உள் உலகச் செல்வந்தர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மற்றுமொரு விஷயம் உள்ளது. ஞானமடைந்தவர்கள் தங்களிடம் உள்ளவை எல்லாவற்றையும் தாங்கள் பெறுபவற்றையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். உணவு கிடைத்தால் சமர்ப்பிக்கிறார்கள்; பல நாட்களுக்குப் பசியாக இருந்தால் அதையும் சமர்ப்பிக்கிறார்கள்.
பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் உள் உலகத்தில் செல்வந்தர்கள்தான். ஏனென்றால் எல்லாவற்றையும் அவர்கள் சமர்ப்பித்து விடுகிறார்கள்.
அவர், "பிரபஞ்ச சக்தி பார்த்துக்கொள்ளட்டும்," என்று சொல்கிறார். அவரது எல்லாப் பொறுப்புகளையும் பிரபஞ்ச சக்தியிடமே விட்டு விடுகிறார்.
அப்படியொரு சரணாகதி நிகழ்கிறபோது
உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு
ஏற்படுகிறது. விடுதலையுணர்வு ஏற்பட்ட
அந்தக் கணமே நமக்குள் 'பளிச்' என ஆனந்த
உணர்வு மலர்கிறது. நாம் ஆனந்தத்தால்
மலர்கிறோம்.
> சரணாகதி
> நிகழ்கிறபோது
> உள்ளே மிகப்பெரிய
> விடுதலையுணர்வு
> ஏற்படுகிறது.
நாம் ஏதோவொன்றை துக்கம் என நினைக்கிறோம். ஏனென்றால் அந்த ஏதோ ஒன்றுக்கு நாம்தான் பொறுப்பாளர்கள் என நினைக்கிறோம். நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். அதனால்தான், நாம் எதிர்பார்த்தபடி செயல்கள் நடக்காதபொழுது, அதனைத் துக்கமாக நினைக்கிறோம்.
ஆனால் ஞானிகள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் நீரோட்டம்போல் தளர்வாய் செல்கிறார்கள். எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதைப் பிரபஞ்ச சக்தியிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள்.