வாழும் ஞானியால் உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கோயில்களில் கடவுள்களை வழிபடுவது மிகவும் சுலபம். ஏனென்றால் அவை, நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. அவை, நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. கடவுளிடம் நாம் பிரார்த்திக்கலாம், நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்யலாம், அவர் நமக்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டார் என்று நினைத்துக்கொண்டு போய் விடலாம். ஆனால் உயிரோடு வாழும் ஒரு ஞானியோடு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது மிகவும் சிரமம்.
மக்களிடம், “ஞானிகள் அவர்களின் மரணத்திற்குப் பிறகே மிகவும் பிரபலமாகிறார்கள், ஏன்?” என்று கேட்பதுண்டு.
மரணத்திற்குப் பிறகு எல்லா ஞானிகளும் மிகவும் பிரபலமாகிறார்கள். ஏனென்றால் ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது நமக்கு சுலபமாக இருக்கிறது.
அவர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, இதெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தது என்று நினைத்து, நாம் என்ன விரும்புகிறோமோ அதையெல்லாம் செய்ய முடிகிறது.

அதில நமக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை.
நம்மைக் கேள்வி கேட்பதற்கும் அங்கு
யாரும் இல்லை. நம்மை யாரும் எதுவும்
கேட்கமாட்டார்கள். நாம் எதையெல்லாம்
விரும்புகிறோமோ, அதையெல்லாம் செய்து
முடிக்கிறோம், எல்லாவற்றையும் அவர்
ஆசீர்வாதங்களாகக் காட்டிக்கொள்கிறோம்.
அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு
நம்மால் விளையாட முடிகிறது. அது மிகவும்
சுலபமாக இருக்கிறது. அதனால்தான்,
ஞானிகள் இறந்த பிறகு மிகவும்
பிரபலமாகிறார்கள்.
வாழும் ஞானியானவர்
நமது
அஹங்காரத்திற்கு
மரணமாக
இருக்கிறார்.
முக்கியமாக, உடலை விட்டு விட்ட ஞானிகளிடம் நமது அஹங்காரத்தை விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. நாம் அந்தப் புகைப்படங்களை வைத்திருந்தால் போதும், அதற்கு ஒரு மாலையைப் போட்டு விட்டால் போதும், அதற்கு முன் விளக்குகளை ஏற்றி ஆரத்தி காட்டினால் போதும், பிறகு புற உலகத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதை நாம் செய்து கொண்டே போகலாம்!
சில சமயம், நாம் அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு, நம்மைப் பார்க்க வருபவர்களோடு அந்த ஞானியின் இடத்தில் இருந்து பேசுவோம். இதில் எந்தவிதமான பிரச்சினையும் வரப்போவதில்லை. இது ஒரு எளிய விளையாட்டுதான் ஆனால் இந்த ஒட்டுமொத்த விளையாட்டும் நமது அஹங்காரத்தை திருப்திப்படுத்தும் விளையாட்டுதானே தவிர வேறொன்றுமில்லை. அதுதான் அதிலிருக்கும் ஆபத்து.
பல பிறப்பு, இறப்புகளுக்குப் பிறகு பக்குவமடைந்தவர்கள் மட்டுமே, வாழும் ஞானியை சரணடைகிறார்கள்!
உடலை விட்டுவிட்ட ஞானிகளோடு நம்மை நாமே இணைத்துக்கொள்வது மிகவும் சுலபம். ஏனென்றால் அவர்கள் நமது அஹங்காரத்தை கேட்க மாட்டார்கள். நம்முடைய அஹங்காரத்தை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை; அவர்களிடம் நாம் சரணடைய வேண்டியதில்லை. எதுவுமே செய்ய வேண்டியதில்லை.
இதனால்தான் இறந்து போன ஞானிகள் வாழ்ந்த இடங்களிலும், கோயில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. ஏனென்றால் எதுவுமே அங்குச் செய்ய வேண்டியதில்லை என்பதால் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.
அங்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், ‘நாம் எல்லாவற்றையும் செய்துவிட்டோம், நாம் ஆசீர்வதிக்கப்பட்டு விட்டோம்’என்று நினைத்துக் கொள்ளவேண்டியது மட்டும்தான்!
ஆனால் வாழும் ஞானியுடன் நாம் வாழும்பொழுது, நாம் நமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது; ஸத்யத்தை அனுபவமாக உணர வேண்டியிருக்கிறது.
அவர் நம்மைத் தூங்க விடமாட்டார். அவர் நம்மை ஓய்வெடுக்க விடமாட்டார். நாம் ஸத்யத்தை உணரும்வரை அவர் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருப்பார். நாம் நினைத்ததை எல்லாம் செய்ய அவர் நம்மை அனுமதிக்க மாட்டார். அவர் நமது அஹங்காரத்தைத் திருப்திப்படுத்த மாட்டார்.

நீங்கள் வளர்ந்தே தீர வேண்டும்
நான் எப்போதும் மக்களிடம் சொல்வேன், "இறந்து போன ஞானி மரணம் அடைந்து விட்டார். ஆனால் வாழும் ஞானி மரணத்தைப் போன்றவர்!"
வாழும் ஞானி உங்களுக்கு மரணத்தைப் போன்றிருப்பார். அவர் நமது அஹங்காரத்திற்கு மரணமாக இருக்கிறார். நமது விளையாட்டுகளை அவரிடம் விளையாட முடியாது. நாம் வளர்ந்தே ஆகவேண்டும். நாம் பக்குவமடைந்தவர்களாக மாறியே ஆகவேண்டும்.
நாம் அதே பழைய விளையாட்டுகளை
விளையாடிக்கொண்டு, அவர் பெயரை
முன்னால் போட்டுக்கொள்ள முடியாது.
அவர் நம்மை உலுக்கி விடுகிறார். அவர்
நம்மை எழுப்பி விடுகிறார்.
ரமண மஹரிஷியிடம் ஒருவர் கேட்டார், "இந்த ஒட்டுமொத்த உலகமும் மாயை என்றால், குருவையும் அதே கனவில்தான் நான் பார்க்கிறேன், ஞானமடைந்தவர்களையும் அதே கனவில்தான் பார்க்கிறேன், நான் உங்களையும் அதே கனவில்தான் பார்க்கிறேன். இது எனக்கு எப்படி உதவ முடியும்?" என்றார்.
ரமண மஹரிஷி சொன்னார், "நமது கனவில் நாம் ஒரு சிங்கத்தைப் பார்த்தால், என்ன நடக்கும்? உடனடியாக நாம் விழித்துக்கொள்வோம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அதேபோலத்தான், நாம் ஒரு குருவைப் பார்த்தால், நாம் நமது கனவிலிருந்து விழித்துக்கொள்வோம்! குரு ஒரு ஸிம்ஹ ஸ்வப்னமாக இருக்கிறார்!"
வாழும் ஞானிகள் ஒரு கோரக்கனவாக இருக்கிறார்கள். அதனால்தான், நாம் பயப்படுகிறோம். ஒரு வாழும் ஞானியின் அருகில் வர மக்கள்
> வாழும் ஞானிகள்
ஒரு கோரக்கனவாக
இருக்கிறார்கள்.
அதனால்தான்
அருகில் வர
மக்கள்
பயப்படுகிறார்கள்.
பயன்படுகிறார்கள். நம்மால் அதே விளையாட்டை அவரிடம் விளையாட முடியாது. அந்த விளையாட்டு நம்முடையதாக இருக்காது; அது அவருடையதாக இருக்கும்! அவர்தான் இயக்குனர். அதனால்தான், ஒரு வாழும் ஞானியுடன் இயைந்து செல்வது என்பது நமக்கு பயத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது.
பல பிறப்பு இறப்புகளுக்குப் பிறகு இதைப் புரிந்து கொண்டவர்கள், பக்குவமடைந்தவர்கள், போதிய அறிவு இருப்பவர்கள் இவர்கள் மட்டும்தான் என்னை சரணடைகிறார்கள், வாழும் ஞானியிடம் சரணடைகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தொடர்ந்து ஒரே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், குழந்தைகள் மரப் பொம்மைகளை வைத்து விளையாடுவார்கள். அவர்களிடம் நான்கு அல்லது ஐந்து பொம்மைகள் இருக்கும். அவர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு பொம்மைக்குச் சேலை கட்டிவிட்டு, “இது அம்மா,” என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு வேஷ்டி கட்டிவிட்டு, “இது அப்பா,” என்பார்கள். இன்னொரு பொம்மைக்கு, பாவாடை சட்டை மாட்டி விட்டு, “இது தங்கை,” என்பார்கள். இன்னொன்றுக்கு கால்சட்டை மாட்டி விட்டு, “இது அண்ணன்,” என்பார்கள்.
அப்புறம் அவர்கள் விளையாட்டை ஆரம்பிப்பார்கள். “அம்மா சமையல் செய்து கொண்டிருக்கிறார்,” என்று சொல்லிக் கொண்டே, அந்த அம்மா பொம்மையை எடுத்து அடுப்படியில் நிறுத்தி வைப்பார்கள்.
“அப்பா வேலைக்குப் போகிறார்,” என்று சொல்லிக் கொண்டே, அந்த அப்பா பொம்மையை எடுத்து ஒரு சின்னக் காரில் வைத்து, அதை ஓட்டிக்கொண்டு போவார்கள். நிஜவாழ்க்கையில்நடக்கும்சம்பவங்களைப் போன்றே இருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள், “பீப்... பீப்...” என்று ஹாரன்

சத்தம்கூட கொடுப்பார்கள். அந்தக் காரை ஆபீஸிற்குக்கொண்டு போய் விடுவார்கள்.
அதற்குப் பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து, "தங்கச்சி ஸ்கூலுக்குப் போகிறாள்," என்று சொல்லிக்கொண்டே, அந்தத் தங்கை பொம்மையைக் காரில் உட்கார வைத்துச் சுற்றி வருவார்கள். தங்கை பள்ளிக்குப் போக விரும்பாமல் அழுவது போலவே, அவர்களும் அழுவார்கள்.
விளையாட்டின் ஒவ்வொரு காட்சியைப் போலவும் அவர்கள் நடிப்பார்கள். அதற்குப் பிறகு, "இப்போது சாயங் காலம் ஆகிவிட்டது, தங்கச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வருகிறாள்," என்று சொல்லிக்கொண்டு, அந்தத் தங்கச்சி பொம்மையைத் திரும்பகொண்டு வருவார்கள். "அப்பா வேலைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறார்," என்று சொல்லிக் கொண்டே அந்த அப்பா பொம்மையையும் காரில்வைத்து திரும்பக்கொண்டு வருவார்கள்.
இது குழந்தைகளுக்கான ஒரு விளையாட்டு போலத் தெரியும். ஆனால் தயவுசெய்து ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்களும் இந்த மரப்பாச்சி பொம்மை விளையாட்டைத்தான் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்களும் யாரையாவது பிடித்துக்கொண்டு, "நீங்கள்தான் என்னுடைய அம்மா, நீங்கள்தான் என்னுடைய அப்பா, நீங்கள்தான் என் மனைவி, நீங்கள்தான் என் கணவர், நீங்கள்தான் என் மகன், நீங்கள்தான் என் சகோதரி, நீங்கள்தான் என் சகோதரன்," என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்க்கை
மொத்தமுமே
ஒரு
மனநாடகம்தான்.
உங்களுடைய கற்பனைகளுக்கே அல்லது
உங்களுடைய எண்ணங்களுக்கேற்ப அந்தப்
பொம்மை நடக்கவில்லை என்றால், "இது ஒரு
நல்ல பொம்மை இல்லை, இந்த பொம்மை
கெட்ட பொம்மை," என்று சொல்லி, அதைத்
தூக்கி எறிந்து விடுகிறீர்கள்.
சில நேரங்களில், குழந்தைகள்
பொம்மையால் தங்களைத் தாங்களே
காயப்படுத்திக்கொள்வார்கள். பிறகு "இந்த
பொம்மை என்னை அடித்துவிட்டது," என்று
சொல்வார்கள்.
அந்தப் பொம்மையை எடுத்து, தங்கள்
கண்களில் தாங்களேதான் குத்திக்
கொண்டார்கள் என்பதை அவர்கள் உணர
மாட்டார்கள். பொம்மை தங்களைக் குத்தி
விட்டது என்று சொல்லி அழுவார்கள்.
அதேபோலத்தான்,
உங்களின்
கற்பனைக்கேற்ப
யாரோ
ஒருவர்
நடக்கவில்லை
என்றால்,
அவர்கள்
உங்களைக் காயப்படுத்தி விட்டதாக நீங்கள்
உணர்கிறீர்கள்.
‘எல்லாக்
காரணங்களுக்கும்
நானே காரணம்’
என்பதை ஒருவர்
புரிந்து கொண்டால்,
அவர் உயர்ந்த
கடவுள் நிலையை
உணர்கிறார்.
உங்களைப் பொறுத்தவரையில், சகோதரி என்றால் இப்படி இருக்க வேண்டும்; இப்படித்தான் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று உங்களுக்குள்ளேயே நீங்கள் ஒரு கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
ஒரு தாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு கருத்து உங்களுக்குள் இருக்கிறது. அதேபோல, மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை வைத்திருக்கிறீர்கள்.
அந்தப் பொம்மைகள் எப்படி விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படித்தான் எல்லாப் பொம்மைகளும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். யாராவது அவர்களுடைய பாத்திரத்தில் சரியாக விளையாடவில்லை என்றால், நீங்கள் அவர்களை வெளியில் தூக்கி எறிந்து விடுகிறீர்கள். அந்தப் பொம்மையோடு நீங்கள் விளையாட விரும்புவதில்லை.

திடீரென்று ஒரு நாள், நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்கள் உடலை விட்டு விடுகிறீர்கள். உங்களுடைய அடுத்த பிறப்பில், அடுத்த இடத்திற்கு நீங்கள் போகும்போது, நீங்கள் மீண்டும் இதே போல பல பொம்மைகளைப் பிடித்துக்கொண்டு, "இது அப்பா, இது கணவர், இது மனைவி, இது மகள், இது மகன், இது சகோதரன், இது சகோதரி" என்று மீண்டும்
அதே விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறீர்கள்.
தொடர்ந்து, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் பொம்மைகளை விளையாட்டிற்குள் கொண்டு வருகிறீர்கள். சில நேரங்களில் விளையாட்டிலிருந்து பொம்மைகளைத் தூக்கி எறிகிறீர்கள். சில நேரங்களில் கோபத்தால் அவற்றைத் திட்டுகிறீர்கள். சில நேரங்களில் அவற்றுக்கு அதிகமாகச் சலுகை காட்டுகிறீர்கள்.
உங்களிடம் போதிய மனித பொம்மைகள் இல்லையென்றால், பூனை நாய் என்று செல்லப்பிராணிகளை வாங்கி அவற்றோடு விளையாடுகிறீர்கள்.
thிடீரென்று, மீண்டும் இறந்து விடுகிறீர்கள். நீங்கள் மீண்டும் இறக்கும்போது, வேறொரு உடலை எடுக்கிறீர்கள். அந்த உடலுடன், இதே போல சிலரைப் பிடித்துக்கொண்டு, அதே விளையாட்டை விளையாடுகிறீர்கள்!
மீண்டும் மீண்டும், நீங்கள் அதே விளையாட்டைத்தான் விளையாடி கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள்தான், "இதே விளையாட்டை நான் இன்னும் எத்தனை முறைதான் விளையாடுவது? நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்? எத்தனை முறை நான் இதே பைத்தியக்கார நாடகத்தை நடித்து கொண்டிருப்பது?" என்று நினைக்கிறார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது மொத்தமும் நம்முடைய மனத்தின் நாடகம்தான்! அது உறவாக இருந்தாலும் சரி, அல்லது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு மனநாடகமே தவிர வேறொன்றுமில்லை.
> ஒரே நாடகத்தில்தான்
> நடித்துக்
> கொண்டிருக்கிறோம்,
> என்பதை ஒருவர்
> புரிந்து
> கொண்டாரேயானால்,
> அவர் உண்மையில் என்ன
> நடந்து கொண்டிருக்கிறது
> என்பதைப்
> புரிந்துகொள்ளும்
> அறிவைப் பெறுகிறார்.
உங்களுக்கென்று ஓர் அட்டவணை இருக்கிறது. சமுதாயம் உங்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
ஒரு தந்தையாக நீங்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்,ஒரு கணவராக நீங்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், ஒரு மகனாக நீங்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும். என்பதை அது கற்றுக்கொடுத்திருக்கிறது.
இந்த அட்டவணையை நீங்கள் பின்பற்றி வாழும்வரை நீங்கள் ஒரு நல்ல குடிமகனாகவே கருதப்படுவீர்கள்.
ஒரேயொரு முறை நீங்கள் அந்த அட்டவணையிலிருந்து தவறினீர்கள் என்றாலும், நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள். மற்ற எல்லாப் பொம்மைகளும் உங்களை உதைத்து வெளியில் தூக்கி எறிந்துவிடும். இனி இந்த விளையாட்டில் உங்களுக்கு இடமில்லை என்று அவை சொல்லிவிடும். நீங்கள் விருந்துகளுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள். அதைத்தான் தவிர்ப்பது என்கிறோம்.
சரியான பாதையில்
ஒருமுகப்பட்டு
இருக்கிறீர்கள்
என்றால்,
நீங்கள்
அந்தப் பாதையை
அனுபவித்துக்
கொண்டிருப்பீர்கள்.
அவர்கள் உங்களைத் தவிர்ப்பார்கள், திடீரென்று ஒருநாள், ‘எத்தனை முறைதான் நான் இதே நாடகத்தை நடிப்பது; மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாடுவது!’ என்று உணர்வீர்கள்.
ஒரே ஒருமுறை ஞானகுருவைப் பார்த்தால் போதும்... நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்
ஒரே நாடகத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறோம், ஒரே விளையாட்டைத்தான் மீண்டும் மீண்டும் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒருவர் புரிந்து கொண்டாரேயானால், அவர், உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவைப் பெறுகிறார். பிறகு, இயல்பாகவே சரணாகதி அடைகிறார்.
அவர், ‘‘என்னிடம் சரணடைகிறார்,’’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
‘‘எல்லாக் காரணங்களுக்கும் நானே காரணம் என்பதை ஒருவர் புரிந்து கொண்டால், அவர் உயர்ந்த கடவுள் நிலையை உணர்கிறார்,’’என்று கிருஷ்ணர் சொல்கிறார். இப்படி உணர்ந்து கொள்வதன் மூலம் அவர், ‘‘எத்தனை முறை நான் இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பேன்? எத்தனை முறைதான் நான் அதே தவறுகளைச் செய்து கொண்டிருப்பேன்?’’ என்று தம்மைத்தாமே கேட்டுக்கொள்கிறார்.
இதை உணராதவரை இவை எல்லாம் முடிவே இல்லாமல்,உங்களுக்கு எந்தவித அனுபவத்தையும் தராமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"யார் இதைப் புரிந்து கொண்டாரோ, இந்த ஸத்யத்தைப் பற்றிய அறிவு யாருக்கு இருக்கிறதோ அவர் எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக நானே இருக்கிறேன் என்பதையும், இருக்கின்ற அனைத்துமாக இருப்பவன் நானே என்பதையும் உணர்ந்துகொண்டு என்னிடம் சரணடைகிறார்.''
அவர் ஒரு குருவிடம், ஒரு ஞானமடைந்த ஜீவனிடம் சரணடைகிறார். அதுபோன்றதொரு ஆன்மா மிகவும் அரிதானது." இந்த அறிவைப் பெற்ற ஒருவரால் மட்டும்தான், உண்மையான நோக்கத்துடன், குருவோடு இணைய முடியும். அவரால் மட்டும்தான் குருவை உண்மையான வழியில் பார்க்க முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், "நீங்கள் ஒரேயொரு முறை ஒரு ஞானமடைந்த குருவைப் பார்த்தால்கூட போதும், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்," என்ற ஓர் அழகான வாக்கியம் உண்டு.
sசிலர் என்னிடம் திரும்பி வந்து, "ஸ்வாமிஜி, நான் ஏன் இன்னும் ஞானம் அடையவில்லை?" என்று கேட்பதுண்டு.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்; உங்கள் கண்கள் மூலமாக என்னைப் பார்ப்பதால் மட்டுமே, கடவுளைப் பார்த்துவிட முடியும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நன்றியுணர்வு
இல்லாமல்
பிரார்த்தனை
என்பதே கிடையாது.
நன்றியுணர்வு
இல்லாமல்
ஆன்மீகம் என்பதே
கிடையாது.
நீங்கள் என் வடிவத்தைதான் பார்க்க முடியும் ஆனால் என்னைப் பார்க்க முடியாது. நீங்கள் நிறைய ஜ்ஞாந குருமார்களைப் பார்த்திருந்தாலும்கூட, அவர்களை நீங்கள் பார்த்துவிட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்கள் கண்களால் பார்த்திருப்பதால் மட்டும், நீங்கள் அவர்களைப் பார்த்து விட்டதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்.
நீங்கள் அவர்களைப் பார்த்திருந்தாலும்கூட,
நீங்கள் எந்த மனநிலையிலிருந்து அவர்களைப்
பார்த்தீர்கள் என்பதுதான் இங்கு மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் உங்களுடைய பேராசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக அவர்களிடம்
சென்றிருந்தால், நீங்கள் சிறுதெய்வத்திடம்
சென்றிருக்கிறீர்கள்; அவ்வளவுதான், ஒரு
ஜீக்ஞாஸு குருவிடம் அல்ல.
நீங்கள் பயத்துடன் சென்றிருந்தால்,
மீண்டும் நீங்கள் சிறுதெய்வத்திடம்
சென்றிருக்கிறீர்களே தவிர, ஒரு ஜீக்ஞாஸு
குருவிடம் இல்லை.
நன்றியுணர்வுடன்
கூடிய
பிரார்த்தனையில்
இருப்பவர்கள்
மேலும் மேலும்
உணர்வாளர்களாக
ஆகிறார்கள்.
நீங்கள் அன்படனும் நன்றியுணர்வுடனும் புரிதலுடனும் பக்குவத்துடனும் சென்றால் மட்டுமே உங்களால் ஒரு வாழும் குருவைச் சந்திக்க முடியும்.
அப்போதுதான் உங்களால் ஒரு ஞானியைச் சந்திக்க முடியும். ஒரு ஞானமடைந்த ஜீவனை உள்ளது உள்ளவாறே பார்த்த அடுத்த நொடியே, நீங்கள் ஞானமடைவீர்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏற்றுக்கொள்ளத் தெரிந்துவிட்டால் போதும்..... வாழ்வே பரிசாகும்
கேள்வி: ஸ்வாமிஜி, தொடர்ந்து அதே நிலையில் அதாவது மாறிக்கொண்டே இருக்காமல் ஒரே நிலையில் இருப்பதில் எனக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை. ஆகையால் என்னை நானே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, நான் எப்போதும் எதையாவது நோக்கி வேலை செய்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அந்த வேலையை செய்து முடித்த அடுத்த விநாடியே அடுத்த வேலையை நோக்கி சென்று விடுகிறேன். மேலும் அந்தச் செயலின் முடிவில் விளையும் இறுதிப்பலன்களில் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லையாதலால், எனக்குள் ஒரு கேள்வி, நீங்கள் சொல்கிற பாதையில்தான் நான் செல்கிறேனா?
அருமையான கேள்வி! நீங்கள் உண்மையில் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் சரியான பாதையில் ஒருமுகப்பட்டு இருக்கிறீர்கள் என்றால் , நீங்கள் அந்தப் பாதையையே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். இறுதியில் உங்களுக்குக் கிடைக்கும் பலனில் நீங்கள் அதிருப்தி அடைய மாட்டீர்கள். உங்களுக்கு என்ன கிடைத்தாலும், நீங்கள் எங்கு சென்று சேர்ந்தாலும் நீங்கள் திருப்தியையே உணர்வீர்கள்.
இதெத்தான் கிருஷ்ணர் 'பற்றற்ற நிலை' என்று சொல்கிறார், அது பற்றுதலையோ, விருப்பையோ குறிக்கவில்லை;அது பகைமையையோ, வெறுப்பையையோ குறிக்கவில்லை.
வாழ்க்கை என்பது ஒரு பரிசு. பிறப்பு என்பது ஒரு பரிசு. அன்பு என்பது ஒரு பரிசு, இறப்பு என்பது ஒரு பரிசு. இவற்றை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரிந்தால் போதும், இவை எல்லாமே நமக்குப் பரிசுகள்தான்.
இவற்றை எப்படி ஏற்றுக்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை என்றால், வாழ்க்கையில் குறைகளைத் தவிர வேறொன்றுமிருக்காது. மக்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள்: முதல்வகையினர், அவர்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் அழகை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருப்பது எப்படி என்பதைப் புரிந்து கொண்டவர்கள்.
இரண்டாவது வகையினர் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று புரிதல் இல்லாதவர்கள்.
இவர்கள் குற்றம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள், கடவுளிடம் இவர்கள் சமர்ப்பிக்கும் விருப்பப்பட்டியல் மிகவும் நீண்டதாக இருக்கும்.
அறிந்ததிலிருந்து
அறியாத ஒன்றிற்கு
நாம்
நகரும்போதுதான்
ஆனந்தம்
உருவாகிறது.
முதல் வகையினர் மட்டும்தான் ஆன்மீகவாதிகளாக மலருகிறார்கள்.
இரண்டாவது வகையினர் மதவாதிகளாகி விடுகிறார்கள்.
இந்த இரண்டாவது வகையினர் விரைவிலோ
அல்லது நாளடைவிலோ கடவுள் இல்லை
என்று சொல்லி கடவுளையே எதிர்க்கும்
நிலைக்கு ஆளாகிறார்கள். ஏனென்றால்
அவர்களின் ஆசைகளை நிறைவேற்றாத கடவுள் அவர்களின் எதிரியாகி விடுகிறார்.
இவர்கள்தான் "மனிதன் ஆசைப்படுகிறான்,
கடவுள் அதை நிராகரிக்கிறார்," என்ற
சொற்றொடரை உருவாக்கியவர்கள்.
ஆன்மீக உணர்வற்றவர்கள்தான் இதுபோன்ற பழமொழிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் நிலைகுலைந்து போய் விடுகிறார்கள். எது நடந்தாலும், அவர்களுக்கு அது தவறாகவே தெரியும். அது அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திச் செய்யக்கூடியதாக இருப்பதில்லை. அவர்களுக்கு அது ஒருபோதும் திருப்தியைத் தராது.
அதே சமயம், அது எப்போதுமே குறைவாகவே இருக்கும். அவர்களிடம் பொறாமையும் அதிருப்தியுமிருப்பதால், அவர்கள் எதிர்பார்த்த ஏதோவொன்று மறுக்கப்பட்டதைப் போன்று உணர்வதால், ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்று உணர்வதால், அவர்களுக்குள் வெறுப்பும் கோபமும் வளர்ந்து, அவர்கள் எப்போதும் துக்கத்திலேயே வாழ்கிறார்கள்.
அவர்கள் எப்படி நன்றியுணர்வை உணர முடியும்? நன்றியுணர்வு இல்லாமல் பிரார்த்தனை என்பதே கிடையாது. நன்றியுணர்வு இல்லாமல் ஆன்மீகம் என்பதே கிடையாது. நன்றியுணர்வுதான் ஆன்மீகத்தின் அடித்தளம். நன்றியுணர்ச்சியில் இருந்து பிறக்கும் சரண்ாகதி அனுபவம்தான் கடவுள் அனுபவமாக மாறும். பிரார்த்தனையின் விதை நன்றியுணர்வுதான்.
மனது எப்போதும் எதையுமே தனக்குக் கிடைத்த ஒரு சலுகையாகவும், ஒரு சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொள்ளும். ,சூரியன் உதிக்கும்போது, அதிகாலை மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் மனமோ, "இதில் என்ன இருக்கிறது? சூரியன் ஒவ்வொரு நாளும்தான் உதிக்கிறது. இது இன்னொரு காலை நேரம், அவ்வளவுதானே," என்று சொல்கிறது.
மனம் இப்படித்தான் ஒவ்வொன்றையும் பார்க்கும். அது உணர்வற்றப் போய் விடுகிறது; அழகை ரசிப்பதிலும், இசையை ரசிப்பதிலும், ஒரு கவிதையை ரசிப்பதிலும், அன்பை அனுபவிப்பதிலும், மதிப்பான் எல்லா விஷயங்களிலும் அது உணர்ச்சி இல்லாமல் போய் விடுகிறது. இவ்வாறு இருக்கும்போது இயல்பாகவே நாமிருட்டுக்குள்தான் வாழ்கிறோம். நாம் அழகற்ற தன்மையில் வாழ்கிறோம். நாம் அதற்குப் பழகி விடுகிறோம், அது நமது சொந்த படைப்பாகும்.
நன்றியை உணரத் தொடங்குங்கள். பாராட்டும் தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள், ஏற்கெனவே என்ன செய்யப்பட்டிருக்கிறதோ அதற்காகக் கடவுளைப் போற்றுங்கள், பிறகு பாருங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
நாம் நன்றியுணர்வை அதிகமாக வெளிப்படுத்த வெளிப்படுத்த, நமது பார்வை விசாலமடைகிறது. நம்மால் அதிகமாக உள்வாங்க முடிகிறது. நன்றியுணர்வுடன்கூடிய பிரார்த்தனையில் இருப்பவர்களால்தான் நுண்ணறிவாளர்களாக ஆக முடிகிறது. ஆதலால் அவர்கள் எல்லா இடங்களிலும் கடவுளையே காண்கிறார்கள். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லாவற்றிலும் கடவுளின் கைவண்ணத்தைப் பார்க்கிறார்கள்!
> நான்
> பதில் சொல்லும்போது
> உங்கள்
> கேள்விக்குப் பதில்
> சொல்வதில்லை,
> உங்கள்
> இருப்புக்குத்தான் பதில்
> சொல்கிறேன்.
நீங்கள் கடவுள் என்பதையே மறந்துவிட்டீர்கள்

நாம் யார் என்பதையே நாம் மறந்துவிட்டோம்.
நமது கடவுள் இயல்பைப் பற்றி
அறிந்துகொள்ளாமல் நாம் அறியாமையில்
இருக்கிறோம்.
அதுதான் நாம் செய்யும் உண்மையான பாவம். நம்மையே நாம் மறந்துவிட்டால், எல்லாமுமே நம்முடையதுதான் என்பதையும் மறந்துவிட்டோம்.
கடவுளின் உள் உலகச் சாம்ராஜ்ஜியம்தான் நமது வீடு.
நமது சொர்க்கம் வேறெங்கும் இல்லை. அது நம்முடைய இருப்புத் தன்மையின் ஆழமான மையத்தில் இருக்கிறது. உண்மையில், அதுதான் நம்முடைய இயல்பான இருப்பிடம். இருந்தாலும், அது ஒரு விநோதமான பகுதியைப்போல் பாவித்து நாம் நடந்து கொள்கிறோம். அதை எப்படித் கண்டுபிடிப்பது என்பதும்கூட நமக்குத் தெரியவில்லை. உங்களுடைய இயல்பான இருப்பிடத்தை நீங்கள் கண்டுபிடிக்கும்போது மட்டுமே, உங்களுக்குள் ஆனந்தம் உண்டாகும். உங்களின் மையத்தை நீங்கள் அடையும்போதுதான், நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள்.
தைரியமானவர்கள், பயமில்லாதவர்கள், வீரமுள்ளவர்கள்தான் அதை எட்ட முடியும். ஏனென்றால் அறிந்ததில் இருந்து அறியாத ஒன்றிற்கு நாம் நகரும்போதுதான் ஆனந்தம் உருவாகிறது.
அறிந்த ஒன்றின் எல்லைக்குள்ளேயே நாம் கட்டுப்பட்டிருக்கும் போதெல்லாம், நமது வாழ்க்கை வழக்கமான ஒன்றாகவும் ஒரே மாதிரியாகவும் ஆகி விடுகிறது. அது ஒரே பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. அது வட்டமாகச் சுற்ற ஆரம்பிக்கிறது, மெதுவாக அது நமது உணர்வுகளை, நமது உள்வாங்கும் தன்மையை மந்தமாக்கி விடுகிறது.
அது மக்களைக் கடினமானவர்களாக்கி விடுகிறது. அது அவர்களைக் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஆக்கி விடுகிறது. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவைப்பதற்கும் உணர்வதற்கும் எதுவுமிருப்பதில்லை என்பதால் அது அவர்களை ஊமையாக்கி விடுகிறது. இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவர்கள் அதையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். அதுபோன்ற ஒரு வாழ்க்கையில் ஆனந்தம் எப்படி இருக்க முடியும்?
அறிந்ததில் இருந்து அறியாததற்கும், பழக்கமானதில் இருந்து பழக்கமற்றதற்கும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருப்பதற்கான தைரியம் மட்டும் ஒருவருக்கு இருந்ததென்றால், அவர் துன்பத்தை கடந்து போகிறார்.
அறிந்ததில் இருந்து அறியாததற்கும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருப்பதற்கான தைரியம் மட்டும் ஒருவருக்கு இருந்ததென்றால், அவர் துன்பத்தைக் கடந்து விடுகிறார்.
இது மிகவும் ஆபத்தானது; ஏனென்றால் பழக்கமானது மிகவும் பாதுகாப்பாகவும் உறுதியானதாகவுமிருக்கிறது. தெரியாத ஒன்றிற்குள், வரையறுக்கப்படாத கடலுக்குள் சென்றால் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? நாம் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு, வரையறுக்கப்படாத கடலுக்குள் செல்கிறோம்.
நாம் மீண்டும் அதே பழைய கடற்கரைக்குத்தான் திரும்பி வருவோமா என்பது யாருக்குத் தெரியும்? யார் நமக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்? அதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஆனால் தம்மைத்தாமே சவாலில்
ஈடுபடுத்திக்கொள்ள ஒருவர் தயாராக
இருந்தால் ஒழிய, அவரால் ஆனந்தத்தில்
நிலைத்திருக்க முடியாது. இதுதான் ஞானியின்
ஒட்டுமொத்த வேலை. நாம் எதை ஓர்
சவாலான பாதை என்று நினைக்கிறோமோ,
அதில் உதவுவதுதான் அவர் வேலை.
மனத்தில் இருந்து விடுபடவும் மனத்தை ஆழ்ந்த அமைதிக்குள்கொண்டு செல்லவும் உதவுகிறார் குரு. அப்பொழுது மட்டுமே இதயம் இயங்க முடியும்; நாம் இதயத்தின் அருகில் செல்லவும் அதனுடைய செய்தியைக் கேட்க முடியும்.
உங்கள் ஜீவனுக்குத்தான் பதில் சொல்கிறேன்
கேள்வி: ஜாதி அமைப்பு குணங்களின் அடிப்படையில் தான் இருக்கிறது, பிறப்பின் அடிப்படையில் இல்லை என்றும், அனைத்து ஜாதிகளும் சமம் என்றும், இன்னும் இதுபோல் பிற விஷயங்கள் குறித்தும் நீங்கள் சொல்லியவற்றை நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இன்றளவும் அது அவ்வழியில் செயல்படவில்லை. நம்மைவிட எல்லோரையும் சமமாக நடத்தும் வேறு பல கலாச்சாரங்களும் இருக்கின்றன. இருந்தும், சிறந்த நாகரீகமடைந்த கலாச்சாரங்களில் நம்முடையதும் ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இன்று நம்முடைய நாட்டில் நிலவும் நடைமுறை வாழ்க்கைக்கும், நீங்கள் குறிப்பிடும் ஸத்யத்திற்கும் இடையே எந்தவித ஒற்றுமையையும் என்னால் பார்க்க முடியவில்லை.
அற்புதம்! இது உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து உருவாகி இருக்கும் சந்தேகம். நான் அதற்குத் தலை வணங்குகிறேன். நீங்கள் ஒருமுறையீடு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், "இதற்கு என்ன அர்த்தம் என்று தயவுசெய்து எனக்குப் புரிய வையுங்கள், எனக்குக் குழப்பமாக இருக்கிறது," என்கிறீர்கள்.
நீங்கள் அர்ஜுனனின் நிலையிலிருந்து கேட்கிறீர்கள், "என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தி, என்னை அமைதி அடையச் செய்யுங்கள்,” என்று குருவிடம் முறையிடுகிறீர்கள்.
நான் உங்களுக்கும், உங்கள் கேள்விக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் நான் பதில் சொல்லும்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதில்லை, உங்களுக்குத்தான், உங்கள் இருப்புத் தன்மைக்குத்தான் நான் பதில் சொல்கிறேன்.
இந்தக் கேள்வி உணர்ச்சிவயப்பட்ட மனத்திலிருந்து எழுந்தது அல்ல; வன்முறையிலிருந்து வந்த கேள்வி அல்ல; இது ஒரு உண்மையான தடுமாற்றத்தில் இருந்து வந்திருக்கிறது.
வேத முறைகளில், நமக்கு ச்'ரு'தி மற்றும் ஸ்ம்ரு'தி என்ற இரண்டு விதமான புராணங்கள் இருக்கின்றன. ஞானமடைந்த ஞானிகளால் உணரப்பட்ட ஸத்யம் ச்'ரு'தி. அதை அவர்கள், தங்களின் சீடர்களுக்குப் பிரத்யேகமாக உபதேசித்தார்கள்.
ச்'ரு'தி என்றால் ‘கேட்கப்பட்டது’ என்று பொருள். வேதங்களும், உபநிஷதங்களும்தான் முதன்மையான ச்'ரு'தி. இந்த ஸத்யங்கள் காலத்தையும் இடத்தையும் கடந்து நிற்பவை. இவை வரலாற்று உண்மைகள் கிடையாது; இவை அனுபவப்பூர்வமான ஸத்யங்கள்.
என்றாலும், உங்களுடைய அனுபவம் மற்றொருவருடைய அனுபவம் போன்று இல்லாமல் வேறு விதமாகக்கூட இருக்கலாம். ஆனால் நிச்சயமாக உங்களுடைய அனுபவம் ஒரு ஞானியினுடைய அனுபவம் போன்று இருக்காது. அதனால்தான், ச்'ரு'தியை, நிலையான மாறுபடாத அந்த ஸத்யத்தைப் படிக்கும்போது, அதைப் புரிந்துகொள்வதிலும், ஏற்றுக்கொள்ளவதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆத்மாவை அழிக்க முடியாது என்று கிருஷ்ணர் சொல்லும்போது, "அவர் எதைப் பற்றிப் பேசுகிறார், ஆத்மா என்றால் என்ன, ஆத்மா எங்கிருக்கிறது, என்னால் எந்த ஒன்றையும் பார்க்க முடியவில்லையே,” என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கிறீர்கள். ச்'ரு'தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள, ஞானிகளின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள, அந்த ஞானிகளைப் போன்றே நீங்களும் மனமற்ற நிலையை எட்ட வேண்டியிருக்கிறது.
வேதங்களுக்குப் பல உரைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. ஞானமடையாதவர்கள், எந்தவிதமான புரிதலும் இல்லாமல், இந்தப் புனிதமான ஸத்யங்களைமிகச் சாதாரணமாக எடுத்துச் சொல்லி விடுகிறார்கள். பலருக்கு இவை எழுதப்பட்டிருக்கும் மொழியைக்கூட புரிந்துகொள்ள முடியாது.
உங்களுக்கு நீங்களே சத்தியங்களைக் கண்டுபிடிக்கலாம்

ஸம்ஸ்க்'ரு'தம் மிக ஆழமான, ஆற்றல் மிக்க
மொழியாக இருக்கிறது. அதனால்தான்,
அது கடவுளின் மொழி என்று
அழைக்கப்படுகிறது.
அது பல நுட்பமான நிலைகளில் அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் அவர்களுக்கு எப்படி அது மொழிபெயர்க்கப்பட்டதோ அதன் அடிப்படையிலோ அல்லது எல்லைக்குட்பட்ட அவர்களின் கல்வித்திறனின் அடிப்படையிலோதான் நமது ச்'ரு'திகளைமொழிபெயர்த்திருக்கிறார்கள்.
> ச்'ரு'தியில்
> வெளிப்படுத்தப்பட்டுள்ள,
> ஞானிகளின்
> அனுபவங்களைப்
> புரிந்துகொள்ள,
> அந்த ஞானிகளைப்
> போன்றே நீங்களும்
> மனமற்ற நிலையை
> எட்ட வேண்டியிருக்கிறது.
அவர்களின் ஆர்வத்தை நான் மதிக்கிறேன்.
ஆனால் வெளிநாட்டவர்களின்
மொழிபெயர்ப்புகளை இந்தியர்களாகிய
நாம் பின்பற்றும்போது, நாம் ஒரு மோசமான
நிலையைத்தான் வந்தடைகிறோம். தங்கள்
முன்னோர்களின் மொழியைக்கூடப்
புரிந்துகொள்ளாமல் இருக்கும்
இந்தியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இவர்கள் மிகவும் மந்தத் தன்மையுடன்
இருப்பதால், மூலத்தைப் படிக்க முயற்சி
செய்வதற்கு பதிலாக, நகல்களைப்
படித்துவிட்டு அதிலேயே மனநிறைவடைந்து
விடுகிறார்கள்.
இந்த நகல்கள், மொழியை வெறுமனே
கொஞ்சமாகப் புரிந்துகொண்டு
உருவாக்கப்பட்டவை என்பதோடு
மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையே
தவறாகப் புரிந்துகொண்டு
உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.
> மொழியைப்
> புரிந்துகொள்வதால்
> மட்டுமே,
> அதில்
> சொல்லப்பட்டிருக்கும்
> ஸத்யங்கள்
> புரிந்துவிடும் என்று
> எந்த உத்தரவாதமும்
> கிடையாது.
பல விஷயங்களில், இந்தத் தவறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கின்றன. மூலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன் பெருமையைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிச் செய்வதுதான் பல மொழிபெயர்ப்புகளின் ஒரே நோக்கமாகக்கூட இருக்கிறது!
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம், பல இந்தியர்கள் உதவிச் சம்பளம் பெற்று கல்வி கற்று மேதைகளாக இருந்தார்கள். அவர்கள் எந்த அளவிற்கு, முதலாளிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மொழிகளை வெளிப்படுத்திக் காட்டினார்களோ, அந்த அளவிற்குத்தான் அவர்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. ஆட்சி செய்தவர்களின் மொழியே நன்றாக நிலைநாட்டப்பட்டிருந்ததால், அவர்களைப் பின்தொடர்வதே இந்தியர்களுக்கு எளிதாக இருந்தது.
இந்த அடிமைத்தனம் ஒரு விஷச் சுழற்சியாக மாறி இருந்தது. தங்கள் ஆட்சியாளர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு, தங்களின் சொந்த கலாச்ச ாரத்தையும் அதன் ஸத்யங்களையும் தவறாக எடுத்துக்காட்டுவதில் தங்களை விடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று எடுத்துக்காட்டும் முயற்சியில் ஈடுபட்டதால், அது அடிமைகளின் விஷச்சுழற்சியாகவே மாறி இருந்தது.
என் மீது உங்களுக்குச் சந்தேகமிருந்தால், ஸம்ஸ்க்ருதம் படித்து, மூல வேத நூல்களைப் படியுங்கள். அதற்குப் பிறகு வெளிநாட்டுக்காரர்கள் எழுதிய நகல்களையும் அவர்களைப் பின்பற்றி இந்தியர்கள் எழுதியதையும் படித்துப் பாருங்கள். நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள்.
ஒருமுறையாவது சத்தியத்தை உணருங்கள்
மொழியைப் புரிந்துகொள்வதால் மட்டுமே, அதில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்கள் புரிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது.
இந்த வேத ஸத்யங்கள், வேறு வேறு சக்தி நிலைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவை. நாம் இருப்புத் தன்மையின் ஸ்தூல அடுக்கில் நிலைபெற்று இருந்தால், உலகாயுத பற்றுகளுக்குள் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அந்த நிலையில் இருந்துதான் நம்மால் இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இருந்தாலும், இந்த ஸத்யங்கள் உயர்ந்த சக்தி நிலைகளில் இருந்து, அந்த ஜ்ஞான குருமார்களின் நிர்வாண அடுக்கில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவை. நாம் அந்த நிலையை அடையாதவரை இந்த வேத நூல்களின் ஸத்யங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.
நமக்கு
நம்பிக்கை இருந்தால்,
நாம்
எதைப் படித்தாலும்
அது
நமக்கு நன்மையாகவே
அமையும்.
நமது லைஃப் பிளிஸ் (Life Bliss) பயிற்சிகளில், மக்களைப் படிப்படியாக இந்த அடுக்குகளில்தான் எடுத்துச் செல்கிறோம். ஒருவரை நான் என் சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு தீட்சை அளிக்கும்போது, அவர் அந்த நிர்வாண அடுக்கை அடைய நான் அவருக்கு உதவி செய்கிறேன்.
அது மட்டும்கூட போதாது. சீடர் அந்த நிர்வாண அடுக்கின் புள்ளியை எட்டவும் ஒருமுறையாவது அந்த ஸத்யத்தை உணரவும், ஒரு துளியாவது அந்த உணர்வை அனுபவிக்கவும் நான் உதவுகிறேன். அதற்கு மேல், அங்கேயே நிலைத்திருப்பது என்பது சீடரின் நேர்மையையும், அவரின் பொறுப்பையும் பொறுத்தது. இதுதான் நித்ய ஆன்மீக ஹீலர்களுக்கும் த்யான ஆச்சாரியர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி.
பல சீடர்கள், குறிப்பாக த்யான ஆச்சாரியர்கள், ஸ்தூல அடுக்குிற்கு மேலான நிலைகளில் இருந்து வேத நூல்களைப் பற்றிப் பேசும்படி என்னைக் கேட்பார்கள். அஷ்டவக்ர கீதை உபதேசத்தில் ஒருமுறை நான் அதை முயற்சி செய்து பார்த்தேன். எத்தனை பேர் அதைப் புரிந்து கொண்டார்கள் அல்லது அதைப் புரிந்துகொள்வதற்காவது முயற்சி செய்தார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்டுப் பார்க்க முடியும்.
பலர் இந்த வேத நூல்களை நாவல்களைப் போலப் படிப்பார்கள். அல்லது அவர்கள் அவற்றை எதிர்காலத்தைக் கணிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள்.
எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள சீன புத்தகத்தைத் திறப்பது போல பைபிளை அல்லது கீதையைத் திறப்பவர்கள், அவர்கள் திறந்த பக்கத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்வார்கள்.
லைஃப் பிளிஸ் பயிற்சிகளில் சொல்லியதில் இருந்து தொகுக்கப்பட்ட 'நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்', என்னும் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவ்வாறு செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் எதைப்
படித்தாலும் அது நமக்கு நன்மையாகவே
அமையும்.
நன்மை என்பது நாம் எந்தப் பக்கத்தைத் திறக்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல.
> முழுமையான
புரிதலுடனும்
ஆழ்ந்த
த்யான உணர்வுடனும்
வேத நூல்களின்
பக்கங்களுக்குள் நாம்
மூழ்கும்போது மட்டுமே,
நாம் அந்தச்
ஸத்யங்களைப்
புரிந்துகொள்கிறோம்,
முழுமையான புரிதலுடனும் ஆழ்ந்த த்யான உணர்வுடனும் வேத நூல்களின் பக்கங்களுக்குள் நாம் மூழ்கும்போது மட்டுமே, நாம் அந்த ஸத்யங்களைப் புரிந்துகொள்கிறோம், அதன் சக்தியையும் உணர்கிறோம்.
அந்த மொழியில் உள்ள சில வார்த்தைகளை அப்படியே புரிந்துகொள்வதற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
ஒரு மொழியிலிருந்து சில வார்த்தைகளை ஒரு குரங்கிற்குக் கூட சொல்லிக் கொடுத்து விடலாம். ஒரு மொழியிலுள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு மனிதனின் மேல்நிலை விழிப்புணர்வுத்திறன் தேவை இல்லை.
இதுவரை நான் வேத ச்ருதி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். பகவத்ீதை ஒரு வேதமோ அல்லது உபநிஷதமோ இல்லை என்றாலும்கூட, அது ஒரு வேத ச்ருதி ஆக இருக்கிறது.
அது மஹாபாரத காவியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, ஒரு வேத நூலாகவே கருதப்படுகிறது. நாம் இன்று கேட்பது போல, கிருஷ்ணர் இந்த வர்ண அமைப்புகளின் பிரிவுகள் விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். இது நமது இயல்பின் அடிப்படையில், நமது முக்குண கலவையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது, நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை.
புரிந்துகொள்ளாததால் ஏற்பட்டதன் விளைவு
இன்று இருக்கும் குழப்பங்களுக்காக யாரையாவது நாம் குற்றம் சொல்ல விரும்பினால், நம்மைக் காலனி ஆதிக்கம் செய்த வெளிநாட்டு ஆட்சியாளர்களைத்தான் சொல்ல வேண்டும்.
அவர்கள்தான், நமது கலாச்சாரத்தை அழிப்பதற்கான அவர்களின் திட்டமிட்ட முயற்சியில் நம்மையும் நமது வர்ண அமைப்பு முறையையும் குழப்பி விட்டார்கள். இதில் பரிதாபகரமானது என்னவென்றால், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.
நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மதிப்பு மிக்க அமைப்புமுறைகளைப்பற்றி ஒருவர் புரிந்துகொள்வதைப் பொறுத்து அவருடைய திறமையை இன்று நாம் மதிப்பிடுவதில்லை.
மாறாக அவர் எந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பேசுகிறார், எந்த அளவிற்கு மேற்கத்திய 'நாகரீக' முறைகளைப் பின்பற்றுகிறார் என்பதன் அடிப்படையில்தான் அவருடைய திறமையை மதிப்பிடுகிறோம்.
ஓர் உயர்ந்த
விஞ்ஞான அடிப்படையில்
அமைந்த
செயல்திறன்மிக்க
கல்வி மற்றும்
பயிற்சி முறைதான்
குருகுல கல்விமுறை.
இந்தியர்களாக இருப்பதைப்பற்றியும் நமது
பாரம்பரிய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதைப்
பற்றியும் நாம் பெருமையாக
நினைப்பதில்லை.
ஓர் உயர்ந்த விஞ்ஞான அடிப்படையில்
அமைந்த செயல்திறன்மிக்க கல்வி மற்றும்
பயிற்சி முறையான குருகுல முறையை,
சமய குருமார்களின் கட்டுப்பாட்டின் கீழ்
அமைந்த கடுமையான அமைப்பு முறையாக மாற்றினார்கள்.
ஊடுருவல்காரர்களால் நம் மனதில்
திணிக்கப்பட்ட இந்தப் பொய்
செய்திகளின் நேரடியான விளைவுதான்
இன்றைய அவல நிலை.
வர்ண என்ற வார்த்தைக்கு ஸம்ஸ்க்ருதத்தில் 'நிறம்' என்று அர்த்தம். அதனால் நிறத்தின் அடிப்படையில் அமைந்த ஜாதி அமைப்பு முறையைத்தான் வர்ண அமைப்பு முறை என்று பலர் சொல்கிறார்கள்.
> ஸ்ம்ருதிகள் சமுதாய
> –பொருளாதார
> நலன்களைப்
> பாதுகாப்பதற்காக
> ஏற்படுத்தப்பட்டவையே
> தவிர,
> வேதங்களால்
> ஏற்படுத்தப்பட்டவை அல்ல.
குறிப்பாக, வெளிநாட்டு வல்லுநர்கள் இந்தியாவில் நிலவும் வர்ண அமைப்பு முறையைப் பற்றிச் சொல்லும்போது, வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய உயர் ஜாதிக்காரர்களான ஆர்யர்கள் வெள்ளை நிறத்தில் இருந்ததால்தான், அதற்கு 'வர்ண அமைப்பு முறை' என்ற பெயர் வந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.
அப்படியென்றால் விஷ்ணுவும் அவரின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் நீல நிறத்திலும், கறுப்பு நிறத்திலும் ஏன் வர்ணிக்கப்பட்டார்கள்?
இந்த வல்லுநர்களின் கருத்துப்படி கீழ்மட்ட மக்களான சூத்ரர்களின் நிறமான கறுப்பு நிறத்தில் ஆர்யர்களான ராமரையும் கிருஷ்ணரையும் வர்ணித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள், நமது வேத நூல்கள் ஜாதிகளின் அடிப்படையில்தான் மக்களை வேறுபடுத்தியது என்பதற்கு ஆதாரமாக மனுவையும் மற்றும் அதுபோன்ற பிறநூல்களையும் குறிப்பிட்டுக்காட்டுவார்கள்.
வேத தர்மம் ஒன்றுதான் உண்மையில் இருந்து ஸத்யத்தைப் பிரிக்கிறது. உண்மைக்கும் ஸத்யத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுவது வேத தர்மம் மட்டுமே!
ச்ருதி என்பது ஜ்ஞான குருமார்களின் அனுபவப்பூர்வமான ஸத்யங்களின் வெளிப்பாடுகள் அவை காலம், இடம் ஆகியவற்றைக் கடந்த ஸத்யங்களாக நிலைத்திருக்கின்றன.
மற்றொருபுறம், மனு ஸ்ம்ருதி போன்ற ஸ்ம்ருதிகள், சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உண்மை நிகழ்ச்சிகளோடு தொடர்புகொண்ட நெறிமுறைகளாக இருக்கின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட காலம், இடம் மற்றும் சமுதாய-பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை.
இன்று நாம் இந்துமதம் என்று அழைக்கிற ஸனாதன தர்மமான வேத மதமானது, 'ஸ்ம்ருதிகள் மாறக்கூடியவை' என்பதை ஏற்றுக் கொள்கிறது. உண்மையில் காலங்கள் மாற மாற அதற்கேற்ப மாற்றப்பட வேண்டியவையே ஸ்ம்ருதிகள்! மனு காலத்தில் இருந்த ஸ்ம்ருதி ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் உண்மையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இந்து சடங்குகளைப் பற்றி விமர்சனம் செய்பவர்களும், தங்களின் விமர்சனங்களுக்கு ஆதரவாக ஸ்ம்ருதிகளை மேற்கோள் காட்டுபவர்களும், இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களில் சிலர்கூட இதை மறுக்கக் கூடும்.
ஸ்ம்ருதிகள், சமுதாய-பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே தவிர வேதங்களால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல.
உண்மையில், எனக்குத் தெரிந்தவரை இந்துமதம் மட்டும்தான், 'மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த மதச்சட்டங்களை, மாறிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கேற்ப நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்று மட்டுமல்ல, நிச்சயமாக அது மாற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதைத் தைரியமாக அறிவித்த ஒரே மதமாக இருக்கிறது.
வேறு எந்த மதத்திற்கும் அதன் வேத நூல்களில் எழுதப்பட்டவைகளை, அதன் மத அடித்தளங்களின் ஒரு பகுதியைக் காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் தைரியம் கிடையாது.
கடவுள் ஒரு கலைஞர். அவர் ஒரு பொறியாளர் கிடையாது. கடவுள் ஒவ்வொரு மனிதரையும் சக்தியிலும், திறனிலும் தனித்தன்மை வாய்த்தவர்களாக வெவ்வேறு அச்சில் உருவாக்குகிறார். அவர் மனிதர்களை ரோபோட்களைப் போல மொத்த மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. இதுதான் பிரச்சினையாகவுமிருக்கிறது!
மற்றவர்களுடைய திறமையைக் காட்டிலும், தங்களுடைய திறமைதான் மேம்பட்டு இருக்கின்றன என்று சமுதாயத்தின் பிரிவுகள் தங்களைத்தாங்களே உயர்வாக மதிப்பிட்டுக்கொள்கின்றன.
மேலும் கலாச்சாரத்தின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும் தங்களை மேம்பட்டவர்களாக கருதுவதால் மற்றவர்களை மட்டமாக நினைக்கிறார்கள்.
முந்தைய காலத்தில், உடல் பலம்தான் மேம்பட்ட திறமையாகக் கருதப்பட்டது. இன்று உலகின் பெரும்பகுதிகளில், செல்வவளம்தான் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் திறமையாகச் கருதப்படுகிறது. இந்தத் திறமைகள், அவர்களின் பிறப்பு உரிமைகளாக கருதப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு போர்வீரரின் மகனும் ஒரு போர்வீரராகிறார், ஒரு மேதையின் மகனும் மேதையாகிறார்.
ஒரு அமைப்புமுறையைக்
குறை சொல்வதாலோ,
அல்லது அதனை
நிராகரிப்பதாலோ
பிரச்சினை தீர்ந்து விடாது.
அதைப் புறக்கணிப்பதால்,
வேறொரு அமைப்புமுறை
உருவாகும்
அவ்வளவுதான்.
வேத அமைப்புமுறைகளில், குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகள்தான் பிரிவுகளைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக இருந்தன. அதன் பிறப்பின் அடிப்படையில் அது இல்லை.
எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தால், அந்தக் குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதைப் பொறுத்து அனைத்தும் இருந்தன.
எந்தத் துறை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சரிதான். ஏனென்றால் எதுவுமே உயர்வாகவும் தாழ்வாகவும் கருதப்படவில்லை. சூத்ரரான ஒரு தொழில் வல்லுநரும் ப்ராஹ்மணரான ஒரு மேதைக்கு அல்லது வைச்யரான ஒரு வியாபாரிக்கு இணையாகவே மதிக்கப்பட்டார். ஒரு அமைப்புமுறையைக் குறை சொல்வதாலோ அல்லது அதனை நிராகரிப்பதாலோ பிரச்சினை தீர்ந்து விடாது. அதைப் புறக்கணிப்பதால், வேறொரு அமைப்புமுறை உருவாகும் அவ்வளவுதான்.
ஏற்கெனவே இந்த மாதிரி அமைப்புமுறை இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓர் அரசியல் தலைவரின் மகனோ அல்லது மகளோ பிறப்பின் அடிப்படையில் நாட்டின் எதிர்காலத் தலைவராகக் கருதப்படுகிறார். இதற்கு ஜனநாயக ரீதியான அனுமதியே உள்ளது. இந்த அமைப்புமுறைதான் சரியானது என்று உறுதி செய்ய முடியுமா?
இந்திய சமுதாய அமைப்பு முறைக்குத் தலை வணங்குகிறேன்
பிறப்பால் நான் ப்ராஹ்மணர்இல்லை. ஞானமடைந்த ஜீவன்கள் குணங்களைக் கடந்தவர்கள் , பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.
எனக்கு எந்த அமைப்புமுறையும் தேவையில்லை.
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: நான் ப்ராஹ்மணர்களுக்குத் தலை வணங்குகிறேன். தங்களுடைய வாழ்க்கையையே பணயமாக வைத்து,தங்கள் உயிருக்கே ஆபத்தான நிலையிலும்கூட, இந்த வேத பாரம்பரியத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
சிதம்பரத்தில் வாழும் பிராம்மண பூசாரிகளும், வாரணாசியில் வாழும் பிராம்மண பண்டிதர்களும்தான் பல தடைகளைத் தாண்டி, வேத கல்வியைக் காப்பாற்றி வருகிறார்கள்.
பிறப்பால் ப்ராஹ்மணரான ஒரு பக்தர், அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட கல்வியால் என்ன புரிந்து கொண்டாரோ அதை வைத்துக்கொண்டு, இந்த வர்ண முறையை விமர்சித்தார்.
நான் அவரைத் தடுத்தேன்.
அவருக்குத் தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரத்தில் வாழும் ப்ராஹ்மண பூஜாரிகள் பற்றி எடுத்துச் சொன்னேன். அவர்கள் இன்றும் அவர்களின் அந்தப் புனித நகரத்தின் எல்லையை விட்டு வெளியில் வருவதில்லை.
அங்கேயே தங்கியிருந்து,
அவர்களிடமிருக்கும் வேத நூல்களைப்
பாதுகாப்பதாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு ஸத்யம் செய்திருக்கிறார்கள்.
அவர்களைச் சுற்றி இருக்கும் உலகம்
முன்னேறிவிட்டது, பணம் படைத்ததாக
மாறிவிட்டது. அவர்கள் இந்தச் சிறப்பு
வாய்ந்த, ஆனால் குறைந்த சம்பள
வேலையை விட்டுவிட்டிருக்கலாம்.
ஒரு அமைப்புமுறையைக்
குறை சொல்வதாலோ
அல்லது
அதனை நிராகரிப்பதாலோ
பிரச்சினை
தீர்ந்து விடாது.
உண்மையில், இது நன்றிக்குரியதல்லாத வேலையாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த நாட்டில், வேத கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதில் தமிழ்ச் சமுதாயம் முன்னிலையில் இருக்கிறது. அதனால்தான், தங்கள் சொந்த தாய்நாட்டில் வாழமுடியாமல் அமெரிக்காவில் வந்த குடியேறி செல்வ வளத்தில் சிறப்பாக இருக்கும் மக்களுள் அதிகம்பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராஹ்மணர்களாக இருப்பதை நீங்கள் காணலாம்.
இதே போல, வாரணாசியிலும், வேறு சில இடங்களிலும்கூட வேதம் படித்த ப்ராஹ்மணர்களின் சமுதாயங்கள் இருக்கின்றன. இவர்களும் பல தடைகளைத் தாண்டி, வேத கல்வியைக் காப்பாற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நாட்டைக் காப்பாற்றி இருக்க முடியாது. இந்த நாடு நிலைகுலைந்து போயிருக்கும்.
இதனால்தான் நான் இந்திய சமுதாய அமைப்புமுறைக்குத் தலைவணங்குகிறேன்.
