KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கிருஷ்ணர் சொல்கிறார்: அஹம் ஸ ச மம ப்ரிய: "அவனே எனக்கு நெருக்கமானவன், அவனுக்கு நான் நெருக்கமானவன்.

அவன் எனக்குள் இருக்கிறான், நான் அவனுக்குள் இருக்கிறேன்."

அவர் உங்களுக்குள் இருக்கிறார், அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்.

இந்த இறுதியான ஸத்யத்தை நீங்கள் புரிந்து கொண்ட உடனேயே, சரியான மனப்பான்மையுடன் நீங்கள் கடவுளை அணுகும்பொழுது, நீங்களும் கடவுளாக மாறி விடுகிறீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பாவனையை மாற்றிக்கொள்வது மட்டும்தான். அனைத்தும் முடிந்துவிட்டது! உங்கள் பாவனையை மாற்றிக்கொள்ளுங்கள், எல்லாமே செய்துமுடிக்கப்படும்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அல்லது குருவின் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே, அவர் உங்களுக்குள் இருப்பார்.

குரு அல்லது கடவுளுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, அந்த வடிவத்தை மட்டும் ரசித்துக் கொண்டிருப்பது, கிருஷ்ணர் குறிப்பிடுகிற சேவை இல்லை. அப்படிச் செய்தீர்களானால், நீங்கள் உங்கள் சுயவிருப்பங்களைப் பூர்த்திச் செய்து கொள்ளும் நோக்கோடு மட்டுமே அவரை விரட்டிக் கொண்டிருப்பீர்கள்.

கடவுளின் செயல்களுக்காக உங்களை அர்ப்பணிக்கும்போது, நீங்கள் பக்தர்களாக ஆகிறீர்கள். அந்நிலையில்தான் நீங்கள் கடவுளின் அன்புக்குரியவராக மாறுகிறீர்கள். அப்போது உங்களின் வழிபாடு சுயநல நோக்கம் கொண்டதாக இருப்பதில்லை. அது எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, அது இறைவனுடைய விருப்பங்களை, நோக்கங்களை நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.

> நாம்
> பல பிறப்புகள்,
> இறப்புகளைக்
> கடந்து வந்தால் ஒழிய,
> நம்மால்
> ஒரு
> ஜ்ஞான குருவை
> அடைய முடியாது.

நித்தியானந்த தியானபீடம் திருவண்ணாமலை

என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், என் முன்னால் உட்கார்ந்துகொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும், என் வார்த்தைகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் நிறுத்துங்கள்; ஸங்கத்திற்காக வேலை செய்யுங்கள்.

மக்களுக்குள் உருமாற்றத்தைக் க்கொண்டுவருவதற்கு எனக்கு உதவுங்கள்.

என் முன்னால் உட்கார்ந்துகொண்டு என்னை நீங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் என் பின்னால்தான் வந்து கொண்டிருப்பீர்கள்.

என்னுடைய ஸங்கத்திற்காக வேலை செய்யுங்கள், நான் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்.

"குருவைப் பின்பற்றுங்கள்," என்று புராணங்கள் சொல்வது, அவர்களின் வடிவத்தைப் பின்பற்றுங்கள் என்று அர்த்தத்தில் கிடையாது. அவை குருவின் போதனைகளைப் பின்பற்றச் சொல்கின்றன, அதன் மூலம் நீங்களும் குருவாக முடியும் என்று சொல்கின்றன. குருவின் ஸங்கத்தை, சமுதாயத்தைத்தான் அவை பின்பற்றச் சொல்கின்றன.

அதனால்தான், புத்த பிரார்த்தனைகள்

புத்தம் ச்ரணம் கச்சாமி
தம்மம் ச்ரணம் கச்சாமி
ஸங்கம் ச்ரணம் கச்சாமி

என்று சொல்கிறது.

புத்தம் என்பது இங்கு புத்தரைக் குறிக்காது; அது புத்த நிலையைக் குறிக்கும்; தம்மம் என்பது அவர் கூறிய மொழிகளைக் குறிக்கும்; ஸங்கம் என்பது அவரின் அமைப்பைக்

> குருவின் நோக்கத்தை
> வெளிப்படுத்தும்
> குருவினுடைய நிலை,
> குருவினுடைய போதனை,
> குருவினுடைய ஸங்கம் -
> இந்த மூன்றையும்
> நாம் பின்பற்றும்போது,
> சுதந்திரத்தின் பாதையில்
> செல்கிறோம்.

குறிக்கும். குருவின் நோக்கத்தை வெளிப்படுத்தும் இந்த மூன்றையும் நாம் பின்பற்றும்போது, நாம் சுதந்திரத்தின் பாதையில் செல்கிறோம்.

இதுவொரு முக்கியமான கருத்து. பல இறப்புகள், பிறப்புகளுக்குப் பிறகுதான், நம்மால் ஒரு ஞானியை அடைய முடியும். அவருடன் தொடர்புகொள்ள முடியும். பல இறப்புகள், பிறப்புகளைக் கடந்து வந்தால் ஒழிய, நம்மால் ஒரு ஜ்ஞாந குருவை அடைய முடியாது.

ஆன்மீக முன்னேற்றத்தின் ஏழு படிகள் பற்றி நான் முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்: அதாவது 1) பல கோயில்களுக்குப் போவது, பல விதமான சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வது, புனித யாத்திரை போவது இன்னும் இது போன்ற விஷயங்கள்.

2) நீங்களே சடங்குகள் செய்துகொள்வது.

3) ஒரே கடவுளை நினைத்துப் பிரார்த்திப்பது.

4) சடங்குகளுக்குப் பதிலாக, கடவுளைப் புகழ்ந்து மந்திரங்கள் உச்சரிப்பது.

  1. மந்திரங்களுக்குப் பதிலாக, கடவுளின் வடிவத்தை மனத்தில் நினைத்துத் தியானிப்பது.
  1. ஒரு வடிவத்தை நினைத்து தியானிப்பதற்குப் பதிலாக, அந்த உணர்வுக்குள் மூழ்கி, அந்த வடிவமும், நம் ஆன்மாவும் ஒன்றே என்று உணர்வது, அதாவது கடவுளும், ஆன்மாவும் ஒன்றே என்று உணர்வது.

7) ஸத்யத்தை அனுபவமாக உணர்வது! இந்த ஏழு படிகளையும் ஒரே பிறவியில் கடந்துவிட முடியும் என்று நினைத்து விடாதீர்கள். இந்தப் பக்குவத்தை அடைய மக்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கலாம். இந்தப் பக்குவத்தை அவ்வளவு சாதாரணமாக அடைய முடியாது. இது அடைவதற்கரிய ஒரு நிலையாகும், கிருஷ்ணர் சொல்கிறார், ஸ மஹாத்ம ஸுதுர்லப: உண்மையில், இந்தப் பக்குவத்தை அடைந்த ஆன்மாக்களைப் பார்ப்பது மிகவும் கடினம்."