KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பிரம்மாவின் பகல், இரவுSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பிரம்மாவின் பகல், இரவு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

என் மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.

மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.

மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் பிரம்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.

‘தோன்றாத நிலை’யில் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் பிரம்மாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. பிரம்மாவின் இரவு வரும்போது அவை மீண்டும் ‘தோன்றா நிலை’யிலேயே ஒடுங்கி விடுகின்றன.

ஞானியின் உன்னதமான நோக்கம்

இப்போது கிருஷ்ணர், "ஆழ்ந்த யோக நிலையை அடைந்த மிக உயர்ந்த ஆத்மாக்கள், என்னை அடைந்த பிறகு இந்தத் துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்து விடுகிறார்கள்," என்று சொல்கிறார்.

இந்த விஞ்ஞானத்தை நாம் அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ளும் நம்முடைய புரிந்துகொள்ளுதல்தான், அந்த ஸத்யத்தை நம்முடைய அனுபூதியாக மாற்ற வேண்டும் என்கிற உற்சாகத்தை நமக்குக் கொடுக்கிறது. இயற்கையாகவே அந்த உற்சாகம், நம்மை இறுதி ஸத்யத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.

இங்கே கிருஷ்ணர் "இந்த நிலையை நீ அடைந்தாயேயானால், மீண்டும் நீ இங்கு வரமாட்டாய்," என்று சொல்கிறார். எண்ணங்கள் இல்லாத அந்த நிலையை அடைவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். நம்மைத் தூண்டுகிறார்.

ஞானிகளின் ஒரே பணி என்னவென்றால், தமக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, தாம் உணர்ந்த ஸத்யத்தை ஒவ்வொரு வரையும் அடையச் செய்வதுதான். அவர்களுக்கு அந்த ஒரு நோக்கம் மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. இதில் எந்த ரகசியமோ அல்லது அந்தரங்கமான நோக்கமோ இல்லை.

> ஞானிகளுக்கு
> உள்ளிருந்து
> கிடைக்கும்
> வழிகாட்டுதல்
> மிக உயர்ந்ததாக
> இருப்பதால்,
> அவர்கள் எப்போதும்
> ஆனந்தமாகவே
> இருக்கிறார்கள்.

மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு ஞானியை சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். ஏமாற்று வேலை இருப்பதாகவே நினைக்கிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உள் உலக ஆனந்தத்தை அடைந்தவர்கள் வெளி உலகில் எதைப் பற்றியும் லக்ஷ்யம் செய்வதில்லை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வெளி உலகிலிருந்து பெறப்படும் மகிழ்ச்சி அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. ஏனென்றால் அதைவிட சக்தி வாய்ந்த ஏதோ ஒன்றை அவர்கள் தங்களுக்குள்ளேயே

பெற்றிருக்கிறார்கள். உள்ளிருந்து
அவர்களுக்குக் கிடைக்கும் வழிகாட்டுதல்
மிகவும் உயர்ந்ததாக இருப்பதனால், அவர்கள்
எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள்.

அதனால்தான், அவர்கள் உலகைத்
'துக்கங்களின் தொகுப்பு' எனப்
பார்ப்பதில்லை. தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு ஞானிக்கு பல நாட்களுக்கு உணவு
கிடைக்கவில்லை என்றாலும்கூட
அவர் ஆனந்தமாகவே இருப்பார். அந்தச்
சூழ்நிலையில்கூட அவர் நன்றியுணர்வும்
இரக்கமும் உடையவராகவே இருப்பார்.

ஞானிகள்,
இந்த உலகை
'துக்கங்களின்
தொகுப்பாக'ப்
பார்ப்பதில்லை.
எப்போதும்
ஆனந்தத்தின்
தொகுப்பாகவே
பார்க்கிறார்கள்.

துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ அவர்கள் ஆழ்வதில்லை. இரண்டையும் ஒரே நிலையிலிருந்துதான் பார்க்கிறார்கள். இரண்டிலிருந்தும் சம அளவில் விலகி நிற்கிறார்கள். சுக துக்கங்களைக் கடந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

எப்போதுமே, அவர்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிற நிலையிலேயே இருக்கிறார்கள். உலக விஷயங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களது அகராதியில் துக்கமோ, மகிழ்வோ இல்லை.

Peacock feather

காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு

ஒரு சின்ன கதை :

ஸூஃபி ஞானி ஜூவேத், ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனுக்கு நன்றி செலுத்தி தொழுகை செய்வார். ஒருமுறை அவரும் அவருடைய சீடர்களும் கிராமங்களில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமங்களில் எல்லாம் ஸூஃபிஸம் ஒரு மதமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

முதல் கிராமத்தில் அவர்களைப் பிச்சையெடுப்பவர்கள் என்று திட்டி மிகச் சிறிதளவே உணவு கொடுத்தார்கள். அடுத்த கிராமத்தில் எதுவும் கொடு க்க மறுத்துவிட்டார்கள். மூன்றாவது நாள் அவர்கள் போன கிராமத்தில் பகையுணர்வு காட்டியதோடு மட்டுமல்லாமல் தடியாலும், கல்லாலும் அடித்து விரட்டினார்கள்.

அன்றிரவும் அந்த குரு வழக்கம்போல
மண்டியிட்டுக்க் கடவுளுக்கு நன்றி
சொன்னார். அவருடைய சீடர்கள் அதைக்
கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால்
அதைத் தாங்கவே முடியவில்லை.
பசியோடும், தாகத்தோடும் பரிதாபகரமாக
இருக்கும் அந்த நேரத்திலும், எதற்காகத்
தங்கள் குரு கடவுளுக்கு நன்றி சொல்கிறார்
என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
அவர்கள் கோபமானார்கள்.

"குருவே! மூன்று நாட்களாக நாம் உணவில்லாமல் இருக்கிறோம். இன்று நம்மை அந்தக்க கிராமத்திலிருந்து நாய்களை விரட்டுவதுபோல விரட்டி விட்டார்கள். இதற்காகவா நீங்கள் நன்றி சொல்கிறீர்கள்?" என்று கத்தினார்கள்.

குரு அவர்களைப் பார்த்துக் கேட்டார். "மூன்று நாட்கள் பசியாக இருந்ததைப் பற்றிச் சொல்கிறீர்கள். இது வரையிலும் நமக்கு கிடைத்ததைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? 30 ஆண்டுகளாக நமக்கு உணவு கொடுத்தற்காக என்றாவது நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா?

தெரிந்துகொள்ளுங்கள், எனது நன்றியுணர்வு என்பது ஏதாவது கிடைப்பது அல்லது கிடைக்காதது என்பது பற்றியதல்ல. எனது உணர்விலிருந்து, இருப்பிலிருந்து வெளிப்படும் ஆழ்ந்த மகிழ்ச்சியின், நன்றியின் வெளிப்பாடுதான் அது. ஏதாவது பொருளைக் கேட்காத, காரணமற்ற பிரார்த்தனை நிறைந்த வெளிப்பாடு. அவ்வளவுதான்," என்றார்.

ஒரு ஞானி தமக்கு ஏற்படும் துக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் முழுமையான நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்கிறார். பிரபஞ்ச சக்தியிடமே அவற்றைச் சமர்ப்பித்து விடுகிறார். ஞானிகள் நீங்கள் புரிந்து வைத்திருக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்கள் எதன் மீதும் பற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்கள் கருணை வடிவானவர்கள்.

Hands playing flute