KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மனிதன் மறைந்து கடவுள் பிறந்த நாள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

12-ந்தேதி மாலை
மறைந்தார். இப்பொழுது
14-ந்தேதி காலை;
முதல்நாள்
பார்த்தது போலவே
உடல் இருந்தது.
முகத்தில்
அதே அமைதி தெரிந்தது.

உடலில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை
என்பதை நான் கவனித்தேன். 12-ந்தேதி
மாலை மறைந்தார். இப்பொழுது 14-ந்தேதி
காலை; முதல்நாள் பார்த்தது போலவே
உடல் இருந்தது. பனிக்கட்டியில்தான்
வைத்திருந்தார்கள் என்றாலும், அவ்வளவு
சிறப்பாயில்லாத கண்ணாடிப் பெட்டியையும்
திருவண்ணாமலை வெயிலையும்
பார்க்கும்போது இது அதிசயம்தான்.

முகத்தில் அதே அமைதி தெரிந்தது. உடல் கெட்டுப்போன நாற்றம் இருக்கவில்லை. அகர்பத்திகள், நறுமணப் பொருட்கள், அறையை நறுமணமூட்டும் ரெப்ஃரெஷ்னர்கள் - ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக்கூட வெகு நேரத்திற்கு முன்பே நிறுத்தியிருந்தார்கள்.

நான் எனக்குள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்: ஸ்வாமியின் சக்திதான் இதற்குக் காரணமா? அல்லது சரியான இடைவெளிகளில் செய்யப்பட்ட பூஜைகள்தான் காரணமா? அல்லது அங்கே குழுமியிருந்தவர்களின் அமைதியான, மேன்மையான மன நிலையா? ஒருவேளை ஸ்ரீஅருணாச்சலானந்தா மரணத்திற்கு முன்பு அடைந்திருந்த ஞான நிலைதான் காரணமா?

உடலைவிட்டுப் பிரியும் அந்தக் கடைசி கணத்தில், மிச்சமான புலன்களிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட அஹங்காரம் உருமாற்றம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு விடுவதால்தான் அங்கு எந்தவித துர்மணமும் இல்லை. லேசான, முக்தியடைந்த ஆத்மா பரப்பிக்கொண்டிருந்த காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.

இவை எல்லாம் கலந்த நிலையாகவும் இருக்கலாம். உண்மையாகவே அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. விளக்கங்களைத் தேடும் நேரம் இது இல்லை. அந்தப் புரிதல், தேவை ஏற்படும்போது, எந்தவித தூண்டுதலும், தேடுதலும் இல்லாமல் தானாகவே நிகழும். ஆனால் எனது ஈகோ யோசிப்பதை நிறுத்தவும் இல்லை; அது யோசிப்பதனால் களைப்படையவும் இல்லை.