எல்லாம் வல்ல ஞானி உங்களுக்குள்ளும் இருக்கிறார்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எல்லாம்வல்ல ஞானி வேறெங்கோ இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறார்.
வெளி உலக ஞானி - அது கிருஷ்ணராக இருந்தாலும் சரி, நித்யானந்தராக இருந்தாலும் சரி - அவர், நாம் நமக்குள் இருக்கும் ஞானியை தெரிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் உதவுகிற ஒரு வழிகாட்டி.
ஆம்! மரண சமயத்தில்கூட, சில நேரங்களில் ஞானம் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது பொதுவாக எல்லோருக்கும் நடக்காது.
அந்த ஸத்யத்திற்கான தேடல் உள்ள ஒருவர்தான் அதாவது தொடர்ந்து தமக்குள்ளேயே அந்த குருவைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவர்தான், அந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுகிறார். உண்மையில் அந்தத் தொடர்பை மரண சமயத்தில் கண்டுபிடிப்பதற்கு மாறாக, அதற்கு முன்னதாகவே அவர் கண்டுபிடித்துவிட இது உதவுகிறது.
கிருஷ்ணர் அவரின் ஆழமான கருணையிலிருந்து பேசுகிறார், "மரண நேரத்தில் அது நிகழ்ந்தாலும்கூட பரவாயில்லை, நான் உங்களைக் காப்பாற்றி விடுவேன்."
நமது வாழ்நாள் முழுவதும் நாம் அவரை நினைக்காமல் இருந்துவிட்டாலும்கூட, மரண சமயத்திலாவது நினைக்கச் சொல்கிறார். அந்தக் கடைசி வாய்ப்பையும்கூட கிருஷ்ணர் விட்டுவிட விரும்பவில்லை.
> ஒருவர்
> செல்வச்செழிப்போடு
> இருந்துகொண்டும்
> ஆன்மீகத்தில்
> இருக்கலாம்.
> ஆனால் அதன்
> மீதான பற்றையும்
> எதிர்பார்ப்புகளையும்
> விட்டுவிட வேண்டும்.
நமது வாழ்நாள் முழுவதும் அவரை அடைவதற்காக நாம் பாடுபடாவிட்டாலும், நாம் அவரை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கவில்லை. நமக்குள் இருக்கும் குருவை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமது இறுதி மூச்சின்போது அப்படிச் செய்தால்கூட போதுமென அவர் நினைக்கிறார். அதுவேகூட அவருக்குப் போதுமானதாக இருக்கிறது.
அதனால் நம்மைப் பற்றி நாம் உணர்ந்துகொள்வதற்கான புத்திசாலித்தனத்தையும், விழிப்புணர்வையும் நமக்குத் தரச் சொல்லியும் இந்த நித்ய ஆனந்த அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்படியும் கேட்டு அந்த எல்லாம்வல்ல கிருஷ்ணரைப் பிரார்த்திப்போம்.
நிஜமான செல்வங்கள் - முழுத் திருப்தியும் நன்றியுணர்வும்
கேள்வி: செல்வச்செழிப்பில் இருப்பது, ஞானம் அடையத் தடையாக இருக்குமா? நாம் ஆன்மீகவாதியாக வேண்டுமானால், முதலில் எல்லாப் பொருளாசைகளையும் விட்டுவிட வேண்டும் என்று பெரும்பாலான மதங்கள் போதிக்கின்றனவே...
நீங்கள் ஆன்மீகவாதியாவதற்கு ஏழையாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஒருவர் செல்வச்செழிப்போடு இருந்துகொண்டும் ஆன்மீகத்தில் இருக்கலாம். ஆனால் செல்வத்தின் மீதான பற்றையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட வேண்டும்.
பெரும்பாலும் எல்லாக் கலாச்சாரங்களிலும்,
செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் சொத்துகளின்
அடையாளமாகக் கடவுள் காட்டப்படுகிறார்.
இந்தக் கலாச்சாரங்கள், நாம் வாழும் இந்த
உலகத்திற்கு மட்டுமல்லாமல், ஆன்மீக
உலகத்திற்கும் செல்வம் மிக முக்கியமானது
என்று நம்புகின்றன. இந்து புராணங்களில்,
காக்கும் கடவுளான விஷ்ணுவும் அவர்
துணைவி லக்ஷ்மியும், செல்வத்திற்கும்
அதிர்ஷ்டத்திற்கும் உரியவர்களாகக்
காட்டப்படுகிறார்கள்.
> செல்வத்தை நாம்
> அனுபவிப்பதைக்
> காட்டிலும்,
> செல்வம்தான்
> நம்மை அனுபவித்துக்
> கொண்டிருக்கிறது.
> அதன் மேல் உள்ள
> கட்டுப்பாட்டை
> நாம் இழந்து விடுகிறோம்.
சங்கரர் அவரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் லக்ஷ்மியைப் புகழ்ந்து பாடியபோது, தன்னலமில்லாமல் அவருக்கு உணவளித்த ஓர் ஏழை ப்ராஹ்மணபெண்ணின் வீட்டுக் கூரை வழியாகப் பொற்காசுகள் விழுந்ததாக நம்பப்படுகிறது.
சங்கரருக்குச் செல்வம் தேவைப்படவில்லை, இருந்தாலும், ஓர் ஏழையை பணக்காரர் ஆக்குவதற்கு அவருக்கு எதுவுமே தடையாக இருக்கவில்லை.
செல்வமும், பணமும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன. உங்கள் பணத்தால், நீங்கள் மட்டுமல்ல, பலரும் பயனடைய முடியும். செல்வத்தை வைத்திருப்பது பிரச்சினைகளை உருவாக்குவதில்லை, ஆனால் செல்வத்தைப் பற்றிய உங்களின் மனோபாவம்தான் இங்கு முக்கியமாக இருக்கிறது.
நீங்கள் வைத்திருக்கும் செல்வத்தை நீங்கள் ஆனந்தமாக அனுபவிக்கும் போதும் சரி, மற்றவர்களையும் அதிலிருந்து பயன்பெற அனுமதிக்கும் போதும் சரி நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீக சேவையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஓர் ஏழை இந்த உலகிற்கு அளிக்கும் பங்களிப்பை விட, நீங்கள் இந்த உலகிற்கு அளிக்கும் பங்களிப்பு மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.
இருந்தாலும், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற விருப்பம் இல்லாமல், செல்வத்தை மட்டும் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை உங்களை வழி நடத்தும் போதுதான், செல்வம் உங்களுக்கு ஒரு போதையாகி விடுகிறது.
செல்வத்தை நாம் அனுபவிப்பதைக் காட்டிலும்,
செல்வம்தான் நம்மை அனுபவித்துக்
கொண்டிருக்கும். அதன் மேல் உள்ள
கட்டுப்பாட்டை நாம் இழந்து விடுகிறோம்.
முழுமையும்
நன்றியுணர்வும்
செல்வத்தை ஈர்க்கின்றன,
ஏனென்றால்
முழுத் திருப்தியும்,
நன்றியுணர்வும்தான்
உண்மையான
செல்வங்கள்!
பெரிய ராஜாக்களும், செல்வந்தர்களும்கூட ஆன்மீகத்தில் முன்னேறியவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள், செல்வத்தைப் பற்றிய கற்பனைகள் தங்களைத் தொட அனுமதிக்கவில்லை. அவர்கள் செல்வத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார்கள்.
மேலும் அவர்கள் செல்வத்தின் மீது பற்று வைக்காமல், அதைச் சிறப்பாகப்
பயன்படுத்தியதால், அவர்களுக்கு மேலும்
மேலும் செல்வம் சேர்ந்தது. இப்படித்தான்
பிரபஞ்சம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கின்றன. பிரபஞ்சத்தில் இருந்து எவ்வளவு வளங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ‘ஒன்றுமே இல்லையே’ என்ற வெறுமை மனப்பான்மையுடன், திருப்தியற்ற மன நிலையில் இருந்து பிச்சை கேட்பவர்களுக்குப் பிரபஞ்சம் எதையும் கொடுப்பதில்லை.
செல்வத்தைப் பற்றிய
பற்றற்ற மனோபாவமும்,
தன்னிடம்
இல்லாததைக் குறித்த
கற்பனைகளைத்
துறப்பதும்தான்
ஒருவரை
ஆன்மீகவாதியாக
ஆக்குகிறது.
முழுத் திருப்தியில் இருந்து வரும் குரலுக்கு மட்டும்தான் பிரபஞ்சம் செவி சாய்க்கும்.
அதனால்தான் முழுமையும் நன்றியுணர்வும் செல்வத்தை ஈர்க்கிறது, ஏனென்றால் முழுத் திருப்தியும், நன்றியுணர்வும்தான் உண்மையான செல்வங்கள்!
குருமார்களாலும், மதங்களாலும் நாம் செல்வங்களை விட்டுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அவர்கள் உங்களை ஏழையாக இருக்கச் சொல்லவில்லை. உங்கள் செல்வங்களின் மீது பற்றற்று இருங்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.
உங்கள் செல்வங்களின் மீது நீங்கள் பற்றற்று இருந்தால், நீங்கள் செல்வந்தராக இருக்கிறீர்களோ, இல்லையோ, ஆனால் நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள்! உங்கள் செல்வங்களின் மீது பற்று கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் செல்வந்தராக இருந்தாலும்க்கூட, உண்மையில் நீங்கள் ஏழையாகத்தான் இருப்பீர்கள்.
எதுவுமே இல்லாத ஒருவர், நான் செல்வத்தை துறக்கப் போகிறேன் என்று சொல்லி நடிப்பது முட்டாள்தனமானது. ஏனென்றால் செல்வத்தைச் சார்ந்த அவருடைய அடிப்படை ஆசைகள் நிறைவேற்றப்படாததால், அந்த ஆசைகளைப் பற்றிய அவருடைய கற்பனைகள் அவர்கூடவே இருந்து அவரைத் துக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.
செல்வமிருப்பதோ, செல்வம் இல்லாமல் இருப்பதோ மட்டுமே ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குவதில்லை. செல்வத்தைப் பற்றிய பற்றற்ற மனோபாவமும், தம்மிடம் இல்லாததைக் குறித்த கற்பனைகளைத் துறப்பதும்தான் ஒருவரை ஆன்மீகவாதியாக ஆக்குகிறது.