KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/ஐந்து விதமான பாவனைகள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

ஐந்து விதமான பாவனைகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மக்கள் ஞானியை அல்லது கடவுளை வெவ்வேறு மன நிலைகளோடு தேடுகிறார்கள். நாம் பக்குவம் அடைய, அடைய நமக்கு முழுமையை, பூரணத்துவத்தைத் தரக்கூடிய ஒருவரோடு நாம் ஆழமாக இணைந்திருப்பதாக உணரத் தொடங்குகிறோம்.

தயவுசெய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் பக்குவம் அடையும்போது, பயத்தையும் பேராசையையும் கடக்கும்போது, நாம் அதே போன்ற ஞானியை, அதே கடவுளை அதிகப் பக்குவத்துடன், ஆழமான நெருக்கத்துடனும் அணுகுகிறோம். அவரோடு நாம் மிக ஆழமாக இணைந்திருப்பதை உணர்வோம்.

பாகவதத்தில், ஐந்து வெவ்வேறு பாவனைகள் பற்றிச் சொல்லப்படுகின்றன. நாம் பொதுவாக இந்தப் பாவனைகளோடுதான் ஒரு ஞானியிடம் அல்லது கடவுளிடம் தொடர்புகொள்கிறோம்:

1) தாஸ பாவம்: இவர்கள் கடவுளைத் தலைவராகவும், தங்களைச் சேவகர்களாகவும் பார்ப்பார்கள். அனுமான் இராமரைத் தமது தலைவராகப் பார்த்து, சுதந்திரம் அடைவதற்கான ஒரு வழியாக இராமருக்குச் சேவை செய்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

2) வாத்ஸல்ய பாவம்: இவர்கள் கடவுளைத் தெய்வீக குழந்தையாகப் பாவிப்பார்கள். கிருஷ்ணரைத் தமது மகனாகப் பார்த்த யசோதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

Note banner

பிரார்த்தனை
என்பது
பேராசை;
பாவமன்னிப்பு
என்பது
பயம்!

3) ஸக பாவம் அர்ஜூனன் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டதைப் போன்று இவர்கள் கடவுளை அல்லது குருவை நண்பராகப் பார்ப்பார்கள்.

4) மாத்ரு' பாவம்: இராமகிருஷ்ணர் காளியைத் தாயாக நினைத்து வணங்கியது போன்று இவர்கள் கடவுளை அல்லது குருவைத் தங்களுடைய தந்தையாக அல்லது அன்னையாகப் பார்ப்பார்கள்.

இராமகிருஷ்ணர், உண்மையாகவே காளியைத் தமது தாயாகப் பார்த்தார். அவர்

பரமஹம்ஸ ராமகிருஷ்ணர்

சாப்பிட்டுப் பார்த்துத்தான், எப்போதும்
காளிக்கு உணவு படைப்பார். கோயில்
நிர்வாகிகள் இராமகிருஷ்ணரிடம்,
"நீங்கள் இப்படிச் செய்யக்கூடாது.
இது சமயவிரோதமானது! நீங்கள்
சுவைத்த உணவைக் கடவுளுக்குப்
படைக்கக்கூடாது," என்றார்கள்.

இராமகிருஷ்ணரோ, "நீங்கள் இப்படிச் சொன்னால், நான் இந்தக் கோயிலைவிட்டுப் போய் விடுகிறேன். நான் சுவத்துப் பார்க்காமல் என் அன்னைக்கு உணவைக் கொடுக்க மாட்டேன். அது நல்ல உணவு என்பதை நான் உணர்ந்தால் ஒழிய, என் அன்னைக்கு அதைக் கொடுக்க மாட்டேன். கோயிலை விட்டு வெளியேறி, வெளியில் இருந்து வழிபடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்படிச் செய்வதை நான் நிறுத்த மாட்டேன்," என்று சொல்லி விா்ட்டார்.

இராமகிருஷ்ணர், காளியைத் தமது அன்னையாக மிக ஆழமாக நினைத்தார்.

5) இறுதியாக, ஐந்தாவதாக மதுர பாவம் - இவர்கள் கடவுளைத் தமது காதலனாக அல்லது காதலியாகப் பார்ப்பார்கள். ராதை கிருஷ்ணரைப் பார்த்த மாதிரி. இந்த பாவத்தை அடைய நிறைய பக்குவம் அடைந்திருக்க வேண்டும்.

உடலைத் தாண்டிய உணர்வை நாம் அனுபவமாக உணர்ந்தால் மட்டுமே, கடவுளைக் காதலனாகவோ அல்லது காதலியாகவோ மதுர பாவனையுடன் பார்க்க முடியும்.

இந்த ஐந்து வெவ்வேறு பாவனைகள் மூலமாகதான், மக்கள் கடவுளுடன் தொடர்புகொள்கிறார்கள்.

வெவ்வேறு பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு பாவனைகள் நமது மனத்திற்குப் பொருந்துகிறது. நமது பக்குவ நிலைக்கு ஏற்ப, நமது பாவனை வேறுபடுகிறது.

நாம் பக்குவமடையும் அளவிற்கு நமக்குள் நன்றியுணர்வு நிறைந்திருக்கும். குறைவாக பக்குவம் அடைந்திருக்கும்போது, நமது வாழ்க்கையே பிரார்த்தனைகளால் நிரப்பி வைத்திருப்போம். பிரார்த்தனை என்பது பேராசை; பாவமன்னிப்பு என்பது பயம்!

அதனால்தான், சொல்கிறேன், "நன்றியுணர்வுதான் மிகச் சிறந்த பிரார்த்தனை; 'நன்றி' என்பதுதான் மிகச் சிறந்த மந்திரம்."

நாம் பிரார்த்தனையையும் பாவமன்னிப்பையும் கடந்து சென்றால் மட்டுமே நம்மால் நன்றியுணர்வை அடைய முடியும். நம்மால் கடவுளை உணர முடியும்.

எல்லோரும் கடவுளை ஒரே வழியில் உணர்வதில்லை

படிப்படி ‍याக நாம் எப்படி உயர்வது, இறுதியான பக்குவ நிலையை அடைவது எப்படி, இறுதியான நிலையில் தெய்வீகத்தை உருவாக்கி, உணர்வது எப்படி என்பதைக் கிருஷ்ணர் விளக்குகிறார். இந்தச் செயல்முறையை அவர் படிப்படி ‍याக விளக்குகிறார்.

கிருஷ்ணர் இதை எப்படி விளக்குகிறார் என்று பார்ப்போம். நாம் உயர்ந்த பக்குவ நிலைக்குச் செல்லவும், உள் உணர்வை அனுபவமாகப் பெறவும் கிருஷ்ணர் என்ன நுட்பத்தை அளிக்கிறார்?

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ரு 'தினோர்ஜுந |
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷப || 7.16

> 'நன்றியுணர்வு'தான் மிகச் சிறந்த பிரார்த்தனை; 'நன்றி' என்பதுதான் மிகச் சிறந்த மந்திரம்.

நாம் கடவுளை எப்படி அணுகுகிறோம்
என்பதன் அடிப்படையில்தான், சமுதாய
அமைப்புமுறையும் உருவாக்கப்படுகிறது.
நாம் எவ்வளவு பக்குவநிலையில்
இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே
ஒட்டுமொத்த சமுதாய அமைப்புமுறையும்
உருவாக்கப்படுகிறது. நாம் எவ்வளவு
பக்குவப்பட்டிருக்கிறோம் என்பதைப்
பொறுத்தே, சமுதாயத்துடன் நாம் எந்த
அளவிற்குப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதும்
இருக்கிறது. இதே பக்குவ நிலையில்தான்,
நாம் கடவுளையும் அணுகுகிறோம்.

நவ்மிடம் பணம் இல்லாமல் இருந்தால், நமது வாழ்க்கையில் பணம் இல்லை என்று நாம் உணர்ந்தால், நாம் பணத்தைத் தரும் கடவுளிடம் போகிறோம்.

கல்வியறிவு இல்லையென்றால், கல்வியறிவைத் தரும் சரஸ்வதியிடம் போகிறோம். நாம் பாதுகாப்பாக இல்லை என்று உணர்ந்தால், நம்மைப் பாதுகாக்கும் கடவுளான அன்னை துர்கா விடமோ அல்லது காளியிடமோ போகிறோம்.

வெவ்வேறு நோக்கங்களுடன் வரும் இந்த நான்கு வகையினரும் ஒரே கடவுளிடம்தான் போகிறார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே வழியில் கடவுளை உணர்வதில்லை.

நமக்கு ஆன்மீக அனுபவம் வேண்டும் என்றால், நாம் கடவுளின் அவதாரங்களை, கடவுளின் உச்சமான வெளிப்பாடுகளைத் தேடிப் போகிறோம். கிருஷ்ணர் சொல்கிறார், “நான்குவிதமான மக்கள் என்னிடம் வருகிறார்கள் – சதுர்விதா பஜந்தேமாம்.” இந்த நான்கு விதமானவர்களை நான்கு சமுதாயங்களாக அவர் விளக்குகிறார்.

முதல் வகையினர் மன அழுத்தத்துடன் வருபவர்கள். அதாவது தொழிலாளர் வர்க்கம் அல்லது சூத்ரர்கள்.

இரண்டாவது வகையினர் பணத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள், அதாவது வியாபாரிகள் அல்லது வைச்யர்கள்.

மூன்றாவது வகையினர் துடிப்பாக இருப்பவர்கள், இவர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருப்பார்கள், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள், ததஃகிம்? ததஃகிம்? ததஃகிம்? (அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன?) என்று கேட்டுக் கொண்டே இருப்பவர்கள். உதாரணத்திற்கு க்ஷத்ரியர்கள், அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால், அவர்களால் ஓய்வாகவோ அமைதியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது.

நான்காவது வகையினர், பூர்ண அறிவைத் தேடுபவர்கள்: அவர்கள்தான் ப்ராஹ்மணர்கள்.

“இந்த நான்கு வகையானவர்களும் என்னிடம் வருகிறார்கள், என்னை அடைகிறார்கள், ஆனால் வெவ்வேறு நிலைகளை அடைகிறார்கள்.” தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், வெவ்வேறு நோக்கங்களுடன் வரும் இந்த நான்கு வகையினரும் ஒரே கடவுளிடம்தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே வழியில் கடவுளை உணர்வதில்லை. அவர்கள் கடவுளை வெவ்வேறு வழிகளில் உணர்கிறார்கள்.

Feather Icon

கஷ்டத்தை உணர்ந்தவர்களுக்கானது - ஆன்மீகம்

நீங்கள் ஒரே கடவுளிடமோ அல்லது வேறு வேறு கடவுளிடமோ போகலாம். ஆனால் உங்களின் பக்குவ நிலைக்கு ஏற்பதான், உங்களால் கடவுளை உணர முடியும்.

நீங்கள் பயம் அல்லது பேராசையில் மாட்டிக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அதற்கான கடவுளிடம்தான் போவீர்கள். நீங்கள் அந்த வகையான கடவுள்களால்தான் கவரப்படுவீர்கள்.

அதனால்தான், நான் மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்வதுண்டு, "கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்வது மிகவும் சுலபம். ஆனால் ஒரு குருவிடம் போய் தியானம் செய்வது மிகவும் கஷ்டம். அது பக்குவமடைந்தவர்களுக்கான பாதை; அது எல்லோருக்குமானது அல்ல."

கோயில்களில் நாம் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கலாம்; ஆனால் ஆன்மீக இடங்களில், சில நூற்றுக்கணக்கானவர்களைத்தான் நம்மால் பார்க்க முடியும். இது எல்லோருக்குமானது அல்ல; இது ஒரு மிகவும் விலை உயர்ந்த பொருள்!

ஆன்மீகம் என்பது
மிக விலை உயர்ந்த
பொருள்;
வெகு சில
புத்திசாலிகளால்
மட்டும்தான்
அதைப் பெற முடியும்!

ஆன்மீகம் என்பது மிக விலை உயர்ந்த
பொருள்; ஒரு சில புத்திசாலிகளால்
மட்டும்தான் அதைப் பெற முடியும்!

ஆன்மீகத்தின் விலை என்பது, நாம்
எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
என்பதைப் பொறுத்து இருக்கிறது!

நாம் போதிய கஷ்டத்தை அனுபவித்திருந்தால்
மட்டும்தான், நம்மால் ஆன்மீகத்திற்குள்
நுகைய முடியும். போதிய அளவிற்கு நாம்

கஷ்டத்தை அனுபவித்து இருக்கவில்லை
என்றாலோ அல்லது நாம் போதிய அளவிற்கு
கஷ்டத்தை அனுபவித்து விட்டோம்
என்று உணராமல் இருந்தாலோ, நம்மால்
ஆன்மீகத்திற்குள் நுழைய முடியாது.

ஆன்மீகம், என்பது கஷ்டத்தை
அனுபவித்தவர்களுக்கும், கஷ்டத்தை
அனுபவித்து விட்டேன் என்று புரிந்து
கொண்டவர்களுங்கும்தான்.

இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கிறது: கஷ்டப்படுவது மட்டுமல்ல, நாம் கஷ்டப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் இதில் அடங்கி இருக்கிறது.

இப்படிப் புரிந்துகொள்வதைத்தான் நான் ‘புத்திசாலித்தனம்’ என்கிறேன். இந்தப் புத்திசாலித்தனம் வயது, அனுபவத்தைக் கடந்து ஏற்படுகிறது. இந்தப் புத்திசாலித்தனமிருந்தால், வாழ்க்கை அனுபவத்தின் ஒரு துளி போதும்; கஷ்டம் எப்படி ஏற்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பின் நாம் அதில் மாட்டிக்கொள்ள மாட்டோம்!

கஷ்டப்படுவது, கஷ்டப்படுவதைப் புரிந்துகொள்வது - இந்த இரண்டுமே நாம் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைய தேவைப்படுகிறது. ஆன்மீகம் என்பது மிக விலை உயர்ந்த பொருள். இது எல்லோருக்குமானது அல்ல; மதம்தான் எல்லோருக்குமானது; பக்குவமடைந்த சிலர் மட்டுமே ஆன்மீகத்திற்குள் நுழையமுடியும்.

அன்பு மற்றும் நன்றியுணர்வுடன் என்னிடம் வருபவர்தான் சிறந்த மனிதர், அவருக்கு நான் நெருக்கமாக இருக்கிறேன். அவர் எனக்கு நெருக்கமாக இருக்கிறார். இந்த ஒரு வரியின் மூலம், கிருஷ்ணர் முழு உரையாடலையும், ஒட்டுமொத்தக் கருத்தையுமே முடித்து விடுகிறார்.

எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் துவங்களாம்

கிருஷ்ணர் சொல்கிறார், "வெவ்வேறு நிலைகளில் இருந்து தொடங்குவது சரிதான். ஆனால் அதிலேயே நின்று விடாதீர்கள்." நாம் எந்த மட்டத்திலிருந்தும் ஆரம்பிக்கலாம். ஆனால் அங்கேயே நின்று விடக்கூடாது, தேங்கி விடக்கூடாது.

இது முதல் நிலையிலிருந்து அடுத்து இரண்டாவது நிலைக்குச் செல்லாமல் நாம் தோல்வியுற்று இருப்பது போன்றது. அதாவது, இது நாம் சொகுசான, பழக்கப்பட்ட மட்டத்திலேயே நிற்க விரும்புவதைப் போன்றது.

இந்தப் பக்குவ நிலையை அடைவதற்கும் புரிந்துகொள்வதற்கும் பல பிறவிகள் தேவைப்படுகின்றன. இருந்தாலும், 'பக்குவமடைய இன்னும் சில பிறவிகள் எடுத்தாலும் பரவாயில்லை. எனக்கு ஒன்றும் அவசரமில்லை?' என்று நாம் நினைக்கக்கூடாது.

பல பிறவிகள் எடுக்க வேண்டியதிருக்கும் என்று நான் சொல்லும்போது, சிலர் 'பக்குவமடைய நான் இன்னும் சில பிறவிகள் எடுத்து விட்டுப் போகிறேன்,' என்றுகூட நினைக்கலாம். இப்போது அதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

நாம் பேசும்போது, விஷயங்களை மிகத் தெளிவாக விளக்கிவிட வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் மக்கள் அதனை எத்தனை விதமான வழிகளில் புரிந்துகொள்வார்கள் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது!

ஒரு சின்ன கதை:

ஒருமுறை ஓர் அறிஞர், அரிச்சந்திரன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு

மறுபிறப்பு என்றால் உடலளவில் மீண்டும் பிறப்பெடுப்பது என்று அர்த்தமில்லை; இருப்புத்தன்மையளவில் மீண்டும் பிறப்பெடுப்பது.

அரிச்சந்திரன் கதை தெரியும். ஒரு ராஜாவாக இருந்த இவர் எப்போதும் ஸத்யத்தை மட்டுமே பேசினார், தமது ஸத்யத்தைக் காப்பாற்ற தமது மனைவியையே விற்றார். ஸத்யத்தைக் காப்பாற்றுவதில் அவர் அந்த அளவிற்கு மிக உறுதியாக இருந்தார். அதுவே அவரது சிறப்பிற்கும், உயர்விற்கும் காரணமாக இருந்தது.

முழுக்கதையையும் சொல்லி முடித்தார் அந்த அறிஞர் கதை முடிந்ததும் ஒருவரிடம் கேட்டார், "இந்தக் கதையில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்றார்.

"ஐயா, வாழ்க்கையில் ஸத்யம் மிகவும்
முக்கியம் என்பதை நான் புரிந்து
கொண்டேன். ஸத்யத்திற்காக நாம் எதையும்
விட்டு விடலாம். ஸத்யமே இறுதியானது,"
என்று அந்த நபர் சொன்னார்.

அந்த அறிஞருக்கு ஒரே சந்தோஷம்.
அவர் அடுத்த நபரைப் பார்த்து கேட்டார்,
"உங்களுக்கு என்ன புரிந்தது?"

அவர் சொன்னார், "ஐயா, ஒரு ஆத்திர
அவசரத்திற்கு மனைவியை விற்றால்கூட
பரவாயில்லை என்பதை நான் புரிந்து
கொண்டேன்," என்றார்.

ஒரே கதைதான், இரண்டு நபர்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான புரிதல் ஏற்படுகிறது! அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், புரிதலைத் தவறவிட்டு விடாதீர்கள்.

'எத்தனை ஞானிகளோ அத்தனை பாதைகள் இருக்கின்றன' என்ற ஒரு வாசகம் உண்டு. இருந்தாலும், "எத்தனை சீடர்களோ அத்தனை பாதைகள் இருக்கின்றன!" என்றே நான் சொல்லுவேன்.

ஞானி ஒரே ஸத்யத்தைச் சொன்னாலும்கூட, அவருடைய சீடர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வழியில்தான் புரிந்துகொள்கிறார்கள்.

'புரிதல்' என்பது ஸத்யத்தைக் கேட்கும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பக்குவ நிலையைச் சார்ந்து இருக்கிறது.

எல்லோரும் கடவுளைத் தேடுகிறார்கள், ஆனால் வேறு வேறு தளத்தில் இருந்து தேடுகிறார்கள். அதனால் ஒருவர் எந்த மனப்பான்மையுடன் தேடுகிறார் என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில்தான் ஒருவர் கடவுளை வெவ்வேறு வகையில் உணர்கிறார். நாம் புரிதலை தவற விட்டுவிட்டோம் என்றால், ஸத்யத்தை தவறாகவே புரிந்துகொள்வோம். இங்குக் கிருஷ்ணர் சொல்கிறார், "இவர்களில், புத்திசாலி எப்போதுமே என்னிடம் பக்தியுள்ளவராக இருக்கிறார். அவரே சிறந்தவர் ஆவார்."

ஆரம்பிக்கும்போது, நீங்கள் எந்த மட்டத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம், ஆனால் இறுதி நிலையை அடைய நீங்கள் கண்டிப்பாக முயற்சிசெய்ய வேண்டும். நான் தெளிவுபடுத்த விரும்பும் மற்றொரு விஷயம், "ஓ! இந்த நிலையை அடைய பல பிறவிகள் ஆகலாம் என்று கிருஷ்ணரே சொல்கிறார்; அதனால் இன்னும் பல பிறவிகளை எடுத்து, பிறகு நான் பக்குவமடைந்துகொள்கிறேன்," என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.

இல்லை! இப்போது நீங்கள் அந்த அறிவிற்குள் நுழைந்தால், இப்போதே நீங்கள் அனுபவத்தைப் பெறுவீர்கள். அதைத் தள்ளிப் போட வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு நொடியும் உங்களுக்குப் புதிய பிறப்புதான்! ஒவ்வொரு நொடியும் இறப்புதான், ஒவ்வொரு நொடியும் பிறப்புதான். வெளியேறும் சுவாசம் இறப்பு, உள்ளே வரும் சுவாசம் புதிய பிறப்பு. அதனால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்,

குருவின் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே அவர் உங்களுக்குள் இருப்பார்

ஒவ்வொரு நொடியும் நீங்கள் இறந்து பிறக்கிறீர்கள். இந்த நொடிகூட உங்களுக்குப் புதிய பிறப்பாக இருக்க முடியும். இந்த ஸத்யத்தைப் புரிந்து கொண்ட ஒருவர், புதிய பிறப்பு எடுக்கிறார். அவரைத்தான் த்விஜ என்பார்கள்.

தீக்ஷை பெற்ற ஒருவரை ஸம்ஸ்க்ருதத்தில் த்விஜ என்பார்கள். த்விஜ என்றால் மறுபிறப்பு எடுத்தவர் அல்லது இரு பிறப்பாளர் என்று பொருள். எல்லா ஸந்யாஸிகளும் இரண்டாவது பிறப்பு எடுத்தவர்கள் அல்லது த்விஜதான்.

அவர்கள், 'மறுபிறப்பு எடுத்தவர்கள்' அல்லது 'மீண்டும் பிறந்தவர்கள்'. மறுபிறப்பு என்றால் உடலளவில் மீண்டும் பிறப்பெடுப்பது என்று அர்த்தமில்லை; இருப்புத் தன்மையளவில் மீண்டும் பிறப்பெடுப்பது.

இருப்புத் தன்மை நிலையில், அவர்கள் ஒரு புதிய பிறப்பு எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே பிறப்பைக் கொடுத்துகொள்கிறார்கள். அவர்கள் புதிதாகப் பிறந்தவர்களாகிறார்கள். அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்,இந்த நொடியில்கூட உங்களுக்குள் ஒரு புதிய பிறப்பு நிகழ முடியும்.