KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/என் நினைவாகவே இருங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

என் நினைவாகவே இருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவில் மிகச்சிறந்த முனிவர்களும் ப்ரம்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் ப்ரம்மசர்யத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு ப்ரம்மத்தை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.

8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர் மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.

8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்திர ஒலியும் மிக உயர்ந்த மந்திர எழுத்துக்களின் தொகுப்புமான 'ஓம்' என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலை விடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைக்கிறார்.

பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

Feather illustration

உள் உலக மாற்றத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள்

ப்ரம்மத்தை, கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வு நிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் கிருஷ்ணர். வேதத்தில் சிறந்தவர்கள் ப்ரம்மத்தை அடைகிறார்கள் என்று அவர் சொல்கிறார்.

> வேத ஒலிகள்
> உள்ளிருப்புத்
> தன்மையை
> தூய்மைப்படுத்துகிற
> சக்தி கொண்டனவாக
> இருக்கின்றன.

கிருஷ்ணர் இவ்வாறு சொல்லும்போது, வெறுமனே வேதங்களைப் படித்து விட்டு மறந்து விடுவதை அவர் குறிப்பிடவில்லை; இன்னும் ஆழமாகப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். நாம் இறக்கும்தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது.

ஒருவர் வேதங்களிலேயே தொடர்ந்து ஆழ்ந்து இருப்பாரேயானால், அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து இருக்கும் அதைத்தான் கிருஷ்ணர் , 'வேதங்களிலேயே ஆழ்ந்திடுங்கள்,' என்ற தமது வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.

வேத நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் ஸத்யங்களை உள்வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வேதங்களின் ஆழமான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவை சக்தியின் அச்சாணிகள். வேத நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்லோகங்களும் சக்தியின் சுழல்கள். நாம் அவற்றைப் படிக்கும்போது, அவை உருவாக்கும் சப்தமே போதுமானது. அந்த ஒலிகள் நமது உள்ளிருப்புத் தன்மையை தூய்மைப்படுத்துகின்றன. இந்த ஸ்லோகங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. அவை உங்களை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவை.

அவை உள் உலக மாற்றங்களுக்கெனவே வடிவமைக்கப்பட்டவை!

வேத மந்திரங்களைக் கவனித்துப் பார்த்தீர்களானால் அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் உச்சரிக்கப்படும்; ஒரு குறிப்பிட்ட தொனியில், ஸ்ருதியில்தான் சொல்வார்கள். இவை உச்சாடனம் செய்யப்படும்போது நமது உடல் - மன அமைப்பை தூய்மைப்படுத்துகிறது, நமது உள் இருப்புத் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு இந்த உண்மை தெரியாது; ஆனாலும் அவை நமக்கு சக்தியளிக்கின்றன.

வேதங்கள் ஞானத்திற்கான வழிகாட்டிகள்.

மிகப் பழங்கால கோயில்களுக்குச்
செல்லும்போது, உள்ளே கருவறையில் ஒரு
வித அமைதி நிலவுவதை உணரலாம். அந்த
இடங்களுக்குள் நுழையும் போதே மனம்
இயற்கையாகவே அமைதி அடைகிறது. ஏன்
அப்படி ஆகிறது என்று நினைக்கிறீர்கள்?
பிரகாரத்தில் நுழைந்த அந்தக் கணமே
நமக்குள் ஒரு ஆனந்தம் ஏன் கிடைக்கிறதென்று
நினைக்கிறீர்கள்?

அர்ச்சகர் வேத மந்திரங்களைச் சொல்லும்போது அந்த இடங்களில் சக்தி நிறைகிறது. அந்த ஒலி, அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துகிறது; அந்த இடம் முழுவதையும் சக்தியால் நிரப்புகிறது.

இன்னொரு விஷயம் என்னவென்றால் வேதங்கள் 'தன்னைத்தானே' உணர்வதைப் பற்றிச் சொல்கின்றன. அவை ஞானத்திற்கான வழிகாட்டிகள். அதனால்தான், அவற்றை நாம் ஓதும்போது, ஞானத்திற்கான மன நிலையை நாம் அடைகிறோம். நமது மனமும் அந்த அலைவரிசைக்கு இசைவு செய்யப்படுகிறது.

ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்தக் காட்சிகளை நம் மனம் நினைக்குமல்லவா? அந்தக் கதையில் வந்த நல்ல மனிதர் என்ன சொன்னார், கெட்ட மனிதன் என்ன சொன்னான் என்று யோசிப்போம் அல்லவா? ஓரிரு நாட்களுக்கு அதே தாக்கத்தில் இருப்போம். அது போன்றதுதான் வேத உச்சாடனங்களும்.

அதேபோல வேதங்களைப் படிக்கும்பொழுது, நாம் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஒருவிதத் தாக்கத்தில் இருப்போம். அவை என்ன சொல்கின்றன, ஞானம் என்றால் என்ன, தன்னை உணர்வது எப்படி? ஞானம் அடைந்தவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்... இது போன்ற எண்ணங்கள் நம் மனத்தில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்.

இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்! 'தன்னை உணர்தல்' என்ற இலக்கை நோக்கியே நமது எண்ணங்கள் இயக்கப்படும்போது, செலுத்தப்படும்போது, இயற்கையாகவே, மரணத்தறுவாயிலும் ஞானம் பற்றிய, தன்னை உணர்தல் பற்றிய எண்ணங்களாகவே நம்முள் எழும்; நமது எண்ணங்கள் ஞானத்தைப் பற்றியதாகவே நிச்சயம் இருக்கும்.

தூய்மையடைவதே பிரஹ்மசரியம்

கிருஷ்ணர் சொல்கிறார் "நாம் வேதங்களைப் படிக்கும் போதும், அந்த வாழ்க்கை முறையை வாழும் போதும் நாம் ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறோம். நாம் இந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ப்ரம்மசர்யம் என்பது தவறான அர்த்தத்தில் கையாளப் பெறுகிறது.

ப்ரம்மசர்யம் என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள் ப்ரம்மசர்யத்தின் நேரடியான பொருள், 'தன்னை உணர்வதற்கான பாதையில் செல்பவர்' என்பதுதான்.

ப்ரம்மசர்யத்தின்
நேரடியான பொருள்,
'தன்னை
உணர்வதற்கான
பாதையில் செல்பவர்'
என்பதுதான்.

ப்ரம்மம் என்றால் 'தான்', சர்யம் என்றால் 'நடப்பதற்கான பாதை'. ப்ரம்மசாரி என்றால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாதவர் என்று பொருள் அல்ல. ப்ரம்மத்தை அடைவதற்கான பாதையில் செல்பவரே ப்ரம்மசாரி. இந்தச் சொல்லின் சரியான பொருள் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

ஒரு சின்ன கதை:

கடல் கேப்டன் ஒருவர் ஒரு குழுவிடம் தம் வீரசாகசங்களைப் பற்றிச் சொல்லிக்

கொடிருந்தார். அவர், "ஒருமுறை
தென் அமெரிக்கக் கடற்கரையில் எங்கள்
கப்பல் விபத்துக்குள்ளாகி விட்டதால்
அருகிலிருக்கும் தீவில் கரை ஒதுங்கினோம்.
அங்கே ஆதிவாசிப் பெண்களைப் பார்த்தேன்.
அவர்களுக்கு நாக்கே இல்லாமல் இருந்தது.
அவர்கள் மிகவும் மூர்க்கத்தனத்துடன்
இருந்தார்கள்," என்று சொன்னார்.

ஒரு பெண் "கடவுளே! அவர்களால் பேச முடியாதா?" என்று கேட்டார்.

கேப்டன், "ஆமாம் அவர்களால் பேச முடியாது. அதுதான் அவர்களை மூர்க்கர்களாக மாற்றியிருந்தது. அதனால்தான், அவர்கள் முரட்டுத்தனமான கோபத்தில் இருந்தார்கள்," என்றார்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அடக்குமுறை, அது மாற்றங்களைக்கொண்டு வராது; அது மன உளைச்சலைத்தான்கொண்டு வரும். ஆசைகளை அடக்குவது என்பது ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையைப் போன்றது. எப்பொழுது அது வெடிக்கும் என்றுகூட நமக்குத் தெரியாது.

ப்ரம்மசர்யம் என்ற சொல், எல்லாவற்றையும் விட்டு விட்டு, ஸந்யாஸத்தை ஏற்பது என்பதைக் குறிப்பதல்ல. நமது உள் உலகம் தூய்மைப் படுத்தப்பட வேண்டும்; நமது உள் உலகம் கற்பனையிலிருந்து விடுபட வேண்டும்; ப்ரம்மத்துடன் கலக்க நாம் உண்மையாய் முயற்சி செய்ய வேண்டும்; நாம் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்; அதுதான் ப்ரம்மசர்யம்.

கிருஷ்ணர் இங்கே யோக சாஸ்த்ரத்தின் ஆழமான ஸத்யங்களைப் பற்றிச் சொல்கிறார். மிகப்பெரிய ஸத்யங்களை வேறு வேறு ஞானிகள் வேறு வேறு விதத்தில் சொல்கிறார்கள் என்றாலும், ஸத்யங்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன.

யோகம் என்பதன் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் இந்த ஸ்லோகத்தைப் படித்தால் அவர் மிகவும் குழம்பி விடுவார். இப்போது மக்கள் யோகா என்றாலே அது ஒரு உடற்பயிற்சி, உடலை இளைக்கச் செய்வதற்கான ஒரு வழி என நினைக்கிறார்கள்! ஆனால் யோகாவிற்கு அதைவிட ஆழமான பொருள் உண்டு. கிருஷ்ணர் அதைப் பற்றிப் பேசுகிறார்.

யோகம் என்பது உடல், மனம், ஆத்மா இவற்றை
தொடர்ந்து ஒருங்கிணைத்துக்கொண்டே
இருக்கும் ஒரு வழி முறை. இந்த
உண்மையைத்தான் வேறு வேறு ஞானிகள்
வேறு வேறு விதமாகப் பேசுகிறார்கள்.

யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படும் பதஞ்சலி தனது அஷ்டாங்க யோகாவில் இதைப் பற்றிப் பேசுகிறார்.

அஷ்டாங்க யோகம் என்பது யோகாவின் எட்டு பிரிவுகளைக் குறிப்பிடுகிறது. அதில் இரண்டு பிரிவுகள் ப்ரத்யாஹாரம் மற்றும் தாரணை. இந்த இரண்டு பிரிவுகளும் கிருஷ்ணர் குறிப்பிடுகிற ஸத்யங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்கின்றன.

முதலில் நாம் இந்த ஸ்லோகத்தையும் இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ப்ரத்யாஹாரம், மற்றும் தாரணை பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்வோம்.

உடல், மனம், ஆத்மா இந்த மூன்றையும் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் வழிமுறையை நடைமுறைக்கு கொண்டுவருவது எப்படி? நாம் என்ன செய்ய வேண்டும்?

தெரிந்துகொள்ளுங்கள், நமது உடல்-மன அமைப்பு பல்வேறு வெளி உலக விஷயங்களுக்கேற்ப பல்வேறு பிரதிச்செயல் செய்கிறது. இந்த வெளி உலக விஷயங்கள்தான், நமது உடல்-மன அமைப்புக்கு ஆகாரமாக, அதாவது உணவாக இருக்கிறது. நமது புலன்கள்தான் இந்த உணவை நாம் எடுத்துக்கொள்வதற்கான வாயில்கள்.

புரிந்துகொள்ளுங்கள், புலன்கள் வழியாக நாம் கொடுக்கும் விஷயங்கள்தான் நமது மனத்திற்கு ஆகாரமாகிறது. நமது மனம் வெளி உலகில் இருந்து கிடைக்கும் இந்த உணவுகளினால்தான் வேலை செய்கிறது. நாம் சூழ்நிலைகளுக்கேற்ப எதிர்ச்செயல் செய்கிறோம். நமது மனம் தொடர்ந்து இதனால் ஆக்ரமிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள் இருப்பதனால்தான் நமது மனம் இருக்கிறது, இயங்குகிறது. நாம் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துமாறிக்கொண்டே இருக்கிறோம். நமது ஐந்து புலன்கள்தான் இந்த உணவு நம் மனத்திற்குள் செல்வதற்கான வாயில்களாக இருக்கின்றன. ப்ரத்யாஹாரம் என்றால் இந்த ஐம்புலன்களின் பிடியில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே! இதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்கிறோம் என்றால், நாம் உடல் ரீதியாக நம் புலன்களை மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ரத்யாஹாரம் என்பது நமது புலன்களை உடல் ரீதியாக மூடிக் கொள்கிறோம் என்பது இல்லை.

நாம் கண்களை மூடிக் கொண்டாலும் உள்ளே ஒரு டெலிவிஷன் ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? நமது காதுகளையும் வாயையும் மூடிக் கொண்டாலும் உள்ளே அரட்டை நடந்து கொண்டிருக்கிறதல்லவா? நாம் உண்மையில் புலன்களை மூடுவதில்லை. அப்படியே அதை நாம் உடல் ரீதியாக மூடினாலும்கூட நம் மனம் வேலை செய்கிறது.

நான், "உங்கள் புலன்களை மூடிக்கொள்ளுங்கள்," என்று சொல்லும்போது, "உள்ளே இருக்கும் 'எண்ண விவரங்களை' ஆராய்ச்சி செய்து, அவற்றைச் செயல் படுத்தாதீர்கள்," என்ற பொருளில்தான் சொல்கின்றேன்.

நான் சொல்வது என்னவென்றால், வெளியே நடக்கிற விஷயங்களைக் கேளுங்கள். சுற்றிலும் நடப்பதை முகருங்கள். ஆனால் எதற்கும் பிரதிச்செயல் செய்யாதீர்கள். எதுவாகிலும் ஸாக்ஷியா இருந்து கவனியுங்கள், அவ்வளவுதான்.

இந்த வழியில் மட்டும்தான் நாம் நமது புலன்களை மூட முடியும். நாம் எண்ணங்களை அடக்கவோ, உருவாக்கவோ கூடாது. நாம் வெறுமனே அவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

நாம் நமது விழிப்புணர்வை அதிகரிக்கும்போது, புலன்களின் மூலமாக தொடர்ந்து உள்ளே போடப்படும் ஆஹாரத்தை நிறுத்தி விடுகிறோம். விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க எண்ணங்களின் எண்ணிக்கையும் மெது மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும். நமது விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையாகவே நமது (TPS) ஒரு நொடிக்கு வரும் எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

கிருஷ்ணர் இதைத்தான் 'புலன்களை
மூடுவது' என்று குறிப்பிடுகிறார். நாம்
இப்படி செய்யும்போது நமது விழிப்புணர்வு
நிகழ்காலத்தில் ஒருமுகப்படுவது
அதிகரிக்கிறது. நாம் நமது புலன்களை

ப்ரத்யாஹாரம்
என்றால்
இந்த ஐம்புலன்களின்
பிடியில் இருந்து
நம்மை
விடுவித்துக்கொள்வதே!

மூடி, தூய்மையான, முழு விழிப்புணர்வில்
இருக்கும்போது, நமது தெய்வீகத்தில் நாம்
நிலைக்கிறோம்.

நமக்குள்ளே பிரதிபலித்துக்கொண்டிருக்கிற
தெய்வீக தன்மையில் நமது ஒருமைப்பட்ட
மனத்தை நிலைநிறுத்துகிறோம்.
இயற்கையாகவே நிகழ்காலத்தில் நம்
மனம் பொருந்தி விடுகிறது. நமது மூச்சுக்
காற்றைப் பற்றிய விழிப்புணர்வு மேலும்
கூர்மையாகிறது. நமது உடல் - மன
அமைப்பில் வாழ்க்கை சக்தியான பிராணசக்தி
நிறைவதை உணர்கிறோம்.

> நமது விழிப்புணர்வு
> அதிகரிக்க அதிகரிக்க
> நமது (TPS),
> ஒரு நொடிக்கு வரும்
> நமது எண்ணங்களின்
> எண்ணிக்கை குறையும்.

மனம் ஒருமுகப்படுவதையே தாரணை என்று குறிப்பிடுகிறோம். நமது விழிப்புணர்வை அதிகரித்து, நமது புலன்களால் நுகரப்படும் வெளி உலக இன்பங்களைக் குறைக்கும்போது, நமது எண்ண அமைப்பைச் சக்தியூட்டுகிற உயிர்ச்சக்தியின் மீது நம்மால் கவனம் செலுத்த முடிகிறது.

அப்போது நாம் இயற்கையாகவே மனம், உடல், ஆத்மா இவற்றை ஒருமுகப்படுத்துகிறோம். இதைதான் யோகா என்கிறோம்

Feather Icon

## இது வெறுமனே படிப்பதற்கான நுட்பமல்ல

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் இந்த ஸத்யத்தைப்பற்றிப் பேசுகிறார். அவர் இந்த உண்மையைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அர்ஜூனனிடம் இறப்புக்கு முந்தைய அந்தக் கடைசி நினைவின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் அவர் இந்த ஸத்யத்திற்கு எவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுத்தார் என்பதைப் பார்த்தோம்.

புரிந்துகொள்ளுங்கள், இது மிகச் சிறந்த நுட்பம். இது நடைமுறைப் படுத்தாமல் வெறுமனே படிப்பதற்கான நுட்பம் அல்ல. மக்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அழகாக உடலை விட்டுச் சென்றிருக்கிறார்கள்!

புரிந்துகொள்ளுங்கள், இதைப் பயிற்சி செய்து, மிக உயர்ந்த சக்தியான உச்சமான விழிப்புணர்வு சக்தியுடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஞானிகள் கடவுளின் மீது நிலைத்த மனமுடையவர்களாக

Illustration

இருந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து கடவுளை நினைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அசைக்க முடியாத பக்தியைப் பல விதங்களில் சுதந்திரமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஞானிகள் ஆடிப்பாடி கடவுளின் புகழைப் பாடியபோது, மக்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் இந்த ஞானிகளுடைய பக்தியின் சக்தியை, அவர்கள் இந்த உடலை விட்டு அந்தப் பிரபஞ்ச சக்தியோடு கலந்த பிறகுதான் உணர்ந்து கொண்டார்கள்.

யார் தொடர்ந்து யோகத்தின் பாதையில் இருக்கிறார்களோ, சஞ்சலமற்ற நிலையான மனத்துடன் யார் அந்த தெய்வீக சக்தியின் நினைவாகவே இருக்கிறார்களோ அவர்கள் தம்மை வந்து அடைவதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.

கிருஷ்ணர் நம்மை எப்பொழுதும் அதே நிலையில் இருக்குமாறு சொல்கிறார். கிருஷ்ண உணர்விலேயே நம்மை எப்பொழுதும் நிலைத்து இருக்குமாறு சொல்கிறார்.

ஆசையும் பயமும்

Feather illustration

தானாகவே நம்மைவிட்டுச் செல்லும்

பிரச்சினை என்னவென்றால் ஒரு ஞானி, "தொடர்ந்து என்னை நினையுங்கள்," என்று சொல்லும்போது, "அவர் எப்படி அப்படிச் சொல்லலாம்? எவ்வளவு அஹங்காரம் உடையவராக இருக்கிறார்? நாம் எதற்கு அவரை நினைக்க வேண்டும்?" என்று நாம் கேட்கிறோம்.

உண்மையில், நமது அஹங்காரம்தான் இங்கு ஒரு விளையாட்டை விளையாடுகிறது. 'கிருஷ்ண உணர்விலேயே' இருக்கச் சொல்வதன் மூலம், கிருஷ்ணர் நம்மைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறோம்.

நான் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லும்பொழுது, பலபேர் நான் அவர்களை என் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். நான் அவர்களிடமிருந்து லாபமடைவதாக, பலன் அடைவதாக நினைக்கிறார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரோ அல்லது எந்த ஞானியாக இருந்தாலும் நமது உள் உலக ஆசைகளில் இருந்து நாம் விடுபட்டிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

நமது உள் தளம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். நமது எண்ணங்கள் பொதுவாக ஆசையையோ, பயத்தையோ சார்ந்தே இருக்கின்றன. நமது எண்ணங்களெல்லாம் ஆசையையும் பயத்தையும் அடிப்படையாகக்கொண்டு இருப்பதால் நாம் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போகிறோம். இந்த இரண்டினாலும்தான் நமது ஆசைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

கிருஷ்ண
உணர்விலேயே
இருப்பதன் மூலம்
ஆசை, அச்சத்தைக்
கடக்க முடியும்.

நாம் இறக்கும்போது நமது ஆத்மா நமது ஆசைகளை எல்லாம் மீண்டும் அனுபவிக்கிறது. இந்த ஆசைகளின் மேலுள்ள பற்று நமது இறப்பை வேதனை நிறைந்ததாக்குகிறது. ஒரு ஞானி இந்த நிகழ்வைப் பார்த்திருக்கிறார். அதனால் அதைத் தம் அனுபவத்திலிருந்து பேசுகிறார். ‘உடலை விட்டுச் செல்லும் கலை’யின் ரகசியத்தை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அந்தப் பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஞானிகள் விரும்புகிறார்கள்.

thங்களுடைய தூய்மையான கருணையின் காரணத்தால் மட்டுமே அவ்வாறு அவர்கள் விரும்புகிறார்கள்.

கிருஷ்ணர், அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். "நாம் நமது எண்ணங்களை தெய்வீகத்தை நோக்கிச் செலுத்தும்போது, நமது ஆசைகளும், பயமும் துடைக்கப்பட்டு விடுகின்றன. நமது மொத்த இருப்புத் தன்மையும் அந்தத் தெய்வீக சக்தியின் மீதான நன்றியுணர்வால் நிறைகிறது.

இன்னொன்றும் இருக்கிறது. பலர் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசையால் கடவுளை நினைக்கிறார்கள். சிலர் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள், அதனால் கடவுளை நினைக்கிறார்கள். இரண்டுமே ஆசையாலும் பயத்தாலும் நிகழ்வதுதான்.

நாம் கடவுளை நினைப்பதுகூட, நன்றியுணர்வால் மலர்ந்த செயலாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஆசையாலோ, பயத்தாலோ இருக்கக் கூடாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆசையோ, பயமோ கடவுளை அடைய உதவாது. நாம் கடவுளை நினைப்பதும், அவர் மீது பக்திகொள்வதும் பிரபஞ்ச சக்தியின் மீதான நன்றியுணர்வினாலேயே இருக்க வேண்டும்.

கேள்வி: ஸ்வாமி, பாவம் என்று ஏதாவது உள்ளதா? பாவ புண்ணியங்கள் என்றால் என்ன? நல்லது கெட்டது என்றால் என்ன?

உரை பெட்டி

இதை நான் முன்பே விளக்கியுள்ளேன். மறுபடியும் விளக்குகிறேன்.

பாவம் என்ற கருத்தே சமுதாயத்தால், உங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்ள வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். தவறான எதையாவது செய்தால் நீங்கள் பாவம் செய்தவர்களாகிறீர்கள். அதனால்தான், நரகத்திற்குப் போகிறீர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. சமுதாயம்தான் இது போன்ற சட்டதிட்டங்களை உங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கி வைத்துள்ளது.

இவற்றுக்கு நன்னடத்தை விதிகள் என்று பெயர். இந்த நன்னடத்தை விதிகளை யாராவது உடைத்தால், அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். சமுதாயம்தான் பாவம் என்ற கருத்தை உருவாக்கி, உங்களை பயமுறுத்தி வைத்துள்ளது. அப்போதுதான் அது எல்லோரையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

எதுவரை நாம் குற்ற உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமோ, எதுவரை நாம் பயத்தாலும் ஆசையாலும் உந்தப்படுகிறோமோ, அதுவரைநாம் பாவம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நான் இன்னும் ஒன்றை தெளிவாக ச் சொல்லி விடுகிறேன், நாம் பாவிகளாக இருப்பதற்குச் சமுதாயம்

விதிக்கிற எந்தக் கட்டுப்பாட்டையும் மீற
வேண்டியதில்லை. நாம் எந்த நன்னடத்தை
விதியையும் உடைக்கத் தேவையில்லை.

எதுவரை நாம் சமுதாயத்தின்
கட்டுறுவாக்கத்தின்படி நடக்கிறோமோ,
எதுவரைநாம்பயத்தினாலும், ஆசையினாலுமே
செயல்களைச் செய்கிறோமோ
அதுவரை நாம் பாவங்களை மட்டுமே
செய்பவர்களாக இருக்கிறோம்.

நன்னடத்தை என்பது விழிப்புணர்வு நிலையிலிருந்து வர வேண்டும், மனஸாக்ஷியிலிருந்து இல்லை. நமது விழிப்புணர்வு நிலை மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது நாம் எந்தத் தவறும் செய்ய மாட்டோம். ஏனென்றால் நமது உள் தளம் தூய்மையாக இருக்கும். ஆனால் மன ஸாக்ஷிக்காகச் செயல்களைச் செய்யும்போது சமுதாயத்தின் கட்டுறு மனப்பாங்கின்படி செயல்படுகிறோம்.

நாம் சில செயல்களைச் செய்கிறோம். ஏனென்றால் சமுதாய ரீதியாக பார்க்கும்போது, அது சரியான செயல்தான் என்று நாம் நினைக்கிறோம். சமுதாயத்தின் கணக்குப்படி எது சரியோ அதையே நாம் செய்கிறோம். ஏனென்றால் சமுதாயத்தின் அளவுகோலின்படிதான் நாம் ஒரு விஷயத்தைச் சிறந்ததென்று நினைக்கிறோம்.

சமுதாயத்தின் மேலுள்ள பயத்தினாலேயே நாம் செயல்படுகிறோம். மற்றவர்களின் கவனத்தை நம்மீது ஈர்ப்பதற்காகவே நாம் செயல்படுகிறோம். நாம் இப்படிச் செய்யும்போதுதே நாம் பாவம் செய்தவர்களாகி விடுகிறோம். அதனால் நாம் ஏற்கெனவே நரகத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறோம்.

நாம் பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தைப் பற்றிப் பேசும்போது யம என்பது பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். யம என்பது பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் ஒரு பகுதியாகும். அது ஸத்யம், அஹிம்ஸா, ப்ரஹ்மசர்யம், அஸ்தேயம், அபரிக்ரஹம் போன்ற ஐந்து குணங்களின் அடிப்படையில் அமைந்த சுய ஒழுக்க கோட்பாடுகளையே குறிப்பிடுகிறது.

பயத்தின் அல்லது ஆசையின் அடிப்படையில் அமைகிற ஸத்யம்கூட ஒரு நடத்தை விதியாகவே மாறி விடுவதால், அது நிலைப்பதில்லை. ஸத்யம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், அது நமது உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வர வேண்டும்.

நாம் நம்மை உணரும்போது, நமது விழிப்புணர்வு நிலை உயர்வாக இருக்கும்போது நம்மால் தவறாக எதுவும் செய்யவோ, சொல்லவோ முடியாது. நாம் எப்போதும் ஸத்யத்திலேயே இருப்போம்.

யம என்பது அஹிம்ஸையையும் உள்ளடக்கியது. இதுவும் நம்முடைய விழிப்புணர்வு நிலையிலிருந்து வரவேண்டுமே ஒழிய சமுதாயத்திற்காகவோ, நன்னடத்தைக்காகவோ வர வேண்டிய ஒன்றல்ல.

யாராவது, மக்களுக்கு எதிராக எதையாவது செய்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களைச் 'சமுதாய ரீதியாகப் பொறுப்பற்றவர்கள்' என்று குறை சொல்கிறார்கள். ஆனால் பேசுகிற மக்கள் அது போன்ற சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தால் அல்லது அது போன்ற சூழ்நிலையில் வாழ நேர்ந்தால், அவர்களும் அதே போன்ற வன்முறை செயல்களைத்தான் செய்வார்கள்.

நம் அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு நிலையில் இருந்து அஹிம்ஸா வெளிப்படும்பொழுது அது முற்றிலும் வேறு விதமாகவே இருக்கும். அப்படி நடந்ததென்றால் நாம் அஹிம்ஸாவாதிகள்தான் என்று யாரிடமும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அஹிம்ஸாவாதிகளாக இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியதும் இல்லை. நமது உள் உலகம் தூய்மையாக இருப்பதால் அது இயற்கையாகவே நடக்கிறது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

என்னுடைய பரிவ்ராஜக நாட்களில் ஒரு
நாள், நான் ஒரு காட்டில் நடந்து சென்று
கொண்டிருந்தேன். அப்போது நான்
அமர்ந்து த்யானம் செய்வதற்காக ஒரு இடம்
தேடினேன். சிறிது நேரம் தேடிய பிறகு ஒரு
சிறிய குகையைப் பார்த்தேன். உடனே அதில்
அமர்ந்து த்யானம் செய்ய ஆரம்பித்தேன்.

அது ஒரு அடர்ந்த காடு என்பதால் பெரும்பாலும் யாருமே அதன் வழியாக

அஹிம்ஸா நம் விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படும்பொழுது, அது முற்றிலும் வேறு விதமாகவே இருக்கும்.

வரமாட்டார்கள். நான் சற்று நேரம் தியானம் செய்து கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது. ஆனால் கண்திறந்தபோது ஒரு நீண்ட விஷமுள்ள நாகம் என்னருகில் படுத்திருந்ததைப் பார்த்தேன்.

என் அருகில் அமைதியாக அது படுத்திருப்பதைப் பார்த்தேன்; அது நகரவில்லை. பாம்பு என் அருகில் படுத்திருக்கிறது என்ற எண்ணம் என்னுள் எழாததால், நான் எந்தவித எதிர்ச்செயலும் செய்யவில்லை. பாம்பும் ஒரு மனிதனின் அருகில் படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல், எந்தவித எதிர்ச்செயலும் செய்யாமல் படுத்திருந்தது.

> நமது உள் உலகம் தூய்மையாக இருந்தால், இயற்கையாகவே நாம் அஹிம்ஸாவாதிகளாக மாறி விடுகிறோம்.

மெதுவாக சில கணங்களுக்குப் பிறகு என் மனத்தில் பயம் ஏற்பட்டது. என் மனத்தில் பயம் ஏற்பட்டவுடனே பாம்பினிடத்திலும் மாற்றம் நிகழ்ந்ததைத் தெளிவாகப் பார்த்தேன். அதற்கும் பய உணர்வு எழுந்தது. தன் தலையைத் தூக்க ஆரம்பித்தது.

என்ன நடந்தது பார்த்தீர்களா? நான் தியானத்தில் இருந்தபோது பயம் ஏற்படவில்லை. எனது உள் உலகம் முழுவதும் காலியாக இருந்தது. அதனால் என்னால் தனக்க ஆபத்து ஏற்படும் என்ற உணர்வு பாம்பிற்கு ஏற்படவில்லை. நான் எனக்குள் ஆழ்ந்திருந்ததால், பாம்பினாலும் என் பக்கத்தில் அமைதியாகப் படுத்திருக்க முடிந்தது. என்னால் அதற்கு ஆபத்தில்லை என்று பாம்பிற்குத் தெரிந்திருந்தது. என்னுடைய மனம், என்னுடைய உள் உலகத்தில் பயத்தை உருவாக்காதவரை பாம்பு அமைதியாகக் கிடந்தது.

ஆனால் நான் கண்களைத் திறந்த சில நிமிடங்களில் பயம் எனக்குள் அதிகரித்தது. பாம்பும் அதை அறிந்து கொண்டது. என்னால் அதற்கு ஆபத்து வரக்கூடும் என்று உணர்ந்தது. நான் அதைத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். அதனால் நான் அதே தியான நிலையில் அமைதியுடன் எழுந்து, அங்கிருந்து நடந்து சென்று விட்டேன்.

புரிந்துகொள்ளுங்கள், உங்கள் விழிப்புணர்வு நிலை அதிகரிக்கும்பொழுது, அஹிம்ஸா உங்களுக்குள் நிகழ்கிறது. நீங்கள் அந்த அஹிம்ஸா உணர்வை உங்களைச் சுற்றிப் பரவ விடுகிறீர்கள். நீங்கள் அதற்கென்று ஒரு தனி முயற்சி எடுக்கத் தேவையே இல்லை. அது தானாகவே நிகழ்ந்துவிடும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பாவம், புண்ணியம் என்ற எண்ணங்கள் சமுதாயத்தால் உங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. நல்ல செயல்கள் என்பது விழிப்புணர்வு நிலையில் இருந்து நடக்கட்டும்; மனஸாக்ஷியினால் இல்லை. அதனால் நீங்கள் விழிப்புணர்வு நிலையை உயர்த்துங்கள். புண்ணியம், நன்மை இவை உங்களுக்குள் இயற்கையாக நடைபெறும்.

Illustration of hands playing a flute
Lord Krishna