KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/உங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

உங்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனநீ ஜதரே சயனம்
இஹ ஸம்ஸாரே பகு துஷ்டாரே
க்ரு 'பயா பாரே பாஹி முராரே

“மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு; மீண்டும் மீண்டும் தாயின் கருப்பையில் வாசம், மீண்டும் மீண்டும் பிறத்தல் இறத்தல் என்ற இந்த ஸம்ஸார கடலை கடப்பது மிகவும் கடினம். கிருஷ்ணா, தயவு செய்து என்னைக் காப்பாற்று!”

எழுத்துப்பட்டை

இந்துமதத்தின்தலைசிறந்ததத்துவஞானியான ஆதிசங்கரர், பிரபஞ்சத்தின் தலைசிறந்த ஞானியிடம் பிரார்த்திக்கிறார், “இந்த முடிவில்லா ஸம்ஸார சுழற்சியிலிருந்து, இந்தப் பிறப்பு, இறப்பு சுழற்சியிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று வேண்டுகிறார்.

இந்தச் சுழற்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்குக்கூட ஒருவருக்கு உயர்ந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. உங்களை அந்த விடுதலைக்கு அழைத்துச் செல்லும் ஞானியின் பாதங்களை அடைய வேண்டும் என்றால், சிறந்த புத்திசாலித்தனமும், விழிப்புணர்வும் தேவைப்படுகின்றன.

நீங்கள் மீண்டும் மீண்டும் பிறக்க முடியும்; ஆனாலும், இந்த உலகில் இப்போதுதான் நீங்கள் முதல்முறையாக பிறந்திருப்பதாகவும் உங்களுக்கு இருப்பது இந்த ஒரேயொரு வாழ்க்கைதான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை அறிந்துகொள்வதற்கு உங்களுக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லை.

இந்தப் புரிதலுடன், இந்த வாழ்க்கையின் மேல் உங்கள் கவனத்தையெல்லாம் ஒருமுகப்படுத்தும்போது, நீங்கள் அதிலிருந்து அதிகபட்ச சாறை உறிஞ்சி எடுக்க நினைக்கிறீர்கள்.

நாளை என்பதே இல்லை என்பதுபோல்,
எதெல்லாம் சாத்தியமோ அதற்குப்
பின்னாலெல்லாம் இன்றே ஓடுகிறீர்கள்.
ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்கள். ஒரு
பைத்தியக்காரத்தனமான நாடகத்தை
நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு இந்த ஒரேயொரு வாழ்க்கை மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள் இந்த உடல் கிடையாது. இவை எல்லாம் தற்காலிகமானவை. இப்போது நீங்கள் எதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறீர்களோ, அதுவொரு கனவுதான். என்றாவது ஒருநாள் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள், அப்போது இந்த வாழ்க்கை ஒரு கனவே தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

நீங்கள் இந்த உடலையும் மனத்தையும் கடந்தவர்கள்; இந்த உடலையும் மனத்தையும்விட மேலானவர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது நீங்கள் இறந்த பிறகும் நிலைத்திருக்கும். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அது நீங்கள் இறந்த பிறகும் மீண்டும் திரும்ப வரும். இந்தப் பிரபஞ்ச ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொள்ளும்பொழுதுதான், நீங்கள் விடுதலை அடைவீர்கள்.

ஏதாவதுஒரு சமயத்தில், உங்களுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான நாடகத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லாமல் போகும். உங்களுக்கு இதில் நடித்து ,நடித்து சலித்துப் போய்விடும். "இதெல்லாம் எதற்காக?" என்று கேட்பீர்கள்.

சங்கரர் வருத்தத்துடன் கிருஷ்ணரைக் கேட்பது போல, "மீண்டும் மீண்டும், முடிவே இல்லாமல், நான் வந்து போய்க் கொண்டிருக்கிறேன். இந்தப் பயனற்ற பயணத்தில் இருந்து என்னை தயவுசெய்து விடுவித்து விடு, நான் உன்னோடு இருக்கவே விரும்புகிறேன்," என்று நீங்களும் கேட்பீர்கள். இந்தத்தேடுதல், இந்த ஏக்கம் உங்களை என்னிடம்கொண்டுவந்து சேர்த்துவிடும்.

இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியை புத்தர் ஒரு பந்தம் என்று சொல்கிறார். இது உண்மையில்லை என்பதால், இது கவலையாக இருக்கிறது. மரணம் அடைந்து மீண்டும் பிறப்பது உண்மையான நீங்கள் கிடையாது. இப்போது நீங்கள் உடைகளை மாற்றுவது போலவே, உண்மையான நீங்களும் உடல்களை மாற்றுகிறீர்கள்.

கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை, அவரை எப்படித் தெரிந்துகொள்வது, அவரை எப்படிப் புரிந்துகொள்வது, அவரை எப்படி அடைவது என்ற விளங்கங்களோடு முடிக்கிறார்.

அவர் சொல்கிறார், நீங்கள் வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஒரு வீணான வாழ்க்கையாக இருந்தாலும்கூட, மரண காலத்தில்,உயிர் பிரிந்து செல்லும் அந்த நொடியில், நீங்கள் இதுவரை நடித்துக் கொண்டிருந்த இந்தப் பைத்தியக்காரத்தனமான நாடகத்தால் ஒரு பயனும் இல்லை என்பதையும் உங்களின் இந்த மடமையையும் உணர்ந்தால்கூட போதும், அந்தப் புரிதலே உங்களை மீட்டுவிடும். அந்தச் சாதாரண புரிதல் மட்டுமே உங்களைக் காப்பாற்றிவிடும்.

அவரின் கருணை எல்லையற்றது. அவர் உறுதியளிக்கிறார்: மரணத்தின்போது என்னைப் புரிந்து கொண்டால்கூட போதும், அதுவே உங்களை என்னிடம்கொண்டு வந்து சேர்த்துவிடும்.

உங்களை நீங்களே தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அது அவ்வளவு எளிதானதல்ல, நாம் நினைப்பது போல அது அவ்வளவு எளிதானது கிடையாது.

நாம் இறக்கும் போது கடவுள் தன்மையை மனத்தில் நினைத்துக்கொண்டே இறக்க விரும்பினால், இப்போதிருந்தே அவரை நினைக்கும் பழக்கத்தைப் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் பேராசையினால் கட்டுப்படுத்தப்படுபவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அதிகாரம், செல்வம், உடைமைகள், மேலும் இது போன்று உலகியல் பொருட்களின் மீதான பேராசையால் கட்டுப்படுத்தப் படுபவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்களின் பேராசைகள் எல்லாம் - மரணத்தின்போது திடீரென மாறி விடாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களோடு நீங்கள் வைத்திருந்த அதே கற்பனைகள்தான்

உங்களின் கடைசி கால எண்ணங்களாகவும்
இருக்கும்; உங்களின் கடைசி எண்ணங்கள்
அந்தப் பொருட்களின் மீதுதான் இருக்கும்.

ஒரு சின்ன கதை:

சமீபத்தில் கணவரைப் பறிகொடுத்த
ஒரு பெண், தம் கணவரின் ஆவியோடு
பேச விரும்பினார். அதற்காக அவர்
ஆவியுலகத்துடன் தொடர்புகொள்ளும்
இடையீட்டாளரிடம் சென்றார்.

கணவர் யார்யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அந்தப் பெண் அங்குச் சென்றார். அவருடைய கணவர் தம்மிடம் கடன் வாங்கியவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் வைக்காமல் திடீரென இறந்துவிட்டார். தம் கணவர் ஒரு கருமி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

கொடுத்த கடனை எல்லாம் வாங்காவிட்டால், கணவர் எங்கே இருந்தாலும் துக்கத்தில்தான் இருப்பார் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.

கணவரின் ஆவியும் இடையீட்டாளர் மூலம் தெளிவாகப் பேசத் தொடங்கியது.

ஆவி சொன்னது, "நமது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு ஒரு நூறு டாலர் கொடுக்க வேண்டும். நம் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் அந்த மனிதர் என்னிடமிருந்து ஐநூறு டாலர்கள் வாங்கி இருக்கிறார்."... அந்த ஆவி இப்படியே சொல்லி கொண்டே போனது, பட்டியல் மிக நீளமாக இருந்தது.

சிறிது நேரத்தில் ஆவி பேசுவதை நிறுத்தியது. அந்தப் பெண்மணி, "இவ்வளவு தானா?" என்று கேட்டார்.

ஆவி சொன்னது, "ஓ, மறந்துவிட்டேன். நான் கடன் வாங்கிய ஆயிரம் டாலரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்," என்றது.

உடனே அந்தப் பெண்மணி எழுந்துவிட்டார், "இது என்னுடைய கணவர் கிடையாது," என்று சொல்லி விட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார்!

Figure 1

நமது கடைசி நிமிடத்தில் நம்முடைய
இயல்பை மாற்றிக்கொள்ள
முடியாது.

காந்தி சுடப்பட்டபோது, 'ஹே
ராம்' என்று உச்சரித்துக் கொண்டே
இறந்தார். ஏனென்றால் அவரின்
மொத்த இருப்புத் தன்மையிலும்
கடவுள் ராமரின் பெயர் ஊடுருவிக்
கலந்திருந்தது. அது வேறு எந்த
மாதிரியாகவும் இருக்க முடியாது.

நாம் இறக்கும்போதும் கடவுள் தன்மையை மனத்தில் நினைத்துக்கொண்டே இறக்க விரும்பினால், இப்போதிருந்தே அவரை நினைக்கும் பழக்கத்தைப் பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றே நாம் அவரை அறிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். இன்றே அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். அப்படி இருந்தால்தான்

  • அப்படி இருந்தால் மட்டும்தான் - இறக்கும்போது நம்மால் அவரைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும்.

உங்களில் சிலர், "இறக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ, கிருஷ்ணரை எதற்காக அறிந்துகொள்ள வேண்டும், எதற்காகப் புரிந்துகொள்ள வேண்டும்?

நான் சரியான விஷயங்களைச் சரியான வழியில் செய்கிற பட்சத்தில் நான் ஏன் கிருஷ்ணரை அறிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும்?

Figure 2

நான் கிருஷ்ணரை அறிந்துகொள்வதும்,
அறிந்துகொள்ளாததும் ஏன் என்
வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்த
வேண்டும்?" என்று கேட்கலாம்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்,
கிருஷ்ணர், தம்முடைய கிருஷ்ண
வடிவத்தைப் பற்றிப் பேசவில்லை; அவர்,
தம் பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிக்கூட
பேசவில்லை. அவர், நம்மை நாமே

புரிந்துகொள்வதைப் பற்றியும், அறிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறார்.

'நாம் யார்' என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவை குறித்துக் கிருஷ்ணர் பேசுகிறார்.