பகவத்கீதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் மரண பயத்தை வெல்வதற்கான தீர்வு
அத்தியாயம் - 8
மரணபயம் -
அதுவே நமது உச்சக்கட்ட பயம்!
மரணபயம் பற்றிய எண்ணம்
என்னைத் தொந்தரவு செய்யவில்லை என்று
எவரொருவர் சொல்கிறாரோ,
அவர் பொய் சொல்கிறார்.
நீங்கள் கேட்பதற்குக்கூட பயப்படும்
எல்லாக் கேள்விகளுக்கும்
இங்கே அனுபவமாக விடையுள்ளது!
வினாக்களின் வாசலில்...
- ஸ்வாமிஜி, மரணம் ஒரு மனிதனின் மனத்தில் ஒழுக்கத்தைப் பற்றிய விதிமுறைகளை ஆழப்பதிவு வைக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நீங்கள் அவ்வாறு சொல்லும்போது பயத்தினால் ஏற்படும் ஒழுக்கத்தையா குறிப்பிடுகிறீர்கள்? இந்த வகையான ஒழுக்கம்தான் உலகில் பெரும்பாலான இடங்களில் பிரச்சினையாக இருக்கிறது.
- நல்ல செயல்களைச் செய்வதன் மூலமாகப் பெறப்படும் நன்மையான புண்ணியமும் ‘கர்மா’தான். அதுவும் விலக்கப்பட்டால்தான் நாம் விடுதலை அடைவோம் என்று சொல்கிறீர்கள். இது எப்படி முடியும்?
‘நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி, நல்ல காரியங்களைச் செய்தால்தான் புண்ணியங்களை அடைய முடியும். புண்ணியத்தைச் சம்பாதித்தால்தான், சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்’ என்றுதான் எங்களுக்கு இதுநாள் வரையிலும் கற்றுதரப்பட்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் அதில் பலன் இல்லை என்று சொல்கிறீர்களே!
- ஸ்வாமிஜி, நித்தியானந்த ஸ்புரண தியான முகாம் உங்கள் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தது என்று சொல்கிறீர்களே? அதைப்பற்றி மேலும் சொல்ல முடியுமா?
- ‘குற்றம்’ என்று ஒன்று உள்ளதா? பாவ புண்ணியம் என்றால் என்ன? நல்லது கெட்டது என்றால் என்ன?
☛ நீங்கள்
‘மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு’ என்கிறீர்கள்!
அப்படியன்றால்,
எண்ணங்களே இல்லாத விழிப்புணர்வு நிலையை அடைவதற்கு,
மனம் மறைந்தாக வேண்டும் என்றுதானே அர்த்தம்.
பொதுவாக நாம் மனம் மறைந்து விடுகிற நிலையைத்தான்
மரணம் என்கிறோம்.
அப்படியன்றால், நாம் சமாதி நிலை அனுபவத்தை அடையும்போது
இறந்து விடுகிறோம் என்பதுதான் இதன் அர்த்தமா?
☛ ஸ்வாமிஜி,
நாம் எப்பொழுதுமே நமக்குள் இருக்கும்
மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்றும்,
ஆனந்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்.
ஆனால் அதே சமயத்தில்,
மகிழ்ச்சியைக் கடந்து செல்ல வேண்டும் என்றும் சொல்கிறீர்கள்.
இது முரண்பாடாக இல்லையா?
☛ ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமாவே
அந்த எண்ணப் பதிவைக் கரைக்க முடியுமா?
☛ ஸ்வாமிஜி, நீங்கள்
நித்யானந்த புரோகிராம் பற்றிச் சொன்னீர்கள்.
அதைப் பற்றி மேலும் சொல்ல முடியுமா?
அது எப்படி எங்களுடைய வாழ்க்கைக்கு உதவுகிறது?
