ஞானமடையத் தேவையானது சரணாகதி ஒன்றுதான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒன்று, நீங்கள் ஞானமடைய வேண்டும் அல்லது என்னை விட்டு விலக வேண்டும் என்று சீடர்களுக்கு நான் சொன்னபோது, அவர்கள் ஒரே குரலில், "நிச்சயமாக, நாங்கள் ஞானமடைய விரும்புகிறோம்.
அதற்காகத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். ஆனால் எப்படி நாங்கள் ஞானமடைவது? எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது," என்று சொன்னார்கள். "அது மிகவும் சாதாரணமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், சரணடைந்து விடுவதுதான்," என்று நான் சொன்னேன்.
அதற்கு அவர்கள், "நாங்கள் ஏற்கனவே உங்களிடம் சரணடைந்துதான் இருக்கிறோம்.
நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
வேறு என்ன புதிதாகச் செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், 'அர்ப்பணிப்பு' என்பது மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது.
மனம் இறந்தபிறகுதான்
புலன்களின்
அர்ப்பணிப்பு
சாத்தியப்படுகிறது.
அதற்குப் பிறகு குரு
எதைப் பார்க்கிறாரோ,
அதையே நாமும்
பார்க்கிறோம்;
முதலாவது, அறிவை அர்ப்பணிப்பது. அதாவது நான் என்ன சொல்கிறேனோ, அதை மன ரீதியாக ஏற்றுக்கொள்வது. இதை நீங்கள் ஓரளவு செய்திருக்கலாம். அதைக்கூட என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
நான் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும்படி ஏதாவதொன்றைச் சொன்னால், அது உங்களைச் சந்தோஷப்படுத்தும். நான் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்குச் சந்தோஷம் கொடுக்காத ஏதாவதொன்றை நான் சொன்னால், உங்களுக்கு அது துக்கத்தைக் கொடுக்கும்; நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்.
சரி, உங்களில் சிலர் பட்டறிவை அர்ப்பணித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொண்டாலும்கூட, அடுத்தபடி, உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது. நீங்கள் இதயப்பூர்வமாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு,
"நீங்கள்தான் எங்களின் உண்மையான குரு
என்று நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள
முடியும்?" என்று கேட்பார்கள்."நான்
உங்களுடைய உண்மையான குரு என்றால்,
என்னை உங்களால் ஒரு நொடிப்பொழுதுகூட
மறக்க முடியாது," என்று சொல்வேன்.
ான்தான் உங்களின் குரு என்று உங்கள்
இதயம் உங்களுக்குச் சொல்லும்.
என்னை நினைவில் வைத்திருக்க, உங்கள்
கைக்குட்டையில் ஒரு முடிச்சு போட்டு
வைத்திருக்க வேண்டியதில்லை.
உங்களுடைய
கடவுள் தன்மையை
ஏற்றுக்கொண்டு,
நீங்கள் கடவுளாகவே
மாறி விடுங்கள்.
இதுதான் ஞானம்.
இப்படி ஏற்றுக்கொள்ளவதும்கூட முழுமையானது அல்ல; இறுதி அர்ப்பணிப்பு என்பது, புலன்களின் அர்ப்பணிப்பு.
மனம் இறந்த பிறகுதான் இந்த அர்ப்பணிப்பு சாத்தியப்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் நமது அடையாளங்களை விட்டு விடுகிறோம். நாம் குருவின் அடையாளத்தை ஏற்கிறோம். அவர் எதைப் பார்க்கிறாரோ, அதையே நாமும் பார்க்கிறோம்; அவர், தாம் எதைப் பார்ப்பதாகச் சொல்கிறாரோ அதையே நாமும் பார்க்கிறோம்.
உங்களுக்கு முன்னால் இருக்கும் வெள்ளைநிறச் சுவர், கருப்பாக இருக்கிறது என்று நான் சொன்னால், உங்கள் கண்களும் கருப்புச் சுவரையே பார்க்கும். அப்போதுதான் - அப்போது மட்டும்தான் - உங்களை நீங்கள் eன்னிடம் அர்ப்பணித்திருக்கிறீர்கள்! அப்போதுதான் நீங்கள் உங்கள் அடையாளத்தை அர்ப்பணித்திருக்கிறீர்கள்.
ஒருவரின் அடையாளத்தை அர்ப்பணித்து விடுவதற்கான நுட்பம்தான் தியானம். கீதை முழுவதும், விடுதலைக்கு அழைத்துச் செல்லும் நுட்பங்களைத்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

பட்டறிவுப்பூர்வமான புரிதலைக் கொடுக்கும்
சாஸ்த்ரங்களையும், அவருடைய தெய்வீக
தன்மைகளின் பெருமைகளைப் புகழ்ந்து
பாடும் ஸ்தோத்ரங்களையும் இணைத்து,
விடுதலைக்கான அர்ப்பணிப்புப் பாதையில், ச'ரணாகதி பாதையில் கீதை உங்களை அழைத்துச் செல்கிறது.
ஒருவர் தமது அடையாளங்களைத் துறக்க வேண்டுமானால், ஆத்மா, உலகம், கடவுள் இம்மூன்றுமே ஒன்று என்ற ஆழமான புரிதலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தேவைப்படுகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நமது கடவுள் தன்மையை ஏற்றுக்கொண்டு, அந்தக் கடவுளாகவே மாறி விடுவது; இதுதான் ஞானம்.
நம்முடைய பல்வேறு த்யான முகாம்களில், உங்களின் அடையாளங்களை உதறி விடுவதற்கான இந்தச் செயல்முறையில் உங்களை அழைத்துச் செல்லும் நுட்பங்களைத்தான் கற்றுத் தருகிறோம்.
ஆனந்த ஸ்புரண த்யான முகாம் என்ற முதல்நிலை த்யான பயிற்சியில், உங்களின் சக்தி மையங்களை அல்லது சக்கரங்களைச் சக்தியூட்டி, அதனைச் செயலாற்ற தூண்டிவிடும் நுட்பங்களைக் கற்றுத் தருகிறோம்.
உங்களிடமிருக்கும் அஹங்காரத்தை நீக்க வேண்டுமானால், புருவ மத்திக்கு இடையில் இருக்கும் ஆறாவது சக்கரமான ஆஜ்ஞா சக்ரத்தைச் சக்தியூட்ட வேண்டியது அவசியமாகிறது.
இந்த இரண்டு நாள் த்யான முகாமில், உங்கள் உடல் -மன சக்தி அமைப்புமுறையில் இருக்கும் ஏழு சக்கரங்களையும் சக்தியூட்டும் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறோம்.
ஆஜ்ஞா சக்ரத்தை தூண்டிவிட்டு, சக்தியூட்டி விட்டீர்கள் என்றால், நீங்கள் இறுதி நுழைவாயிலான உச்சந்தலையிலிருக்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்குள் நுழைகிறீர்கள். இங்கு உங்களின் அனைத்து அதிருப்திகளையும் விட்டுவிட்டு, நன்றியுணர்ச்சியால் பிரபஞ்சத்திடம் சரணடைகிறீர்கள். இங்கு நீங்கள் உங்களின் கடவுள் தன்மையை ஏற்றுக்கொண்டு, இறுதி முழுமையின் ஆனந்தத்தை ஒரு துளி பருகுகிறீர்கள்.
அடுத்தகட்டப் பயிற்சியான நித்யானந்த ஸ்புரண த்யான முகாம் என்பது உங்களின் உடல் -மன அமைப்புமுறையின் ஒரு பகுதியாக விளங்கும் சக்தி அடுக்குகளில் செல்லும் ஒரு
> ஒரு எளிமையான
> ஸத்யம்
> என்னவென்றால்,
> நிகழ்காலம் என்பது
> கிருஷ்ண உணர்வுதான்.
> இந்த நிலையை
> அடையும்போதுதான்
> நாம்
> ஸம்ஸார பந்தத்திலிருந்து
> விடுபடுகிறோம்.
வித்தியாசமான பயணம். ஒவ்வொரு நிலையிலும், உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும், உங்களுக்குள் தடையாக இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான நினைவுகளை நீங்கள் மீண்டும் வாழ்ந்து பார்ப்பீர்கள். இப்படி மீண்டும் வாழ்ந்து பார்க்கும் செயல் நுட்பம், உணர்ச்சிப்பூர்வமான நினைவுகளிலிருந்து விடுவித்து, உங்களை விடுதலை அடையச் செய்யும்.
அந்த த்யான முகாமின் இறுதியில், உங்களை நீண்ட காலமாக முடக்கி வைத்திருந்த உங்கள் உணர்ச்சிகளில் இருந்தும், உங்களைக் கட்டுப்படுத்தி இருக்கும் நினைவுகளில் இருந்தும் முழுமையாக விடுதலை அடைந்து நீங்கள் மறுபிறப்பு அடைகிறீர்கள்.
ஆனந்த கந்த த்யானம் ஆனந்தத்தின் நறுமணம் என்று சொல்லப்படுகிற அடுத்தநிலை த்யானம், உங்களை உங்களின் ஆழ்மையத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
புதைந்து கிடக்கும் நினைவுகள் தொடர்ந்து மேலெழுந்து வரும்போது, அவற்றைத் துண்டி க்க இந்த த்யான நுட்பம் உதவுகிறது. இந்த த்யான நுட்பத்தை, நீங்கள் எல்லா நேரத்திலும், எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதனோடு சேர்த்தும் செய்யலாம். இது உங்களை நிகழ்காலத்தில் நிறுத்தி வைக்கிறது.
இது உங்களை நிகழ்காலத்தில் நிலைநிறுத்துகிறது. நிகழ்கால வினாடியைப் பற்றிய விழிப்புணர்வில் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்குள் புதைந்திருக்கும் எந்த நினைவுகளும் எழுவதில்லை. இந்த நிலையில், நீங்கள் மேற்கொண்டு கர்மங்களைச் (நிறைவேறாத ஆசைகள்) செய்வதில்லை, நிறைவேறாத ஆசைகளால் ஆன உங்களின் மன அமைப்பே காணாமல் போய்விடும். நீங்கள் சுதந்திரமடைவீர்கள்.
ஒரு எளிமையான ஸத்யம் என்னவென்றால், நிகழ்காலம் என்பது கிருஷ்ண உணர்வுதான். நிகழ்காலத்தில் வாழும் இந்த நிலையை நாம் அடையும்போது, நாம் அவரை அடைகிறோம்; நாம் விடுதலை அடைகிறோம். ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.
அதனால் நாம் ஸாஸ்த்ரங்களில் படித்ததை, வெறுமனே அறிவினால் புரிந்துகொள்வது மட்டுமே நம்மை விடுதலை அடையச் செய்வதில்லை. கிருஷ்ணர் சொன்னவற்றை நாம் உள்வாங்கி, நம்முடைய பாகமாகவே மாற்றினால்தான், அவை நம்மை விடுதலை அடையச் செய்ய முடியும் நீங்கள் கிருஷ்ண உணர்வை அடைந்து நிலையான உணர்வு நிலையை, நித்யானந்த நிலையை உணர்வீர்களாக!
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரம்ஹவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஜ்ஞான விஜ்ஞான யோகோ நாம ஸப்தமோத்யாய:॥
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஜ்ஞான விஜ்ஞான யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்.

பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி
விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத்கீதையின் பின்புலமாக இருக்கும் ஸத்யத்தைச் சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.
அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மஹரிஷி வேத விஜ்ஞான விச்வா வித்யாபீடத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பகவத்கீதையின் ஸ்லோகங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஸத்யங்களை அடிப்படையாகக்கொண்ட த்யான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. த்யானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.
த்யானம் செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணர்கிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
த்யானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
த்யானத்தினால் சுய -மரியாதை, சுய -நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய -மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. மூளை செயல்பாட்டோடு இணைந்து ஒருமுகப்படும்பொழுது ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
புலன்களை உணரும் தன்மையும் முழுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. மேலும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
த்யானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.
7000 மக்கள் (ஆராய்ச்சியின்பொழுது உலக மக்கள் தொகையில் √1 சதவீதத்தின் அடுக்கு) இணைந்து கூட்டு த்யானம் செய்ததால், உலக அளவில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் பெருமளவில் குறைந்தன.
த்யானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.
டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத்கீதை மிக உயர்ந்த ஸத்யத்தை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான வேத நூலின் ஸத்யத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் சேவையை மிகுந்த நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.
கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனனின்
- வேறு சில பெயர்கள்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜூனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜூனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜூனனை அழைக்கிறார்.
அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
| அரிஸூதனன் | : பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | : அழகான முடியை உடையவர், ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன் | : கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் |
| கோவிந்தன் | : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர் |
| பகவான் | : ஆறுவித குணங்களை உடையவர். அவை |
- பரிபூரண ஞானம்.
- பரிபூரண வைராக்கியம்.
- பரிபூரண பலம்
- பரிபூரண கீர்த்தி
- பரிபூரண தேஜஸ்
- பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ) புருஷோத்தமன் : மேலான புருஷன்
மதுஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன் : ‘யது’ குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேஶ்வரன் : யோகத்திற்குத் தலைவர்
வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு’ஷீகேஶன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன் : பாபம் அற்றவர்
அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
அர்ஜுனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீடி : கிரீடம் தரித்தவர்
குடாகேஶன் : தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன் : ‘குரு’ வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன் : குந்தியின் மகன்
தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்
பார்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பரதன் : பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | : | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி) |
| துருா்பதன் | : | திரௌபதியின் தந்தை, சிறந்த போர் வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் | : | அரசர் துருபதனின் மகன் |
| சி'கண்டி | : | சிறந்த வில் வீரர், திருமங்கை (அலி), பீஷ்மரைப் பழி வாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | : | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டின் அரசர் |
| யுயுதாானன் | : | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | : | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | : | சிறந்த போர்வீரர் |
| குந்தி போஜன் | : | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | : | குந்தி போஜனின் சகோதரர் |
| சை'ப்யா | : | சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | : | சேதி நாட்டின் அரசர் |
| உத்தமௌஜன் | : | சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர்கள்: | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள் | |
| நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள் | ||
| யுதிஷ்டிரர் | : | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பீமன் | : | கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | : | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | : | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் | : | ஜோதிடக் கலையில் வல்லவர். |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | : | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பீஷ்மர் | : | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | : | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில் வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகர்ணன் | : | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | : | பாண்டவர்களின் மூத்த சகோதரர், திருமணத்திற்கு முன்பே குந்திக்குப் பிறந்தவர். துரியோதனனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | : | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க்'ருபர் | : | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | : | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.) |
| ஸௌமாதத்தி | : | பகிர்களின் அரசர் |
| துச்'சா'தனன் | : | கௌரவ சகோதரர்களில் ஒருவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | : | கதாயுத சண்டையில் வல்லவர், கௌரவ சகோதரர்களில் மூத்தவர் |