ஒளியின் வழியில் பயணம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
ஓ! பார்த்தனே! ‘தீ’க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த ப்ரம்மத்தை உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற ஆறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆத்ம சரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.

ஞானமடைவதற்குச் சரியான நேரம்
இந்தச் சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர், எந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி அந்த உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பவற்றை விளக்குகிறார். மேலும் அவர், மக்கள் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சிக்குள் எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்:
உயர்ந்த தெய்வீக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின் போதும், ஒளியிருக்கும் நேரத்தின் போதும், நல்ல நேரத்தின் போதும், வளர்பிறையின் போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்திராயண நேரத்தின் போதும் உடலை விடுவதன் மூலம், ப்ரஹ்மத்தை, அந்த உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காலக்கட்டங்கள் நமது கால அட்டவணையைச் சேர்ந்தது இல்லை. முக்தி அடைவது, கால அட்டவணையின்படிதான் என்று சொன்னால், எல்லோருமே உத்தராயண காலத்தில் தற்கொலை செய்து கொண்டாவது போய்விடலாமே!
உத்தராயணம்
எனும் சொல்,
நமது மனம்
சம நிலையில்
இருக்கும் நிலையைக்
குறிக்கிறது.
அப்படியல்ல அதன் பொருள். அந்த வார்த்தைகளுக்கு, அப்படியே நேரடியான அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவற்றின் அர்த்தம் உருவகம் சார்ந்தவை. உத்தராயணம் எனும் சொல் நமது மனம் சம நிலையில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
கிருஷ்ணர் எந்த நேரத்தில் நமது மனம்
முழுமையான சம நிலையில் இருக்குமோ,
நமது மனத்தில் போராட்டம் இல்லாமல்
இருக்குமோ, அந்த நிலையைக்
குறிப்பிடுகிறார்.
மஹாபாரதப் போரில், பீஷ்மர் தமது உடலை விடுவதற்கு உத்தராயண காலம்வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஜனவரி மாதத்திற்காகக் காத்திருந்தார் என்று நினைத்துவிடாதீர்கள், அவரது மனப் போராட்டங்கள் அடங்கும்வரை காத்திருந்தார்.
இருப்புத் தன்மை
முழுமையான
விழிப்புணர்வுடன்,
உயிர்ப்புடன் இருந்தால்
நீங்கள் மேலே
செல்கிறீர்கள்.
போரில் அவர் வீழ்ந்து விட்டார். அம்புகளினாலான படுக்கையில் படுத்திருந்த அவர் மனத்தில் போராட்டம் இருந்திருக்க வேண்டும்.
அவர் மனத்தில், "யாருக்கு நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தேனோ, யாருக்காக நான் எல்லாவற்றையும் செய்தேனோ அந்தப் பேரன் இதைச் செய்தான்," என்ற போராட்டம் இருந்திருக்க வேண்டும். கண்டிப்பாக இந்த எண்ணங்கள் அவர் மனத்தில் அமைதியில்லா நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவர் மனப்போராட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.
அதனால் அவர் தம் மனப்ரோட்டங்கள் ஓயும்வரை காத்திருந்தார். இதைத்தான் அவர் உத்தராயணம்வரை காத்திருந்தார் என்ற சொற்களின் மூலம் விளக்கியிருக்க வேண்டும்.
இவை 'காலத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துகள் அல்ல' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை மனோ ரீதியானவை. இது கால நேரத்தின் அடிப்படையில் அமைந்ததென்றால், அந்த ஆறு மாதங்களில் மரணமடைகிறவர்கள் எல்லாம் ஞானமடைந்து விடுகிறார்கள் என்று பொருளா என்ன?

'ஞானமடைதல்' என்பது விபத்தல்ல! அது விழிப்புணர்வுடன்கூடிய தேர்வு!
அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அக்நிர் ஜ்யோதிர: ஸுக்ல: எனும்போது, அவர் குறிப்பிடுவது உயர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான். உங்கள் உயிர், உங்கள் இருப்புத் தன்மை முழுமையான விழிப்புணர்வுடன், உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள். (ஸுக்ல என்றால் மேலே செல்லல்; க்ருஷ்ண என்றால் கீழே செல்லல்)
## எதன் வழியாக உயிர் பிரியும்?
இன்னுமொரு முக்கியமான விஷயம், நாம் வாழ்நாள் முழுவதும்
> வாழ்நாள் முழுவதும்
> நாம்,
> உயர் விழிப்புணர்வுக்கு
> முக்கியத்துவம்
> கொடுக்கிற
> வாழ்க்கையையே
> வாழ்ந்திருந்தால்,
> நமது உயிர்
> ஸஹஸ்ரார சக்ரத்தின்
> வழியாக வெளியேறுகிறது.
கண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால் நம்முடைய சக்தி கண்களின் வழியாக வெளியே செல்கிறது. கடைசி நிமிடத்தில் கண்களைத் திறக்கிறோம். உயிர் கண் வழியாக வெளியேறுகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் நாக்கிற்கு, சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால், ஆத்மா வாய் வழியாக வெளியே செல்கிறது.
வாழ்நாள் முழுவதும் நாம் உயர் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையையே வாழ்ந்திருந்தால், நமது உயிர் உச்சந்தலையில் அமைந்திருக்கும் ஸஹஸ்ரார சக்ரத்தின் வழியாக வெளியேறுகிறது.
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜந: என்கிறார் கிருஷ்ணர். நாம் எப்போதும் மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தோமானால், நாம் அந்தப் பாதையில் போய் ப்ரஹ்மத்துடன் கலப்போம். நாம் ஞானமடைவோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தக் கட்டுப்பாடுகள் காலத்தின்பாற்பட்டவையல்ல. அவை மன ரீதியானவை. பீஷ்மர் தமது மனம் அமைதியடையும்வரை காத்திருந்தார். முழுமையாக அமைதியடையும்வரை எல்லோரையும் மன்னிக்கிற மனப்பான்மையை அடையும்வரை விழிப்புணர்வு நிலையை அடையும்வரை காத்திருந்தார். அதற்குப் பிறகு ஞான நிலையை அடைந்தார். அடுத்து கிருஷ்ணர், "புகை, இரவு, தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கிற தக்ஷிணாயனம் காலத்தில் உடலை விடுகிறவர் மீண்டும் வருகிறார்," என்று சொல்கிறார்.
மீண்டும், இதுவும் காலத்தின்பாற்பட்டதல்ல; மனத்தின் பாற்பட்டதே. இந்த ஆறு மாத காலத்தில் மரணமடைகிறவர்கள் யாருமே ஞானமடைய முடியாது என்று சொல்லவில்லை. அவர்கள் "தக்ஷிணாயன காலத்தில் ஞானத்திற்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. "இப்போது அனுமதி இல்லை.உத்தராயண காலத்தில் மட்டும்தான் கதவு திறந்திருக்கும். அப்போது வாருங்கள்," என்று சொல்ல முடியாது.
"தக்ஷிணாயன காலம் வேலை நேரமல்ல,
உத்தராயண காலம்தான் வேலை நேரம்,"
என்று சொல்ல முடியாது. ஞானமடைவதற்கு
வேலை நேரம் ஒன்று கிடையாது. அது
முழுக்க முழுக்க நமது இருப்புத் தன்மை
முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து
தேர்ந்தெடுக்கிற ஒன்றுதான்.
கிருஷ்ணர் சொல்கிறார். வேதங்களைப்
பொறுத்தவரை இந்த உலகிலிருந்து
விடுெடுவதற்கு இரண்டு வழிகள்தான்
இருக்கின்றன. ஒன்று ஒளியின் வழியாக.
இன்னொன்று இருட்டின் வழியாக. ஒளியின்
வழியாகப் போகிறவர்கள் இந்த உலகிற்கு
திரும்ப வருவதில்லை. இருட்டின் வழியாகப்
போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்.
ஒளியின் வழியாகப்
போகிறவர்கள்
இந்த உலகிற்கு
திரும்ப
வருவதில்லை.
ஒளியென்றும் இருட்டென்றும் கிருஷ்ணர் எதைக் குறிப்பிடுகிறார்? ஒருவர் அடைந்திருக்கிற விழிப்புணர்வு நிலையின் மட்டத்தையே அவர் குறிப்பிடுகிறார்.
இருள் என்றால் என்ன? ஒரு மனிதன் தம் உடலை விட்டுச் செல்லும்போது, இது நாள்வரை தம்மைத் துரத்தியவை -ஸம்ஸ்காரங்கள், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் செல்வதையே அது குறிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாத நிலையையே, இந்த அறியாமையையே இருள் எனக் குறிப்பிடுகிறார். இவற்றை நாம் புரிந்துகொண்டுஇவற்றிலிருந்து நாம் விடுபட்டு விட்டோமேயானால், நாம் உடலைவிடும்போது புக்தியடைகிறோம். இதைத்தான் ஒளி வழி என்கிறோம். இதைத்தான் கிருஷ்ணர், இந்தப் 'புரிதல் நிகழும்'போது ஒருவர் மீண்டும் உடலுக்கு வருவதில்லை எனச் சொல்கிறார்.
விழிப்புணர்வு, எண்ணப்பதிவை அழிக்கும் ஒரு சக்தி
கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு எண்ணப்பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக்கொண்டு வருவதன் மூலம் அந்த எண்ணப் பதிவையே அழித்துவிட முடியுமா?
பெரும்பாலான நேரங்களில், விழிப்புணர்வைக்கொண்டு வருவதே இந்த விஷயங்களைக் கையாளுவதற்குப்போதுமானதாக இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் கடந்தகாலத்தில் செய்த ஏதோ ஒரு செயலைப் பற்றிய குற்ற உணர்ச்சியில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, நம்முடைய குற்ற உணர்ச்சிகள்தான் நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது அந்தக் குற்ற உணர்ச்சி கள்தான் உங்களைப் பாதிக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பிரச்சினையை எப்படிக் கையாள்வீர்கள்?
ஆனால் உங்களை நீங்களே உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கிய அந்தக் கணமே, உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள்.
> உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் புரிந்து கொண்டால், ஆசை, பயம், குற்ற உணர்ச்சி, வேதனை அவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை நீங்கள் உணர முடியும்.
உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் பற்றி ஒருமுறை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி, வேதனை இவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
எப்பொழுதெல்லாம் நீங்கள் ஸாக்ஷியாகப் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களுக்கும் எண்ணப்பதிவிற்கும் இடையே தொடர்பற்ற நிலை ஏற்படுகிறது. பயத்தை விழிப்புணர்வுடன் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது, அந்தப் பயம் விழுந்து விடுகிறது. எல்லாப் பயங்களுக்கும் இது பொருந்தும்.
முழுமையான விழிப்புணர்வுடன் ஸாஷியாக இருங்கள். பிறகு பயத் தாக்குதல் இருக்கவே இருக்காது. எந்த நிமிடம் உங்களுக்குள் பயம் ஆரம்பிக்கிறதோ அப்பொழுது என்ன நடக்கிறதென்று முழு விழிப்புணர்வுடன் ஆராய்ந்தீர்களானால், அது மறைந்து விடுகிறது. அது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய தமது சக்தியை இழந்து விடுகிறது. அதேபோலத்தான் மற்ற எண்ணப் பதிவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு சின்ன கதை!
நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. நான் பிறந்த ஊரான திருவண்ணாமலையில், அருணாச்சலம் என்ற ஒரு அழகான மலை உள்ளது. அந்த மலை ஒரு சக்தி மையம்; ஆன்மீக இன்குபேட்டர். அது நிறைய ஞானிகளை உருவாக்கி இருக்கிறது.
நான் தினமும் கிரிவலம் செல்வது வழக்கம். ஒரு நாள், நான் வழக்கப்படி கிரிவலம் சென்று கொண்டிருந்தேன். அது பின்னிரவு நேரமாக இருந்ததால் மிகவும் இருட்டாக இருந்தது.
அப்போது அங்கிருந்த ஒரு சுடுகாட்டை நான் கடக்க வேண்டியிருந்தது. பொதுவாக அந்த நேரத்தில் ஒரு சிறிய பையனுக்கு அப்படி ஒரு பகுதியில் நடக்கத் துணிவே இருக்காது. நான் சுடுகாட்டை நெருங்க நெருங்க ஒரு நாய் என்னை நோக்கிக் குரைக்க ஆரம்பித்தது. நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பிறகு நான் அருகில் போனவுடன் அந்த நாய் ஓடிவிட்டது. அருகில் போனவுடன்தான் எனக்கு, அந்த நாய் சரியாகப் எரிக்கப்படாமலிருந்த ஒரு பிணத்தை தின்று கொண்டிருந்தது என்பது புரிந்தது.
அந்த நேரத்தில்தான் எனக்குள் பயம் எழுவதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்குள் எழுகிற பயத்தை ஸாஷியாக இருந்து முழுவிழிப்புணர்வோடு கவனித்தேன். அந்தப் பயம் எழுந்தாலும் உடனே அடங்கியது. விழிப்புணர்வு மிக உயர்ந்த நிலையில் இருந்ததால், அது ஒரு பயத் தாக்குதலாக மாறவில்லை, அது என் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல், சக்தியற்றுப் போவதை என்னால் உணர முடிந்தது. அது மேற்கொண்டு என்னைப் பாதிக்கவேயில்லை. நான் பிணத்தைப் பார்த்தேன். அமைதியாகப் புன்னகைத்து விட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
பய உணர்வைப் பற்றிய விழிப்புணர்வும் பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள எடுத்த விழிப்புணர்வுடன்கூடிய முடிவும் அந்தப் பயத்தையே கரைத்து விட்டது!
