நம் மனத்தின் நான்கு நிலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
முதல் நிலை :
எண்ணங்கள் உள்ள நிலையுடன் 'நான்' என்ற விழிப்புணர்வும் சேர்ந்து இருக்கிற, இப்போது நாம் இருக்கிற இந்த நிலையைத்தான் ஜாக்ரத் என்கிறோம். (நம்மில் சிலர் , எல்லோரும் அல்ல, இப்போது கனவு நிலையிலோ அல்லது ஆழ்ந்த உறக்க நிலையிலோதான் இருக்கிறார்கள்!)
இரண்டாம் நிலை - எண்ணங்கள் இருக்கும்; ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. இதைத்தான் 'கனவு நிலை' - ஸ்வப்னா என்கிறோம்.
'“எண்ணங்கள் இருக்கின்றன, ஆனால் நான் என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை; இது எப்படி?" என்று நீங்கள் கேட்கலாம். கனவு நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வின் அலைவரிசையைவிட, எண்ணவோட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நாம் விழித்திருக்கும்போது 'நான்' என்ற விழிப்புணர்வு அதிகம். அதனால்தான், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. நாம் அவற்றை அடக்க முடியும் மாற்ற முடியும் உருவாக்க முடியும்.
நாம் எதை விரும்புகிறோமோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் 'நான்' என்ற விழிப்புணர்வின் அலைவரிசை, எண்ணங்களின் அலைவரிசையைவிட அதிகமாக இருக்கிறது. கனவு நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வைவிட எண்ண ஓட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
nம்மால் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் எப்படிப்பட்ட கனவுகளைத் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கே தெரியும். கனவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மால் கனவுகளின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது.
விழிப்புணர்வின் அலைவரிசையைவிட எண்ண அலைவரிசையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், நாம் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்கள் இருக்கும் ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. நமது இருப்புத் தன்மையில் 'நான்' என்ற விழிப்புணர்வு அற்ற ஆனால் எண்ண ஓட்டங்கள் மட்டுமே இருக்கிற நிலையைத்தான் 'கனவு நிலை' என்கிறோம்.
அடுத்த நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வும் இருக்காது. எண்ண ஓட்டமும் இருக்காது. இதுதான் ஆழ்ந்த உறக்க நிலை. இதை ஸ்ஷுப்தி நிலை என்று அழைக்கிறோம். மூன்று நிலைகள் - அதாவது ஜாக்ரத், ஸ்வப்ன, ஸ்ஷுப்தி நிலைகளை விழிப்புணர்வு நிலை, உள் மன நிலை (ஒருவர் உணராமலேயே ஏற்படும் மனத்தின் செயல்கள்), விழிப்புணர்வற் நில என்கிறோம்.
உயிருடன்
இருக்கும்போது
ஒரே ஒருமுறை
ஸமாதிநிலையை
உணர்ந்தாலே போதும்,
உடலைவிடும் போதும்
ஸமாதிநிலையில்தான்
உடலை விடுவீர்கள்.
நான்காவது ஒருநிலை உள்ளது. இதை நாம் வாழ்வில் அனுபவித்ததே இல்லை.
அந்த நிலையில் எண்ண ஓட்டம் இருக்காது. ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கும் தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டும் இருக்கும்.
முழுமையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டுமே இருக்கிற இந்த நிலையைத்தான் ஸமாதி, எண்ணங்களற்ற உணர்வு நிலை துரீய அவஸ்த, ஆத்ம ஜ்ஞானம், ப்ரஹ்ம ஜ்ஞானம், தன்னை உணர்தல், நிர்வாணம், ஆத்ம அநுபூதி, தெய்வீக நிலை, நித்யானந்தம், முடிவில்லா ஆனந்தம் என்று குறிப்பிடுகிறோம்.
துரீய நிலையே நாம் அடைய வேண்டிய நிலை
> நாம்
> துரீய நிலையில்
> இருக்கும்போது
> ஸ்தூல சரீரம்,
> ஸூக்ஷ்ம சரீரம்,
> காரண சரீரம்
> எதுவும் நம்மைத்
> தீண்டாது.
எல்லா மேற்கண்ட சொற்களும் எண்ணங்கள் அற்ற ஆனால் முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் தன்மையைத்தான் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் நாம் உடல், மனம் அற்ற தன்மையில் உள்ளோம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று நிலைகளிலும் நாம் மனம், உடலுடன்கூடிய நிலையில் உள்ளோம்.
ஜாக்ரத் நிலையில், நாம் நமக்கு இப்பொழுது இருக்கும் இந்த ஸ்தூல சரீரத்தோடு அதாவது திட உடலில் வாழ்கிறோம். கனவு நிலையில் ஸூக்ஷ்ம சரீரத்தில் அதாவது நுட்பமான உடலில் வாழ்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கனவு நிலையிலும் நாம் ஒரு உடலை எடுத்துகொள்கிறோம். அதாவது அப்பொழுது ஸூக்ஷ்ம சரீரத்தில் வாழ்கிறோம். அதனால்தான், கனவுகளில்கூட நாம் பயணம் செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உறங்குகிறோம். ஆனால் உடனே நாம் இந்தியாவில் இருப்பதாக கனவு காண்கிறோம். அப்படியென்றால், நாம் ஸூக்ஷ்ம சரீரத்தின் மூலமாகப் பயணம் செய்கிறோம் என்பது தெளிவாகிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைகிறோம்.
துரீய நிலையில் நாம் எல்லையற்ற நிலையை, உடலற்ற நிலையை அடைகிறோம். அங்குதான் நாம் முழுமையான, தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு நிலையில் இருக்கிறோம். இங்கு 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் எண்ணங்கள் இல்லை.
விவேகானந்தர் சொல்கிறார். "உயிருடன் இருக்கும்போது ஒரே ஒருமுறை அந்த விழிப்புணர்வு நிலையின் ஒரு துளியை நீங்கள் உணர்ந்தாலே போதும், நீங்கள் உடலைவிடும்போது தன்னிச்சையாகவே அந்த அனுபவம் மீண்டும் ஏற்படும். நீங்கள் ஸமாதி நிலையில்தான் உங்கள் உடலை விட்டுச் செல்வீர்கள்.''
எல்லா ஆன்மீக வழி முறைகளும் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ மனம், உடல் என்ற இந்த உணர்வு நிலைகளைத் தாண்டி 'நான்' என்ற முழு விழிப்புணர்வு நிலையை அடைவதைப் பற்றித்தான் சொல்கின்றன.
அதனால்தான், கிருஷ்ணர், "ஒரே ஒரு கணம்
நாம் அந்த விழிப்புணர்வை அனுபவித்தாலும்
போதும், அடுத்த பிறவியைத் தளர்வாகத்
தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,'' என்று
சொல்கிறார்.
வாழும்போது ஒருமுறையாவது நாம் உடல்மனம் தாண்டிய, உடல்-மனம் இல்லாதது இருக்கிற நிலையை அனுபவிக்கவில்லை, என்றால் உடலைவிடும்போது நம்மால் அந்த நிலையை அடைய முடியாது. அதுமட்டுமல்ல, நம்மால் உடலையும் மனத்தையும் விட்டு விட்டுச் சும்மா இருக்க முடியாது. அதனால்தான், நாம் இறந்த உடனேயே வேறொரு உடலைப் பற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.
ஏனென்றால் ஒரு கணம்கூட உடலும், மனமும் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. எந்த மாதிரி உடலில் நுழைகிறோம் என்றுகூட யோசிக்க மாட்டோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஏதோ ஒரு உடலில் நுழைய முயற்சி செய்வோம். இது எதுபோல என்றால், நாம் ரயில் நிலையத்திற்குத் தாமதமாகப் போகிறோம். அதனால் நாம் எந்த ரயிலை முதலில் பார்க்கிறோமோ அதில் வேகமாக ஓடிப்போய் ஏறி உட்கார்ந்துகொள்வது போன்றதுதான். அந்த இரயில் எங்கே போகிறது என்றுகூட யோசிக்க மாட்டோம்.
"ஏதோ ஒரு இரயிலில் ஏறிக்கொள்வோம்," என்றுதான் சொல்வோம்.
அதேபோல்தான், நாம் உடலை விட்ட
பிறகும் கிடைக்கிற ஏதோ ஒரு உடலில்
வேகமாகச் சென்று ஏறிக்கொண்டு மீண்டும்
ஒருமுறை பூமிக்கு வருவோம்.
கீழே வந்தவுடன் மீண்டும், இந்த உடலை
எடுத்தற்கான உயர்ந்த நோக்கத்தை
மறந்து விடுகிறோம். இதுதான்
மிகப்பெரிய பிரச்சினை. மொத்த நிகழ்வும்
குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு என்று
போய்க்கொண்டே இருக்கிறது.
> உங்களது
> சூழ்நிலையும்,
> குடும்பமும் உங்களைத்
> தடை செய்யாமல்,
> உதவி செய்தால்
> புரிந்துகொள்ளுங்கள்
> விழிப்புணர்வுடன்கூடிய
> ஒரு பிறவியைத்தான்
> நீங்கள்
> எடுத்துள்ளீர்கள்.
ஒரே ஒரு கணம் அமைதியான, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தால்கூட, உடலைவிடும் போதும் இயல்பாகவே நாம் அதே நிலையில்தான் இருப்போம். இந்த நிலையை ‘உடலற்ற’ விழிப்புணர்வு நிலை என்றும் சொல்கிறோம். ஏனென்றால் நாம் துரிய நிலையில் இருக்கும்போது ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் எதுவும் நம்மைத் தீண்டாது.
ஸந்யாஸ வாழ்க்கைக்குத் தடை சொல்லாத பெற்றோர்கூட உங்கள் தேர்வுதான்!
இந்த விழிப்புணர்வு நிலையை, நாம் மூன்று உடல்களையும் கடந்த நிலையில்தான் உணர்கிறோம். முன்பே இந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் ஒரு கணம் உணர்ந்திருந்தால்கூட போதும், மரண சமயத்தில் நமக்குத் தேவையான தெளிவு பிறந்துவிடும்.
உடலும், மனமும் கடந்த நிலையை நாம் ஒருமுறையேனும் அனுபவித்திருந்தால், நாம் அடுத்த உடலை எடுப்பதற்கு முன்பாக, நமது புள்ளி விவரங்கள் அடங்கிய ஃபைல்களை நிதானமாகப் புரட்டிப் பார்க்கிற பொறுமை நமக்கு இருக்கும். முழுமையாக ஃபைல்களை ஆராய்ந்து பார்த்து, ‘அடுத்த உடலை எடுக்க வேண்டுமா? அது அவசியம்தானா?’ என்றெல்லாம் யோசித்துப் பார்த்துதான் முடிவெடுப்போம்.
ஒருவேளை நாம் பிறவியெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தால்கூட, நம்மால் விழிப்புணர்வுடன் உடலை எடுக்க முடியும், ஞானிகளைப்போல! கிருஷ்ணர் இதை யோக ப்ரஷ்ட என்று சொல்கிறார். நமது ஆன்மீக வளர்ச்சி க்குத் தடை சொல்லாத, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு சில ஆத்மாக்கள்தான் இது போன்ற முடிவை எடுத்து, தம் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடைசொல்லாத குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்.
தங்கள் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத குடும்பங்களை வெகு அரிதாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் குடும்பத்தில் உங்களுக்குத் தடை சொல்லாவிட்டால், உங்களைத் தொந்தரவு செய்யாவிட்டால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்கூட ஒரு யோக ப்ரஷ்டதான்.
தங்கள் மகன் ஸந்யாஸ வாழ்க்கையில் நுழைய விரும்பும்போது தடை செய்கிற பெற்றோர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள்கூட, "கோயிலுக்கு போ! ஆனால் ஆச்ரமத்திற்குப் போகாதே!" என்று தடை சொல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கோயில்களுக்குப் போகும்வரை விஷயங்கள் நன்றாகவே, இனிமையாகவே சென்று கொண்டிருக்கும். ஏனென்றால் பெற்றோர்கள் எந்தப் பக்குவ நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலைவரை சென்றால் சரிதான். ஆனால் பெற்றோர்களின் பக்குவத்தைத் தாண்டிப் போனால் அவர்களால் ஏனோ அதை எந்த வகையிலும் ஜீரணிக்க முடிவதில்லை. மிக அரிதாக சில ஆத்மாக்கள்தான், தங்கள் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடை செய்யாத குடும்பத்தில் பிறக்கிறார்கள்.
நான் பரிவ்ராஜகத்துக்குப் புறப்படும்போது மிகவும் இளைய வயது; பதினேழே வயதுதான். என் தாயிடம் நான் வீட்டை விட்டுப் போக விரும்புவதாகவும் பரிவ்ராஜக வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் ஸந்யாஸ வாழ்க்கையில் நுழைய விரும்புவதாகவும் சொன்னேன்.
உடனே அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
அதனால் நான், "என்னைப் போக வேண்டாம்
என்று சொல்கிறீர்களா? நான் போகக் கூடாது
என்பதற்காகத்தான் அழுகிறீர்களா?" என்று
கேட்டேன்.
அவர் அழகாகச் சொன்னார், "இல்லை! நான் உன்னைத் தடுக்க விரும்பவில்லை.
> நம்மாலும்கூட
> ஞானிகளைப்போல
> விழிப்புணர்வுடன்
> உடலை
> எடுக்கமுடியும்,
> உடலைவிரும்பும்போது
> தெளிவுடன் இருந்தால்!
ஆனால் நீ போவதை என்னால்
ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான்,
அழுகிறேன்,” என்றார். இப்போதுகூட
என் பெற்றோருக்கு நன்றியுடையவனாக
இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள்
என்னைத் தடுக்கவில்லை என்னைத்
தடுக்காததால் மட்டுமல்ல, சிறு
வயதிலேயே நீங்கள் நினைத்துக்கூட
பார்க்கா முடியாததையெல்லாம் நான்
செய்திருக்கிறேன்.
வெளி உலகைப்
புரிந்துகொள்ள
நம் மனம்
மட்டுமே போதும்;
ஆனால்
உள் உலகில்
ஒன்றை அனுபவிக்க
குருவின் உதவி தேவை.
கிராமத்துக்கு வெளியே சுடுகாட்டில் அமர்ந்துகொண்டு இரவு நேரங்களில் த்யானம் செய்திருக்கிறேன். வேறு யாராவதாக இருந்தால் சகித்திருப்பார்களா? மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால்

எப்படியோ எனது ஆன்மீக சாதனையைத்
தொடர்ந்து செய்ய முடிந்தது.
அதுபோலத்தான் சூழ்நிலை இருந்தது.
உங்களது சூழ்நிலையும் குடும்பமும் உங்களைத் தடை செய்யாமல் உதவி செய்தால் புரிந்துகொள்ளுங்கள், விழிப்புணர்வுடன்கூடிய ஒரு பிறவியை நீங்கள் எடுத்துள்ளீர்கள். நீங்களும்கூட ஒரு யோக ப்ரஷ்டதான்.
மரண சமயத்திலும் நீங்கள் தெளிவாக இருக்க முடியும்
நீங்கள் வாழும் போதே அந்த விழிப்புணர்வு நிலையை ஒருமுறைகூட அனுபவிக்க வில்லை என்றால், மரண சமயத்தில் உடலும், மனமும் அற்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. உடலும், மனமும் இல்லாமல் உங்களால் வாழவே முடியாது. அதனால் மூன்று க்ஷணங்களுக்குள் நீங்கள் எப்படியோ ஒரு உடலை எடுத்து விடுவீர்கள்.
விழிப்புணர்வின் கணநேரத் தோற்றம், ஒரு கண நேரம் தன்னை உணர்ந்த அனுபவம், கணநேர எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை - அதை நீங்கள் உடலோடும், மனதோடும் இருக்கும் போதே அனுபவித்து விட்டாலே போதும். நித்யானந்த ஸ்பூரண த்யான முகாம், இந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் இருக்கிறது. நான் செய்ய முயற்சி செய்தெல்லாம், ‘எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வை ஒருமுறையேனும் உங்களை உணரச் செய்வதுதான்’.
ஒரே ஒருமுறை நீங்கள் எண்ணங்களற்ற அந்த விழிப்புணர்வு நிலையை அடைந்திருந்தாலே போதும், உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டீர்கள். அந்த ஸமாதி நிலையை, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் வேறு எதை அடைந்தாலும் பயனில்லை.
அடுத்த படியில் கிருஷ்ணர் அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை எவ்வாறு அடைவது என்பதைப் பற்றியும் இறப்பு மற்றும் உடலை விட்டுச் செல்லும் கலையைப் பற்றியும் ஆழமாக விவரிக்கிறார். அடுத்த ஸ்லோகத்தில் அதைப் பற்றி விரிவாகப்பார்ச்சலாம்.
கேள்வி: ஸ்வாமிஜி, “நித்யானந்த ஸ்பூரணபயிற்சி முகாம் (NSP) அல்லது LBP-II-உங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது என்று சொன்னீர்கள், அதை மேலும் விளக்க முடியுமா?
சரி! நான் ஏன் இந்த நித்யானந்த ஸ்பூரண பயிற்சி முகாமை NSP ஆரம்பித்தேன் அல்லது எப்படி இந்த முகாம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது என்பதைச் சொல்கிறேன்.
ஆரம்பிக்கும் முன்பு, ‘நான் சொல்லப் போவதெல்லாம் ஸத்யங்களே என்ற உறுதி மொழியை எடுக்கிறேன்.
“எதற்காக இப்படி ஒரு உறுதிமொழியை எடுக்கிறீர்கள் ஸ்வாமிஜி?” என்று நீங்கள் கேட்கலாம்.
ஒரு முக்கியமான விஷயத்தைப்
புரிந்துகொள்ளுங்கள், ஒரு உண்மையைச்
சொல்கிறேன். பொதுவாக, நாம் யாருடைய
வார்த்தைகளையும் நம்புவதில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பொதுவாகவே நாம், மற்றவர்கள்
> ஸமாதி நிலையை
> ஒருமுறையேனும்
> அனுபவித்துப்
> பார்க்கவில்லை என்றால்,
> நீங்கள்
> வேறு
> எதை அடைந்தாலும்
> பயனில்லை.
உண்மையைப் பேசுவார்கள் என்று நம்புவதில்லை.
உங்கள் மனத்தை நன்றாக ஆராய்ந்து
பாருங்கள். அப்பொழுது ஒரு உண்மையைப்
புரிந்துகொள்வீர்கள். உண்மையில் நாம்
யார் என்ன சொன்னாலும் நம்புவதில்லை.
நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு
விஷயத்தைப் பற்றிச் சொல்லும்போது
மட்டுமே, அதை உண்மை என்று
நம்புகிறோம்.
பொதுவாக,
நாம் யாருடைய
வார்த்தைகளையும்
நம்புவதில்லை.
நமக்கு ஏற்கனவே
தெரிந்த ஒரு
விஷயத்தைப் பற்றிச்
சொல்லும்போது மட்டுமே,
அதை உண்மை என்று
நம்புகிறோம்.
ஒருவர் நமக்குத் தெரியாத விஷயத்தைச் சொன்னால் நாம் நம்புவதில்லை. ஒன்று கேள்வி கேட்கிறோம் அல்லது கேள்வி கேட்கிற சூழ்நிலையில் இல்லை என்றால், மரியாதைக்காக, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் ஒருபோதும் அதை நம்புவதில்லை. அவரது சொற்களை நாம் உள் வாங்கிக்கொள்வதில்லை.
ஞானியின் வார்த்தைகள் உங்களுக்கள் ஊடுருவ அனுமதியுங்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எதிர்க்கிற சக்தியும் தகுதியும் இருந்தால் எதிர்ப்போம். எதிர்க்க முடியாத நிலையில் இருந்தால் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் நமக்குள் ஊடுருவ, நமக்குள் நுழைய நாம் அனுமதிப்பதில்லை.
அதனால்தான், 'நான் சொல்கிற வார்த்தைகள் அனைத்தும் ஸத்யம்,' என்ற உறுதிமொழியை இப்போது உங்கள் முன் எடுக்கிறேன். வெளி உலகைப் புரிந்துகொள்ள நம் மனம் மட்டுமே போதும்; நமது தர்க்க அறிவேபோதுமானது. ஆனால் உள் உலகில் ஒன்றை அனுபவிக்க குருவின் உதவி தேவை.
நாம் வெளிஉலகில் பெற்ற ஒரு அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதற்கான ஸூத்ரத்தைத் தருபவர் விஞ்ஞானி. உதாரணமாக நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைப் பற்றிய விதியைத் தந்தார். ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தபோது அவருக்கு ஒரு உண்மை புரிந்தது. அதை மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு விதியை உருவாக்கினார். வெளி உலக உண்மையை அனுபவித்துப் புரிந்துகொண்டு, மீண்டும் அதே அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய ஸூத்ரத்தைத் தருபவரை விஞ்ஞானி என்று சொல்கிறோம்.
அதேபோல் உள் உலக ஸத்யத்தை அனுபவித்துப் புரிந்துகொண்டு, அதே அனுபவத்தை மற்றவர்களும் புரிந்துகொண்டு, அனுபவிக்கும் வகையில் ஸூத்ரமாக வகுத்துத் தருபவர் 'மெய்ஞானி'. அதாவது அதே அனுபவத்தை மீண்டும் மற்றவர்களுக்குள்ளும் ஏற்படுத்தக்கூடிய ஸூத்ரத்தைத் தருபவர் 'மெய்ஞானி.'
அதை உள் உலகிலும் அனுபவமாகப் பெற உதவுபவர் குரு.
இந்தத் தியான முகாம் முழுவதுமே, எனக்குள் நிகழ்ந்த அனுபவத்தை, உங்களுக்கும் கொடுப்பதற்கான ஸூத்ரம்தான். அதனால் எனக்கு என்ன அனுபவம் நிகழ்ந்தது என்பதையும் இந்த ஸூத்ரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நியூட்டனிடம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை அவர் எவ்வாறு கண்டறிந்தார் என்று யாராவது கேட்டால், அவர் தமக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சொல்ல ஆரம்பிக்கும்போது, முதலில் அவர் ஆராய்ச்சியை எப்படி ஆரம்பித்தார் என்பதைச் சொல்லியே ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
ஆப்பிள் விழுவதை எப்படிப் பார்த்தார்? அப்பொழுது அவருக்குள் என்ன நிகழ்ந்தது? எப்படித் தர்க்க ரீதியாக, படிப்படியாக அந்த முடிவுக்கு வந்தார் என்பதையெல்லாம் விளக்கத்தான் வேண்டும்.
இப்போது நானும் அதேபோல், எனக்குள்
இந்த அனுபவம் எப்படி நிகழ்ந்தது,
இந்த ஸூத்ரம் எப்படி அதே அனுபவத்தை
உங்களுக்குள்ளும் நிகழ்த்த முடியும் என்று
விளக்குகிறேன்.
இரண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், எப்படி இந்த அனுபவம் எனக்கு நேர்ந்தது என்பதையும் இரண்டாவது, அதே அனுபவத்தை எப்படி உங்களுக்குள் நிகழ்த்த முடியும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
> பிறப்பு, இறப்பு என்ற
> சூழலிலிருந்து
> விடுபடுவதற்கு
> ஒரே வழி பற்றற்ற
> நிலைதான்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம்மால் இந்த ஸூத்ரத்தின் அடிப்படையில் வேலை செய்ய முடியாது.
நான் ஞானமடைவதற்கு முன்பு வாரணாசி என்ற புனிதத் தலத்தில் இருந் தேன். அங்கே ஒரு மூத்த ஸந்யாஸியைச் சந்தித்தேன். வயதானவர். அவர் கேன்சர் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். எப்படியோ அவரைக் கவனித்துக்கொள்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் மிகப்பெரிய ஸந்யாஸி. ஆனால் ஞானமடைந்தவர் இல்லை. மிகப்பெரிய தபஸ்வி; ஞானமடையவில்லை என்றாலும் பெரிய தபஸ்வி. அவரது கடைசி நாட்களில் அவரைப் பார்த்துக்கொள்கிற பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவர் மருத்துவ மனையில் இருந்தபொழுது தினமும் அவருக்கு உணவுகொண்டு போய்க் கொடுத்தும், அவரது தேவைகளைக் கவனித்துக்கொண்டடும் இருந்தேன்.
ஒரு நாள் அவரது படுக்கைக்கு அருகே இருந்த ஒருவர் மெல்ல இறந்து கொண்டிருந்தார்; மெல்ல மரணமடைந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு தங்களால் முடிந்ததைச் செய்து அவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது நான் ஞானமடையவில்லை.
ஆனாலும் எனக்கு மிக அருமையானதொரு ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது.
மரணம் - அது அழகானதொரு அனுபவம்
எனக்குள் நிகழ்ந்த அனுபவம் உங்களுக்குள்ளும் நிகழ்வதற்கான ஸூத்ரம்தான் நித்யானந்த ஸ்புரண த்யான முகாம்.
இதற்குமுன்பு எனக்கு ஏற்பட்ட என்னுடைய சொந்த மரண அனுபவம்; அது மிகவும் அழகான அனுபவம்.
அதே நகரத்தில் அந்த அழகான ஆன்மீக அனுபவம் எனக்கு முன்பு ஏற்பட்டிருந்தது. நான் அப்போது வாரணாசியில் மணிகார்னிகா காட்டில் இருந்தேன். அங்கேதான் இறந்த உடல்களைத் தகனம் செய்வார்கள். அங்கேதான் எனது உடல் இறப்பதையும்
எனது ஆத்மா உடலையும் மனத்தையும்
தாண்டிச் செல்கிற அனுபவத்தையும் நான்
பெற்றிருந்தேன்.
அந்த அனுபவத்தின் காரணமாக அந்த
மனிதருக்கு என்ன நடக்கிறது என்பதை
என்னால் பார்க்க முடிந்தது. மெதுவாக
அவருக்குள் மரணம் நிகழ்ந்தபோது அவர்
துன்பப்பட்டார்; போராடினார்.
மனித அறிவுக்கு
எட்டாத மிகப்பெரிய
அசாத்தியமான சக்தி
நமக்கு இருந்தும்,
பிறருக்கு
உதவி செய்ய முடியாத
நிலை இருந்தால்
நாம் பிரச்சனைகளுள்
சிக்கிக்கொள்வோம்.
முதலில், உடலில் ஏற்பட்ட அளவு கடந்த வலியால் துக்கப்பட்டார். அவரது முகத்தில் வேதனை தெரிய ஆரம்பித்தது. அடுத்ததாக அவரது மூச்சு திணற ஆரம்பித்தது; மூச்சு திணறுவதனால் ஏற்படும் துக்கத்தால் அவதிப்பட ஆரம்பித்தார். அவர் மூச்சை உள்ளிழுப்பதையும் வெளி விடுவதையும் மிகவும் கஷ்டத்துடன் செய்தார்.
நான் அவரது துன்பத்தையும் கஷ்டத்தையும் தெளிவாகப் பார்த்தேன். இப்போதுகூட எனக்கு நினைவிருக்கிறது. அதே வலியையும் வேதனையையும் என்னால் உணர முடிகிறது. ‘ஆயிரம் தேள்கள் கொட்டுவதுப் போன்ற வலி’ என்று சொல்வார்களே, அது போன்ற வலி; ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்ற வலியால், அவருடைய மொத்த விழிப்புணர்வும் கிழிபட ஆரம்பித்தது.
நம் விரலை ஒரு அங்குலம் கத்தியால் வெட்டிக் கொண்டாலே என்ன வலி ஏற்படுகிறது; எப்படி வலியால் வேதனைப் படுவோம்! மரணத்தின் முதல்படி என்பது ஆறடி கத்தியால் முழு உடலையும் வெட்டுவதைப்போல இருக்கும்.
என்னால் அவர் அனுபவிக்கிற வேதனையையும் வலியையும் உணர முடிந்தது. அவர் மெல்ல மெல்ல தம் உடலை விட்டு விலகிக் கொண்டிருந்தார். தர்க்க அறிவால் இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், பட்டறிவுப்பூர்வமாக இதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தாலும், இதுதான் நடந்தது. முதலில் இதை முடித்து விடுகிறேன். பிறகு ஆராய்வோம்.
முதலில் எனது அனுபவத்தைச் சொல்லி விடுகிறேன். பிறகு அதை ஆராய்வோம். உங்களால் இதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தால் உள் வாங்கிக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இது ஒரு ‘அனுமானம்’ என்று விட்டுவிடுங்கள்.
நீங்கள் இதை ‘அனுமானம்’ என்று புரிந்து கொண்டால்கூட போதும்; கடைசியில் இது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.
மிக அதிகமான வலியையும் வேதனையையும் அவர் அனுபவித்ததை நான் பார்த்தேன்; அனுபவித்தேன். மிகக் கொடுமையான துக்கத்தைக் கொடுக்கக்கூடிய வலி; அவ்வளவு ஆழமான வேதனை.
உயிர் ஸ்தூல உடலில் இருந்து ப்ராண சரீரத்திற்குப் போனது. இரண்டாவது சரீரம் ப்ராண சரீரம்; மூச்சுக்காற்றின் சக்தி உள்ள இடம். ஏழு உடல்களும் ஏழு சக்திகளைக் குறிக்கின்றன. இவை நம்முடைய இருப்புத் தன்மையின் சக்தி அடுக்குகள். ப்ராண சரீரத்திற்குள் நுழையும்போது, மீண்டும் வலியும் வேதனையும் அதிகமாக இருந்தது. நமது ப்ராண சரீரம் நமது ஆசைகளால் நிரம்பியது.
நான் முன்பே சொன்னதுபோல ஆசைகளும், மூச்சும் மிக நெருங்கிய தொடர்புடையவை. நமது மூச்சுக்காற்றின் போக்கை மாற்றினோமானால், நமது ஆசைகளும் மாறும். அவரது உயிர் ப்ராண சரீரத்திற்குள் நுழையும்போது இருப்புத் தன்மையில் இருக்கும் ஆசைகள் எல்லாம் மேலே எழுந்தது. நிறைவேறாத ஆசைகளால் அந்த உயிர் மிகவும் கஷ்டப்பட்டது.
அந்த உயிர் அடுத்த சரீரத்திற்குள் நுழையும்போது குற்ற உணர்ச்சி அதிகமாகியது. குற்ற உணர்ச்சி, ‘ஓ! நாம் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும், இப்படி வாழ்ந்திருக்க வேண்டும்,’ என்று உங்களை நினைக்க வைக்கும்.
> மரணத்தின்
> முதல்படி என்பது
> ஆறடி கத்தியால்
> முழு உடலையும்
> வெட்டுவதைப்போல
> இருக்கும்.
எப்படியோ ஒவ்வொரு சரீரமாக அந்த
உயிர் நகர்ந்தது; முடிவில் அவர் இறந்தார்.
நடந்தது முழுமையும் நான் பார்த்தேன். நான்
அப்போது ஞானமடையாததால் என்னால்
அவருக்கு எந்தவித உதவியும் செய்ய
முடியவில்லை. நான் அவர் படும் துன்பத்தை
மட்டுமே பார்த்தேன்.
உதவி எதுவும் செய்ய முடியாமல், அதை
வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுதான்
எனக்குள் அளவு கடந்த வேதனையை
ஏற்படுத்தியது.
ஞானமடைந்தவர்களுக்கு மட்டுமே, இது
போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கான
சக்தி இருப்பது ஏன் என்பதை அப்போதுதான்
புரிந்துகொண்டேன். நான் உண்மையாகச்
சொல்கிறேன், உதவி செய்வதற்குச்
சக்தியில்லாமல், இந்த நிகழ்வுகளைப்
பார்ப்பதற்கான அதிகப் படியான
சக்தியை மட்டுமே பெற்றிருப்பது என்பது
கொடுமையானது.
> ஞானமடைந்த
> ஒருவரின் இருப்பு
> ஒருவரை
> அமைதியாக
> மரணமடையச்
> செய்கிறது.
கடந்த பிறவியைப் பற்றிய மறதி கூட நம்முடைய நன்மைக்கே!
பலர் என்னிடம், "ஸ்வாமிஜி எனது முற்பிறவி பற்றிய நினைவை எனக்குக் கொடுங்கள்," என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் "உங்கள் வயதென்ன?" என்று கேட்பேன். அவர்கள் 40-லிருந்து 50 என்பார்கள். இந்த வயதில் முற்பிறவியைப் பார்க்க விரும்புகிறார்கள்! நான் அவர்களிடம் "இந்த 40-50 வருட நினைவுகளை உங்களால் அமைதியாகக் கையாள முடிகிறதா?" என்று கேட்பேன்.
40-50 வருட நினைவுகளையே நம்மால் சமாளிக்க முடியவில்லை! அவை நம்மைத் துரத்துகின்றன. 40-50 வருட நினைவுகளையே சமாளிக்க முடியவில்லை என்றால் இன்னும் 100 வருட நினைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும்? 140 வருட நினைவுகளை எப்படிச் சமாளிப்பது?! அதனால்தான், கடவுள் அருளால் நமது முற்பிறவி நினைவுகள் நமக்கு இருப்பதில்லை.
நமது கடந்தகாலப் பிறவிகளை அறிந்தால் துக்கங்கள்தான் அதிகம் ஆகும். மேலும் துக்கப்படுவோம். வருந்துவோம். நமக்கு இந்த மனித அறிவுக்கு எட்டாத, மிகப்பெரிய அசாத்தியமான சக்தி இருந்தும், உதவி செய்ய முடியாத நிலை இருந்தால், நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேலும் மேலும் அதிகமான பிரச்சனைகளுக்குள் சிக்கிகொள்வோம்.
அந்த மனிதரோடு சேர்ந்து நானும் வேதனைப்பட்டேன். கொடுமையான ஒரு விபத்தை ரோட்டில் பார்த்த அனுபவம் போன்றது அது.
ஒரு விபத்தைப் பார்த்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு நம்மால் சாப்பிட முடியுமா? சாப்பிட முடியாதல்லவா? அதேபோல்தான் எனக்கும் இருந்தது. விபத்திலாவது நாம் ஒரே ஒரு உடலைத்தான் பார்க்கிறோம். இங்கே ஏழு சரீரங்களைப் பார்த்தேன். அந்த வேதனையைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அந்தத் துக்கம் என் மனத்தில் ஆழப் பதிந்தது; என் உணர்வில் பதிந்தது.
அடுத்த வந்த இரண்டு மூன்று நாட்களுக்கு என்னால் சாப்பிட முடியவில்லை, உறங்க முடியவில்லை. நம்ப முடியாத அளவிலான துக்கம் அது, எப்படியோ கொஞ்ச நாட்களில் நான் வாராணாசியை விட்டு வெளியேறிவிட்டேன்.
ஓரிரு வருடங்களுக்குப் பிறகு, எனக்கு ஞான அனுபவம் ஏற்பட்டதற்குப் பிறகு, நான் தென்னிந்தியாவுக்கு வந்தேன். இங்கு ஓரிரு வருடங்கள் சிறிய டவுன்களில் தங்கினேன். சிறிது காலம் கழித்து நான் மீண்டும் ஒரு மரணத்தைப் பார்க்க நேர்ந்தது.
இரண்டாவது மரணத்தையும் நான் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவில்தான் பார்த்தேன். இரண்டாவது முறை நான் பார்த்த மனிதர் துக்கப்படவில்லை.
‘முதல் மனிதர் ஏன் கஷ்டப்பட்டார்? இரண்டாவது மனிதர் ஏன் கஷ்டப்படவில்லை?’ என்ற காரணத்தை நான் ஆராய்ந்தேன். அதை ஆய்வு செய்ததன் மூலமாகவும் இந்த நிகழ்வைக் குறித்து தியானங்கள் செய்ததன் மூலமாகவும் சில விஷயங்கள் மேலே வந்தன - ஸூத்ரங்களாக!
அந்த ஸூத்ரங்கள்தான், இந்த மொத்த நித்யானந்த ஸ்புரண தியானமுகாம் நிகழ்ச்சி!
| இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை செய்தால் எனது அனுபவத்தை நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும். |
இரண்டாவது மரணத்தைப் பற்றி நான் உங்களுக்கு விளக்குகிறேன். அப்போது நான் ஞானமடைந்திருந்தேன். நான் எனது பக்தர் ஒருவரைக் குணப்படுத்துவதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தியான சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அதே சமயம் பக்கத்துப் படுக்கையில் இருந்த
ஒருவர் இறந்து கொண்டிருந்தார். நடப்பதை
என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
அந்த மனிதரிடமிருந்து உயிர் மெல்ல மெல்ல
பிரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு
வலியோ, துன்பமோ இருக்கவில்லை. மிக
அழகாக உயிர் ஒவ்வொரு சரீரமாக நகர்ந்து
கொண்டிருந்தது.
முதல் சரீரத்திலிருந்து இரண்டாவது சரீரத்திற்கு, இரண்டாவதிலிருந்து மூன்றாவதற்கு, மூன்றாவதிலிருந்து நான்காவது சரீரத்திற்கு என, பனியில் ஒரு பந்து உருள்வதுபோல அந்த உயிர் நகர்ந்தது. நான் ஆச்சரியமடைந்தேன். அந்த உயிர் மிக மெதுவாகவும் மௌனமாகவும் நகர்ந்தது. அவர் ஞானமடைந்தார்; முக்தியடைந்தார்!
இரண்டு
மரணங்களைக்
குறித்தும்
த்யானங்கள்
செய்ததன் மூலமாக
சில விஷயங்கள்
மேலே வந்தன
ஸூத்ரங்களாக!
"ஏன் முதல் மனிதர் அவ்வளவு கஷ்டப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அவ்வளவு கஷ்டப்படவில்லை?" என்று நான் யோசித்தேன். அவர் ஒரு ஆன்மீகவாதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். நிறைய த்யானம் செய்தவராக இருப்பாரோ என்றெண்ணினேன்; விசாரித்தேன்.
eஅவரது உறவினர்களிடம், "அவர் ஆன்மீக வாதியா?" என்று கேட்டேன். அவரது உறவினர்கள் ஆச்சரியமாக "ஆன்மீக வாதியா? ஏன் கேட்கிறீர்கள்? அவர் கோயிலுக்குக்கூடப் போக மாட்டார்?" என்றார்கள்.

தியான சூத்திரம் மலர்ந்தது
"ஏன் முதல் நபர் அவ்வளவு துக்கப்பட்டார்? இரண்டாமவர் ஏன் அழகாகவும் அமைதியாகவும் இறந்தார்?" என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆழ்ந்து யோசித்தேன்.
எனக்கு திடீரென்று ஒரு ஸத்யம் புரிந்தது; நான் அங்கே இருந்ததுதான் காரணம் என்ற அந்த ஸத்யம் புரிந்தது!
ஞானமடைந்தவர் ஒருவரின் ஸாந்நித்யம் இருப்பு அவரை அவ்வளவு அமைதியாக மரணமடையச் செய்திருக்கிறது.
அடுத்த பகுதிக்கு வருகிறேன். இரண்டாவது இறப்பைப் பார்த்தவுடன்
மிகத் தீவிரமாக யோசித்தேன். இதை எப்படி வெளிப்படுத்துவது? எப்படி மக்கள் அமைதியாக விழிப்புணர்வுடன் இறப்பதற்கு நாம் உதவ முடியும்? எல்லா அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் நான் போய் நிற்க முடியாது. அது நடக்காது. அதனால் எல்லா மக்களுக்கும் பயன்படும்படியாக நான் என்ன செய்ய முடியும் என்று ஆழ்ந்து யோசித்தேன்.
அதிர்ஷ்டவசமாக சக்தி என்பது காலம், இடம்ற்றுக்குள் அடங்காதது. சக்தி காலத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டது. அது தொலைக்காட்சி ச் சேனல்களை இசைவு செய்வது போன்றதுதான். அதாவது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அதனோடு இசைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மட்டும்தான். இப்போது நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு ‘செட்-டாப் பாக்ஸ்’ அவ்வளவுதான்.

நமது வீட்டில் ஒரு செட்-டாப் பாக்ஸ் இருந்தால் விரும்பும் சேனல்களை நாம் இசைவு செய்துகொள்ள முடியும். BBC சேனலை இசைவு செய்தால் BBC நியூஸ் கேட்கலாம். CNN சேனலை இசைவு செய்தால் CNN நிகழ்ச்சி களைப் பார்க்கலாம். எந்தச் சேனலைப் பார்க்க விரும்புகிறோமோ, அந்தச் சேனலுக்கு அதை இசைவு செய்யலாம்.
அதேபோல நாம் உடலைவிடும்போது, நம்மை நாமே அந்த எண்ணங்களற்ற விழிப்பு நிலையுடன் இசைவு செய்துகொண்டோமேயானால், அந்த மேலான விழிப்பு நிலையுடன் இசைவு செய்து கொண்டமேயானால், விழிப்புணர்வுடன்கூடிய அனுபவங்களோடு இசைவு செய்துகொண்டோமேயானால் நமது வாழ்வே, ‘விழிப்புணர்வுடன்கூடிய அனுபவம்தான்’ என்பதைக் காண்போம்.
நாம் இந்த ஏழு சரீர கடலை, இந்த சம்சார
கடலை, சம்ஸ்கார பெருங்கடலை மிக
அமைதியாகவும் ஆழமாகவும் கடக்கலாம்.
எந்தவிதமான
பற்றும் இல்லாமல்
காரியங்களைச்
செய்யும்போது
உங்களுக்குக்
கர்மங்கள்
சேர்வதில்லை.
இந்தப் புரிதல் ஏற்பட்டவுடனே ஒரு உண்மை புரிந்தது; விழிப்புணர்வு என்கிற பந்து எனக்குள் இறங்கியது. ஒரு ஸூத்ரம் என் மனத்திற்குள் உருவாகியது. அந்த விழிப்புணர்வை, அந்த ஸூத்ரத்தை மக்களுக்குக் கொடுப்பதுதான் இந்த நித்யானந்த ஸ்புரண த்யான பயிற்சி முகாம்.
நாம் புவியீர்ப்பு விசை பற்றிய விதியை
ஆராய்ந்தால், நியூட்டன் என்ன உணர்ந்தார்
என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம்.
அதேபோல நான் உங்களுக்கு கொடுக்கிற
இந்த ஸூத்ரத்தை உணர்ந்து நீங்கள் வேலை
செய்தீர்களானால், எனது அனுபவத்தை
'நீங்களும் உணர்ந்து அனுபவிக்க முடியும்'
என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.
> எனது விழிப்புணர்வில்
> என்ன ஏற்பட்டதோ,
> அது
> உங்கள்
> விழிப்புணர்விலும்
> ஏற்பட முடியும்.
எனது விழிப்புணர்வில் என்ன ஏற்பட்டதோ, அது உங்கள் விழிப்புணர்விலும் ஏற்பட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆழமாக இந்த ஸூத்ரத்தைப் புரிந்துகொண்டு, ஸூத்ரத்திற்குள் மூழ்கி ஆழமாக வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக இந்த ஸூத்ரத்திற்குள் இறங்குங்கள். வேறெதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.

