KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/அவசரப்படாதீர்கள் நீங்கள் ஓடவேண்டியதில்லைSign in
பகவத் கீதை விளக்கவுரை

அவசரப்படாதீர்கள் நீங்கள் ஓடவேண்டியதில்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடுத்து வருவது ஒப்பீடும், பொறாமையும். இதுதான் உச்சக்கட்டமான எதிர்மறை எண்ணம். மக்கள் எப்போதும் தம்மை யாருடனாவது ஒப்பீடு செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களின் நிலையை அல்லது அவர்களின் வசதியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.

ஒப்பீடு செய்து பொறாமைப்படுபவர்கள், ஒருபோதும் அமைதி அடைய முடியாது. நமது வாழ்க்கையில் எது நம்மை ஓடவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை ஆழமாகக் கவனியுங்கள்.

நாம் ஏன் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பதாக உணர்கிறோம்? நாம் ஏன் எப்போதும் ஏதோ ஒரு அவசரகதியில் இருக்கிறோம்? நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என ஏன் நினைக்கிறோம்?

ஒரு அருமையான ஸ்லோகம் சொல்கிறது, “ஒரு குரங்காட்டி, குச்சியை வைத்து குரங்கை ஆட்டுவிப்பதுபோல, மாயை அல்லது கற்பனைதான் பொறாமை என்கிற ஒரு குச்சியை வைத்து நம்மை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது! ஒரு குச்சியை வைத்துக்கொண்டு மாயை நம்மை நடனமாட வைக்கிறது. அந்த ஒரு குச்சியினால் நாம் அனைவரும் அனைத்துவிதமான நடனங்களையும் ஆடிக்கொண்டிருக்கிறோம்!

நம்மைவிட மற்றவர்கள் அதிகமாகச் செய்திருக்கிறார்கள், நம்மைவிட மற்றவர்கள் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கும் அந்த நொடியிலேயே, நாமும் அவசர அவசரமாக ஓட ஆரம்பித்து விடுகிறோம்!

ஒரு சின்ன கதை:

ஒருவர் ஒரு சாராயக் கடைக்குப் போகிறார்.
அவர், ஐந்து கிளாஸ் சாராயத்தை நிறுத்தாமல்
ஒரே மூச்சில் குடிக்கிறார்.

“இவ்வளவு அவசரம் ஏம்பா?” என்றார் கடைக்காரர்.

> பொறாமையிலும்,
> ஒப்பீட்டிலும் மாட்டிக்
> கொண்டவர்கள்
> எந்த அளவிற்கு
> முட்டாள்களாக
> இருப்பார்கள் என்று
> கற்பனை செய்துகூட
> பார்க்க முடியாது.

''என்னிடமிருப்பது உன்னிடமிருந்தால், உனக்கும் இப்படிதான் அவசரமிருக்கும்,'' என்றார் அந்தக் குடிகாரர்.

அந்தக் கடைக்காரர் ரொம்ப பரிதாபத்தோடு, ''என்ன பிரச்சினை? உன்னிடம் என்ன இருக்கிறது?'' என்றார்.

''என்னிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது,'' என்றார் அந்த மனிதர்.

அவசரப்படாதீர்கள்! அந்த மனிதர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

''என்னிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது,'' என்கிறார்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
நம்மிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே
இருக்கும்போது, நம்மை நாமே
நம்புவதில்லை; நம்மை நாமே நம்பாத போது
தான், நாம் அவசரத்தில் இருக்கிறோம்.

அதனால்தான் நாம் ஓடுகிறோம்.

பொறுமையாகச் சென்றால் நம்மால் அடைய முடியும் என்று நாம் நம்புவதில்லை.

நம்முடைய சக்தியை நாமே நம்புவதில்லை.

நம்மிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது என்பதால் நாம் அவசரப்படுகிறோம். நம்மிடம் 50 ரூபாய்தான் இருக்கிறது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே, நாம் எல்லாவற்றையும் பிடுங்கி, அனுபவித்துவிட நினைக்கிறோம். நம்மிடம் போதியளவு பணம் இல்லை என்று மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறோம்.

அவசரப்படாதீர்கள்! நாம் ஓட வேண்டியதில்லை.

illustration