KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பக்தியில் உறுதியுடன் இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பக்தியில் உறுதியுடன் இருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna with flute

8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதே இல்லை.

ஓ அர்ஜூனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு.

8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பக்தி செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலன்களையும் கடந்து செல்கிறார்.

முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.

பக்தியுணர்வே கடைசி காலத்திற்கும் உதவும்

இந்தக் கடைசி சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர் மொத்த அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லி விடுகிறார். அவர் “ஓ ப்ரீத்தாவின் மகனே! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதில்லை. அதனால் அர்ஜூனா! எப்போதும் நீ பக்தியில் நிலைத்து இரு,” என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறாரென்றால், இந்த உடலைவிட்டுச் செல்லும்போது உயிர் செல்லக்கூடிய இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த ஒருவர் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருப்பார் என்பதுதான்.

அவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தியிலேயே மூழ்கி, தமக்குள்ளேயே கரைந்து விடுவதால், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.

கிருஷ்ணர், முதலில் மரணத்தைப் பற்றிய பட்டறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளுதலை அர்ஜூனனுக்குக் கொடுத்து விடுகிறார். உடலைவிடும் நேரத்தில் எந்த எண்ணம் எழுகிறதோ அந்த எண்ணம்தான், உயிர் தனது அடுத்த உடலை தேர்ந்தெடுக்கச் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துகிறது என்று தெளிவாகச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் பக்தி சேவையில் மனத்தைச் செலுத்தியிருந்தாலொழிய கடைசி நேரத்தில் வருகிற எண்ணம் தெய்வீகமானதாக இருக்காது என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

> வாழ்க்கை முழுவதும் ஆழமான பக்தியினால் தமக்குள்ளே ஆழ்ந்துவிடும் ஒருவர், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.

நான் பக்தி சேவை என்று சொல்லும்போது சேவையைவிட பக்தி ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் குறிப்பிடுகிறேன். ஏதோவொரு பூசாரி பணத்தைத் தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னதற்காக தானம் செய்யாதீர்கள். எந்தச் சட்ட திட்டங்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர்கள். அதற்காக, "தானமே செய்யாதீர்கள்," என்று நான் சொல்லவில்லை. அது உங்களின் ஒரு

இயற்கையான வெளிப்பாடாக இருக்கட்டும்.
எந்தவிதமான எதிர்பார்ப்போடும் செய்ய
வேண்டாம்,'' என்றுதான் சொல்கிறேன்.

சிந்திப்பதற்கு ஒரு மூளையும் உணர்வதற்கு
ஒரு இதயமும் இருக்கிறது. ஒவ்வொரு
முறையும் நாம் எதைச் செய்ய வேண்டும்,
எதைச் செய்ய வேண்டாம் என்பதற்குச்
சமுதாயத்தைப் ஆலோசனை கேட்க
வேண்டியதில்லை.

இன்னொரு விஷயம் _பக்தி சேவை_ என்ற பெயரில் சமுதாயத்தையோ அல்லது தனிநபர் ஒருவரையோ மகிழ்விப்பதற்காக எதையும் செய்யாதீர்கள்.அதற்குப் பிரதிபலனாக எதையாவது எதிர்பார்த்தீர்களேயானால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அது _பக்தி சேவை_ இல்லை. செயல், பக்தியினால் மலருமேயானால், அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.

மிகப்பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள்

ஒரு சின்ன கதை!

போதி தர்மா சைனாவுக்குச் செல்கிறார். சைனாவின் அரசர் போதி தர்மரின் பக்தர். அந்த மன்னர் புத்த மதத்தைச் சைனாவில் பரப்புவதற்கு மிகச் சிறந்த சேவை செய்துள்ளார். நிறைய பணம் செலவு செய்து, நிறைய கோயில்களையும் ஆச்ரமங்களையும் கட்டி மக்கள் அந்த மதத்தைப் பின்பற்றச் செய்தார்.

போதிதர்மா அவருடைய மாளிகைக்குச் சென்றபோது, அரசர் அவருக்கு வெகு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். பிறகு கேட்டார், “_புத்தரே! புத்த_ மதத்தைப் பரப்புவதற்காக நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். நான் இறக்கும்போது என்ன நடக்கும்? நான் சொர்க்கத்தை அடைவேனா?” என்று கேட்டார்.

“நீ மிக மோசமான நரகத்தைத்தான் அடைவாய்!” என்றார் போதிதர்மா.

மன்னர் அதிர்ச்சியடைந்தார். அவர் என்ன பொருளில் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அரசருடைய கேள்வியில், அவருடைய அறக்காரியங்களுக்கான பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போதிதர்மா தம்மைப் பார்த்து, அதற்கான பரிசைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவர் பல சேவைகளைச் செய்திருந்தார்.

நான் மக்களிடம் சொல்வதுண்டு ஒரு அரைமணி நேரம், வெறும் அரை மணி நேரம் எதையும் எதிர்பார்க்காமல் ஏதாவதொரு பணியைச் செய்யுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே, "ஓ! எத்தனை பேர் இதைப் பாராட்டுவார்கள்? ஒரு ஆர்ட் கோலரி ஆரம்பிக்க வேண்டும் என்றால் இது போன்று எத்தனை ஓவியங்கள் வரைய வேண்டியிருக்கும்?" என்று கணக்குப் போடாதீர்கள். அப்படி எந்தக் கணக்கும் இல்லாமல் ஏதாவதொரு செயலில் அரைமணி நேரம் ஆழ்ந்து விடுங்கள்!

உங்களுக்குள் ஒரு புதிய உலகம் திறப்பதை
உணர்வீர்கள். எதையும் எதிர்பார்க்காமல்
அதைச் செய்வதில் உள்ள ஆனந்தத்திற்காகவே
ஒன்றைச் செய்து பாருங்கள். அது
உங்களுக்குள் எப்படிப்பட்ட விடுதலை
உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப்
பாருங்கள்.

எதையும்
எதிர்பார்க்காமல்
அதைச்
செய்வதில் உள்ள
ஆனந்தத்திற்காகவே
ஒன்றைச் செய்து
பாருங்கள்.
எவ்வளவு பெரிய
விடுதலையுணர்வை
அடைவீர்கள்
எனப் புரியும்.

எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள் எனப் புரியும். மெதுவாக இது உங்கள் மனத்தில் பதியும்போது நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள்.

இந்தப் புரிதல் உங்களுக்குள் ஆழமான பதிவை ஏற்படுத்தும்போது, நீ ங்கள் எதைச் செய்தாலும் அனுபவித்துச் செய்வீர்கள். ஆனந்தத்துடன் அனுபவித்துச் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அது சிறப்பாகவே இருக்கும். அதற்குப் பிறகு நீங்கள் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றி யார் எதை நினைத்தாலும் பெரியதாகவே எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.

பக்தர்கள் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைவார்கள்

peacock feather

கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில், "சடங்குகள், வேள்விகள், தான தர்மங்கள், பக்தி சார்ந்த காரியங்கள், பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள், இவற்றைச் செய்பவர்கள் அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்கள்," என்று சொல்கிறார்.

இந்தச் செயல்களைச் செய்யும்போது நமது மனப்பாங்கு என்ன என்பதுதான் முக்கியமே தவிர, செயல் முக்கியம் அல்ல. பயத்தினாலோ, ஆசையினாலோ மக்கள் கோயில் பூசாரிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். பணம் கொடுக்காவிட்டால் கடவுள் கோபித்துக்கொள்வார் என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது அல்லது பணம் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தைக் கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லப் படுகிறது.

செயல்களுக்குப் பின்னால் இருக்கிற
மனப்பாங்குதான் முக்கியம். ஒருவர்
ஆழ்ந்த பக்தியுடன் தமது செயல்களைச்
செய்தாரேயானால், அவர் இறக்கும்
சமயத்தில், அவர் அருகில் நான் இருப்பேன்
என்று கிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்.

இது வரையிலும் பட்டறிவு சார்ந்த விளக்கத்தைக் கொடுத்தார். இனி பின்வரும் அத்தியாயங்களில் இந்த ஸத்யத்தை உணர்ந்துகொள்வதற்கான நுட்பங்களைக் கொடுக்கிறார்.

எண்ணப்பதிவுகளை அகற்றுவதன் மூலமாகவும் ஆழ்ப்பதிந்திருக்கும் நினைவுப் பதிவுகளை நீக்குவதன் மூலமாகவும் நமது ஆசைகளைப் புரிந்துகொள்வதன் மூலமாகவும் நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவதற்கும் அதை அனுபவிப்பதற்குமான ஆழ் நிலை தியான நுட்பங்களைத் தந்துள்ளார்.

மிக உயர்ந்த சக்தியாகிய, பரப்ரம்மமாகிய கிருஷ்ணரை, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஸாக்ஷியாக இருக்கிற விழிப்புணர்வு நிலையை அடையவும் ஆத்ம ஞானத்தை அடையவும் நிலையான

ஞானமாகிய நித்யானந்தத்தை அடையவும் வேண்டிக்கொள்வோம்!

கேள்வி: ஸ்வாமிஜி, உங்கள் நித்யானந்த ஸ்பூரண த்யாண முகாம் பற்றிச் சொன்னீர்கள் அதைப்பற்றி மேலும் விளக்க முடியுமா? அது எவ்வாறு நம் வாழ்வில் உதவுகிறது?

நான் இப்படி அதை விளக்குகிறேன். நான் ஞானமடைவதற்கு முன்பு எனது மீதி வாழ்நாள் காலத்தை ஹிமாலயப் பகுதியில் தனிமையில் வசிக்க வேண்டுமென்றுதான் நினைத்தேன். நாம் பின்பற்ற வேண்டிய ‘ஞானப் பாதை’ அதுதான் என்று நினைத்தேன்.

த்யான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும், என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி.

ஞானமடைந்ததற்குப் பிறகு எனக்குத் தனியான விருப்பம் என்று எதுவும் இல்லை. ஆனால் அந்தப் பிரபஞ்ச சக்தியின் சங்கல்பத்தின்படி, ‘எனது ஞான அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம், அவர்களும் அதை அடைய முடியும் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதே’ என்னுடைய லக்ஷ்யம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

‘த்யான பாதையின் மூலமாகத் தனிமனித மாற்றத்தைக்கொண்டு வர முடியும்,’ என்கிற செய்தியை உலகிற்குக்கொண்டு சேர்ப்பதே என் பணி என்று தெள்ளத் தெளிவாக விளங்கிவிட்டது. அப்போதுதான் எனது உண்மையான பயணம் துவங்கியது. எனது அனுபவங்களையெல்லாம் தொகுத்து, அதனை மேம்படுத்துவதற்குச் சில காலம் பிடித்தது. அதன் விளைவுதான் த்யான பீடம் எனும் ஆன்மீகப் பரிசோதனைச் சாலை!

தொடக்கத்தில், மக்களுக்கு அவர்கள் வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு என்னென்ன வேண்டும் என்பது பற்றித்தான் பேசினேன். எப்படி அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சமாளிக்கலாம், நாம் அந்தப் பிரபஞ்ச சக்தியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொன்னேன்.

பிரபஞ்ச சக்தி நமக்குள்ளும் பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதையும் அதனைச் சக்ரங்கள்என்றழைக்கப்படும் ஏழு சக்திமையங்களில் உணர முடியும் என்பதைப்பற்றியும் விளக்கமாகப் பேசினேன். அந்தச் சக்ரங்கள் அடைபடும்போது, நாம் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படுகிறோம். அது நமது உடலையும் பாதிக்கின்றது.

சக்ரங்கள் எனப்படும் ஏழு சக்தி மையங்களுக்கு சக்தியூட்டுவதே LPB-1 ஆக இருந்தது. இந்தியாவில் இது ஆனந்த ஸ்புரண த்யான முகாம் என்று அழைக்கப்பட்டது. ஆனந்த என்றால் ஆனந்தம் என்றும், ஸ்புரண என்றால் தடைபடாத ஓட்டம் அல்லது தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கும் ஊற்று என்றும் பொருள். இந்த த்யான முகாம் ஆனந்த சக்தி உங்களுக்குள் மீண்டும் தடைபடாமல் ஓடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. இது நிகழ்வதற்கான நுட்பம்தான் த்யானம்.

என்னால் தீக்ஷை அளிக்கப்பெற்ற, பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இந்த த்யான முகாம்கள் நடத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பயன் அடைந்துள்ளார்கள். இது வாழ்வுக்குத் தீர்வளிக்கும் த்யான முகாம். நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் என்ற ஒரு புத்தகம் இந்த த்யான முகாமின் உள்ளடக்கங்களை விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதால் ஏற்படும் புரிதல்கூட, மக்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது.

தற்போது இதை ‘லைஃப் ப்ளிஸ் ப்ரோகிராம் லெவல் - 1’ என்று அழைக்கிறோம். துறை வல்லுநர்களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் ஏற்றவாறு சில மாறுதல்களுடன் இந்தப் ப்ரோகிராம் வழங்கப்படுகிறது. இதில் கற்றுத்தரப்படும் பெரும்பாலான த்யான நுட்பங்கள் மனச்சோர்வை உடைத்தெறிபவையாக இருக்கின்றன.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷர ப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோऽத்யாய: ॥

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரஹ்ம யோகம் என்னும் பெயர் கொண்ட எட்டாவது அத்தியாயம்.

hands emblem