KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"நான் ஒரு மனித வடிவம் எடுத்தாலும்கூட, நான் பரப்ர்ஹ்ம உணர்வோடுதான் இருக்கிறேன். அதனால் என்னை மற்றொரு சிறு தெய்வமாக நினைக்காதே," என்கிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், "நான் இந்த வடிவத்தை எடுத்திருந்தாலும்கூட, நான் பிறக்கவும் இல்லை, எனக்கு மரணமும் இல்லை, வடிவமும் இல்லை. நான் இந்த வடிவத்தில் இருந்தாலும் கூட, நான் அதே எல்லாம்வல்ல தெய்வீகமாக இருக்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதன் கிடையாது." இது ஒரு முக்கியமான கருத்து. இந்தக் கருத்து, அவருடைய ஞானத்தைத் தெரிவிக்கிறது.

இந்தக் கருத்தை தெளிவாகவும்
வெளிப்படையாகவும் சொல்கிறார்,
"நான் ஞானம் அடைந்தவன். பிரபஞ்ச
இருப்புத் தன்மையின் உருவகமாக நான்
இருக்கிறேன்."

பிரச்சினை என்னவென்றால், இதைக்
கேட்டுக் கொண்டிருப்பவர் அதை உள்ளது
உள்ளபடியே புரிந்துகொள்வதற்கான
பக்குவம் இல்லாதவராகவே இருக்கிறார்.

"ஏன் கிருஷ்ணர் தொடர்ந்து தாம் ஞானம் அடைந்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்?" என்று மக்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பதுண்டு. நீங்கள் ஏதோ ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசும்போது, அதில் ஏதோ தவறு இருப்பதாக மக்கள் நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

தமிழில் ஒரு வாசகம் உண்டு: நீங்கள் ஒரு புதிய மோதிரம் அணிந்தால், அந்தக் கையை அசைத்து அசைத்துப் பேசிக் கொண்டே இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்குக் காட்ட விரும்புகிறீர்கள். ஒரு புதிய தோடு அணிந்தால், என்ன செய்வீர்கள்? அதைக்க காட்ட தலையை அப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருப்பீர்கள்!

நீங்கள் ஏதோ ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதில் ஏதோ தவறு இருக்கிறது. அதைப் பற்றிய தெளிவுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், பிறகு ஏன் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள்? என்றுதான் ஆன்மீகத்தில் பக்குவமடையாத ஒருவர் கேட்பார்; அவர் இதை இப்படித்தான் தவறாகப் புரிந்துகொள்வார்.

அர்ஜூனன் பேராசை மற்றும் பயம் காரணமாகவே கிருஷ்ணரை அணுகுகிறார்.

கீதை ஆரம்பிக்கும்போது, அர்ஜூனன் பயத்திலும், மன இறுக்கத்திலும், 'இதனால் எனக்கு என்ன இலாபம்?' என்ற பேராசை மனோபாவத்திலும் மாட்டிக் கொண்டிருந்தார். ''எது அதிகபட்ச பலனைத் தரும்?'' என்று அவர் கிருஷ்ணரைக் கேட்பதுகூட, பேராசை மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடே!

அதற்கடுத்ததாக, அவர் பயத்தை அனுபவிக்கிறார். போரில் என்ன நடக்குமோ என்று அவர் பயப்படுகிறார். பயம், பேராசை - இதுதான் அர்ஜூனன் கிருஷ்ணரை அணுகிய வழி!

அதனால்தான் அர்ஜூனன்கூட ஆரம்ப நிலையில், கிருஷ்ணரை ஒரு சிறு தெய்வமாகத்தான் பார்க்கிறார். அதனால்தான், ஆரம்ப நிலைகளில், அர்ஜூனனின் அணுகுமுறையும்கூட ஒரு சிறு தெய்வத்தை அணுகுவது போலவே இருக்கிறது. அதனால்தான் கிருஷ்ணர் அவரின் பெருமையை அல்லது அவரின் உண்மையான வடிவத்தை விவரிக்கிறார்.

அவர் சொல்கிறார், ''எல்லாவிதமான மக்களும் என்னிடம் வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கும், அவர்கள் வளர்வதற்கும் உதவுகிறேன். நான் வெவ்வேறு நிலைகளில் அவர்களை நிறைவு செய்கிறேன். நான் இந்த உடலை எடுத்திருந்தாலும்கூட, 'நானே இறுதியானவன், நான் ஞானம் அடைந்தவன்' என்பதை புத்திசாலிகள் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள்.

அறிவீனர்கள் என்னுடைய உடலைப் பார்த்து,
என்னுடைய வடிவத்தைப் பார்த்து, நான்
கடவுள் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அதனால் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்:
நானே 'அதுவாக' இருக்கிறேன்.''

எது அதிகபட்ச பலனைத் தரும் என்று கேட்பதுகூட பேராசை மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடே!

அர்ஜுனன் புரிந்துகொள்ள வேண்டும்
என்பதற்காக, அவர் மீண்டும் மீண்டும் ஒரு
தெளிவான கருத்தைச் சொல்கிறார்.

நாம் இரண்டு விஷயங்களை இங்கே
புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.
முதலில், கிருஷ்ணரின் வடிவமற்ற சக்தி
என்று சொல்லும்பொழுது, அது அவரின்
வல்லமையை, அவரின் தெய்வீகத்தை,
அவரின் கிருஷ்ண உணர்வை
வெளிப்படுத்துகிறது.

இரண்டாவதாக, அந்த வடிவமற்ற தன்மை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் சரி, அது கடவுளாகவே இருக்கிறது. தமக்குள் இருக்கும் அந்தக் கடவுள் தன்மையை உணர்ந்து கொண்ட விழிப்புணர்வு நிலைதான், கிருஷ்ணரைக் கடவுளாக, ஜகத்குருவாகக் காட்டுகிறது.

அதே விழிப்புணர்வு உங்களுக்குள்ளும் ஏற்படுமேயானால், நீங்களும் கிருஷ்ண உணர்விற்குள்தான் இருப்பீர்கள் அவரோடு ஒன்று கலந்து விடுவீர்கள்; அதனால் நீங்களும் கடவுளாக மாறி விடுவீர்கள்.

கிருஷ்ணர் சொல்லும் புத்திசாலித்தனம் என்பது கிருஷ்ணருக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணர்வது மட்டுமல்ல, ஒருவர் தமக்குள் இருக்கும் தம்முடைய சொந்தக் கடவுள் தன்மையை உணர்வதும்கூட!

கிருஷ்ணருக்குள் இருக்கும் கடவுள் தன்மையும், நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையும் ஒன்றுதான்; அவர்கள் இருவருமே ஒருவர்தான். வேறு வேறு இல்லை. நமது கடவுள் தன்மையை நாம் உணரும்பொழுதுதான், நாம் தெய்வீகத்தையே கூடப் போற்றுகிறோம்.

நான் என் சீடர்களுக்குச் சொல்வதுண்டு, “நீங்கள் ஞானமடையாதவரை நான் யார் என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வை நீங்கள் அடைய மாட்டீர்கள். அதுவரை நீங்கள் உங்கள் பயத்தின் காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் மட்டுமே என்னைத் தேடி வருவீர்கள், கொஞ்சமாவது அப்படித்தான் இருக்கும்.

நீங்கள் ஞானமடையும் போதுதான், என்னைப் போலவே நீங்களும் அதே விழிப்புணர்வில் இருக்கும்போது மட்டும்தான், பயத்தின்

காரணமாகவோ அல்லது உங்கள் ஆசைகளை
என் மூலம் நிறைவேற்றிக்கொள்ள
வேண்டுமென்பதற்காகவோ என்னை அணுக
வேண்டிய தேவை உங்களுக்குத் இருக்காது.
அப்போது முழுமையான நன்றியுணர்வோடு
மட்டுமே எனக்காக உங்கள் உணர்வை
திறந்து வைப்பீர்கள்."

இந்தப் புத்திசாலித்தனத்தைப் பற்றிதான் கிருஷ்ணர் பேசுகிறார். புத்திசாலித்தனம் தானாகவே வெளிப்படும்போது, அந்த விழிப்புணர்வு மேலெழும்பும்போது மட்டும்தான், அப்போது மட்டுமே, கடவுளை நிஜமாக உணர முடிகிறது. அந்த நிஜமான உணர்தல், நீங்கள் உங்களுக்குள்ளேயே கடவுளை உணரும் போதுதான் மலரும்.

> எதையுமே கேட்காமல்
> என்னிடம் வருகிறவர்கள்
> மிகச் சிலர்தான்.
> அவர்களுடைய
> ஜீவனில் இருந்து எழுகிற
> ஓர் அழைப்புதான்,
> அவர்களை என்னிடம்
> அழைத்து வருகிறது.

அர்ஜுனன் விரும்பியது கிருஷ்ணரை மட்டுமே!

கிருஷ்ணர் கேட்கிறார்: நீங்கள் அறியாமையால் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் எப்படிக் கடவுள் தன்மையை உணர முடியும்? நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாதபோது, உங்களால் எப்படி என்னை உணர முடியும்?

என்னிடம் வரும் ஆயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலானவர்கள் ஏதோ ஒருவகையான உதவியைக் கேட்டுத்தான் வருகிறார்கள். அவர்கள் உடல் மற்றும் மனத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள் அல்லது உறவினர்களிடமோ, பிறரிடமோ சீர்குலைந்து போயிருக்கும் தங்கள் உறவைப் புதுப்பிப்பதற்காகவும் பொருள் ஆதாயத்திற்காகவும் வருகிறார்கள்.

பொருள் ஆதாயத்தைக் கேட்காதவர்கள்கூட, நிறைவான அமைதியையும் ஆனந்தத்தையும் கேட்கிறார்கள்.

எதையுமே கேட்காமல் வருகிறவர்கள் மிகச் சிலர்தான். எந்த ஒரு பலனையும், அழியக்கூடிய உலகப்பொருட்களையோ அல்லது அழியாத ஆனந்தத்தையோ எதிர்பாராமல் இருக்கும் அந்த மனஅமைப்புதான் அந்த மக்களை வழி நடத்துகிறது. அவர்கள் எங்கே இருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய விழிப்புணர்வுதான் அவர்களை வழிநடத்துகிறது. இரும்பு, காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போல, அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்களுடைய ஜீவனில் இருந்து எழுகிற ஓர் அழைப்புதான், என்னிடம் அழைத்து வருகிறது.

மஹாபாரதத்தில், பாண்டவர்களால் கிருஷ்ணரின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடியே உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை உணர்த்துவதற்கு அவர்களுக்கு யாரும் தேவைப்படவில்லை. மற்றொரு புறம், கௌரவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரை மறுத்தார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள், கேலி செய்தார்கள்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன்

கிருஷ்ணர், "நிராயுதபாணியான நான் வேண்டுமா அல்லது என்னுடைய யாதவப் படை வேண்டுமா," என்று கேட்டு, துரியோதனனுக்கு முதல் வாய்ப்பு கொடுத்த போதும்க்கூட, துரியோதனன் தமக்குப் பயனளிக்கக்கூடிய பலம் வாய்ந்த அந்தப் படைகளை த்தான் தேர்ந்தெடுத்தார்! படைகளைத்தான் துரியோதனனால் பார்க்க முடிந்தது. அவர் அறியாமையில் மூழ்கி இருந்ததால், அவருடைய விழிப்புணர்வுநிலை அந்த அளவுக்குதான் இருந்தது.

அர்ஜுனன், கிருஷ்ணர் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அர்ஜுனன் விரும்பியது கிருஷ்ணரை மட்டுமே! கிருஷ்ணர் தம் அருகில் இருப்பதையே விரும்பினார், அவரின் படையையோ, அவரின் தெய்வீக சக்திகளையோ அல்லது வேறெதையோ விரும்பவில்லை.

துரியோதனன்

நாம் துரியோதனனாக இருக்க
விரும்புகிறோமா அல்லது
அர்ஜுனனாக இருக்க
விரும்புகிறோமா - இந்த
இரண்டு வாய்ப்புகளில்
ஒன்றைத்தேர்ந்தெடுக்க
வேண்டிய நிலையில் நாம்
ஒவ்வொருவருமிருக்கிறோம்.
அது நமது இருப்புத் தன்மையில்

இருந்தும், நமது விழிப்புணர்வில் இருந்தும் தீர்மானிக்கப்படுவதால், அதுவொரு கடினமான விஷயம் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் அது தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயமே கிடையாது. அது ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.

உங்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பை எனக்குத் தாருங்கள்

“யாரும் என்னை அறிய மாட்டார்கள்,” என்று ஒரு குரு சொல்கிறார். எத்தனை ஸத்யமான வாக்கியம் பாருங்கள்!

“உங்கள் கருத்துகளுக்கேற்ப நடந்துகொள்ளும் ஒரு சாதாரண மனிதனாக என்னை நீங்கள் நினைத்து விடாதீர்கள்; ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் என்னை வரையறுக்காதீர்கள்; நான் அங்கு இருக்கமாட்டேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

உங்களால் இயற்கையைப் புரிந்துகொள்ள முடியுமா?

உங்களால் இயற்கையைக் கணிக்க முடியுமா?

ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களால் இயற்கையைக் கணிக்க முடியும் என்றுதான் நினைக்கிறீர்கள். ஆனால் நாம் நினைத்ததற்கும் மாறாகவே இயற்கை செயல்படுகிறது.

பிறகு நீங்கள், “இயற்கை கொடுமையானது,” என்று சொல்லுகிறீர்கள். “இயற்கை ஏன் இவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது?” என்று கேட்பீர்கள்.

இயற்கை இயற்கையாகவேதான் இருக்கிறது,
அது கொடுமையானதாகவோ அல்லது
அன்பானதாகவோ இல்லை, அது அதுவாக
வே இருக்கிறது, அவ்வளவுதான்.

கிருஷ்ணரும் அப்படித்தான் இருக்கிறார்.
நாம் நினைப்பது போல அவரின் கருணை
பரிதாபத்தோடு சம்பந்தப்பட்டதில்லை.
ஞானியின் கருணை, காலம், இடம் என்று
நாம் வகுத்துவைத்திருக்கும் எல்லைகளைக்
கடந்தது. அது எத்தைக் குறிக்கிறது என்று

நம்மால் அளக்க முடியாது.

ஆயிரக்கணக்கானவர்கள் சுனாமியால் உயிரிழக்கும்போது, நாம் அழுகிறோம். நாம் பிரார்த்தித்ததின் விளைவாக லாட்டரியில் ஜெயிக்கும்போது, மிகவும் சந்தோஷமாகக் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுக்கிறோம்.

தெய்வீகக் கருணை இவற்றோடு சம்பந்தப்படுவதில்லை. அது, காலம் இடம் ஆகியவற்றைக் கடந்த ஸத்யமாக இருக்கிறது.

> நாம் விழிப்புணர்வில் இருக்கும்போது, பற்றிக்கொள்ள எதுவுமே இல்லை என்பதையும் அனைத்துமே நிரந்தரமற்றவை என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

நான் எதைச் சொல்கிறேனோ, அதெல்லாம் ஸத்யம், அது நடக்கிறது என்பதை என்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கேள்வி கேட்பதில்லை; நான் தர்க்க அறிவுக்குப் பொருந்தாத வகையில் நடந்து கொள்வதாகவோ அல்லது நிலைகொள்ளாத கடுமையாக கோபத்துடன் இருப்பதாகவோ அவர்களுக்குத் தெரிந்தாலும்கூட, அவர்கள் என்னைக் கேள்வி கேட்பதில்லை. அது அவர்கள் என் மீது வைத்திருக்கும் பயத்தினால் அல்ல.

இதில் பயப்பட என்ன இருக்கிறது?

அவர்கள் மீது நான் என்ன கட்டுப்பாட்டை விதிக்க முடியும்?

அவர்கள் விரும்பும்போது, எந்த நேரத்திலும் அவர்கள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்.

உண்மையில், ஒரு சீடர் என்னை விட்டு விலகிச் செல்லும்போது, அவருக்கு உதவக்கூடிய வாய்ப்பை நான் இழக்கிறேன் என்ற ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்குள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் அவர்களிடம் சொல்வதுண்டு.

அதனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால், அவர்கள் விரும்பினால் என்னை மிரட்டிப் பணிய வைக்கலாம் என்பதை அவர்கள் அறிவார்கள்! ஆனால் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

என்னிடம் கேள்வி கேட்காமல் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், ஞானிகள் எந்த வழியில் செல்வார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறார்கள், அதை வெறுமனே பின்பற்றுகிறார்கள்.

நான் ஏதாவது சொன்னால், அது வெறும் செய்தியாக மட்டுமேயிருக்காது, அது ஸத்யமாக மட்டுமே இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்: அந்த ஸத்யத்தைக் காலத்தாலும், இடத்தாலும் சுருக்கிவிட முடியாது.

எப்படி நடக்க வேண்டுமோ... அப்படியே நடக்கிறது எல்லாமே!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், சீடர்களோடு நான் இமாலயாவில் இருக்கும் சார்தாம் என்றழைக்கப்படும் புனிதத் தலங்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த சமயத்துறை அதிகாரிகளிடம் சென்று, என்னை மஹா மண்டலேச்வர் என்று சொல்லும்படி என் சீடர்களிடம் சொன்னேன். இந்தப் பட்டம், ஒரு மிகப்பெரிய மத அமைப்பின் தலைவருக்குக் கொடுக்கப்படும் பட்டம். அது பட்டத்திற்கும் மேலானது; அதாவது மேன்மைமிக்கவராகக் கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படும் ஆன்மீகத் தலைமைப் பதவியை அது குறிக்கிறது.

என் சீடர்களும் என்னிடம் எந்தவித கேள்வியும் கேட்காமல், அந்த அதிகாரிகளிடம் சென்று மஹா மண்டலேச்வர் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் கோயில்களுக்குச் சென்றபோது, அதற்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள்.

illustration

ஞானிகள் மூலமாக
வெளிப்படும்
வார்த்தைகள்,
பிரபஞ்ச இருப்புத்
தன்மையால்
வழிநடத்தப்படுகிறது.

சமீபத்தில் 2007ல், வட இந்தியாவில்
இருக்கும் பிரயாக்கில் நடைபெற்ற அர்த்த
கும்பமேளாவிற்கு நான் போயிருந்தேன். அது
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
இந்த முறை அங்கு, புனித ஆறான கங்கை
திசை மாறிஓடியது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி
நடக்கும். அதனால் அது இன்னும் சிறப்பு
வாய்ந்ததாக இருந்தது, அந்தப் புனித
ஆற்றில் நீராட 90 லட்சம் மக்கள் ஒன்று
கூடியிருந்தார்கள். நான் சீடர்களோடு ஒரு

பெரிய குழுவாகப் போயிருந்தேன்.

ஒவ்வொரு கும்ப மேளாவிலும், புனித நீராடல் செய்யும் நாளில், முதலில் குளிப்பதற்கான உரிமை நாகா பிரிவுகளுக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் நிர்வாணி அகாட என்ற நிர்வாண துறவிகளும் இருப்பார்கள்.

நாமே
ஸத்யத்திற்குள்
இருந்தால் ஒழிய,
நம்மால் ஸத்யத்தை
அறிய முடியாது.
நாமே
கிருஷ்ண உணர்வில்
இருந்தால் ஒழிய,
நம்மால் கிருஷ்ணரை
அறிய முடியாது.

நான் ஞானமடைவதற்கு முன், என்னுடைய பரிவ்ராஜக நாட்களில், சில காலம் நான் இந்தத் துறவிகளோடுதான் இருந்தேன், அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே கவனித்துக் கொண்டார்கள். இப்போது 2007ல் நடந்த கும்ப மேளாவில், புனித நீராடுதலின் சில நாட்களுக்கு முன்னர், அவர்கள் எனக்கு மஹாமண்டலேச்‌வரர் என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள். அவர்களுடைய பிரிவின் மஹாமண்டலேச்‌வரராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அதோடு, அந்தச் சிறப்பு நாளில் கங்கையில் நீராடுவதற்கான முதல் உரிமையையும் கொடுத்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இமாலய பயணம் சென்றபோது என்னுடன் வந்திருந்த சீடர் ஒருவர் ഇപ്പോதும் வந்திருந்தார். நான் சொன்னதெல்லாம் அப்படியே தானாகவே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரால் நம்பவே முடியவில்லை.

அவர் அதைப்பற்றி என்னிடம் கேட்டார். அப்போது நான் அந்தச் சீடரிடம், "இதில் நானாக சொன்னதாக எதுவுமே கிடையாது. பிரபஞ்ச இருப்புத் தன்மை எப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அதுவே என் வார்த்தைகள் மூலமாக வெளிப்பட்டது. ஞானிகள் மூலமாக வெளிப்படும் வார்த்தைகள், பிரபஞ்ச இருப்புத் தன்மையால் வழிநடத்தப்படுகிறது. அதில் எப்போதும் எந்த வேறுபாடும் இருக்க முடியாது," என்று சொன்னேன்.

ஸத்யம், காலம் - இடம் என்று நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ, அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதால், ஸத்யத்தைக் கணிக்க முடியாது. நாமே ஸத்யத்திற்குள் இருந்தால் ஒழிய, நம்மால் ஸத்யத்தை அறிய முடியாது. நாமே கிருஷ்ண உணர்வில் இருந்தால் ஒழிய, நம்மால் கிருஷ்ணரை அறிய முடியாது.

'ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா' என்று சொல்லிக்கொண்டே இருப்பது கிருஷ்ண உணர்வு இல்லை.

விழிப்புணர்வோடு உச்சரிக்காவிட்டால், இதுபோன்ற உச்சரிப்புகள் உண்மையில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது; நிஜமான கிருஷ்ண உணர்விற்கு வார்த்தைகள் தேவையில்லை.

உண்மையில், அனுபவம் என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை விளக்க வார்த்தைகள் இல்லை. அதை அனுபவமாக உணர்ந்தவர் அதை வார்த்தைகளால் உணர்த்துவது இல்லை.

ஒவ்வொரு நிமிடமும் ஓர் உளவியல் நாடகம்

'பயமும், பேராசையும்தான் நம்மை விரட்டிக்கொண்டிருக்கின்றன' என்கிறார் கிருஷ்ணர். அதுவே நம்முடைய மயக்கம். அந்த மயக்கம்தான் நம்மை அவரிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது.

அனுபவம் என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை விளக்க வார்த்தைகள் இல்லை.

ராக, த்வேஷ - விருப்பு, வெறுப்புகள்தான் இருமையை உருவாக்குகின்றன, மனித வாழ்க்கையின் இரண்டு துருவங்களாக இருக்கின்றன. அடிப்படை செல் மட்டத்தில்கூட, இந்தப் போக்கு இருப்பதை விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

செல்களை உருவாக்கும் பாத்திரத்தில் ஒரேயொரு செல்லை வைத்து, அதன் ஒரு பக்கத்தில் ஒரு துளி சத்துப்பொருளையும் வைத்தால், அந்த செல் அந்தச் சத்துப் பொருளால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதை நோக்கி நகர்கிறது.

அதே பாத்திரத்தில் ஒரு துளி விஷத்தை வைத்தால், அந்த செல் அதை விட்டு விலகி நகர்கிறது.

இரண்டு பக்கங்களிலும், அதாவது ஒரு பக்கத்தில் ஒரு துளி விஷத்தையும், மற்றொரு பக்கத்தில் சத்துப்பொருளையும் வைத்தால், அந்த செல் நகராமல் அப்படியே நின்று விடுகிறது. செல்களைப் பொறுத்தவரையில், கவர்ச்சி என்பது வளர்ச்சிக்கு உதவுகிறது;

வெறுப்பு என்பது உயிர்வாழ்வதற்கு உதவுகிறது. (தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வதற்கு)

ஒரு 'செல்லிற்கு இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று வளர்ச்சி அடையலாம் அல்லது தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளலாம்.

அதிக அறிவுடன் இருக்கும் பல செல் நிலைகளைக் கொண்டிருக்கும் மனித இனத்தின் நடவடிக்கையும் ஒரு தனி செல்லின் செயல்பாட்டைப் போலத்தான் இருக்கிறது. தங்களுக்கு எது நல்லது என்று நினைக்கிறார்களோ, அதனிடம் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள், கெட்டது என்று நினைப்பதிலிருந்து ஓடி விடுகிறார்கள்.

துரதிருஷ்டவசமாக, செல்கள் மட்டத்
தில் நடப்பது போல இந்தச் செயல்,
மனிதர்கள் மட்டத்தில் அவ்வளவு சிறப்பாக
நடப்பதில்லை. ஏனென்றால் மனிதர்களிடம்
அதிக புத்திசாலித்தனமிருக்கிறது!

அதிக விருப்பத்தையும்
வெறுப்பையும்
விட்டு விடுவதுதான்
விழிப்புணர்வுக்குச்
செல்வதற்கான
முதல் படி.

செல்கள் இயற்கைக்குக் கட்டுப்படுகின்றன. அதோடு, இயற்கையால் வழிநடத்தப்பட்டு எது நல்லது, எது கெட்டது என்பதைத் தாங்களாகவே, தங்கள் இயல்பூக்கத்தினாலேயே புரிந்துகொள்கின்றன. அதன் விளைவுகளையும் தாங்களாகவே ஏற்றுக்கொள்கின்றன.

மனிதர்கள் இதில் வித்தியாசப்படுகிறார்கள்.

மனிதர்கள் அவர்களின் உடலில் இருந்து வரும் சமிக்கைகளை, சைகைக் குறிப்புகளை கண்டும் காணாமல் தவிர்த்து விடுகிறார்கள். இயற்கை அவர்களுக்கு என்ன சொல்ல முயற்சி செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தங்களுடைய தர்க்க சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே செயல்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது செயல்களையோ பொருட்களையோ புறக்கணிக்கிறார்கள். இயற்கையை மீறிய தர்க்க சிந்தனை எப்போதுமே துக்கத்திற்குத்தான் எடுத்துச் செல்லும்.

அதிக விருப்பையும் வெறுப்பையும்
விட்டு விடுவதுதான் விழிப்புணர்வுக்குச்
செல்வதற்கான முதல் படி.

விருப்பும், வெறுப்பும் நமது கடந்தகாலத்தில் இருந்து பிறந்தவை; அவை, ஸம்ஸ்க்ரு'தத்தில் ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகிற நமது அனுபவங்கள் மற்றும் ஞாபகங்களின் அடிப்படையில் பிறந்தவை. இந்த ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில்தான், நாம் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முயற்சி செய்கிறோம்.

நாம் நிகழ்காலத்தில்
வாழும்போது,
விருப்பம் விருப்பமின்மை,
பற்று வெறுப்பு
போன்ற இருமை
இருப்பதில்லை.

பிரச்சினை என்னவென்றால், விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து செயல்படும் இந்த ஸம்ஸ்காரங்கள், நம்மை விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வற்ற நிலைக்கே அழைத்துச் செல்கின்றன.

அதனால் நாமும் இயல்பூக்கத்தினால் செயல்களை செய்து முடித்து விடுகிறோம், ஆனால் நமது செல்கள் செய்வதைப் போல அல்லாமல், நாம் இயற்கைக்குச் செவி சாய்க்காமல் செயல்படுகிறோம்.

மனிதர்களுக்குப் புத்திசாலித்தனம் கொடுக்கப்பட்டிருப்பதால் இயல்பூக்கத்தையும் தர்க்கத்தையும் கடந்து, அதற்கும் மேலாக உள்ளுணர்விலிருந்து செயல்படும் நிலைக்கு நாம் உயர முடியும்.

இந்த உள்ளுணர்வு, விழிப்புணர்விலிருந்துதான் பிறக்கிறது. அது த்யானத்தின் மூலமாக ஏற்படுகிறது.

விழிப்புணர்வோடு இருக்கும்போது, விருப்புடன் பற்றிக் கொள்வதற்கு இங்கு உண்மையில் எதுவுமே இல்லை என்பதையும், அனைத்துமே நிரந்தரமற்றவை என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். நான் முன்பே சொன்னது போல, நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஓர் உளவியல் நாடகமாக இருக்கிறது.

இது வெறுப்புக்கும் பொருந்தும். பாதுகாப்பின்மை மற்றும் பயங்களில் இருந்து வெறுப்பு பிறக்கிறது. இந்த வாழ்க்கையில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாம் பயப்படும் ஒவ்வொரு தருணத்திலும், உண்மையில் நமக்குள் நாமே செத்துக் கொண்டிருக்கிறோம். மரண பயத்தை நாம் தூக்கி எறிந்து விடுவோமேயானால், நாம் மற்ற எல்லாப் பயங்களையும் தூக்கியெறிந்து விடுவோம்.

த்யானம் மூலமாக நாம் விழிப்புணர்விற்குள் நுழையும்போது, நமது உடல் மற்றும் மனத்தின் எல்லைக்குள் அமைதியாக நிலைகொள்கிறோம். அதனால் நிகழ்காலத்திற்குள் நுழைய முடிகிறது.

நாம் நிகழ்காலத்தில் வாழும்போது, விருப்பம் விருப்பமின்மை, பற்று வெறுப்பு போன்ற இருமை இருப்பதில்லை. நாம் ஒவ்வொரு நிகழ்வையும் அது எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறதோ அவ்வாறே ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அனுகூலமான முறையிலே மிகத்தெளிவாகவும் இயல்பூக்க புத்திசாலித்தனத்துடனும் விடையளிக்கிறோம்; பிரதிச் செயல் புரிகிறோம்; அதனால் நாம் எப்பொழுதும் சரியாகவே செயல்படுகிறோம்.

ஆசிரமம் - ஞானகர்ப்பம்

கேள்வி: ஆச்'ரமத்தில் வாழும் உங்கள் சீடர்களிடமும், வெளியில் வாழ்ந்து கொண்டே உங்களைப் பின்பற்றுபவர்களிடமும் ஓர் அமைதியை நான் பார்க்கிறேன். அதைப் பார்த்து நான் பொறாமைப்படவும் செய்கிறேன். நானும் அந்த இடத்தை அடைய முடியும் என்று நம்புகிறேன்.

நிச்சயமாக, உங்களால் முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் முடிவெடுக்க வேண்டும், அவ்வளவுதான். ஒரு சீடர் தயாராகி விட்டால், அவர் குருவைச் சந்திக்கிறார் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பல குருமார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; சீடர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள்!

ஆச்'ரமத்தில் இருப்பது, மடத்தில் இருப்பது போல கிடையாது. மடம் என்பது ஒழுக்கத்தைச் சார்ந்தது. அங்கு விதிகளும், நெறிமுறைகளும் இருக்கும். ஆச்'ரமம் என்பது சுதந்திரமானது. இங்கு நீங்கள் உங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

நமது ஆச்'ரமங்களில், வழிகாட்டுதல்கள் இருக்கும். ஆனால் விதிமுறைகள்

> த்யானம் மூலமாக
> நாம் விழிப்புணர்விற்குள்
> நுழையும்போது,
> நமது
> உடல் மற்றும்
> மனத்தின்
> எல்லைக்குள்
> அமைதியாக
> நிலைகொள்கிறோம்.

இருக்காது. இந்த வழிகாட்டுதல்கள், நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற, உங்கள் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும்.

நீங்கள் புலன் இன்ப மகிழ்ச்சியை விரும்புகிறீர்கள் என்றால், அதற்காக நீங்கள் வேறு பல இடங்களுக்குப் போகலாம். அதற்காக ஆச்'ரமத்திற்கு வருவது என்பது முட்டாள்தனமானது.

உண்மையில், 'நீங்கள் யார்' என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஓர் ஆசைதான் இதற்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.

நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்களோ, நீங்கள் இதுவரை எதையெல்லாம் அடைந்திருக்கிறீர்களோ அதைக்கொண்டு நீங்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை.

வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ அதைத் தேட
ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் உண்மையில்,
உங்கள் வாழ்க்கைக்கு எந்த நோக்கமும்
கிடையாது.

அனுபவத்தைப் பெறுவதற்கும், பெற்ற அனுபவத்தை ஆனந்தமாக அனுபூதி ஆக்குவதற்கும் மட்டும்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். ஆனால் அதற்குமாறாக, அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் அர்த்தத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடுவதில் உங்களுக்கு இருக்கிற ஆர்வமும், வாழ்க்கைக்கான நோக்கத்தை ஆராய்வதில் உங்களுக்கு இருக்கிற விருப்பமும்தான் உங்களை ஒரு ஞானியிடம் அழைத்துச் செ ல்கிறது. ஆரம்பத்தில் அறிவுப்பூர்வமாக ஈர்க்கப்பட்டு நீங்கள் அவரை வந்தடைந்திருக்கலாம். பிறகு உணர்வுப்பூர்வமாக நீங்கள் அவரால் ஈர்க்கப்படலாம்.

அவர் என்ன சொல்கிறாரோ அதை நீங்கள் நம்பத் தொடங்குகிறீர்கள். ஆனால் நீங்கள் தினசரி வந்து போய் கொண்டிருப்பவராகவோ அல்லது வாரயிறுதி நாளில் பார்க்க வருபவராகவோ இருக்கும்வரை இந்த உறவு ஆச்ரமத்தின் கதவோடு நின்றுவிடும் அல்லது நீங்கள் குருவை எங்குப் பார்க்கிறீர்களோ அதோடு நின்றுவிடும். அவருடைய ஆற்றல் மிக்க எல்லையைவிட்டு வெளியே வந்த உடனேயே, வழக்கமான உலகச் சுமைகள் உங்களை மூழ்கடித்துவிடும். பார்வையில் இருந்து விலகி இருப்பது என்பது மனத்தை விட்டு விலகி இருப்பதாக ஆகி விடுகிறது.

ஆச்ரமக் காட்சி

இதே போன்ற தேவைகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டவர்களுடன் ஆச்ரமம் உங்களை இணைக்கிறது. குருவைப் பற்றியும் குருவின் போதனைகள் பற்றியும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆச்ரமம் உதவுகிறது. ஆச்ரம சூழலுக்குள் வர முடியாதவர்கள் ஸத்ஸங்கம் என்றழைக்கப்படும் கூட்டத்தில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது ஒன்று சேருங்கள்.

ஸத்ஸங்கம் என்றால், ஸத்ய தேடல் உள்ள மக்கள் கூடும் இடம் என்று அர்த்தம். எல்லா ஞானிகளுக்கும் 'ஸத்யத்தின் அனுபவம்' ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்; ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தும் விதம்தான் வேறு வேறாக இருக்கும்.

குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு நாளாவது ஸத்ஸங்கத்தில், ஒரே மாதிரியான விருப்பமும், நம்பிக்கையும் கொண்டவர்களோடு ஒன்று கூடும்போது உங்களின் தேடல் மேலும் தீவிரமடையும்.

ஆச்ரமத்தில், நீங்கள் அதை மேலும் நிரந்தரமாக ஆக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு செயல்முறையும் வேகமாக இருக்கும்.

உங்களின் தேடுதல் தீவிரமாக இருந்தால், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் உள்ளார்ந்து ஈடுபட்டிருப்பீர்கள். உங்களால் ஆச்ரமத்தில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.

ஆச்ரமத்தில் பலர் இரவில் ஒருசில மணி
நேரங்கள்தான் தூங்குவார்கள். உங்களை
நீங்களே புத்துணர்ச்சியாக வைத்திருக்க,
மூன்றிலிருந்து நான்கு மணி நேர இரவு

ஒரே மாதிரியான
விருப்பமும்,
நம்பிக்கையும்
கொண்டவர்களோடு
ஒன்று கூடும்போது
உங்களின் தேடல்
மேலும் தீவிரமடையும்.

தூக்கமேபோதுமானதாகிவிடும்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் தூங்கவே மாட்டீர்கள்; இங்கும் அங்கும் புரண்டு கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் சஃக்தி ஓட்டத்தோடும், உங்களைச் சுற்றி இருக்கும் சஃக்தி ஓட்டத்தோடும் ஓடப் பழகி விட்டீர்கள் என்றால், நீங்கள் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற் குச் சென்று விடுவீர்கள்.

ஆச்'ரமம் என்பது கர்ப்பப்பை மாதிரி. அவை சஃக்தி மையங்கள். நீங்கள் அவற்றுக்குள் இருக்கும்போது, நீங்கள் புத்துணர்ச்சியோடும் இளமையாகவும் உயிர்ப்பாகவுமிருக்கிறீர்கள். உங்களின் எல்லாப் புலன்களும் விழிப்போடு இருக்கின்றன.

பார்க்கிற எல்லாவற்றைப் பற்றியும் தொடர்ந்து ஏதாவது கருத்துக்களைச் சொல்லித் தீர்ப்பளித்துக் கொண்டிருக்கும் மனத்தில் அமைதி இருப்பதில்லை.

எந்தவிதமான தீர்ப்பையும் தீர்மானிக்காமல், மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும்போது மட்டுமே நம்முள் அமைதி நிறைகிறது.

ஆச்'ரமவாசிகளிடம் நீங்கள் பார்க்கும் அமைதியானது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்ட விழிப்புணர்வின் எழுச்சியினால் ஏற்பட்டதுதான். அப்படிப்பட்ட விழிப்புணர்வு நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.

Hands playing a flute