KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/மரணமில்லாப் பெருவாழ்வை உங்களுக்குத் தர முடியும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

மரணமில்லாப் பெருவாழ்வை உங்களுக்குத் தர முடியும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: பல வேத நூல்கள் நம்மை உள்முகமாகப் பார்க்கச் சொல்கின்றன. ஆனால் இந்த உலகில் வெற்றி பெற வேண்டும் என்றால், நம்மைச் சுற்றி அனைத்தும் எவ்வாறு நடக்கின்றன என்று நாம் வெளிமுகமாகப் பார்க்க வேண்டியுள்ளது. உள்முகமாகப் பார்ப்பதால் நாம் எவ்வாறு வெற்றி அடைய முடியும்?

மனிதர்கள் இரண்டு வழிகளில் வாழலாம். ஒன்று அவர் வெளி உலக ஈடுபாட்டோடு வாழ்வது; இதில் அவர் மொத்த உலகத்தையும்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் அங்கே அவரே அவரை இழந்து விடுவார். தம்முடைய சுயத்தை ஒருவர் இழந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் இழந்து விடுகிறார்.

ஒருவர் தமது சுயத்தோடு ஒன்றி இருந்தால் ஒழிய, அவருக்கு எதிர்காலமே இல்லை.

ஒருவர் ஒரு பெரிய ராஜாவாக ஆகலாம், ஓர் அரசியல்வாதியாக அல்லது ஒரு வெற்றிகரமான பணக்கார வியாபாரியாக ஆகலாம்; ஆனால் ஆழ்ந்த உள் மட்டத்தில் ஒருவர் பிச்சைக்காரராக, மோசமான நிலையில் இருப்பார். உங்களிடம் எவ்வளவுதான் இருந்தாலும், நீங்கள் மேலும் மேலும் ஏங்கிக்கொண்டுதான் இருப்பீர்கள். நீங்கள் ஓடிக் கொண்டேதான் இருப்பீர்கள், உங்களால் நிற்க முடியாது.

மற்றொன்று உள்முக வாழ்க்கை வாழ்வது. ஒருவர் உள் உலக ஈடுபாட்டோடு வாழலாம்; அப்பொழுது மட்டுமே ஒருவர் அவருடைய இருப்புத் தன்மையில் கலந்து வாழ்கிறார். தம்முடைய சுயத்தில் வேரூன்றியிருக்கும் வாழ்க்கையை வாழ்கிறார். அவர் உத்வேகத்தையும் ஊட்டத்தையும் தம்முடைய உள்ளுலகத்திலிருந்தே பெறுவதால், அவருக்குள் மிகச்சிறந்த ஆனந்தமான வாழ்க்கை உதயமாகிறது.

தம்மையே நேசிக்கும் ஒரு மனிதரால் மட்டும்தான் மற்ற எல்லோரையும் நேசிக்க முடியும்.

நாம் கடவுளோடு இணைந்திருக்கும் நமது உள் உலக மையத்திலிருந்துதான் இந்த ஆனந்தம் உதயமாகிறது. நமது உள் உலக மையத்திலிருந்து நாம் வாழும்போது, நம் மூலமாக கடவுளை வாழ அனுமதிக்கிறோம்.

நான் உலகத்திற்கு எதிரானவன் கிடையாது, உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையே பற்றிக் கொண்டிருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

உலகத்தில் வாழுங்கள், ஆனால் அதையும் கடந்து இருங்கள்.

உலகத்திற்குள் இருங்கள், ஆனால் அதைவிட மேம்பட்டு இருங்கள். ஒரு சாட்சியாக இருங்கள் - அதுதான் மையத்தை அடைவதற்கான வழி. அதற்கெல்லாம் ஒரு எளிய செயல்முறைதான் தேவையாய் இருக்கிறது: அமைதியாக அமர்ந்துகொண்டு, உங்களுக்குள்ளேயே நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

மனம், அதன் பழைய தந்திரங்களை எல்லாம் செய்து கொண்டே இருக்கட்டும்.

எந்தவிதமான தீர்ப்பும் கொடுக்காமல் கவனியுங்கள் - இது நல்லது, இது கெட்டது என்று எதற்கும் முத்திரை குத்தாமல், இது வேண்டும், இது வேண்டாம் என்று தேர்ந்தெடுக்காமல் எந்தவித வேறுபாடும் காட்டாமல், அமைதியாகக் கவனியுங்கள்.

மெது மெதுவாக, சாட்சியாக இருக்கும் தந்திரத்தை நீங்கள் பழகி விடுவீர்கள்.

முதலில் மனம் அதன் பழைய தந்திரங்களை முயற்சி செய்யும். பிறகு படிப்படிாக, நீங்கள் எந்த வழியிலும் பாதிக்கப்படாமல் இருப்பத்தைக் கண்டு கலக்கமடையும்!

நீங்கள் அதற்கு எதிராக நினைத்தால்கூட,
உடனே மனம் தன்னுடைய கலக்கத்திலிருந்து
விடுபட்டுத் தளர்வான நிலைக்கு
வந்துவிடும். ஏனென்றால் இப்போது
அது, 'உங்களை குழப்பத்தில் ஆழ்ந்த
வேண்டுமென்ற' தன்னுடைய நோக்கத்தில்
வெற்றிபெற்றுவிட்டது. அதனால் அதற்கு
எதிராகவும் எதையும் நினைக்காதீர்கள்.
அதனோடு சண்டை போடாதீர்கள், அதன்

தந்திரங்களுக்குப் பலியாகி விடாதீர்கள், அதை விட்டுத் தள்ளி இருங்கள்.

பல சமயங்களில் நீங்கள் மனத்துடன் முற்றிலும் இணைந்து விடுவீர்கள். நீங்கள் இதை உணர்ந்த கணமே, நினைவுபடுத்திக்கொண்டு உங்களை நீங்களே வெளியில் இழுத்துக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்; மீண்டும் கவனிப்பதைத் தொடங்குங்கள்.

மனத்தோடு சண்டை போடாதீர்கள், அதை விட்டுத் தள்ளி இருங்கள். ஒரு நாள், திடீரென அது காணாமல் போய்விடும்.

ஓர் எண்ணம் எழுந்தால், அதைக் கவனியுங்கள். அது உங்கள் முன் வந்து நிற்கும்பொழுது, அதை வெறும் சாட்சியாக இருந்து கவனியுங்கள். அது உங்களைக் கடந்து சென்றால், அதையும் கவனியுங்கள். எண்ணங்கள் வருவதையும் நிலைத்திருப்பதையும் கடந்து போவதையும் வெறுமனே கவனித்துக் கொண்டே இருங்கள்.

அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, இது நல்லது, இது கெட்டது என்ற எந்தவித கருத்தும் இல்லாமல், எந்தவித விசாரணை மனோபாவமும் இல்லாமல் அவற்றைக் கவனியுங்கள். வெறும் ஒரு விஞ்ஞானப்பூர்வமான, அமைதியான கவனிப்பு மட்டுமேயிருந்தால் போதும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மனம் உளறுவதை நிறுத்திவிடும்.

ஒரு நாள், திடீரென அது காணாமல் போய்விடும். அன்றுதான் உங்கள் மீது ஓர் அமைதி மழை பொழியத்துவங்கும். இதற்கு முன்னால் நீங்கள் அறிந்திராத ஓர் அமைதி உங்களுக்குள் நிறைந்திருக்கும். அந்த அமைதி, அந்த எல்லையில்லா அமைதி, உங்களை எல்லாப் பக்கங்களில் இருந்தும் மூழ்கடிக்கும். உங்களை விட்டு அது ஒருபோதும் அகலாது. அது உங்களுடனே இருக்கும் அதுவே உங்களின் ஆத்மாவாக மாறிவிடும். அதுவே விடுதலையடையச் செய்யும்.

மனத்திலிருந்து மனமற்ற நிலைக்குத் தாவுவதுதான் அந்த விடுதலைக்கான பாதை.

மனம் உங்களை அறிவுப்பூர்வமாக மாற்றும், ஆனால் ஞானத்திற்கு ஒருபோதும் மாற்றாது. மனமற்றநிலை உங்களைப் புத்திசாலியாக மாற்றாது, ஆனால் உங்களை ஞானியாக உருவாக்கும். ஞானத்தால்தான் உங்களுக்கு விடுதலை கொடுக்க முடியும். ஞானம்தான் கடவுளை உங்களிடம்கொண்டு வருகிறது. ஞானத்தால் மட்டும்தான் மரணமில்லா வாழ்வை உங்களுக்குத் தர முடியும். அதனால் ஞான உலகத்திற்குள் வாருங்கள். அதற்கான ஒரே வழி தியானம் மட்டும்தான்.

அது சண்டை போடும் செயல்முறையோ அல்லது கட்டாயப்படுத்தும் செயல்முறையோ கிடையாது. அது ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.

தெய்வீக வாழ்க்கை அமையும்

இதுவே உங்களின் அடித்தளமாக இருக்கட்டும்: ஜீவனோடு வெளி உலகிலும், உள் உலகிலும் நட்புறவோடு இருங்்கள். எல்லோரோடும் நட்புறவோடு இருங்்கள், உங்களோடும்கூட! இது மிகவும் கடினமானதுதான். மக்கள் தங்களுக்குத் தாங்களேகூட அன்பு காட்டுவதில்லை.

இறுதியாக, அவர்கள் எப்போதும் செய்கிற
செயல் இது ஒன்றுதான். எதிரியிடம் அன்பு
காட்டுவதுகூட மிகவும் சுலபம்; உங்களிடம்
நீங்களே அன்பாக இருப்பது மிகவும்
சிரமம். உங்களைப் பற்றி உங்களுக்கு
மிகவும் நன்றாகவே தெரியும் - உங்களிடம்
நீங்களே எப்படி அன்பு காட்ட முடியும்?
ஆனால் தம்மேயே நேசிக்க முடிந்த ஒரு
மனிதரால் மட்டும்தான் மற்ற எல்லோரையும்
நேசிக்க முடியும்.

உங்களை நீங்களே நேசியுங்கள், ஏனென்றால் உங்கள் எதிரியையும் மற்ற எல்லோரையும் நேசிக்க நீங்கள் கடமைப்பட்டிருப்பதால், அந்தக் கடமையை நீங்கள் நேர்மையாகச் செய்யவேண்டியிருப்பதால், முதலில் உங்களை நீங்களே நேசிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே முதலில் உங்களை நேசியுங்கள்.

உங்களை நீங்களே நேசித்தால், நீங்கள் அன்பின் அடிப்படை நிபந்தனையைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த அன்பின் மூலமாகத்தான் அமைதி பிறக்கும். அந்த அமைதி என்ற கதவு மூலமாகதான் கடவுளிடமிருந்து நீங்கள் செய்திகளைப் பெறத் தொடங்குவீர்கள்.

சாலையின் காட்சி

அழகு எந்த வடிவத்தில் இருந்தாலும்
அது கடவுளின் வெளிப்பாடாகவே
இருப்பதால், இந்த வழியில்தான்
நீங்கள் கடவுளைத் தேட வேண்டும்,
இந்த வழியில்தான் கடவுளை
நீங்கள் உள்வாங்க வேண்டும். இந்தப்
பார்வையோடு படைப்புகளைப்
பார்க்கத் தொடங்குங்கள்.

இந்தக் கண்களோடு படைப்புகளை நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால் நீங்கள் இதுவரை பார்க்காத பல விஷயங்களை இப்போது பார்ப்பீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் அதே மரங்கள், அதே பறவைகள், அதே மக்கள் என்று ஒரே விஷயங்களைத்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தப் பார்வையைப் பெற்ற உடனேயே, அவை எல்லாமே தெய்வீகமாக மாறிவிடும், நீங்கள் ஒரு புதிய கோணத்தில் புதிய ‘பார்வை’யோடு பொருட்களைப் பார்ப்பீர்கள்.

அதற்குப் பிறகு, உலகம் உங்களுக்கு ஒரு புதிராக இருக்காது, ஒரு பிரச்சினையாக இருக்காது, ஒரு கேள்விக்குறியாக இருக்காது - உலகம் தீர்க்கப்பட வேண்டிய கேள்வி இல்லை; அது வாழ வேண்டிய ஒரு புதிர் என்பது புரியும்!

உங்களை நீங்கள் வெறுமையாக்கிக்கொள்ளும் அந்தக் கணமே நீங்கள் கடவுள் தன்மையால் நிரம்புகிறீர்கள். நினைவில்கொள்ளுங்கள், இந்த இரண்டும் ஒன்றாக இருக்கவே முடியாது.

ஒன்று நீங்கள் இருக்க வேண்டும் அல்லது கடவுள் இருக்க வேண்டும்.

ஆனால் மூடத்தனமாக இருப்பவர்கள்,
தங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
கடவுளுக்கு இடம் கொடுக்க
மறுத்து விடுகிறார்கள். கடவுளைத்
தேர்ந்தெடுங்கள்; அஹங்காரம் மறைந்து
போகும். படைப்புகளில் இருந்து
விலகியிருக்கும் ஒரு தனித்த பொருளாக
உங்களைப் பார்க்காதீர்கள், அப்படி

கடவுளைத்
தேர்ந்தெடுங்கள்;
அஹங்காரம்
மறைந்து போகும்.
அஹங்காரம்
மறையும் போதுதான்,
நீங்கள்
மீண்டும் பிறக்கிறீர்கள்.

அஹங்காரம் மறையும் போதுதான், நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள்.

அதுவொரு மாறுபட்ட நிலை: உங்களுக்குள் நீங்கள் வெறுமை அடையும்போது, நீங்கள் முழுமை அடைகிறீர்கள், நிறைந்து வழிகிறீர்கள்! அஹங்காரம் என்பது நிழல் மாதிரி; அதனிடம் எந்தச் சாரமும் கிடையாது. அதுவொரு கனவு. ஸத்யம் கிடையாது.

நிழலை விட்டு விடுங்கள்; அப்பொழுது மட்டுமே உங்களால் சாரத்தை, உண்மையை அடைய முடியும். போலியை விட்டுவிடுங்கள்; அப்படியென்றால்நான் உங்களால் ஸத்யத்தை அடைய முடியும்.

உங்களை நீங்கள் வெறுமையாக்கிக்கொள்ளும்போதுதான், நீங்கள் முழுவதும் கடவுள் தன்மையால் நிரம்பி இருக்க முடியும் என்பதால், உங்களை நீங்களே எப்படி வெறுமையாக்கிக்கொள்வது என்பதைத்தான் நான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படி நிறைந்திருப்பதுதான் பூர்ணத்துவம்.

Hands playing flute