KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/நீங்கள் கடவுள் என்பதைக் குணத்தில் காட்டுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

நீங்கள் கடவுள் என்பதைக் குணத்தில் காட்டுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம், பொறாமை மற்றும் ஒப்பீட்டில் மாட்டிக் கொண்டோம் என்றால், மீண்டும் நாம் அந்தக் கோணத்தில் இருந்துதான், அந்த நோக்கத்திற்காக மட்டுமே நாம் கடவுளை வழிபடுவோம்.

இந்தியாவில் கோயில்களை நிர்வகிக்கும் சிலர், "எங்கள் கோயிலில் மட்டும்தான், நூறு அடி உயர கோபுரமிருக்கிறது ; எங்கள் கோயில்களில்தான் வைரக் கிரீடங்களும், 24 காரட் தங்கக் கிரீடங்களும் இருக்கின்றன. இது இருக்கிறது, அது இருக்கிறது!" என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

கடவுளிடம்கூட, அவர்கள் ஒப்பீடு செய்து பெரிதுபடுத்திக் காட்டுவார்கள்.

நம்முடைய வீடுகளில்கூட நாம் இதுபோல செய்வதுண்டு. சான்ஜோசில் நான் ஒரு பக்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னைப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கிருந்த பத்து புகைப்படங்களைப் பற்றியும் விளக்க ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றியும் அவர் அரை மணிநேர விளக்கம் கொடுத்தார்.

கடவுள் நம்மை
அவருடைய
கைகளாலேயே
அன்போடும்,
தனித் தன்மையோடும்
வடிவமைக்கிறார்.
அதனால்தான் நாம்
ஒவ்வொருவரும்
வெவ்வேறு விதமாக
இருக்கிறோம்.

அவர், "இது போன்ற புகைப்படம், இந்த உலகத்திலேயே வேறெங்கும் கிடையாது," என்றார்.

நான் கேட்டேன், "அது எப்படிச் சாத்தியம்? குறைந்தபட்சம் சில நகல்களாவது இருக்குமே," என்றேன்.

அவர் சொன்னார், "இல்லை, மற்ற எல்லா நகல்களும் அழிந்துவிட்டன! இது ஒரேயொரு நகல் மட்டும்தான் இருக்கிறது," என்றார்.

பொறாமையிலும், ஒப்பீட்டிலும் மாட்டிக் கொண்டவர்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக இருப்பார்கள் என்பதையும், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது.

"இது என்னுடையது, அது என்னுடையது, இதைப்போலத்தான் நான் அதைச் செய்வேன்,"' என்று இப்படியான விஷயங்களில் அவர் மாட்டிக் கொள்கிறார்.

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையானவர்கள்.

கடவுள் ஒரு பொறியாளர் கிடையாது. அவர் ஒரு கலைஞர். அவர் நம்மை அவருடைய கரங்களாலேயே அன்போடும், தனித் தன்மையோடும் வடிவமைக்கிறார். அதனால்தான், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக இருக்கிறோம்.

பொறாமை மற்றும் ஒப்பீடுகளோடு நாம் கடவுளை வழிபடும்போது, நாம் மீண்டும் மாட்டிக்கொள்கிறோம். மக்கள் என்னிடம், "நமது புராணங்களில், ஆண் கடவுள்களும், பெண் கடவுள்களும் பொறாமையால், பேராசையால், கோபத்தால் சண்டையிடுவதை நாம் பார்க்கிறோம். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்பார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் புராணங்கள் எல்லாம் பொறாமையில் மாட்டிக் கொண்ட மனிதர்களுக்காக எழுதப்பட்டவை. இதன்மூலம்தான் அவர்கள் கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும்.

கடவுள் அவற்றை எல்லாம் செய்தார் என்று தவறாக நினைக்காதீர்கள். கடவுள் ஒருபோதும் அவ்வாறான தவறுகளைச் செய்வதில்லை! ஆனால் அவ்வாறான தவறுகளைக் கடவுள் செய்திருப்பார் என்று மனிதர்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் கடவுளை தங்களின் சொந்தக் கருத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்!

தெய்வீகத்தை
உங்கள் மொழியில்
உங்களுக்கு
உணர்த்தினால் ஒழிய,
உங்களால் அதனோடு
தொடர்புகொள்ள
முடியாது.

அவர்கள் தங்களுடைய சொந்த
வார்ப்பிலேயே, அச்சிலேயே கடவுளையும்
வார்க்கிறார்கள்! மக்கள் கடவுளுடன்
சுமுகமான தொடர்பு வைத்துக்கொள்வதற்கும்,
அவருக்குச் அருகில் செல்வதற்காக
மட்டும்தான் சடங்குகளும்கூட
செய்யப்படுகின்றன.

கடவுள்களுக்குச் செய்துவைக்கப்படும்
திருமண விழாக்களை மக்கள் பார்க்கும்போது,
அவர்கள் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும்
உணர்கிறார்கள். "ஆம், என்னால் இப்போது

கடவுளுடன் தொடர்புகொள்ள முடிகிறது.
அவரும் என்னைப்போல் இருக்கிறார்,"
என்று அவர்கள் உணர்கிறார்கள்.

மக்களுக்கு சௌகரியமான ஓர் உணர்வைக்
கொடுப்பதற்கும் மக்களை ஓய்வாக
இருக்கும்படி செய்வதற்கும்தான் இந்தக்
கதைகள் சொல்லப்பட்டன. இவையெல்லாம்
விவரிக்கப்பட்டன.

ஒன்றைக் கவனியுங்கள், தெய்வீகத்தை
உங்கள் மொழியில் உங்களுக்கு
உணர்த்தினால் ஒழிய, உங்களால் அதனோடு
தொடர்புகொள்ள முடியாது. அதற்காகத்தான்
இந்த மாதிரியான கதைகள் சொல்லப்பட்டன.

> நீங்கள் கடவுள்
> என்றால், அதை
> உங்கள் குணத்தில்
> காட்டுங்கள்.
> உங்கள்
> வார்த்தைகளால்
> அல்லாமல்,
> உங்கள் குணத்தால்
> மக்கள்வதைப்
> புரிந்துகொள்ளட்டும்.

இதையடுத்து அஹங்காரத்தில் மையம் கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போம். இதைக் கையாள்வது, கொஞ்சம் அதிகமாகவே சிக்கலானது. அஹங்காரத்தில் மாட்டி கொண்ட மனிதர் பெயரும் புகழும் பெற முயற்சி செய்கிறார்.

பெயர், புகழில் மாட்டிக் கொண்ட மனிதர், கடவுளின் குணங்களை வெளிப்படுத்தாத போதும், "தாமே கடவுள்," என்று சொல்லத் தொடங்குகிறார்.

அதனால்தான், உபநிஷத்தில் உள்ள ஓர் அழகான வாக்கியம் சொல்கிறது: "நீங்கள் கடவுள் என்றால், அதை உங்கள் குணத்தில் காட்டுங்கள். மக்கள் அதை உங்கள் குணத்தால் புரிந்துகொள்ளட்டும், உங்கள் வார்த்தைகளால் அல்ல."

நீங்கள் செய்கிற செயல் மட்டுமே உங்கள் குணத்தைப் பற்றிப் பேசும்; நீங்கள் பேசுவது எதுவுமே உங்களுக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை.

நீங்கள் செய்யும் செயல், செயலை செய்யும் விதம் இவைதான் உங்களின் குணத்தை வெளிப்படுத்தும்;. உங்கள் வார்த்தைகள் உங்களுக்காக வேலை செய்யப்போவதில்லை.

பரமஹம்ஸ உபநிஷத் என்றழைக்கப்படும் ஓர் அழகான சின்ன உபநிஷத் உண்டு. அது, பரமஹம்ஸர்காவி ஆடை அணியக்கூடாது என்கிறது. உண்மையில், தர்க்க ரீதியாகப் பேசினால், நான் இந்தக் காவி ஆடை அணியக்கூடாது. பரமஹம்ஸர்கள் காவி ஆடை அணிந்தால், அவர்கள் எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமோ, அவ்வாறு மதிக்கப்பட மாட்டார்கள் என்று அது சொல்கிறது.

எங்கள் குணத்தின் அடிப்படையில், நாங்கள் மதிக்கப்பட வேண்டும். எங்களின் குணத்திற்காக, எங்களின் கடவுள் தன்மைக்காக நாங்கள் மதிக்கப்பட வேண்டும்.

எங்கள் வாழ்க்கையில் வெளிப்படும் கடவுளின் குணங்கள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும், எங்களின் மேலாடைகள் மதிக்கப்படக்கூடாது. இந்த மேலாடை அல்லது பாரம்பரியத்தினால் நாங்கள் மதிக்கப்படக்கூடாது. எங்களிடமிருந்து வெளிப்படும் ஜ்ஞான குணங்களால் நாங்கள் மதிக்கப்பட வேண்டும்.

கருணை பொங்கினால்தான் தங்களைப் பற்றித் தாங்களே விமர்சிக்க முடியும்

"ஒருவர் அஹங்காரவாதியா அல்லது ஒரு நிஜமான ஆன்மீக ஞானியா என்பதை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வது?" என்று நேற்று ஒரு கேள்வி கேட்டார்கள்.

அஹங்காரவாதியாக இருக்கும் ஒருவர், வெறும் வார்த்தைகளை வைத்து மட்டுமே விளையாட முடியும். ஞானம் அடைந்த ஒருவரால் மட்டுமே, உங்களுக்குள்ளும் அதே அனுபவத்தை உருவாக்கக்கூடிய சக்தியை வெளிப்படுத்த முடியும்.

அஹங்காரத்தோடு
கடவுளை வழிபடும்
ஒருவர்,
ஒருபோதும் கடவுளிடம்
சரணடைவதில்லை,

ஞானத்தை அடைந்தவர் ஒருவர்,
உங்களுக்குள் ஞான அனுபவத்தை
உருவாக்குகிறார்.

நீங்கள் உங்களுக்குள் ஞான அனுபவத்தை
உணர முடிந்தால், உங்கள் குரு
ஞானமடைந்தவர்தான் என்பதைத்
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவரே
கடவுள். ஆன்மீக அனுபவமும், அறிவுமே
உருக்கொண்டவராக அவர் இருக்கிறார்.

MAHESH LUNCH HOME SPECIAL

உங்களுக்கு வார்த்தைகள் மட்டுமே கிடைத்து,
அனுபவம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள்
பின்பற்றும் அந்த நபரோ அல்லது அந்த
வழியோ இறுதியானதல்ல என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள்,
வார்த்தைகள் உணவுப் பட்டியல் போன்றது.
அனுபவம் என்பது உணவைப் போன்றது.

நீங்கள் ஒரு உணவு விடுதிக்குப் போகிறீர்கள். அங்கு உங்களுக்கு ஓர் காகிதத்தைக் கொடுத்து, “இதில் உணவுப் பட்டியல் இருக்கிறது, ஆனால் உணவு இங்கு இல்லை,” என்று சொன்னால், நீங்கள் அதை உணவு விடுதி என்று சொல்வீர்களா?

Illustration of a person eating

இல்லை! உணவுப் பட்டியல் மட்டும்
போதாது. உங்கள் பசி அந்தப் பட்டியலால்
தீர்ந்து விடாது. வார்த்தைகள் என்பவை
உணவுப் பட்டியல் போன்றது.

அனுபவம் என்பது உணவு போன்றது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,
ஆன்மீக வாழ்க்கையில் வெறும் உணவுப்
பட்டியலுடன் மட்டும் நாம் நின்றுவிட
முடியாது.

அஹங்காரத்துடன் கடவுளை அணுகும் ஒருவர், முழுமையான அனுபவம் கிடைக்காமலேயே தம்மைத்தாமே அவர் கடவுளாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார். அதனால்தான் உபநிஷதங்கள், மீண்டும் மீண்டும், அனுபவத்தை வலியுறுத்துகின்றன.

நம்மால் அனுபவமாக உணர முடியவில்லை என்றால், நாம் பின்பற்றும் அந்த நபரிடம் ஏதோ ஆழமான குறைபாடு இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

நான் எப்போதும் சொல்வதுண்டு, என்னிடமிருந்து உங்களால் எதையும் அனுபவமாக உணர முடியவில்லை என்றால், தயவுசெய்து நீங்கள் வேறு யாரையாவது பின்பற்றுங்கள்.

சீடர்களைக் குறை சொல்வதும், பொறுப்புகளை அவர்கள் மீது தள்ளி விடுவதும் மிகவும் சுலபம்.

“நீங்கள் இன்னும் தகுதி அடையவில்லை,
நீங்கள் சரியாகப் பயிற்சி செய்வதில்லை,
நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை,
நீங்கள் போதுமான அளவிற்கு முயற்சி
செய்யவில்லை, அதனால்தான் உங்களுக்கு
இன்னும் அனுபவம் கிடைக்கவில்லை,”
என்று சொல்லி, சீடர்களைக் குறை சொல்வது
மிகவும் சுலபம்.

சீடர்களை ஏமாற்றுவதற்கும் ஸத்யத்தை
மறைப்பதற்குமான ஒரு சூழ்ச்சிதான் இது.
சீடர் இன்னும் அனுபவத்தைப் பெறவில்லை
என்பதால் தானே குருவிடம் வந்திருக்கிறார்.

அவரிடம், “நீ சரியாக இல்லை, அதனால் உனக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடைக்கவில்லை,” என்று குரு சொல்கிறார்.

இதைத் தெரிந்துக்கொள்வதற்கு அவர் ஒரு குருவிடம் வர வேண்டிய அவசியம் இல்லை; இதைச் சொல்வதற்கு ஒரு குரு தேவையில்லை; அவருடைய வாழ்க்கைக் துணையே போதுமே!

எப்படி என்றாலும், இதைத் தானே கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து சொல்லிக்கொள்கிறார்கள். மனைவி கணவருக்கும், கணவர் மனைவிக்கும் காலையில் இருந்து இரவுவரை இதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் சரியாக இல்லை என்பதைச் சொல்ல, அவருக்கு ஒரு குரு தேவையில்லை.

ஒரு உண்மையான ஞானி, உங்களின் நிலைமை என்னவாக இருந்தாலும், அவருக்குள் என்ன அனுபவம் ஏற்பட்டதோ அதே அனுபவத்தை உங்களுக்கும் உருவாக்குவார்.

கடவுளிடம் சரணடைகிறீர்களா? கடவுளையே சரணடைய வைக்கிறீர்களா?

தம் வெளி உலக அனுபவத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தக்கூடிய ஸூத்ரத்தை உருவாக்கித் தருபவர் விஞ்ஞானி. தம் உள்உலக அனுபவத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தக்கூடிய ஸூத்ரத்தை உருவாக்கித் தருபவர் மெய்ஞானி. ஒரு விஞ்ஞானி வெளி உலகத்தில் அவர் என்ன புரிந்து கொண்டாரோ, அதையே ஒரு ஸூத்ரத்தின் மூலம் மீண்டும் உருவாக்குவது போல, ஓர் ஆன்மீக குரு அல்லது ஒரு ஞானி அவருக்குள் ஏற்பட்ட அனுபவத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஒரு ஸூத்ரத்தை உருவாக்குகிறார்.

உதாரணமாக, நியூட்டன் ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து விழுவதைப் பார்த்ததும் அவருக்குள் ஏதோவொரு புரிதல் ஏற்படுகிறது. இதே புரிதலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த அவர் ஒரு ஸூத்ரத்தை உருவாக்கினார்.

இதே போலத்தான், ஒரு குரு அல்லது ஒரு ஞானி, அவருக்குள் ஏற்பட்ட அதே அனுபவத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த ஸூத்ரத்தை அல்லது நுட்பங்களை உருவாக்குகிறார்.

நான் உங்களுக்கு எப்போதும் சொல்வது என்னவென்றால், எங்களின் த்யான முகாம்களில் கலந்து கொண்ட பிறகும் நீங்கள் எதையுமே அனுபவமாக உணரவில்லை என்றால், தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், என்னிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறதே தவிர, உங்களிடம் இல்லை.

என்னை மறந்து விடுங்கள், உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள். நீங்கள் வேறொரு குருவைச் சந்திக்க நேரிடலாம்.

என்னுடைய ஞான அனுபவத்தை உங்களால் உணர முடிந்தால் மட்டுமே, நான் ஞானம் அடைந்திருக்கிறேன். அப்படியில்லை என்றால், அது வெறும் வார்த்தைகள்தான், அவை வெறும் உணவுப் பட்டியல்தான்.

ஓர் உணவுப் பட்டியல் உங்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது. அது உங்களின் பசியைப் போக்காது. அது உங்கள் பசியை மேலும் தூண்டி விடத்தான் செய்யும். அது உங்களுக்கு மேலும் அதிகமான தொந்தரவுகளைத்தான் கொடுக்கும். ஆகவே, உணவுப் பட்டியலோடு நின்று விடாதீர்கள். நீங்கள் எதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அது வெறும் உணவுப் பட்டியல்தான். அதோடு நின்று விடாமல் நேரடியாகக் கடவுளை அடைய முயற்சி செய்யுங்கள்.

அஹங்காரத்தோடு கடவுளை வழிபடுபவர், எல்லாவற்றையும் அடைகிறார்.

ஓர் உணவுப் பட்டியல் உங்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது. அதோடு நின்று விடாமல் நேரடியாகக் கடவுளை அடைய முயற்சி செய்யுங்கள்.

அதோடு மட்டுமல்ல, அவரின் சொந்த அஹங்காரத்தையும் அதிகப்படுத்திக்கொள்கிறார். அவர் ஒருபோதும் கடவுளிடம் சரணடைவதில்லை. அவர் மேலும் மேலும் அஹங்காரத்தை மட்டுமே வளர்த்துக்கொள்கிறார்.

எல்லா அறிவையும் பெறுவதால், அவர் அஹங்காரம் இன்னும் அதிகமாகப் பலமடைகிறது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

கடவுளிடம் அஹங்காரத்தைச் சரணடையச் செய்யாமல், அவர்களின் அறிவைக்கொண்டு அவர்களின் அஹங்காரத்தை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். அறிவை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று, அறிவைக்கொண்டு, நீங்கள் கடவுளிடம் சரணடையலாம்; அல்லது அதே அறிவைக் கொண்டு, மற்றவர்களை உங்களிடம் சரணடைய வைக்கலாம்!

அதனால் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது, உங்களைப் பொறுத்தே இருக்கிறது.

## அஹங்காரத்தை ஆராதிக்காதீர்கள்

ஒரு சின்ன கதை:

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டைக்குப் போகிறார். திடீரென, ஐம்பதுக்கும் மேம்பட்ட மரங்களில் ஓர் எருமை மாட்டின் கண்ணைப்போல வட்டத்திற்குள் வட்டமாக இருக்கும் அம்பு எய்யும் இலக்கு அடையாளங்களைப் பார்க்கிறார்; அந்த இலக்கு அடையாளங்களின் மையத்தில், ஓர் அம்பு இருக்கிறது.

ஒவ்வொரு இலக்கு அடையாளத்தின் மையத்திலும் மிகத் துல்லியமாக ஓர் அம்பு எய்யப்பட்டிருந்தது. அந்தச் சிறப்பான வில்வித்தை வீரரைப் பார்க்கவும், அவரை யார் என்று தெரிந்துகொள்ளவும் அரசர் ஆர்வம் கொண்டார்.

"யார் அந்த நபர்? நிச்சயமாக அவர் ஒரு

> மையத்தைக்
> குறி வைத்து
> அம்பை
> எய்வதை
> விட்டுவிட்டு,
> நமது இலக்கிற்கு
> ஏற்ப மையத்தை
> உருவாக்குவோம்.

சிறந்த வில்வித்தைக்காரராகத்தான் இருக்க
வேண்டும். அவர் இந்தக் கலையில்,
அர்ஜுனனைப் போல நிபுணத்துவம்
பெற்றிருக்க வேண்டும்." என்று நினைத்துக்
கொண்டார்.

அப்போது அம்பு, வில்லோடு அங்கே
ஒரு சின்னப் பையனைப் பார்த்தார்; அந்த
மரங்களில் சொருகி இருந்த அதே மாதிரியான
வர்ணம் பூசப்பட்ட அம்புகளே அவனிடமும்
இருப்பதை அவர் பார்த்தார்.

"இந்த அம்புகளை எல்லாம் எய்தது நீதானா?" என்று கேட்டார் ராஜா.

"ஆமாம், நான்தான்," என்றான் அந்தச் சிறுவன்.

அந்தச் சிறுவனைப் பாராட்டிய ராஜா, "இன்றையிலிருந்து நீதான் என்னுடைய இராணுவத்தின் தளபதி. வில்வித்தையில் நீ பெற்றிருக்கும் நிபுணத்துவத்தையும், உனது சக்தியையும் திறமையையும் நான் பாராட்டுளிகிறேன்.

தயவுசெய்து எனக்குச் சொல், இந்தச் சின்ன வயதிலேயே எப்படி உன்னால் இந்த வித்தையில் நிபுணத்துவம் பெற முடிந்தது? சிறு வயதிலேயே, உன்னால் எப்படி இந்த அளவிற்கு முழுவளர்ச்சி பெற முடிந்தது?" என்று கேட்டார்.

அந்தப் பையன் சொன்னான், "அது ரொம்ப சுலபம். முதலில் அம்பெய்து விட்டு, பின்னால் அதைச் சுற்றி வளையங்களை வரைந்துவிட்டேன். அவ்வளவுதான்!" என்றான்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் அஹங்காரத்தோடு கடவுளை வழிபடும்போது, அதையேதான் நாமும் செய்கிறோம். மையத்தைக் குறி வைத்து அம்பு எய்யாமல், முதலில் அம்புகளை எய்துவிட்டு, பின்னர் வட்டங்களை வரைந்து விடுவோம்.

அம்பை மையத்தைக் குறி வைத்து எய்வதை விட்டுவிட்டு, நமது இலக்கிற்கு ஏற்ப மையத்தை உருவாக்குவோம். அஹங்காரத்தோடு நாம் கடவுளை வழிப்பட்டால், நமது அஹங்காரத்தைச் சரணடையச் செய்யாமல், அறிவின் துணையோடு நாம் நமது அஹங்காரத்தைதான் பலப்படுத்துவோம். அது மிகவும் ஆபத்தானது.

Peacock feather icon

ஏழுவிதமான மனிதர்கள்

அடுத்த நிலைதான் இறுதியான நிலையாகும். இந்த நிலையில், நன்றி உணர்வுடன், மிகுந்த நன்றி உணர்வுடன் நாம் கடவுளை அணுகுகிறோம். இங்குதான் ஒட்டுமொத்த உறவும் ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கிறது. நாம் இனிமையான நன்றியுணர்ச்சியில் மூழ்கிவிட்டதாகவும் மிக ஆழமாக கடவுளுடன் இணைந்துவிட்டதாகவும் உணர்கிறோம். இங்கு நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறுகிறது.

> மக்கள்,
> கடவுளை
> அணுகுவது
> போலவே,
> ஞானிகளையும்
> எல்லாத்
> தளத்திலிருந்தும்
> அணுகுகிறார்கள்.

வரங்களை அளிக்கும் கடவுளை மட்டும்
வணங்கிக் கொண்டிருந்த நமது பேராசை
என்கிற முதல் நிலையிலிருந்து, நம்மைக்
காக்கும் கடவுளிடம் முறையிடும் பயம் என்ற
இரண்டாம் நிலைக்குப் போகிறோம்.

அதற்குப் பிறகு கவலை என்ற நிலைக்குப் போகிறோம்.

நாம் கவலையில் மாட்டிக் கொண்டால்
புத்தர்தான் நமக்குப்பொருத்தமாக
அமைகிறார். ஏனென்றால் புத்தர்தான்
அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பதாக
நமக்குத் தெரிகிறார்.

பெயர் மற்றும் புகழில் மாட்டிக் கொண்டவர்களுக்கு, பெயரும் புகழும் கொடுக்கும் கடவுள்கள்தான் பொருத்தமாக அமைகின்றன.

இவ்வாறு கடவுள்களை அணுகுவது போலவே, இந்த எல்லா மட்டங்களிலிருந்தும் மக்கள் ஞானிகளையும் அணுகுகிறார்கள்.

என்னிடம் வருபவர்களில் ஏழுவிதமானவர்களை நான் பார்த்திருக்கிறேன்:

முதலாவது வகையினர், பேராசையுடன் என்னிடம் வருபவர்கள்;

இரண்டாவது வகையினர், பயத்துடன் என்னிடம் வருபவர்கள்; மூன்றாவது வகையினர், கவலையுடன் என்னிடம் வருபவர்கள்;

நான்காவது வகையினர், பெயர் மற்றும் புகழுக்காக என்னிடம் வருபவர்கள்;

ஐந்தாவது வகையினர், பொறாமை மற்றும் ஒப்பீட்டோடு என்னிடம் வருபவர்கள் (இங்கு ஒப்பீடு என்றால், அந்த குருவிற்கு இரண்டே இரண்டு ஆச்ரமங்கள்தான் இருக்கிறது, இவருக்குச் சின்ன வயதிலேயே நிறைய ஆச்ரமங்கள் இருக்கின்றன, அதனால் இவர்தான் பெரிய குருவாக இருக்க வேண்டும் என்று வருபவர்கள்);

ஆறாவது வகையினர், அஹங்காரத்துடன் என்னிடம் வருபவர்கள், "நான் பரமஹம்ஸ நித்யானந்தரின் சீடர். நான் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு என் பெயர் தெரியும். என்னை அவர் என் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்," என்று சொல்லி தம் அஹங்காரத்தைப் பலப்படுத்திக்கொள்ள வருபவர்கள். அஹங்கார திருப்திக்காக மட்டுமே என்னைத் தேடி வருபவர்கள்;

இறுதியாக ஏழாவது வகையினர் - அவர்கள் மிகச் சிலராகத்தான் இருப்பார்கள், நன்றியுணர்வால் என்னைத் தேடி வந்தவர்கள்.

நமது
வலுவான கற்பனையை
நம்மால்
விட முடியாதபோது,
இயல்பாகவே
நம்மால்
உண்மையை
ஏற்றுக்கொள்ள
முடிவதில்லை.

பேராசையோடு வருபவர்களிடம் இன்னொரு பிரச்சினையுமிருக்கிறது. அவர்களுக்குப் பேராசை மட்டுமிருப்பதில்லை, அவர்களுக்கு ஒரு குருவைப் பற்றிய அவர்களின் சொந்தக் கருத்துகளும், கற்பனைகளும் சேர்ந்தே இருக்கும்.

அவர்கள் தங்கள் கற்பனையில் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்தக்கற்பனைக்கு நான் பொருந்துகிறேனா இல்லையா என்று அவர்களுடைய கற்பனையுடன் என்னைப் பொருத்திப் பார்ப்பார்கள்.

என்னுடைய இளம் வயதின் காரணமாக நான் மற்றொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டி இருக்கிறது.

எங்களின் இந்திய ஆச்ரமம் ஒன்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை

உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:
ஒரு நாள் ஆச்ரமத்தின் வெளியே, என்னுடைய
தலைப்பாகையை அணியாமல், நான்
தனியாக உட்கார்ந்திருந்தேன். என்னைச்
சுற்றி யாருமே இல்லை. எங்களுடைய ஆச்ரமம்
ஒரு காட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால்
கரடியும் சிறுத்தையும்கூட அவ்வப்போது
காட்டிலிருந்து வரும்.

நாம்
எந்த அளவிற்குப்
பக்குவம்
அடைகிறோமோ,
அந்த அளவிற்கு
முழுமையைத்
தரக்கூடியவரோடு
நமக்குத் தொடர்பு
கிடைக்கும்.

நான் ஒரு பாறையின் மீது தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

அப்போது, படித்த, வயதான ஒருவர் வந்தார். வந்தவர் என்னிடம் "நான் ஸ்வாமிஜியைப் பார்க்க வேண்டும். அவர் எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டார்.

உடனே நான் சொன்னேன், "அந்த ஆனந்த சபாவிற்கு (த்யான அரங்கம்) போய் உட்காருங்கள், அவர் இன்னும் ஓர் அரை மணி நேரத்தில் அங்கு வருவார்,'' என்று சொன்னேன். அவரும் த்யான அரங்கத்தில் போய் அமர்ந்திருந்தார்.

அரை மணி நேரம் கழித்து, நான் என் தலைப்பாகை, ருத்ராட்ச மாலை எல்லாம் அணிந்துகொண்டு அங்கே போய், என்னுடைய ஆசனத்தில் உட்காரச் சென்றேன். அப்போது அந்த மனிதர் சொன்னார், "இல்லை! நான் பெரிய ஸ்வாமிஜியைப் பார்க்க வேண்டும். நான் குருஜியைப் பார்க்க வேண்டும்,'' என்று சொன்னார்.

நான் அவரிடம், "தயவுசெய்து, என்னை மன்னியுங்கள். இந்த ஆச்ரமத்தில் ான்தான் ஸ்வாமி. நீங்கள் யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டேன்.

அதற்கு அவர் "நான் பரமஹம்ஸ நித்யானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் என் உறவினர் ஒருவருக்கு த்யான சிகிச்சை அளித்து நோயைக் குணப்படுத்தியிருக்கிறார். நான் அவரைத்தான் சந்திக்க விரும்புகிறேன்,'' என்றார்.

நான் அவரிடம், அவர் உறவினரின் பெயரையும் சொல்லி, அவருக்கு என்ன நோய் இருந்தது என்பதையும் சொல்லி, அவருக்கு நான்தான் த்யான சிகிச்சை கொடுத்தேன் என்று சொன்னேன். பிறகு, "நான்தான் பரமஹம்ஸ நித்யானந்தர்,'' என்றும் சொன்னேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவரால் அதை நம்பவே முடியவில்லை. அவர் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

பிறகு நான் சொன்னேன், "பொதுவாக, இந்தியாவில் ஸ்வாமிகள் அடையாள அட்டை எதையும் கையில் வைத்திருப்பதில்லை. இருந்தாலும், இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். அதில் எழுதியிருக்கும் பெயரையும் அந்த முகத்தையும் பாருங்கள். நான்தான் ஸ்வாமிஜி! இதற்குமேல் உங்களைச் சமாதானப்படுத்த என்னால் ஒன்றும் சொல்ல முடியாது," என்றேன்.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! ஆனால் இதுதான் உண்மை. அவர் சொன்னார், "உங்களிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை," என்று சொல்லி விட்டு,வேறு எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஒரு குரு எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் வலுவான கற்பனை மற்றும் ஊகங்களால், அவரால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இதுபோன்ற வலுவான கற்பனைகளும், ஊகங்களும் நமக்குள் இருக்கும்போது, நம்மால் உண்மையுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. அப்பொழுது நிஜத்துடன் தொடர்புகொள்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும்.

உடலைத் தாண்டிய உணர்வை நாம் அனுபவமாக உணர்ந்தால் மட்டுமே, கடவுளைக் காதலனாகவோ அல்லது காதலியாகவோ மதுர பாவனையுடன் பார்க்க முடியும்.

அந்த மனிதர் சொன்னார், "எனக்கு உங்களிடம் கேட்க வேண்டியதோ, உங்களோடு பேச வேண்டியதோ எதுவுமே இல்லை," என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

'நமது வலுவான கற்பனையை நம்மால்விட முடியாதபோது, இயல்பாகவே நம்மால் உண்மையுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை.' இதே போலத்தான் பயத்தோடு வருபவர்கள், ஒருபோதும் பயத்தை விட்டு வெளியில் வர முடிவதில்லை. அவர்கள் பயத்தில் மாட்டிக்கொண்டு நின்று விடுவார்கள், ஏனென்றால் பயம் என்பதும் ஒரு கற்பனைதான்.

Peather Icon