நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

7.20 பல்வேறு ஆசைகளால் தவறாக வழிநடத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள், சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள்.
அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
7.21 நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன்.
ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட சிறுதெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்தி செலுத்த முடியும்.
7.22 இதுபோன்ற ஒரு நம்பிக்கையுடன் கூடியவனாக, ஒரு குறிப்பிட்ட சிறு தெய்வத்தைப் பெருமுயற்சியுடன் வழிபட்டு, அவர் தன்
ஆசைகளை அடைகிறார்;
உண்மையில், இந்த நன்மைகளை நான் மட்டுமே தருகிறேன்.
எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே
வழிபடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும்
பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும்
இருக்கின்றன.
சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களின் உலகிற்கு
மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது
ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.
நீங்கள் ஒப்பற்றவராகி விடுவீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார், நானே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் அவரால் தம்மை முழுமையாக ஒப்படைக்க முடியும்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர் கடவுள் என்றோ அல்லது சிறு தெய்வம் என்றோ சொல்லும்போது, எல்லாம்வல்ல ஆற்றலைக் குறிப்பிடவில்லை; நம்முடைய மனப்பான்மையைத்தான் குறிப்பிடுகிறார்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'சிறு தெய்வம்' என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் எந்த மனப்பான்மையுடன் கடவுளை அணுகுகிறோம் என்பதையே அவர் குறிக்கிறார். நீங்கள் பயம் அல்லது பேராசையினால் கிருஷ்ணரை அணுகினால்கூட, நீங்கள் ஒரு சிறு தெய்வத்தைத்தான் அடைகிறீர்கள்.
சரியான மனப்பான்மையுடன் நீங்கள்
சிறு தெய்வத்தை அணுகினால்கூட, நீங்கள்
ஒப்பற்றவராக ஆகி விடுவீர்கள்! அவர்
உங்களுக்கு ஞானத்தை அளிப்பார்.

தவறான மனப்பான்மையுடன் நீங்கள் கிருஷ்ணரை அணுகினால்கூட, உங்களுக்குப் பொருள் சார்ந்த நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
எதுவுமே தவறு இல்லை
கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து ஓர் அழகான கதை.
ஒரு பணக்காரர் தாம் ஒரு ராஜாவாக வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினார். ஒருநாளைக்கு இரண்டு முறை காலையிலும், மாலையிலும் "கிருஷ்ணா, கிருஷ்ணா," என்று சொல்லிக்கொண்டே இருந்தார். "கிருஷ்ணா, எனக்கு அரச பதவியைக் கொடு. நான் ராஜாவாக ஆக வேண்டும்," என்று அவர் எப்போதும் கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அங்கே இன்னொரு ஏழைப் பெண் இருந்தார். அவரிடம் ஒரேயொரு மாடு மட்டுமேயிருந்தது. அதிலிருந்து கிடைத்த பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயையும் கொஞ்சம் இனிப்புகளையும் கிருஷ்ணருக்குக் கொடுத்து வந்தார். அவர் நாள் முழுவதும் உட்கார்ந்து கிருஷ்ணரின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
> கடவுளை அடைவதில்
> நம்முடைய அணுகுமுறை
> என்னவாக இருந்தாலும்,
> அது நமது
> ஆன்மீக முன்னேற்றத்தில்
> ஒரு முக்கிய
> பங்கு வகிக்கிறது.
திடீரென்று ஒருநாள் கிருஷ்ணர் இரண்டு பேருக்கும் முன்னால் தோன்றி அவர்கள் விரும்பியதைக் கொடுத்தார். ராஜ பதவியைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர், ராஜாவாகி விட்டார்.
நாள் முழுவதும் கிருஷ்ணரின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணினுடைய பசு இறந்துவிட்டது!
நாரதர் கிருஷ்ணரிடம் கேட்டார், "கிருஷ்ணா, என்ன இது, ஒருநாளைக்கு இரண்டு முறை மட்டுமே உங்கள் பெயரைச் சொல்லும் அவரை நீ ராஜா ஆக்கிவிட்டீர்கள். நாள் முழுவதும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடமிருந்த ஒரே பசுவையும் நீங்கள் பறித்து விட்டீர்களே. இது நியாயமா?" என்றார்.
கிருஷ்ணர் சொன்னார், "அந்த மனிதருக்கு சாம்ராஜ்ஜியம்தான் தேவைப்பட்டது. அதற்காகத்தான் அவர் என்னிடம் வந்தார். நான் அதற்கான ஒரு கருவியாக இருந்தேன். அதனால் அவர் என்ன விரும்பினாரோ, அதை நான் கொடுத்தேன்.
ஆனால் இந்தப் பெண்மணியைப் பொறுத்தவரையில், நான்தான் அவரின் மொத்த வாழ்க்கையாக இருந்தேன். அங்கே ஒரு சின்ன தடைதான் இருந்தது. எனக்கும் அவருக்கும் இடையே அந்தப் பசு மட்டும்தான் குறுக்கில் நின்று கொண்டிருந்தது. அதனால் நான் அந்தத் தடையை எடுத்து விட்டேன். இப்போது அவர் என்னை வந்தடைந்துவிட்டார், முழுமையாக என்ன проходи என்னுள் வந்துவிட்டார்!” என்றார்.
கடவுளை அடைவதில் நம்முடைய அணுகுமுறை என்னவாக இருந்தாலும், அது நமது ஆன்மீக முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
கோள்களோ
அல்லது
சிறு தெய்வங்களின்
அரண்மனைகளோ
சென்று பார்ப்பதற்கு
அருமையான
இடங்கள்தான்.
ஆனால் அவை,
தங்குவதற்கான
சிறந்த இடங்கள்
கிடையாது.
பயம் அல்லது பேராசையுடன் கிருஷ்ணரை
நாம் அணுகினால், நாம் ஒரு சிறு
தெய்வத்தைத்தான் வழிபடுகிறோம்.
ஆனால் அதுவும் தவறு இல்லை என்றுதான்
கிருஷ்ணர் சொல்கிறார்.ஆனால் அதுமட்டுமே
போதாது.
கிருஷ்ணர் நம்மை தைரியப்படுத்த மாட்டார். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எதுவுமே தவறு இல்லை, ஆனால் அது மட்டுமே போதாது. அதுவே முடிவான இடம் கிடையாது.
அது விசா வாங்குவதற்கான சரியான இடமாக இருக்கலாம், ஆனால் அதுவே குடியுரிமை வாங்குவதற்கான இடமில்லை. இங்கே, கோள்களோ அல்லது சிறு தெய்வங்களின் அரண்மனைகளோ சென்று பார்ப்பதற்கு அருமையான இடங்கள்தான். ஆனால் அவை, தங்குவதற்கான சிறந்த இடங்கள் கிடையாது.

உங்கள் குருவுடன் அவரே இணைத்து வைப்பார்
கிருஷ்ணர் சொல்கிறார், “நானே ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஏதோவொரு சிறு தெய்வத்தை நீங்கள் வழிபட நினைத்த உடனேயே, நான் உங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதனால் நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் உங்களை நீங்களே அர்ப்பணிக்க முடியும்.”
இந்தப் பாதைகள் எல்லாவற்றிலும் தேடிச் செல்பவர் பொதுவாக எப்படிப் பயணிக்கிறார் என்றும், இறுதியாக எதைச் சென்றடைகிறார் என்றும் பார்ப்போம்.
நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, ஒரு சாதாரண தேடலுடன் அனைத்து வகையான பூஜை மற்றும் ஹோமம் போன்ற சடங்குகளைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட பூஜை இந்தப் பலனைக் கொடுக்கும்; இந்த ஹோமம் இந்தப் பலனைக் கொடுக்கும் என்று நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள், பிறகு அவற்றை செய்யத் தொடங்குகிறீர்கள்.
வெள்ளிக்கிழமை நீங்கள் தேவிக்காக விரதமிருக்கிறீர்கள், சனிக்கிழமை பாலாஜிக்காக விரதமிருக்கிறீர்கள், ஞாயிற்றுக்கிழமை வேறொரு கடவுளுக்காக விரதமிருக்கிறீர்கள், திங்கட்கிழமை சிவனுக்காக விரதமிருக்கிறீர்கள், செவ்வாய்கிழமை முருகனுக்காக விரதமிருக்கிறீர்கள், வியாழக்கிழமை குருபகவானுக்காக விரதமிருக்கிறீர்கள், இப்படி விரதமிருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்படித்தான் அது தொடங்குகிறது. பிறகு மெதுவாக, இந்தப் பூஜைகள் மற்றும் ஹோமங்களுக்கு மட்டும் நீங்கள் போவதில்லை. பல்வேறு கோயில்களுக்கும் போக ஆரம்பிப்பீர்கள்.

சில காலங்களுக்குப் பிறகு, இப்படிக் கோயில்களுக்குச் செல்வதும், சடங்குகளில் ஈடுபடுவதும் கொஞ்ச அதிகப் படியான செயல்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். “இதை எல்லாம் எனக்காக வேறு யாரோ ஏன் செய்ய வேண்டும்? நானே நேரடியாகச் செய்து, கடவுளோடு நான் நேரடியாகத் தொடர்புகொள்ளலாமே,” என்று நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் வீட்டு அறையிலேயே உங்களுக்காக ஒரு கோயிலை எழுப்புவீர்கள். நீங்களே பூஜைகள், சடங்குகள் எல்லாம் செய்து வழிபட்டுக்கொள்வீர்கள். நீங்கள் கொஞ்சம் பக்குவமடையும்போது இப்படி நடக்கும்.
கடவுளிடம் நீங்களே நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். 'நானே செய்துகொள்கிறேன்' என்று நினைப்பீர்கள். பிறகு நீங்களே செய்யத் தொடங்குவீர்கள்.
எல்லாக் கோயில்களைச் சுற்றி வருவதும், எல்லா வகையான வழிபாட்டு முறைகளை பார்ப்பதும்தான் ஆன்மீகத்தின் முதல் படியாக இருக்கிறது. அதை நீங்களே செய்வது இரண்டாவது படியாக இருக்கிறது.
‘கடவுள் தன்மை என்பது
எல்லாக் கடவுள்களிலும், எல்லா
வடிவங்களிலுமிருக்கிறது. ஆனால் இந்தக்
குறிப்பிட்ட ஒரு கடவுளிடம் நான் மிகவும்
ஈர்க்கப்பட்டு இருக்கிறேன், அதனால் இந்த
வடிவத்தில் என் மனத்தை ஒருமுகப்படுத்தி
கடவுளை வழிபடுகிறேன்,’ என்பதை நீங்கள்
உணர்வதுதான் மூன்றாவது படி.
அதாவது, ஒரு வடிவத்தை மட்டும் உறுதியாக
மனத்தில் கொண்டு, அந்த ஒரு வடிவத்
திற்கு மட்டும் வழிபாடுகளை செய்வதுதான்
மூன்றாம் நிலை.
'இந்த வகையான வழிபாடுகளை விட, சக்தியுடன் ஒலியை உச்சரிப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் நான் பக்திப் பாடல்களை பாடவேண்டும்,’ என்று நினைப்பீர்கள்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்: உடல் மூலமாகச் சரணடைவது பூஜை. கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவது என்பது வார்த்தைகள் மூலமாகச் சரணடைவது; மனத்தின் மூலமாகச் சரணடைவது என்பது ‘ஞானம்,’ தன்னைப்பற்றிய அறிவு. இங்கு நீங்கள், ‘கடவுளின் பெயரை ஏன் உச்சரிக்கக்கூடாது?’ என்று நினைக்கிறீர்கள். உடனே நீங்கள் உங்களின் விருப்பமான தெய்வத்தின் பெயரை உச்சரிக்கத் தொடங்குவீர்கள். ஒவ்வொரு மட்டத்திலும், வெவ்வேறு கடவுள்கள் உங்களுக்குப் பொருந்துவார்கள்; ஒவ்வொரு மட்டத்திலும், வெவ்வேறு ஞானிகள் அல்லது குருமார்கள் உங்களுக்குப் பொருத்தமாக அமைவார்கள். நீங்கள் புனித தலங்களுக்குப் போகும் மட்டத்தில் இருந்தால், இந்தப் புனிதத் தலங்களுக்கு வழிகாட்டும் மனிதர்கள் உங்களுக்குப் பொருந்தி வருவார்கள். நீங்கள் சபரிமலைக்குப் போனால், உங்களை அழைத்துச் செல்பவரை நீங்கள் குரு ஸ்வாமி என்று அழைப்பீர்கள். அவர் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்.
பூஜை, ஹோமம் என்ற நிலைக்கு நீங்கள் வரும்போது, இந்தச் சடங்குகளைச் செய்பவர்கள் உங்களோடு பொருந்தி வருவார்கள்! உங்களுக்குப் பூஜையைச் சொல்லிக் கொடுத்தவர், உங்களோடு பொருந்தி வருவார். அவர் உங்களுக்கு குருவாக இருப்பார்.
அடுத்ததாக, ஒரேயொரு கடவுளிடம் மட்டும்
ஒருமுகப்பட்டு சடங்கு சம்பிரதாயங்களைச்
செய்யும் நிலைக்கு வரும்போது, அந்தக்
கடவுள் உங்களின் குருவாக இருப்பார்.
அடுத்ததாக, மந்த்ரங்களை உச்சரிக்கும் நிலைக்கு நீங்கள் வரும்போது, உங்களுக்கு மந்த்ரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் உங்கள் முன் வருகிறார். அவர் உங்களின் குருவாக மாறுகிறார்.
அடுத்ததாக, சில காலங்களுக்குப் பிறகு, ஏன் இந்த மந்த்ரங்களையே உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்? நாம் ஏன் த்யானம் செய்யக்கூடாது என்று நீங்கள் நினைக்கும்போது, உங்களுக்கு த்யானம் சொல்லித் தருபவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்கிறார்.
த்யானம் என்பது மீண்டும் ஸகுண ப்ரஹ்மம், அதாவது, ஒரு வடிவத்தை நினைத்து தியானிப்பதையே குறிக்கிறது. இதுதான் அடுத்த நிலை.
அதனால் சடங்குகள் செய்வதும், கோயில்களுக்குச் சென்று வருவதும் முதல் நிலையாகிறது. நீங்களே சடங்குகளைச் செய்வது இரண்டாம் நிலையாகிறது. மூன்றாம் நிலையில், ஒரு கடவுளின் மீது ஒருமுகப்பட்டு, அந்தக் கடவுளுக்கு மட்டும் வழிபாடுகள் செய்கிறீர்கள். நான்காம் நிலையில், சடங்குகளைவிட மந்த்ரங்கள் சக்தி வாய்ந்தவை என்று உணர்ந்து, சடங்குகள் செய்வதற்கு மாறாக, மந்த்ரங்களை உச்சரிக்கத் தொடங்குவீர்கள்.
ஐந்தாவது நிலையில், மந்த்ரங்கள்
உச்சரிப்பதற்குப் பதிலாக ஒரு வடிவத்தை
மனத்தில் நினைத்துக்கொண்டு,
தியானிப்பீர்கள். நீங்கள் ஆழமாகத்
தியானிக்கும்போது, அவரே உங்கள் முன்
தோன்றுகிறார்.
> சிறு
> தெய்வங்களிருந்துது
> நீங்கள் பெறுகின்ற
> வரங்கள் கூட
> எல்லையற்ற
> எங்கும் நிறைந்திருக்கும்
> அந்தப் பிரபஞ்ச
> சக்தியால்
> கொடுக்கப்பட்டதே.
அவர் உங்களுக்குத் தரிசனம் அளித்து, நீங்கள் பயிற்சியின் உயர் மட்டத்திற்குச் செல்ல அவர் உங்களுக்கு வழிகாட்டுகிறார். உங்களைச் சரியான குருவிடம் எடுத்துச் செல்கிறார். சிலநேரங்களில் நீங்கள் உங்கள் குருவுடன் இணைந்ததை உங்களுக்கு உணர்த்துகிறார்.
இந்த நிலைக்கு வந்த ஒருவரால்தான், நேரடியாக ஜ்ஞாந குருவுடன் இணைந்ததை உணர முடியும். இந்த நிலையை அடையும்வரை இந்தப் பக்குவத்தை நீங்கள் அடையும்வரை முழுமையாக நீங்கள் ஒரு ஜ்ஞாந குருவுடன் இணைந்திருப்பதை நேரடியாக உணர முடியாது.
இந்த ஐந்து படிகளையும் நீங்கள் கடந்து வர வேண்டும். அதற்குப் பிறகுதான், நீங்கள் ஒரு ஜ்ஞாந குருவுடன் முழுமையாக இணைந்திருப்பதை உணர முடியும். ஒரேயொரு வடிவத்தைத் தியானிக்கும் நிலைக்கு நீங்கள் வரும்போது, உங்கள் வாழ்க்கையில் குரு வருகிறார். உங்களை அவர் வந்தடைகிறார்; உங்களை வழிநடத்துகிறார்.
நிச்சயமாக உங்ளுக்கு உயர்வு உண்டு
நீங்கள் தியானிக்கும் வடிவமும், உங்களின் சொந்த வடிவமும் அந்தத் தெய்வீக சக்தியின் வெளிப்பாடுகளே! அதனால் குரு, உங்களைச் சரியான த்யான நுட்பத்திற்குள் அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் நீங்கள் உங்களுக்குள் திரும்பிப் பார்க்கிறீர்கள்; உங்கள் சொந்த இருப்புத் தன்மைக்குள் திருப்பிப் பார்க்கிறீர்கள்; உங்கள் ஆன்மாவை நோக்கித் திரும்புகிறீர்கள். உங்களின் இருப்புத் தன்மையை உணர, அவர் உங்களுக்கு த்யான நுட்பங்களை அளிக்கிறார். இதுதான் ஆறாவதுநிலை எனப்படுகிறது.
‘நான் அதுவாக இருக்கிறேன்’ என்று நீங்கள் உணரும் நிலைதான் இறுதி நிலையான ஏழாவது நிலை. இந்த நிலையில்தான் நீங்கள் ஞானமடைகிறீர்கள்!
தேடல் நிறைந்தவர்கள் பொதுவாக இந்தப் பாதையில்தான் பயணிக்கிறார்கள், முதல் நிலையிலிருந்து தொடங்கி, இரண்டாவதுநிலை வழியாகச்சென்று, ‘நான்’ என்பதை உணரும் இறுதிநிலையை அடைகிறார்கள்.
நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள், இதிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முயற்சி செய்யுங்கள். அவ்வளவுதான். அது மட்டும் நீங்கள் செய்தால் போதுமானது.
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், “நான் ஒவ்வொருவரின் இதயத்திலும், பரமாத்மாவாக இருப்பதால், சிறு தெய்வங்களை ஒருவர் வழிபாடு செய்ய விரும்பும்போது, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அப்படியானால்தான் அவரால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் தம்மைத்தாமே அர்ப்பணிக்க முடியும்.”
நீங்கள் முதல் நிலையிலிருந்து கடவுளை அணுகினாலும்கூட, அவர் உங்களுக்கு உதவுவார். நிச்சயமாக அவர் உங்களுக்கு உதவுவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை
நீங்கள் தொடங்கும்போது, 18 காரட்
தங்கத்தைப் போல இருப்பீர்கள்; இப்படி 18
காரட் தங்கமாக இருப்பதில் எந்தத் தவறும்
இல்லை, ஆனால் உங்களை சிறிது நெருப்பில்
போட வேண்டிய தேவை உள்ளது.
பிறகு மெது மெதுவாக, நீங்கள் 22 காரட்
தங்கமாக மாறுவீர்கள். பிறகுதான் நீங்கள்
குருவை அடைவீர்கள். ஒரு வாழும் குருவை
அடைவீர்கள். அதற்குப் பிறகு மெதுவாக
நீங்கள் 24 காரட் தங்கமாக மாறுவீர்கள்,
இதன் பிறகு ஞானமடைவீர்கள்.

நீங்கள் முதல் படியைத் தூக்கி எறிந்தீர்கள் என்றால், உங்களால் ஒருபோதும் இரண்டாவது படியை எட்ட முடியாது. முந்தைய படிகளைத் தாண்டவில்லையென்றால், ஒரு வாழும் குருவோடு தொடர்புகொள்வது என்பது ஒரு சிரமமான விஷயமாக இருக்கும்.
இன்றைக்குக் காலையில் என்னைப் பார்க்க வந்த ஒருவர், என்னோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் தம்முடைய குழப்பத்தைப் பற்றி சொன்னார். பல புத்தகங்களைப் படித்ததால் அவருக்கு இப்படி ஆகி இருந்தது. அவர் சொன்னார், “முன்னர் இருந்ததைவிட நான் இப்போது ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கிறேன்.”
கீதையில், அர்ஜூனனும் இதையேதான் சொல்கிறார். சில அத்தியாயங்களுக்குப் பிறகு, அர்ஜூனன், “ஓ கிருஷ்ணா, கீதையைக் கேட்பதற்கு முன்னால் இருந்ததை விட, நான் இப்போது மிகவும் குழப்பமாக இருக்கிறேன்!” என்று சொல்கிறார்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை மிகவும் தெளிவாகச் செய்து வருகிறீர்கள் என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது! நீங்கள் నిజமாகவே உங்கள் பயிற்சியைச் செய்திருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட பயிற்சி உங்களுக்கு உதவவில்லை என்பதைப் புரிந்துகொள்வதுதான், அந்தப் பயிற்சியிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சரியான உதவியாக இருக்க முடியும்!
புத்தர், அவருடைய சீடர்களில் ஒருவருக்கு த்யானம் கற்றுத் தருகிறார். அந்தச் சீடர் அவரால் முடிந்தவரைக்கும் த்யானம் செய்த பிறகு, புத்தரிடம் வந்து சொன்னார், “புத்தரே! என்னால் தியானிக்க முடியவில்லையே!”
புத்தர் சொன்னார், “கவலைப்படாதே. நீ தெளிவாகப் புரிந்துகொண்டு விட்டாய். இந்த த்யானத்தின் நோக்கமே அது தான். உன்னால் தியானிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்வதுதான் இந்த த்யானத்தின் நோக்கம். நீ அதை அடைந்துவிட்டாய். அந்த த்யானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. இப்போது நீ அதை மறந்து விட்டு, அடுத்த நிலைக்கு வா.”
சிலநேரங்களில், இந்த நுட்பங்களை நம்மால்
செய்ய முடியாது என்ற புரிதலை நமக்குக்
கொடுப்பதன் மூலம், இந்த நுட்பங்கள்
நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. அந்தப்
புரிதல்தான் மிகப்பெரிய பக்குவமாக
இருக்கிறது. அதில் எந்தத் தவறும் இல்லை.
ஏதாவதுஒரு வடிவத்தில் கடவுளை
அணுகுவதுதான் முதல் படி. அதில் எந்தத்
தவறும் இல்லை, ஆனால் அங்கேயே நின்று
விடாதீர்கள். இங்கே கிருஷ்ணர் சொல்கிறார்,
"நான் அவர்களுடைய நம்பிக்கையை
வலுப்படுத்துகிறேன், அதனால் அந்தக்
குறிப்பிட்ட கடவுளிடம் அவர் தம்மையே
அர்ப்பணிக்கிறார்,'' என்கிறார்.
சிறுதெய்வங்ளிடமிருந்து
நீங்கள் பெறுகிற
வரங்கள்கூட,
எல்லையற்ற
எங்கும் நிறைந்திருக்கும்
அந்தப்
பிரபஞ்ச சக்தியால்
கொடுக்கப்பட்டதே!
அதாவது அந்தக் குறிப்பிட்ட பண்புடன் அவரால் வளர முடியும் என்பதைத்தான் இது குறிக்கிறது.அங்கு வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவர் சொல்கிறார், "நான் அவர்களை அதைரியப்படுத்த மாட்டேன்; நான் அவரின் நம்பிக்கையை வலுடுத்துவேன், அதன் மூலம் அவர் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வருவார்.''

## வரங்கள் வாங்கியதோடு நின்று விடாதீர்கள்...
நீங்கள் மேலும் வளர வேண்டும்
"நீங்கள் பயம் அல்லது பேராசை மனோபாவத்தோடு என்னை வணங்கினாலும்கூட, நான் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். என்னுடைய சொந்த சக்தி அவற்றை நிறைவேற்றும், இதன் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், நீங்கள் அடுத்த நிலைக்கு வருவீர்கள்,'' என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
சிறு தெய்வங்களிடமிருந்து நீங்கள் வரங்களைப் பெறும் போதுகூட, அவற்றுக்கு அந்தக் கடவுள்தான் காரணம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வணங்கும் சிலைகள்தான் உங்களின் வேண்டுதல்களை எல்லாம் கொடுத்தது என்று நினைக்காதீர்கள்.
இவை எல்லாம் எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் அந்தச் சக்தியால் கொடுக்கப்பட்டதே. ஆனால் நீங்கள் அந்த வரங்களை வாங்கியதோடு மட்டும் நின்று விடாதீர்கள். நீங்கள் மேலும் வளர வேண்டும்.
நான் எப்போதும் சொல்வதுண்டு, நீங்கள்
கடவுளை வழிபடும்போது, முதலில் உங்கள்
கனவுகள் நனவாகும். கடவுள் உங்களை
ஆசீர்வதிப்பார்.
உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறும்.
அதற்குப் பிறகு, நீங்கள் உண்மை என்று
நம்பும் இந்த நனவுகூட கனவுதான் என்பதை
அந்தக் கடவுள் உங்களுக்குப் புரிய
வைப்பார்!
கடவுள், முதலில் உங்கள் கனவுகளை
நனவாக்குவதற்கான சக்தியைத் தருகிறார்.
அதற்குப் பிறகு, நனவு என்பதே ஒரு
கனவுதான் என்கிற புத்தியைத் தருகிறார்!
அதைத்தான் அவர், "நான் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்களின் பக்குவ நிலையைப் பொறுத்தும், நீங்கள் கடவுளை எந்த மனோபாவத்துடன் வழிபடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும்தான் நான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருகிறேன்" என்று சொல்கிறார்.

விஞ்ஞானிகளால் மேய்க்கப்படும் கால்நடைகளாகாதீர்கள்
உருவ வழிபாடு பற்றியும், சடங்குகளால் கிடைக்கும் அறிவு பற்றியும் பல கல்வியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன கதை.
விவேகானந்தரின் கால்களை ஒரு சீடர் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அப்போது விவேகானந்தரைப் பின்பற்றி வந்த ஒரு இளம் மாணவர் ஒருவர் அங்கு வந்து விவேகானந்தரை வணங்கிவிட்டு, "நான் உங்களை போற்றி வணங்குகிறேன். உருவ வழிபாடு, கங்கையில் குளிப்பது போன்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதால், நான் உங்களை போற்றி வணங்குகிறேன். நீங்கள் உண்மையில் சிறந்த கல்விமான்தான்," என்றார்.
விவேகானந்தர் தம் கம்பீரமான சிம்மக்குரலில், "நீ ஒரு முட்டாள், என்னுடைய நம்பிக்கைகள் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் ஒவ்வொரு நாளும் அன்னை காளியை வணங்குகிறேன், கங்கையில் குளிக்கிறேன்.
உருவ வழிபாடு முட்டாள்தனமானது என்ற உன்னுடைய எல்லாக் கருத்துகளையும் விட்டு விட்டு, கடவுளை வணங்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்,'' என்று கர்ஜித்தார்.
அதற்குப் பிறகு, சிறிது நேரத்தில், ஒரு வயதான கல்வியாளர் விவேகானந்தரைப் பார்க்க வந்தார். அவர், "குருவே, நீங்களே தலைசிறந்தவராக இருக்கிறீர்கள். வேத நூல்கள் படிப்பது பற்றியும் கோயில்களுக்குப் போவது பற்றியும் நீங்கள் சொன்ன கருத்துகளெல்லாம் மிகவும் ஆற்றல் மிக்கதாக இருக்கின்றன. அதனால் ஒவ்வொருவரும் உங்களைப் போன்றே பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார்.
விவேகானந்தர் அவருக்குச் சொன்னார், "வேத நூல்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இந்தக் காலங்கடந்த புத்தகங்களைப் படிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? அது உங்களின் அஹங்காரத்தைத்தான் இன்னும் அதிகமாக்கும். அதனால் அந்த முட்டாள்தனத்தை விட்டு விட்டு தியானம் செய்யுங்கள்,'' என்றார்.
அந்தக் கல்விமான் சென்ற பிறகு, விவேகானந்தரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சீடர் அதிர்ச்சியுடன் கேட்டார், "குருவே, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இந்த இரண்டு நபர்களிடமும் உங்களின் நிலையை நீங்கள் முற்றிலும் வேறுவேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நான் இதை எப்படிப் புரிந்துகொள்வது? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றார்.
விவேகானந்தர் சொன்னார், "வாயை மூடிக்கொண்டு, என்னுடைய பாதத்தைப் பிடித்துவிடும் வேலையை மட்டும் செய். அதுதான் உனக்கு நல்லது,'' என்றார்.
நீங்கள் முதல் நிலையில் இருக்கும்போது, அதாவது நீங்கள் கோயில்களுக்குப் போய் விக்ரஹங்களை வழிபடும்போது, ஒரு கல்லையோ அல்லது ஓர் உலோகச் சிலையையோ வழிபடுவதாக நீங்கள் நினைக்கலாம்.
கடவுளுக்கு
நன்றி
தெரிவிக்கும்போது,
எந்த இடமும்
கோயிலாக மாறி
விடுகிறது.
ஆனால் உங்கள் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, விக்ரஹம் என்பது வெறும் கல்லோ அல்லது உலோகமோ கிடையாது; அது சக்தி என்பதை உணர்வீர்கள். பெரிய முயற்சி எதுவும் இல்லாமலேயே, கோயிலுக்குள் இருக்கும் சக்தியை உங்களால் உணர முடியும்.
திருப்பதி அல்லது காசி அல்லது திருவண்ணாமலையில் உள்ள புனித ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள், இல்லை இல்லை, கோடிக்கணக்கானவர்கள் வருகிறார்களே, ஏன் என்று நினைக்கிறீர்கள்? சில நூற்றுக்கணக்கானவர்களை வேண்டுமானால் தவறாக வழி நடத்தி விடலாம், ஆனால் எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் எவ்வித விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கானவர்கள் சரியான வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் துயரத்திலிருந்து விடுபட்டதாக உணர்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் அந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் எல்லோருமே பயத்தினாலும், பேராசையினாலும் அங்குச் செல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஆயிரக்கணக்கானவர்கள் அந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மனித அறிவுக்கு எட்டாத, பட்டறிவினால் அறிந்துகொள்ள இயலாத கடவுளின் கரங்கள் அங்கிருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த ஸ்பரிசத்தை, அந்தத் தொடுதலை உணர்கிறார்கள், அந்த சக்தித் தொடர்பை அவர்களால் உணர முடிகிறது.

இந்துக்கள், விக்ரஹங்கள் மூலமாக வழிபடுகிறார்கள், அவர்கள் விக்ரஹங்களையே வழிபடுவதில்லை; அந்த விக்ரஹங்களுக்குப் பின்னால் இருக்கும் சக்தியைத்தான் நமது சடங்குகள் குறிக்கின்றன. இதைத் தர்க்கத்தினால் புரிந்துகொள்ள முடியாது. நம்பிக்கையினால் மட்டும்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
உருவமற்ற ஒன்றை உணர்வதற்கு முன்னால், நாம் உருவ வழிபாடு என்ற இந்த நிலையைக் கடந்தாக வேண்டும்.
அப்படியில்லையென்றால், நாம் எல்லோரும் பட்டறிவுமிக்க அரக்கர்களாகத்தான் இருப்போம். வழிபாட்டிற்குப் பின்னால் இருக்கும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் உருவ வழிபாட்டைக் கண்டிக்கும் மதங்கள், குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
அந்தக் குழப்பம் அழிவுகளுக்குத்தான் இட்டுச் செல்கிறது.
எந்த வகையான கல்வியாக இருந்தாலும், ஒருவர் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். ஒருவர் விதிவிலக்காக இருந்தால் மட்டும்தான், உயர் நிலைப் பள்ளியில் சேராமலேயே பல்கலைக்கழக கல்விக்குத் தாண்டிச் செல்ல முடியும். இதுபோன்ற விதிவிலக்குப் பெறுவது என்பது மிக அரிதாகவே இருக்கிறது. மேலும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்றவர்கள் தங்கள் ஆளுமையை நிரூபிக்கிறார்கள். அதாவது தாங்கள் அவ்வாறு விதிவிலக்குப் பெறுவதற்கு என்னென்ன விதங்களைக் கடைப்பிடித்தார்கள் என்பதை தங்கள் செயல்கள் மூலம் நிரூபிக்கிறார்கள்.
உருவ வழிபாடு முட்டாள்தனமானது, அர்த்தமற்றது என்று நாம் சொல்லும்போது, நாம் முட்டாள்களாகவும், அறியாமையில் மூழ்கியவர்களாகவுமிருக்கிறோம் என்பதையே அது குறிக்கிறது.
விஞ்ஞானம் இன்னும் சற்று முன்னேறி, நமது
கோயில்களில் உள்ள சக்தி அதிர்வுகளை
ஒரு விஞ்ஞானி அளந்து பார்த்து, "இவை
எல்லாம் சக்திமையங்கள்தான்," என்று
நிரூபித்துவிட்டால், உடனே எந்த மக்கள்
உருவ வழிபாடு முட்டாள்தனமானது என்று
இன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ,
> விக்ரஹங்களுக்குப்
> பின்னால் இருக்கும்
> சக்தியைத்தான்
> நமது சடங்குகள்
> குறிக்கின்றன.
அதே மக்கள் கோயில்களுக்குச் சென்று வரிசையில் காத்து நிற்பார்கள்.
மற்றவர்களைப் பார்த்து, "நீங்கள் மதங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் மேய்க்கப்படும் கால்நடைகள்," என்று இவர்கள் சொன்னாலும்கூட, விஞ்ஞானத்தால் மேய்க்கப்படும் கால்நடைகளாகத்தான் இவர்களே இருக்கிறார்கள்!
நம்மைச் சுத்திகரிக்கும் சக்தைப் பிரவாகங்கள்
அது ஒரு இந்து கோயிலா, ஒருகிறிஸ்தவ தேவாலயமா, ஒரு புத்த விகாரமா, ஒரு முஸ்லீம் மசூதியா அல்லது ஒரு ஆறா அல்லது மலையா என்பது விஷயமல்ல; ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கடவுளை வழிபடும்போது, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும்போது எந்த இடமும் ஒரு கோயிலாக மாறி விடுகிறது. எந்த இடமும் ஒரு வழிபாட்டுத் தலமாக மாறி விடுகிறது.
இந்தியாவிலுள்ள புனித ஆறான கங்கையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.
சில சமயங்களில் பத்துகோடி மக்கள்கூட அந்த விழாவிற்காக ஒன்று கூடி இருக்கிறார்கள், நிச்சயமாக உலகிலேயே ஒரு விழாவிற்காக ஒன்று கூடும்கூட்டங்களிலேயே மிகப்பெரிய கூட்டம் இதுதான்.
ஆழ்ந்த நம்பிக்கையோடும், நன்றியுணர்வோடும், வேண்டுதல்களோடும் இவர்கள் ஆற்றில் மூழ்கி எழும்போது, அந்த ஆறு சுத்தமாகிறது, அவர்களையும் சுத்தப்படுத்துகிறது.
அன்பையும்
நன்றியுணர்வையும்
மனத்தில்கொண்டு
கடவுளை
வணங்கும்போது,
ஒட்டுமொத்தமாக
நாம்
ஒரு வித்தியாசமான
உள்தளத்தை
அனுபவிக்கிறோம்.
அதுவொரு ஆழ்ந்த மனித -ஆன்மீகத்
தொடர்பாக அமைகிறது, அது பூமியின்
சக்தியையும் பிரபஞ்சத்தின் சக்தியையும்
அதிகரிக்கிறது.
"சிறுதெய்வங்கள் வாழும் உலகிற்கு அவர் செ
ல்கிறார்," என்று கிருஷ்ணர் சொல்லும்போது,
அப்படி ஒரு உலகமிருக்கிறது என்று
நினைக்காதீர்கள்! அவர் உள்தளத்தையும்
அனுபவத்தையும் பற்றிப் பேசுகிறார்.
naam பேராசையின் காரணமாக ஏதோவொரு கடவுளை வணங்கும்போது, நம்மால் அந்தப் பேராசையிலிருந்து ஒருபோதும் வெளியில் வர முடியாது. நாம் தொடர்ந்து பேராசையில்தான் மாட்டிக் கொண்டிருப்போம்.
naam பயத்தில் மாட்டிக்கொண்டு ஏதோவொரு கடவுளை வணங்கும்போது, நாம் எப்போதும் பயத்தில்தான் இருப்போம்.
அன்பையும் நன்றியுணர்வையும் மனத்தில்கொண்டு கடவுளை வணங்கும்போது, ஒட்டுமொத்தமாக நாம் ஒரு வித்தியாசமான உளதளத்தை அனுபவிக்கிறோம்.
சொர்க்கமோ, நரகமோ புவியல் ரீதியாக கிடையாது; அவை உளவியல் ரீதியானவை. நாம் எங்குச் சென்றாலும் நம்முடைய மனோ நிலையின் அடிப்படையில்தான் நமது சொந்த நரகத்தை அல்லது சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.
நரகத்தை உருவாக்குவது எப்படி என்பது நமக்குத் தெரியும்! இனி நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் எப்படிச் சொர்க்கத்தை உருவாக்குவது என்பதைத்தான்! நரகத்தை உருவாக்கும் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள இனி ஒன்றுமே இல்லை.
இது, சொர்க்கத்தை எப்படி உருவாக்குவது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான நேரம்.
கிருஷ்ணர் சொல்கிறார், குறுகிய புத்தி உடையவர்கள் - அதாவது பேராசை அல்லது பயத்தில் சிக்கிக்கொண்டவர்கள், புகழ் அல்லது கவலையில் சிக்கிக்கொண்டவர்கள் - சிறுதெய்வங்களை வணங்குகிறார்கள். சில நேரங்களில் சிறு தெய்வங்களை வணங்கும் அதே மனோபாவத்துடன் அதாவது அதே வேண்டுதல்களோடு கிருஷ்ணரையோ அல்லது எல்லாம்வல்ல இறைவனையோ அணுகுகிறோம்.
பேராசை மனப்பான்மையுடன் நாம் செல்வத்தை வாரி வழங்கும் குபேரரை வணங்கினாலும் சரி அல்லது கிருஷ்ணரை வணங்கினாலும் சரி, அதன் விளைவு, நாம் சிறு தெய்வத்தை மட்டுமே வழிபடுகிறோம். அதே மனோபாவத்துடன் கிருஷ்ணரையே வணங்கினால்கூட நாம் சிறு
தெய்வத்தைத்தான் வணங்குகிறோம். நம் மனோபாவம்தான் கிருஷ்ணரை எல்லாம்வல்ல கடவுளாகவோ அல்லது சிறு தெய்வமாகவோ ஆக்குகிறது.
அந்தச் மனோபாவத்தை உருவாக்குவது நாம்தான்.
அந்தச் சக்தியை உருவாக்குவதும் நாம்தான். சிறு தெய்வங்களை வணங்குவதன் மூலம், சிறு தெய்வங்களை அடைகிறோம்.
புத்தியில்லாத சக்தி தற்காலிகமானது
இது ஒரு முக்கியமான ஸ்லோகம், நுட்பம். இது சொல்கிறது:
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் |
தேவாந் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி || 7.23
சிறு தெய்வங்களிடமிருந்து நாம் வரங்களைப் பெறும்போது, அவை தற்காலிகமானதாகவே இருக்கும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.
நாம் செல்வங்களைக் கேட்கும்போது, கடவுள் நமக்கு அதைக் கொடுப்பார். ஆனால் அதை வைத்துக் காப்பாற்ற புத்திசாலித்தனமும் நமக்குத் தேவைப்படுகிறது. செல்வங்களை வைத்துக் காப்பாற்றும் புத்திசா லித்தனம் நமக்கு இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது அது மட்டும்தான்.
அதனால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், பிரார்த்தனையின் மூலமாக எதையாவது நாம்பெறும்போது, அதைப் பெறுவதற்கும் பெற்றதை வைத்துக்க காப்பாற்றுவதற்கும் தேவையான பக்குவம் நம்மிடம் இல்லையென்றால் அது சில காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். செல்வத்தை வைத்திருப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனமும், பக்குவமும் நமக்கு இருந்தாலே போதும், அதை நாமே உருவாக்கி இருந்திருப்போம்.
நம்மிடம் புத்தி இல்லை, ஆனால் கடவுளிடம் சென்று சக்தியை மட்டும் நாம் கேட்கிறோம்.
புத்தி இல்லாமல் நாம் சக்தியைப் பெற்றால், அது தற்காலிகமாகத்தான் நிலைத்திருக்கும்.
> செல்வத்தை
> வைத்திருப்பதற்குப்
> போதுமான
> புத்திசாலித்தனமும்,
> பக்குவமும்
> நமக்கு
> இருந்தாலே போதும்,
> அதை நாமே
> உருவாக்கி
> இருந்திருப்போம்.
அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், புத்தி இல்லாமல் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், அது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. அது நம்மோடு எப்போதும் தங்கி இருக்காது. அதனால்தான் சிறு தெய்வங்களிடமிருந்து வாங்கும் வரங்கள் தற்காலிகமானவைதான் என்று சொல்கிறார்.
நாம் அவற்றையே தொடர்ந்து வழிபட்டுக்
கொண்டிருந்தால், அவற்றில் நாம்
மாட்டிக்கொள்வோம். அதே மாதிரியான
சக்தியையே நமது உள் உலகத்திற்குள்ளும்
உருவாக்குகிறோம். அதே மாதிரியான
சக்தியுடன்தான் நம்முடைய இருப்புத்
தன்மையிலும் நாம் வாழத் தொடங்குகிறோம்.
கிருஷ்ணர் மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார்: மத் பக்தா யாந்தி மாம் அபி, “என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்.”
அதற்குப் பிறகு அவர் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: இறுதியான மனோபாவத்துடன் அதாவது அன்படனும் நன்றியுணர்வுடனும் என்னை நீங்கள் அணுகினால், உங்களால் என்னை அடைய முடியும். மிகச் சிறந்த மனோபாவம் என்பது நன்றியுணர்ச்சியே.
நன்றியுணர்வுடன் என்னை நீங்கள் அணுகினால், அனுபவமாக என்னை உணர்வீர்கள்.
“எனக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கும்போது, நான் எப்படி நன்றியுணர்வுடன் இருக்க முடியும்,” என்றுதான் மக்கள் மீண்டும் மீண்டும் என்னைக் கேட்கிறார்கள்.
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், “ஓ கடவுளே, எனக்கு ஒரு வைரம் மோதிரம் கொடுங்கள்,” என்று நீங்கள் தொடர்ந்து வேண்டுகிறீர்கள். ஆனால் அந்த மோதிரம் அணிவதற்காக அவர் விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக எப்போதாவது நீங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா? நமக்கு அவர் விரலைக் கொடுத்திருக்கிறார் என்பதற்காக நாம் அவரை நன்றியுணர்வுடன் நினைத்ததில்லை.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், விரல் நமது பிறப்புரிமை கிடையாது. ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கைகளே கிடையாது. ஆயிரக்கணக்கானவர்கள் விரல்களே இல்லாமல் இருக்கிறார்கள். அது

நமது பிறப்புரிமை கிடையாது.
நாம் தொடர்ந்து தீவிரமாக,
“ஓ கடவுளே! எனக்கு
இதைக் கொடுங்கள். அதைக்
கொடுங்கள்” என்று எல்லா
வழிகளிலும் வேண்டுகிறோம்.
ஆனால், நமக்குக்
கொடுக்கப்பட்டிருப்பதற்கு
நாம் ஒருபோதும் நன்றியை
வெளிப்படுத்துவது
கிடையாது.
இந்த அருமையான வாழ்க்கையே ஒரு வரம்தானே!
ஒவ்வொரு பிறப்பும் ஓர் ஆசீர்வாதம்
நாம் வைகுண்டத்திலோ அல்லது கைலாசத்திலோ செய்த ஏதோ சேவைக்காகத்தான் இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நாம் சொல்லமுடியுமா?
நிச்சயமாகக் கிடையாது! நாம் கைலாசத்தில் 100 ஆண்டுகள் வேலை செய்ததற்காக கொடுக்கப்பட்ட காசோலை அல்ல இந்த வாழ்க்கை. “வைகுண்டத்தில் 100 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறீர்கள். அதனால் 70 ஆண்டு வாழ்க்கையைப் பூமியில் அனுபவியுங்கள்,” என்று கடவுள் கொடுத்து, நாம் வாங்கி வந்த ‘செக்’ அல்ல இந்த வாழ்க்கை!
நாம் இராணுவத்தில் வேலை செய்தால், அவர்கள் நமக்குப்படைப்பதற்குப் பணம் தருகிறார்கள். இது அது மாதிரி அல்ல; நாம் இந்த வாழ்க்கையை எதற்கான சம்பளமாகவும் பெறவில்லை. இந்த வாழ்க்கை, முழுக்க முழுக்க நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் ஆசீர்வாதமே.

ஒவ்வொரு பிறப்புமே ஓர் ஆசீர்வாதம்!
நாம் உள்ளிழுக்கும் வெளியிடும்
ஒவ்வொரு மூச்சுக் காற்றுமே
நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்
வரம்தான்.
நாம் வாழும் இந்த வாழ்க்கையே ஒரு
ஆசீர்வாதம்தான். நமது உடைமை
அல்லாத பொருட்களை நாம் இழந்து
கொண்டிருப்பதாக தொடர்ந்து
உணர்கிறோம். ஆனால் கடவுளால் நமக்குக்
கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை நாம்
ஒருபோதும் அனுபவிப்பதில்லை.
கடவுள் நமக்கு எதையெல்லாம் கொடுக்கவில்லை என்பதற்கான ஒரு நீண்ட பட்டியலை நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கிறோம். கடவுள் நமக்கு எதையெல்லாம் கொடுத்திருக்கிறார் என்பதற்கும் நம்மிடம் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
ஒரு பேப்பர், பேனாவை எடுத்து வைத்து இந்தப் பட்டியல்களை எழுதத் தொடங்கினால், இந்த இரண்டு பட்டியல்களுமே முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும். நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமுமே கடவுளால் அளிக்கப்பட்டிருக்கும் ஓர் அன்பளிப்புதான்.
நாம் உயிரோடு இருக்கிறோம், நாம் இன்னமும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறோம்; அதுவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசுதான்.
நமக்குக் கொடுக்கப்படாத விஷயங்களை நேர்மையோடு நாம் பட்டியலிட்டால், அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். அதே போல நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக அக்கறையுடன் நாம் பட்டியல் போட்டால், அதுவும் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.
அதனால் இப்போது, நமக்குக் கொடுக்கப்படாத பட்டியலைப் பார்த்து தொடர்ந்து ஏமாற்றத்தோடு நரகத்தில் வாழ்வதா அல்லது நமக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து சொர்க்கத்தில் வாழ்வதா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது.
இரண்டாவது சொன்னது, நமக்குள் ஆழமான நன்றியுணர்வை ஏற்படுத்தும். அது, "கடவுளே! எனக்கு நீங்கள் எவ்வளவோ கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள் எனக்கு வாழ்க்கை என்கிற ஆசீர்வாதத்தையும் கொடுத்திருக்கிறீர்கள்," என்று நம்மைச் சொல்ல வைக்கும்.
நாம் நன்றியுணர்வுடன் நினைப்பதால்,
நம்முடைய சொர்க்கத்தை நாமே
உருவாக்குகிறோம். சொர்க்கத்தையோ
அல்லது நரகத்தையோ உருவாக்குவது
நம்மிடம்தான் இருக்கிறது. அது முழுக்க
முழுக்க நம்முடைய விருப்பத்தைப்
பொறுத்ததுதான்.
கிருஷ்ணர் சொல்லும்போது, "குறுகிய புத்தி உடையவர்கள் சிறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் தற்காலிகமானவைகளாகவே இருக்கின்றன," என்கிறார். நாம் தொடர்ந்து அந்த வழியிலேயே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம் என்று நாம் உணரும்போது, அன்படனும் நன்றியுணர்வுடனும் நாம் கடவுளை அணுகும்போது, நாம் கடவுள் உணர்வை அனுபவமாகப் பெறுவது மட்டுமல்ல, கிருஷ்ணர் சொல்கிறார்: அவர்கள் என்னை வந்தடைகிறார்கள். அவர்களால் என்னை அடைய முடியும்.
இன்னொரு வாசகமுமிருக்கிறது, அதைக் கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்: "நீங்கள் எதையாவது கேட்டால், உங்களுக்கு அது கொடுக்கப்படும். நீங்கள் எதையுமே கேட்கவில்லை என்றால், என்னையே நான் உங்களிடம் கொடுத்து விடுவேன்."
உடனே மக்கள், "அவர் யாருக்கு வேண்டும்? அவர் கொடுக்கும் பலன்கள் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும், அவர் வேண்டாம். அவர் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கும்வரை எல்லா விஷயங்களும் நன்றாகவே நடக்கின்றன, அதுவே போதும். ஆகவே எங்களுக்கு அவர் தேவையில்லை," என்றுதான் சொல்கிறார்கள்.
மக்களுக்குத் தீர்வுகள் மட்டும்தான் தேவை; அவர்களுக்குக் கடவுள் தேவையில்லை.