KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/யாரும் என்னை அறியவில்லைSign in
பகவத் கீதை விளக்கவுரை

யாரும் என்னை அறியவில்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna playing flute

என்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அறிவீனர்கள், தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான, பகவானான நான் இதற்கு முன் புலன்களால் உணரமுடியாதவனாக இருந்து இப்போது இந்த மனித உருவெடுத்து வந்திருப்பதாக நினைக்கிறார்கள்.

உடலெடுத்திருந்தாலும்கூட, நான் அழிவற்றவனாகவும், எல்லாவற்றிற்கும் மேலானவனாகவும் இருக்கிறேன் என்பது பற்றி அவர்கள் அறிவதில்லை.

நான் என்னை எனது தெய்வீக சக்தியால் மறைத்துக் கொண்டிருப்பதால், மூடாள்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் ஒருபோதும் என்னை வெளிப்படுத்திக் காட்டுவதில்லை.

நான் பிறப்பற்றவன், நிரந்தரமானவன் என்பதை அறியாமையில் இருப்பவர்கள் அறிய மாட்டார்கள். 7.26 ஓ அர்ஜூனா! தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான், நடந்த அனைத்தையும் அறிவேன். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் அறிவேன்.

உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.

7.27 ஓ எதிரிகளை எல்லாம் வாட்டுகிற பரத குலத்தில் உதித்தவனே! பிறக்கும் பொழுதே எல்லா ஜீவராசிகளும் குழப்பத்துடன்தான் பிறக்கின்றன. அவை விருப்பு, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எனது மேன்மையானதும், எல்லையற்றதும், அழியாததுமான வடிவத்தை உணராத முட்டாள்கள், நான் அழியக்கூடிய வடிவத்தில் வெளிப்பட்டிருக்கும் இந்த உருவத்தையே என்னுடைய உண்மை சொரூபம் என நினைத்துக்கொள்கிறார்கள்.

இங்கு இன்னொரு முக்கியமான வாசகமிருக்கிறது. முன்னதாக அவர் - "என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்," என்று சொல்லும்போது அர்ஜூனனுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது: "அப்படியென்றால், நீங்களும் இன்னொரு சிறு தெய்வம்தானா?" இயற்கையாகவே அர்ஜூனனுக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

அதனால் கிருஷ்ணர் இந்த விளக்கத்தைத் தருகிறார்: "பக்குவமடையாத அறிவீனர்கள், நான் இந்த வடிவத்தில் மட்டும் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வடிவமற்றவன் என்பதைப் புத்திசாலிகள் மட்டுமே

கிருஷ்ணரின் விஸ்வரூபம்

புரிந்துகொள்கிறார்கள். நான் வடிவம் எடுக்கும் போதுகூட, அதே பரப்ரம்ம உணர்வோடுதான் இருக்கிறேன்," என்று சொல்வதன் மூலம் கிருஷ்ணர் தமது கடவுள் தன்மையை வெளிப்படையாகவே அறிவிக்கிறார்.

"நான் மனித வடிவம் எடுத்திருப்பதால், சாதாரண மனிதன் ஆகிவிடவில்லை. அதே தன்மையுடன்தான் நான் இருக்கிறேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.