KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லைSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும் நற்செயல்களும்கூட நம்மைப் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஏன் வெளியே எடுத்துச் செல்ல முடிவதில்லை எனவும் விளக்குகிறார்.

கிருஷ்ணர் இங்கே சொல்கிறார், "பொருள் சார்ந்த உலகங்களிலேயே மிக உயர்ந்த உலகமாக கருதப்படும் ப்ரஹ்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள் சார்ந்த உலகமான பூலோகம்வரை பிறப்பும், இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் யார் ஒருவர் என்னை அடைகிறாரோ, யார் ஒருவர் எனது இருப்புத் தன்மையையும் விழிப்புணர்வு நிலையையும் அடைகிறாரோ அவர் மீண்டும் பிறப்பதில்லை."

> எண்ணங்களற்ற உணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் விழிப்புணர்வுடன் அனுபவிக்கவில்லை என்றால், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து நீங்கள் மீள முடிவதில்லை.

முன்பு சக்தி அடுக்குகளைப் பற்றிச் சொன்னேன். நாம் பிரபஞ்ச அடுக்கான ப்ரஹ்ம லோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் செயல்களையும் உடையவர்களாகவே இருந்தாலும்க்கூட மீண்டும் நாம் உடலுக்குள் வர வேண்டும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நல்ல செயல்களைச் செய்ய வேண்டுமென்ற எண்ணங்களில் சிக்கிக்கொண்டு நாம் நல்லவற்றையே செய்தாலும்கூட நாம் மீண்டும் வருவோம். நமது புண்ணியங்களால் நமக்கு ஞானத்தைத் தர முடியாது.

நான் மக்களிடம், "எனது ஆச்ரமத்துக்குப் பணம் தந்தாலும்கூட, ஞானத்திற்கு நான் 'ஸ்பீடு பாஸ்' தர இயலாது," என்று சொல்வதுண்டு. நான் ஸ்பீடு பாஸ் தர முடியாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நீங்கள் ஒரு கணமேனும் அனுபவிக்கவில்லை என்றால் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சியில் இருந்து உங்களை யாராலுமே காப்பாற்ற முடியாது.

தாங்கள் சேவை நிறுவனங்களுக்குப் பணம் தருவதன் மூலம், சொர்க்கத்திற்குப் போவதற்கான ரசீதையும் அனுமதிச்சீட்டையும் பெறுகிறோம் என்று சிலர் நம்புகிறார்கள். அந்த ரசீது அவர்கள் இறக்கும்போது அவர்களிடம் இருக்கும். அந்த ரசீதுடன் சேர்த்துத்தான் அவர்களை அடக்கம் செய்வார்கள். அதைச் சொர்க்கத்தின் வாயில் காவலரிடம் காட்டினால், அவர் இவர்களை உள்ளே அனுமதித்து விடுவார் என்று நினைக்கிறார்கள்.

உள் உலக விஞ்ஞானத்தின் பரிசோதனைச் சாலைகள்

நான் உண்மையை, நேர்மையாகத் தெளிவாகச் சொல்கிறேன், “இந்த நிறுவனத்தில் அப்படியொரு முறை இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.”

நான் எப்போதும் மக்களிடம், “புண்ணியம் செய்யுங்கள்; நான் உங்களைச் சொர்க்கத்திற்குகொண்டு செல்கிறேன்,” என்று சொல்வதில்லை. “செயல்களைப் பற்றற்ற முறையில் நன்றியோடும், அன்போடும் செய்யுங்கள்,” என்றுதான் சொல்கிறேன். அதன் விளைவு : உங்களுடைய மன அமைப்பினாலேயே நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள்.

உங்கள் செயல்கள் நன்றியுணர்வில் இருந்து எழுந்த செயலாக இருக்கட்டும். ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலைச் செய்வதற்காகவே செயல்புரியுங்கள். நாளை சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு தனியிடம் கிடைக்கும் என்பதற்காக அல்ல.

நான் மக்களிடம் “நீங்கள் எனது ஆச்ரமத்துக்குப் பணம் கொடுத்தாலும் நான் ஸ்பீடோ பாஸ் கொடுக்க முடியாது; என்னால் எதுவும் செய்ய முடியாது. இது தான் நேர்மையான உண்மை,” என்று சொல்கிறேன். உடனே மக்கள் கேட்கிறார்கள்.

> ஆச்ரமங்களும்,
> கோயில்களும்
> ‘உள் உலக
> விஞ்ஞானத்தின்
> பரிசோதனைச்
> சாலைகள்’.

“அப்படியானால் நீங்கள் ஏன்
கோயில்களையும் ஆச்ரமங்களையும்
கட்டுகிறீர்கள்?”

நான் அவற்றை ஆன்மீக அறிவியலைப்
பற்றிய பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய
சோதனைக்கூடங்களாக இருப்பதற்காகவே
அமைக்கிறேன். மக்கள் ஆன்மீக அறிவியலை

ஆராய்வதற்காகவும் மிகப்பெரிய ஸத்யங்களைக் கற்பதற்காகவும் அந்த ஸத்யங்களை உள்வாங்கி தங்கள் வாழ்வில் பயிற்சி செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட இடங்களே ஆச்ரமங்களும், கோயில்களும்! அவை ‘உள் உலக விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள்’.

மக்கள் இந்த உள் உலக விஞ்ஞானத்தைக் கற்பதற்காகவும் ஆராய்வதற்காகவும் அறிவதற்காகவும் பயிற்சி செய்வதற்காகவும் புரிந்துகொள்வதற்காகவும் உதவும் ஆய்வகங்களாகவே நான் ஆச்ரமங்களையும் கோயில்களையும் உலகம் முழுவதும் அமைிக்கிறேன்.

நீங்கள் இந்த ஆய்வுக்கூடங்களில் உள் உலக அறிவியலைப் பற்றிய ஆய்வில் இருக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் நற்செயல்களைச் செய்யுங்கள். நம்முடைய ரிஷிகள் வேத காலத்தில் செய்ததைப்போல செய்யுங்கள். சொர்க்கத்திற்கான ‘ஸ்பெஷல் டிக்கெட்’ என நினைத்துச் செய்யாதீர்கள்.

Peacock feather

ஏழு உடல்களையும் அழகாகக் கடந்து செல்லலாம்

இந்தச் செயல்களை விஷ்ணுவிற்காகச் செய்தால், சாகும்போது நம்மை அழைத்துச் செல்வதற்காக விஷ்ணு பகவான், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற தேவலோக அழகிகளுடன் கருட சின்னம் பொறித்த ஒரு விமானத்தை அனுப்புவார் என்று நினைக்காதீர்கள். அப்படி எதுவும் நடக்காது.

Callout box text: பாவம், புண்ணியம் எதுவானாலும் சரி இரண்டுமே கர்மங்கள்தான்.

அந்த மாதிரி ஏதாவது நடக்க வேண்டுமென நாம்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமானால், நாம்
அப்படியே வெறுமனே உட்கார்ந்துகொண்டே
இருக்க வேண்டியதுதான். அப்படி எதுவும்
நடக்காது. அப்படி யாரும் வரமாட்டார்கள்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம்
புண்ணியத்தைச் சம்பாதித்தாலும் சரி,
பாபத்தைச் சம்பாதித்தாலும் சரி, நாம் உடலை
விட்டு செல்லும்போது துக்கப்பட்டுத்தான்
செல்வோம். பாவம், புண்ணியம்
எதுவானாலும் சரி இரண்டுமே கர்மங்கள்தான்.

பிறகு என்ன செய்ய வேண்டும்? நாம்

உடலில் இருக்கும்போதே ஏதாவது ஒரு
வழியில் தியானத்தின் மூலமாகவோ அல்லது
சரணாகதியின் மூலமாகவோ ஒருமுறையாவது
அந்த 'எண்ணங்களற்ற விழிப்புணர்வை'
அனுபவித்துவிட வேண்டும்.

ஒரே ஒருமுறை அந்த எண்ணங்களற்ற
விழிப்புணர்வு நிலையை, ஸாக்ஷியாக
பார்க்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக
ஆழமாக உழையுங்கள்.

ஸாக்ஷியாக இருக்கும்
விழிப்புணர்வு நிலையை
ஒரு கணமாவது
உணர்ந்து விடுங்கள்.
அந்த ஒரு அனுபவம்
தீப்பந்தத்தைப்
போன்றது.

ஸாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்து விடுங்கள். ஒரே ஒருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்துவிட்டீர்கள் என்றாலே போதும். அந்த ஒரு அனுபவம் தீப்பந்தத்தைப் போன்றது.

நாம் உடலைவிடும்போது, அந்த அனுபவமே ஏழு சரீரங்களின் வழியாக நம்மை அழைத்துச் செல்லும் தீப்பந்தமாக இருக்கிறது. ஏழு சரீரங்களையும் எந்தவித கஷ்டங்களும், தடைகளும் இல்லாமல் மிக அழகாகக் கடந்து செல்வோம். இந்தப் பாதை மூலமாக, இந்த வாழ்க்கையின் மூலமாக நம்மை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டியாக இந்த விழிப்புணர்வு என்ற தீப்பந்தம் செயல்பரிகிறது.

feather

எண்ணங்களற்ற விழிப்புணர்வே நம் தெய்வீக நிலை

ஒரே ஒரு கணமாவது அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை' அடைந்துவிட்டோமேயானால், அனுபவித்து உணர்ந்து விட்டோமேயானால், நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விடுகிறோம். நாம் அதை அடையா விட்டால், நாம் வேறு எதை அடைந்தாலும் அது வீண்தான். எந்தப் புண்ணியமும், பாவமும் நம்மோடு வரப்போவதில்லை. நாம் எதனாலும் மதிப்பிடப் படமாட்டோம்.

ஸமாதி என்கிற மிக உயர்ந்த ஸத்யத்தால், அனுபவத்தால் மட்டுமே மதிப்பிடப்படுவோம். ஸமாதி என்றால் ஸம்ஸ்க்ருத்தில் நாம் 'நமது உண்மையான நிலையில் இருத்தல்' என்று பொருள். ஒருமுறை அதை அடைந்து விட்டால், சேர வேண்டிய இடம் அடைந்து விட்டோம் என்று பொருள்.

மீண்டும் மீண்டும் விவேகானந்தர்
சொல்கிறார், "ஒரே ஒரு சிறு துளியாவது அந்த
அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருந்தாலும்
போதும். உங்கள் உடலைவிடும்போது அந்த
அனுபவத்திலிருந்து கொண்டுதான் உடலை
விடுவீர்கள்."

'தன்னை உணர்தல்' ஆகிய அந்த ஆழமான அனுபவம், நாம் உடலைவிடும் போதும் மேலேறிவருவதால்தான் இது சாத்தியமாகிறது. இறப்பு நிகழும்போது, நமது மொத்த வாழ்க்கையுமே மீண்டும் வேக வேகமாக நம் கண்முன் ஓடும். இது சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். முக்கியமான நிகழ்வுகள் மட்டும் மீண்டும் மீண்டும் பல நிறப்படமாக ஓடும். மற்ற நிகழ்வுகளெல்லாம் கறுப்பு வெள்ளையில் ஓடும். அவை பின்னணியாக மாறிவிடும்.

எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அதாவது ஸமாதியை, நாம் உயிருடன் இருக்கும்போது ஒருமுறையாவது அனுபவித்திருந்தோமேயானால், அது மட்டுமே பல நிறங்களில் ஓடும்; மற்றவையெல்லாம் அதற்குப் பின்னணியில் மங்கலாகத் தோன்றும்.

அதனால் இயற்கையாகவே நாம் அந்த நிலையிலிருந்துதான் உடலை விடுவோம். இன்னுமொரு முக்கியமான விஷயம் ஒரு வீடியோ டேப்பில் கீறல் விழுந்திருந்தால், முன் நோக்கி செல்லும் இயக்கத்தில் இருந்தாலும் டேப் கீறல் விழுந்த இடத்திற்கு வந்ததும் நின்றுவிடும் இல்லையா? மீதியிருக்கும் பகுதியில் இருப்பவை எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

அதைப்போலவே நம் வாழ்க்கையில் ‘எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை’தான் அந்தத் தடைப்படுத்தும் புள்ளி. ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான், அந்த இடத்தில்தான் நாம் எண்ணங்களே இல்லாத நிலையில் இருந்திருக்கிறோம். அதனால் நாம் அந்த இடத்திலேயே நின்று விடுவோம். அதற்குப் பிறகு வேகவேகமாக முன்னோக்கி செலுத்துவது நிகழ்ந்தாலும் அதனோடு தொடர்புடைய எல்லாக் கர்மங்களும் அழிக்கப்பட்டுவிடும், துடைக்கப்பட்டுவிடும். ஒரு வைரஸ் நமது சாஃப்ப்ட்வேரில் நுழைவது போன்றது இது. வைரஸ்கள் இருக்கும்போது, நாம் மேலும் மேலும் சாஃப்ட்வேரை இயக்கினோமானால், அது சாஃப்ப்ட்வேரையே அழிக்கும்.

அதுபோல் ‘எண்ணங்களற்ற விழிப்புணர்வுதான்’, நமது ஸம்ஸார ஸாகரத்தை, உலக வாழ்வு என்ற கடலை, நமது ஆசைகளை, நம் மனத்தை அழிக்கக் கூடிய ‘தெய்வீக வைரஸ்’. நமது மனம்தான் சாஃப்ப்ட்வேர். நமது மனம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சாஃப்ப்ட்வேர்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மனம் புத்திசாலியும் அல்ல; நுண்ணறிவு கொண்டதும் அல்ல. மனம் என்பது முன்பே தயாரிக்கப்பட்ட சாஃப்ப்ட்வேர்.

உதாரணமாக, தினமும் காலையில் அலுவலகக்
கவலைகள் காரணமாக நாம் மன உளைச்சல்
அடைகிறோம். மெதுமெதுவாக, ஒவ்வொரு
நாளும் தினமும் காலை 10 மணிக்கு நாம்
உற்சாகமற்ற, துக்கமான மன நிலையை
அனுபவிக்கத் தொடங்குகிறோம். இதில்
வேடிக்கை என்னவென்றால் விடுமுறை
நாட்களிலும்கூட அதே மனச்சோர்வை
அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

நாம் கொஞ்சம் கவனமுள்ளவராகவும் கூர்ந்து உணரும் திறம் கொண்டவராகவும் நம்மை நாமே கவனிப்பவராகவும் இருந்தோமேயானால், இது உண்மை என்று புரியும். எவ்வளவு பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? நம்மை நாமே கவனித்திருந்தால், சில முறைகளாவது இந்த அனுபவத்தை அனுபவித்திருப்போம்.

அப்போது நம் மனத்திடம் “இல்லை, இன்று விடுமுறை; இன்று நான் அலுவலகத்திற்குப் போக வேண்டியதில்லை. அதனால் அதைப் பற்றி நினைக்க வேண்டியதுமில்லை,” என்று சொல்வோம். ஆனால் ஒவ்வொரு வாரமும் விடுமுறையிலும் அதே மன நிலைக்குத்தான் மீண்டும் மீண்டும் திருப்பிச் செல்வோம். ஏனென்றால் நம் மனம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ப்ட்வேர்.