KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லைSign in
பகவத் கீதை விளக்கவுரை

பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

7.28 யாரெல்லாம் தர்ம நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதோ, யாரெல்லாம் நிஜம், கற்பனை என்ற இருமையிலிருந்து விடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுதியான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

7.29 பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைய கடும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் என்னிடம் சரணாகதி அடைகிறார்கள்.

இவற்றை எல்லாம் கடந்திருக்கும் செயல்களைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையில் அவர்கள் பிரஹ்மமாகவே ஆகிறார்கள்.

7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காணிக்கும் மேன்மை மிக்க கடவுளாகவும், எல்லா சிறு தெய்வங்களின் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்ஞங்களை ஆதரித்து வளர்ப்பவனாகவும் அறிந்துகொள்கிறார்களோ, புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரண காலத்தில்கூட என்னை நிலையான மனத்துடன் நினைக்கின்றனர்.

கிருஷ்ணர் இங்கே பாவம், புண்ணியம் பற்றிப் பேசுகிறார். பாவகரமான நடவடிக்கைகள், நன்மை தரக்கூடிய நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறார்.

பாவம் புண்ணியம் என்ற கருத்தே ஒரு மாயைதான், இதுவும் இருமைகளில் ஒன்றாக இருக்கிறது. கிருஷ்ண உணர்வு நிலையில், பாவமோ அல்லது புண்ணியமோ கிடையாது, தீமையைத் தரக்கூடிய செயலும் இல்லை, நன்மை தரக்கூடிய செயலும் இல்லை. எல்லாம் ஒன்றுதான்.

"அப்படியென்றால் நான் விரும்பும் எதையும் நான் செய்யலாமா? நான் கொலை செய்யலாமா, மற்றவர்களை புண்படுத்தும்படி நடந்துகொள்ளலாமா, மற்றவர்களை நிர்மூலமாக்கலாமா, ஒரு ஹிட்லராக இருக்கலாமா?" என்பதுதான் உங்களின் உடனடி கேள்வியாக இருக்கும்.

எல்லையை எட்டியபிறகு மைல்கற்கள் தேவைப்படாது

நீங்கள கிருஷ்ண உணர்வை எட்டும்போது, நீங்கள் ஹிட்லராக இருக்க மாட்டீர்கள். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. நீங்கள் இப்போதுஇருக்கும் நிலையில் அதாவது இப்போது நீங்கள் இருமையில் மாட்டிக் கொண்டிருப்பதால், நீங்கள் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகிறது.

நீங்கள் விருப்பு வெறுப்பு ஆகியவற்றில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயத்திலும், பேராசையிலுமிருந்து செயல்படுகிறீர்கள்.

ஒருவருடைய சுய -விழிப்புணர்ச்சி
க்கான வழிகாட்டிகளாக இருக்க
வேண்டுமென்பதற்காகச் சொல்லப்பட்ட

> யம, நியமங்கள்
> உங்களுக்கு
> வழிகாட்டுவதற்காகச்
> சொல்லப்பட்டவையே தவிர
> அவற்றைப் பயன்படுத்தி
> மற்றவர்கள்
> உங்களை
> ஏமாற்றுவதற்கு அல்ல.

இந்தக் கருத்துக்கள் எல்லாம், துரதிர்ஷ்டவசமாக, மதங்கள், அரசியல் அல்லது சமுதாயவியல் இயக்கங்களின் கைகளில் மாட்டிக்கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தும் கருவிகளாக மாறிவிட்டன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்னால், பதஞ்சலி போன்ற
பெரிய ஞானிகள், தன்னைத்தானே
அறிவதற்கான கோட்பாடுகளை வகுத்துக்
கொடுத்திருக்கிறார்கள்.

வெளி உலக ஞானி,
நமக்குள் இருக்கும்
ஞானியை
நாம்
புரிந்து கொள்வதற்கு
நமக்கு
வழிகாட்டுகிறார்!

பதஞ்சலி தம்முடைய அஷ்டாங்க யோகத் தில், யம, நியம என்ற பயிற்சி விதிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதில் நீங்கள் உள்ளும், புறமும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இவை உங்களுக்கு வழிகாட்டுவதற்காகச் சொல்லப்பட்டவையே தவிர, மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்தி உங்களை ஏமாற்றுவதற்கு அல்ல.

உங்களுக்கு வழிகாட்டும் மைல்கற்களாக இவை இருக்கின்றன. ஒருமுறை எல்லையை எட்டிய பிறகு, உங்களுக்கு இந்த மைல்கற்கள் தேவைப்படாது; உங்களுக்கு வேறு எந்த நெறிமுறைகளும் தேவைப்படாது.

ஒவ்வொரு ஆண்டும், நான் சீடர்களோடும், பக்தர்களோடும் ஹிமாலயா மலைகளுக்குப் புனிதப்பயணம் செல்வதுண்டு. அப்போது முதலில் ரிஷிகேஷிற்குச் செல்வோம். இங்குதான் கங்கை சமவெளியைத் தொடுவாள். இங்கு நான் அவர்களை யமவில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஸந்யாஸ உறுதிமொழியை எடுத்துக்கொள்ளச் செய்வேன்.

இது அவர்களின் பாதுகாப்பிற்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் எடுத்து க்கொள்ளச் செய்கிற உறுதி மொழியே தவிர, அவர்களுக்குள் பாப புண்ணிய கருத்துக்களைப் புகுத்துவதற்காக எடுத்துக்கொள்ளச் செய்கிற உறுதிமொழி அல்ல.

ஸத்யம், அஹிம்ஸை, அஸ்தேயம், அபரிக்ரஹம் மற்றும் ப்ரம்மசர்யம் ஆகியவைதான் யமவின் ஐந்து உறுதிமொழிகள்.

ஸத்யம் என்பது எண்ணம், சொல், செயல் இவற்றில் ஸத்யத்தைக் கடைப்பிடிப்பது. அஹிம்சை என்பது எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது.

அஸ்தேயம் என்பது மற்றவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படாமல் மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் இருப்பது.

அபரிக்கிரஹம் என்பது குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வது அதாவது எளிமையான வாழ்க்கை வாழ்வது.

ப்ரஹ்மசர்யம் என்பது கற்பனைகள் இல்லாமல் வாழ்வது.

கங்கையில் மூழ்கிக் குளித்த பிறகு, அவர்கள் இந்த உறுதிமொழிகளை

பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குக்கூட ஒருவருக்கு உயர்ந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.

எடுப்பார்கள். பிறகு தூய்மைப்படுவதற்கான வ்ரஜஹோமம் செய்வார்கள். அதற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு அவர்கள் நான் கொடுக்கும் காவி ஆடைகளை அணிந்திருப்பார்கள்.

இந்த உறுதிமொழிகள் சுய - ஒழுக்கங்களுக்கானவை. இவை ஒருவரை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும். யாரும் நம்மைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்மை யாராவது பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்று நாம் மற்றவர்களைப் பார்த்தால் நாம் தொடர்ந்து வேஷதாரிகளாகத்தான் இருந்து கொண்டிருப்போம்.

கிருஷ்ணர் இங்கு, அர்ஜுனனின் மூலமாக, அழியுந் தன்மை கொண்ட மனிதர்களுக்கு உபதேசிக்கிறார். அறிநெறிச் செயல்கள் செய்வது பற்றியும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது பற்றியும் அவர் பேசுகிறார்.

எது நம்மைத் தொடர்ந்துவருகிறது என்பது மிகவும் முக்கியமானது. அவர், இருமையை அதாவது பாவ புண்ணியங்களை கடந்து செல்லச் சொல்கிறார். நாம் விழிப்புணர்வை அடைந்தால் மட்டுமே இது சாத்தியம். நாம் அவரை அடைய முடியும் என்று உணர்ந்தால் மட்டும்தான் இது சாத்தியப்படும்.