KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மரணம் : இறுதி விடுதலை மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மரணம் : இறுதி விடுதலை மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

ஆசிரியரின் குறிப்பு

பரமஹம்ஸ நித்யானந்தரின் தந்தை ஸ்ரீ நித்ய அருணாச்சலானந்தா அவர்கள், 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் நாள் ஞானமடைந்து, தமது உடலை விட்டு மஹா ஸமாதி அடைந்தார். அன்று நடந்ததை அப்போது அங்கிருந்த சீடர் ஒருவர் விளக்குகிறார்.

அன்று பெங்களூருவில் நடைபெற்ற அஷ்டாவக்ர கீதை சொற்பொழிவின் மூன்றாவது மற்றும் கடைசி நாள்.

அன்றைய தலைப்பு, 'ஞானம்: 'பெற்றுக்கொள்ளுங்கள்!' என்பதாகும். ஸ்வாமிஜி அன்று மிகவும் ஆழமாக, சிறுவயது ஞானியான அஷ்டாவக்ர எழுதிய ஸூத்ரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மழையெனப் பொழிந்த அவருடைய சொற்பொழிவைக் கேட்ட மக்கள் அதில் ஆழ்ந்து லயித்துப் போயிருந்தார்கள். அப்போது திடீரென்று ஸ்வாமிஜி இருமுவதைப்போல செருமினார். பேச்சு தடைபட்டது. தண்ணீர் வேண்டுமென்று கேட்டார், குடித்தார், பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.

மறுபடியும் ஒரு குறுக்கீடு. ஐயா (ஸ்வாமிஜியின் இந்திய விஷயங்களுக்கான செயலர்) வேகமாக மேடைக்கு வந்தார். சோபாவுக்கு பின்புறம் சென்று ஸ்வாமிஜியிடம் ஏதோ முணுமுணுத்தார். ஸ்வாமிஜி మైக்கை ஒரு கையால் மறைத்துகொண்டு அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டார். பிறகு 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பது போன்ற ஒரு பாவத்தை முகத்தில் காட்டினார். மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

பார்வையாளர்கள் குழப்பத்திலிருந்தனர். ஸ்வாமிஜி ஐயாவை மறுபடியும் அருகில் அழைத்தார். மறுபடியும் முணுமுணுப்பாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஸ்வாமிஜியின் உடல் மொழியில் நிலையான, உறுதியான அமைதி தெரிந்தது. ஐயா சென்ற பிறகு ஸ்வாமிஜி அமைதியாகத் தமது பேச்சைத் தொடர்ந்தார்.

அந்த உரையின் தாக்கம் ஆற்றல் மிக்கதாக இருந்தது. அந்த சொற்பொழிவின்போது யாருமே அறையை விட்டுச் செல்லவில்லை. இயல்பான கைதட்டல் தொடர்ந்தது. அதற்கு பிறகு ஸ்வாமிஜியின் ஆசீர்வாதத்திற்காக, பாம்பின் வால் போன்று நீண்ட வரிசையில் பங்கேற்பாளர்கள் நின்றிருந்தார்கள். ஸ்வாமிஜியின் ஆசீர்வாதமும் தொடங்கியது.

peacock feather

கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு

side quote box

ஸ்வாமிஜியின் உடல் மொழியில் நிலையான, உறுதியான அமைதி தெரிந்தது.

தொடர்ந்து நிகழ்வதை நான் பால்கனியில் அமர்ந்துபார்த்துக்கொண்டிருந்தேன். ஒருஉயிர் ஞானத் தன்மை அடைந்து விட்டது என்பது அப்போது எனக்குத் தெரியவேயில்லை. நீண்ட வரிசை குறைந்ததற்குப் பிறகு, வாசலுக்கு அருகில் எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றேன்.

அப்போது ஐயா அவர்கள் என்னிடம்
வந்து, "அம்மா, ஸ்வாமிஜியின் அப்பா
மஹா ஸமாதி அடைந்து விட்டார். ஸ்வாமிஜி
ஆசீர்வாதம் செய்து முடித்தவுடன் நாம்
எல்லாருமே திருவண்ணாமலைக்குப்

போகிறோம். அனைத்து ஆச்சார்யர்களையும் ஹீலர்களையும் ஒரு இடத்தில் கூட்டுங்கள். நான் உங்களிடம் சொன்னதை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் உங்கள் செய்கையால் காட்டிக்கொள்ள வேண்டாம். நீங்கள் அமைதியாகவும் ஆன்மீகப் பக்குவத்துடனும் நடந்துகொள்வதையே, ஸ்வாமிஜி விரும்புகிறார்,’’ என்று சொன்னார்.

நீங்கள் அமைதியாகவும்
ஆன்மீகப்
பக்குவத்துடனும்
நடந்துகொள்வதையே,
ஸ்வாமிஜி விரும்புகிறார்,’’
என்று சொன்னார்.

பிறகு நடந்தது, இனி நடக்கப்போகும் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் ஆரம்பமாக அமைந்தது. ஞானிகள் கருணையே வடிவான அவதார புருஷர்கள். சாதாரண சமயங்களில் எப்படி ஆசீர்வாதம் வழங்கப்படுமோ அதேபோல் பொறுமையாக ஒவ்வொருக்கும் ஆசீர்வாதம் செய்தார்.

ஆசி கொடுத்து முடிந்தவுடன், ஸ்வாமிஜியின் அருகில் அம்மா அமர, சகோதரர்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவருடைய கார் அமைதியாய்ப் புறப்பட்டுச் சென்றது. ஆச்‌ரமவாசிகளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் ஹீலர்களுக்கும் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சில பேரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் எங்கே போகிறோம் என்பதே தெரியாது. தெரியாதவர்களெல்லாம், ‘சாமியோடு எங்கோ வெளியூர் போகிறோம். சாமி நம்முடன் இருக்கப் போகிறார், அது போதும்’ என்ற மகிழ்வில் இருந்தார்கள்!

இதுவரை பார்த்திராத திருவிழா

நாங்கள் திருவண்ணாமலையை அடைந்தபோது ஆச்‌ரமவாசிகளில் ஒருவர், பஸ்சை நிறுத்தி கீழே இறங்கி நிறைய பூமாலைகளை வாங்கி வந்தார். 2006-ம் ஆண்டு நம்பவர் 13-ம் தேதி அதிகாலையில் ராஜராஜன் தெருவில் வண்டி நுழைந்தது. அங்குதான் ஸ்வாமிஜியின் பெற்றோர்கள் வசித்தார்கள்.

அப்போது என் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. இளம் ராஜசேகரன் அந்த ராஜராஜன் தெருவில்தான் வசித்தார். ராஜா என்ற பெயருக்கேற்ப அவர் ராஜ ஸந்யாஸியாகி விட்டார். இது, அந்த பிரபஞ்ச சக்தி மிகவும் அக்கறையுடன் திட்டமிட்டுச் செய்த செயல்போல் இருந்தது. (ஸ்வாமிஜியின் இயற்பெயர் ராஜசேக்ரன்). அங்கே இசை முழக்கம் மிக அருமையாக இருந்தது.

நாங்கள் அமைதியாக இறங்கினோம். அந்த வீட்டுக்குள் அமைதியாகவும் வரிசையாகவும் நுழைந்தோம். ஸ்வாமிஜி சில ஆண் உறவினர்களுடன் சற்று நேரம் வராண்டாவில் அமர்ந்தார். மிக அற்புதமான, ஆழமான அமைதி அவரைச் சூழ்ந்திருந்தது.

எங்களைப் பார்த்தவுடன், எங்களைப் பற்றி அவர்களிடம், "முதன் முறையாக இவர்களை இப்படி இறுக்கமான முகத்தோடு பார்க்கிறேன்," என்று குறிப்பிட்டார். பிறகு எங்களைப் பார்த்து, "உள்ளே போங்கள், அஞ்சலி செலுத்துங்கள். அம்மாவுடன் இருங்கள், யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். யாரும் அழுவதையோ, கதறுவதையோ, சீன் கிரியேட் செய்யவதையோ நான் விரும்பவில்லை," என்றார்.

எல்லோரும் வந்தார்கள். ஆனால் பண்டிகைக்காக அல்ல. வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத ஒரு விழாவுக்காக!

நாங்கள் ஹாலுக்குள் நுழைந்தோம். அங்கே நிறையப் பேர் அமர்ந்திருந்தார்கள். தலைவாசல் கதவுக்கு இடதுபுறத்தில் கண்ணாடியிலான சவப்பெட்டி இருந்தது. நாங்கள் ஒவ்வொருவராக வரிசையாகச் சென்று மாலையை வைத்து மரியாதை செலுத்தினோம். அப்போது அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவரது முகத்தில் ஆழமான அமைதி தெரிந்தது. முடிவான தளர்வு நிலை அந்த முகத்தில் தெரிந்தது.

அசையாமல் கிடந்த அந்த உடல், இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஆச்்ரமத்தில் பார்த்துப் பேசிய அதே மனிதரின் உடல்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் அவருக்கு விடை கொடுத்தனுப்பும்போதுகூட மறுபடியும் ஸ்வாமிஜியின் பிறந்த நாள் சமயத்தில் பார்க்கலாம் என்று அவரிடம் சொல்லித்தான் வழியனுப்பினேன்.

ஸ்வாமிஜியின் பிறந்த நாள்விழா டிசம்பர் - ஜனவரியில் நடக்கும். அவரும் வழக்கம்போல், "கார்த்திகை தீபத்திற்கு எல்லாரும் வாருங்கள்," என்று எங்களைத் திருவண்ணாமலைக்கு வரும்படி அழைத்து விட்டுச் சென்றார்.

ஆம், எல்லாரும் வந்தார்கள், ஆனால் பண்டிகைக்காக அல்ல. வாழ்க்கையில் இதுவரை நாங்கள் பார்த்திராத ஒரு விழாவுக்காக எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று அப்போது புரியவில்லை! அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. எதனால் என்று என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் எனக்குள் உறைத்தது - யாருமே அழாமல், கண்ணீர் சிந்தாமல் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் அது! எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

நான் என் வீட்டில் இறப்புகளைப் பார்த்திருக்கிறேன். அது போன்ற சூழ்நிலையில் எப்போதும் ஒருவித துக்கம்தான் மேலோங்கியிருக்கும். கதறலும், சத்தமும், இறந்தவர்களின் பெயரைச் சொல்லி அழுவதும் ஒரு வழக்கமாகவே அங்கு இருக்கும். ஒவ்வொரு முறை புதிய உறவினர்கள் வரும்போதெல்லாம் அது நிகழும்.

இங்கு ஸ்வாமிஜிதான் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே சக்தி என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

நாங்கள் ஸ்வாமிஜியின் அம்மாவைச் சுற்றி அமர்ந்தோம். அவர் ஸ்வாமிஜி அமர்ந்திருந்த சோபாவுக்கு அருகில் கீழே அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்த விதத்தில் ஒரு கள்ளமில்லாத தனமும், கம்பீரமும் இருந்தது. அவர் தம் மகன் சொன்னதிற்கேற்ப தம் விருப்பங்களை அமைத்துக் கொண்டவர். குழந்தைத்தனம் நிறைந்த ஆழ்ந்த நம்பிக்கையை அவர் சாமியிடம் காட்டினார்.

> அந்தச் சூழ்நிலையே
வித்தியாசமாக
இருந்தது. சட்டென்று
ஒரு விஷயம் எனக்குள்
உறைத்தது -
யாருமே அழாமல்,
கண்ணீர் சிந்தாமல்
உட்கார்ந்திருந்தார்கள்
என்பதுதான் அது!

"சாமி என்னோடு இருக்கும்போது வேறு என்னம்மா எனக்கு வேண்டும்? அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்," என்று அழகாக அவர் குறிப்பிட்டார்.

மிகச்சிறிய கிராமத்தில் ஒரு சிறு சமுதாய வட்டத்திற்குள் வளர்ந்த ஒரு பெண்ணைப்போல இல்லாமல், மிக உயர்ந்த ஆன்மீகப் பக்குவத்தை அவர் காட்டினார்.

ஸ்வாமிஜி, ஏன் அவரைத் தம் தாயாகத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு அப்போது புரிந்தது. இந்தியாவின் ஆன்மீக சக்தி உயர்ந்த ஞானிகளை ஈர்க்கிறது என்றும், இந்த நாடு ஞானிகள் பூமிக்கு இறங்கி வரும்போது, அவர்களுக்கு ஆன்மீக 'இன்குபேட்டராக' இருக்கிறது என்றும் ஸ்வாமிஜி சொன்னதின் பொருள் புரிந்தது.

கள்ளங்கபடமற்ற தன்மையும் எதனாலும்
அசைக்கப்பட முடியாத ஆன்மீக சஃக்தியும்தான்
அம்மாவின் ‘கருப்பை’யாகவே இருந்தது.
அது தம் இயல்பாலேயே ஞானிகளின்
பெருமை வாய்ந்த சஃக்தியை, ஈர்க்கும்
சக்தி கொண்டதாகவும் அதைப்பெற்று,
பாதுகாப்பாகப் பராமரிக்கும்
‘இன்குபேட்டராக’வும் இருந்ததால்தான், ஒரு
ஞானியைத் தம்முடைய கருவிகளே தாங்கும்
பாக்கியம் பெற்றிருந்தார் என உணர்ந்தேன்.

அம்மாவின்
கள்ளங்கபடமற்ற
தன்மையும்
எதனாலும்
அசைக்கப்பட முடியாத
ஆன்மீக சக்தியும்தான்
அவரின்
‘கருப்பை’யாகவே
இருந்தது.

நாள் முழுவதும் ஆன்மீக மணம் கலந்ததாகவே இருந்தது. மக்கள் வரிசையாக வந்து மரியாதை செலுத்தினார்கள். பிரகாசமான முகப் பொலிவுடனும் கம்பீரத்துடனும் அமர்ந்து ப்ரஹ்மசாரிகள் ஸ்வாமிஜியின் முன்னிலையில் பூஜைகள் செய்தார்கள். ஸ்வாமிஜியும் கலந்து கொண்டார்கள். குரு பூஜா, விரஜா ஹோமம், நித்ய கீர்த்தனங்கள், ஆரதி இவையெல்லாம் ஸ்வாமிஜியின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டன.

பிறகு ஸ்வாமிஜி, சொல்லத் தொடங்கினார், “ஐயா மேடையில் வந்து எனது தந்தை மறைந்து விட்டார் என்று என்னிடம் சொன்னவுடனே, நான் அவரது சஃக்தியோடு தொடர்பு கொண்டேன். எனது தந்தை மரணமடைவதற்கு முன் ஞானமடைந்த நிலைக்குச் சென்று, 21 நிமிடங்கள் அந்த நிலையிலேயே இருந்தார் என்பதைத் தெளிவாகப் பார்த்தேன்.

அவர் மஹா ஸமாதி என்ற மிக உயர்ந்த விடுதலை நிலையை அடைந்து விட்டார்.

எல்லாவற்றிலும் விழிப்புணர்வாக ஊடுருவி இருக்கிற அந்த சஃக்தியுடன் மிக அழகாகக் கலந்து விட்டார். அய்யாவை தளர்வாக இருக்குமாறும் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சொன்னேன். நான் அந்த சஃக்தியோடு தொடர்பு கொண்ட அந்தச் சில நிமிடங்களுக்குள், ஆத்மா அமைதியாகப் பிரிந்து செல்வதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன். எனது ஆசீர்வாதத்தைப் பெறவந்த மக்களையும் நான் கவனிக்க வேண்டும். அவர்களுக்கும் என் தேவை இருக்கிறதே,” என்று விளக்கினார்.

உயர்ந்த பரமஹம்ஸ நிலையில் இருக்கும் ஒரு மனிதரால் மட்டுமே பற்றில்லாமல் அதே சமயத்தில் கருணையுடன் இருக்க முடியும். தம்மைத் தேடுபவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல், எந்தச் சூழ்நிலையிலும் கிடைக்கக்கூடியவராக இருக்க முடியும்.

அந்தச் சில கணங்களில் அஷ்டவக்ரர்போதித்த - "நீங்கள் இயற்கையிலேயே பற்றற்றவர்கள், துறந்தவர்கள், ஞானமடைந்தவர்கள், முக்தியடைந்தவர்கள், எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கிற ஸாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுதான் நீங்கள் என்ற கருத்து ஸ்வாமிஜியின் உடல்மொழியாக வெளிப்பட்டது.

வேதங்களில் உள்ள ஆழமான ஸத்யங்கள் வாழ்ந்து காட்டப்பட வேண்டிய, வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறிமுறையாகும். நம் கண்களுக்கு முன்னேயே ஒரு வாழும் உதாரணத்தைப் பார்க்க முடிந்தது. பக்தர்கள், சீடர்கள், ஹீலர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் ஆகிய எங்கள் அனைவருக்குமே அது பாடமாக இருந்தது.

"எதை நீங்கள் போதிக்கிறீர்களோ அதன்படி வாழ்ந்து காட்டுங்கள்," என்று எங்களிடம் ஸ்வாமிஜி மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதுண்டு. இப்போது அதன் பொருள் புரிந்தது.

ஞானிகள் போதிப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையே ஒரு போதனைதான். நீங்கள், செயலாற்றுவதற்குத் தயாராகவும் விழிப்புணர்வோடும் அவரைச் சுற்றி வாழ்ந்தீர்கள் என்றாலே போதும், பல ஆண்டுகளாக ஆழ்ந்து படித்த தத்துவங்கள் உங்களுக்குக் கற்றுக் கொடுக்காததை அந்த சில நொடிகள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடும்.

மிக உயர்ந்த ஆத்மா ஞானப்பதவிக்கு உயர்ந்துவிட்டது

அவ்வப்போது ஸ்வாமிஜி வெளியில் சென்று முற்றத்தில் அமருவார். ஏற்பாடுகளைக் கவனிப்பார். உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்கொண்டு உரையாடுவார். அப்போது சில விஷயங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார், "இந்த நகரில் என் தந்தை அவருக்கே உரிய விதத்தில் ஒரு வி.ஐ.பி.யாக இருந்தார். அவருடைய இயல்பான தாராளகுணமும், உதவும் மனப்பான்மையும் அவருக்கு வேண்டியவர்களை நிறைய சம்பாதித்துக் கொடுத்தது. அவர் எல்லோரிடமும் கருணையுடையவராக இருந்தார். அவரது கடைசி நிமிடங்களைக்கூட மிகுந்த கருணையுடனும் கவனத்துடனும்தான் முடிவு செய்திருக்கிறார்.

சிறு வயதில் நான் ஆன்மீகப் பாதையில் செல்லும்போதுகூட அவர் என்னைத் தொந்தரவு செய்ததில்லை. அதேபோல இப்போது இறந்தபோதுகூட எனக்கு மிகக் குறைவான தொந்தரவு இருக்குமாறுதான் பார்த்துக் கொண்டுள்ளார். எனது பிஸியான ஷெட்யூலில் அடுத்த மூன்று நாட்களுக்கு நான் ஓய்வாக உள்ளேன். சரியாக இந்த நேரத்தைத் தன்னுடலை விடுவற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

> அவரது
> கடைசி
> நிமிடங்களைக்கூட,
> மிகுந்த கருணையுடனும்
> கவனத்துடனும்தான்
> முடிவு செய்திருக்கிறார்.

நான் அமெரிக்காவில் இருக்கும்போதோ
அல்லது ஆனந்த உலா பயணத்தில்
இருக்கும்போதோ இறந்திருக்கலாம். எல்லா
ஏற்பாடுகளும், எல்லா நிகழ்ச்சிகளும் என்ன
ஆகியிருக்கும்?! மிக அற்புதமான ஆத்மா!
அவருக்கு மிக உயர்ந்த ஞானப்பதவியைப்
பரிசாகக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளேன்.

அவருடைய சக்தி மீண்டும் வடிவமாக மாறாது. அவர், வலியில்லாமலும், இனிமையாகவும்தான் தம் உடலை விட்டுச் சென்றுள்ளார். அவர் தளர்வாக, என்னுடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறார்," என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து, "அம்மா, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன்," என்று சொல்லியபடியே ஸ்வாமிஜி எழுந்து கண்ணாடிப் பெட்டியை நோக்கி நடந்து சென்று, முகத்தில் தேங்கிய அழகான புன்னகையுடன், அன்புடன் தந்தையின் உடலையும் சக்தியையும் ஆசீர்வதித்தார். நாள் முழுவதும் அடிக்கடி இவ்வாறு செய்தார்.

உயிர் பிரிந்த நேரம் கொண்டாடப்பட வேண்டும்

மரணம் என்பது கொண்டாடப்பட வேண்டிய, ஒரு மேன்மைமிக்க நிகழ்வுதான் என்ற ரகசியம் திருவண்ணாமலை வாழ் நன் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஸ்வாமிஜி, மிகவும் தளர்வான மன நிலையில் இருந்தார். தன்னம்பிக்கை மிகுந்த, ஆளுமையுடன்கூடிய உடலசைவுகள் அவரிடத்தில் தெரிந்தன. நாங்கள் ஒரு நேரடி வகுப்பில் இருந்தது போல எனக்குள் தோன்றியது. தியான முகாம்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களிலும் அவர் எதையெல்லாம் பேசினாரோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டோம்.

ஒரு மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும், இறந்தவர்களையும் வாழ்பவர்களையும் நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கும் அவருடைய செயல்களே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தன. அவர் அதை எங்கள் முன் வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தார். எந்தப் புத்தகமும் நமக்கு இப்படி ஒரு புரிதலையும் தர முடியாது, இந்த விதமான நம்பிக்கையையும் தர முடியாது.

அங்கு ஒரு ஆழமான ஆனந்தமான
சூழ்நிலையே நிலவ வேண்டும் என்பதில்
மிகவும் கவனமாக இருந்தார். அது ஏன்
என்பதை நான் புரிந்துகொண்டேன். யாரும்
கதறவோ, அழவோ கூடாது என்பதில் ஏன்
அவர் அவ்வளவு கவனமாக இருந்தார்?

எனக்குப் புரிந்தவரை உயிர் உடலை விட்டு நீங்கும்போது சூழ்நிலை எளிமையாகவும், ஆன்மீகப் புரிந்துகொள்ளுதலுடன் விழிப்புணர்வும்கூடியதாகவும், ஆனந்த கொண்டாட்டத்திற்கான மன நிலையுடனும் இருப்பது மிக மிக அவசியமாகிறது. அப்போதுதான் நாம் அந்த ஆத்மா அடுத்த நிலைக்கு இனிமையாகப் போவதற்கான எளிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

பிறருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய அன்புப் பரிசு இதுதான். சுய நலமற்ற மனப்போக்கிலிருந்து எழுகிற உச்சக்கட்ட செயல்பாடு இது ஒன்றுதான்.

நாம் அழும்போதும் வருந்தும்போதும் ஆத்மாவுக்கு ஒரு கனமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறோம். அதனால் ஆத்மா உடலைவிட்டுச் செல்வதற்குப் போராடுகிறது. நாம் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறோம். அந்த உயிருக்கு நம்மால் செய்ய முடிகிற கொடுமைகளிலே மிகப்பெரிய கொடுமை இதுதான். எல்லாச் சமயங்களிலும் அழுவதன்

மூலமாக நாம் அந்த உயிரின் மேல்
வைத்திருக்கிற அன்பின் அளவை
வெளிப்படுத்துவதாக நினைக்கிறோம்.

உண்மையில், நம்முள் நாம்
ஆழ்ந்து நேர்மையுடன் ஆராய்ந்து
பார்த்தோமேயானால், அந்த மனிதரின்
இழப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும்
வெற்றிடத்தை நினைத்தே நாம்
அழுகிறோம் என்பது புரியும். இறப்பு
என்பது கிளைமேக்ஸ் மட்டுமே, முடிவல்ல
என்பதைப் புரிந்துகொண்டோமேயானால்,
நாமும் மரணத்தை அந்தப் புரிதலுடன்
கொண்டாடுவோம். பிறகு அங்கு
அழுகைக்கும் கண்ணீருக்கும் இடமேது?

> ஒருவர்
> உடலைவிடும்போது,
> நாம் அழாமலும்,
> வருந்தாலும்
> அவர்களை
> வழியனுப்புவது
> ஒன்றுதான்
> நம் சுயநலமற்ற
> மனப்போக்கிலிருந்து
> எழுகிற உச்சக்கட்ட
> செயல்பாடு!

பிரபஞ்சம் அளிக்கும் வாய்ப்பை இனியும் தவறவிட வேண்டாம்

மாலையில் ஸந்தியா காலம் வந்தது. கற்பூர ஆரத்தியுடனும் கண கணக்கும் மணியோசையுடனும் கூடியிருப்போரின் கைத்தாள லயத்துடன்கூடிய ஆரதி பூஜை நடந்தது. எல்லோரும் மிகுந்த பயபக்தியுடன் கலந்துகொண்டார்கள்.

நான் சவப்பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அடிக்கடி இடது பக்கம் திரும்பி, நேரடியாக அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த உடலின் அருகில் அமர்ந்திருப்பதால் நான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், அப்படி ஒரு உடல் அங்கே இருப்பதேயே அவ்வப்போது மறந்துவிட்டேன்.

அந்த உடல் அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்தாலும், அது எங்கள் நடுவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு எந்தவிதமான துக்கக்காட்சிகளையோ, ஆரோக்கியமற்ற சூழ்நிலையையோ நாங்கள் உணரவில்லை.

ஸ்வாமிஜி, அங்கிருப்பவர்களின் மனத்தையெல்லாம், வழக்கமாக அந்த சமயங்களில் ஏற்படும் உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் தடுத்து, தொடர்ந்து ஆன்மீக விஷயங்களில் செலுத்தச் செய்தார். பயத்தாலும், துக்கத்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமாக இருந்த எங்களுடைய சக்தியையெல்லாம் விரிவுடுத்தி அந்த அறையில் நிறைந்திருந்த ஞான நிலையோடு தொடர்புகொள்ளச் செய்தார்.

இறப்பு என்பது இருப்பவர்களுக்கும் சென்றவர்களுக்கும் ஒரு ஆழமான ரஸவாத செயல்முறையாகத்தான் இருக்க முடியும்.

ஆசீர்வதிக்கப்பட்ட இந்த ஆத்மா ஸமாதி நிலையை அடைந்துவிட்டதனால், அங்கே உயர்நிலை சக்தியை வெளிப்படுத்தியது. அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட சக்தி, ஞானமடைந்த குருவின் சக்தியோடு சேர்ந்து சக்தி வாய்ந்த அலைகளை அங்கே பரப்பியது. அதனோடு யார் யார் தம்மை இசைவு செய்துகொள்கின்றார்களோ அவர்களையெல்லாம் மாற்றுகிற சக்தியாகவும் இருந்தது. அந்த வேலையைத்தான் ஸ்வாமிஜி செய்துகொண்டிருந்தார்.

பிரபஞ்ச இருப்புத் தன்மையால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதை ஸ்வாமிஜி விரும்பவில்லை.

இந்த வித்தியாசமான சூழ்நிலையிலும் ஸ்வாமிஜி நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்களைச் செய்துகொண்டுதான் இருந்தார்.

காலை உணவை எடுத்துக் கொண்டோம். விருந்தோம்பல் உணர்வுடன் கொடுக்கப்பட்ட காப்பியைக் குடித்தோம். வண்டிகளில் சென்று கிரிவலம் செய்துவந்தோம். மதிய உணவு உண்டோம். குளித்தோம். சுருக்கமாகச் சொன்னால், நாள்தோறும் நடைபெற வேண்டிய செயல்கள் நடந்துகொண்டேதான் இருந்தன.

இது எந்தவிதத்திலும் மறைந்த உயிருக்கு அவமரியாதை செய்வதாக இருக்கவில்லை.

முழுமையாக வாழப் பழகினால்

feather icon

### மரணமும் இனிமையாகும்

மாறாக, இறப்பு என்பது வாழ்க்கையில்
நிகழ்கிற மற்றொரு நிகழ்ச்சி என்று
உணர்ந்துகொண்ட மனமுதிர்ச்சி பெற்ற
பக்குவ நிலையைத்தான் அது காட்டியது.

அங்கிருப்பவர்களின்
மனத்தையெல்லாம்,
வழக்கமாக அந்த
சமயங்களில் ஏற்படும்
உணர்ச்சிகளில்
ஆழ்ந்துவிடாமல்
தடுத்து, தொடர்ந்து
ஆன்மீக விஷயங்களில்
செலுத்தச் செய்தார்.

நமது பழைய உடையை மாற்றிவிட்டு புது உடையை அணிவது போலத்தான் மரணமும் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறுகிற ஒரு எளிமையான நிகழ்வு, அந்த மாறுகிற செயல்தான் மரணம், அவ்வளவுதான்.

உயிருடன் இருக்கும்போதே மாற்றிக்கொள்கிற கலையை நாம் கற்றுக்கொண்டோமேயானால், இறக்கும்போதும் அதே மன நிலையுடன் நாம் இருப்போம். நாம் நல்லபடியாக இறக்க விரும்பினால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்- அது, நாம் நன்றாக வாழக் கற்றுக்கொள்வதே!

இந்த நொடிதான் நமது கடைசி நொடி என்பது போல ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழுங்கள். அதற்குப் பிறகு வருத்தப்படுவதற்கு என்று எதுவுமே இருக்காது.

சிலர் நினைப்பது போல இறப்பு என்பது பயத்தைத் தரக்கூடியதும் இல்லை ; கவர்ச்சிகரமானதும் இல்லை என்ற புரிதல் நமக்குள் ஏற்படுகிறது. நம் வாழ்க்கையின் எளிமையான சாரம் இதுதான். நமக்குள் ஆழமான, பயனுள்ள உள்ளுலக அனுபவங்கள் நிகழ்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை இது உருவாக்கித் தருகிறது. இறுதி நிலையான ஞானத் தன்மையில் நிலைக்குச் செய்வதற்கான ஆற்றலையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

மறுநாள் காலை 5.30 மணிக்கு நாங்கள் ஹாலில் கூடினோம். ஸ்வாமிஜி உடலைக் குளிப்பாட்டி காவி வஸ்திரம் உடுத்தச் சொன்னார்.

அதைப் பார்த்த அந்தக் கணமே எனக்குள் ஒரு ஞாபக அலை : ஒருமுறை ஸ்வாமிஜி தென்னாடு முழுக்கப் பயணம் முடித்து ஊர் திரும்பியபோது ஸ்வாமிஜியின் தந்தை தம் மூத்த மகனிடம் வேடிக்கையாக, “சீக்கிரம் வாடா! சாமி வரதுக்குள்ள கிளம்பலாம். பார்த்தார்னா நம்மளையும் சாமியாராய் மாத் திடுவாரு....” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிரபஞ்ச சக்தியிடம் பெரிய நகைச்சுவையுணர்வு உள்ளது போலும். அவள் கடைசி சிரிப்பைச் சிரித்தாள். கண்டிப்பாக ஸ்வாமிஜியின் தந்தையும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டிருப்பார்.

நாள்தோறும் நடைபெற
வேண்டிய செயல்கள்
நடந்துகொண்டேதான்
இருந்தன. இது,
எந்தவிதத்திலும்
மறைந்த உயிருக்கு
அவமரியாதை
செய்வதாக
இருக்கவில்லை.