின் தரமும்
முழுமையாக
மாறி விடுகிறது.
வாழ்க்கையைப் பற்றிய புரிந்துள்ளுதலைவிட, மரணத்தைப் பற்றிய புரிந்து கொள்ளுதல்தான் மிக அவசியமானது.
வாழ்க்கையைப் பற்றி நாம்
புரிந்து கொண்டாலும் சரி,
புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, வாழ்க்கை
அப்படியேதான் இருக்கும். அதில் எந்தவித
மாற்றமும் இருக்காது.
அதனால்தான் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட அந்தக் கணமே, நம் மொத்த வாழ்க்கையின் தரமும், விழிப்புணர்வின் தரமும் முழுமையாக மாறி விடுகிறது.
உங்களை அருமையாக்கும் அனுபவம்
மரணத்தின் உண்மை நிலையை நாம் உணர்ந்து கொண்ட அந்தக் கணமே, நம் எண்ண அமைப்பு முழுமையாக மாறி விடுகிறது. மரண அனுபவத்தை நாம் அறிவு ரீதியாக அனுபவித்துப் புரிந்துகொண்டால்கூட போதும்; அதுவே நமது மொத்த எண்ண அமைப்பு முறையையும் மாற்றி அமைத்துவிடும்.
அதனால்தான், நாம் யமனை நினைக்கிற அந்தக் கணமே, நமது மொத்த வாழ்க்கை முறையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் வந்து விடுகிறது. யம என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு இரு வேறு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று, ஒழுங்குமுறை; மற்றொன்று, மரணக்கடவுளான யமன். இரண்டுக்குமே நாம் ஒரே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இரண்டு சொற்களையும் வேறு வேறுவிதமாக உச்சரிக்கிறேன். ஆனால் இரண்டுக்குமே எழுத்து வடிவம் ஒன்றுதான்.
பதஞ்ஜலி முனிவரின் யோக ஸூத்ரத்தில், அவர் கொடுக்கும் முதல் நுட்பத்தின் பெயரே யம என்பதுதான். பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தில் எட்டுப் பிரிவுகள் இருக்கின்றன. யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யானம், ஸமாதி என்ற எட்டுப் பிரிவுகளில் முதல் பிரிவாக யம இருக்கிறது.
மரணக் கடவுளின் பெயரும் யமதான். நாம் மரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டோமானால், நமது மொத்த வாழ்க்கை முறையும் தானாகவே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்துவிடும். வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்குமுறை நம் வாழ்க்கையில் நிகழும்.
'வழக்கத்திற்கு மாறான ஆனால் நேர்மையான ஒழுங்குமுறை' என்று ஏன் சொல்கிறேன் என்றால், நாம் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கிற 'ஒழுங்குமுறை' என்பது போலித்தனமானது.
ஆனால் யம என்ற ஒழுங்குமுறையானது, புது விதமான ஒழுங்குமுறை. அது வழக்கமான வழிமுறைக்கு மாறானது; ஆனாலும் நேர்மையானது. அதனால்தான், அதை 'வழக்கத்திற்கு மாறான' என்று சொல்கிறேன்.

## உண்மை, அணுசக்தி போன்றது
நான் ஏன் அதை ‘வழக்கத்திற்கு மாறான’ என்று சொல்கிறேன்?
ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதன் மூலம், அவர் பாகவதத்தை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பது புரிந்தது.
இந்து மதத்தின் சமய இலக்கியமான பாகவதம் விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அதிலும் குறிப்பாக கிருஷ்ணருடைய அவதாரத்தைப் பற்றி பேசுகிறது.
அவர், “ஸ்வாமிஜி, கிருஷ்ணர் ஞானி, ப்ரஹ்மசாரி, திருமணம் ஆகாதவர். ஆனால் குப்ஜா என்ற பெண்ணைக் காதலித்தார். இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டிருந்தார்.
நாம் பாகவதத்தை வெகு ஆழமாகப் படித்திருந்தால் மட்டுமே குப்ஜா என்ற பெயரை அறிந்திருக்க முடியும். அவர்
> யம என்ற
> ஒழுங்குமுறையானது,
> புது விதமான
> ஒழுங்குமுறை.
> அது வழக்கமான
> வழிமுறைக்கு
> மாறானது; ஆனாலும்
> நேர்மையானது.
கிருஷ்ணரின் வேலைக்காரப் பெண்மணி.
பாகவதத்தை நன்றாக அறிந்தவர்தான் இந்தக்
கேள்வியைக் கேட்டு இருந்தார்.
நீங்கள்,
'இந்த உடல் அல்ல'
என்ற உணர்வோடு
உணவை உண்டால்,
அந்த உணவால்
நீங்கள்
பாதிக்கப்படுவதில்லை.
அவர் சொன்னது உண்மைதான். குப்ஜா
என்ற பெண்ணுடன் கிருஷ்ணர் வாழ்ந்தார்
என்று பாகவதத்தில் பதிவு செய்யப்பட்டு
இருக்கிறது. நாம் ஒன்றைத் தெளிவாக
புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ப்ரம்மசர்யம் என்பது 'உறவுகொள்ளாமல்
இருப்பது' என்பதைக் குறிக்கவில்லை. இதை
நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கிருஷ்ணர் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று நான் சொல்லவில்லை. கிருஷ்ணர் ப்ரம்ம உணர்வில் இருக்கிறார் என்றுதான் சொன்னேன்.
இங்கு நாம் ப்ரம்மசர்ய என்றால் திருமணம் செய்துகொள்ளாதவர் என்று மொழிபெயர்க்கிறோம். அப்படி நாம் மொழி பெயர்த்தவுடனே அதன் அர்த்தமே மாறி விடுகிறது.
கிருஷ்ணருடைய உள் உலகம் தூய்மையாக இருந்தது. எதனாலும் பாதிக்கப்படாததாக இருந்தது என்பதுதான் அதன் பொருள்.
ஒரு சின்ன கதை :
இந்தியாவின் மிகப் பழமையான ஞானியான வியாஸர் ஒருமுறை ஒரு விழாவில் தம் சீடர்களுடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் விருந்து சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும் வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டிருந்தது.
அப்போது அவர், அந்த ஆற்றின் முன்னே நின்றபடி "நான் ஏகாதசி விரதத்தை உண்மையாக கடைப்பிடித்து இருந்தால் இந்த ஆறு நான் கடந்து செல்வதற்காக வழிவிடட்டும்," என்று உரத்தக் குரலில் சொன்னார்.
வியாஸர் இந்த வார்த்தையைச் சொன்னவுடனே ஆறு வழிவிட்டது. தமது சீடர்கள் பின் தொடர அவர் ஆற்றைக் கடந்து , தம் ஆச்ரமத்தை அடைந்தார்.
நடந்தது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அவரது சீடர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு, "என்ன இது! சிறிது நேரத்திற்கு முன்புதானே ஒரு விருந்து சாப்பிட்டீர்கள்? ஆனால் நதியின் முன்னே நின்று, நான் ஏகாதசி' விரதத்தை உண்மையாகக் கடைப்பிடித்து இருந்தால் நதி வழிவிடட்டும் என்று சொன்னீர்கள். நதியும் வழி விடுகிறது இது எப்படி முடியும்?" என்று கேட்டார்கள்.
வியாஸர், "நீங்கள் 'நான் இந்த உடல் அல்ல' என்ற உணர்வோடு உணவை உண்டீர்களானால், அந்த உணவால் நீங்கள் பாதிக்கப்படமாட்டீர்கள். அப்போது நீங்கள், 'நான் உண்கிறேன், நான் ஜீரணிக்கிறேன், நான் வாழ்கிறேன்' என்ற நினைக்க மாட்டீர்கள். அதேபோல் இப்போது இந்த உடல்தான் சாப்பிட்டது. எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது," என்று சொன்னார்.
இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது என்பது கண்டிப்பாகக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். இதை வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும். மிகப்பெரிய உண்மைகளில் எல்லாம் இருக்கிற ஆபத்து என்னவென்றால், அவற்றைத் தவறாகவோ அல்லது வேறு விதமாகவோகூட நாம் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக அணுசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். மனித குலத்திற்கு

பயன்படும் வகையில் அதை நாம் நல்ல விதமாகவும் பயன்படுத்த முடியும். அதே சக்தியை வைத்துக்கொண்டு மனித குலத்தை அழிக்கவும் முடியும். நாம் தவறாகவும் பயன்படுத்தலாம். நல்லதாகவும் பயன்படுத்தலாம்.
இந்த ஸத்யங்களும் அணுசக்தியைப்போலத்தான், நாம் நல்லவிதமாகவும் பயன்படுத்த முடியும்; தவறாகவும் பயன்படுத்த முடியும்.

மக்கள் என்னிடம், "நான் உடல் அல்ல என்கிற விழிப்புணர்வு நிலையில் நான் வாழ்கிறேனா இல்லையா என்பதை நான் எப்படிப் கண்டு பிடிப்பது? நான் வியாஸரைப்போல் வாழ்வது எப்படி?" என்று கேட்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வியாஸரின் நிலையை நாம் அடையும்பொழுது இந்தக் கேள்வியே நமக்குள் இருக்காது. உடலோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பார்க்காததால்தான் விருந்துண்ட பிறகும்தாம் விரதம் இருந்ததாக வியாஸர் சொல்கிறார்.
தம்முடைய உடலை, தம்முடையது என்று அவர் உணரவில்லை. அவர் அதனால் பாதிக்கப்படாதவராக இருந்தார். அவரது உள் உலகம் அவ்வளவு தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை.
இராமகிருஷ்ணருடைய வாழ்க்கை வரலாற்றை நாம் படித்தோம் என்றால், அவர் பல்வேறு விதமான ஆன்மீக சாதனைகளைச் செய்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வரும். எனக்குத் தெரிந்தவரை இராமகிருஷ்ணர் ஒருவர்தான் மிக அதிகமாகத் தவமிருந்தவர். எல்லாவித ஆன்மீக வழிமுறைகளையும் கையாண்டவர்; அவற்றுள் ஒன்று தந்த்ர ஸாதனா. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தந்த்ர ஸாதனாவையும் பயிற்சி செய்திருக்கிறார்.
நம்முடைய பலம் வாய்ந்த புலன் சார்ந்த சக்திகளையும் நாம் ஞானமடைவதற்கு உதவும் ஸாதனங்களாக மாற்றிக்கொள்கிற, பயன்படுத்திக்கொள்கிற ஒரு வழிபாட்டு முறைதான் தந்த்ர ஸாதனா.
ஒரு சாதாரண மனிதரால் அதைச் செய்யவே முடியாது. ஒரு சாதாரண மனிதர் அதை முயற்சி செய்தால் புலன் இன்பங்களில் மயங்கி, நிலை தடுமாறி தோல்வியைத்தான் அடைவார்.
இராமகிருஷ்ணரின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், அவரது உள் உலகம் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்பதுதான். வெளி உலகப் பொருட்களால் அவர் பாதிக்கப்படவேயில்லை. அவரது உள் உலகம் மிகத் தூய்மையாகவும் ஆனந்தத்தால் நிரம்பியும் இருந்தது. அதனால் அவர் தந்த்ர ஸாதனாவை வெற்றிகரமாக முடித்தார்.
தந்த்ர ஸாதனா முறை கடினமான
பல நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு
சாதனைமுறையாக கருதப்படுகிறது.
ஆனாலும் அவரது உள் உலகம் தூய்மையாக
இருந்ததால் அவரால் அதை வெற்றிகரமாக
முடிக்க முடிந்தது.

இப்போது கேள்விக்கு வருவோம், "நீங்கள்
கிருஷ்ணரைப் ப்ரம்ஹசாரி என்று எப்படி
சொல்லலாம்?" என்பதுதான் கேள்வி. தயவு
செய்து புரிந்துகொள்ளுங்கள், அவரது
உள் உலகம் மிகத் தூய்மையாக இருந்தது.
கிருஷ்ணர் தம்மை உடலாக ஒருபொழுதும்
நினைத்ததில்லை, உணர்ந்ததில்லை. 'உடல்'
என்ற உணர்வுக்கே அவர் இறங்கவில்லை.
இன்னொரு விஷயமும் சொல்கிறேன். கிருஷ்ணரைப்போல பல பெண்களுடன் ஒருவர் வாழ்க்கையை வாழவே முடியாது. இருந்த போதிலும் அவர் வாழ்ந்தார். அப்படி நாம் வாழ ஆரம்பித்தால்தான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
உலக
விஷயங்களையும்
ஆன்மீக
இன்பங்களையும்
ஒரு சேர அனுபவித்த
ஞானமடைந்த
அரசர் ஜனகர்.
பெண்கள் என்று நான் சொல்லும்பொழுது, அது ஆண்களுக்கும் பொருந்தும். நம்முடைய வாழ்க்கைக்குள் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ நுழையும்பொழுதுதான், விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது எவ்வளவு கடினமான செயல் என்பதைப் புரிந்துகொள்வோம்.
அந்த இன்னொரு நபர் நமக்கு நரகத்தை உருவாக்குபவராகவே இருக்கிறார். இன்னொருவர் நம் வாழ்வில் நுழையும் போதே, அவர்களுடைய இயல்பான பண்பால் அங்கு நரகம் உருவாக்கப்பட்டு விடுகிறது.
இங்கே கிருஷ்ணர் பலருடன் வாழ்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். இது அவரது உள் உலகம் பாதிக்கப்படவே இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அவரது உள் உலகம் தூய்மையானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஆனந்தத்தைப் பரப்பிக்கொண்டும் இருந்தது.
எந்த மனிதருடைய உள் உலகில் ஆனந்தம் நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் நெருங்காது. நிச்சயமாக இதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இது புரிந்துகொள்ளுவதற்குக் கொஞ்சம் கடினமான கருத்துதான். ஆனால் இதனுடைய ஆழத்தை நாம் புரிந்துகொண்டோம் என்றால், அந்தக்கணமே இந்தக்கருத்தையும் நாம் புரிந்து கொள்வோம்.
இனியும் மனிதராகவே இருக்க மாட்டீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு ஸந்யாஸி, அரசர் ஜனகரிடம் சென்றார். ஜனகர் ஞானம் அடைந்தவர். உலக இன்பங்களையும் ஞான நிலையையும் ஒரு சேர அனுபவிப்பவர். ஜனகரைப் பார்த்து அந்த ஸந்யாஸி கேட்டார், "உலக இன்பங்களை அனுபவிக்கும் உங்களை ஞானம் அடைந்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?"
ஸந்யாஸிகளுக்கு உலக இன்பங்களை அனுபவிப்பவர்கள் மீது எப்போதுமே பொறாமை உண்டு! நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆனந்தத்தை அனுபவமாக உணர்ந்து, அதற்குப் பிறகு ஒரு தெளிவான உணர்வோடு உலகைத் துறந்து ஸந்யாஸத்திற்குப் போயிருந்தால் பொறாமை வராது.
ஆனால் நீங்கள் உள் உலகில் பயனுள்ள ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், வெளி உலகிலிருந்து தப்பித்துக்கொண்டுபோய் ஸந்யாஸியாகி, ஆனால் அங்கேயும்கூட உறுதியான, நம்பும் படியான அனுபவம் கிடைக்காதபோது, நீங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
உள் உலக ஆனந்தமும் கிடைக்காமல், வெளி உலக உடைமைகளும் இல்லாமல் போகிறபோது, நீங்கள் பொறாமையிலும் தற்பெருமையிலும் மாட்டிக்கொள்கிறீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள், எப்படித் தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள்? க்ருஹஸ்தர்களைத் திட்டவும் அவமரியாதை செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். க்ருஹஸ்தர்களிடம், "நீங்கள் எதையும் ஒழுங்காகச் செய்வதில்லை நீங்கள் பொருட்களின் மேல் பற்று வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்யவில்லை, நீங்கள் இதைச் செய்யவில்லை," என்று சொல்கிறார்கள். இதனால்தான் எப்போதுமே ஸந்யாஸ வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் க்ருஹஸ்த வாழ்க்கை மேற்கொண்டவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதருடைய
உள் உலகில்
ஆனந்தம்
நிரம்பிவழிகிறதோ
அவரை
எந்த அசுத்தமும்
நெருங்காது.
நீங்கள் எப்போதாவது ஸந்யாசிகளைப் பார்த்துப் பொறாமைப்படுகிற க்ருʼஹஸ்தர்களைப் பார்த்து இருக்கிறீர்களா? ஒருவரையும் பார்க்க முடியாது. ஆனால் க்ருʼஹஸ்தர்களின் மேல் பொறாமைகொள்கிற நூற்றுக்கணக்கான ஸந்யாசிகளைப் பார்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
ஸந்யாசி ஜனகரிடம் கேட்டார், "உலக இன்பங்கள், ஆன்மீக இன்பங்கள் - இந்த இரண்டையுமே நீங்கள் அனுபவிக்கும்போது உங்களை நீங்கள் ஞானி என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?"
அதற்கு ஜனகர், "தயவு செய்து என்னுடைய மாளிகையில் சில நாள்கள் தங்குங்கள். அதற்குப் பிறகு நான் உங்களிடம் பேசுகிறேன். இப்பொழுது ஆடல், பாடலுடன்கூடிய பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்னால் இப்போது தத்துவம் எல்லாம் பேச முடியாது,"
| வெளி உலக இன்பங்களால் ஞானிகளின் உள்ளுணர்வு பாதிக்கப் படுவதே இல்லை. | | --- |
என்று சொன்னார்.
ஸந்யாசி அரண்மனையிலேயே தங்குவதற்கும் உணவருந்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவரது படுக்கைக்கு மேலே மெல்லிய நூலால்கட்டப்பட்ட ஒரு கத்தி தொங்கவிடப்பட்டது.
உடனே அந்த ஸந்யாசி, "எதற்காக ஒரு கத்தியைச் சரியாக என் தலைக்குமேல் தொங்க விடுகிறீர்கள்," என்று கேட்டார்.
அதற்கு அரண்மனை வேலையாட்கள், "அது எங்களுக்குத் தெரியாது. அது எங்கள் மன்னரின் ஆணை; நீங்கள் இங்குதான் தூங்க வேண்டும்," என்று சொன்னார்கள்.
ஸந்யாசி அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் கத்தி தம் மீது விழுந்துவிடலாம் என்ற பயத்தால் தூங்காமல் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
அடுத்த நாள் காலை ஜனகர், "ஸ்வாமி, எப்படி இருக்கிறீர்கள். இரவு நன்றாக தூங்கினீர்களா?" என்று கேட்டார். ஸந்யாஸி, “நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்காக இப்படிக் கேட்கிறீர்கள்? தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்கும்போது ஒரு மனிதர் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்? தூக்கத்தைப் பற்றி நினைக்கவாவது முடியுமா?” என்று கேட்டார்.
ஜனகர் சிரித்தார். “இறப்பு உங்கள் முன்னால் இருக்கிறது எனும்பொழுது உங்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை. உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி விடுகிறது. ஆனால் மரணம் என் முன்னால் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்தாலும் நான் அதனால் பாதிக்கப்படுவதில்லை. கத்தி என் தலைக்கு மேலே தொங்குகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னுடைய மொத்த விழிப்புணர்வும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இந்த மாளிகையில் வாழ்கிறது. உங்களுக்கும் எனக்கும் அதுதான் வித்தியாசம்.
ஒரேயொருகத்தி தொங்கியதால் இந்த அழகான
படுக்கை, இந்த வசதிகள் இவற்றை உங்களால்
அனுபவிக்க முடியவில்லை. உங்களால்
நிம்மதியாக தூக்கக்கூட முடியவில்லை.
இவை அத்தனையும் வெளி உலகில் இருந்த
போதிலும், என்னுடைய உள்ளுணர்வு
இவற்றால் பாதிக்கப்படுவதில்லை. எனது
ஆத்மா தூய்மையாக உள்ளது.
மரணத்தை
அறிவுப்பூர்வமாக
உணருங்கள்.
உங்கள் மொத்த
சிந்தனையும் மாறும்.
ஏனென்றால் மரணம் என்பது எந்த நிமிடமும் நேரிடக்கூடிய ஒன்றுதான் என்பதும், மரணம் என் முன்னால் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். நிமிடத்திற்கு நிமிடம் இந்த விழிப்புணர்வு எனக்கு இருப்பதனால், இந்த உலகாயத வாழ்க்கையை நான் முழுமையாகவும் ஆனால் அதே சமயம் அதில் சிக்கிக்கொள்ளாமலும் அனுபவித்து வாழ்கிறேன்,” என்றார்.
அதனால்தான் நான் சொல்கிறேன், “யம என்கிற காலன் நம் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான, ஆனால் நேர்மையான ஒழுங்குமுறையை ஏற்படுத்துகிறார். மரணம், வழக்கத்திற்கு மாறான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்கு முறையை நம் மனத்தில் பதிய வைக்கிறது.”
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கை முறையே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே
மனிதராகப் போக வேண்டிய தேவை
இல்லை. உங்கள் இருப்புத் தன்மையையே
மாற்றி அமைத்துவிட முடியும். உங்கள் உள்
மையம் தொடப்படும்.
கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
கேள்வி : ஸ்வாமிஜி, மரணம் ஒரு மனிதருக்குள் ஒழுக்கத்தை ஆழப் பதிய வைக்கும் என்கிறீர்கள், பயத்தினால் வரும் ஒழுக்கத்தைக் குறிப்பிடுகிறீர்களா? இந்த வகையான ஒழுக்கம்தானே உலகம் முழுவதும் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
மரணம்,
வழக்கத்திற்கு மாறான
ஆனால்
ஒரு நேர்மையான
ஒழுங்கு முறையை
நம் மனத்தில்
பதிய வைக்கிறது.
இல்லை. இது அதற்கு நேர் மாறானது. பயத்தினாலோ, ஆசையினாலோ ஏற்படும் ஒழுக்கம் வெகுநாட்களுக்கு நிலைக்காது. அதனால்தான், பல மதங்கள் ஆன்மீகப் பாதையில் மக்களை வழி நடத்திச் செல்ல முடியாமல் இருக்கின்றன.
ஆத்மாவின் அழிவற்ற தன்மையையோ, மறுபிறவியையோ நம்பாத மதங்கள்தான் மனிதர்களின் பேராசையையும் பயத்தையும் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் அந்த மதங்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடந்தீர்களானால், உங்களை நல்லவர் என்றும், அதனுடைய சட்டதிட்டங்களை நீங்கள் உடைத்து விட்டீர்களானால், உங்களைக் கெட்டவர் என்றும், நல்ல மனிதர் சொர்க்கத்திற்குப் போகிறார், கெட்ட மனிதன் நரகத்திற்குப் போகிறான் என்றும் அவை சொல்கின்றன.
அவர்களின் வேதநூல்களிலேகூட அப்படி எதுவும் இருக்காது. ஆனால் அந்த மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதர்கள்தான், மக்களைத் தங்கள் மதங்களைப் பின்பற்றச் செய்வதற்காக இது போன்ற வழி முறைகளைக் கையாள்கிறார்கள்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், சொர்க்கமும், நரகமும் நமது மனத்தில்தான் உள்ளது. மக்கள் தவறான வழியில் நடக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே நரகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களின் மன நிலைதான் நரகத்தின் நிலையூடூகட! அதனால் நரகத்திற்குச் செல்ல அவர்கள் இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை. நமது எண்ணங்களும் சொற்களும் செயல்களும்தான் நமது நடத்தையைத் தீர்மானிக்கின்றன. அதுவே, இந்தப் பிறவியிலும், இனி வரும் பிறவியிலும் சரி நம்மை நாமே மேலெடுத்துச் செல்வதற்குக் காரணமாக இருக்கிறது. அல்லது நம்மை நாமே மனச் சோர்வில் ஆழ்த்திக்கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்ட அந்தக் கணத்திலேயே யம என்கிற ஒழுங்குமுறை நமக்குள் நிகழ்கிறது.
யம என்கிற ஒழுங்குமுறை பயத்தின் காரணமாகவோ அல்லது ஆசையின் காரணமாகவோ ஏற்படுவதல்ல. 'நம்மை நாமே உணர்வதற்கான' வழிமுறைகளின் தொகுப்பு அது.
இந்த வழிமுறைகள், 'தன்னை-உணர்தல்' என்கிற நம்மை நாமே உணர்ந்துகொள்கிற நிலைக்கு நம்மை வழிநடத்திச்செல்கின்றன.
இந்த நியதிகளை நாம் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆழமாக உள் வாங்க வேண்டும், பிறகு நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிமுறைகளுக்கும் மதம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஒரு மனிதர் அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஸத்யம் அவருக்குள் ஏற்படுத்துகிற முக்தி நிலைக்காகவே, அவர் விடுதலைக்காகவே, தம்முடைய சொல், செயல், எண்ணங்களில் ஸத்யத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டியுள்ளது.
நாம் ஸத்யத்திற்குள் ஆழ மூழ்கி விட்டால், அதற்குப் பிறகு நாம் பேசுகிற சொற்களையோ, நமது எண்ணங்களையோ வடிகட்டத் தேவை இல்லை.
இன்றைய நிலையில், நாம் எல்லோரும்
நாம் யாரிடம், எங்கே, எப்படிப்
பேசுகிறோம் என்பதை யோசித்து கவனமாகப்
பேச வேண்டியுள்ளது. நாம் பேசுகிற
சொற்களை அளந்து பேசினால்தான்
அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும்
அவை சரியாக இருக்கும். இல்லாவிட்டால்
மிகவும் பிரச்சினைகளைச் சந்திக்க
வேண்டியிருக்கிறது.

யம என்கிற ஒழுக்கம் நமக்குள் பயத்தினாலோ அல்லது ஆசையினாலோ ஏற்படுவதல்ல. 'நம்மை நாமே உணர்வதற்கான' வழிமுறைகளின் தொகுப்பு அது.
ஏனென்றால் உண்மையைப் பேசுகிற பழக்கம் நம்மிடத்தில் இல்லை. நாம் பேசுகிற வார்த்தைகள், மற்றவர்களுக்குள் திருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். அதனால்தான், நாம் மற்றவர்களிடம் பேசும்போது நாம் நமது எண்ணங்களையும் சொற்களையும் வடிகட்ட வேண்டியுள்ளது.
விளைவுகள் மற்றும் எதிர்ச் செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி, 'இனிமேல் நான் உண்மையைத்தான் பேசப் போகிறேன். நாம் பேசுவது எதுவாக இருந்தாலும் சரி உண்மையைத் தவிர வேறெதையும் பேசப் போவதில்லை' என்கிற தீர்மானத்தை மட்டும் நாம் எடுத்துவிட்டோமானால், நாம் மற்றவர்களிடம் பேசும்போது, நமக்குள் ஒரு தயக்கமோ, அல்லது வார்த்தைகளை வடிகட்ட வேண்டிய அவசியமோ இருக்காது.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நாம் உண்மையைப் பேசும்பொழுது இயற்கையாகவே அஹிம்ஸையையும் கடைப்பிடித்தவர்களாகிறோம். அஹிம்ஸை என்பது யம என்ற ஒழுக்க கோட்பாட்டிலுள்ள இரண்டாவது நியதியாகும். நாம் பேசும் உண்மைகள் யாரையும் புண்படுத்தவோ, யாருக்கும் தீங்கு செய்யவோ செய்யாது.
நமது உள் உலகம் மிகத் தூய்மையாக இயங்கும்போது, நம்மிடத்திலே எந்த எதிர்மறை எண்ணங்களும் இருக்காது.
நமது உள்ளத்தில் எழும் எல்லா எண்ணங்களிலும் இரக்கமும், கருணையும் மட்டுமே பொங்கிக்கொண்டிருக்கும்.
கண்டிப்புடன்
திணிக்கப்படும்
ஆன்மீக
வழிமுறைகளுக்கும்,
மதம் சார்ந்த
சட்டதிட்டங்களுக்கும்
பெரிய
வேறுபாடு ஒன்றும்
இருப்பதில்லை.
உண்மையையே பேசும் ஒருவர் மற்றவர்களைத்
தாக்கக்கூடியவராகவும், மற்றவர்களுக்குத்
தீங்கிழைக்கக் கூடியவராகவும், ஒருபோதும்
இருக்க மாட்டார்; இருக்கவும் முடியாது.
யம என்ற ஒழுக்கத்தின் ஐந்து
நியதிகளுமே ஒன்றை ஒன்று ஒத்தும்
இணைந்தும், ஒன்றையொன்று நிறைவு
செய்துகொள்ளக்கூடியவையாகவும்
இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று
என்றுமே முரண்படுவதில்லை.
ஸத்யத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்தாலே
போதும், நாம் பிறர் மேல் கருணை
உடையவர்களாகவும் பிறர் பொருளை
விரும்பாதவர்களாகவும் ஆகிவிடுவோம். 'நம்
சக்திக்குள் வாழ வேண்டும், ஆசைகளாலும்,
தேவைகளாலும் அலைக்கழிக்கப்படக்
கூடாது' என்ற உண்மையை நோக்கி ஸத்யம்
நம்மை அழைத்துச் செல்லும்.
நாம் கற்பனைகளில் சிக்கிக்கொள்ளாமல், நிஜத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு அதாவது ப்ரஹ்மசரியத்தை நோக்கி நம்மை ஸத்யம் அழைத்துச் செல்லும். இது மிகவும் எளிமையானது. நான் சொல்லும் இந்த ஒழுக்கம்தான் மரண பயத்தைப் போக்குகிறது. இந்த ஒழுக்கம்தான் நம்மை விழிப்புணர்க்குள் எடுத்துச் செல்கிறது.
'எதைப்பற்றிய விழிப்புணர்வுக்குள் எடுத்துச் செல்கிறது' என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகிற்கு வரும்போது நாம் என்னகொண்டு வந்தோம்? உடையில்லாமல், எந்த உதவியுமில்லாமல், அழுதுகொண்டு யாராவது நம்மைப் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டும்தானே வந்தோம். இல்லையா?!
நம்முடைய நிலையே இப்படி இருக்கும்பொழுது, நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லப்போகும் விதத்தைப்பற்றி மட்டும் எப்படி நம்மால் ஊகிக்க முடியும்? அது மட்டுமல்ல, நாம் ஊகிக்க இதில் என்ன இருக்கிறது? நாம் வந்ததைப்போலவே எதுவும் இல்லாமல்நான் போகப் போகிறோம்.
'இந்த உலகை விட்டுப் போகும்போது நமது உடைமைகளை நாம்தான் எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று நினைக்கிற அளவுக்கு இங்கு யாருமே முட்டாள்கள் இல்லை.
அலெக்ஸாண்டர், கிரேக்க மன்னர்' தாம் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தார். "நான் இறந்த பிறகு என்னுடைய உடல் இறுதி ஊர்வலமாக தெருக்களில் எடுத்துச் செல்லப்படும்பொழுது, எனது வெறுமையான கைகளை மக்களுக்குத் தெரியுமாறு விரித்து வையுங்கள். ஏனென்றால் மாமன்னர் அலெக்ஸாண்டரால்கூடதாம் இறக்கும்போது தம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்," என்றாராம்.
நாம் வரும்போது எதையும்நிகொண்டு
வரவில்லை. போகும் போதும்
எதையும்நிகொண்டு போகப் போவதில்லை
என்ற புரிதல் நமக்குள் நிகழ்ந்தாலே
பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற
ஆசை நமக்கு இருப்பதில்லை.
உங்களிடம்
இருப்பதை
அனுபவியுங்கள்;
ஆனால்
அவற்றைச் சேர்த்து
வைக்காதீர்கள்.
நாம் அதிகமாகப் பொருள் சம்பாதிக்க வேண்டும், அவற்றை நமது சொந்தமாக்கிக்கொள்வதன் மூலம் அடுத்தவரைவிட அதிக செல்வமும், செல்வாக்கும் கொண்டவராக ஆக வேண்டும் என்ற ஆசையும் நம்மை விட்டுப் போய்விடும். நாம் வெறுங்கையோடுதான் போகப் போகிறோம் என்பது புரிந்தாலே இவை எல்லாம் அர்த்தமற்றவை என்பதும் புரிந்துவிடும்.
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள் ஆனால் அவற்றைச் சேர்த்து வைக்காதீர்கள்.
நிகழ்காலத்தில் இருங்கள். ஆனந்தமாக இருங்கள்.
இறப்பைப் பற்றிய புரிதல் இந்த ஒழுங்குமுறையைத்தான் நமக்குள்கொண்டு வருகிறது.
அதற்குப்பின் மரணத்தைப் பற்றிய பயம் இருப்பதில்லை. ஏனென்றால் மரணம் என்பது தவிர்க்க முடியாத நிச்சயமான ஒரு விஷயம்; நமது வாழ்க்கைப் பாதையில் இடையில் நிகழ்கிற ஒரு சடங்குதான்; குழந்தைப் பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவம் என்பதுபோல் நம் வாழ்க்கையில் அதுவும் ஒருநிலைதான் என்ற புரிதல் நமக்குள் மலர்ந்து விடுகிறது.
வாழ்க்கையிலிருந்து எத்தனை இன்பத்தைப் பெற முடியுமோ, அத்தனை இன்பத்தையும் இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டுமென்ற பேராசை நமக்குள் இருப்பதில்லை. வாழ்விலிருக்கும் மொத்த இன்பத்தையும் சாரத்தையும் இந்தப்பிறவியிலேயே பிழிந்தெடுத்துவிட வேண்டும் என்று நம்மை விரட்டிக் கொண்டிருக்கும் பேராசைக்கும் இனி இங்கு இடமில்லை. இந்தப் பிறவியில் அடையவில்லை என்றால், இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமானால் இனி மறு வாய்ப்பு கிடைக்காது என்ற கண்மூடித்தனமான பயத்திற்கும் இனி இடமில்லை. நமது ஆத்மா ‘ நிலையானது’ என்பதை நாம் புரிந்துகொள்வதால், நாம் எதற்கும் அவசரப்படுவதில்லை.
அதனால்தான், இறப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்வது எப்படி என்பதையும் உண்மையில் புரிந்துகொள்ள முடியும் என்கிறேன்.
மரணத்தை பயமோ, ஆசையோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மைதான், நாம் வாழ்வை= பயமோ, ஆசையோ இல்லாமல் வாழ நம்மை அனுமதிக்கிறது.
இந்த ஒழுங்குமுறைதான் நம்மை புக்தியடையச் செய்கிறது. எந்தச் சமுதாயமும், எந்த மதமும் தமது சட்ட திட்டங்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய சொந்த விழிப்புணர்வினால் மட்டுமே நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம்.
அதனால்தான், மரணத்தை அச்சமில்லாமல் எதிர்கொள்வோரை மதங்களும், சமுதாயமும் அச்சத்தோடு பார்க்கின்றன.
நாம் மரண பயத்தை விட்டுவிடும் அந்தக் கணமே, இந்தச் சட்டதிட்டங்களை உருவாக்கிய அதிகார அமைப்புகள், நம்மேல் வைத்திருக்கும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. அதற்குப்பிறகு அவர்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

நம்முடைய மரண பயம், நம்முடைய
அடையாளத்தை நாம் இழந்து விடுவோமோ
என்கிற பயம், இந்த இரண்டுவித பயங்களை
வைத்துத்தான் அவை நம்மைக்
கட்டுப்படுத்துகின்றன.
அந்தப் பிடிமானம் உடைந்து போய் விட்டால்
அவை நம்மைக் கட்டுப்படுத்த முடியாது.
நாம் சுதந்திரமானவர்கள் ஆகி விடுகிறோம்.