KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை/ஒவ்வொரு நாளும் உங்களின் முன்னாள் வருகிறேன்Sign in
பகவத் கீதை விளக்கவுரை

ஒவ்வொரு நாளும் உங்களின் முன்னாள் வருகிறேன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: முழுக்க முழுக்க இந்த அத்தியாயத்திலும் சரி, பிற அத்தியாயங்களிலும் சரி, முக்தி அடைவதற்காகத் தம்மை வந்தடைவது பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார். அவர் பல நுட்பங்களை எடுத்துச் சொல்கிறார். ஆனால் எதுவுமே நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.

அவர் சொல்வதை வெறுமனே அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று அவர் குறிப்பிடுகிறாரா அல்லது அதையும் தாண்டி ஏதேனுமிருக்கிறதா? அவரே ஜகத்குரு, சிறுதெய்வங்களையும் கடந்தவர் என்ற ஸத்யத்தை வெறுமனே ஏற்றுக்கொள்வது மட்டுமே எப்படி என்னை விடுதலை அடையச் செய்யும்?

அருமையான கேள்வி!

சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் என் சீடர்கள் சிலரிடம், "ஞானமடைவதில் தீவிரமாக இருப்பவர்கள் மட்டும் என்னோடு இருங்கள். அப்படி இருக்க முடியாவிட்டால் சென்று விடுங்கள். உங்கள் தடுமாற்றத்தின் விளைவாக எழுந்த குழப்பத்தின் காரணமாக, பாதையின் குறுக்கே நின்றுகொண்டு பாதையை அடைத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒன்று உள்ளே வாருங்கள் அல்லது வெளியே போய் விடுங்கள்," என்று சொன்னேன்.

avார்களில் சிலர் வயதானவர்களும், த்யானம் செய்வதில் அனுபவம் பெற்றவர்களும் இருந்தார்கள்.

| லட்சக்கணக்கானவர்கள் கீதையை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கீதையைப் படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ அந்த நிலையிலேயே இருக்கிறார்கள். |

|---

அப்போது நான் அவர்களிடம், "நீண்ட காலமாக நாங்கள் த்யானம் செய்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும், அது எங்களுக்குள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும்பொழுது, அது எனக்கு அவப்பெயரைத்தான் பெற்றுத்தரும். நான் உண்மையான குருதானா என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள்," என்று வேடிக்கையாகச் சொன்னேன்.

லட்சக்கணக்கானவர்கள் கீதையை
வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி
படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள்
கீதையைப் படிப்பதற்கு முன் எப்படி
இருந்தார்களோ அதைவிட மேலான
விழிப்புணர்வை பெறவில்லை என்பதைப்
பார்க்கும்போது, இதே போன்ற
அவப்பெயரைப் பொறுத்துக்கொள்ள
அதிர்ஷ்டவசமாக, இப்போது கிருஷ்ணர்
உடலுடன் இல்லை.

பலர் கீதையைப் படிக்கிறார்கள், கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை தாங்கள் புரிந்துகொண்டதாகவும் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். கீதை எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதோ அந்த மொழியை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு சின்ன கதை:

பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரிந்த ஒரு நபர் தேவை என்று தொழிலதிபர் ஒருவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். ஒரு பெண், தமக்கு பிரெஞ்சு நன்றாக எழுதத் தெரியும். ஆனால் படிக்கத் தெரியாது என்று சொல்லி கடிதம் எழுதி இருந்தார். குழப்பம் அடைந்த அந்தத் தொழிலதிபர், அந்தப் பெண்ணை அழைத்து ஒரு சோதனை வைத்தார்.

அவர் ஓர் அரை மணி நேரம் ஓடக்கூடிய பிரெஞ்சு ஒலிநாடாவை ஒலிக்க விட்டார். அந்தப் பெண்ணும் அதைக் கேட்டு எழுதிக் கொண்டார். பிறகு, அந்தத் தொழிலதிபர், அதில் என்ன விஷயமிருக்கிறது என்று கேட்டார். உடனே அந்தப் பெண்தான் எழுதி வைத்த குறிப்புத் தாள்களை அவரிடம் கொடுத்தார். அந்தப் பெண் எழுதிய ஒன்றைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதனால் எரிச்சலடைந்த அவர், "தயவுசெய்து நீங்கள் எழுதியதைப் படித்துக் காட்ட முடியுமா?" என்றார்.

அந்தப் பெண்கோபத்தோடு, "எனக்கு பிரெஞ்சு எழுதத்தான்தெரியும். படிக்கத் தெரியாது என்று நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே!" என்றார். நாம் கீதையையும் இப்படித்தான் புரிந்துகொள்கிறோம்!

> ஆயிரம் கிருஷ்ணர்கள்
> நம்முன்னால்
> இரங்கிவந்தாலும் கூட
> நாம் அவர்களின்
> அடையாள
> அட்டைகளைத்தான்
> கேட்டுக்
> கொண்டிருப்போம்

பட்டறிவுப்பூர்வமாகக்கூட, கிருஷ்ணர்தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதை நம்மால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? கிருஷ்ணர் சிறு தெய்வங்களைவிட மேலானவர் என்று சொல்லும்பொழுது, நாம் கேட்கிறோம்,“சிறு தெய்வங்களை விடுங்கள், அவர் எங்களைவிட மேலானவர் என்பதையே கூட எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?”

நாம், நம்முடைய அடையாளங்களாலும், அஹங்காரத்தாலும் நிறைந்திருக்கிறோம். ஆயிரம் கிருஷ்ணர்கள் நம் முன்னால் இறங்கி வந்தாலும்கூட, நாம் அவர்களின் அடையாள அட்டைகளைத்தான் கேட்டுக் கொண்டிருப்போம்! நமது மனங்களில் நாம் எப்படி கிருஷ்ணரை வடித்து வைத்திருக்கிறோமோ, அதே போன்ற வடிவத்தில் - அப்படியே அதே உருவத்தில் அவர் நம் முன்னால் வந்தால் மட்டும்தான் நாம் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வோம்!

நமது கற்பனையில் இருப்பது போலவே கிருஷ்ணர் வர வேண்டும். அப்படி வந்தால்தான், நாம் ஒத்துக்கொள்வோம். அதற்குப் பிறகுதான், அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்று சொல்லி, அவர் படத்தைச் சுவரில் மாட்டி வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும், கிருஷ்ணர் பல வடிவங்களில் நமக்கு முன்னால் வருகிறார். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின் வடிவத்திலும் அவர் நம்மிடம் வருகிறார். இதைப் பற்றி எல்லாம் நமக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதில்லை; யாரை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், யாரை நாம் நிராகரிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்கிறோம்.

நாம் கிருஷ்ணரின் சில பகுதிகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மற்ற பகுதிகளை நிராகரிக்க முடியாது.

ஒன்று, அவரை மொத்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மொத்தமாக ஒதுக்கிவிட வேண்டும். அவரிடம் நாம் சரணாகதி அடைந்துவிட வேண்டும். நமது அடையாளத்தையும் அஹங்காரத்தையும் அவரிடம் சரணடையச் செய்து விட வேண்டும். அவரைப் பற்றி நம் மனத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள முட்டாள்தனமான உருவத்தை அவரிடம் சரண் செய்துவிட வேண்டும்.