KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/மனிதகுலத்திற்குச் சேவை செய்வதே இந்திய கலாச்சாரத்தின் குறிக்கோள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

மனிதகுலத்திற்குச் சேவை செய்வதே இந்திய கலாச்சாரத்தின் குறிக்கோள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்தியா மீது படையெடுக்கப்பட்ட அளவிற்கு வேறெந்த நாட்டின் மீதும் படையெடுப்பு நடந்திருக்காது. ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு நாடும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்திருக்கிறது.

இந்த மண்ணின் மீது படையெடுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

இருந்தாலும், இந்தியா எந்த நாட்டின் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை.

இந்திய ஒருபோதும் எந்த நாட்டையும் படைகொண்டு தாக்கியது இல்லை.

அது ஒருபோதும் வேறொரு நாட்டை அழிக்கவோ அல்லது வேறொரு நாட்டோடு சண்டையிடவோ போகவில்லை.

இந்தியா அதன் எல்லைக்குள் இருந்தது. ஆனால் இந்தியா, மீண்டும் மீண்டும் படையெடுப்புக்கு உள்ளானது, ஆனால் அது ஒருபோதும் யார் மீதும் படையெடுக்கவில்லை.

இறுதியில், இந்தக் கலாச்சாரம் மட்டும்தான் உயிரோடு இருக்கிறது! இந்தச் சமுதாய அமைப்பு முறையால்தான் இந்திய கலாச்சாரம்ன்றும் நிலைத்திருக்கிறது.

இந்த விஷயங்களைப் படிக்கும்போது, நாம்
புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு
முக்கியமான விஷயம் என்னவென்றால்,
'ஒரு சமுதாயத்தை உருவாக்காமல்
மனிதர்களால் வாழ முடியாது' என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

மனிதன் ஒரு சமுதாயப் பிராணி. மனிதர்கள் ஏதோவொரு வடிவத்தில் சமுதாயத்தையோ அல்லது பிற அமைப்பையோ உருவாக்குகிறார்கள்.

எந்தச் சமுதாய அமைப்பு முறைகளும் அமெரிக்காவில் கிடையாது என்று நீங்கள்

> ஒரு சமுதாயத்தை
> உருவாக்காமல்
> மனிதர்களால்
> வாழ முடியாது
> என்பதை நாம்
> புரிந்துகொள்ள வேண்டும்.

சொல்லிவிட முடியாது. உலகின் மற்ற நாடுகளிலும்கூட ஏதோ ஒருவித சமுதாய அமைப்புமுறை இருக்கத்தான் செய்கிறது. இந்தச் சமுதாய அமைப்புமுறைகள் எல்லாம் பணத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

நான் பிரேசிலுக்குச் சென்றிருந்தபோது, பெட்ரோபராஸ் என்ற ஒரு பெரிய நிறுவனத்தில் சொற்பொழிவு செய்தேன். அப்போது ஒருவர் எழுந்து "இந்தியாவில் இருக்கும் சமுதாய அமைப்புமுறையை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்? மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக்காரர்களை இழிவாக நடத்துகிறார்களே. இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்?" என்றார்.

நிச்சயமாக, இந்திய கலாச்சாரத்திலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர்கள் எந்த வகையில் தவறு செய்தார்கள் என்றால், சமுதாய அமைப்பு எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்தக் காரணத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள். காரணத்தை விட்டுவிட்டு சமுதாய அமைப்பை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.

சில தவறுகள் நடந்துவிட்டது, உண்மைதான். இருந்தாலும், ஏதோ சில தவறுகள் இருக்கிறது என்பதற்காக, ஒட்டுமொத்த சமுதாய அமைப்பே தவறு என்று முத்திரை குத்திவிட முடியாது.

உதாரணத்திற்கு, ஒருவருக்கு உடலில் ஒரு கட்டி இருந்தால், அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டுமே ஒழிய, அந்த நபரையே நீங்கள் கொன்றுவிட முடியாது!

Side Card Text Box

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதன்
மூலம் கட்டி நீக்கப்பட வேண்டும். அந்தக்
கட்டி இருக்கிறது என்பதற்காக, அந்த
நபரையே ஒரேயடியாகக் கைவிட்டுவிட
முடியாது.

நாம்தான் தவறுகள் செய்தோம்.
ஆனால் இப்போது நாம் ஒட்டுமொத்த
அமைப்பு முறையை குறை
சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நான் அவரிடம், "ஆமாம், ஒன்றிரண்டு
தவறுகள் நடந்துவிட்டன. ஆனால் வளர்ந்த
நாடுகள் அல்லது கலாச்சாரம் மிக்க நாடுகள்

என்றழைக்கப்படும் நாடுகளைப் பாருங்கள்.

நீங்கள் ஒரு விமானத்தில் ஏறியவுடன், முதல் வகுப்பைக் கடந்து சாதாரண வகுப்புக்கு நடந்து செல்லும்போது, முதல் வகுப்புப் பயணிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று பாருங்கள்! முதல் வகுப்புப் பயணிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்று நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்த்தால், அவர்கள் உங்களை எவ்வளவு இழிவாகப் பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்,'' என்று சொன்னேன்.

இந்தியாவில்
மட்டும்தான்,
புத்திசாலித்தனத்தையும்
ஞானத்தையும்
மதித்தவர்கள்
இந்தச் சமுதாய
அமைப்புமுறைகளை
உருவாக்கினார்கள்.

வேறெந்த நாடுகளிலும் சமுதாய அல்லது வர்க்க அமைப்பு முறை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு நாட்டிலும், சமுதாய மற்றும் வர்க்க அமைப்புமுறை இருக்கிறது.

வேத கால ரிஷிகள் அறிவுப்பூர்வமாகவும், ஞானத்தின் அடிப்படையிலும் இயங்குகிற சமுதாயம் மற்றும் ஜாதி அமைப்பு முறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரிஷிகள் புத்திசாலித்தனத்தின் அடிப்படையிலும், அறிவின் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும் சமுதாய அமைப்பு முறையை உருவாக்கினார்கள். ஆனால் பிற கலாச்சாரங்களில் சமுதாய அமைப்பு முறையானது பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைக்கப்ப்ட்டிருக்கிறது.

க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்த நாடுகளில், அதிகாரத்தின் அடிப்படையில் சமுதாய அமைப்புமுறை உருவாக்கப்பட்டது. அங்குப் பலசாலிகள் அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.

மற்ற நாடுகளில், வியாபாரிகள், வணிக மக்கள் ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு அதிகப் பணம் வைத்திருந்தவர்கள், அதிகமாக மதிக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் மட்டும்தான் புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் மதித்தவர்கள் இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையை உருவாக்கினார்கள். இந்த அமைப்புமுறை அறிவின் அடிப்படையிலும், ஞானத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. அதனால்தான் இந்தியாவில் மெய்யறிவு பெற்றவர்கள் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். ஆன்மீகத்தில் ஆழமாக இருப்பவர்கள், அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.

அந்த ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பும் பகிர்தலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

மனிதர்கள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொருவருமே சமுதாயத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்

இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதையும், நாம் எவ்வாறு அதை இழிவுபடுத்துகிறோம் என்பதையும் பார்ப்போம்.

நிச்சயமாக நாம் அதை இழிவுபடுத்துகிறோம்; நாம் உண்மையான காரணத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. நாம் மொத்த காரணத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.

முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறை எதன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். பிறகு, நாம் என்ன தவறுகள் செய்தோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பின்னர்தான், நாம் அதை எப்படி மீட்டெடுப்பது, நம் வாழ்வில் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்துப் புரிந்துகொள்ள முடியும்.

> நன்றி உணர்ச்சிகாகச் செயல்படுபவர்களும், தங்களுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்துபவர்களும் ப்ராஹ்மணர்கள்.

முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இது நம்முடைய குணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கீதையில் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இந்தச் சமுதாய அமைப்புமுறை நமது குணங்களின் (இயல்பின்) அடிப்படையிலும் வாழ்க்கையை அணுகுகிற நம்மளுடைய பண்பின் அடிப்படையிலும் அமைக்கப்படுகிறது என்கிறார்.

பயத்தால் உந்தப்பட்டு வேலைகளைச் செய்பவரும் பயத்தின் காரணமாக வேலைகளைச் செய்பவரும், சூத்ரர் என்ற பிரிவைச் சேர்ந்தவராகிறார்.

பேராசையுடன் வேலை செய்பவர்கள், வியாபாரம் அல்லது வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வைசியர்கள்.

பிறருடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது தமது தலைமையை நிரூபிக்கவோ செயல்படுபவர் க்ஷத்ரியர்கள் பிரிவில் அடங்குவார்.

சமுதாயம்

நன்றி உணர்ச்சிக்காகச் செயல்படுபவர்களும், தமது ஆனந்தத்தை வெளிப்படுத்துபவர்களும் ப்ராஹ்மணர்கள். இவ்வாறு அந்தக் காலத்தில் மக்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். தங்களிடம் ஒன்றுமே இல்லாதவர்கள், அவர்களின் நேரத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களிடமிருக்கும் ஒன்றே ஒன்று, நேரம் மட்டும்தான். தமது நேரத்தைப் பகிர்ந்துகொள்பவர்தான் தொழிலாளி, சூத்ரர் அவர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

பொருட்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு
நபர், பொருட்களை உருவாக்க கொஞ்சம்
நேரத்தையும், கொஞ்சம் அறிவையும்
கொடுக்கிறார். அவர் பொருட்களை
உருவாக்கி, அவற்றைச் சமுதாயத்துடன்
பகிர்ந்துகொள்கிறார். அவர்தான் வைச்யர்,
அதாவது வணிகர். இம்மாதிரியான மக்கள்
வியாபாரப் பிரிவு அல்லது வணிகப் பிரிவைச்
சேர்ந்தவர்கள்.

நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் , ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிப்பவர்கள்தான் க்ஷத்ரியர்கள், வீரர்கள்!

> வேதகால ரிஷிகள்
> உருவாக்கிய
> சமுதாய அமைப்பின்படி
> பார்க்கும்பொழுது
> யாரும்
> உயர்ந்தவர்களும்
> கிடையாது,
> யாரும்
> தாழ்ந்தவர்களும்
> கிடையாது.

க்ஷத்ரியர்கள், நம்பிக்கையைக் கொடுப்பதன் மூலமாக, நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக ஒட்டுமொத்த குழுவையும் திடமான வழியில் ஒரு சமுதாயமாக ஒற்றுமைப்படுத்துகிறார்கள்.

அறிவை, ஆனந்தத்தை அல்லது ஆன்மீக ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள்தான் ப்ராஹ்மணர்கள்.

இந்த மாதிரியான பிரிவுகள், முற்றிலுமாக நம்முடைய பங்களிப்பின் அடிப்படையில், அதாவது நமது பண்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும், இது பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படவில்லை. பிறப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இதுதான் சமுதாய அமைப்பு முறையின் சாரம். இந்தச் சாரத்தின் அடிப்படையில்தான், ஒட்டுமொத்த அமைப்புமுறையும் உருவாக்கப்பட்டது.

இந்தச் சாரத்தை அடிப்படையாகக்கொண்டுதான், வேத கால ரிஷிகள் இந்த அமைப்பு முறையை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு உயர்ந்தவர்கள் என்று யாரும் கிடையாது; தாழ்ந்தவர்கள் என்றும் யாரும் கிடையாது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்று நடைமுறையில் இருப்பது போன்ற உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவு அப்போது கிடையாது. இந்த வேத கால ரிஷிகள் உருவாக்கிய சமுதாய அமைப்பின்படி பார்க்கும்பொழுது யாரும் உயர்ந்தவர்களும் கிடையாது, யாரும் தாழ்ந்தவர்களும் கிடையாது. காலப்போக்கில், ஓரிரண்டு தவறுகள் நடந்திருக்கிறது.

ஆனால் அதற்காக, அதை வைத்து ஒட்டுமொத்த அமைப்பு முறையும் தவறானது என்று சொல்லிவிட முடியாது. ஓரிரண்டு தவறுகளுக்காக ஒட்டுமொத்த அமைப்பு முறையும் தோல்வியானது என்று நாம் சொல்லிவிட முடியாது.

ஏழு உணர்வுகளில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ரு ’தினோர்ஜுன |
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப || 7.16

ஓ! பாரதவர்களில் சிறந்தவனே அர்ஜுனா, நான்குவிதமான பக்திமான்கள் என்னைப் பூஜிக்கிறார்கள்.

துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், தேடல் மிக்கவர்கள், புக்தியைத் தேடுபவர்கள் ஆகிய நான்கு வகையானவர்கள் என்னை வழிபடுகிறார்கள்.

இங்கே கிருஷ்ணர், இறைவனை அடைபவர்களைப் பற்றியும், அவர்கள் இறைவனை எந்தெந்த வழியில் அடைகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறார். மனிதர்கள் பொதுவாக ஏழு அடிப்படை உணர்ச்சிகளில்தான் மையம் கொண்டுள்ளோம்.

அடிப்படையில் நாம் பேராசை, பயம்,
கவலை, புகழ், ஒப்பீடு, அஹங்காரம்
இறுதியான ஏழாவது உணர்ச்சியான,
ஆழமான திருப்தியற்ற தன்மை ஆகிய
ஏழு உணர்ச்சிகளின் அடிப்படையில்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த குணங்களின் அடிப்படையில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். இந்தப்பண்புகளின் அடிப்படையில்தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்ச்சிகளில்தான் மனிதர்கள் மையம் கொண்டிருக்கிறார்கள்.

> பிரார்த்தனையில்,
> நாம் கடவுளிடம்
> பிரார்த்திக்கிறோம்;
> தியானத்தில்,
> நாமே கடவுளாக
> மாறிவிடுகிறோம்!

ஒவ்வொரு நொடியும் நமது வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தோமேயானால், பேராசை, பயம், கவலை, புகழ், பொறாமை, ஒப்பீடு, அஹங்காரம் என்கிற இந்த ஏழு உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் நாம் செயல்களைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

மனிதர்கள் இந்த ஏழு வெவ்வேறு சக்தி மையங்களில் மையம் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏழு உணர்ச்சிகளும் நமக்குச் சக்தியை அளிக்கக்கூடிய, நம்மைத் தூண்டி விடக்கூடிய ஏழு சக்தி மையங்களில் இருக்கின்றன.

நாம் ஆழமாகக் கவனித்து ஆராய்ந்து பார்த்தோமேயானால், வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக, ஆணிவேராக இந்த ஏழு உணர்ச்சிகளில் ஏதோ ஒன்றுதான் இருக்கும்.

> கடவுள் என்பது
> வேறொன்றுமில்லை,
> அதுவொரு
> கண்ணாடி;
> நாம் நமது
> சொந்த
> பிரதிபலிப்பையே
> அதில் காணலாம்.

நாம் பேராசையில் மாட்டிக்
கொண்டிருந்தோமானால், கடவுளையும்
அதே வழியில்தான் நாம் தேடுவோம்.

அப்போது நமக்கு செல்வத்திற்கு அதிபதியான லஷ்மி தேவைப்படுகிறார். அல்லது நாம் செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் பின்னால் ஓடுகிறோம், குபேரயாகம் நடத்துகிறோம், குபேர பூஜை செய்கிறோம், நாம் மீண்டும் மீண்டும் குபேரத்துவத்திற்குரிய செயல்களையே செய்து கொண்டிருப்போம். ஏனென்றால் நாம் முழுவதுமாக பேராசையில் மையம் கொண்டிருக்கிறோம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதையோ இழந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த உடனேயே, நாம் நமக்கென ஒரு சொந்தக் கடவுளை உருவாக்கி, அந்த வடிவத்தில் அவரை வழிபட்டு, அதன் மூலம் திருப்தியை அடைய முயற்சி செய்கிறோம்.

நாம் நம் இருப்புத் தன்மைக்குள் எதை இழந்து கொண்டிருப்பதாக நினைக்கிறோமோ, அதே உணர்ச்சியுடன், அதே எதிர்பார்ப்புடன் கடவுளை வழிபட்டு திருப்தி அடைய முயற்சி செய்கிறோம்.

இன்னொரு விஷயம், நாம் பக்குவமடையும்போது, நமக்குள் பக்குவம் நிகழும்போது, நாம் அதே லக்ஷ்மியை ஞானலக்ஷ்மியாக வழிபடுகிறோம்! அதே கடவுளிடம் நாம் ஞானத்தைக் கொடுக்கும்படி, அறிவைக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறோம்.

கடவுள் ஒரு கண்ணாடி

நமது பக்குவ நிலைக்கு ஏற்ப, நாம் கடவுளைக் கற்பனை செய்து பார்க்கிறோம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பேராசையோடு நாம் கடவுளை வழிபடக்கூடாது என்பதில்லை. பேராசையோடு கடவுளை வழிபடுவதில் எந்தத் தவறும் இல்லை.

வரங்களை வேண்டும் பிரார்த்தனைகளுடன்
நமது வாழ்க்கையைத் தொடங்குவதில்
எந்தத் தவறும் இல்லை. ஆனால்
வரங்களை வேண்டும் பிரார்த்தனைகளோடு
மட்டும் நமது வாழ்க்கையை நாம்
முடித்துக்கொள்ளக்கூடாது.

அப்படி நடந்தால், அதில் ஏதோ
சிக்கல் இருக்கிறது. அதுவொரு நல்ல
தொடக்கம்தான், ஆனால் மோசமான முடிவு!

கடவுள் வடிவத்தைப்
பிடித்துக்கொண்டு
கடவுளை விட்டு
விடுகிறோம்.

விவேகானந்தர் இதை மிக அழகாகச் சொல்கிறார், “சர்ச்சில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது நல்லதல்ல.” நாம் இறப்பதற்கு முன்னால், நாம் அந்நிலையிலிருந்து வளர்ந்திருக்க வேண்டும்.

நாம் பக்குவம் அடைந்திருக்க வேண்டும்; நாம் கடவுளின் மற்ற பரிணாமங்களையும், நமது இருப்புத்தன்மையின் மற்ற பரிணாமங்களையும் உணர்ந்திருக்க வேண்டும்.

பிரார்த்தனையில், நாம் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்; ஆனால் தியானத்தில், நாமே கடவுளாக மாறுகிறோம்.

பிரார்த்தனைகள், அவை நமக்கு உடனடியான பலன்களைக் கொடுக்கக்கூடியவைதான். ஓர் உயர்ந்த நிலையிடம் அல்லது கடவுளிடம் வேண்டுவது தப்பில்லை, ஆனால் அதுவே போதுமானதல்ல. தியானத்தில், நாம் எதனிடத்தில் வேண்டுதல்களைத் தொடர்ந்து செலுத்துகிறோமோ, அந்த உயர்ந்த நிலையாக அல்லது அந்தக் கடவுளாகவே நாம் மாறுகிறோம். இது நிரந்தரமானது.

கடவுள் என்பது வேறொன்றுமில்லை, அதுவொரு கண்ணாடிதான்; நாம் நமது சொந்த பிரதிபலிப்பையே அதில் காணலாம்.

நாம் கடவுளுக்கு என்ன என்னவெல்லாம் செய்கிறோமோ, அதுவெல்லாம் நமக்குத் திரும்ப வந்து சேரும்.

நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது, ஆழமாக வளர்ச்சி அடைகிறோம். ஆழமாகப் பக்குவப்பட்ட வகையில் கடவுளுடன் இணைகிறோம். இல்லையென்றால், நாம் குழம்பி விடுகிறோம், ஒரு குடிகாரனைப் போல மாட்டிக்கொள்கிறோம்.

ஒரு சின்ன கதை:

ஒருவர் நிறைய குடித்துவிட்டு மிகத் தாமதமாக வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவரால் நடக்கக்கூட முடியவில்லை. எப்படியோ தள்ளாடித் தள்ளாடி வீடு வந்து சேர்ந்தார். வீட்டுக்குள்ளே வந்ததும், அங்கிருந்த ஒரு டேபிளில் மோதிவிட்டார். அப்போது அதிலிருந்த கண்ணாடி உடைந்து, அதன் துண்டு ஒன்று அவரை ஆழமாக வெட்டி விட்டது.

அவர் குளியலறைக்குச் சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் பார்த்து வெட்டுப்பட்ட இடத்தில் தமக்குத்தாமே பேண்டேஜ் போட்டுக்கொண்டு, சப்தம் செய்யாமல் படுக்கையறை சென்று படுத்துக்கொண்டார்.

எந்த ஒரு
விஷயத்தையும்
நாம் ஆழமாகப்
புரிந்துகொள்ளும்போது,
ஆழமாக
வளர்ச்சி அடைகிறோம்.

அடுத்த நாள் காலை, அவர் மனைவி அவரை
விசாரித்தார், "என்ன நடந்தது? நேற்று இரவு
நீங்கள் என்ன செய்தீர்கள்?"

"நான் எதுவும் செய்யவில்லையே. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்," என்றார் அவர்.

"இல்லை. சொல்லுங்கள், நீங்கள் ஏன்
தாமதமாக வந்தீர்கள்?" என்று அவர் மனைவி
கேட்டார்.

"நான் கொஞ்சம் குடித்திருந்தேன், அவ்வளவுதான்," என்று சொன்னார். "அது சரி. உங்களை நீங்களே காயப்படுத்திக் கொண்டீர்களா?" என்று கேட்டார் மனைவி.

"இல்லையே," என்றார்.

"பிறகு ஏன் கண்ணாடியில் அவ்வளவு
பேண்டேஜ் போட்டிருக்கிறீர்கள்?" என்றார்
மனைவி.

அவருக்கு பேண்டேஜ்
போட்டுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்
கண்ணாடிக்கு பேண்டேஜ் போட்டிருந்தார்!

> நமக்கு எங்கே
> பிரச்சினை இருக்கிறது
> என்பதைத்
> தெரிந்து
> கொள்வதற்குத்தான்
> கடவுளை
> ஒரு கண்ணாடி போல
> நாம்
> பயன்படுத்திக்கொள்ள
> வேண்டும்.

நாம் குடித்திருந்தால், நாம் விழிப்புணர்வோடு இல்லை என்றால், நாமும் இப்படித்தான் செய்வோம்!

நாம் கண்ணாடிக்குதான் எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்போம்.

நாம் எங்கு எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தவறி விடுவோம். கண்ணாடியைப் பிடித்துக்கொள்வதும், வடிவத்தைப் பிடித்துக்கொள்வதும் இரண்டும் ஒன்றுதான்.

வடிவத்தைப் பிடித்துக்கொள்வது என்பது வேறொன்றுமில்லை கண்ணாடியைப் பிடித்துக்கொள்வதுதான். கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால், ஒருபோதும் காயம் ஆறாது. நமக்கு எங்கே பேண்டேஜ் போட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்குத்தான் கண்ணாடியே தவிர, கண்ணாடிக்கு பேண்டேஜ் போடுவதால் நம்மைக் குணப்படுத்திக்கொள்ள முடியாது.

அதேபோலதான், நமக்கு எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்குத்தான் கடவுளை அல்லது தெய்வத்தை ஒரு கண்ணாடி போல நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நமக்குத்தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமே தவிர, கண்ணாடிக்கு இல்லை. தவற விட்டு விடாதீர்கள், கண்ணாடிக்குச் சிகிச்சை அளிக்க முயலாதீர்கள். நாம் அதைச் செய்வோமேயானால், நாம் எல்லாவற்றையும் விட்டு விடுவோம்.

Peacock feather and title