ருத்ர தாண்டவம் நேரடி தரிசனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்தவுடன் ஸ்வாமிஜி ஹீலராகவோ, ஆச்சாரியராகவோ இல்லாதவர்களையெல்லாம் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறச் சொன்னார். கதவுகளைச் சாத்திய பின்பு நித்ய கீர்த்தனானந்தாவிடம் ஆனந்த தர்சன் சங்கீதம் வாசிக்கச் சொன்னார்.
பம்ம.. பம்ம.. தா தைய தைய தக்க... என்ற பாடலின் ஒலியால் அறையே அதிர்ந்தது. எல்லாரும் கையைத் தட்ட, ஸ்வாமிஜி அபரிமிதமான சக்தியை எல்லாப் பக்கங்களிலும் பரப்பிக்கொண்டே ஆனந்தமாக ஆடினார். அறையில் வெப்பம் நிலவியது. தமது ஆஜ்ஞா சக்ரத்தைத் தந்தையின் ஆஜ்ஞா சக்ரத்தில் நிறுத்தி தத்த்வமஸி தத்த்வமஸி, அஹம் ப்ரஹ்மாஸ்மி அஹம் ப்ரஹ்மாஸ்மி, (அதுவே நீ ஆகிறாய் அதுவே நீ ஆகிறாய், நானே இறுதியான இயல்பு நிலை, நானே இறுதியான இயல்பு நிலை)என்று ஓதினார். கண்டிப்பாக சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஸ்வாமிஜி,
அபரிமிதமான
சக்தியை
எல்லாப் பக்கங்களிலும்
பரப்பிக்கொண்டே
ஆனந்தமாக
ஆடினார்.
அதன் பொருளைப் புரிந்துகொள்ள என்னால்
முயற்சி செய்யக்கூட முடியவில்லை. பிறகு,
மிக அழகாகத் தமது தலைப்பாகையைக்
கழற்றி மிகுந்த கருணையுடன் தந்தையின்
தலையில் வைத்தார். அவரது கழுத்தைச் சுற்றி
ஒரு ருத்ராக்ஷமாலை போடப்பட்டது.
அடுத்து வந்த கணங்கள் காலத்தைக் கடந்தும் எங்கள் நினைவில் உறைந்து நிற்கிறது. எனக்குள் ஏதோ அசைந்தது. ஆனந்தத்துடனான ஒரு தொடர்பு எனக்குள் மலர்வதை என்னால் உணர முடிந்தது.
சிவன் என்பது ஒரு கருத்து என்ற எண்ணம் மாறியது. அவர் என் கண் முன்னே நடனமாடினார்.
nவீனப்படுத்தப்பட்ட சிவனின் வடிவமே நித்யானந்தர் எனப் புரிந்தது. என் மனத்திற்கு பலத்த அடி கிடைத்தது. என்னுள்ளே இருந்த ஏதோ ஒன்று இனிமேல் எப்போதுமே எழ முடியாத வகையில் இறந்து வீழ்ந்தது, அது, புதிதாக வேறு ஏதோ ஒன்று மலர்வதற்காகத்தான் ! பிறகு மற்றவர்களை உள்ளே விடுவதற்காகக் கதவுகள் திறக்கப்பட்டபோது ஒரு ஹீலர் எங்கள் மனத்தில் தோன்றிய அதே கருத்தைச் சொன்னார், “ஸ்வாமிஜி, இப்படித்தான் இறப்பு இருக்குமானால் நான் இப்போதே இறக்கத் தயார்,” என்று சொன்னார்.
புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் திருவண்ணாமலையில் புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பெட்டி ஏற்றப்பட்டது. ஸ்வாமிஜி தலைமை தாங்கி நடக்க, ஊர்வலத்தில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பகவான் ஸ்ரீரமண மஹரிஷியால் இயற்றப்பட்ட அருணாச்சல அக்ஷரமணமாலை பாடல் இறுதி ஊர்வலத்தில் பாடப்பட்டது.
> சிவன் என்பது
> ஒரு கருத்து என்ற
> என்னுடைய எண்ணம்
> மாறியது. அவர்
> என் கண் முன்னே
> நடனமாடினார்.
> நவீனப்படுத்தப்பட்ட
> சிவனின் வடிவமே
> நித்யானந்தர்
> எனப் புரிந்தது.
மிகவும் கசப்பான, வருத்தம் தருகிற நம்பமுடியாத காட்சி என்னவென்றால், இறந்தவரின் மனைவியாகிய அம்மாவும் பக்திப் பாடல்களுக்கேற்றபடி தாளமிட்டுக்கொண்டு வண்டிக்கு அருகில் கூடவே நடந்து வந்ததுதான். சமுதாயத்தின் எந்தப் பிரிவிலும் இது நடக்க முடியாது. அதிலும் குறிப்பாகத் திருவண்ணாமலை போன்ற சிறிய கிராமத்தில் சாத்தியமில்லாதது. என்ன ஒரு அசாத்திய துணிவு! எவ்வளவு முன்னேறிய சிந்தனை!
இது சமுதாயத்தில் ஏதாவது பாராட்டு பெறுவதற்காகச் செய்யப்பட்ட செயல் அல்ல, உள்ளார்ந்த உறுதியான நம்பிக்கை கம்பீரமான கருணை - இவற்றின் வெளிப்பாடாகச் செய்யப்பட்ட செயல்!
எரியூட்டப்படும் இடத்திற்குச் சென்றவுடன் ஸ்வாமிஜி எங்களிடம் இந்த இடம் “திருவண்ணாமலையில் ஆச்ரமம் ஆரம்பிப்பதற்காக அம்மாவின் அப்பா நன்கொடையாகக் கொடுத்தது என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல், NSP நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுள், உடல் விடுவதற்கு முன் ஞானமடைந்த முதல் மனிதர் தம் தந்தை என்றும் குறிப்பிட்டார். அதனால் அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்படுவது மிகவும் பொருத்தம் என்று சொன்னார்.
ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமியை எரியூட்டுவதற்காகத் தயார் செய்தபோது உடல் கிடத்தப்பட்ட விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஒரு பக்கம் திருவண்ணாமலை, மற்றொரு பக்கம் ஸ்வாமிஜி, ஞானமடைந்த குரு;
ஒரு பக்கம் உருவமற்ற சக்தி, மறுபக்கம் உருவத்துடன்கூடிய சக்தி! இதைவிட வேறென்ன பாதுகாப்பு வேண்டும்?
சிவன்.. நமக்களித்த உறுதிமொழி
புதிதாக உருவாக்கப்பட்ட வரலாறு, முதல் முதலாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த நாடகத்தின் கடைசி கணங்கள், திரை போடப்படுவதற்கு முன்பாக அனைவரிடமும் மலர்கள் வழங்கப் பட்டன.
பிறகு அங்கே கூடியிருந்தவர்களிடம் இதைச் சொன்னார் : குடும்ப பந்தங்களை முழுவதுமாகத் துறந்து ஸந்யாஸியாக துறவறம் பூண்டமையால் தன்னால் ஒரு மகனாக பாரம்பரிய வழக்கத்தின்படி காரியங்கள் செய்ய முடியாது. ஆனால் ஒரு குரு என்ற முறையில், தம்முடைய சீடரின் இறுதிப் பயணத்திற்கான பாதையை வகுத்துக் கொடுப்பது தமது பொறுப்பு மற்றும் தமது கடமையுங்கூட என்று சொல்லிவிட்டு மற்றொரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
ஒருமுறை தந்தையிடம் என்ன வேண்டுமென கேட்டபோது, "'ஸ்வாமிஜி இருந்தால் போதும்,' என்றார். அந்த நிமிடத்தில் அவர் எனது சீடரானார். அந்த முழுமையான, நம்பிக்கையே போதும். வேறெதுவும் வேண்டாம்," என்று சொன்னார் ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜி, மேலும் ஒரு அறிவிப்பைச் செய்தார்: வரும் வருடங்களில் நவம்பர் 12-ஆம் நாள் ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமிஜி மறைந்த நாள், மஹா பரிநிர்வாண நாள் அதாவது ஞானமடைந்தோரின் தினமாக, யார் ஒருவர் ஞானமடைந்த பின், ஸ்வாமிஜியின் கருணையின் கீழ் உடலை விடுகிறார்களோ அவர்களின் நினைவாக இந்தத் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். "எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு, அங்கு நான் இருப்பேன்,'' என்று உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார். இந்த ஆச்சரியம் மிக்க உறுதிமொழி, எங்கள் இருப்புத் தன்மைக்குள் இடிபோல் இறங்கியது, அந்தக் கணமே எங்களுக்குள் இருந்த கொஞ்சம் நஞ்சமிருந்த மரண பயம் கரைந்து மறைந்தது.
சிவனிடமிருந்தே கிடைத்த உறுதிமொழி இது.
அவரது தந்தை, விழிப்புணர்வு நிலையிலிருந்து, மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்குச் சென்று 21 நிமிடங்களுக்கு இருந்தபின் அவர் ஞானமடைந்தார். அவர் விழிப்புணர்வு அற்ற நிலையான கோமா நிலைக்குச் செல்லவில்லை. அதனால் அவரைச் சாதாரணமாக நடத்த முடியாது. மேலும் கடைசி நேரத்தில் அவருக்கு அந்திம ஸந்யாஸம், (இறுதி துறவு மற்றும் முக்தி) வழங்கப்பட்டதால், அதற்கான மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
போர்க்களத்தில் மறைந்த ஒரு மாவீரருக்குச் செய்யப்பட்ட ஆன்மீக மரியாதை போலிருந்தது அது.
சிதைக்கு எரியூட்டும் முன்பாக தமது சகோதரர்களையும் தாயையும் அழைத்து அவர்களிடம் சந்தனக் கட்டைகளை கொடுத்து இத்தனை வருடங்களாக ஒரு தந்தையாகவும் கணவராகவும் இருந்த சக்திக்கு, உடலுக்கு மரியாதை செலுத்தச் சொன்னார். இதுவே முத்தாய்ப்பான செய்கை. ஸ்ரீநித்ய அருணாஸலானந்த ஸ்வாமிஜிக்கு ஜே என்ற முழக்கம் ஒலிக்க ஸ்வாமிஜி ஆரதி காட்டினார். பிறகு சிதைக்கு தீ மூட்டினார். உடல் அக்னிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இது அத்தனையிலுமே ஒருவித கருணையும் அழகும் மிளிர்ந்தது.
கடைசியாக என் மனக்கண்ணில் பதிந்த காட்சி என்னவென்றால் ஸ்வாமிஜி தமது தாயின் தோள் மேல் கையை வைத்து தம் பக்கவாட்டில் அரவணைத்துக் கொண்டார். அது, தாயின் எளிமையான நம்பிக்கையும் ஆன்மீக பலத்தையும் துணிவையும் ஏற்றுக் கொண்டத்தைக் குறிப்பதுபோல் இருந்தது.
"எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு நான் அங்கு இருப்பேன்," என்ற உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார். தமது பூர்வாச்ரம குடும்பத்தினர் தம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்க அவர் - ஒரு மகனாக, சகோதரனாக, குருவாக, கடவுளாக நிமிர்ந்து நின்றார்.
என்னொள் எழுந்த ஆழமான நன்றி உணர்வின் காரணமாகவே நான் இந்த மொத்த அனுபவத்தையும் எழுதிச் சமர்ப்பிக்கிறேன். மேலும் இதைப் படிக்கிற ஒவ்வொருக்குமே எனது அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இதை எழுதுகிறேன்.
இததைத் தவிர, வேறு காரணம் என்று ஒன்று இருக்குமேயானால், அது, உங்களுடைய ஆழமான ஏக்கம்தான்! ‘அனுபவத்தை அனுபவிக்க வேண்டும்’ என்ற உங்களுடைய ஆழமான ஏக்கத்தினால்தான், இந்தப் பகிர்தல் சாத்தியமாகியுள்ளது.
நித்யானந்தத்தில் MNM
