உங்களுக்கு நீங்களே தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எனக்கு இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது. இதுவொரு உண்மை சம்பவம்.
ஜோதிடர் ஒருவர் பெங்களூர் ஆச்ரமத்திற்கு வந்து போய்க் கொண்டிருப்பார். திடீரென்று, ஒருநாள் அவர் ஒரு காரில் ஆச்ரமத்திற்கு வந்தார்.
நான் கேட்டேன், "என்ன ஆயிற்று? திடீரென்று புதிய காரில் வந்திருக்கிறீர்கள். ஏதாவது லாட்டரி விழுந்ததா?"
அவர் சொன்னார், "இல்லை ஸ்வாமி, இது லக்ஷ்மி யந்த்ரத்தின் கருணை. இது லக்ஷ்மி யந்த்ரத்தால் கிடைத்தது," என்றார்.
நான் கேட்டேன், "யார் உங்களுக்கு இந்த யந்த்ரத்தைக் கொடுத்தது? இது மாதிரி லக்ஷ்மி யந்த்ரம் பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே!'' என்றேன்.

அவர் சொன்னார், "இதை யாரும் எனக்குக் கொடுக்கவில்லை, நான்தான் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!"
லக்ஷ்மி யந்த்ரத்தை வாங்கிப் போனவர்கள் பணக்காரர்கள் ஆனார்களோ, இல்லையோ, அதை விற்றவர் அதை வைத்து நிறைய பணம் சம்பாதித்து விட்டார்!
ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்: வாழ்க்கையைப் பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரிதான், அதுவொரு நல்ல தொடக்கம்தான், ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அது கிடையாது.
அடுத்த நிலை, பயத்தில் மாட்டிக் கொண்டவர்கள், இவர்கள் தங்களைக் காப்பாற்றும் கடவுளை வணங்குகிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து பயத்திலேயே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பிற்காகச் ஸுதர்ச்ன ஹோமம் (பொதுவான பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் ஹோமம்) செய்வார்கள் அல்லது ம்ருத்யுंजय ஹோமம்
(ஆயுள் பலத்திற்காகச் செய்யப்படுவது)
செய்து கொண்டிருப்பார்கள். அல்லது
நவக்கிரஹங்களைச் சுற்றி வருவார்கள்.
இப்படிப் பயத்தில் மாட்டிக்
கொண்டவர்கள் ஏதோவொரு கோளையோ
அல்லது கடவுளையோ வழிபட்டுக்க
கொண்டிருப்பார்கள். அதனால்தான்,
பழங்குடியினர் வணங்கும் கடவுள்களிடம்
பெரிய பெரிய அரிவாள்கள் இருப்பதை
நீங்கள் பார்க்கலாம்.
வாழ்க்கையைப்
பிரார்த்தனைகளுடன்
தொடங்குவது சரிதான்,
ஆனால் முடிப்பதற்கான
சரியான இடம்
அது கிடையாது.
பல இந்திய கிராமங்களில்கூட, கடவுள்களிடம் பெரிய அரிவாள்கள் மற்றும் பெரிய பெரிய ஆயுதங்கள் இருப்பதைப் பார்க்கலாம். பயத்தில் மையம் கொண்டவர்கள் ஆயுதங்களை உடைய கடவுளை வழிபடுவார்கள். இவை எல்லாம் சரியானவைதான், எதுவும் தவறு இல்லை, ஆனால் முடிவான இடம் இது கிடையாது.
எப்படியோ, கடவுளை வழிபடுவதற்கான முதல் படியாக ‘பேராசை’ இருக்கிறது. ‘பயத்தின்’ அடிப்படையில் கடவுளை வழிபடுவது என்பது அடுத்த படியாக இருக்கிறது.
மூன்றாவது நிலை, கவலையின் காரணமாகக் கடவுளை வழிபடுவது. கவலை என்பது பயம் மற்றும் பேராசையைத் தவிர வேறொன்றுமில்லை.
பயம் மற்றும் பேராசையின் கலவைதான் கவலை. நாம் கவலையுடன் இருந்தால், நாம் கடவுளையும் அதே முறையில்தான் வழிபடுகிறோம். “தயவுசெய்து என் கவலை தீர உதவுங்கள். இந்தக் கவலைகளில் இருந்து நான் விடுபட எனக்கு உதவுங்கள்,” என்று நாம் கடவுளிடம் வேண்டுகிறோம்.
இந்த நிலையில் யோகா அல்லது த்யானத்தை நாம் அமைதிக்காகத் தேடி வருவோம் - ஆன்மீக ஞானத்திற்காக அல்ல, நமது மன அமைதிக்காக, மனத்திற்குக் கொஞ்சம் அமைதி கிடைக்காதா, மனத்திற்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்காதா என்பதற்காகத்தான்.
அடுத்த நிலை, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்படுவது. பெயருக்காகவும் புகழுக்காகவும் அதாவது மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதற்கான ஆசையுடன் நாம் கடவுளைத் தேடி வருவோம்.
நாம் கடவுளிடம் வேண்டுவது
மட்டுமல்லாமல், படிப்படியாக நாமும்
நம்மைக் கடவுளாகக் காட்டிக்கொள்ளத்
தொடங்குவோம். தம்மேயே கடவுள் என்று
சொல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் இந்தியாவிற்குப் போனால், கோயில்களை நடத்தும் பலர், ஏறத்தாழ அவர்களே கடவுள்போல நடந்துகொள்வதைப் பார்க்கலாம். அதுவொரு பெரிய பிரச்சினை. அந்தக் கோயிலை நடத்துபவர், அங்கு நடக்கும் விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரே கடவுள் என்று நினைக்கிறார். அவருக்கு வியாபாரம் செய்யும் தந்திரம் தெரியும்.
"நான்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இருக்கிறேன். எல்லாம் எனக்குத் தெரிந்திருக்கும்போது, எனது நலனுக்காக நான் ஏன் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது?" என்று நினைக்கிறார். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.
நீங்கள் ஆன்மீக ரீதியாக பக்குவமடைந்தால் ஒழிய, ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்காதீர்கள் என்று நான் சொல்வதுண்டு.
ஒருசமயம் ஒருவர் என்னிடம் கேட்டார், "எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை, நான் ஓர் ஆன்மீகவாதியும் இல்லை. இருந்தாலும், ஒரு சமுதாய சேவையாக நான் கோயிலை நிர்வகிக்க விரும்புகிறேன். நான் அதை ஒரு சமுதாய சேவையாகச் செய்ய நினைக்கிறேன். அப்படி நான் செய்யலாமா?" என்றார்.
நான் அவரிடம், "ஒருபோதும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்! அந்தத் தவற்றை ஒருபோதும் செய்ய வேண்டாம். நீங்கள் ஆன்மீக ரீதியாக பக்குவமடையாமல், இந்த வேலைகளில் நுழைந்தீர்கள் என்றால், நிச்சயமாக உங்களுக்கு நீங்களே தொந்தரவு ஏற்படுத்திக்கொள்வீர்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பீர்கள்.
> கோயிலில்
> தெய்வத்தைப்
> பிரதிஷ்டை செய்பவர்,
> கட்டாயம்
> ஞானம்
> அடைந்திருக்க
> வேண்டும்.
மெது மெதுவாக அது ஒரு வெளிப்படையான பெயர் -புகழை சம்பாதிக்கும் விளையாட்டாக மாறிவிடும்! இயல்பாகவே, பிறகு உங்களை நீங்களே துக்ககரமாக மாற்றிக்கொள்வதுடன், மற்றவர்களையும் துக்கப்படுத்துவீர்கள். நீங்கள் ஆன்மீக ரீதியாகப் பக்குவம் அடையாதவரை ஒருபோதும் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள்,''என்று சொன்னேன்.
ஆன்மீகப் பக்குவம் விருப்பத்தை உருவேற்றும்
கோயில்களில் தெய்வத்தை பிரதிஷ்டைசெய்யும்போது, ப்ராண ப்ரதிஷ்ட என்றழைக்கப்படும் ஓர் அற்புதமான சடங்கு செய்யப்படும். கோயிலில் தெய்வத்தை ப்ராணப்ரதிஷ்ட செய்பவர் கட்டாயம் ஞானம்டைந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்தக் கோயிலுக்குக் கடவுளைக் கும்பிட வரும் எல்லோருடைய எதிர்வினைகளும் அந்த நபருக்குப் போய்ச் சேரும் என்று புராண நூல்களில் குறிப்பு இருக்கிறது. இது பயமுறுத்தக்கூடிய ஒரு கருத்தாக இருக்கிறது.
அது பயமுறுத்துவதற்கான கருத்தாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அதுவொரு பொய்யான கருத்து என்று நினைத்து விடாதீர்கள். அதற்கு அர்த்தம் உண்டு. ஆன்மீக ரீதியாகப் பக்குவம் அடையாதவர் இந்த வேலைகளை ஏற்கும்போது, இயல்பாகவே பெயர் மற்றும் புகழ் என்கிற பிரச்சினைகளுக்குள் சிக்கிக்கொள்வார்.
அவர் தமக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பார். அவர் தானே கடவுள் போன்று நடக்க ஆரம்பிப்பார்.
அவர், கடவுள் இருக்கும் இடத்திற்கு தம்மை
உயர்த்திக்கொள்வார், அதோடு கடவுளுக்குப்
பதிலாக அவரே கடவுள் மாதிரி செயல்படவும்
ஆரம்பித்து விடுவார். கடவுளுக்கு முன்னால்
நின்று வணங்குபவர்கள் சுலபமாக
ஏமாற்றப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள்
பயத்திலும், பேராசையிலும் மாட்டிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள்
மிகச் சுலபமாக ஏமாற்றி விடலாம்.
மாயை அல்லது
கற்பனைதான்
பொறாமை என்கிற
ஒரு குச்சியை வைத்து
நம்மை ஆட்டி வைத்துக்
கொண்டிருக்கிறது!
அவர்கள் ஏற்கனவே பிரச்சினையில் இருப்பதால், அவர்கள் எதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ, அதை அப்படியே நீங்கள் விரும்பியபடியே அவர்களைச் செய்ய வைக்க உங்களால் முடியும். அவர்கள் ஒரு தீர்வுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு தீர்வைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அதனால் இயல்பாகவே நீங்கள் அவர்களை உங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு,அவர்கள் மீது சவாரி செய்யலாம்.
இந்தப் காரணத்திற்காகத்தான், ஞானமடைந்த ஒருவர் மட்டும்தான் ஓர் ஆன்மீக அமைப்பை நடத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
வியாபார நோக்கம் உள்ள ஒருவருக்கு நாம் ஓர் ஆன்மீக வேலையைக் கொடுத்தால், அவர் ஒட்டுமொத்தத்தையும் வியாபாரமாகவே மாற்றி விடுவார் . அவர் எல்லாவற்றையுமே கணக்கு வழக்குகளாகத்தான் பார்ப்பார்.
கடவுளை நீங்கள் கணக்கு வழக்கில்கொண்டு வர முடியாது! இதனால் எல்லாமே அதன் நோக்கத்தை, சாரத்தை இழந்து விடுகிறது. எந்த நோக்கத்திற்காக, எந்த உத்வேகத்திற்காக ஆன்மீக அமைப்பு உருவாக்கப்பட்டதோ அது அத்தனையும் உணரப்படாமலேயே போய் விடுகிறது.
இதனால்தான், இந்தச் செயல்களுக்கு வருபவர்கள் ஆன்மீகப் பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று ஞானிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.
ஆன்மீகப் பக்குவம் என்பது அடிப்படையான தேவையாகும். பெயருக்காகவும் புகழுக்காகவும் கடவுளிடம் வராதீர்கள். நீங்கள் அதை இழந்து விடுவீர்கள்; அதைக் குழப்பி விடவும் செய்வீர்கள்.

